A Good Year ( 2006) – English

by Karundhel Rajesh May 29, 2010   English films

நமது வாழ்விலேயே நமக்குப் பிடித்தமான நாட்கள் எது என்று கேட்டால், முக்காலே மூணு வீசம் பேர், குழந்தைப் பருவத்தைத் தேர்ந்தெடுக்கக்கூடும். என்னைப்போன்ற சில விதிவிலக்குகள் மட்டும், கல்லூரி (அ) காதல் என்று எதையாவது சொல்லிக்கொண்டு திரியும்கள். அதை விட்டுத் தள்ளுங்கள். சரி. இந்தக் குழந்தைப் பருவத்தின் நினைவுகள், ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கும்?

ஹாலிவுட்டின் ’வெர்சடைல்’ இயக்குநர்களில் ஒருவரான ரிட்லி ஸ்காட்டின் கைகளில், இந்தக் கருவை வைத்துப் பின்னப்பட்ட ஒரு நாவல் கிடைத்தது. சும்மா விடுவாரா மனிதர்? எடுத்தே தீருவேன் இந்தப் படத்தை என்று களத்தில் குதித்துவிட்டார். அதுவும், அவரது ஆஸ்தான நாயகர்களில் ஒருவரான ரஸ்ஸல் க்ரோவுடன். விளைவு? என்றென்றும் பசுமையாக நாம் நினைத்துப் பார்க்கக்கூடிய ஒரு அழகிய திரைப்படம்.

ஃப்ரான்ஸ். கனவுகளின் தேசம். காதலர்களின் தேசம் (!!). நினைத்துப் பாருங்கள். எங்கெங்கு நோக்கினும் அழகிய திராட்சைக் கொடிகள். அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ருசி நிரம்பிய ஒயின், நிலவறையில் ஒரு ராட்சத அண்டாவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதன் நறுமணம், எல்லா இடங்களிலும் பரவுகிறது. பெரிய பீப்பாய்களில், அந்த ருசிமிக்க ஒயின் நிரப்பப்பட்டு, சீல் வைக்கப்படுகிறது. அவ்வப்போது அந்த ஒயினை ருசிக்கும் நிலையில் நாம். இதுவல்லவோ சொர்க்கம்!

இப்படிப்பட்ட ஃப்ரான்ஸின் வினியார்ட் (ஒயின் தயாரிக்கும் இடம். திராட்சைத் தோட்டம்) ஒன்றில், ஒரு சிறுவன், அந்த வினியார்டின் முதலாளியான தனது மாமாவுடன் விளையாடிக்கொண்டிருக்கிறான். மாமா ஹென்றி, வாழ்வின் அதிருசியான விஷயங்களை ரசித்து அனுபவிப்பதில் ஜித்தர். மாக்ஸுக்கு,, நல்ல ஒயினைத் தேர்வு செய்வதைப் பற்றிக் கற்றுக் கொடுக்கிறார். அவனது விடுமுறை நாட்கள், மறக்கவியலா வண்ணம் அவனது இதயத்தில் ஆழப்பதிந்து விடுகின்றன.

நடப்பு இங்கிலாந்து. மாக்ஸ் ஸ்கின்னர், ஒரு ஸ்டாக் மார்க்கெட் சிங்கம். ஸ்டாக்குகளின் விலையை ஏற்றியும் இறக்கியும் அவன் செய்யும் லீலைகள், அவனது எதிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை வரவழைக்கின்றன. ஆனால், அவனை யாராலும் எதுவும் செய்ய முடிவதில்லை. இங்கிலாந்து ஷேர் மார்க்கெட்டை, அவனது முடிவுகளே நிர்ணயிக்கின்றன. மிக மிக அக்ரெஸிவ்வான ஒரு இளைஞனாக அவன் இருக்கிறான். எந்த சொந்தங்களும் இல்லாது, மனதில் அன்போ கருணையோ இல்லாமல், ஒரு இயந்திரமாக அவன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.

இப்படி இருக்கையில், ஓர்நாள், அவனது தூரத்து உறவான ஹென்றி என்ற முதியவர் ஃப்ரான்ஸில் இறந்துவிட்ட செய்தி, அவனைத் தேடி வருகிறது. அப்பொழுதுதான் அவனது சிறுவயது அனுபவங்கள் அவனது உள்ளத்தில் மேலெழும்புகின்றன. அவரது வினியார்டும், அவர் உயிலெழுதாதனால், அவரது ஒரே சொந்தக்காரனான மாக்ஸுக்கே சேரும் என்ற தகவலும் இவனுக்குக் கிடைக்கிறது.

உடனடியாக அந்த எஸ்டேட்டை விற்றுக் காசு பார்க்கும் முடிவுக்கு வரும் மாக்ஸ், ஃப்ரான்ஸுக்குப் பயணிக்கும் நிலைக்கு ஆளாகிறான். எஸ்டேட்டுக்கு வரும் அவன், அங்கு பல வருடங்களாகப் பணியாற்றும் டுஃப்ளாட்டை சந்திக்கிறான். அந்த திராட்சைத் தோட்டத்தைத் தனது உயிராகப் பாவித்துவரும் டுஃப்ளாட்டுக்கு, அதனை விற்கப்போகும் மாக்ஸின் முடிவு, கோபத்தை வரவழைக்கிறது. ஆனால், அவனால் எதுவும் செய்ய முடிவதில்லை.

அந்த எஸ்டேட்டை விற்பதன்பொருட்டு, அந்த வினியார்டை ஒரு நிபுணரை வைத்துப் பரிசோதிக்கிறான் மாக்ஸ். அந்த வைனை அவர் வாயில் வைத்தவுடன், காறித்துப்பி பிடுகிறார். மிக மோசமான நிலையில் தயாரிக்கப்படும் அந்த ஒயின், மனிதர்கள் அருந்துவதற்கே லாயக்கில்லாதது என்றும் சொல்லிவிட்டு, ஓடிவிடுகிறார்.

அதே சமயம், அந்த ஊரிலேயே மிக அருமையான ருசியுடைய ஒயினைப் பற்றியும் மாக்ஸுக்குத் தெரியவருகிறது. அந்த ஒய்னின் சுவை அவனது உள்ளத்தைத் திருகுகிறது.

அந்த ஊரில், ஃபேன்னி செனால் (பெயரின் முதல் வார்த்தையின் அர்த்தத்தை கவனிக்கவும்) என்ற இளம்பெண்ணையும் சந்திக்கிறான். அவளை விரும்பவும் தொடங்கிவிடுகிறான். அந்த எஸ்டேட்டை விற்பதற்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்கிறான்.

அந்த நேரத்தில்தான், ஒரு அதிர்ச்சியை மாக்ஸ் சந்திக்க நேரிடுகிறது. திடீரென்று அமெரிக்காவிலிருந்து அங்கு வரும் ஒரு இளம்பெண் க்ரிஸ்டி, இறந்துபோன ஹென்றியின் மகள் தான் தான் என்று மாக்ஸிடம் தெரிவிக்கிறாள். அவளிடம், ஒரு குடும்பப் புகைப்படமும் இருக்கிறது.

இதன் பின் என்ன நடந்தது? மாக்ஸால் அந்த எஸ்டேட்டை விற்க முடிந்ததா? ஃபேன்னி என்ன ஆனாள்? க்ரிஸ்டிக்கு என்ன நடந்தது? படத்தைப் பார்க்கவும்.

ஒரு மழைக்கால மாலை வேளையின் இனிமையை, இப்படம் நமக்கு அளிக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும், அழகின் வெளிப்பாடு, நம்மை மகிழ்ச்சியுற வைக்கிறது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள், அந்த உணர்ச்சியை மேலும் மெருகூட்டுகின்றனர். ரஸ்ஸல் க்ரோவின் ஜாலியான நடிப்பு, நம்மை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது.

இப்படத்தில், நம்மைப் புன்னகைக்க வைக்கும் நல்ல காட்சிகள், நெடுகிலும் உண்டு. கிங்டம் ஆஃப் ஹெவன் முடிந்தவுடன் இப்படத்தைத் துவக்கிய ரிட்லி ஸ்காட், இப்படத்தை முற்றிலும் வேறான ஒரு தளத்தில் இயக்கியிருப்பது, அவரது திறமைக்கு ஒரு சான்று. எப்படி ப்ளாக் ஹாக் டௌன் முடிந்தவுடன் மேட்ச்ஸ்டிக் மென்னை அவரால் வெளியிட முடிந்ததோ, அப்படி.

மரியன் கோடில்லார்டை (ஃபேன்னி) உற்றுக் கவனியுங்கள். அசத்தும் அழகு.

மொத்தத்தில், மனதுக்கு ரம்மியமான ஒரு உணர்வினைக் கொடுக்கும் இப்படம், உங்களைப் புன்சிரிப்பில் ஆழ்த்தும்.

எ குட் இயர் படத்தின் ட்ரெய்லர் இங்கே.

பி.கு – ஒரு முக்கியமான விஷயத்தில் மிகவும் பிஸியாக இருப்பதால், சென்ற வாரம் எழுதிய இதை, இப்பொழுது வெளியிடுகிறேன். பின்னூட்டங்களுக்கு பதில், என்னால் முடியும்போது எழுதுவேன். நன்றி.

  Comments

22 Comments

  1. படத்தை பார்க்க தூண்டிவிட்டது உங்கள் பதிவு ..

    Reply
  2. போன வாரம் ரஸ்ஸல் குராவோட A Beautiful Mind பார்த்தேன். ரஸ்ஸல் நடிப்பு சூப்பரா இருந்துச்சு. இதையும் பார்த்துறவேண்டியதுதான்.

    Reply
  3. மீ தி போர்த்.

    லேட்டாக வந்ததால் நோ மீ தி பர்ஸ்ட்

    Reply
  4. படம் பார்க்கலாம் சொல்லுரிங்க…

    Reply
  5. அடப்போங்கப்பா….. மூணு நாள பொருமையா டவுன்லோடி பார்த்து, பதிவெழுத ஒரு அருமையான படம் கிடச்சிருக்குன்னு நினைச்சி முடிக்கலை. போஸ்ட் பண்ணிட்டிங்க. என்னவோ போங்க.:-)

    நல்ல படம் நண்பா நேற்றுதான் பார்த்தேன்.

    Reply
  6. நண்பரே,

    சனி காலை வீட்டிலிருந்து வெளியேறும்போது ஒரு மென்காற்று வந்து தழுவிக் கொண்ட உணர்வைத் தந்தது நீங்கள் அனுபவித்து எழுதியிருக்கும் இப்பதிவு. கோட்டிஆர் இப்போது ஹாலிவூட்டிற்கு சென்று விட்டார். டாக்ஸியில் தன் இளமை அழகை அள்ளி வழங்கியிருப்பார். அருமையான பதிவு.

    Reply
  7. இதென்ன russel crowe வாரமா? எங்க பார்த்தாலும் அவர் படத்த பத்தி தான் இருக்கு!

    அருமையா எழுதிருக்கீங்க! ஒரு சாயல்ல நம்ம ஜெயம்கொண்டான் மாதிரி இல்ல? எல்லாத்தையும் காபி அடிச்சிரானுங்க.

    Reply
  8. தேளு… செல்லாது…செல்லாது போன வாரம் எழுதின பதிவையெல்லாம் இந்தவாரம் படிக்கமாட்டோம்… கலாவதி…ச்சீ..காலாவதியாயிடுச்சு….

    Reply
  9. எனக்கும் படம் மிகப் பிடித்திருந்தது. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

    Reply
  10. //கனவுகளின் தேசம். காதலர்களின் தேசம் (!!).//

    ரைட். ஆமோதிக்கிறேன்…. 🙂

    Reply
  11. கொஞ்சமும் எதிர்பார்பில்லாமல் , மற்றுமொரு படமென்று பார்க்கத்துவங்கியிருந்தேன்… மிக இரசித்துப்பார்த்த படங்களுள் ஒன்றாகிவிட்டது.. 🙂

    Reply
  12. //ஸாரி… ஸாரி.. நோ ரொமான்ஸ்.. ஹியர்..//

    வணக்கம் தலைவா.

    Reply
  13. @ பயங்கரவாதி – ரைட்டு !!

    @ ரோமியோ – நன்றி . . பாருங்கள் கண்டிப்பாக !!

    @ ஜீவன்பென்னி – ஆஹா . . ரஸ்ஸல் க்ரோவ் வாரம் ஆரம்பம் !! சூப்பரப்பு !

    @ விஸ்வா – அது பரவாயில்ல . . ஃப்ரீயா உடுங்க . . . நெக்ஸ்ட்டு மீட் பண்ணலாம்..

    @ சௌந்தர் – ஆமாம் பாஸ். . கண்டிப்பா பார்க்கலாம் . .

    @ முரளிகுமார் பத்மநாபன் – அடடே !! இதுக்குப் பேருதான் லப் டப் பதியோ !!?? எனிவே, நீங்களும் எழுதுங்க பாஸ் . . உங்க நடைல படிக்கலாம் . .

    @ காதலரே – கோட்டி ரொம்ப கெட்டி . . 🙂 அசந்துவிட்டேன் என்று சொன்னால் அது அண்டர்ஸ்டேட்மெண்ட் . 🙂 ஹீ ஹீ

    @ பருப்பு – அட ஆமாம் !! ஜெயம்கொண்டான் மாதிரித்தான் கீது . . அந்தப் படமும் கிட்டத்தட்ட இந்த ஃபீல் தான் குடுக்கும் . . ஹூம் . . பரவாயில்ல உடுங்க . .

    @ நாஞ்சில் பிரதாப் – ஆஹா .. கலாவதியையும் அறிமுகப்படுத்திருங்க . . 🙂 நாட்டாம . . தீர்ப்ப மாத்தி சொல்லு. .

    @ சரவணக்குமார் – மிக்க நன்றி நண்பா . .

    @ இராமசாமி கண்ணன் – பின்ன . . அடி பட்டைய கிளப்புங்க பாஸு . .

    @ பாலா – ஆஹா . . இதுல ரொமான்ஸே இல்ல தல. . ஒரு ஜாலியான படம் இது.. காமெடியா இருக்கும் . . இப்புடிச் சொல்லிப்புடீங்களே . .

    @ இல்ல்யூமினாட்டி – 🙂 ஹீ ஹீ . .

    @ யாத்ரீகன் – அட.. நானும் தான் .. இதே போல் வெகு சாதாரணமாகப் பார்த்த படம் இது .. சில வருடங்களுக்கு முன்.. என்னை டோட்டலாகக் கட்டிப்போட்டுவிட்டது . .

    @ விஸ்வா – 🙂 🙂

    Reply
  14. ஸாரி… ஸாரி.. நோ ரொமான்ஸ்.. ஹியர்..!!!////

    கல்யாணம் பண்ண பெருசுங்களுக்கெல்லாம் ரொமான்ஸ் எங்க வேலை செய்யப் போவுது.

    Reply
  15. pappu said…

    ஸாரி… ஸாரி.. நோ ரொமான்ஸ்.. ஹியர்..!!!////

    கல்யாணம் பண்ண பெருசுங்களுக்கெல்லாம் ரொமான்ஸ் எங்க வேலை செய்யப் போவுது. ////

    யாரப் பாத்து பெரிசுன்னிங்க நீங்க. அவரோட ஸபானிஷ் தோழி இத கேட்டாங்கன்னா என்ன ஆகும் தெரியுமா :-).

    Reply
  16. @ பப்பு – இதை, கல்யாணம் ஆனவர்கள் சங்கத்துல இருந்து வன்மையா கண்டிக்குறேன் . . 🙂 கல்யாணம் பண்ணுங்க . . அப்பறம் சைட் அஃபிஷியலாவே அடிக்கலாம் . . சிட்டுகள் நம்மிடம் தானாகவே வரும் 🙂

    @ இராமசாமி கண்ணன் – ஆஹா. . . அந்த ஸ்பானிஷ் தோழிய நீங்க இன்னுமா நினைவு வெச்சிருக்கீங்க?? 🙂 சூப்பரு

    Reply
  17. // (ஃபேன்னி) உற்றுக் கவனியுங்கள் //
    கவனிச்சுடுவோம்..

    Reply

Join the conversation