இரண்டாம் உலகம் (2013) – Tamil

by Karundhel Rajesh November 23, 2013   Tamil cinema

ஒநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தைப் பார்த்தபின் இப்போதுதான் தமிழ்ப்படம் ஒன்றை திரையரங்கில் பார்க்க நேரம் கிடைத்தது. செல்வராகவனை எனக்குப் பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்பதை எனது ‘மயக்கம் என்ன’ விமர்சனத்தில் படிக்கலாம். எனவே, என்னதான் இரண்டாம் உலகம் படத்தை அனைவரும் கழுவி ஊற்றினாலும், அதில் எனக்குப் பிடித்த செல்வராகவனின் அம்சங்கள் இருக்கும் என்று நினைத்துதான் அதற்கு இன்று சென்றேன்.

இந்தப் படத்துக்கு அதன் ஆரம்பம் கொஞ்சம் நம்பிக்கையூட்டியது. வேறொரு உலகம் ஒன்றின் கதையை சொல்லிக்கொண்டே, அதைப்பற்றிய விஷுவல்கள் காட்டப்பட்டபோது அந்த விஷுவல்களின் தத்ரூபத்தோடு, அதை சித்திரங்களாகக் காண்பித்து அந்த விஷுவல்களோடு இம்போஸ் செய்த விதம் நன்றாக இருந்தது. ஆனால், அந்த வாய்ஸ் ஓவரில் காதலைப் பற்றி வந்த வசனங்கள் என் மனதில் ஒட்டவில்லை. ’காதலே அந்தக் கிரகத்தில் இல்லை; பெண்களை கொடுமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்’ என்பதெல்லாம் திரைப்படங்களில் நிரூபிக்கவே முடியாத subjective விஷயங்கள். ஒரு உலகம் உருவாகி இத்தனை காலத்தில் ஒரு முறை கூட காதல் வந்ததில்லையா? என்று தோன்றியது. கூடவே, அந்தக் கிரகத்தில் இருக்கும் கடவுள் போன்ற பெண்ணைப் பற்றியும் சொல்லப்பட்டபோது, சுத்தமாக அதனை நம்பவே முடியவில்லை. Elves என்று இங்லீஷ் புத்தகங்களிலும் படங்களிலும் வருவது போன்ற ஒரு தேவதையை கதைக்குள் கொண்டுவந்திருக்கிறார் செல்வராகவன் என்பது புரிகிறது. ஆனால் அதன் நம்பகத்தன்மை அடிவாங்குகிறது. அருமையான விவரிப்போடு ஆரம்பித்த கதை, இடையில் சொல்லப்பட்ட காதல் மற்றும் கடவுள் ஆகிய விஷயங்களில் பின்வாங்கிவிட்டது.

இதன்பின் துவங்கும் கதையில் என்னால் துளிக்கூட ஒன்றவே முடியவில்லை. திரையில் ஓடும் விஷயம், எனக்கு முற்றிலும் அந்நியமாகவே இருந்தது. ஆரம்பம் முதல் கடைசிவரை இதுதான் நிலமை. ‘எப்போதடா படம் முடியும்’ என்றே தோன்றிக்கொண்டிருந்தது. சுவாரஸ்யம் என்ற வஸ்து, இந்தப் படத்தில் முற்றிலும் காணாமல் போய்விட்டது.

இப்படி ஒரு ஃபாண்டஸி கதையை செல்வராகவன் போன்ற ஒரு நல்ல இயக்குநர் எப்படியெல்லாம் அட்டகாசமாக படமாக்கியிருக்கலாம்? இத்தனைக்கும், தமிழ்ப்படங்களில் பெரிய பிரச்னையான ஸிஜி, இந்தப்படத்தில் லட்டு போல அமைந்திருக்கிறது. அதிலேயே பிரமாதமாக ஸ்கோர் செய்திருப்பவர்கள், கதையில் கொஞ்சம் கூட கவனம் செலுத்தவில்லை என்பதால் இந்தப் படம் ஆடியன்ஸுக்கு ஒரு தண்டனையாக இருக்கிறது. அதில் சந்தேகமே இல்லை.

இந்தக் கதையில் எனக்குத் தெரிந்த பிரச்னைகள் இங்கே.

கதையில் என்ன நோக்கம்? எந்தத் திரைக்கதையாக இருந்தாலும், கதாநாயகனின் நோக்கம் மிக எளிதில் ஆடியன்ஸுக்குப் புரிந்துவிடும். ஆனால் இந்தப்படத்தில் ஆர்யாக்களின் நோக்கமே சுத்தமாக எடுபடவில்லை. ஒரு சிறிய உதாரணம்: The Fountain என்று ஒரு படம் உண்டு. டேரன் அரனாவ்ஸ்கி என்ற மிகவும் talented இயக்குநரின் படம். அதன் கருவும் இரண்டாம் உலகத்தின் கருவுமே ஒன்றுதான். காதலுக்காக எத்தனை தூரம் கதாநாயகன் செல்வான் என்பதுதான் அந்தக் கரு. இது, ஃபௌண்டனில் எவ்வளவு அருமையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் காண்பிக்கப்பட்டுள்ளது என்று அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் உணர்வார்கள். அதில் மூன்று காலகட்டங்களில் நடக்கும் ஒரே போன்ற கதை காண்பிக்கப்படும். இதில் இரண்டு. ஆனால் நோக்கம் ஒன்றுதான் என்னும்போது, இரண்டாம் உலகத்தில் ஏன் இத்தனை சப்பையாகவும் மொக்கையாகவும் இந்த நோக்கம் காண்பிக்கப்பட்டுள்ளது என்று கவனித்தாலேயே இதன் தோல்வி புரிந்துவிடும்.

அதிலும், காதல் என்பது செல்வராகவனின் ஏரியா. இதுவரை இந்த ஏரியாவில் செல்வராகவன் சொதப்பியதே இல்லை. நம்பி தியேட்டருக்கு செல்லலாம். ஆனால் அந்த நம்பிக்கையும் இன்றொடு உடைந்தது. ’மயக்கம் என்ன’ படத்தில், தனுஷுக்கும் ரிச்சாவுக்கும் நிகழும் மிகச்சிறிய காதல் தருணங்கள் அத்தனை அழகாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கும். குறிப்பாக பஸ் ஸ்டேண்டில் மழையில் நிற்கும் இருவருக்குள்ளும் நிகழும் மாற்றங்கள். கூடவே, படம் முழுக்கவே இதுபோன்ற மிகச்சிறிய தருணங்கள் வந்துகொண்டே இருக்கும். இந்தக் கதாபாத்திரங்களை ஆடியன்ஸுக்குப் பிடிக்க வைப்பதில் இதுபோன்ற காட்சிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் இரண்டாம் உலகத்தில் அப்படிப்பட்ட ஒரே ஒரு செல்வராகவன் தருணம் கூட இல்லை. யாரோ அறிமுக இயக்குநர் எடுத்த ஒரு படம் போல இருக்கின்றன இதன் பெரும்பாலான காட்சிகள். குறிப்பாக எங்கு பார்த்தாலும் ஆர்யாவின் கண்களுக்கு அனுஷ்கா தெரிவதெல்லாம் செல்வராகவன் படத்தில் இடம்பெறவேண்டிய காட்சியே இல்லை.

அடுத்து, இப்படி ஒரு தனியான உலகத்தைக் காட்டும்போது, அதன் கதாபாத்திரங்கள் அவசியம் நம்பகத்தன்மையோடு இருக்கவேண்டும். அதாவது, என்னதான் வித்தியாசமாக அவைகளைக் காட்டும்போதும், மக்கள் அதை நம்பவேண்டும். ஆனால், இந்தப் படத்தில் வரும் ராஜாவை மட்டுமே கவனித்தாலே போதும் – நம்பகத்தன்மை என்றால் என்ன என்று நம்மையே செல்வராகவன் கேள்வி கேட்கிறார். இத்தனை மொக்கையான லூசு ராஜா ஒருவனை நான் எந்தத் திரைப்படத்திலும் பார்த்ததில்லை. அவனுக்கு சற்றும் சளைக்காத அடிமுட்டாள் வில்லன். படத்தின் ஆரம்பத்தில் ராஜாவின் பிரதேசம் மற்றும் வில்லனின் பிரதேசம் ஆகியவற்றை சொல்லியபோது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் காட்சிகளாக அவை வரும்போது, ஏதோ படு அமெச்சூர் மேடை நாடகம் ஒன்றைக் காண்பதுபோலவே இருந்தது. மொத்தமே 20 பேர்தான் ராஜாவின் படைவீரர்கள். அதேபோல் அதே அளவில் வில்லனின் ஆட்கள். வில்லன், ராஜாவின் ராஜ்ஜியத்தில் இருக்கும் தேவதையை கடத்த வருகிறான். காரணம்? படத்தில் தேடினாலும் கிடைக்காது. அட அது கூட பரவாயில்லை. அப்படிப் படையெடுத்து வருவது எப்படி என்று பார்த்தால், இருபது சொங்கிகள் தள்ளாடி நடந்துவருகிறார்கள். இதுதான் படையெடுப்பு. அந்த சொங்கிகளை, அவர்களைவிட சோம்பேறிகளாக இருக்கும் படைவீரர்கள் தடுக்கிறார்கள். அடக்கடவுளே.

இந்தக் கடவுள் போன்ற தேவதையை எடுத்துக்கொண்டால், எப்போது பார்த்தாலும் விட்டத்தை வெறிப்பதைத் தவிர அவருக்கு வேலையே இல்லை. இரண்டு உலகங்களையும் இணைக்கும் முக்கியமான பாத்திரம் இது. ஆனால் அந்த சம்பவம் நிகழ்கையில், அதன் முக்கியத்துவம் துளிக்கூட ஆடியன்ஸுக்குத் தெரியாமல் ஏதோ மற்றுமொரு காட்சி போல எழுதப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தேவதை ஏன் இதை செய்கிறது? அத்தனை சக்திவாய்ந்த தேவதை, மொக்கை வில்லன்களின் மடியில் ஜோராக அமர்ந்துகொண்டு ஏன் அவர்களுடன் செல்கிறது? வழக்கப்படி பதில் இல்லை (தேவதை அளிக்கும் காரணம் மகா திராபை).

ஆதிவாசி போன்ற ஆர்யா, நாட்டின் தளபதியின் மகன். அந்தத் தளபதி செம்ம ஷோக்காக இருக்கிறார். ஆனால் அவரது மகன், டார்ஜானின் கூடாரத்திலிருந்து தப்பி வந்த தோற்றத்துடன் படம் முழுக்க நடமாடுகிறார். அவருக்கும் தளபதிக்கும் நிலவும் உறவு எப்படிப்பட்டது? ஏன் ஆர்யா அப்படி அரைமெண்டல் போல் சுற்றுகிறார்? வழக்கப்படி எந்தக் காரணமும் இல்லை. திடீரென்று தூக்கத்தில் இருந்து முழித்த செல்வராகன் முடிவுசெய்துவிட்டதால் அப்படி இருக்கிறார். சிம்பிள். ஆர்யாவை கட்டிவைத்து டார்ச்சர் செய்தாலும் அவருக்கு நடிப்பு வராது என்பதற்கு இந்தப் படம் இன்னொரு உதாரணம்.

தனது கையில் கிடைத்த அட்டகாசமான ஃபாண்டஸி வாய்ப்பை வேண்டுமென்றே கோட்டை விட்டுவிட்டு நிற்கிறார் செல்வராகவன். படு அலட்சியமாக ஒரு திரைக்கதையை எழுதி, அதை அவசரமாக படமாக்கியதுபோல் இருக்கிறது இந்தப்படம். செல்வராகவன் போன்ற caliberல் உள்ள இயக்குநர்கள் இப்படிப்பட்ட ஒரு மேடை நாடகத்தை படமாக எடுத்தால் எப்படி ஃபாண்டஸிகளை இனி நம்புவது? அவரது அஸிஸ்டெண்ட்களிடமிருந்து கூட இந்த ஆயிரத்தியோடு ஓட்டைகளுடன் கூடிய திரைக்கதைக்கு எந்த ஃபீட்பேக்கும் கிடைக்கவில்லையா? யாராவது ஒரு ஆள் இதை முழுக்கப் படித்திருந்தால்கூட மிகச் சுலபமாக இந்த ஓட்டைகளை சொல்லியிருப்பார்கள். செல்வராகவனின் ‘பீடம்’ கொஞ்சம் உயர்ந்த நிலையில் இருப்பதால் அப்படி நடக்கவில்லை போலும். இதுபோன்ற கோரமான திரைக்கதைகளுக்கு feedback அவசியம் தேவை. இல்லையேல், ஆடியன்ஸ் திரையரங்கில் கொத்துக்கொத்தாக சாவதில் கொண்டுவந்து அது விடும். விட்டிருக்கிறது.

செல்வராகவனின் ஃபாண்டஸிகளுக்கு அடிப்படை ரிஸர்ச் மிகவும் கம்மி என்பது இரண்டாம் முறையாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மனதில் நினைத்தவுடன் திரைக்கதையை எழுதி, அதை உடனே படமாக்கினால் இப்படித்தான் இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கொஞ்சம் மெனக்கெட்டு உருவாக்கியிருந்தாலே இப்படிப்பட்ட அபத்தமான காட்சிகளை தவிர்த்திருக்கலாம். இது எந்தத் திரைக்கதைக்கும் அவசியம்தான். அப்படியிருக்கும்போது, செல்வராகவன் போன்ற திறமைசாலிகள் ஏன் இப்படி மெத்தனமாக நடந்துகொள்கிறார்கள் என்பது குழப்பமாகவே இருக்கிறது. செல்வராகவனுக்கும் ஃபாண்டஸிகளுக்கும் இருக்கும் தூரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

பின்னணி இசை, வழக்கமான தமிழ்ப்படங்களில் இருப்பதுபோல் உச்சபட்ச இரைச்சல் மயம். பாடல்கள் – படத்தில் இரண்டு பாடல்கள் நன்றாக இருந்தன. ஒன்று – கனிமொழியே. மற்றொன்று – டிபிகல் செல்வராகவன் பாடலான ‘பழங்கள்ளா’.

ஸிஜி காட்சிகள் நன்றாக இருக்கின்றன என்ற ஒரே காரணத்துக்காக, இந்த படு அமெச்சூர் திரைப்படத்தை நல்ல படம் என்று ஏற்றுக்கொள்ள இயலாது. முதலில் செல்வராகவன் தனது திரைக்கதையை நன்றாக விவாதித்து, அதன் பிரச்னைகளை எதிர்கொண்டு மாற்றத் தயாராகவேண்டும். அதன்பின்னர்தான் ஃபான்டஸி பக்கம் இனிமேல் அவர் செல்லவேண்டும். ஒரு ஃபாண்டஸியில், இருட்டில் மூன்று மணி நேரம் உட்கார்ந்து படம் பார்க்கும் ஆடியன்ஸை படத்தோடு ஒன்றவைத்தல் மிக முக்கியம். அது ஒரு துளி கூட இல்லாத இரண்டாம் உலகம் போன்ற இன்னொரு படமெல்லாம், பார்க்கும்போதே உயிர் போய்விடும் என்று தோன்றுகிறது.

என் ரேட்டிங் – ஒரே ஒரு ஸ்டார். அட்டகாசமான ஸிஜிக்காக மட்டும்.

  Comments

16 Comments

  1. Raj

    சார்.. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், செல்வராகவன் திரைப்படங்களே பிடிக்காது என்று சொல்லி திரிந்த சில பெண்களுக்கு இரண்டாம் உலகம் பிடித்திருக்கிறது.. மெடிக்கல் மிராக்கிள் 🙂

    Reply
    • ஆச்சரியம் தான் பாஸ் 🙂

      Reply
  2. //குறிப்பாக எங்கு பார்த்தாலும் ஆர்யாவின் கண்களுக்கு அனுஷ்கா தெரிவதெல்லாம் செல்வராகவன் படத்தில் இடம்பெறவேண்டிய காட்சியே இல்லை.அடுத்து, இப்படி ஒரு தனியான உலகத்தைக் காட்டும்போது, அதன் கதாபாத்திரங்கள் அவசியம் நம்பகத்தன்மையோடு இருக்கவேண்டும். அதாவது, என்னதான் வித்தியாசமாக அவைகளைக் காட்டும்போதும், மக்கள் அதை நம்பவேண்டும். ஆனால், இந்தப் படத்தில் வரும் ராஜாவை மட்டுமே கவனித்தாலே போதும் – நம்பகத்தன்மை என்றால் என்ன என்று நம்மையே செல்வராகவன் கேள்வி கேட்கிறார். இத்தனை மொக்கையான லூசு ராஜா ஒருவனை நான் எந்தத் திரைப்படத்திலும் பார்த்ததில்லை. அவனுக்கு சற்றும் சளைக்காத அடிமுட்டாள் வில்லன். படத்தின் ஆரம்பத்தில் ராஜாவின் பிரதேசம் மற்றும் வில்லனின் பிரதேசம் ஆகியவற்றை சொல்லியபோது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் காட்சிகளாக அவை வரும்போது, ஏதோ படு அமெச்சூர் மேடை நாடகம் ஒன்றைக் காண்பதுபோலவே இருந்தது. மொத்தமே 20 பேர்தான் ராஜாவின் படைவீரர்கள். அதேபோல் அதே அளவில் வில்லனின் ஆட்கள். வில்லன், ராஜாவின் ராஜ்ஜியத்தில் இருக்கும் தேவதையை கடத்த வருகிறான். காரணம்? படத்தில் தேடினாலும் கிடைக்காது. அட அது கூட பரவாயில்லை. அப்படிப் படையெடுத்து வருவது எப்படி என்று பார்த்தால், இருபது சொங்கிகள் தள்ளாடி நடந்துவருகிறார்கள். இதுதான் படையெடுப்பு. அந்த சொங்கிகளை, அவர்களைவிட சோம்பேறிகளாக இருக்கும் படைவீரர்கள் தடுக்கிறார்கள். அடக்கடவுளே.//
    Same problem, this chapter 🙂
    //என் ரேட்டிங் – ஒரே ஒரு ஸ்டார். அட்டகாசமான ஸிஜிக்காக மட்டும்.//
    இது கொஞ்சம் காட்டமான ரேடிங் தான்…

    Reply
    • உங்களுக்கு நேற்று இரவு fbயில் நிகழ்ந்தது எனக்கு நேற்று காலையிலேயே தெரிந்துவிட்டதே 😛
      நேற்று காலையில் நான் இப்படம் குறித்து என் ப்ளாக்கில் எழுதியது:
      “தமிழ் ரசிகர்களின் ரசனையை அடுத்த கட்டதிற்கு எடுத்து செல்வேன் எனக்கூறிய செல்வா இப்படி தடுமாறுவார் என எதிர்பார்கவில்லை.விஜய், அஜித்தின் சில மொக்கையான (சுறா,பில்லா2) படங்களைக்கூட தூக்கிபிடிக்கும் அவர்களது அடாவடி ரசிகர்களைப்போல இப்பொது இயக்குனர்களையும் தூக்கிப்பிடிக்கும் சங்கங்கள் உருவாகி உள்ளன.இதே கதையை இங்கிலீஷ்ல எடுத்தா பாக்குற? தமிழ்ல எடுத்தா பாக்கமாட்டியாடா? என செல்வாவின் ஆதரவு இயக்கங்கள்(!!) கேட்கலாம்.ஆனால் அங்கு உள்ள பட்ஜெட் வேறு,திட்டமிடல் வேறு,கிராபிக்ஸ் கலைஞர்கள் வேறு…”

      Reply
    • இருக்கலாம் பாஸ். ஆனா அது என் கருத்து மட்டுமே. ஒருவேளை இன்னும் சிலருக்கு படம் பிடிக்கலாம்.

      Reply
      • நீங்க உங்க ப்லாக்கில் எழுதிருப்பது மிகவும் உண்மை. 🙂

        Reply
        • 100% true.. If u take Avatar he has explained everything about the movie. Still its a fantasy when it comes to CG i hope karudhel must understand its a vast area… Tamil industry has never got a pass mark in this subject…. Search in internet about CG making u can see how they plan before making a CG movie…… That’s why Koochidiyan was in middle of a Desert……..

          Reply
        • mr.krundhel sevaraghan had made a mistake yes i accept but we have to appreciate attempt atleast he is one in tamil cinema who tries to make some diff stories not movies like SINGAM and Some worst commercial

          offcourse this movie has lot of screenplay drawbacks no questions in that but in tamil cinema it is good attempt

          Reply
  3. சிஜி காட்சிகளை பார்த்து ரசிகன் ஆச்சர்யப்பட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு செல்வா படம் எடுத்தது போல் இருந்தது. சிஜியை தவிர மற்ற எல்லாமே படு amateurish. படத்தின் கான்சப்ட் Another Earth (2011) படத்தை ஞாபகப்படுத்தியது எனக்கு.

    Reply
    • யெஸ் சுந்தர்ராஜன்.. எனக்கும் அதே ஃபீலிங் தான். அனதர் எர்த் இன்னும் பார்க்கல. பார்த்துட்டு வரேன்

      Reply
      • I think i give 0 star i don’t even give star for CG…. Please Karundhel if u don’t know how differentiate a good CG and bad CG pls dont comment on that….

        Reply
  4. I think i give 0 star i don’t even give star for CG…. Please Karundhel if u don’t know how differentiate a good CG and bad CG pls dont comment on that….

    Reply
  5. vinoth gowtham

    செல்வா பேன்டஸி வகை படங்கள் எடுப்பதை அடியோடு நிறுத்திவிடலாம்.
    //செல்வராகவனின் ‘பீடம்’ கொஞ்சம் உயர்ந்த நிலையில் இருப்பதால் அப்படி நடக்கவில்லை போலும்.//
    அவரே அதை வம்படியாக உருவாக்கி வைத்துள்ளார்.

    Reply
  6. giri prabhu

    vimarsanam..nallairiku..ungalathu parvai intha padathin mel…..anal nalla vimarsnam athil…”sappai ” ” mokkai” ponra varthaighalai…vimarsanthil upayogikatheer ..thaazhntha vendukol…tamil la niraiya nalla varthaighal iruku…senthamizh varthaighal upayogikalai endralum..sappai mokkai ponra varthaigal..vimarsanathuku nalla illa..ithu new geneation tamil nu solla vendam…

    Reply

Join the conversation