God of War

by Karundhel Rajesh April 9, 2012   Game Reviews

ஒரு மலை முகடு. அந்த இடத்துக்கு செல்லவேண்டிய வழியில், படிகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு முகடுகளை இணைத்திருக்கும் மிகப்பெரிய தொங்குபாலம். அந்தப் பாலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறான் அந்த மனிதன். மொட்டையடிக்கப்பட்டிருக்கும் தலை. இரண்டு கைகளிலும் பிணைக்கப்பட்டிருக்கும் உறுதியான சங்கிலிகள். அதாவது, இரண்டு கைகளும் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு கையிலும், சங்கிலி சுற்றப்பட்டிருக்கிறது. அவனது முதுகில், கொடுவாள் என்று சொல்லக்கூடிய இரண்டு பெரிய, கூரான ஆயுதங்கள். அவன் கண்களில் கொலைவெறி வழிந்து ஓடுகிறது. நமக்கு மிக அண்மையில் இருக்கும் பாலத்தின் ஒரு பகுதியிலிருந்து, தொலைதூரத்தில் முடியும் அந்தப் பாலத்தின் கடைசிவரை ஓடும் அந்த மனிதன், இப்போது ஒரு புள்ளியாக நம் கண்களுக்குத் தெரிகிறான். அந்தப் பாலத்தைச் சுற்றிலும் தெரியும் நிலப்பகுதி, கண்டிப்பாக மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. அமானுஷ்யமானதொரு முறையில் செதுக்கப்பட்டிருக்கின்றன பண்டைய கிரேக்க சிற்பங்கள். எங்கும் புழுதி. மிகப்பிரம்மாண்டமானதொரு பாலைவனம், நம் கண்களில் அறைகிறது. அந்தப் பாலைவனத்தில் உள்ளதுதான் இந்தத் தொங்குபாலம்.

காட்சி மாறுகிறது.

இப்போது, அந்த மனிதனின் பார்வை வழியே எதிரில் தெரியும் பிரம்மாண்டத்தை நோக்குகிறோம்.

ஆதி கால ராட்சதர்களின் உருவத்துக்கு ஒப்பான மிக மிகப் பெரிய உருவம் ஒன்று, தட்டுத்தடுமாறி நடந்துகொண்டிருக்கிறது. அதன் முதுகில் பிணைக்கப்பட்டிருக்கும் பொருளின் எடையினால், அந்த உருவம் கூன் விழுந்து, தரையில் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் தருவாயில் இருக்கிறது. ஆனால், விடாப்பிடியாக, தன முதுகோடு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் அந்தப் பொருளைத் தூக்கிக்கொண்டு நடந்துகொண்டிருக்கிறது. இந்தக் காட்சியை, தொங்குபாலத்தின் முடிவிலுள்ள மலை முகட்டிலிருந்து அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

அவன் கைகள், கொடுவாட்களை உறுதியாகப் பிடித்துக்கொள்கின்றன. அந்த பிரம்மாண்ட உருவத்தின் மீது முகட்டிலிருந்து குதிக்கிறான் அவன்.

Welcome to God of War

க்ராடோஸ் என்பவன், ஸ்பார்டா என்ற கிரேக்க நாட்டின் படைத்தலைவன். பண்டைய கால கிரேக்கம், இந்த ஸ்பார்டாவின் படைகளாலும், அதன் தலைவனாலும் தான் represent செய்யப்பட்டது என்பது கிரேக்க ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படி ஒரு கொடூரமான, போர்வெறி மிகுந்த படைத்தலைவனே க்ராடோஸ். ஒரு போரில், இவனை விட வெறி மிகுந்த ஒரு எதிரியால் கொல்லப்படும் தருவாயில், கிரேக்க போர்க்கடவுளான ஏரிஸுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு, அதன்படி, எதிரிகளை ஏரிஸ் கொன்றால், இனி தனது உயிர் ஏரிஸின் சொந்தம் என்ற சத்தியத்தை செய்து கொடுக்கிறான். இதனால், ஏரிஸ் அத்தனை எதிரிகளையும் கொன்றுவிட்டு, தனக்கும், பிற கிரேக்கக் கடவுள்களுக்கும் அடிமையாக, அவர்கள் நினைத்ததை சாதித்துக்கொள்ளும் கைப்பாவையாக க்ராடோஸை அமர்த்திக்கொள்கிறார்.

இங்குதான் ஆரம்பிக்கிறது God of Waரின் கதை.

இப்படி ஏரிஸின் அடிமையாக, ஒரு ரத்தவெறி பிடித்த மிருகமாக அலையும் க்ராடோஸ், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், இதுவரை அவன் செய்த கொலைச்செயல்களை எண்ணி வருந்தி, பிற கடவுளர்களுக்கு அடிமையாக வாழ்ந்து பிராயச்சித்தம் தேட முற்படுகிறான்.   ஏரிஸின் கைப்பாவையாக மாறியபின், தனது சொந்த மனைவியையும் குழந்தையையும் கொன்றது, அவனது உள்ளத்தில் ஆறாத ரணத்தை உருவாக்கிவிட்டிருக்கிறது. அப்போது, இறுதியாக ஒரே ஒரு வேலையைச் செய்துகொடுத்தால் அவன் அடிமைத்தளையிலிருந்து விடுபடலாம் என்று அவனிடம் சொல்கிறாள் கிரேக்கக் கடவுளான ஏத்னா (Athena). அது என்ன வேலை என்றால், போர்க்கடவுளான ஏரிஸையே கொல்வது. ஏரிஸ், தற்போது ஏதென்ஸை அழிக்க முயல்வதே காரணம். சக கடவுளான ஏரிஸை வேறு எந்தக் கடவுளும் கொல்லக்கூடாது என்று தலைவர் ஸ்யூஸ் (Zeus) ஆணையிட்டிருப்பது ஒரு பிரதான காரணம்.

சம்மதிக்கும் க்ராடோஸ், தனது பணியை எப்படி ஒவ்வொரு படியாக நிறைவேற்ற முயல்கிறான் என்பதே இந்த கேமின் முழுக்கதை.

ஹைட்ரா என்ற கடல் ஜந்துவைக் கொல்கிறான் க்ராடோஸ். அதன்பின், ஏதென்ஸ் அடைகிறான். அங்கே, ஏரிஸ் தனது படைகளுடன் நகரை முற்றுகையிட்டிருப்பதைக் காண்கிறான். அப்போது, Oracle என்ற, வருங்காலத்தைக் கணித்துச் சொல்லக்கூடிய பெண்ணால்தான் ஏரிஸை எப்படிக் கொல்லமுடியும் என்று சொல்லமுடியும் என்று ஏத்னா சொல்ல, ஆரக்கிளைத் தேடுகிறான் க்ராடோஸ். அவளையும் கண்டுபிடிக்கிறான். பாண்டோரா’ஸ் பாக்ஸ் (Pandora’s Box) எனப்படும் குறிப்பிட்ட பொருளால் தான் ஏரிஸைக் கொல்லமுடியும் என்பதை ஆரக்கிளிடமிருந்து அறிந்துகொள்கிறான் க்ராடோஸ். இந்தப் பொருளின் உள்ளே தான் உலகின் அத்தனை தீயசக்திகளும் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றன என்பது பொதுவான நம்பிக்கை.

இந்தப் பாண்டோரா’ஸ் பாக்ஸ் இருப்பதோ, பாண்டோராவின் கோயிலில். ஆனால், கடவுளர்களால் அந்தக் கோயில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது. கோயில் இருக்குமிடம், கடவுளர்களுக்கும் டைட்டன்களுக்கும் இடையே நடந்த போரில், டைட்டன்களுக்குத் தலைமை தாங்கி, அதனால் தண்டிக்கப்பட்டிருக்கும் க்ரோனஸின் முதுகு. அதாவது, பிரம்மாண்ட ஜந்துவான க்ரோனஸ், அவனது முதுகோடு பிணைக்கப்பட்டிருக்கும் கோயிலோடு வாழ்ந்துவரவேண்டும் என்பது ஸ்யூஸ் அளித்துள்ள தண்டனை. ஆவிகளின் பாலைவனம் என்று அழைக்கப்படும் பாலைவனத்தில் ஏதோ ஒரு இடத்தில் இந்த க்ரோனஸ் இருக்கிறான். க்ரோனஸைத் தேடிக் கிளம்புகிறான் க்ராடோஸ்.

இறுதியில் என்ன ஆனது? க்ராடோஸ் என்ன ஆனான்? இதையெல்லாம், இந்த கேமை விளையாடித் தெரிந்துகொள்ளவேண்டியதுதான்.

Gameplay  & Controls
இந்த கேமில் படு சுவாரஸ்யமான சங்கதிகள் என்னென்ன என்றால், கேமில் உள்ள எண்ணற்ற புதிர்களே. மண்டையை உடைத்துக்கொண்டு பலமணிநேரம் யோசிக்க வைக்கும் இந்தப் புதிர்கள், அவற்றை விடுவித்த பின்னர் யோசித்தால், மிக எளிதானவைகளாக இருக்கும்.இந்தப் புதிர்களை விடுவிக்க எனது பரிந்துரை என்னவாக இருக்கும் என்றால், புதிரின் அடிப்படைகளை நன்றாகக் கவனியுங்கள். புதிர் சொல்லப்படும் இடம், அந்த இடத்தின் பொருட்கள் ஆகியவைகளில்தான் புதிர்களை உடைக்கும் வழிமுறைகளும் ஒளிந்துள்ளன.

இப்போது, கண்ட்ரோல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

அடிப்படை கண்ட்ரோல்கள், க்ராடோஸை சண்டையிட வைப்பதுதான். தனது முதுகில் உள்ள இரண்டு கொடுவாட்களே க்ராடோஸின் பிரதான ஆயுதங்கள். இவற்றை வைத்து, தொடர்ச்சியான அடிகள் கொடுத்து எதிரியை வீழ்த்த முடியும். அல்லது, இவற்றை வைத்து, கொஞ்சம் மெதுவாக, ஆனால், சக்திவாய்ந்த சில அடிகள் கொடுத்து எதிரியைக் கொல்லலாம். இரண்டு மூவ்களையும் அவ்வப்போது உபயோகிக்கவேண்டும். கூடவே, கேம் செல்லச்செல்ல, கடவுளர்களிடமிருந்து பல சக்திவாய்ந்த ஆயுதங்களைப் பெறுகிறான் க்ராடோஸ். அவைகளையும் அவ்வப்போது உபயோகப்படுத்தலாம். கவனத்தில் வைக்கவேண்டிய விஷயம் என்னவெனில், மேஜிக் மீட்டர் என்று ஒரு மீட்டர் இந்த கேமில் உள்ளது. அவப்போது, ஆங்காங்கே இருக்கும் பேழைகளில் இதற்கான சக்திகள் இருக்கும். அவற்றைத் திறந்து, இந்த மீட்டரை நிரப்பிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை இந்த கடவுளர்களின் ஆயுதங்கள் உபயோகப்படுத்தப்படும்போது, இந்த மீட்டர் குறையும். ஆகவே, பார்த்துப் பதமாக இந்த விசேஷ ஆயுதங்களை உபயோகப்படுத்த வேண்டும்.

இந்த கேமின் மற்றொரு ஸ்பெஷல் அம்சம் என்னவெனில், கம்ப்யூட்டரோ அல்லது ப்ளேஸ்டேஷன் ட்யூவல்ஷாக் கண்ட்ரோலரோ, அவற்றின் அதிகபட்ச தாங்கும் திறனைப் பரிசோதிக்கும் முறையில் இந்த கேம் வடிவமைக்கப்பட்டிருப்பதே. அதாவது, ஒரு சண்டையை எடுத்துக்கொண்டால், இறுதியில் எதிரி சாவதற்கு, ஒரு குறிப்பிட்ட பொத்தானை குறைந்தபட்சம் ஒரு முப்பது முறை இடைவிடாமல் அமுக்கவேண்டும். இதில் ஒரு முறை தவறினாலும், எதிரி உயிர்பிழைத்து, பின்னர் மறுபடியும் முப்பது முறை பொத்தானை அமுக்கிக்கொண்டே இருக்கவேண்டும். மட்டுமில்லாமல், சில பெரிய சண்டைகளில் (Boss battles என்று கேம் பாஷையில் சொல்லப்படும் சண்டைகள் இவை), திரையில் காண்பிக்கப்படும் பொத்தான்களை அதே வரிசையில் சட்சட்டென்று அமுக்கினால் மட்டுமே எதிரி சாவான். இந்த சீக்வென்ஸில் ஒருமுறை தவறினாலும், மறுபடி முதலிலிருந்து ஆரம்பிக்கவேண்டியதுதான்.

இந்த ஒரு அம்சம், உங்களது பொறுமையை எப்படியெல்லாம் சோதிக்கிறது என்பதை, கேம் விளையாடும்போது கண்டுகொள்வீர்கள். எரிச்சலின் உச்சத்தில் உங்களை அமரவைக்கும் கேம் இது.

Enemies of Kratos

க்ராடோஸின் எதிரிகள் பலவகை. இதில், மினாடார் என்று சொல்லப்படும் எருமைத்தலை பூதங்கள், விஷக்கன்னிகள், மெடூஸா என்ற பாம்பு உடல் – மனிதத் தலை கொண்ட கன்னி (இவளது பார்வை பட்டாலே எதிரி சிலையாகிவிடுவான். Clash of the Titans படத்தில், Hero பெர்சியஸ் கொல்லும் ஜந்து இது), பச்சோந்தி – தவளை ஆகியவற்றின் கூட்டுமுயற்சியைப்போல் தோன்றும் ஜந்து ஒன்று ஆகியவை அடக்கம்.

இவர்கள் ஒவ்வொருவரையும் கொல்ல, ஒவ்வொரு தனித்தனி மூவ். ஆக, ஒரு கட்டத்தில், இந்த அத்தனை மூவ்களையும் தெரிந்துவைத்துக்கொண்டே ஆகவேண்டும். இவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து க்ராடோஸைத் தாக்கும் சீக்வென்ஸ்களும் கேமில் உண்டு. அந்த நேரத்தில், வெறித்தனமாக கையில் இருக்கும் கண்ட்ரோல்களை நீங்கள் அமுக்குவதைப் பார்க்கும் எவரும், உங்களைப் பார்த்து பீதியடைய வாய்ப்புகளும் உண்டு.

Weapons of Kratos

ஏற்கெனவே சொன்னதுபோல், Blades of Chaos என்று அழைக்கப்படும் இரண்டு கொடுவாட்களே க்ராடோஸின் பிரதான ஆயுதங்கள். இதைத்தவிர, Rage of  Poseidon  என்ற ஆயுதம், மெடூஸாவின் தலை (இதனை வைத்து, எதிரிகளை ஒரு குறிப்பிட்ட நேரம் சிலையாக்கமுடியும்), Fury of Zeus என்ற மின்னல் ஆயுதம் மற்றும் Blade of Artemis என்ற பெரி……..ய கொலைவாள் ஆகிய ஆயுதங்கள் க்ராடோஸின் வசம் இருக்கும். இந்த ஆயுதங்களிலேயே எனக்கு மிகமிகப் பிடித்தது, கடைசியில் நான் சொன்ன பிரம்மாண்டக் கொலைவாள்தான். அதனை வைத்து எதிரிகளைப் பந்தாடும் க்ராடோஸைக் காண்பதே ஒரு சந்தோஷம்.

இந்த கேமை வெள்ளியன்று ஆரம்பித்த நான், இன்று இரவு முடிக்கப்போகிறேன். அதன்பின் தயாராக இருக்கிறது God of War 2.  அதன்பின் God of War 3.

Age Limit

Nudity,  அதிகபட்ச வன்முறை, கெட்டவார்த்தைப் பிரயோகம் ஆகியவை சரளமாக இந்தக் கேமில் வருவதால், பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் விளையாடத் தகுந்ததாகவே இந்த கேம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

My Rating & Final verdict

இதுவரை நான் விளையாடிய எண்ணிறந்த கேம்களில், இந்தக் கேம் தான் நம்பர் ஒன் என்பதை வெகு எளிதாக என்னால் சொல்லமுடியும். ஒரு நிமிடம் கூட அலுக்காமல் விளையாடும் அளவு இதனை வெளியிட்டிருக்கும் Santa Monica studios க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

My Rating : 10/10

Final verdict: If you are a game addict, owning a PS3 or a PC with high configuration, you gotta go out there, get a copy of the game, and try to complete God of War, so that you might know what real gaming is all about !

பி.கு

  1. PS2க்காக உருவாக்கப்பட்ட இந்த கேம், தற்போது PS3 remastered editioனாகவே  கிடைக்கிறது.
  2. இந்த கேமை Flipkart ல் வாங்க, இங்கே அமுக்கவும். அதிலேயே எனது சிறிய reviewவையும் படிக்கலாம் (written on April 9th, 2012). ஆர்டர் செய்த 20 மணிநேரத்தில் கேமை எனது வீட்டுக்கு அனுப்பி, அதன்பின் பணம் பெற்றுக்கொண்ட Flipkart, இந்தியாவினுள் வாடிக்கையாளர் சேவை என்பதை மாற்றி எழுதியிருக்கிறது என்றால் அது மிகையில்லை.
  3. இந்த கேமை திரைப்படமாக எடுத்தால் (கட்டாயம் இது நடக்கும்), க்ராடோஸாக நடிக்கத் தகுதிவாய்ந்த நபர் யார்? உடனடியாக என் மனதில் உதிப்பவர்  – The Rock.  க்ராடோஸுக்கான உடல்வாகு மட்டுமல்ல, அந்தக் கதாபாத்திரத்துக்குத் தேவையான வில்லத்தனம், அலட்சியம், கர்வம் ஆகிய அனைத்துமே ஒருங்கே உடைய நடிகர் அவர் மட்டுமே.
  4. God of War கேமை எனக்கு அறிமுகப்படுத்திய ஹாலிவுட் பாலாவுக்கு எனது நன்றிகள்.
  5. கிரேக்கக் கடவுள்கள், டைட்டன்களுக்கும் கடவுளர்களுக்கும் இடையே நடந்த சண்டைகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக, எனது இந்தக் கட்டுரைகளில் படிக்கலாம். குறிப்பாக, Immortals  பட விமர்சனத்தில்.
    Clash of the Titans (2010)
    Immortals (2011)
    Wrath of the Titans (2012)

Watch the trailer of God of War here.

Note – God of War poster taken from here

  Comments

16 Comments

  1. கிரேக் மித்தாலஜி எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட்களில் ஒன்று. கதையைக் கேட்டபின் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கிறது. பி.ஸியில் மட்டும் இந்த கேம் வந்திருந்தால் விளையாடி இருக்கலாம். வருமா?

    Reply
  2. எப்பவோ PC கேம் வந்தாச்சு பாஸ் . உடனே புடிங்க

    Reply
  3. இல்லையே? இது Playstation exclusiveன்னு இல்ல கேள்விப்பட்டேன்? உடனே தேடிப் பார்க்கிறேன்.

    Reply
  4. விளையாட்டின் தெய்வமே!!!!!!!!!!!!

    எனக்கு இந்த கேமை முடிக்க 2 வாரம் தேவைப்பட்டுச்சி. ஒரு வீக்கெண்ட்லயே முடிக்கப் போறீங்களா? ஹார்ட்கோர் கேமர்!!!!!!

    அப்புறம் தல… நீங்க எந்த மோடில் விளையாண்டீங்கன்னு தெரியலை. ஈஸி மோட்லன்னா, சாவகாசமா.. நார்மல்/காட் மோடில் விளையாண்டு பாருங்க.

    நிறைய ‘சர்ப்ரைஸ்’ இருக்கு!! 🙂 🙂 🙂 செம ஜோக்கா இருக்கும்.

    =======

    என்னயிது.. பதிவில் ரெண்டு ‘நன்றிகள்’ இருக்கு? இதுக்குத்தான் அதிகமா.. பிரபல பதிவரோடு ஒட்டக்கூடாதுங்கறது!!

    Reply
  5. தல.. எனக்கும் இது PS3 எக்ஸ்க்ளூஸிவ்-னு தான் தெரியும் (ஸோனியோட கேம் இது). ஆனா PC வெர்சன் இருக்குன்னே இன்னிக்குத்தான் கேள்விப்படுறேன்.

    Reply
  6. க்ரோட்டோஸ் கேரக்டருக்கு Jason Momoa சரியா இருக்கும்னு தோணுது. கேம்ஸ் ஆஃப் த்ரோன்ஸ்-ல அவரோட மேக்கப் அப்படியே க்ரோட்டோஸ் மாதிரியே தோணிச்சி.

    Reply
  7. nalla vimarsanam!

    Reply
  8. இதெல்லாம் பல போன வருசமே என் பிசில இன்ஸ்டால் செஞ்சு………………அதுக்கப்பறம் அன்இன்ஸ்டால் செஞ்சுட்டேன்.

    Reply
    • Bujji

      God of war pcல எப்படி download பண்றது.

      Reply
  9. //க்ரோட்டோஸ் கேரக்டருக்கு Jason Momoa சரியா இருக்கும்னு தோணுது. கேம்ஸ் ஆஃப் த்ரோன்ஸ்-ல அவரோட மேக்கப் அப்படியே க்ரோட்டோஸ் மாதிரியே தோணிச்சி//

    அட … Rockஐ விட இந்த சாய்ஸ் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

    Reply
  10. என் தம்பி ஒருவன் படுவெறி கொண்டு இந்த கேம்மை விளையாடி கொண்டு இருக்கிறான்.

    இதை PCயில் விளையாடினால் PC தாங்குமா…

    Reply
  11. I have nto completed this game, was playing for 10 days and i had to give some gap due to some other work and i lost in touch with those special moves so couldnt complete the game.

    Need to start from the scratch. thanks for the nice review

    Reply
  12. @ ஹாலிவுட் ரசிகன் – அஃபிஷியலா இது PCல வரல. ஆனா எமுலேட்டர் வெச்சி கன்வெர்ட் பண்ணுன வெர்ஷன் நெட்ல இருக்கு. நான் கொஞ்சம் தேடிப்பார்த்தேன். நீங்களும் தேடிப்பாருங்க.

    @ ஆள்தோட்ட பூபதி – ஆக்சுவலா இப்போ Challenge of Hades ல இருக்கேன். அந்த லெவலின் கடைசி நிமிடங்கள். வீக்டேய்ஸ்ல ஒன்னு ரெண்டு ஹவர் தான் விளையாட முடியுது. நேத்து நைட்டு தூங்கும்போது ஒரு மணி. முடிக்கமுடியும்னு நினைச்சேன். ஆனா முடியல 🙂 . இன்னும் ரெண்டு நாள் தேவைப்படும்னு தோணுது. எது எப்புடின்னாலும், ஆட ஆரம்பிச்சி நேத்தோட மூணு நாள் தான் ஆச்சு :-). .

    நான் நார்மல் மோட்ல வெளையாடிக்கிட்டு இருக்கேன். முடிச்சப்புறம், காட் / ஹார்ட்கோர் மோட்ல விளையாடுவேன் 🙂

    அப்பால, jason momoa உடம்பு ஜைஜாண்டிக்கா இருக்குமே. மூஞ்சி நல்ல சாய்ஸ்தான். ஆனால், அத்லேடிக்கா அங்க இங்க ஓடனும்னா, அவரை வெச்சி யோசிக்க தோனல. கூடவே, அவரை நினைச்சாலே, ரஜினி படங்கள்ல க்ரேட் காளி ரேஞ்சுல வில்லனுங்க வந்து அடிவாங்கிக்கிட்டு போவாங்களே … அந்த மாதிரியே தோணுது 🙂

    @ Seeni – நன்றி

    @ கொழந்த – உங்க கிட்ட PC வெர்ஷன் இருந்தால், எடுத்து வைங்க. ஹாலிவுட் ரசிகனுக்கு உபயோகப்படும் போலயே

    @ லக்கி – ஹாஹா 🙂 .. இந்த கேமை ஆரம்பிச்சாலே வெறி வந்திருதே… PC கண்டிப்பா ஒன்னு ரெண்டு கீ ஓடையலாம்னு நினைக்கிறேன் 🙂

    @ DHANS – கண்டிப்பா மறுபடி ஆரம்பிங்க. பல இடங்கள்ள டென்ஷன் எனக்கும் வந்தது. ஆனா என் குருநாதர் சொன்ன டயலாக் நினைவு வந்திச்சி. அது இதுதான்: ‘விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி ‘ 🙂

    Reply
  13. My friend is pestering me to play this. i wasn’t so interested. Now i will try. Btw, video review lam ena sir achu.

    Reply
  14. Arunkumar

    Boss We want God war 2 and god of war 3 review in Tamil

    Reply
  15. The paragon of undinstanderg these issues is right here!

    Reply

Join the conversation