Inside (À l’intérieur – 2007) – French
அடுத்த நொடியில் உயிர் போகப்போகிறது என்ற சூழலில், எந்த எல்லை வரை மனித உயிரால் செல்ல இயலும்? அதேபோல், எல்லாவற்றையும் இழந்துவிட்டு நடைபிணமாக வாழும் ஒரு மனித உயிர், எந்த எல்லை வரை செல்லும்?
ஸாரா, ஒரு கர்ப்பிணி. கொடூரமான கார் விபத்து ஒன்றில் சிக்கிக்கொள்ளும் ஸாராவின் கணவன் அங்கேயே மரணமடைகிறான். ஸாராவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நல்லவேளையாக ஒன்றும் ஆவதில்லை. சில மாதங்கள் கழித்து, குழந்தை பிறக்கப்போகும் தருணம். அடுத்த நாள் டெலிவரி. மறுநாள் க்றிஸ்மஸும் கூட. வீட்டில் தனியாக இருக்கும் ஸாராவின் கதவு தட்டப்படுகிறது.
ஒரு பெண் நின்றுகொண்டிருக்கிறாள்.
“மன்னிக்கவும். ஒரு மிக முக்கியமான செய்தியைத் தெரிவிக்க, உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பீர்களா? ”
“இல்லை. எனது கணவர் உறங்கிக்கொண்டிருக்கிறார். நாங்கள் தொந்திரவு செய்யப்பட விரும்பவில்லை. மன்னிக்கவும். நன்றி”
“உனது கணவர் உறங்கவில்லை. அவர் இறந்துவிட்டார் ஸாரா”
“என்னது? ……………!! ”
“கதவைத் திற”
“முடியாது. நீ இப்போது போகவில்லை என்றால் , போலீசைக் கூப்பிட வேண்டியிருக்கும்”
அனைத்து ஜன்னல்களையும் கதவுகளையும் ஸாரா மூடுகிறாள். தனது கணவன் இறந்தது இந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரியும் என்னும் கேள்வி, அவளது மனத்தைக் குடைகிறது.
சிறிது நேரம் கழித்து, இருட்டுகிறது. ஜன்னலின் திரைச்சீலையை விளக்கும் ஸாராவுக்கு அதிர்ச்சி.
அந்தப் பெண், ஜன்னலுக்கு வெளியே நின்றுகொண்டு, கூர்மையான கண்களால், ஸாராவையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
தான் ஒரு புகைப்பட நிபுணரும் ஆனதால், உடனடியாக அந்தப் பெண்ணைப் புகைப்படம் எடுக்கிறாள் ஸாரா. அடுத்த நொடியே, போலீசுக்கும் ஃபோன் செய்கிறாள். ஆனால், அப்பெண் அங்கு இருப்பதில்லை. மறைந்துவிடுகிறாள்.
போலீஸ் வருகிறது. எங்கு தேடியும் யாரையும் காணவில்லை. ஸாராவுக்கு தைரியம் சொல்லிவிட்டு, இரவு மறுபடியும் இன்னொரு பேட்ரோல் வண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டு, போலீஸ் அங்கிருந்து செல்கிறது. சிறிது நேரத்தில் உறங்கச் செல்கிறாள் ஸாரா.
நடு இரவு. உறக்கத்தில் இருக்கும் ஸாரா, ஏதோ உணர்வில் கண்விழிக்கிறாள்.
‘சதக்!!’
அவளது வயிற்றில், பெரிய கத்தரி ஒன்று பாய்கிறது ! ஸாராவின் நிறைமாத கர்ப்ப வயிற்றில் இருந்து ரத்தம் பீறிடுகிறது !
இதன்பின் என்ன ஆனது? படத்தில் காணுங்கள்.
ஆறு மாதங்களுக்கு முன்னர், நண்பர் டெனிம் மோகன் சொல்லி, பார்த்த இப்படம், எனக்குப் பிடித்தது. ரத்தம் பீறிடுவதைப் பார்த்து அருவருப்பு அடையாத நண்பர்கள், இதனைப் பார்க்கலாம்.
இப்படத்தின் இயக்குநர் – ஜூலியன் மாவ்ரி (Julian Maury). இவரது முதல் படம் இது. தனது நண்பர் அலெக்சான்ட்ரெ பஸ்டில்லோவுடன் (Alexandre Bustillo) இணைந்து இயக்கிய இப்படம், ப்ரெஞ்ச் படங்களில் ஒரு trendsetter என்று அழைக்கப்படுகிறது. நமது க்வெண்டின் – ரோட்ரிகஸ் இணை போல, இந்த இருவரும் திரையுலகில் பிரவேசித்திருப்பதுபோல எனக்கு இப்படம் பார்த்ததும் தோன்றியது. அது நிஜமாகுமா என்பது போகப்போகத் தெரியும். படத்தில் ஒரு சுவாரஸ்யமான ட்விஸ்ட்டும் உண்டு.
இன்சைட் படத்தின் trailer இங்கே.
Thanks..il download today itself…thanks for sharing about source code..it was a gud movie..!! Can u pls explain me about that email scene..if its possible..!!! Pls
Antha scene konjam kozhappamaave irunthathu…
Opening scene is awesome..!!!
@ Village வின்ஞானி – உங்களுக்கு விரிவா மெயில் அனுப்பிருக்கேன். இன்னும் சந்தேகமா இருந்தா, மெயில் பண்ணுங்க. நன்றி.
pls movie download torrent link
Thanks for spending ur valuable time for me karundhel..!!!
Im downloading movies from filestube.com, kindly suggest me some sites for downloading HD or brrip Or dvdrip movies..!! No torrents pls, direct downloads..!!
ரொம்ப ஹாரர்தான் படம்!
டெனிம் இடுகைபோட்டபோதே டவுன்லோடி பார்த்துட்டேன்… ரத்தம் ரத்தம் ரத்தமயம்…:))
I want to watch it online.. Pls tel me
French Horror! Super… பகிர்தமைக்கு நன்றி கருந்தேள். பார்கிறேன்.
அண்ணா silence of the lamps, hannibal series படங்களோட தமிழ் டவுன்லோட் கிடைக்குமா?
try “dream home” http://www.imdb.com/title/tt1407972/
I have same doubt wat village vingnani had… plz mail(forward) me also 🙂
Source code awesome… kindly mention some other films (from 2005)
This is a really inelgtilent way to answer the question.
மொதல்ல, டெனிம் மோகன் சொன்ன படத்த நம்பி பாத்ததுக்கே…..உங்கள எம்புட்டு பாராட்டினாலும் தகும்……………….எப்புடி இருந்தாலும் நா பாக்க போறதில்ல…………ஒரே படபடப்பா ஆயிருது..ஏன்னு தெரியல.
நான் ஹாரர் (கோர்) படங்கள் பார்க்க விரும்புவதில்லை… அப்படி ஹாரர்னு தெரியாம பார்த்த படங்கள் சில… (மெய்யாலுமே கொஞ்சம் சிரம பட்டுதான் பார்த்தேன்). இந்த படமும் அந்த வரிசையில் வர மாதிரி தான் போஸ்டர்-ம் இருக்கு…
நீங்க கோர் படங்கள் பார்பிங்கன்னா… Try this movie…
Audition – Japanese
குழந்தைகள், கற்பிணி பெண்கள், இருதய நோயாளிகள் போன்றவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாம்…
ஜி நான் இப்ப தான் இந்த படம் பார்த்தேன், எனக்கு ஒரு டவுட் , கிளைமாக்ஸ் ல அந்த போலீஸ் எதுக்கு அந்த பொண்ண அடிகுரான் ????
I am a retired letter carrier and Vietnam Vet who has meet Rick Penberthy , listened to him speak on the issue’s of this country and am confident he is the person we need in WaBshngton.iill WhitmoreWeeki Wachee, Fl