Gravity (2013): 3D – English

by Karundhel Rajesh October 22, 2013   English films

அந்நியமான இடத்தில் மாட்டிக்கொண்டு தவிப்பது என்பது எத்தனை கொடுமையான விஷயம்? அதிலும் குறிப்பாக அங்கே நமக்குத் தெரிந்த யாருமே இல்லாவிட்டால்? இன்னும் கொடுமையாக, அங்கே மனித வாழ்வின் சுவடே இல்லாவிட்டால்?

அடுத்த நிமிடத்தில் உயிர் போய்விடும் என்பதை தெளிவாக அறிந்த ஒரு உயிரின் எதிர்வினை எப்படி இருக்கும்? பல்வேறு விபத்துகளில் இது நடந்திருக்கிறது. பிறரால் காப்பாற்றப்படாத கொடூரமான நிலையில் இருக்கும் மனிதர்கள் உணரும் ஒரு எண்ணம் இது.

’வானம்’ என்பது எத்தனை பிரம்மாண்டமானது என்பது நம் எல்லாரின் மனதிலும் இருக்கும் ஒரு விஷயம்தான். அவ்வப்போது இப்படியெல்லாம் நாம் எண்ணிப்பார்த்திருப்போம். ஆனால், அத்தகைய பிரம்மாண்டத்தை நம்மைவிடவும் சற்றே அருகாமையில் சென்று அனுபவிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் முடிகிறது. இவர்கள், வானில் தங்களது ஆராய்ச்சிகளுக்காக அரசால் அனுப்பப்படுபவர்கள். அப்படி வானில் இருக்கையில் அவர்கள் எடுத்த பல அழகான புகைப்படங்கள் இருக்கின்றன. அத்தனை அழகாக பூமியை நம்மால் பார்க்கவே இயலாது. அதேசமயம், பூமியை விட்டு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் அப்பால், யாருமே அற்ற அண்டவெளியில் மிதந்துகொண்டிருக்கையில், மனதின் ஆழத்தில் இருந்து வெளிப்படும் பயத்தை கையாளத் தெரியாவிட்டால், பைத்தியம்தான் பிடிக்கும். இதேதான் கடலுக்கும் பொருந்தும் அல்லவா?

ரயன் ஸ்டோன் என்ற பெண், தனது வாழ்க்கையின் முதல் விண்வெளிப் பயணத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவள். அமெரிக்காவின் ஹப்பிள் டெலஸ்கோப்பில் சில சிறிய பழுதுநீக்கும் வேலைகளை, இன்னொரு விண்வெளிப் பயணியான மாட் கொவால்ஸ்கியுடன் செய்துகொண்டிருப்பவள். இருவரும் விண்வெளியில் ஒரு வாரமாக இருக்கின்றனர். கொவால்ஸ்கிக்கு விண்வெளிப்பயணம் என்பது மிகவும் இயல்பான விஷயம். பலமுறை அப்படி சென்றிருக்கிறார். ஆனால், ரயனுக்கோ இதுதான் முதல். இதற்கு முன் ஆறு மாதங்கள் நாஸாவில் பயிற்சி எடுத்ததோடு சரி. அவளுக்கு அடிமனதில் பயம். இருந்தாலும் கொவால்ஸ்கி, ஷரீஃப் என்ற இளைஞன், தனது விண்வெளி ஓடமான எக்ஸ்ப்ளோரரின் கேப்டன் மற்றும் அதன் சக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் இருப்பதால், கொஞ்சம் தைரியமாக இருக்கிறாள்.

அது அவர்களின் கடைசி நாள். கொவால்ஸ்கிக்கு இதுதான் வாழ்வின் கடைசி விண்வெளிப் பயணம். விண்வெளியில் பல்வேறு முறை மிதந்திருந்தாலும், ரஷ்யரான அனடோலி ஸொலோவ்யெவ்வின் சாதனையான 82 மணி நேரம் – 22 நிமிடங்களை தன்னால் தாண்டமுடியவில்லையே என்று வருத்தமாக இருக்கும் ஜாலி கதாபாத்திரம் கொவால்ஸ்கி. அதேசமயம், அவர் ரயன் ஸ்டோனுடன் ஆரம்பம் முழுக்கவே மிக நகைச்சுவையாகப் பேசுவது, முதன்முறை விண்வெளிக்கு வந்திருக்கும் அவளுக்கு எந்த வகையிலும் பயம் கிளம்பிவிடக்கூடாது என்பதற்கே.

அவர்களது வேலையில் கவனமாக இருக்கும்போதுதான், திடீரென்று கண்ட்ரோல் ரூமில் இருந்து அவர்களுக்கு அந்த செய்தி கிடைக்கிறது – ரஷ்யாவின் பழுதடைந்த ஒரு ஸாடலைட்டை அவர்களின் ஏவுகணை மூலம் தகர்க்கையில், தன்னிச்சையாக அந்த ஸாடலைட்டின் பாகங்கள் எல்லாமே படுவேகத்தில் பூமியை சுற்றிவர ஆரம்பித்துவிட்டன. அவற்றின் வேகத்தால், மிகவும் கடுமையான பாதிப்பை அவை விளைவிக்கப்போகின்றன. இதனால், தங்களின் வேலையை அப்படியே விட்டுவிட்டு அவர்களை பூமிக்கு வரச்சொல்லி கண்ட்ரோல் ரூமில் இருந்து அபாய எச்சரிக்கை வருகிறது.

இதன்பின் என்ன நடக்கிறது என்பதே படம்.

படத்தில் மொத்தம் இரண்டே நடிகர்கள். மூன்றாவது, நான்காவது ஆட்கள் எல்லாருமே பிணங்கள். இதுதவிர, எட் ஹாரிஸ் தனது குரலை மட்டும் வழங்கியிருக்கிறார் (கண்ட்ரோல் ரூம் நபர். இதே எட் ஹாரிஸ் தான் 1995ன் Apollo 13’ படத்திலும் பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் ஒரு அருமையான படம். அதை தவறவிடாமல் பார்க்கலாம்.

இந்தப் படத்தில் வேறொரு கதாபாத்திரமும் இருக்கிறது. கார்ஜ் க்ளூனி & ஸாண்ட்ரா புல்லக்கை விடவும் அற்புதமாக நடித்திருக்கும் அது – விண்வெளி. பல படங்களில் நாம் விண்வெளியை பார்த்திருந்தாலும், இத்தனை பக்கத்தில் படம் முழுக்கவும் இதுவரை பார்த்திருக்கவில்லை. அதிலும் பூமியை அட்டகாசமாக ஸிஜி செய்திருக்கிறார்கள். யோசித்துப் பாருங்கள். எல்லைகளே இல்லாத அண்டவெளியில் நாம் இருந்தால், நமக்கு என்னென்ன தோன்றும்? அவையெல்லாமே இந்தப் படம் தொடங்கி முடியும்வரை நம் மனதில் தோன்றுகின்றன. பூமியில் பாதுகாப்பாக நமது வீடுகளில் இருந்து வானத்தை கவனிப்பதற்கும், வானத்திலேயே நின்றுகொண்டு வானத்தை பார்த்து பயப்படுவதற்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன அல்லவா?

ஹாலிவுட்டில் இதைப்போன்ற மிகச்சில நடிகர்கள் நடித்த படங்கள் ஏற்கெனவேயும் வந்திருக்கின்றன. சமீபத்திய உதாரணம் – Buried. 2010ல் ரயன் ரேய்னால்ட்ஸ் நடித்த படம். அந்தப் படமும் நன்றாக எடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம்தான். படம் முழுக்க, உயிரோடு புதைக்கப்பட்ட ராணுவவீரனின் கதையைக் கூறுவது. ஆனால், இவற்றுக்கும் க்ராவிடிக்கும் உள்ள வித்தியாசம் – இந்தப் படங்களிலெல்லாம், அந்த இடத்தில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றாது. ஆனால் இதில் அவசியம் தோன்றுகிறது. பிரம்மாண்டமான திரை முழுவதும் இருண்ட விண்வெளி இருந்துகொண்டே இருந்தால் அப்படித்தான் இருக்கும்.

பாழ்வெளியில் மாட்டிக்கொண்ட ஒரு மனிதனின் தவிப்பை ஆடியன்ஸையும் அடைய வைத்திருப்பதே இயக்குநர் அல்ஃபோன்ஸோ க்வாரோனின் (Y Tu Mamá También) வெற்றி. எனக்குத் தெரிந்து, பல விஷயங்களில் படம் துல்லியமாக இருந்தது (நீ எப்பய்யா விண்வெளில நடந்த என்று கேட்டால் நடப்பதே வேறு). இன்னொரு விஷயம் – பாழ்வெளியான விண்வெளியில் நிலவும் மௌனத்தை திரைப்படத்தில் எப்படி காண்பிப்பது? அதையும் இதில் சாத்தியப்படுத்தியிருக்கின்றனர். இசையும் படத்தில் அவ்வப்போது திகிலை கூட்டுகிறது.

படத்தின் இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் – சந்தேகமில்லாமல் வசனங்கள். நாம், கடினமான பணி எதை செய்தாலும், ’அது ஒன்றும் ராக்கெட் சயன்ஸ் கிடையாது – எளிதில் முடித்து விடலாம்’ என்று சொல்கிறோம் அல்லவா? அண்டவெளியில் இருக்கும் ரயனிடமும் அதையே கொவால்ஸ்கி சொல்கிறார். எங்கு என்று கவனியுங்கள். இதைப்போன்ற இயல்பான நகைச்சுவை வசனங்கள் அவசியம் அனைவருக்கும் பிடிக்கலாம்.

ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படுவேகத்தில் செல்லும் இந்தப் படம், விண்வெளிப் பயணத்தின் இருண்ட மறுபக்கத்தை சொல்கிறது. இப்படிப்பட்ட ஒரு அட்டகாசமான கருவை விவரித்து, பெரிய விண்கலம், அதில் நூற்றுக்கணக்கான மக்கள், அது போய் இறங்கும் கிரகம் என்று ’ரோலாண்ட் எம்மரிக்’ தனமாக எடுக்காமல், இயல்பாக எடுத்திருக்கும் க்வரோனுக்கு பாராட்டுகள் அனைத்து பக்கங்களிலிருந்தும் குவிந்துகொண்டிருக்கின்றன.

இந்த ஆண்டு நான் திரையில் பார்த்த இங்லீஷ் படங்களில் என்னை வெகுவாகக் கவர்ந்தது, சந்தேகமில்லாமல் பஸிஃபிக் ரிம்.  இந்தப் படமும் அப்படியே (இன்றுதான் நண்பர் பிரன்னா ராஜன் எழுதிய ‘க்ராவிடி’ விமர்சனத்தை படித்தேன். ஆனால், அதற்கு முன்னரே இப்படி நினைத்திருந்தாலும், அவரது போஸ்ட்டில் இதையே எழுதியிருந்ததை பார்த்து ஆடிப்போய்விட்டேன்).

அவசியம் ‘க்ராவிடி’யை பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கலாம்.

இதோ இது பிரசன்னா ராஜனின் விமர்சனம். இங்கே க்ளிக் செய்து, நண்பர் பாலகணேசனின் விமர்சனத்தையும் படிக்கலாம் (இதையும் இப்போதுதான் படித்தேன்).

பி.கு – இதை 3டி இல்லாமலும் பார்க்கலாம். திரை அளவு மட்டும் பெரிதாக இருக்கவேண்டியது அவசியம்.

  Comments

13 Comments

  1. மிரண்டு போனேன் சகோ படம் பார்த்துட்டு , ரியலி சூப்பர் பிலிம் 🙂 😉

    Reply
  2. நீங்கெல்லாம் கொடுத்துவச்ச மனுசனுங்கையா… என்ஜாய் பண்றீங்க… இந்த ஊர்ல மாட்ட்க்கிட்டு ஒரு நல்ல படத்தையும் தியேட்டர்ல பாக்க முடியாமாட்டிங்குது… அப்படியே தமிழ்ல டப் பண்ணி வந்தாலும் டைட்டில பாத்தாலே கொலவேரியயிடறேன்(கேடி ரம்போ கில்லாடி அர்னால்டு)… அதுலயும் ஆக்சன் படத்த மட்டும்தான் டப் பன்றனுங்க…

    Reply
  3. //நீங்கெல்லாம் கொடுத்துவச்ச மனுசனுங்கையா… என்ஜாய் பண்றீங்க… இந்த ஊர்ல மாட்ட்க்கிட்டு ஒரு நல்ல படத்தையும் தியேட்டர்ல பாக்க முடியாமாட்டிங்குது… அப்படியே தமிழ்ல டப் பண்ணி வந்தாலும் டைட்டில பாத்தாலே கொலவேரியயிடறேன்(கேடி ரம்போ கில்லாடி அர்னால்டு)… அதுலயும் ஆக்சன் படத்த மட்டும்தான் டப் பன்றனுங்க… //

    சேம் ப்ளட் ஹியர்

    Reply
  4. Ganesh Kumar

    //நீங்கெல்லாம் கொடுத்துவச்ச மனுசனுங்கையா… என்ஜாய் பண்றீங்க… இந்த ஊர்ல மாட்ட்க்கிட்டு ஒரு நல்ல படத்தையும் தியேட்டர்ல பாக்க முடியாமாட்டிங்குது… அப்படியே தமிழ்ல டப் பண்ணி வந்தாலும் டைட்டில பாத்தாலே கொலவேரியயிடறேன்(கேடி ரம்போ கில்லாடி அர்னால்டு)… அதுலயும் ஆக்சன் படத்த மட்டும்தான் டப் பன்றனுங்க… //

    சேம் ப்ளட் ஹியர் – சவூதி – கணேஷ்குமார் 🙂

    Reply
  5. http://www.fxguide.com/featured/gravity/

    I was stunned, absolutely floored. I think it’s the “best space photography” ever done, I think it’s the best space film ever done, and it’s the movie I’ve been hungry to see for an awful long time. What is interesting is the human dimension. Alfonso and Sandra working together to create an absolutely seamless portrayal of a woman fighting for her life in zero gravity. – James Cameron

    please note james speak about that word very important ” best space photography” – behind the Technic

    Ashraf.

    Reply
  6. narayanan chormpet

    thala appolla13 tamil sun t.v 19-10-13 sat night 11-p.m I-watched super dinkaran sunday magziene your writing articales super thank karunthel

    Reply
  7. Ashwin

    nice review anna.booked tickets fo gravity.must be great.

    Reply
  8. Arun

    thala neenga yen imax la pakkala….. it was quite amazing in the big screen. But i couldnt invest my interest in any of the character as there wasnt any depth to begin with. May be they should hv showed their preparation on earth, build the characters first and then could hv taken us into space. But no doubt its a spectacular attempt !! Good review as usual 🙂

    Reply
  9. ராஜேஷ் அண்ணா அது “பால்வெளி”… “பாழ்வெளி” இல்ல… மத்தபடி வழக்கம் போல அருமை… படத்தைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை….

    Reply
  10. Gopi

    விமர்சனம் அட்டகாசம் ராஜேஷ். இன்னைக்கு தான் IMAX PVR (Bangalore) ல பார்த்தேன். மிரண்டு போய் வெளிய வந்தேன். அதெல்லாம் சரி நீங்க reference குடுக்குற அளவுக்கு பால கணேசன் அவ்வளவு பெரிய அப்பாடக்கரான்னு அவருடைய சைட்டுக்கு போய் பார்த்தேன். Gravity விமர்சனத்தை படிச்சிட்டு அப்படியே வேற என்ன எழுதி இருக்காருன்னு கீழே போனா அவரு அன்பே சிவத்தை பத்தி எழுதி இருந்தததை படிச்சேன். உங்க பந்தபாசம் புரிஞ்சு போச்சு…..

    Reply
  11. Monz, Madurai

    Its a great movie. One of the greatest adventure films ever made. See it in 3D- its worth it. Sandra Bullock gives an Oscar caliber performance

    Reply
  12. Savareesan

    நேற்று இந்த படத்தை பார்த்தேன்.. அதுவும் 3த-யில் (இ மக்ஸ்) நான் பிரமித்தே போய்விட்டேன் யப்பா.. நாம் விண்வெளிக்கு போகாததே நல்லது என்றே எனக்கு பட்டது.. அவர் (ரயன் ஸ்டோன்) மிக நன்றாகவே நடித்திருந்தார், அதுவும் கடைசி சீனில் அவர் நீரில் விழுந்து எழ முடியாமல், தன் தாய் நாட்டின் (பூமி) மண்ணை கைப்பற்றும் காட்சி நெகிழ வைத்து விட்டது..

    Reply
  13. saravanan

    பாழ்வெளியான — please take care of your lang boss– Punjai Sararvanan

    Reply

Join the conversation