The Hateful Eight & Quentin Tarantino

by January 28, 2015   English films

“I thought, ‘What if I did a movie starring no heroes, no Michael Landons, but just a bunch of nefarious guys in a room, all telling backstories that may or may not be true. Trap those guys together in a room with a blizzard outside, give them guns, and see what happens’ – Well, that’s what is The Hateful Eight” – Quentin Tarantino

பல கதாபாத்திரங்களை வைத்துப் படமெடுப்பது டாரண்டினோவுக்குப் புதிதல்ல. அவரது முதல் படமான ரிஸர்வாயர் டாக்ஸே அப்படிப்பட்டதுதான். ஹார்வி கைடெல், டிம் ராத், மைக்கேல் மேட்ஸன், லாரன்ஸ் டியர்னி, க்ரிஸ் பென், ஸ்டீவ் பூஷெமி மற்றும் டாரண்டினோ ஆகியவர்கள் அடங்கிய ஒரு பெரிய கும்பல் அது. அது முடிந்ததுமே பல்ப்   ஃபிக்‌ஷன் வெளியானது. அதிலும் ஒரு பெரும் படை. ஜான் ட்ரவோல்டா, ஸாமுவேல் ஜாக்ஸன், ப்ரூஸ் வில்லிஸ், உமா தர்மன், டிம் ராத், ஹார்வி கைடெல், விங் ரேம்ஸ், அமண்டா ப்லம்மர் என்று நீளும். இதன்பின்னர் வந்த ஜாக்கி ப்ரவ்ன் படத்திலும் ஒரு கும்பல். அதில்தான் முதன்முதலில் கதாநாயகி ஒருவரை வைத்து டாரண்டினோ கதையை எழுதினார். பின்னர் கில் பில்லிலும் ஒரு கும்பல்+கதாநாயகி. அடுத்ததாக வந்த இங்லோரியஸ் பாஸ்டெர்ட்ஸிலும் இதே கதை. கும்பல்+கதாநாயகி. ஜாங்கோ அன்செய்ண்ட் படத்தில்தான் ஒரு ஹீரோவைக் காட்டினார் (அவர் இயக்காமல் எழுத மட்டும் செய்த ட்ரூ ரொமான்ஸ் மற்றும் நாச்சுரல் பார்ன் கில்லர்ஸ் ஆகியவை விதிவிலக்குகள்). அதிலும் கும்பல் இருந்தது என்றாலும் பிற படங்களை விட இதில் எண்ணிக்கை கொஞ்சம் குறைவு.

இப்போது, கதாபாத்திரங்களின் அளவில் அவரது முதலிரண்டு படங்களின் எண்ணிக்கையை சந்திக்கும் படம்தான் ஹேட்ஃபுல் எய்ட். இதிலும் கும்பல்+பெண் என்ற வகையில்தான் எழுதியிருக்கிறார்.

ஹேட்ஃபுல் எய்ட்டின் திரைக்கதை இணையத்தில் கசிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. திரைக்கதையின் முதல் ட்ராஃப்ட்டை டிஸம்பர் 12 – 2012 அன்று எழுதி முடித்த டாரண்டினோ, அதில் பிரதான வேடங்களைக் கொடுக்கலாம் என்று நினைத்து ஆறு பேர்களிடம் திரைக்கதையைப் படிக்கக் கொடுத்திருக்கிறார். அதில் ஒருவர் இக்கதையை அவரது ஏஜெண்ட்டிடம் கொடுக்க, அந்த ஏஜெண்ட் அதைப் பலரிடமும் கொடுத்து, சில நாட்களில் இணையத்தில் கசியவிடப்பட்டது அந்தத் திரைக்கதை. அது யார் என்று டாரண்டினோ சொல்லவில்லை. ஆனால் க்ளூ கொடுத்திருக்கிறார் (’மைக்கேல் மாட்ஸன், ப்ரூஸ் டெர்ன் & டிம் ராத் ஆகிய மூன்று நடிகர்களிடம் கொடுத்திருந்தேன். இதில் டிம் ராத் லீக் செய்யவில்லை என்று எனக்குத் தெரியும்’). இதன்பின் அப்படி லீக் செய்த Gawker என்ற வலைத்தளத்தின் மீது வழக்கும் தொடர்ந்தார். ஆனால் பின்னர் வழக்கு நீதிமன்றத்துக்கு வெளியே செட்டில் செய்யப்பட்டுவிட்டது. அப்படத்தை இனி எடுக்கவே போவதில்லை என்று கோபமாக அறிவித்தார். இதனாலேயே சில மாதங்களுக்கு முன்னர் நடிகர்களை அழைத்து, இந்தத் திரைக்கதையை ஒரு அரங்கில் படிக்கவும் செய்தார். (கிட்டத்தட்ட வானொலி நாடகம் போல. ஹாலிவுட்டில் இப்படிப்பட்ட screenplay reading sessions மிகவும் பிரபலம்). ஆனால் இதன்பின்னர் கான் திரைவிழாவில் திடீரென, படத்தை எடுக்கப்போவதாக அறிவித்தார். உடனேயே திரைக்கதையைப் பல இடங்களில் மாற்றியும் எழுதிவிட்டார் டாரண்டினோ. இதனால் தயாரிப்பாளர்களுக்கே புதிய திரைக்கதையில் என்னென்ன மாற்றங்கள் உள்ளன என்பது தெரியாது. அவர்கள் புதிய கதையை மிக ரகசியமாகப் படித்ததும் அதிலும் புதிய மாற்றங்கள் செய்தார். இப்போதைய நிலவரத்தின்படி, ஹேட்ஃபுல் எய்ட்டின் முழுத் திரைக்கதையையும் அறிந்தவர் டாரண்டினோ மட்டுமே. சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் கொலராடோவில் டெல்லூரைட் பிராந்தியத்தில் முழுதாகப் பனி சூழப்பட்ட இடங்களில் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. அதே இடத்தில்தான் மொத்தமாகவும் எடுக்கப்படப்போகிறது. ஆனால் டாரண்டினோ வழக்கமாக அவரது எல்லாப் படங்களைப் போலவும் முதல் காட்சியில் இருந்து வரிசையாக இறுதி வரை இப்படத்தையும் படமாக்கிக்கொண்டிருப்பதால் நடிகர்களுக்கும் கதையில் என்னென்ன நடக்கிறது என்பது அந்தத் தருணத்தில், அன்றைய நாளில்தான் தெரியவரும் என்பதால் புதிய திரைக்கதை இப்போதைக்கு வெளியாக வாய்ப்பில்லை.

வெளியான இரண்டு மூன்று நாட்களிலேயே இரண்டு முறை படித்தபின்னர், இன்றுவரை ஹேட்ஃபுல் எய்ட் திரைக்கதையை நான் பலமுறை படித்துவிட்டேன். கசியவிடப்பட்டிருப்பது முதல் ட்ராஃப்ட் தான் என்றாலும் டாரண்டினோவின் முதல் ட்ராஃப்ட்டே கிட்டத்தட்ட இறுதியான ட்ராஃப்ட் போலக் கச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது (எப்போதுமே டாரண்டினோவின் மூன்றாவது ட்ராஃப்ட்தான் அவரது இறுதி வடிவமாக இருக்கும். எனவே இதிலும் பின்னர் இரண்டு ட்ராஃப்ட்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்பது தெரிகிறது).

ஹேட்புல் எய்ட்டின் கதையை லேசாகக் கவனிக்கலாம். அதைவிடவும் அதன் கதாபாத்திரங்களே மிகவும் சுவாரஸ்யமானவை. எப்போதுமே டாரண்டினோவின் திரைக்கதைகளில் கதாபாத்திரங்கள் அப்படித்தான் இருக்கும். அவரது பாத்திரங்களை மறக்கவே முடியாத வகையில் எழுதுவது அவரது விசேடமான பாணி. இன்றும் நம்மால் ஜூல்ஸ், வின்ஸெண்ட், புட்ச், மார்ஸெலஸ் வாலஸ், மிஸ்டர் வைட், மிஸ்டர் பிங்க், ஆர்டெல் ராப்பீ, ஜாக்கி ப்ரவ்ன், பௌமாண்ட் லிவிங்ஸ்டன், பில், காலிபோர்னியா மௌண்ட்டன் ஸ்னேக், ப்ளாக் மாம்பா, ஓ ரென் ஈஷி, வெர்னீடா க்ரீன், ட், ஹத்தோரி ஹன்ஸொ, பாய் மேய், லெப்டினெண்ட் ஆல்டோ ‘த அபாச்சே’ ரெய்ன், ஹான்ஸ் லாந்தா, ஷோஸான்னா, சார்ஜெண்ட் டான்னி டோனோவிட்ஸ் (த பியர் ஜூ), நடிகை ப்ரிட்ஜட் வான் ஹேம்மர்ஸ்மாக், டாக்டர் கிங் ஷூல்ட்ஸ், கேல்வின் கேண்டி ஆகியோரை மறக்கமுடியாமல் இருக்கிறதுதானே? டாரண்டினோவின் படங்களை ஒருமுறை பார்த்திருந்தாலுமே இவர்களில் பலர் உங்களுக்கு நினைவு வருவார்கள்.

இதுதான் டாரண்டினோவின் ஸ்பெஷாலிடி. இந்தக் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேடமான தன்மை இருக்கும். அவர்கள் பேச்சு, நடத்தை ஆகிய எல்லாவற்றிலும் அந்தத் தன்மை மிளிரும். இதனாலேயே நம்மால் அவர்களை மறக்க இயலாது. இதேபோன்றவர்கள்தான் ஹேட்ஃபுல் எய்ட்டின் பாத்திரங்கள். படத்தில் மொத்தம் எட்டு முக்கியமான நபர்கள் என்பது தலைப்பைக் கேட்டதுமே அனைவருக்கும் தெரிந்துவிடும். அவர்களைத் தவிரவும் படத்தில் இன்னும் சிலர் உண்டு.

கதை நடக்கும் காலம் – அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து (1875 என்று வைத்துக்கொள்ளலாம்) . படத்தில் முதல் காட்சியில் அறிமுகமாகும் முதல் நான்கு நபர்கள்: ஓ.பி (O.B), மேஜர் மார்க்விஸ் வாரன் (Marquis Warren), ஜான் ருத் (John Ruth) மற்றும் டெய்ஸி டோமெர்கூ (Daisy Domergue – இது டோமெர்க் அல்ல; டோமெர்கூ என்றுதான் சொல்லவேண்டும் என்று இந்தக் கதாபாத்திரம் அறிமுகமாகும்போது டாரண்டினோ திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்). இவர்களில் ஓ.பி என்பவன் ஒரு பெரிய கோச்சு வண்டியின் ஓட்டுநன். வ்யோமிங் பிராந்தியத்தில் பனியின் நடுவே மிகப்பெரிய புயல் ஒன்று துரத்திவர, அந்தப் புயல் இவர்களை அடைவதற்குள் ஒரு பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிடவேண்டும் என்று ஆறு குதிரைகள் பூட்டிய ஒரு கோச்சு வண்டியை ஓட்டுபவன். அந்த வண்டிக்குள் ஜான் ருத் மற்றும் டெய்ஸி டோமெர்கூ அமர்ந்திருக்கிறார்கள். ஜான் ருத் என்பவன் ஒரு பௌண்ட்டி ஹண்டர். ஜாங்கோ அன்செய்ண்ட் படத்தில் ஜாங்கோவும் கிங் ஷூல்ட்ஸும் குற்றவாளிகளை வேட்டையாடுவார்களே அதேபோன்ற நபர். அவனுடன் இருக்கும் டெய்ஸி டோமெர்கூ ஒரு குற்றவாளி. அவளைத் தூக்கிலிடுவதற்காக ரெட் ராக் என்ற இடத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறான் ஜான் ருத். அவளது கையைத் தன் கையுடன் விலங்கால் பிணைத்திருக்கிறான். அவளது தலையின்மேல் பத்தாயிரம் டாலர்கள் பணயத்தொகை உண்டு.

இந்த வண்டி செல்கையில் பனிபடர்ந்த அந்த வழியில் நிற்பவர்தான் மேஜர் மார்க்விஸ் வாரன். கறுப்பினத்தைச் சேர்ந்த மற்றொரு பௌண்ட்டி ஹண்டர். இவரிடம் மூன்று பிணங்கள் உள்ளன. இவற்றை அதே ரெட் ராக்குக்குச் சென்று சேர்த்தால் இவருக்கு எட்டாயிரத்து ஐநூறு டாலர்கள் கிடைக்கும். இவரது குதிரை பனியில் இறந்துவிட்டதால் இந்த வண்டியில் இடம் கேட்டு அமர்கிறார். வாரனுக்கும் ஜான் ருத்துக்கும் ஒருவரையொருவர் ஏற்கெனவே தெரியும். கொஞ்ச தூரம் சென்றதும் மறுபடியும் ஒருவன் அதே வழியில் வண்டியில் இடம் கேட்கிறான். அவன் பெயர் க்ரிஸ் மான்னிக்ஸ் (Chris Mannix). இவன் யார் என்றால், இவர்கள் செல்லும் ரெட் ராக் என்ற ஊருக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஷெரீஃப். இவனையும் ஏற்றிக்கொண்டு வண்டி செல்கிறது. ரெட் ராக் போகும் வழியில் உள்ள மின்னீ’ஸ் ஹேபர்டஷேரி (Minnie’s Haberdashery) என்ற இடத்துக்குச் சென்றுவிட்டால் புயலிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற நோக்கில் அங்கே செல்கிறது வண்டி. ஹேபர்டெஷெர் என்பவர் அமெரிக்காவில் துணி தைப்பவர் என்று புரிந்துகொள்ளப்படுவார். அந்த இடம் ஒரு விடுதி. அங்கே குடிப்பதற்கும் உண்பதற்கும் ஏதேனும் கிடைக்கும். சுருக்கமாக, டெக்ஸ் வில்லர் மற்றும் கேப்டன் டைகர் கதைகளில் அவ்வப்போது வரும் மதுபான விடுதிகளைப் போன்ற – ஆனால் அளவில் சிறிய விடுதி அது.

அங்கு சென்றால், ஏற்கெனவே ஒரு கோச்சு வண்டி அங்கே நிற்பது தெரிகிறது. உள்ளே பாப் (Bob), ஆஸ்வால்டோ மாப்ரே (Oswaldo Mobray), ஜோ கேஜ் (Joe Gage), ஜெனரல் ஸான்ஃபோர்ட் ஸ்மிதர்ஸ் (Gen. Sanford Smithers) ஆகியவர்கள் இருக்கின்றனர். அவர்களுமே இப்படிக் குளிரில் இருந்து தப்பிக்கவே இங்கே ஒதுங்கியிருக்கின்றனர் என்பது தெரிகிறது.

வண்டியில் வந்த ஜான் ருத், தன்னுடன் இருக்கும் டெய்ஸி டோமெர்கூவைக் காப்பாற்ற வழியில் யாரேனும் வந்து தன்னைத் தாக்கிக் கொன்றுவிடக்கூடும் என்று உறுதியாக நம்புபவன். எனவே விடுதியில் இருக்கும் புதிய நால்வரை அவன் நம்பத் தயாராக இல்லை. அனைவரின் ஆயுதங்களையும் பறிமுதல் செய்துவிட்டு, அங்கே தலைவன் போல நடந்துகொள்கிறான். டெய்ஸியை அவ்வப்போது அடித்து, மிருகம் போல நடத்துகிறான். அவனுடன் இருக்கும் மார்க்விஸ் வாரன், அங்கிருக்கும் ஜெனரல் ஸ்மிதர்ஸிடம் பேசுகையில் அவரது மகனுக்கும் இவருக்கும் இருந்த ஒரு பழைய விரோதம் பற்றிப் பேசி ஜெனரலைக் கோபமூட்டுகிறார். இதனால் இருவருக்கும் சண்டை மூள்கிறது. இப்படியாக அங்கிருக்கும் இரண்டு நாட்கள் கழிகின்றன.

இரண்டாவது நாளில் அங்கே நடக்கும் ஒரு சம்பவம்தான் மீதிக்கதை. அது என்ன என்பதற்கு மேலேயே ஒரு க்ளூ இருக்கிறது.

இந்தக் கதை, வழக்கமான டாரண்டினோ ஸ்டைலில் ஐந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:

Chapter one: Last Stage to Red Rock
Chapter Two: Son of a Gun
Chapter Three: Minnie’s
Chapter Four: The Four Passengers
Chapter Five: Black Night, White Hell

இவற்றில் முதல் மூன்று அத்தியாயங்கள் வரிசையாகப் பயணிக்க, நான்காவது அத்தியாயம் ஒரு ஃப்ளாஷ்பேக். பின்னர் அது முடிந்ததும் மூன்றாவது அத்தியாயம் விட்ட இடத்தில் ஐந்தாவது அத்தியாயம் துவங்கித் திரைக்கதையை முடிக்கிறது. இந்தக் கடைசி அத்தியாயத்தைத்தான் முற்றிலும் மாற்றியிருப்பதாக டாரண்டினோ சொல்லியிருக்கிறார். அதேசமயம் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஹார்வி வெய்ன்ஸ்டீன் (பீட்டர் ஜாக்ஸனுக்கு எட்டுவிதக் கட்டளைகள் போட்ட வெயின்ஸ்டீன் சகோதரர்களில் ஒருவர்), திரைக்கதையின் பல இடங்கள் முற்றிலும் மாற்றப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நாம் மேலே பார்த்த கதாபாத்திரங்களில் நடிக்கப்போகும் நடிகர்களைப் பற்றியும் பார்ப்போம்.

Wyatt Earp Kurt Russell

முதலில் பௌண்ட்டி ஹண்டர் ஜான் ருத்தாக கர்ட் ரஸ்ஸல். அமெரிக்க வெஸ்டர்ன் படங்களில் சிறந்தவைகளில் ஒன்றான டூம்ப்ஸ்டோன் படத்தில் நிஜக் கதாபாத்திரமான வயாட் ஆர்ப்பாக நடித்தவர். ஏற்கெனவே டாரண்டினோவின் டெத் ப்ரூஃப் படத்தில் வில்லன். ஹாலிவுட்டில் தொண்ணூறுகளில் சிறந்து விளங்கிய ஹீரோ. பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட டூம்ப்ஸ்டோன் படத்தைப் போன்றதுதான் ஜான் ருத் பாத்திரமும். அதேபோன்ற பெரிய மீசை. இந்தப் பாத்திரம் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாத பாத்திரம். அறுபதுகளின் வெஸ்டர்ன்களைப் பார்த்தவர்களுக்கு லீ வான் க்ளீஃப் (Lee van Cleef) நினைவிருக்கும். டாலர் ட்ரையாலஜிகளில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்கு சமமாக நடித்தவர். பல படங்களில் மறக்கமுடியாத பல பாத்திரங்களை வழங்கியிருக்கிறார். இவரது பாத்திரத்தை மனதில் வைத்துதான் ஜான் ருத்தை டாரண்டினோ எழுதியிருக்கிறார் என்பது என் கணிப்பு.

Lee van cleef

அடுத்ததாக மேஜர் மார்க்விஸ் வாரனாக ஸாமுவேல் ஜாக்ஸன். ஜான் ருத்தின் கூடவே வரும் பாத்திரம் இது. இவருக்கு அட்டகாசமான ஒரு கதை இந்தப் படத்தில் உண்டு. சில நகைச்சுவையான வசனங்களும் உண்டு.

ஜான் ருத்தின் கைதி டெய்ஸி டோமெர்கூவாக ஜெனிஃபர் ஜேஸன் லெய். இந்தப் பாத்திரத்தில் முதலில் உமா தர்மன் நடிப்பதாக இருந்தது என்பது செய்தி.

ரெட் ராக்கின் புதிய ஷெரீஃப் க்ரிஸ் மேன்னிக்ஸாக வால்டன் காக்கின்ஸ். ஜாங்கோ அன்செய்ண்ட் படத்தில் கேல்வின் கேண்டியின் பிரதான அடியாளாக வரும் நபர். இந்தக் கதாபாத்திரம் கிட்டத்தட்ட ஜாலியான ஒரு அதிரடி பாத்திரம்.

விடுதிக்குள் இருக்கும் பாத்திரங்களில் ஆஸ்வால்டோ மாப்ரேயாக டிம் ராத். பல்ப் ஃபிக் ஷனில் ரெஸ்டாரண்டைக் கொள்ளையடிக்கும் பம்ப்கின்னாக நடித்தவர். டாரண்டினோவுக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர். ரிஸர்வாயர் டாக்ஸில் மிஸ்டர் ஆரஞ்சாக, போலீஸ் வேடத்தில் நடித்தவர்.

விடுதியில் இருக்கும் இன்னொரு பாத்திரமான ஜோ கேஜ்ஜாக மைக்கேல் மேட்ஸன். ரிஸர்வாயர் டாக்ஸில் போலீஸின் காதை அறுக்கும் மிஸ்டர் ப்ளாண்ட் பாத்திரம். கில் பில்லில் பில்லின் தம்பி Budடாக வந்தவர்.

விடுதியில் இருக்கும் வயதான ஜெனரல் ஸான்ஃபோர்ட் ஸ்மிதர்ஸாக ப்ரூஸ் டெர்ன். பழம்பெரும் ஹாலிவுட் நடிகர். சென்ற வருடம் வந்த ‘நெப்ராஸ்கா’ படத்தில் சிறப்பாக நடித்தவர். பல வெஸ்டர்ன்களில் அறுபதுகளில் நடித்தவர்.

இவர்களைத் தவிர திரைக்கதையில் இன்னொரு பாத்திரம் உண்டு. அதில் நடிப்பவர் சான்னிங் டாடம் (21 & 22 jump street). இந்தப் பாத்திரத்தைப் பற்றி நான் சொல்லவில்லை. படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்தப் படத்திலும் டாரண்டினோவின் முந்தைய படங்களை நினைவுபடுத்தும் வசனங்கள் உண்டு. ஒரு காட்சியில் சிகரெட்களைப் பற்றிச் சொல்லும்போது அவரது எல்லாப் படங்களிலும் வரும் Red Apple சிகரெட்களைத்தான் இதிலும் டாரண்டினோ உபயோகித்திருக்கிறார். இதில் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் அக்காலத்தில் எப்படி பௌண்ட்டி ஹண்டர்களாக ஆகலாம் என்று ஒரு பாத்திரம் கேட்கும். அப்போது இன்னொரு பாத்திரம், ‘அமெரிக்காவில் மிகச்சில கறுப்பின பௌண்ட்டி ஹண்டர்களே உண்டு. மேஜர் மார்க்விஸ் வாரன் ஒருவர். இவரைப் போன்ற இன்னும் மிகச்சில அதிரடி ஆட்களும் உண்டு (ஜாங்கோ)’ என்று சொல்வதாக வசனம் வரும். போலவே A basterd’s work is never done என்ற வசனமும் இதில் மறுபடி வருகிறது.

ஜாங்கோ அன்செய்ண்ட் படத்தில் பிக் டாடியின் பண்ணையில் குதிரையில் வேகமாகச் செல்லும் ஒருவனை கிங் ஷூல்ட்ஸ் ரைஃபிளால் குறிபார்ப்பார். அப்போது இப்படி ஒரு வசனம் வரும்.

Dr. King Schultz: You sure that’s him?
Django: Yeah
Dr. King Schultz: Positive?
Django: I don’t know
Dr. King Schultz: You don’t know if your’re positive?
Django: I don’t know what positive mean
Dr. King Schultz: It means you’re sure
Django: Yes
Dr. King Schultz: Yes what?
Django: Yes, I’m sure that’s Ellis Brittle

கிட்டத்தட்ட இதே போன்ற ஜாலியான வசனங்கள் ஒன்றிரண்டு இப்படத்திலும் உண்டு.

ஹேட்புல் எய்ட்டின் விசேட அம்சம் இது எதுவும் இல்லை. ஐம்பதுகளின் சூப்பர் ஹிட்டாந ‘ரியோ ப்ராவோ’ படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் கிட்டத்தட்ட பெரும்பாலான படம், ஒரு மதுபான விடுதிக்குள்தான் நடக்கும். அதேபோல் இந்தப் படமும் முழுக்க முழுக்கவே இதில் வரும் விடுதிக்குள்தான் நடக்கிறது. படம் முழுக்கவும் இரண்டே லொகேஷன்கள்தான். ஒன்று – கோச்சு வண்டி. இரண்டாவது – மதுபான விடுதி. இது டாரண்டினோவுக்குப் புதிது. இதுதான் படத்தின் சிறப்பம்சம். இதைப்பற்றி, ‘ஜாங்கோ எடுக்கையில் எனக்கு ஒரு வெஸ்டர்னை எப்படி எடுப்பது என்று தெரியாது. அப்படத்தின் மூலம்தான் நிறையக் கற்றுக்கொண்டேன். எனவே, இப்போது ஒரு வெஸ்டர்னை எப்படி எடுக்கமுடியும் என்று நன்றாகத் தெரிந்ததால் ஹேட்ஃபுல் எய்ட்டை அப்படி எடுத்திருக்கிறேன்’ என்று டாரண்டினோ சொல்லியிருக்கிறார்.

படத்தின் இன்னொரு சிறப்பம்சம் – கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கழித்து ஒரு பிரம்மாண்டமான 70MM படமாக இது வர இருப்பதே. இதற்கென்றே நாற்பது வருடங்கள் பழைய லென்ஸ்களை உபயோகித்து எடுக்கிறார் டாரண்டினோ. டிஜிட்டலில் படம் எடுக்க மாட்டேன் என்பது இவரது கொள்கை. ஃபில்மில்தான் எடுக்கிறார். இதைப்பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்.

“Digital presentation is just television in public, we’re all just getting together and watching TV without pointing the remote control at the screen. I have worked 20 years, too long to accept the diminishing results of having it come into theaters with the quality of a f*cking DVD, shot with the same shit they shoot soap operas with. It’s just not good enough for me. I thought, ‘How can I make them show [the beauty of] film?’ Well, I can shoot in 70 mm and leave them asking, ‘What’s the point of showing it any other way?’ I had a plan and asked the Weinsteins to tell me how it could be realized. Now that film has become endangered, and the theatrical experience is become more and more a throwaway, what we could do was go back to the ’60s style, when there were big roadshow productions of big films like The Sand Pebbles, Mutiny On The Bounty, Battle Of The Bulge, or It’s A Mad Mad Mad Mad World. There would be an exclusive engagement in 70 mm in a big theater or opera house that would play for a month. It felt like a night at the theater or the symphony. Then they would cut it down and it would show up at the theaters and the drive-ins, near you.”

“We’re doing this 70 mm, and we are trying to create an event. I need to know from all of you if this can last a month in your territory in that format, or two weeks. Then we roll it out in 35 and eventually digital. We’re not doing the usual 70 mm, where you shoot 35 mm and blow it up. We’re shooting 65 mm which, when you turn it into a print, is 70 mm. Panavision is not only behind this movie, they look at it as a legacy. They are inventing a lot of the stuff we need, and this is being supervised by my three-time Oscar-winning cinematographer Bob Richardson, who’s back with me after Kill Bill, Inglourious Basterds and Django Unchained. I couldn’t do this if he wasn’t in my corner. He went to Panavision to check out lenses for this big Sherman Tank of a camera he’ll use. He goes into the warehouse room and sees all these big crazy lenses. He asks, ‘What are those?’ It was the ultra-Panavision lenses that haven’t been used since How The West Was Won, Mutiny On The Bounty, Battle Of The Bulge and It’s A Mad Mad Mad Mad World, which were all bigger than the normal 70 mm. If the normal scope is 235, this is 278, the widest frame possible on film. The projectors need a decoder, an adapter, to blow it out that way. That’s why Mad Mad World, Battle Of The Bulge and Ice Station Zebra look the way they do. The last movie to use these lenses was Khartoum with Charlton Heston and Laurence Olivier. We’re using those lenses for this movie. We’ve been testing them the last month and everything is A-OK. They look amazing. We are literally coming out with the biggest widescreen movie shot in the last 40 years.”

இனி, ஹேட்புல் எய்ட்டின் டீஸர். படம் இந்த ஆண்டு டிஸம்பரில் வருகிறது. இந்த டீஸர் தியேட்டர்களில் மட்டுமே வெளியிடப்பட்டது. இன்னும் இணையத்தில் வரவில்லை. அடுத்த சில மாதங்களில் இப்படத்தைப் பற்றிய இன்னும் பல தகவல்களை இன்னொரு கட்டுரையில் எழுதுகிறேன்.


க்வெண்டின் டாரண்டினோவைப் பற்றிய விரிவான இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே படிக்கலாம்.

Quentin Tarantino – AN  Analysis


 

Poster taken from http://www.hdwallpapersos.com/wp-content/uploads/2014/10/quentin_tarantino_wallpaper_8-normal.jpg

  Comments

5 Comments

  1. Croc

    டீசரே பட்டைய கெளப்புதே… முக்கியமாக பின்னணி இசை…
    சமீபகாலமாக உங்களுடைய ப்ளாக்கை சரிவர பின்ந்தொடர இயலவில்லை… பல சமயங்களில் முடங்கிக்கிடக்கிறது…

    Reply
  2. Balaji R

    Excellent Article Brother, can’t wait for the movie…sounds like another mouth watering prospect!!

    Reply
  3. Stephen raj

    Dear Rajesh,
    Thanks for this article.
    You are very truthful for your cinema observations……. like Mr. jeyamohan.
    But I love your all p.o.v.

    Reply
  4. Ramkumar

    நீங்கள் inglorious Bastards படத்திற்கு Review எழுதி உள்ளீர்களா. தேடினேன் கிடைக்கவில்லை. அதை பதிவிடவும். மிகவும் ஆவ்லாக உள்ளேன்.

    Reply
    • Rajesh Da Scorp

      No Boss. yet to. will write soon

      Reply

Join the conversation