Insidious (2010) – English

by Karundhel Rajesh October 13, 2011   English films

அவன் நடந்துகொண்டிருக்கிறான்.

எதிரில், அவனைச் சுற்றி, அவன் பின்னால், அவன் பக்கத்தில் – எங்கு பார்த்தாலும் கும்மிருட்டு.

அவனது கையில், எப்போது வேண்டுமானாலும் அணைந்துவிடலாம் என்ற நிலையில் ஒரு லாந்தர் விளக்கு.

“டால்டன் . . டால்டன் ….” மெதுவே, இருட்டில் யாரையோ அழைக்கிறான். பதிலில்லை.

விளக்கு இருந்தும், எதிரே என்ன இருக்கிறது என்பது தெரியாத அளவு, கருப்பு மை பூசப்பட்ட ஒரு போர்வையைப்போல் இருள் கவிந்திருக்கிறது. கூடவே, பனிப்புகை.

தட்டுத்தடுமாறி நடக்கிறான். வெகுதூரத்தில், இருளில், லேசாக ஒரு வீடு தென்படுகிறது. அதை நோக்கி நடக்கிறான். கதவை மெல்லத் திறக்கிறான்.

வீட்டினுள் யாரும் இல்லை. மெதுவே வரவேற்பறையை நோக்கி நடக்கிறான். அங்கே, சோஃபாவில் யாரோ அமர்ந்திருக்கிறார்கள்.

கிழவர் ஒருவர், விசிலடித்துக்கொண்டே பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறார். அவரது அருகில், அவரது மனைவியைப்போல் ஒரு பெண்மணி. சற்றுத்தூரத்தில், அவர்களது மருமகளைப்போல் ஒரு இளம்பெண். அவள் முகமெங்கும் அதீதமான ஒப்பனை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த மூவரில் எவருமே அசைவதில்லை. சிலைகளைப்போல், கண்களைத்திறந்துகொண்டே அமர்ந்திருக்கிறார்கள்.

‘டுமீல்… டுமீல்’ . .

இளம்பெண்ணின் கையில் உள்ள துப்பாக்கி இயங்குகிறது. விகாரமாக இளித்துக்கொண்டே, இருவரையும் சுட்டுக்கொல்கிறாள் அப்பெண்.

அவர்களைத் தாண்டி, பயத்தில் நடுங்கியவாறே நடக்கிறான் அவன். சற்றுத்தூரத்தில், மாடிப்படிகள் தென்படுகின்றன. அவற்றில் ஏறுகிறான். காரிடார் முடிவில், ஒரு கதவு. அக்கதவை எங்கேயோ பார்த்திருப்பது அவனுக்குப் புரிகிறது. மெல்ல, அக்கதவைத் திறக்கிறான்.

‘க்ரீ ……..ச்’

……..

விக்கிரவாண்டி ரவிச்சந்திரனைப் பற்றி இங்கே பல முறை எழுதியிருக்கிறேன். அவரது பேசும் ஆவிகள் புத்தகத்தில், அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மைச்சம்பம் ஒன்றினை, தொடராக அவர் எழுதியிருக்கிறார். அந்தத் தொடரில், ஒரு வீடு. அந்த வீடு, பேய்களால் பீடிக்கப்பட்டிருக்கும். அந்த வீட்டில் ஒரு சிறுவன் இருப்பான். அவனிடம் சில அமானுஷ்ய உயிர்கள் பேசும். அதில் ஒன்று, பன்றித்தலையுடன் இருக்கும் இன்னொரு சிறுவன். அந்த வீட்டில் மொத்தம் இருபதுக்கும் மேற்பட்ட பேய்கள் இருக்கும். கடைசியில் என்ன ஆகிறது என்பதே கதை. அது ஒரு ஆங்கிலத் திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

கிட்டத்தட்ட அதே கதையமைப்பு கொண்ட படமே Insidious.

ஜோஷ் மற்றும் ரெனாய் தம்பதியினர், புதிய வீடு ஒன்றுக்குக் குடிபோகின்றனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். ஒருநாள், அந்தக் குழந்தையிடம் யாரோ கொடூரமான குரலில் பேசுவது ரெனாய்க்குக் கேட்கிறது. ஆனால் அங்கு எவருமில்லை. மெதுவாக, அங்கிருக்கும் பல மர்மங்கள் அவளுக்குப் புலப்பட ஆரம்பிக்கின்றன. ஆனால், அவளது கணவனோ வழக்கப்படி எதையும் நம்புவதில்லை.

O.B.E என்று ஒரு சங்கதி உண்டு. Out of Body Experience என்ற விஷயம். உலகெங்கிலும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆட்பட்டிருக்கும் விஷயமுமாகும் அது. இதைப்பற்றியுமே விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் எழுதிக் குவித்திருக்கிறார்.

எனக்குத் தெரிந்து, இரண்டு குறிப்பிடத்தக்க நபர்கள் OBE பற்றி எழுதியிருப்பதைப் படித்திருக்கிறேன். ஒருவர் பரமஹம்ஸ யோகானந்தர். அவரது புகழ்பெற்ற ‘யோகியின் சுயசரிதை’ என்ற புத்தகத்தில். இன்னொருவர், வால்டர் கவன். இரண்டையுமே கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

பரமஹம்ஸ யோகானந்தர், யோகியின் சுயசரிதையில், மூன்றாவது அத்தியாயத்தில் அவரது அனுபவத்தைக் குறிப்பிடுகிறார். ஸ்வாமி ப்ரணபாநந்தர் என்ற காசிவாழ் சாது ஒருவரைச் சந்திக்கச் செல்கிறார் யோகானந்தர் .அவரது பனிரண்டாவது வயதில். அவரது வீட்டில், அவரருகில் சென்று அமர்ந்ததுமே, யோகானந்தரின் தாயைப் பற்றி வாஞ்சையுடன் வினவுகிறார் சாது. ஆச்சரியப்பட்டுப் போகும் யோகானந்தர், தான் பார்க்க விரும்பிய இன்னொரு சாதுவின் பெயரையும் ப்ரணபாநந்தர் தானாகவே முன்வந்து சொன்னதும், அதிர்ச்சியின் எல்லைக்கே செல்கிறார். மறுகணமே அசைவற்றுப் போகும் ப்ரணபாநந்தர், எங்கேயோ சூன்யத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டே அமர்ந்துவிடுகிறார். கொஞ்ச நேரத்தில், யோகானந்தர் பார்க்க விரும்பிய சாது, இன்னும் அரைமணி நேரத்தில் அங்கேயே வருவார் என்றும் சொல்கிறார். அதேபோல் அரைமணி நேரத்தில் அங்கே வரும் அந்தச்சாது, தான் கங்கையில் குளிக்கையில் தன்னருகில் வந்துநின்ற ப்ரணபாநந்தர், தனது வீட்டுக்கு வரும்படி அழைத்ததாகச் சொல்கிறார். ஆனால், ப்ரணபாநந்தர் வீட்டில்தானே இருந்தார்? அவர் வெளியிலேயே செல்லவில்லையே என்று யோகானந்தர் ஆச்சரியப்படுகிறார். இந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதுகையில், இது ப்ரணபாநந்தரின் OBE தான் என்று மறைமுகமாகவும் குறிப்பிடுகிறார் யோகானந்தர்.

அடுத்த சம்பவம், வால்டர் கவன் என்பவரைப்பற்றி. இவரைப் பல பேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இவரும் இவரது மனைவியும், சர்வசாதாரணமாக தங்களது உடல்களை விட்டுவிட்டு, வேறு பல அண்டங்களுக்குள் பயணிப்பது குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். அப்படி ஒரு முறை பயணிக்கையில், வழிதெரியாத ஒரு மர்மமான, கொடிய உயிர்கள் சூழ்ந்த இடத்தில் அகப்பட்டுக்கொண்டதையும், தப்பிக்க வழி தெரியாமல், கடவுளை நினைத்து அழுததையும், அப்போது அங்கு தோன்றிய ஒரு சாது, இவர்களை பத்திரமாக வெளிக்கொண்டுவந்ததையும், அதன்பின் அப்படியெல்லாம் பயணிக்கக் கூடாது என்று அறிவுரை சொன்னதையும் படித்திருக்கிறேன். அந்த சாது யார் என்றும் எனக்குத் தெரியும். ஆனால், அது இங்கே தேவையில்லாதது.

சுருக்கமாக, தனது உடலில் இருந்து உயிரை தற்காலிகமாக வெளியேற்றி, அதனைத் தான் விரும்பும் இடங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்று, பின்பு மறுபடி உடலுக்குள்ளேயே திரும்புவதே OBE. கூடுவிட்டுக் கூடு பாய்வதன் ஒரு அம்சம். இப்படித்தான் அது விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது உண்மையா பொய்யா என்பது, அவரவர்களின் நம்பிக்கைக்கேற்ற விஷயம்.

இந்த OBE இப்படத்தில் வருகிறது.

படம், வழக்கமான ஒரு பேய்ப்படம்தான். ஆனால், சில காட்சிகளில் என்னை அதிர வைத்தது. அந்த வகையில், எனக்குப் பிடித்திருந்தது. படம் பார்ப்பவர்கள், எந்தத் தொந்தரவும் இல்லாமல், இருளில் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படம் எடுக்கப்பட்ட பட்ஜெட், ஒன்றரை மில்லியன் டாலர்கள். ஆனால் வசூலித்த தொகையோ, கிட்டத்தட்ட 95 மில்லியன் டாலர்கள். அந்த வகையில், பட்ஜெட்டையும் வசூலையும் ஒப்பிட்டால், இது 2010 ன் மிக லாபகரமான படமாகும்.

Insidious ட்ரைலர் இங்கே காணலாம்.

  Comments

26 Comments

  1. உடனே படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பும் வண்ணம் எழுதியிருக்கிறீர்கள். பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

    Reply
  2. ரமணருக்கு ஏற்பட்டது இதுபோன்ற OBEயா ?

    Reply
  3. நா இந்த படத்த பாக்கைல, செமெஸ்டர் லீவ்ன்னு ஸ்டுடெண்ட்ஸ் எல்லாம் ஊர்க்கு போயிருந்தாங்க………

    24 ரூம்கள் இருக்கும் மேன்சன்………என்னய தவிர ஒருத்தர் கூட இல்ல………..நைட்தான் இந்த படத்த பாத்தேன்…………சில காட்சிகளில் என்னையும் அறியாம சிரிச்சுட்டேன்………அதுவும் கடைசில பேய் தையல் மிசின்ல உக்காந்திருக்குமே……..ஏன்னு தெரியல…

    ஒருவேல மோகன் மேல இருக்கும் பிம்பத்தை வெச்சு இந்த படத்த நா பாத்ததுனால…சிரிப்பா இருந்துச்சா ?? தெரியல..

    ஆனா..உங்களுக்கு புடிச்சிருக்குன்னு சொல்லிடீங்கள்ள…….இனி மோகன் அலும்பு தாங்காது…..இதவொரு பயங்கரமான பேய் பட ரேஞ்சுக்கு எல்லார்ட்டயும் மீண்டும் சொல்லும் படலத்தை ஆரம்பிக போறார்…

    Reply
  4. ஆண்டவா
    நண்பர்களிடம் இருந்து காப்பாற்று
    எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்

    Reply
  5. தல, சில நேரம் நீங்க மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருகிறீர்கள் …. இந்த கொலந்தையைதான் என்ன செய்யறதுன்னே தெரியல

    Reply
  6. ஒருவேல மோகன் மேல இருக்கும் பிம்பத்தை வெச்சு இந்த படத்த நா பாத்ததுனால…சிரிப்பா இருந்துச்சா ?? தெரியல..///

    நான் ஒரு போதும் இப்படி ஒரு எண்ணத்துல பார்ப்பது கிடையாது

    Reply
  7. நான் ஒரு போதும் நான் கூறிய கருத்துக்களில் இருந்து மாறுவது கிடையாது , இப்பவும் இது ஒரு நல்ல பேய் படம் தான்

    Reply
  8. // நான் ஒரு போதும் இப்படி ஒரு எண்ணத்துல பார்ப்பது கிடையாது //

    ஐ…………நெனச்ச மாதிரியே கமென்ட் போட்டுட்டீங்க………என்ன இருந்தாலும் உங்ககூட என்னைய மாதிரி ஆட்களை கம்பேர் செய்யலாமா ??

    // நான் ஒரு போதும் நான் கூறிய கருத்துக்களில் இருந்து மாறுவது கிடையாது , இப்பவும் இது ஒரு நல்ல பேய் படம் தான் //

    சமகாலம் போயி….இப்ப “ஒரு போதும்” படலமா ????

    ஆனா.எதுக்காக பேய் தையல் மிசின்ல உக்காந்திருந்துச்சு…..விளக்கம் வேண்டும் ?

    Reply
  9. @ கொழந்த – ரமணருக்கு ஏற்பட்டது, கட்டாயம் OBE யோட ஒரு விதம்தான். ஆனா, அதுலயே, கர்மா, அத்வைதம், ஞானம் ஆகிய பல மேட்டருங்க கலந்திருக்கு. இதைப்பத்தி நேர்ல பேசலாம்.

    அப்புறம், இந்தப் படத்துல தையல் மிஷின் எல்லாம் லேது. அது வேற படமா இருக்கும். ஹோம் தியேட்டர்ல இந்தப் படம் பார்க்கைல நெசமாவே பல சீன்களில் நடுங்கினேன் 🙂 . shree தான் சாட்சி.

    @ மோகனுக்கு இந்தப் படம் பிடிச்சது பத்தி சந்தோஷம் 😉

    @ கேரளாக்காரன் – விக்கிரவாண்டியின் லிங்க் எதுவும் கைவசம் இல்ல. அவரோட புக்ஸ் படிங்க . மேகதூதன் பதிப்பகம் in triplicane.

    Reply
  10. // ஐ…………நெனச்ச மாதிரியே கமென்ட் போட்டுட்டீங்க………என்ன இருந்தாலும் உங்ககூட என்னைய மாதிரி ஆட்களை கம்பேர் செய்யலாமா ?? //

    இதுக்கு எதுக்கும் விளக்கம் எழுதிர்ரேன்…நீங்க மலை….நான் மடு………அந்த அர்த்தத்துல சொன்னது…….

    // // நான் ஒரு போதும் இப்படி ஒரு எண்ணத்துல பார்ப்பது கிடையாது //

    நீங்க கூடத்தான் பல தடவ…ராஜெசே சொன்னாருன்னு பாத்தேன்……மொக்கையா இருந்துச்சு………….பாலா எழுதியிருந்தான்னு பாத்தேன்……..படு திராபை என்றெல்லாம் சொன்னீங்க…அத எந்த கணக்குல சேர்க்க ?

    Reply
  11. @கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said:

    http://books.dinamalar.com/AuthorBooks.aspx?id=803

    இதுல எந்த பதிப்பகம் உட்பட எல்லா தகவல்களும் இருக்கு…புக்காவே நல்லதுன்னு நெனைக்கிறேன்……

    நானும் வாங்கணும்….ராஜேஷ் அவர பத்தி சொல்லி சொல்லி என்னதான் எழுதியிருகாருன்னு பாக்கன்னும் ஒரு அவா..

    Reply
  12. க்ளைமேக்ஸ் முன்னாடி, அந்த பையன தேடி இவன் போகும் போது, பேய் First floorல இருக்கும்….பையன் கீழ சங்கிலில இருப்பான்…..

    ஹீரோ (?) சங்கிலிய கழட்ட முயற்சிக்கும் போது ………பேய் தையல்மிசின்ல தான் உக்காந்திருக்கும்……….நன்றாக கவனிக்கவும்……..

    Reply
  13. நீங்க கூடத்தான் பல தடவ…ராஜெசே சொன்னாருன்னு பாத்தேன்……மொக்கையா இருந்துச்சு………….பாலா எழுதியிருந்தான்னு பாத்தேன்……..படு திராபை என்றெல்லாம் சொன்னீங்க…அத எந்த கணக்குல சேர்க்க ?//

    நல்ல கற்பனை

    Reply
  14. வணக்கம்..என் பெயர் குமரன்
    அருமையான பதிவு..படத்தை பார்க்க தூண்டுகிறது..உங்களது திரைப்பட பதிவுகளின் நான் தெரிந்துக்கொண்டு பார்த்த படங்கள் அதிகம்…அதற்க்கு மிக்க நன்றி..மேலும் உங்களது விரல் வண்ணங்கள் தொடரட்டும்..நன்றி

    Reply
  15. டோரண்டை தோண்ட ஆரம்பிச்சுட்டேன்…
    பேய் இருக்குன்னு பொண்டாட்டி சொல்லுவா…. கணவன் இதை நம்பமாட்டாரு….
    இந்த கான்செப்டை மைடியர் லிசா காலத்துலேருந்தே காணிச்சுட்டுருக்கானுங்க… பேய்படம் டெப்மளேட் காட்சிகள் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கு… :))

    Reply
  16. உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி. அருமையான பதிவு. ஆனால் எனக்கு The Paranormal Activity படங்களோடு ஒப்பிடும் போது இது பயங்கரமாக தோன்றவில்லை. அதிலும் அந்த கடைசி சீன்ல நான் பயத்தில் கதிரைல இருந்து கீழே விழுந்திட்டேன். 😛

    Reply
  17. பகிர்ந்தாமைக்கு நன்றி !!

    Reply
  18. படம் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது

    Reply
  19. pala maasathu ku munnadi indha padam paathurukia nu unkitta ketadthuku nee reply edhum pannama directa review’ve eludhite..sandosam!

    Reply
  20. Astral Projection நாமளே செய்ய முடியும்னு சொல்வாங்க, தானா ஏற்படும்னும் சொல்வாங்க. கனவும் நிஜமும் கலந்தமாதிரியான சூழ்நிலைல நம்மளை நாமளே பார்த்துக்கிற மாதிரி தோணுமாம். (இந்த சமயங்களில்தான் sleep paralysis ஏற்படுது. Near-death experience எல்லாம் கூட இதுனாலதானாம். ஆனா சிலர் இந்த மாதிரி உணர்வு கிடைக்கும்னு ட்ரக்ஸ் கூட எடுத்துக்கிறாங்க:-(

    படத்தை பொறுத்தவரை இந்த படம் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனா பார்த்ததில்லை…

    Reply
  21. வால்டர் கவனின் பெயரை ஆங்கிலத்திலும் குறிப்பிடுங்கள்.
    கூகுள் தேடலில் தேட இலகுவாக இருக்கும்

    Reply
  22. தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

    உங்கள் தளம் தரமானதா..?

    இணையுங்கள் எங்களுடன்..

    http://cpedelive.blogspot.com

    Reply

Join the conversation