விண்ணைத் தாண்டி வருவாயா …
நான் இந்த வலைப்பூவில் ஆங்கிலத்தில் வந்துள்ள சில அருமையான காதல் படங்களுக்கு விமரிசனம் எழுதியுள்ளேன். அந்தப் படங்களைப் பார்க்கையில், மனம் முழுவதும் ஒரு அருமையான உணர்வு நிரம்பியிருக்கும். படத்தைப் பார்த்த பின்னரும் பல மணி நேரங்களுக்கு அந்த உணர்வு போகாது. படத்தின் பாடல்களே மனதில் ஓடிக்கொண்டிருக்கும். படத்தின் காட்சிகள் அவ்வப்போது நினைவுக்கு வரும். அப்படங்கள் தந்த உணர்வு அலாதியானது. தமிழில் (எனக்குத் தெரிந்து) அந்த உணர்வை நல்கிய படங்கள் மிகக்குறைவு. அதுவும், சமீபத்தில், கடைசியாக ‘மின்னலே’. (ஹிந்தியில், ‘குரு’ படத்தின் பல காட்சிகள்).
ஒரு காதல் படம் என்பது, பாடல்களிலும் , ‘ஐ லவ் யு’ சொல்வதிலும் மட்டும் இல்லை. அப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், காதல் ததும்பி வழியவேண்டும். படத்தின் ஒவ்வொரு அணுவிலும், நமது வாழ்வில் நாம் அனுபவித்த அந்தக் காதல் நிமிடங்களை நமது உள்ளத்தின் அடியாழத்திலிருந்து தோண்டியெடுத்து, மூளையில் ஒரு மாற்றத்தைப் புரிய வேண்டும். வெளியே வருகையில், நமது இழந்த அல்லது தற்போதைய காதலின் சிறந்த நிமிடங்கள், கண்களில் பெருகி வழிய வேண்டும். இன்னும் நிறைய உணர்ச்சிகளின் கலவையாய் நாம் மாறிவிட வேண்டும்.
இவையெல்லாமும் எனக்கு நடந்த ஒரு படமே ‘விண்ணைத் தாண்டி வருவாயா’.
பொதுவாகவே கௌதம் மேனனின் ஒரு ஆக்ஷன் படத்தில் கூட, அவ்வப்போது காதல் காட்சிகள் வந்து போகும். இயல்பான காதலைப் படங்களில் காண்பிக்கும் திறமை அவருக்கு உண்டு (பச்சைக்கிளி முத்துச்சரம் ஒரு நல்ல உதாரணம்). இப்படத்தில், முழுக்க முழுக்க அக்காட்சிகளையே வைத்துப் படமெடுத்திருக்கிறார். விளைவு? ஒரு அருமையான, இளமையான, ஃபீல் குட் காதல் படம்.
படத்தின் கதையைப் பற்றி நான் பேசப்போவதில்லை. இணையதளம் எங்கும் இப்படத்தைப் பற்றிய விமரிசனங்கள் உள்ளன. இப்படம் என்னை என்ன செய்தது என்பதைப் பற்றியே இப்பதிவு.
சிலம்பரசன் த்ரிஷாவிடம் பேசும் ஒவ்வொரு வசனமும், த்ரிஷா சிலம்பரசனிடம் பேசும் ஒவ்வொரு வரியும், மிக இயல்பாக எழுதப்பட்டிருக்கின்றன. அவர்கள் பழகிக்கொள்வதும், அவர்களைப் பற்றிய காட்சிகளும், மிக நேர்த்தி. சற்று யோசித்துப் பாருங்கள்: நமது வாழ்வில், திடீரென்று குறுக்கிடுகிறாள் ஒரு பெண். அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே உள்ளுக்குள் ஒரு உந்துதல். இவள் தான் நமது வாழ்வின் ஆதாரம் என்று. நம்மில் எத்தனையோ பேருக்கு இந்த உணர்வு தோன்றியிருக்கும். ஆனால், அந்தப் பெண்ணிடம் துணிவுடன் சென்று, நாம் நினைத்ததைச் சொல்லி, அவளுக்கு நம்மைப் புரிவித்ததை எத்தனை பேர் செய்திருக்கிறோம்?
அவ்வாறு செய்யாமல், அந்தப் பெண் ஒவ்வொரு நாளும் நம்மைக் கடந்து செய்வதைப் பார்த்துப் பார்த்து உருகி, சரக்கோ தம்மோ அடித்து, நண்பர்களிடம் நாம் புலம்பி, நமது கண் முன்னரே அப்பெண்ணை இன்னொருவன் மணந்து கொள்வதைப் பார்த்து ஏங்கியவர்கள் தானே நம்மில் அதிகம்?
இப்படத்த்தின் தொடக்கத்திலேயே, நாயகன் கார்த்திக், தான் விரும்பும் பெண்ணான ஜெஸ்ஸியிடம், தனது காதலைச் சொல்லிவிடுகிறான். ஒரு நிமிடத்தின் பரபரப்பான உந்துதலில், அவன் வாயிலிருந்து உண்மை வெளிவந்துவிடுகிறது. அதை அந்தப் பெண்ணும் இயல்பாக எடுத்துக்கொள்கிறாள் (அல்லது அப்படிச் சொல்லப்படுகிறது). சிறுகச் சிறுக அந்தப் பெண்ணை pursue செய்து, அவளது வாழ்வில் இடம் பெறுகிறான் கார்த்திக். அவளுக்கும் அவனைப் பிடிக்க ஆரம்பிக்கிறது. மெதுவே இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, காதல் வயப்படுகின்றனர். ஆனால், ஜெஸ்ஸி, தனது தந்தையை விரும்பும் ஒரு பெண்ணாகவும் இருப்பதால், அவரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு தர்மசங்கடத்தில் வேறு அகப்பட்டுக் கொண்டு விடுகிறாள். இதன் பின் என்ன நடந்தது என்பது படத்தின் சுருக்கம்.
இப்படத்தில், ஒரு இடத்தில், கார்த்திக்கும் ஜெஸ்ஸியும், கார்த்திக்கின் காதலைப் பற்றிப் பேசும் இடமல வருகிறது. அப்பொழுது, ஜெஸ்ஸி, தான் எவ்வாறு எப்பொழுதுமே பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டதையும், ஆண்களே இல்லாத ஒரு உலகத்தில் வாழ்ந்ததையும் பற்றிப் பேசுகிறாள். கார்த்திக் அவளை விடாது துரத்திக் கொண்டு ஆலப்புழா வந்துவிடுகிறான். தனக்காக ஒரு ஆண் இவ்வளவு தொலைவு வந்ததையும், தான் இல்லாமல் அவனது வாழ்வு சூன்யமாய் மாறிவிட்டதையும் அறிகையில், அவள் மனதில் இயல்பாக அவன் மேல் ஒரு ஈர்ப்பு தோன்றிவிடுகிறது. அதன்பின், அவன் செய்யும் ஒவ்வொரு குறும்புத்தனமான செயலையும் கண்டு, தனது உள்ளத்தைப் பறி கொடுத்து விடுகிறாள்.
ஆலப்புழாவில், ஜெஸ்ஸியின் வீட்டினருகில், இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்பொழுது, ஒரு பெண்ணும், ஒரு லட்சியத்தையும், ஒரு கனவையும் ஒத்தவள்தான் என்று ஜெஸ்ஸி சொல்கிறாள். ஒரு ஆணுக்கு அவளைப் பிடித்திருக்கலாம். அவள் மேல் காதல் கொண்டிருக்கலாம். ஆனால், அது மட்டும் போதுமா? அந்தப் பெண்ணுக்கு அதைத் தெரியப்படுத்த வேண்டுமல்லவா? கார்த்திக் விடாமல் அவளைத் துரத்தி வந்தது அவளுக்குப் பிடித்திருக்கிறது. ஒரு கனவை, ஒரு லட்சியத்தை நாம் எப்படித் துரத்துவோம்? அது செயலாகும் வரை ஓயமாட்டோம் தானே? அதே போல் கார்த்திக்கும் செய்கிறான்.
காதல் என்பது, என்னைப் பொறுத்த வரையில், ஒரு அற்புதம். இரு உள்ளங்கள் இணைந்து, ஒரு வாழ்க்கையைத் துவங்கும் பக்குவம் அங்கு இயல்பாக ஏற்படுகிறது. அந்த நேரத்தில், அந்த உள்ளங்களில் இருந்து, அன்பு பீறிக்கொண்டு கிளம்புகிறது. இந்த அன்பினை வாழ்வு முழுதும் தக்க வைத்துக் கொள்பவர்கள் சிலர். பலருக்கு, அந்தக் கண நேர அன்பு, வடிந்தும் போய் விடுகிறது.
இவ்வளவும், எனக்கு இப்படத்தைப் பார்க்கும்போது தோன்றிய எண்ணங்கள். இன்னும் நிறைய. மொத்தத்தில், நான் சமீப காலத்தில் தமிழில் பார்த்த ஒரு கவிதை இப்படம்.
நம் மொஸார்ட் ரஹ்மான், இப்படத்தில் முழுதும் தோய்ந்துவிட்டார் என்பது நன்றாகத் தெரிகிறது. மனிதர் புகுந்து விளையாடிவிட்டார். பாடல்களும் பின்னணி இசையும் அட்டகாசம்.
எனவே, இப்படத்தைத் தவறாமல் பாருங்கள். கண்டிப்பாக இப்படம் ஒரு நல்ல ஹிட்.
பி.கு – இன்று காலை எட்டு மணிக்கு நண்பர்களுடன் இப்படத்தைப் பார்த்த நான், இப்படம் முடிந்தவுடனேயே பதினோரு மணிக்கு மை நேம் ஈஸ் கான் படத்தில் நுழைந்து விட்டேன். அடுத்த பதிவில், அப்படத்தைப் பற்றி எழுதுகிறேன்.
நண்பரே,
நல்ல பகிர்வு. விதாவ பாடல்கள் அது வெளி வந்த நாள் முதல் கேட்டு வருகிறேன். சமீப காலத்தில் என்னை இளைஞனாக உணர வைத்த பாடல்கள் அவை.கான் பற்றியும் எழுதுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறேன். விரல் வித்தை வேங்கை சிம்பு பற்றி இரண்டு வரிகள் எழுதாதை வன்மையாக கண்டிக்கிறேன் 🙂
சிலம்பு சுற்றுவோர் சங்கம்.
பாஸ் ஒங்க விமர்சனமும் படமும் ரொம்ப நல்லாதான் இருக்கு. என்னோட கவலை எல்லாம் இந்த படம் ரொம்ப நல்லா ஒடிச்சுனா அதுனால இந்த சிம்பு விடர அலப்பறை தாங்க மூடியாதே. தமிழ்நாட்டு மக்கள் பாவம் பாஸ்.
பாஸ் ஃபீல் உடுறீங்களே!
பாஸ் பச்சைகிளி முத்துச்சரம் படம் 2007ல் வெளிவந்த The Train என்ற ஹிந்தி படத்தின் ரீமேக். காட்சிக்கு காட்சி அப்படை இருக்கும். ஆணால் கிலைமேக்ஸ்ல சொதப்பிட்டாரு.
அருமையான விமர்சனம்.
“பாஸ் பச்சைகிளி முத்துச்சரம் படம் 2007ல் வெளிவந்த The Train என்ற ஹிந்தி படத்தின் ரீமேக். காட்சிக்கு காட்சி அப்படை இருக்கும். ஆணால் கிலைமேக்ஸ்ல சொதப்பிட்டாரு”
இரண்டுமே “Derailed” ஆங்கிலப்படத்தின் தழுவல்.
வெய்ட்டிங் பார் ‘மை நேம் இஸ் கான்’
விமர்சன உலகில் தனியிடம் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள், வாழ்த்துகள். நல்லதோர் விமர்சனம்.
அருமையான விமர்சனம்..
அனேகமா லவ் பண்ணுறவங்க, பண்ணவங்க இவங்களுக்கு படம் ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன்..
//சமீபத்தில், கடைசியாக ‘மின்னலே’. //
நடுவுல நிறையா நல்ல ‘காதல்’ படங்கள் வந்துச்சுன்னு நினைக்கிறேன்..ஆனா பாருங்க பேரு தான் நியாபகத்தில் இல்லை..:)
யோசிச்சு நான் ஒரு ‘லிஸ்ட்’ தரேன் ..;)
காதலின் உன்மத்தம்.அல்லா ரக்கா ரஹ்மானின் ஆகச்சிறந்த இசை.பகிர்வுக்கு
நன்றி தோழரே.
தேளு… விமர்சனம சூப்பரப்பு…
இங்க எப்ப வருதுன்னு தெரில… வழக்கம்போல குறுந்தகடுதான்….
நண்பரே…
– நடராஜன், சிங்கப்பூர்..-நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சிம்புவின் வழக்கமான படமாக இருக்கதென்று நினைக்கிறேன். அதனால் துணிந்து போகிறேன். (அவரோட படங்கள்னா எனக்கு ட்ர்ர்ர்..). ஆனால் நீங்க சொன்னா மாதிரி மின்னலே, குரு படங்கள் மட்டும்தான் நல்ல காதல் படங்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை..(நீங்க ஒருவேளை அப்பர் கிளாஸோ? மின்னலே ஓகே). என்னை உருக்கிய படம் அழகி. பிரியாத வரம் வேண்டும், குஷி, ரிதம், ஆட்டோகிராப், வருஷம்16 போன்ற படங்களும் ஒவ்வொரு விதத்தில் நல்ல காதல் படங்களே என்பது என்னோட கருத்து.
\\படத்தின் கதையைப் பற்றி நான் பேசப்போவதில்லை.//////
அப்படீன்னுட்டு கதையை புட்டு புட்டு வச்சிருக்கீங்கஃ
படம் வாரணம் ஆயிரம் மாதிரி மொக்கைய போடாம போச்சி, ஒரு ஓகே ரக படம் அப்படீன்னு தான் நான் நினைக்கிறேன். ஆஹா ஓகோனு புகழ்ந்து சொல்லற மாதிரி ஒரு தாக்கம் இந்த படம் எனக்கு ஏற்படுத்தல, அதற்கு முக்கிய காரணமா நான் நினைக்கிறது இந்த படத்தில காதல் ரொம்ப shallowஆ இருக்கு செயற்கையா இருக்கு அப்படீன்றதுதான்.
-ஒழுங்கா புள்ளைங்கள படிக்க வைப்பவன்-
விமரà¯à®šà®©à®®à¯(பதிவà¯) à®…à®°à¯à®®à¯ˆ தோழா
derailed is novel,
Wonderful review. Makes one to go and surely watch the movie. Thanks for the review
@ காதலரே – சூப்பர் !! இதன் பாடல்கள் என்னையும் தாக்கி விட்டன. . எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்கவே மாட்டேன் என்கின்றன. ஆமாம். .
நாமெல்லாம் இப்பவும் யூத்துதானே? அது என்ன சமீப காலமாக இளைஞன்? 🙂
நம் விரல் வித்தை வேங்கை இப்படத்தில் கண்டபடி அடக்கி வாசித்துள்ளார் . .அண்டர்ப்ளே . .இனிமேல் இப்படியே இருந்தால் நமக்கும் அவரைப் பிடிக்க ஆரம்பிக்கும் 🙂
@ ராமசாமி – அதே டவுட்டுதான் பாஸு எனக்கும் . . . 🙂
@ பப்பு – அப்பப்ப ஃபீலிங்கி வந்தாத்தானே தமிழன் . . 🙂 அதான் நானும் . . . ஹே ஹே ஹீ ஹீ . .
@ ஷாகுல் – அந்த ரெண்டு படமுமே டீரெயில்ட் தான் . .
@ அக்பர் – மிக்க நன்றி . . அடிக்கடி வாருங்கோள் . . .
@ ஜீவன் பென்னி – ஆமா. .அதே தான் . . கான் விமர்சனம் இதோ இன்னும் சில மணி நேரத்தில் . .
@ அஷோக் – உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . .
@ வினோத் கௌதம் – எல்லாக் காதலர்களுக்கும் இது ரொம்ப புடிக்கும் . . தமிழ்ப்பட லிஸ்ட் அனுப்புங்க . .:-)
@ மயில் – சரியாகச் சொன்னீர்கள். . உன்மத்தம் தான் . .பின்னி எடுத்துட்டாரு நம்ம தல ரஹ்மான் . .
@ நாஞ்சில் பிரதாப் – நல்ல பிரிண்டா பாருங்க . .பார்த்துட்டு எழுதுங்க . .
@ சிங்கப்பூர் நடராஜன் – நானு அப்பர் க்ளாஸ் இல்ல . . நல்ல படங்களின் ரசிகன். . நானு அங்கயே சொல்லிருக்கேனே . . இது என்னப்பொறுத்த வரை தான்னு . .
ஒவ்வொருத்தருக்கும் ரசனை மாறுமில்லையா . . இதுல சிம்பு அண்டர்ப்ளே பண்ணிருக்குறதுனால, தைரியமா போங்க . .:-)
@ தாவூது – ஹீ ஹீ . . கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுடேனுங்ணா . . 🙂
@ புள்ளைகள படிக்க வைப்பவரே – எனக்கு ஷாலோவா தோணல . .ரொம்பப் புடிச்சது . .இதுல வர்ர காதல் கண்டிப்பா செயற்கை இல்ல . .ஒருவேளை
உங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம் . .தட்ஸ் ஓகே . .விடுங்க பாஸு . . இதெல்லாம் ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட ரசனை தான் . .இது எனக்குப்
புடிச்சது . .அதேபோல், உங்களுக்குப் புடிச்ச படமும் இனிமேல் வரலாம் . .புள்ளைங்கெல்லாம் நல்லா படிக்குறாங்களா . . 🙂
@ உலவு – நன்றி பாஸு . .
@ சூர்யா – டீரைல்ட், ஒரு நாவல் தான் . .அப்பறம் படமா எடுக்கப்பட்டது. . .அப்பறம் காப்பி அடிக்கப்பட்டது . . .:-)
@ அனானி – வாருங்கோள் . .மிக்க நன்றி . .படம் பாருங்கள் . .
ஏன் ஜேஷ்… நாங்கெல்லாம் படம் பார்ககூடதுனு கதையை இப்படி வரிக்கு வரி எழுதிவேசுருகீங்க? இது ஞாயமே இல்லை…
But… ரொம்ப நல்ல பதிவு. வாழ்த்துக்கள். கீப் ரைடிங் மோர் 🙂
@ ஷ்ரீ – இந்தப் படத்த உங்க கூட சேர்ந்து பாக்காதது ஒரு பெரிய தப்பு . .இந்த வாரத்துக்குள்ள ஒரு நாள் மாலை வேளைல போலாம் . . நீங்க வரணும் . . உங்க கூட பார்த்தா தான் எனக்கு சந்தோஷம் . . நீங்களும் நானும் மட்டும் . .:-) ( மக்களே . . இவங்க தான் நானு காதல் படங்களுக்கு விமரிசனம் எழுத மொத்தக் காரணமே . .என்னை மாதிரி ஒரு சைக்கோப் பயலையும் காதலிக்கும் பெண் . .) 🙂 🙂
@ searchindia – ur comment has been deleted. If u want to vent down ur ‘anger’, go do it in ur own site. Don’t try it here. And, I don’t think it’s that bad for u to use all those obscene stuff. . Well, everyone has his/her own comments.. accepted. but what u’ve done is slandering, to it’s core. so, I suggest u to c a psychiatrist first, as such an anger might result in disaster. Else, if u juz wanna put idiotic and obscene stuff in other blogs juz to prove that u r ‘man’ enough. . well, I’d say go fuck urself.
கௌதம் மேனன் கிடைக்கும் சில காட்சிகளில் கூட அவர் படங்களில் நடிகர்/நடிகையின் இடைபட்ட காதலை ரம்மியமான மெல்லிசை போல தருவிப்பாராயிற்றே, அவர் அதை ஒட்டி முழுக்க முழுக்க படம் எடுத்தால் தோற்றுவிடுவாரா என்ன…கண்டிப்பாக துணைவியுடன் பார்க்கவேண்டிய படம் என்று தெரிகிறது. பார்த்து விட்டு கருத்து பதிகிறேன், நண்பரே.
காதல் படங்கள் என்றால் தங்கள் விமரிசனத்தில் அது இழைந்தோடுவது அருமை.. தொடருங்கள் உங்கள் காதல் பயணத்தை.
வாங்க ரஃபீக் . .இத துணைவி (அ) தோழி(கள்) கூட சேர்ந்து தான் பாக்கணும். . . பார்த்துபுட்டு வாங்க . .இனியும் நெறைய காதல் படஙலைப் பற்றி எழுதுகிறேன் . . 🙂 மிக்க நன்றி . .
தமிழுக்குத்தான் நிறைய பேர் இருக்காங்களே.. நீங்களும் இதுல குதிக்கணுமா..? இதை எழுதுன நேரத்துக்கு வேற ஒரு ஆங்கிலப் படத்தை அறிமுகப்படுத்தியிருக்கலாம்..!
Nall oru vimarchanam nanbaa ellurum love iruukuma,
@ உண்மைத்தமிழன் – நீங்க சொல்றது சரிதான் . .ஆனா எனக்கு இந்தப் படம் ரொம்பப் புடிச்சது. அதுனால தான் எழுதிட்டேன் . . 🙂 இவ்ளவு நாள்ல நான் எழுதின ரெண்டாவது தமிழ்ப்படம் இது . . மனசுக்குப் புடிச்ச தமிழ்ப்படங்கள எழுதுறதுல ஒரு சந்தோஷம் தான் . .
@ அனானி – நன்றி நண்பா . .
சிம்புவுக்கு பதிலாய் ஜீவா/ஆர்யா நடித்திருக்க வேண்டும்.சூப்பராய் செய்திருப்பாரே?
அனானி . . ஜீவாவிடம் ஒரு ‘சின்னப்புள்ளத்தனம்’ உள்ளது என்பது என் அனுமானம். ஆர்யா கொஞ்சம் மெச்சூரான ஆள். அது வேறு மாதிரி போயிருக்கும். சிம்பு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். . . 🙂
உங்கள் சர்ச் இண்டியா கோபாவேச கமெண்ட் பார்த்து அங்கே போனால்
அவர்கள் மனநோயாளிகள் என கண்டேன்.உங்களால் எதாவது வைத்தியம் செய்ய இயலுமா?அங்கு கமெண்ட் போட முடியலை
அனானி – அவனுங்களோட விண்ணைத் தாண்டி வருவாயா ரிவ்யூலயே கமெண்ட் ஆப்ஷன் இருக்கு . .ஆனா அது வேணாம். . ஃப்ரீயா உடுங்க . .அவனுங்க என்னென்னமோ உளறிட்டுப் போகட்டும் . . நாம ஜாலியா லைஃப எஞ்ஜாய் பண்ணலாம் . . அளவே இல்லாம உளர்ரவனுங்க கிட்ட நாம பேசினா அப்பரம் நாம கன்பீஜ் ஆயிருவோம் . .:-) ஃப்ரீயா உடு மாமு . .
கருந்தேளாரே, (பட்டம் எப்படி?)
வழமை போல காதல் படங்கள் என்றவுடன் உங்களின் அட்ரினலின் அதிகமாக சுரந்த நிலையில் எழுதியிருந்தீரோ? எழுத்தில் தெரிகிறது.
பேக் டு பேக் மூவீசா? என்ன கொடுமை சார் இது? இங்கே மனுஷன் ஒரு படம் பாக்கவே முடியாம தடுமாறும்போது சிலர் மட்டும் இப்படி எல்லாம் என்ஜாய் செய்கிறார்களே?
That kind of thiiknng shows you’re on top of your game
வாங்க விஸ்வா . .பட்டத்தைக் கொடுத்து பம்ம வைத்து விட்டீர்களே . .என் மீது அன்பு கொண்ட தமிழ்ஹக, இந்திய, உலக, அண்ட மக்கள், ஏற்கனவே அகில உலக சூப்பர்ஸ்டார், இணையதள இந்திரன், விமர்சன விடிவெள்ளி போன்ற பட்டங்களை எனக்கு அளித்தது தாங்கள் அறிந்ததே . .(எல்லாம் தமிழ்ப்படம் பார்த்த எஃபக்ட்) . .:-)
இரு படங்களையும் பேக் டு பேக் பார்த்துவிட்டு, மறுபடியும் விதாவ போகலாம் என்று முடிவு செய்து விட்டோம். ஆனால் எங்களுக்குப் பசித்ததால், படம் தப்பித்தது. இல்லையெனில், அன்றே ஹாட்ரிக் . . 🙂
படத்தை இப்பவே பார்க்க வேண்டும் போல் உள்ளது.
தாராபுரத்தான் – இப்போதே சென்று பாருங்கள் . . 🙂 நல்ல படம் தான் . .
பதிவு அருமை,உங்க காதலுக்கும் வாழ்த்துக்கள்.பின்னூட்டம் நேற்றே போட முடியவில்லை
ஃபார்மாலிட்டி டன்
நன்றி நண்பா . .வாழ்த்துகளுக்கு . .:-)
Superb Review !!!! Songs are great !!!
//நமது வாழ்வில், திடீரென்று குறுக்கிடுகிறாள் ஒரு பெண். அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே உள்ளுக்குள் ஒரு உந்துதல். இவள் தான் நமது வாழ்வின் ஆதாரம் என்று. நம்மில் எத்தனையோ பேருக்கு இந்த உணர்வு தோன்றியிருக்கும். //
எல்லாருக்குமா? விடலைப்பசங்களுக்கும், மனமுதிர்ச்சியடையா வாலிப உள்ளங்களுக்கும்தான்.
//தனக்காக ஒரு ஆண் இவ்வளவு தொலைவு வந்ததையும், தான் இல்லாமல் அவனது வாழ்வு சூன்யமாய் மாறிவிட்டதையும் அறிகையில், அவள் மனதில் இயல்பாக அவன் மேல் ஒரு ஈர்ப்பு தோன்றிவிடுகிறது. அதன்பின், அவன் செய்யும் ஒவ்வொரு குறும்புத்தனமான செயலையும் கண்டு, தனது உள்ளத்தைப் பறி கொடுத்து விடுகிறாள்.
//கார்த்திக் அவளை விடாது துரத்திக் கொண்டு ஆலப்புழா வந்துவிடுகிறான்.//
இதன் பெயர் காதல் அலல். வாலிபக்கிறுக்கு.
//தனக்காக ஒரு ஆண் இவ்வளவு தொலைவு வந்ததையும், தான் இல்லாமல் அவனது வாழ்வு சூன்யமாய் மாறிவிட்டதையும் அறிகையில், அவள் மனதில் இயல்பாக அவன் மேல் ஒரு ஈர்ப்பு தோன்றிவிடுகிறது. அதன்பின், அவன் செய்யும் ஒவ்வொரு குறும்புத்தனமான செயலையும் கண்டு, தனது உள்ளத்தைப் பறி கொடுத்து விடுகிறாள்.
//
சரியாப் போச்சு. அவளும் அதே கேசுதான்.
தம்பி, கருந்தேள்!
இதில்லாம் சினிமாக்காதல். பார்த்து ரசித்துவிட்டுப்போங்கள். வாழ்கையில் நடக்கா. அப்படியே நடப்பினும், அக்காதலர்களை வெறும் வாலிபக்கிறுக்கர்கள் என்றுதான் சொல்வார்கள்.
காதல் இவற்றுக்கும் அப்பாற்பட்டது. பொதுவாக வாழ்க்கையின் காண்பது மிக அரிது.
சினிமா விமர்சனத்தை சினிமா விமர்சனத்தோடு முடிச்சுகோப்பா. வாழ்க்கை வேறு; சினிமா வேறு.
@ அனானி – வணக்கண்ணா . . பெரிய பின்னூட்டம் போட்ருக்கீங்க . . நீங்க இப்புடியெல்லாம் நடக்காதுன்னு சொல்றீங்க . . இதுக்குப் பேரு வாலிபக்கிறுக்குன்னு வேற புதுசா ஒரு வார்த்தைய கண்டுபுடிச்சிருக்கீங்க . .:-) ரைட்டு . . ஆனா, என்னோட பதில் என்னன்னா, காதல் அப்புடீங்குறதுக்கு எங்கயும் யாரும் ரூல்ஸ் போட்டு வெக்கல. . ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி அது நிகழும். அதுனால, இது வாலிபக்கிறுக்கு, ஹா ஹுன்னு நாம பொதுப்படுத்துறதுக்கு பதில், அத ரசிச்சிட்டுப் போலாமே . .
அது எப்புடீங்கண்ணா . . விடலப் பசங்களுக்கும் மன முதிர்ச்சியடையா வாலிப உள்ளங்களுக்கும் மட்டும் தான் அப்புடித் தோணுமா? இது என்ன தமாசு . . 🙂 🙂
வாழ்க்கையில் இது நடக்காதுன்னு சொல்றதுக்கு நீங்க என்ன இந்த உலகத்துல இருக்குற அத்தன மனுஷங்களோட வாழ்க்கையயும் ஆராய்ச்சி பண்ணுனீங்களோ? அது எப்புடிண்ணா உடனே ஒரு தீர்ப்பு எடுத்து மக்கள் மேல ஒரு வீசு வீசுறீங்க? இலவச தீர்ப்பு வழங்குறது தமிழனோட பிறவிக்குணம்னு கரெக்டா நிரூபிக்குறீங்க . . 🙂 🙂
காதல் இதுக்கெல்லாம் அப்பாற்பட்டதா? அப்ப எங்கியோ ஒரு காட்டுக்குள்ள உக்காந்து இதெல்லாம் இல்லாமையே ரெண்டு பேரு தொட்டுக்காம, எந்த உணர்ச்சியும் இல்லாம ‘காதல்’ பண்ணுராய்ங்களோ? 🙂
போங்கண்ணா . . போயி புள்ள குட்டிங்கள படிக்க வெய்யுங்க. . அத உட்டுட்டு, இப்புடியெல்லாம் அடையாளம் தெரியாம அனானி பேர்ல வந்து கர்ம சிரத்தையா கமெண்டு போட்டுக்கினு . . தமாசு பண்ணாதீங்க . . 🙂
பி.கு – இப்புடி நடக்கும்னு நிரூபிக்க, என்னோட வாழ்க்கையே ஒரு உதாரணம் . . அதுனால, அடுத்த முறை இப்புடி ‘இலவச தீர்ப்பு’ வழங்கும்போது, முடிஞ்சா ஒளிஞ்சிக்காம உங்க ஐடிலயே வந்து பின்னூட்டம் போடுங்க . . 🙂 🙂 🙂
//படத்தின் ஒவ்வொரு அணுவிலும், நமது வாழ்வில் நாம் அனுபவித்த அந்தக் காதல் நிமிடங்களை நமது உள்ளத்தின் அடியாழத்திலிருந்து தோண்டியெடுத்து, மூளையில் ஒரு மாற்றத்தைப் புரிய வேண்டும். வெளியே வருகையில், நமது இழந்த அல்லது தற்போதைய காதலின் சிறந்த நிமிடங்கள், கண்களில் பெருகி வழிய வேண்டும். இன்னும் நிறைய உணர்ச்சிகளின் கலவையாய் நாம் மாறிவிட வேண்டும்.
இவையெல்லாமும் எனக்கு நடந்த ஒரு படமே ‘விண்ணைத் தாண்டி வருவாயா’//
உண்மை!!!!!!!!!!!!
nalla irukku
padathula kathal iyalba than solapaturuku ana ella characters um gautham pesura mathiri than irukum epadi na ellarum sayma peter peter peter varanam ayiram thilum epadi than avan arrear vaipanam englisha pesuvanam ovaur character ovur mathiri avanga enna mathiri pesuvanga avanga entha alvugu eng payanpaduthuvanga ethvum parkuruthu illa gautham neraya eng love novels padipar nalla spoken eng class padichurukar theriyuthu athuka vtv paduthula oru sceneula trisha simbuta puthu kathali pathi pesupothu aval pathi sol nu solra appa enna dialogue theriyuma describe her karthik muruga!intha describe elam seminarmathiri idathulu vilum normala tell about her karthik ella ethavathu.gautham padthula enga college comm skills labla ugarthamathiri feeling.ithuku directa gautham englishlay padam eduthulamay appa antha padam parkuthula entha problem irukathu mathapadi ilyalbana kachikal nalla direction than.kandipa tamil padatha eng dubb panni edukura gautham marnum yes definitely u have to change peter gautham it s necessary(he he he).pathapadi unga valaipo nalairuku crime spree padatha aripugapathruthuku nandri
தலைவரே..!
உங்கள் வலைத்தளத்தில் என்னுடைய முதல் பின்னூட்டம்.
விண்ணைத் தாண்டி வருவாயா:
என்னை மிகவும் பாதித்த படம். நீகள் கூறியவாறு எத்தனையோ பெண்களை பார்த்து என் மனதை பரிகொடுதிருகிறேன் அவை அனைத்தையும் என் நினைவிற்கு கொண்டு வந்து பீல் பண்ண வெய்த படம்.
படத்தை பார்த்துவிட்டு, அவசியம் காதல் வயபட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
சரி… என்னை பற்றி: இப்படி ஒரு வலைத்தளம் உள்ளதை என் நண்பன் கூறித்தான் தெரிந்துகொண்டேன். கடந்த இரண்டு மாதங்களில் நான் உங்கள் விசிறியாகிவிட்டேன். என்னால் முடிந்த வரை கட்டுரைகளை படித்தேன், உங்கள் நயம் எனக்கு மிகவும் பிடித்திருகிறது. உங்களது இப்பணி மெம்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
ஆரம்பம் பிடித்தது. பின் பாதி வாரணம் ஆயிரம் பின் பாதி மாதிரி interestinga இல்ல
thiru karundhel,
Ellaam ok aanaa neenga Mozart tin isaiyai ketrukeengalaa? appram edhukku ARR I Mozart nu solreenga? ARR yaarudaiya oppeedum illaamaleye pugalalaam. Thavaraana oppumai vaendaam.
Watch “500 days of summer”