
Hazaron khwahishen Aisi (2005) – English & Hindi
இது, மற்றொரு மீள்பதிவு. என்றோ ஒரு காலத்தில் நான் எழுதிய இந்த விமர்சனத்தைப் பற்றி, இப்படத்தை சமீபத்தில் பார்த்த நண்பர் கீதப்ரியன் நினைவுபடுத்த, அதன் விளைவே இந்த மீள்பதிவு. இதில், நிறைய புதிய விஷயங்களையும் சேர்த்திருக்கிறேன்.
எமர்ஜென்ஸி. பல இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றியமைத்த ஒரு நிகழ்வு. இந்தச் சமயத்தில், சில இளைஞர்களின் வாழ்வைப் பற்றிய ஒரு நெஞ்சைத்தொடும் படம் தான் இந்த ‘Hazaron khwahishen Aisi’ என்ற ஹிந்திப்படம். இந்த இளைஞர்களின் கூடவே பயணிக்கும் இப்படம், அவர்களது வாழ்வை நம் கண்முன்னே நிறுத்துகிறது. இயக்குநர் சுதீர் மிஷ்ராவினால் எடுக்கப்பட்ட இந்தப்படம், பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டப்பட்டுள்ளது. ஆனால் (வழக்கம் போல) இந்தியாவில் படம் படு ஃப்ளாப். அவரது ஆகச்சிறந்த படம் என்று இன்றும் இப்படம் கருதப்படுகிறது.
நமது திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவரான கே கே மேனன் மற்றும் ஷைனி அஹூஜா, சித்ராங்தா சிங் ஆகியவர்கள் நடித்து, 2005ல் வெளிவந்த இப்படத்தைப் பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம்.
Hazaron khwahishen Aisi – இதன் பொருள், ஆயிரம் கனவுகள் இப்படியாக . . . உர்தூக் கவிஞர் மிர்ஸா காலிப்பின் ஒரு கவிதையில் வரும் வரி இது. சித்தார்த், விக்ரம் மல்ஹோத்ரா மற்றும் கீதா ஆகிய மூவரும், டெல்லிப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கின்றனர். ஆண்டு, எழுபதுகளின் முற்பகுதி. சித்தார்த் (கே கே மேனன்), புரட்சியில் மிகுந்த நம்பிக்கையுடையவன். தனது மாநிலமான பீஹாரில் புரட்சியின் மூலமாக சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, ஒரு சமத்துவ அரசை நிறுவ வேண்டும் என்றதீராத தாகமுடையவன். கீதா (சித்ராங்தா சிங்), லண்டனிலிருந்து வந்து, இங்கு படித்துக்கொண்டிருப்பவள். சித்தார்த்தைக் காதலித்துக்கொண்டிருக்கிறாள். விக்ரம் (ஷைனி அஹூஜா), ஒரு மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். இந்தப் புரட்சி, கிரட்சியிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவன். வாழ்க்கையில் உயர வேண்டும் என்பதே அவனது லட்சியம். விக்ரம், கீதாவை விரும்புகிறான். அவளுக்கும் இது தெரிகிறது.
கல்லூரியிலேயே விக்ரம் கீதாவிடம் அவன் அவளை விரும்புவதாகச் சொல்ல, அவள் அதை இயல்பாக மறுத்து விடுகிறாள். ஆனால், அவள் காதலித்துக் கொண்டிருக்கும் சித்தார்த்திடம் பேசும்போதெல்லாம், காதலைவிடப் புரட்சியையே அவன் தேர்ந்தெடுக்க விரும்புவதாகச் சொல்வது, அவளை வருத்தமுற வைக்கிறது. கல்லூரி முடியும் காலத்தில், சித்தார்த்தும் கீதாவும் ஒரு பலவீனமான கணத்தில் உறவு கொள்வதை, விக்ரம் பார்த்து விடுகிறான். மனமுடைந்து போகிறான். அத்துடன் கல்லூரி வாழ்க்கை மூவருக்கும் முடிகிறது.
சில வருடங்கள் கழித்து, மூவரையும் நாம் பார்க்கிறோம். சித்தார்த், பீஹாரின் காடுகளில், புரட்சியாளனாக, ஒரு படையை வைத்திருக்கிறான். விக்ரம், டெல்லி அரசிடம் காரியம் சாதித்துக்கொடுக்கும் ஒரு தரகனாக இருக்கிறான். கீதா, ஒரு ஐ ஏ எஸ் ஆஃபீஸரை மணந்து கொண்டிருக்கிறாள். ஒரு விருந்தில் கீதாவும் விக்ரமும் சந்தித்துக்கொள்கிறார்கள். கீதா, இந்த ஆஃபீஸரை மணந்துகொண்டிருக்கும் காரணம், அவனிடத்தில் ‘எல்லாமே’ உள்ளது’ என்பதுதான் என்று விக்ரமுக்கு உணர்த்துகிறாள். ஆனால், சில நாட்களிலேயே, சித்தார்த்தை ரகசியமாக சந்திக்கிறாள். அவளுக்கு, ஆஃபீஸருடன் வாழ்வதில் விருப்பம் இல்லை. ஆனால், அவனிடம் பணமும் அதிகாரமும் இருப்பதால், வேறு வழியின்றி அவனோடு இருக்கிறாள்.
சித்தார்த் அவளை அவனுடனே வரச்சொல்கிறான். எனவே, கீதா, அவள் கணவனை விவாகரத்து செய்துவிடுகிறாள். அந்தச் சமயங்களில் அவளை விக்ரம் பார்த்துக்கொள்கிறான். என்னதான் அன்பாக அவள் பழகினாலும், அவளது மனம் சித்தார்த்தின் மேல் தான் இருக்கிறது என்று விக்ரம் புரிந்து கொள்கிறான். சித்தார்த்தை ரகசியமாக கீதா சென்று சந்தித்துக்கொண்டிருப்பதைப் புரிந்து கொள்கிறான். சித்தார்த்தையும் கீதாவையும் காட்டுக்குள் சென்று ஒரு நாள் சந்திக்கிறான்.
கீதா, சித்தார்த்துடனேயே சென்றுவிடுகிறாள். சித்தார்த் ஒளிந்துள்ள கிராமத்தில் , ஒரு ஆசிரியையாகச் சேர்கிறாள். சித்தார்த் ஒரு நக்ஸலைட் என்பதால், போலீஸ் அவனைத் தீவிரமாகத் தேடி வருகிறது. இந்த நிலையில், கீதாவுக்குக் குழந்தை ஒன்று பிறக்கிறது. அதனை அவள் தனது பெற்றோர்கள் இருக்கும் லண்டனுக்கு, பாதுகாப்பு கருதி அனுப்பி விடுகிறாள்.
ஒருநாள், போலீஸ் சித்தார்த்தையும் கீதாவையும் அவனது சில ஆட்களையும் வளைத்துப்பிடித்து விடுகிறது. இருவரையும் ஜெயிலில் அடைத்து, கடுமையாக அடித்து விடுகிறது. சித்தார்த் தப்பி விடுகிறான். கீதாவை அவளது முன்னாள் கணவன் பெயிலில் எடுக்கிறான். தப்பிக்கும் சித்தார்த், குண்டடி வாங்கி, மருத்துவமனையில் சிறைவைக்கப்படுகிறான்.
இந்த நிலையில், நகரத்திற்கு வந்துவிடும் கீதா, சித்தார்த் இறந்துவிட்டதாக நினைத்து, வருத்தம் அடைகிறாள். அவளை விக்ரம் அடிக்கடி சென்று பார்க்கிறான். அப்போது, சித்தார்த் உயிரோடு இருப்பதை அவன் அறிந்து கொள்கிறான். அவனைச் சந்தித்து, போலீஸின் பிடியிலிருந்து, தனக்குத் தெரிந்த அரசியல் பிரமுகர்கள் மூலம் அவனை விடுவித்துவிடலாம் என்றுஎண்ணி, அவன் இருக்கும் இடத்துக்குச் செல்கிறான். செல்லும் வழியில், அவனது கார் விபத்துக்குள்ளாகி, சந்தர்ப்பவசமாக, சித்தார்த் உள்ள அதே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான்.
அங்கு வரும் சித்தார்த்தின் தோழர்கள் சித்தார்த்தை மட்டும் அங்கிருந்து கொண்டுசென்றுவிடுகின்றனர். மறுநாள் அங்கு வரும் போலீஸ், சித்தார்த்தைத் தப்புவிக்க விக்ரம் தான் சதி செய்தான் என்று எண்ணிக்கொண்டு, அவனைக் கொன்றுவிடலாம் என்று முடிவெடுக்கின்றனர். இது தெரிந்த விக்ரம், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பிக்க முயல்கிறான். அப்போது அவனைப் பிடித்துவிடும் போலீஸ் கான்ஸ்டபிள் (ஷௌரப் ஷுக்லா – ஹே ராம் மற்றும் ஸ்லம்டாக் – ஸ்லம்டாகிலும் போலீஸ் கான்ஸ்டபிள் தான்), விக்ரமை அடி வெளுத்து விடுகிறார். அவனது தலையிலேயே மாறி மாறி அடிக்கிறார்.
சிறிது நேரத்திலேயே அங்கு வரும் விக்ரமின் நண்பரான ஒரு போலீஸ் அதிகாரி, கான்ஸ்டபிளிடமிருந்து விக்ரமை விடுவிக்கிறார். தலையில் கடுமையாக அடிபட்ட விக்ரம், மனநிலை பாதிக்கப்பட்டு விடுகிறான்.
தப்பித்துச் சென்ற சித்தார்த், அவனது முயற்சிகளுக்கு மக்களது ஆதரவு இல்லாததைக் கண்டு, தடாலென்று மனம் மாறி, லண்டனுக்கு மருத்துவம் படிக்கச் செல்வதாக முடிவெடுக்கிறான். அவனது அப்பட்டமான இந்த பச்சோந்தித்தனமான முடிவு, கீதாவைப் பாதிப்பதில்லை. கீதாவுக்குக் கடிதம் எழுதிவிட்டு, சித்தார்த் லண்டன் சென்றுவிடுகிறான்.
கீதா, மறுபடி அந்த கிராமத்தில் ஆசிரியை வேலையைத் தொடர்கிறாள். ஓர்நாள் அவள், யாரையோ தேடிக்கொண்டே, ஆற்றங்கரைக்கு வருகிறாள். அங்கு, விக்ரம், ஒரு பாறையில் சாய்ந்து கொண்டு, நிலைகுத்திய விழிகளோடு அமர்ந்துகொண்டிருக்கிறான். இவளைப் பார்த்தவுடன், புன்னகைக்கிறான். ஆனால்,அப்புன்னகையில் உயிரில்லை. அவனது அருகில் அமர்ந்துகொண்டு ஆதுரத்துடன் அவனைப் பார்க்கிறாள் கீதா. விக்ரம், மண்தரையையே பார்த்துக்கொண்டிருக்கிறான். தானும் அவ்விடத்தை நோக்கும் கீதாவுக்கு, மண்ணில் அவன் எழுதிய வரிகள் தென்படுகின்றன.
“நான் உன்னைக் காதலிக்கிறேன் கீதா . . . . “
இந்த வரிகளைப் பார்த்துக் கண்கலங்கும் கீதாவை நோக்கி விக்ரம் மெலிதாகப் புன்னகைக்க முயல்கிறான். அஸ்தமன சூரியனைக் காட்டும் ஒரு அற்புதமான காட்சியுடன், மிகவும் இனிமையான “பாவ்ரா மன் ( வசியப்படும் மனது)” என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, படம் முடிகிறது.
இந்த பாவ்ரா மன் பாடலை எழுதியவர் ஸ்வானந்த் கிர்கிரே. பா படத்தின் பாடல்கள் இவரது கைவண்ணம் தான். ஒரு நல்ல கவிஞர். மிகவும் அழகான இந்தப் பாடலை நீங்கள் மேலே கொடுத்துள்ள சுட்டியில் கேட்கலாம். படத்தைப் பார்க்கும் நண்பர்கள், கடைசியில் வரும் இப்பாடலை முடியும் வரைகேட்டுப்பாருங்கள்.
இப்படம் வெளிவந்த ஆண்டு 2005. பல திரைப்பட விழாக்களுக்கு (வெளிநாடுகளுக்கு) இப்படம் அனுப்பப்பட்டது. பல திரைப்பட விமரிசகர்களால் சிலாகிக்கப்பட்டது. இப்படம் எடுக்கப்பட்ட விதம் அப்படி.. நான் இப்படத்தின் கதையைத் தான் இங்கு சொல்லியிருக்கிறேனேயன்றி , இதில் வரும் ரத்தமும் சதையுமான உண்மைக் கதாபாத்திரங்கள் பற்றிச்சொல்லவில்லை. அவற்றை நீங்களே பார்த்தால் தான் நன்றாக இருக்கும். ஒரே ஒரு உதாரணத்துக்கு: சஞ்சய் காந்தி. எமர்ஜென்ஸியின் காலத்தில், அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்ட சஞ்சய் காந்தி செய்த அக்கிரமங்களைப் பற்றி இன்றைய மீடியா மூடி மறைத்துவிட்டது என்பதே உண்மை. ஆனால், அந்தக் காலகட்டத்தில், அவர் செய்த கொடுமைகள் எக்கச்சக்கம். குஷ்வந்த் சிங் எழுதிய சில கட்டுரைகளில் சஞ்சய் காந்தியைப் பற்றிய வெளிப்படையான கருத்துக்கள் உள்ளன. ஒரு முஸ்லிம் குடியிருப்பைய மொத்தமாகக் காலி செய்ய உத்தரவிட்டதில், பல பேர் இறந்த சமயத்தில் தான் இவரது நிஜ ரூபம் வெளிவந்தது.
இந்தப் படத்தின் பல கதாபாத்திரங்களின் வாயிலாக, எமர்ஜென்ஸியின் போது மக்கள் அரசியல் தலைவர்களைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. சஞ்சய் காந்தி, அக்காலத்தில் சகலருக்கும் குழந்தைக் கட்டுப்பாடு செய்ததையும் காட்டமாக விமரிசிக்கும் கதாபாத்திரங்கள் இப்படத்தில் உண்டு.
நமது உள்ளத்தைத் திருகும் விஷயம் இப்படத்தில் என்னவென்றால், சித்தார்த்தை மலை போல் நம்பும் கீதா, அவன் எப்படியும் தன்னுடைய வாழ்வை ஒளிமயமாக்குவான் என்று எண்ணி, அவன் போகுமிடத்துக்கெல்லாம் தானும் போவதே. அவளுடனேயே இருக்கும் விக்ரம், அவளை உருகி உருகிக் காதலித்தும், அக்காதலை உதாசீனம் செய்து சித்தார்த்தின் பின்னே ஓடுகிறாள் கீதா. ஆனால், சித்தார்த், அவளை விட்டுவிட்டு, தனது லட்சியங்களையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு, ஏதும் அறியாதவன் போல மருத்துவம் படிக்கச் செல்கிறான். அப்பொழுதுதான் விக்ரமின் காதலைப் பற்றி கீதா நினைத்துப் பார்க்கிறாள்.
இப்படத்தில் பல வெளிநாட்டு டெக்னீஷியன்கள் பணியாற்றியுள்ளனர். மிக நேர்த்தியாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் தொய்வில்லாமல், நம்மை எமர்ஜென்ஸியின் காலகட்டத்துக்கே இட்டுச் செல்கிறது.
கொசுறு:- இப்படத்தை ஐ எம் டி பியில் நோண்டினீர்கள் என்றால், என்றோ ஒரு காலத்தில் (நான்கு வருடங்கள் முன்பு), இப்படம் பார்த்த புதிதில் நான் எனது இயற்பெயரில் எழுதிய விமரிசனத்தைக் காணலாம் ? .
இப்படத்தில் பிஹாரைப் பற்றியும், அதன் காடுகளில் ஒளிந்து வாழும் நக்ஸலைட்டுகளைப் பற்றியும் தெளிவான பார்வை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதே சமயத்தில், நமது ஊரிலும், படம் எடுக்கிறேன் பேர்வழி என்று கண்டபடி உளறி வைக்கும் சில ‘உலக’ இயக்குநர்களின் முட்டாள்தனத்தைப் பற்றியும் எழுதாமல் இருக்க இயலவில்லை. இந்த அடிப்படை வசதி கூட இல்லாத மக்கள், இவர்களின் பார்வையில் ‘தீவிரவாதிகளாம்’. இதில், இவர்களின் ’புத்திசாலி’ மனைவிகள் வேறு , ஜால்ராவைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். அப்படிப்பட்ட மெத்தப் படித்த பெண்ணிய திரைமேதை ஒருவர், ஒரு சேனலில் வழங்கிவரும் திரை விமரிசன நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறீர்களா? கொடுமை என்பதன் மொத்த வடிவம் அது. கடவுளே !
Hazaron khwahishen Aisi – படத்தின் டிரைலர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே, இப்படத்தின் ஒரு முக்கியக் காட்சியை இங்கே காணலாம்..
நண்பா
வெல்டன்,ஹாட்ஸ் ஆஃப்
மீளி பதிவுகள்,புதியவர்கள் பதிவுகளை படிக்க சிறந்த வழி.இனி அடிக்கடி இப்படி பொக்கிஷங்களை பதிவிடுங்கள்.இந்த் படம் நல்ல அப்பீலிங்கான போஸ்டர்,மற்றும் பெயர் இருந்திருந்தால் எப்படி பேசப்பட்டிருக்கும் தெரியுமா?
என்ன படம்?அடடா,ராவணன் என்னும் உலக மகா குப்பையில் இந்த ஐயாயிரம் வருடம் பிந்தங்கியுள்ள கிராம மக்களை தீவிரவாதியாக சித்தரித்திருப்பார்கள்,அதை பார்த்தவர்கள் பிராயசித்தமாக இதை பார்க்கவேண்டும்,அது லிஸ்டரின் போல ராவணன் என்னும் கெட்டவாடையை போக்கும்.சாரி நான் செம கடுப்புல இருக்கேன்.நல்லது விளை போக மாட்டேங்கிதே என்னும் கடுப்பு தான் அது.மார்கேட்டிங் இல்லாதது செம பின்னடைவ்,தவிர இவ்வளவு சென்சிடிவான விஷயத்தை தைரியமாய் எடுக்கும் மாஞ்சா எவன் கிட்டயும் இல்லை,
ஷைனி அகுஜா என்ன ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட்,நாயகி சிங்,அந்த மேனன் மூவர் செம கலக்கல்,ரங் தே பசந்திக்கு இதுவே மாபெரும் தாக்கமாய் இருந்திருக்க வேண்டும்,கஜல்களை பயன்படுத்திய்விதம் அருமை,காமிரா ஒரு கவிதை,ஷைனிஅகுஜாவின் வளர்ச்சியை அவரின் ஜிப்,மெர்க்,செவ்வி,டாட்ஜ் கார்கள் வழியே காட்டியது புது முயற்சி,கணவன் கண் முன்பே போலீசார் வன்புணர்வது கொடுமை,இது போல எத்தனை சமூக சேவகிகள் நொறுக்கப்பட்டிருப்பார்கள்?அந்த காட்சி மனதை பிழியும்.
===
தவிர கிடைக்கிறது கிடைக்காம போகாது,கிடைககாம போறது கிடைக்காதுன்னு ஒரு நல்ல வசனம் ரஜினி சொல்வார். அது நினைவுக்கு வந்தது,ஒவ்வொருவருக்குமே இருப்பதை விட்டுவிட்டு பறப்பதன் மேல் தான் ஆவல் அதிகமிருக்கு..
===
நண்பா,
காப்பாற்ற வந்து மாட்டிக்கொள்ளுதல் செம கொடுமை.
கிட்டத்தட்ட 50000இன்னுயிர்கள் எமர்ஜென்சியில் பலியாயினவாம்,அதில் 10000 லாகப் டெத்தாம்.அடடா,எமர்ஜென்சின்னு சொன்னாலே கிலிதான்,பெரிசுகள் இதுபற்றி எழுதினால் அருமையாக இருக்கு,எமர்ஜென்சி நினைத்தாலே கசக்கும் அவர்களுக்கு.சஞ்சய் காந்தி இந்தியாவின் இடி அமின்,ராஜிவ் இறந்த போது மொட்டைஅடித்துக்கொண்ட நிறைய குடும்பங்கள்,சஞ்சய் காந்தி செத்தபோது கொண்டாடியிருப்பார்கள்,என்பது உண்மை.
This comment has been removed by the author.
நல்லா செய்ராங்கய்யா வொர்க் பரம் (from) ஹோம்மு 😀
ரொம்ப நல்ல சினிமா.. அதற்கேற்ற விமர்சனம் …
கீப் ‘எம் கம்மிங்…
நண்பா இது என்ன கலாட்டா?
வீட்லயே ஆஃபிசரா?
அந்த லால்வானி போலீஸ் கான்ஸ்டபிள்,செம கொடூரம் நண்பா.
துப்பாக்கி ரவையில்லை,என்கவுண்டர் செய்யாவிட்டால் வேலை போய்விடும்.இல்லை உயிரே கூட போகும்,முகத்தை கடப்பாரையால் அடித்து செத்தவன் நக்ஸலைட் என நம்ப வைக்க முகம் சிதைக்க ஆசிட் ஊற்ற வருவது அடடா,உச்சம்.
மிக நல்ல படத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். பார்க்க முயற்சிக்கிறேன்
இந்தப் படத்தை பத்தி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் இன்னும் பார்க்கல..
இது வெளிவந்தது 2003? 2005?
தல…IMDBல உங்க அனைத்து படங்களின் விமர்சனம்
http://www.imdb.com/user/ur10900533/comments
அதுல மணிரத்னம்-Guru படத்த புகழ்ந்து தள்ளியிருக்கீங்க…இங்க //சில ‘உலக’ இயக்குநர்களின் முட்டாள்தனத்தைப் பற்றியும் எழுதாமல் இருக்க இயலவில்லை//
ஏன் இந்த மனமாற்றம்ன்னு தெரிஞ்சுக்கலாமா….(சீரியஸ்ஸா தெரிஞ்சுக்கவே கேக்கிறேன்.எனக்கு மணிரத்னம் பிடிக்காது.ஆனா ஒரே படத்திலேயே உங்களை இந்த அளவு வெறுப்படைய வெச்ச விஷயம் என்ன…)
ணா..குல்தீப் நய்யாரின் ஸ்கூப் புத்தகம் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்…படிச்சிருந்தா அதைப் பத்தி எழுதுனா நல்லாயிருக்கும்..
படிக்கலைன்னா..செமை சுவாரசியமா இருந்தது. காங்கிரஸ்-நேரு-இந்திரா-சஞ்சய் காந்தி பத்தி பல அதிரடியான விஷயங்கள் உண்டு.உங்களுக்கு அரசியல்ல ஆர்வமுண்டோ???
எமர்ஜென்ஸி சமயத்தில உங்களால ஒழுங்கா பள்ளிக்கூடத்திற்கு போக முடிஞ்சதா…அண்ணன் கீதப்ப்ரியன் ரொம்ப சிரமப்பட்டிருப்பார்னு அவர் கமெண்ட் பார்க்கும் போதே தெரியுது..
(…….உங்கள கலாய்ச்சுட்டராமா…….)
சூப்பர் விமர்சனம்..
அப்படியே நீங்க imdbயில் எழுதி 10/10 மார்க்ஸ் போட்ட raincoat பத்தியும் ஒரு மீள் பதிவ போட முடியுமா?? தமிழில் வாசிக்க ஆவலாய் உள்ளேன்..
நண்பரே,
நல்லதொரு மீள்பதிவு :))
மீள்பதிவு என்ற வார்த்தையை மிகவும் ரசித்தேன். பதிவும் அதுபோலவே நன்றாக இருந்தது.
ஐரோப்பாவுக்கு உலகப்போர்போல இந்தியாவுக்கு எமர்ஜென்சி என்று சொல்லலாமா? ஆனால் உலகப்போர் குறித்துத் தெரிந்த அளவுகூட நமக்கு உள்நாட்டு விஷயங்கள் தெரியாதது வருத்தமளிக்கிறது. சீக்கிரமே பார்த்துவிடுகிறேன்
@சு.மோகன்
நண்பரே,உலகப்போர் ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல,அமெரிக்கா,கனடா,சீனா,கிழக்காசிய நாடுகள்,அத்தனைக்கும் பொது,உயிர்ச்சேதம் எல்லா கண்டங்களிலும் சமம்
உலகப்போரில் இந்தியாவும் நிறைய இன்னல்கள் அனுபவித்துள்ளது,அப்போதைய ப்ரிடிஷ் படையினரின் கீழே நிறைய இந்தியர்கள் ஜெர்மனியை எதிர்த்து போரித்து மடிந்தனர்.
இந்தப் படத்தை பத்தி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் இன்னும் பார்க்கல..
இது வெளிவந்தது 2003? 2005?
தல…IMDBல உங்க அனைத்து படங்களின் விமர்சனம்
http://www.imdb.com/user/ur10900533/comments
அதுல மணிரத்னம்-Guru படத்த புகழ்ந்து தள்ளியிருக்கீங்க…இங்க //சில ‘உலக’ இயக்குநர்களின் முட்டாள்தனத்தைப் பற்றியும் எழுதாமல் இருக்க இயலவில்லை//
ஏன் இந்த மனமாற்றம்ன்னு தெரிஞ்சுக்கலாமா….(சீரியஸ்ஸா தெரிஞ்சுக்கவே கேக்கிறேன்.எனக்கு மணிரத்னம் பிடிக்காது.ஆனா ஒரே படத்திலேயே உங்களை இந்த அளவு வெறுப்படைய வெச்ச விஷயம் என்ன…)
@கொழந்த
உங்களுக்கு எலின்னு பேர் இருந்தா சரியா இருக்கும்,இப்படி கிளறிபோடுறீங்களே!!!;))
தவிர நான் மணிபடத்தை பார்ப்பேன்,ஆனால் ஃபேன்பாய்ஸ் ரேஞ்சுக்கெல்லாம் இல்லை,அவரின் வசனங்களை வைத்தே என் பள்ளியில் நிறைய மேசை நாடகம் போடுவோம்,
எப்புடியா?
ஏய்
ம்
அவு
மாட்டேன்
இந்த ரேஞ்சுக்கு,ஹஹ்ஹாஹா.
:))))
இது கருந்தேள் சொல்லவேண்டிய பதில்
மணியை கன்னாபின்னாவென சிலாகித்த கருந்தேள் எப்போது உலகசினிமாக்களை,மூலத்தை,ஒரிஜினலை பார்க்க ஆரம்பித்தாரோ அப்போதே இவரின் ஒட்டுவேலைகளை வெறுத்திருக்கவேண்டும்,கடைசியாக அவர் பார்த்து தலைமுழுகிய படம் கோவனா சாரி ராவணா.
நண்பா கருந்தேள் சரியா?
இந்தப் படத்தை பத்தி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் இன்னும் பார்க்கல..
இது வெளிவந்தது 2003? 2005?
தல…IMDBல உங்க அனைத்து படங்களின் விமர்சனம்
http://www.imdb.com/user/ur10900533/comments
அதுல மணிரத்னம்-Guru படத்த புகழ்ந்து தள்ளியிருக்கீங்க…இங்க //சில ‘உலக’ இயக்குநர்களின் முட்டாள்தனத்தைப் பற்றியும் எழுதாமல் இருக்க இயலவில்லை//
ஏன் இந்த மனமாற்றம்ன்னு தெரிஞ்சுக்கலாமா….(சீரியஸ்ஸா தெரிஞ்சுக்கவே கேக்கிறேன்.எனக்கு மணிரத்னம் பிடிக்காது.ஆனா ஒரே படத்திலேயே உங்களை இந்த அளவு வெறுப்படைய வெச்ச விஷயம் என்ன…)
@கொழந்த
உங்களுக்கு எலின்னு பேர் இருந்தா சரியா இருக்கும்,இப்படி கிளறிபோடுறீங்களே!!!;))
தவிர நான் மணிபடத்தை பார்ப்பேன்,ஆனால் ஃபேன்பாய்ஸ் ரேஞ்சுக்கெல்லாம் இல்லை,அவரின் வசனங்களை வைத்தே என் பள்ளியில் நிறைய மேசை நாடகம் போடுவோம்,
எப்புடியா?
ஏய்
ம்
அவு
மாட்டேன்
இந்த ரேஞ்சுக்கு,ஹஹ்ஹாஹா.
:))))
இது கருந்தேள் சொல்லவேண்டிய பதில்
மணியை கன்னாபின்னாவென சிலாகித்த கருந்தேள் எப்போது உலகசினிமாக்களை,மூலத்தை,ஒரிஜினலை பார்க்க ஆரம்பித்தாரோ அப்போதே இவரின் ஒட்டுவேலைகளை வெறுத்திருக்கவேண்டும்,கடைசியாக அவர் பார்த்து தலைமுழுகிய படம் கோவனா சாரி ராவணா.
நண்பா கருந்தேள் சரியா?
நண்பா…இந்தப்பட சில வருசம் முன்னாடி கேள்விப்பட்டஞாபகம் இருக்கு. ஆனா பார்க்கலை. கேகே மேனன் ஒரு அற்புதமான நடிகர். டிவிடிக்கு முயற்சிக்கிறேன் தல… பகிர்வுக்கு நன்றி
உங்க விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது 🙂
@ கீதப்ரியன் – நண்பா.. நீங்களும் பழைய பதிவுகளை மீள்பதிவிடக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு காலத்தில் நீங்கள் அடித்துக் கிளப்பிய பல 18+ படங்கள் உங்கள் ஆர்க்கைவ்களில் இருக்கின்றன. எடுங்கள் அவற்றை வெளியே !! ராவணன்
பற்றியும், நல்ல படங்கள் மார்க்கெட்டிங் பற்றியும் உங்கள் கருத்தை அப்படியே ஒப்புக்கொள்கிறேன். அதேபோல், கேகே மேனன், இக்காலத்தின் நல்ல நடிகர்களில் ஒருவர். குலாலில் இன்னமும் நன்றாகச் செய்திருப்பார்..
@ shree – ஆஹா.. ஆரம்பிச்சிட்டீங்களா ?? 🙂 நோ பேட் வேர்ட்ஸ்.. மம்மி பாவம் 😉
@ எஸ்.கே – பார்க்கவும். நன்றி..
@ கொழந்த – //அதுல மணிரத்னம்-Guru படத்த புகழ்ந்து தள்ளியிருக்கீங்க…இங்க //சில ‘உலக’ இயக்குநர்களின் முட்டாள்தனத்தைப் பற்றியும் எழுதாமல் இருக்க இயலவில்லை//
ஏன் இந்த மனமாற்றம்ன்னு தெரிஞ்சுக்கலாமா….(சீரியஸ்ஸா தெரிஞ்சுக்கவே கேக்கிறேன்.எனக்கு மணிரத்னம் பிடிக்காது.ஆனா ஒரே படத்திலேயே உங்களை இந்த அளவு வெறுப்படைய வெச்ச விஷயம் என்ன…)//
ஓகே.. மேட்டருக்கு வருவோம். ஒரு காலத்தில (உலகப்படங்கள் பார்க்காத காலம் அது), மணிரத்னம் இந்தியாவின் சிறந்த டைரக்டர்.. கமல் தான் அண்டவெளியின் தலைசிறந்த நடிகர்.. ரஜினி அரசியலுக்கு வருவாரு.. அவரு ரசிகர்களின் கடவுள்.. இந்த மாதிரி நானும் நினைச்சிக்கினு இருந்தேன்.. எல்லாரு மாதிரியும். எண்ணிக்கி உலகப்படம் பார்க்க ஆரம்பிச்சேனோ, அப்ப தெரிஞ்சிது மணீரத்னத்தோட ஃப்ராடு வேலை.. அதான் அப்புடி.. என்னோட ஆங்கில ப்ளாக்ல நான் எழுதிய நிறைய விஷயங்கள் பத்தி இப்ப என்னோட மனப்பான்மை வேறு.. அது, என்னுடைய சிந்தனைகள் மாறினதைக் காட்டுது.. (ஆனா, குரு இண்ணிக்கும் எனக்குப் புடிக்கும். அது ஒரு நல்ல படம்).. இதான் மேட்டர் 😉
இந்த விஷயத்துல, நம்ம கீதப்ரியன் சொல்லிருக்குற பதிலே என்னோட கருத்தும்..
அதே போல், ஸ்கூப் எனக்கு இங்க கிடைக்கல. லேண்ட்மார்க் போயி கேட்டேன்.. நஹின்னுட்டானுங்க.. வந்த உடனே அதைப் படிப்பேன். அரசியல்ல எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எப்புடி இப்புடியெல்லாம் டெக்னிகலா கொள்ளையடிக்கிறானுங்கன்னு தெரிஞ்சிக்குற ஆர்வம் அது 😉
அப்புறம், எமர்ஜென்ஸி டைம்ல நானு, கீதப்ரியன் எல்லாம் எங்களோட முந்தின ஜென்மத்துல இருந்தோம் 😉 .. ஒருவேளை அப்ப ஸ்கூலுக்குப் போயிருக்கலாம் 😉 ஹீ ஹீ
@ காதலரே – 🙂 நன்றி.. மீண்டும் வருக
@ சு. மோகன் – இதோ நம்ம கீதப்ரியன் உங்க கேள்விக்கு பதில் கொடுத்துட்டாரே 😉
@ நாஞ்சில் பிரதாப் – ரைட்டு .. அவசியம் பார்க்க வேண்டிய படம் இது..
@ மயிலு – நமக்கேவா? 🙂
@ JZ – கட்டாயம் ரெயின்கோட் பத்தி எழுதுவேன்.. அட்டகாசமான ஒரு மென்சோகப்படம் அது.. உடைந்த காதல் பத்தி… சீக்கிரமே எழுதறேன்
ணா…
ரிலையன்ஸ்-அம்பானி குரூப் எந்த அளவிற்கு நாட்ட கெடுத்தாங்க-கெடுத்திட்டு இருக்காங்கனு உங்களுக்கு நல்லாவே தெரியும். குரு படத்தில அத பூசி மொழுகியிருப்பாங்க..ராவணன் மாதிரிதான அதுவும் அரைவேக்காட்டுதனாமான பார்வை. அதையும் மீறி உங்கள அந்தப் படம் impress பண்ண காரணம்…இத கேக்கணுமா ரொம்ப யோசிச்சேன். தோணிருச்சுனா டக்குனு நா எப்பவும் கேட்டுருவேன். இதுல வேற எந்த உள்-சைடு-வெளி நோக்கமும் கிடையாது. Just a conversation
(உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்-ஒரு சின்ன உதாரணம்-கோதாவரி-கிருஷ்ணா பகுதில கிடைக்கிற கச்சாப் பொருட்களை ரிலையன்ஸ் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பண்றாங்க. நம்ம அரசாங்கம் அதிக விலை கொடுத்து வேற பக்கம் இருந்து ஏறக்குமதி பண்றாங்க. இதுல குடும்ப தகராறு வேற..கொடும)
இத இங்க கேட்கலாமானு தெரியல..
Baby ஆனந்தன் பதிவுல கமெண்ட் பார்த்திட்டு உண்மையிலேயே ரொம்ப சங்கடமா இருந்தது. சங்கடம் in the sense…இந்த மாதிரி முகம் தெரியாத ஆட்களின் மீது harsh words உபயோகிப்பதை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.நேருக்கு நேரா முகத்தைப் பார்த்து சொன்னால் கூட பரவாயில்லை-அதில் ஒரு நேர்மை இருக்கும். உங்க கமல் பதிவே பரவாயில்ல போலிருக்கே. சத்தியமா பதிவுலகத்தில் நா முதல்ல இத சந்திக்கிறேன்..
(அங்கயும் கமெண்ட் போட்டிருக்கேன்)
@ கொழந்த – வெல்.. ரிலையன்ஸ் அம்பானி ஃபேமிலி பண்ணுற அநியாயங்களுக்கு நான் எதிரி தான். ஆனால், குரு படத்துல, கதையும் சரி, கான்செப்ட்டும் சரி.. அதைப்பத்தி இல்லை. அது, ஒரு தனி மனிதன் எப்புடி மேலே வர்ரான்றதை நமக்குக் காமிக்குது. அந்த ட்ரீட்மெண்ட் எனக்குப் புடிச்சது. ப்ளஸ், அதுல அபிஷேக், ஐஸ்வர்யா ரெண்டு பேருக்கும் இருக்குற காதல், அட்டகாசமா காண்பிக்கப்பட்டிருக்கும். இந்த மாதிரி நிறைய விஷயங்கள் அதுல இருக்கு. அதான் புடிச்சது. கட்டாயமா, என்னோட உலகப்படங்கள்ல குருவுக்கு ஒரு இடம் உண்டு 😉
மத்தபடி, ஆனந்தன் ப்ளாக்ல நான் போயி பாக்குறதுக்கு முன்னாடியே அவரு கமெண்ட்டுகளை டிலீட் பண்ணிட்டாரு.. அதை எனக்கு அனுப்பச் சொல்லிருக்கேன். 😉 கக்கூஸ்ல எழுதுற சில முட்டாள்களைப் பத்தி நாம கவலையே படக்கூடாதுல்ல 😉
அண்ட், ராவணன் வேறு.. குரு வேறு.. ராவணன் ஒரு உலகக் குப்பை. அது ஏன்னு யோசிச்சிப் பார்த்தால், லாஜிக்கே இல்லாமல் முட்டாள்தனமான காட்சிகளும் வசனங்களும் நியாயப்படுத்துதல்களும் அதுல இருக்கு. பட், குரு.. அதை ராவணன் கூட கம்பேரே பண்ண முடியாது. It’s a very different treatment.. Somehow Maniratnam made it in a beautiful way 😉
இந்த படத்தோட விமர்சனத்த நான் ஏற்க்கனவே உங்க பதிவுல படிச்சிருக்கேன். அப்பவே பார்க்கனும்னு நெனச்சி முயற்சி பண்ணினேன் கிடைக்கல. இப்ப கிடைச்சிருச்சி. நினைவு படுத்தினதுக்கு ரொம்ப நன்றி!! பார்த்துட்டு உங்ககிட்டே பகிர்ந்துக்கிறேன்.
குரு எனக்கும் மிகவும் பிடித்த படம்.ஆனால் நான் அதன் ஒரிஜினலையும் பார்த்துவிட்டேன்.அதன் பெயரைச்சொல்ல லஞ்சம் வேண்டும்.
Good information shared…
web designing company