கிம் கி டுக் – ஸாடிஸ்டா?
போன பதிவில் நான் எழுதிய ‘The Isle’ படத்தைப் பற்றிய சில கேள்விகளை எனது நண்பர்கள் ஃபேஸ்புக்கில் கேட்டிருந்தனர். அவர்களுக்கு ஒரு பதிலும் எழுத நேர்ந்தது – ஃபேஸ்புக்கில். ஆனால், முழுப்பதிலும் எழுதிய பின், அந்தப் பதிலே ஒரு பெரிய பதிவைப் போல் இருக்கவே, அதனை இங்கே பதிவாகவே போட்டுவிடலாம் என்று தோன்றியது. அவர்களின் கேள்விகள், அவற்றுக்கு எனது பதில்கள் என்ற வரிசைக்கிரமத்தில் கொடுத்திருக்கிறேன். இந்தப் பதில்கள், படங்களைப் பற்றிய எனது புரிதல் மட்டுமே. அவைகளைப் பற்றி நண்பர்களும் உங்களது கருத்துக்களைப் பின்னூட்டங்களில் எப்போதும்போல் எழுதலாம்.
கேள்வி 1 – நீங்க பார்க்க வேணாம்னு சொல்லியும் Climax பார்த்துட்டேன், Climax புரியவில்லை,கொஞ்சம் விளக்கம் கொடுக்க இயலுமா?
பதில் – தலைவா… அந்தக் க்ளைமேக்ஸுக்குப் பல அர்த்தங்கள் கொடுக்க முடியும்.. ரொம்ப லாஜிக்கலான அர்த்தத்தை இப்போது பார்க்கலாம்..
க்ளைமேக்ஸ் என்ன சொல்லுது? ஹ்யூன் ஷிக், ஒரு புதருக்குள் நுழைகிறான். காமெரா அன்ஸூம் ஆகிறது.. மெதுவே, அந்தப் புதர், படகில் இறந்து கிடக்கும் ஹீ ஜின்னின் Pubic hair… என்று நாம் அறிகிறோம்..
ரைட். இப்ப, இத அப்படியே அர்த்தப்படுத்திக்குறதுக்குப் பதில், கொஞ்சம் சிம்பாலிக்கா யோசிப்போம். ஏன்னா, கிம் கி டுக்கின் அத்தனை படங்களிலும், இந்த சிம்பாலிஸம் பெரும் பங்கு வகிக்கிறது..
நான் புரிஞ்சிக்கிட்டது என்னன்னா, தன்னோட தனிமையான வாழ்வை, போலீஸ் கிட்ட இருந்து தப்பிச்ச அந்த செகண்டில் மொத்தமாகத் தலைமுழுகும் ஹ்யூன் ஷிக், ஹீ ஜின்னுடன் தப்பித்து வந்த நொடி முதல், ஒரு புது வாழ்வில் நுழைகிறான். அதுதான் அவன் புதரில் நுழையும் சிம்பாலிஸம்.
அதுபோல், ஹீ ஜின் இறந்து கிடப்பது ஏனெனில், அவளது தனிமை வாழ்வும் இப்போது முடிந்துவிட்டது. ஹ்யூன் ஷிக் இனி அவளுடன் இருக்கப்போகிறான்.
இதான் நானு புரிஞ்சிக்கிட்டது. உங்களுக்கு வேற ஏதாவது தாட்ஸ் வந்தாலும் அத நீங்க ஷேர் பண்ணிக்கலாம்…
கேள்வி 2– நன்றி கருந்தேள்,எனக்கும் என்ன புரிஞ்சுதுனா ஹ்யூன் ஷிக் தன்னோட வாழ்கை ஹீ ஜின்னுடன் முடிஞ்சதுன்னு முடிவு பண்ணிட்டு அந்த புதரில் போய் நுழைகிறான்னுதான் புரிஞ்சது இருந்தாலும் படத்தோட முடிவ பார்த்துட்டு கொஞ்சம் தப்பா யோசிச்சுட்டேன். என்னக்கு என்னவோ கிம் கி டுக் பயங்கரமான SADIST னு தான் தோணுது, நீங்க என்னா நினைக்குறீங்க கிம் கி டுக் பற்றி?
கேள்வி 3 – ராஜேஷ் நீங்க 43:25 ஒரு காட்சிய மறந்துடீங்க…. ஒரு உடைந்த வண்டிய பாத்து ஹீ ஜின் அழுவா… அது என் ????
அப்புறம் கிளைமாக்ஸ்….உங்களோட கற்பனை 100… சாத்தியம்……(ஆனாலும் நீங்க ரொம்ப பாஸிடிவா யோசிக்கிறீங்க பாஸ் ). ஆனால் அவுங்களால கொல்லப்பட்டவர்களை போலீஸ் கண்டுபிடிக்கும் போது எங்கயும் ஓடி ஒளிய முடியாது… அதனால் அவுங்க திரும்பவும் தற்கொலைக்கு முயற்சி பண்ணிருக்கலாம்….அதனால் ஹீ ஜின் இறந்ததாகவும் ஹ்யூன் ஷிக் புதர்/pubic hair உள்ளே போவதாகவும் காட்டியிருக்கலாம்….ஹ்யூன் ஷிக்கினுடைய வாழ்க்கை ஒரு யோனியால் திசை மாறி மற்றொரு யோனியில் முடிந்ததாகவும் அர்த்தம் கொள்ளலாம்….ஆகமொத்ததுல தலைவர் சொல்ற மாதிரி சொல்லணும்னா
எச்சச்ச்ச கச்சச்ச்ச எச்சச்ச்ச ……….
?
பதில் – @ கேள்வி 2 – கிம் கி டுக் பயங்கர ஸாடிஸ்ட்டுன்னு உங்களுக்குத் தோணுது. இதுல என் கருத்து கேட்ருக்கீங்க.. ஆனா, நானு கருத்து சொன்னா, அப்பறம் நீங்க என்னோட சைட்டு பக்கமே வரமாட்டீங்கன்னு தோணுது ? .. எனிவே.. இதோ என் கருத்து.
கிம் கி டுக்கின் படங்கள்ல, பல Raw காட்சிகள் இடம்பெறும். பல வகையான பூடகமான ஷாட்களும் உண்டு. அதாவது, அவரோட பாலிஸி என்னன்னா, ஒரு திரைப்படத்தை ஒரு லட்டு மாதிரியோ குலோப்ஜாமூன் மாதிரியோ, அப்படியே
பார்வையாளனுக்கு ஒரு தட்டுல வெச்சி ஆஃபர் பண்ணக்கூடாதுங்கறதுதான்.
ஒருவர், அவரோட படத்தைப் பார்க்கணும்னா, மனசளவுல தானும் ஒரு எக்ஸ்பரிமெண்டேஷனுக்குத் தன்னைத் தயார் பண்ணிக்கினாத்தான் கிம் கி டுக்கின் படங்களை முழுமையா ரசிக்க முடியும். இல்லேன்னா, அம்போ !
இதுக்கு ஒரு உதாரணமா, எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு மிகப் பிரபலமான கிம் கி டுக் படத்தை எடுத்துக்கலாம். ‘Spring Summer fall winter and Spring’. இதுல, படம் ஆரம்பிக்கிறதுல இருந்து, முடியுற வரைக்கும் பல பூடகமான, சிம்பாலிகல் ஷாட்கள் உண்டு. அது, சாதாரணமா பாக்கும்போது, ‘என்னடாங்கொய்யாளே ஒரு மண்ணுமே பிரியலையே மாமு’ அப்புடீன்னு தோணும். ஆனால், படம் நிகழும் அந்தக் களத்தையும், அதன் பின்புலத்தையும் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, படத்தில் வரும் அந்த பிக்ஷுவையும் அந்த இளம் சீடனையும் பற்றி நாம் நமது புரிதலை வெளிப்படுத்த ஆரம்பிக்கையில், படம் விளங்கிவிடும்.
அதாவது – ரொம்ப சிம்பிள் இது – படத்துல ஒரு கேரக்டர் வருதா? ரைட்டு. படத்தில் காண்பிக்கப்படும் அந்தக் கதாபாத்திரத்தின் வசனங்கள், செய்கைகள் இவைகளை மட்டுமே நாம் பார்க்காமல், படத்தில் காண்பிக்கப்படாத விஷயங்களில் அந்தக் கதாபாத்திரம் எப்படி வாழ்ந்திருக்கும், எப்படி நடந்துகொண்டிருந்திருக்கும் அப்புடீங்குறதை நாம் நினைத்துப் பார்க்க ஆரம்பித்தால், படம் க்ளியர்.
ஒரு உதாரணத்துக்கு, இந்தப் படத்தில் வரும் இளம் சிஷ்யன், ஆசிரமத்தை விட்டு ஓடி, பல ஆண்டுகள் கழித்து வருகிறான். ஆனால், குரு இறந்திருக்கிறார். பின், அவனே பல கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, தானே குருவாகிறான். ஆனால், அந்தச் சமயத்தில், முதுகில் ஒரு மிகப்பெரிய கல்லைக் கட்டிக்கொண்டு, கஷ்டப்பட்டு மலையேறுகிறான். இது ஏன்?
இதற்கு, படத்தில் காண்பிக்கப்படாத அவனது வாழ்க்கையை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த வாழ்க்கையில் அவன் செய்த பாவங்களுக்கு பரிகாரம் என்று அவன் நினைப்பதே அந்தச் சம்பவம்(இதற்கு, படத்தின் ஆரம்பத்தில் வரும் – சில மிருகங்களை அவன் கொல்லும் காட்சி Reference). மட்டுமல்லாது, அவன் கண் முன்னே பனிக்குழியில் விழுந்து இறக்கும் ஒரு பெண்மணியின் சாவுக்கும் தானே காரணம் என்று அவன் நினைக்கிறான்.
இப்ப உங்க ஆதாரமான கேள்விக்கு வருவோம். கிம் கி டுக் ஸாடிஸ்டா?
ஒரு நிகழ்ச்சி நடக்குது. அதை அப்படியே பார்ப்பதை நீங்கள் விரும்புவீர்களா இல்லை அதனைப் பல போர்வைகள் போட்டு மறைத்து, அதன் சாரத்தை மட்டும் எந்தப் பாதிப்புமில்லாமல் சர்க்கரை தடவப்பட்ட வார்த்தைகளில் கேட்க விரும்புவீர்களா என்பதைப் பொறுத்தது இந்தக் கேள்விக்கு எனது பதில்.
கிம் கி டுக்கின் படங்களில், ஒரு நிகழ்ச்சி எந்த சினிமாத்தனமும் இல்லாமல் அப்படியே காட்டப்படும். ஒரு கிஸ் ஸீன் காமிக்கும்போது, சட்டென்று கட் செய்யப்பட்டு, இரண்டு பூக்கள் ஒட்டி உறவாடுவதைப் பார்த்தே பழகியவர்கள் நாம். தடாலென்று கிம் கி டுக்கின் படங்களைப் பார்க்கும்போது, மிகப்பெரிய பாதிப்பு கண்டிப்பாக நமக்குள் ஏற்படும்.
இதுதான் என்னோட ஸ்டான்ஸ். பர்சனலா சொல்லப்போனா, நானே ஒரு ஸாடிஸ்ட். ஒருவேளை, அதுனாலதான் கிம் கி டுக் படங்கள் எனக்குப் பிடிக்குதோ? ?
பதில் @ கேள்வி 3 – இப்ப உங்க கேள்விக்குப் பதில்.
நல்லா அப்ஸர்வ் பண்ணிக்கீறீங்கோ.உடைந்த வண்டியைப் பார்த்து ஹீ ஜின் அழுவது மட்டுமல்ல.. அவளது அறையில், மேஜைக்குள், ஒரு ஆடவனின் உடைகள் இருப்பதையும் நாம் பார்க்க முடியும்.ஆனால், இந்தப் படத்தில் இக்கேள்விகளுக்கு பதிலே இருக்காது. நாமே யோசித்துப் புரிந்துகொள்ள வேண்டியதுதான். அப்படி யோசிக்கையில், ஹீ-ஜின்னுக்கு யாரோ ஒரு ஆணுடன் பழக்கம் இருந்திருக்கலாம் என்றும், அது உடைந்துபோன ஒரு உறவாக மாறியிருக்கலாம் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல், ஹீ-ஜின்னிடம் ஒரு வெறித்தனமான வெளிப்பாடும் இருப்பதைப் படம் முழுக்க நாம் பார்க்கிறோம். ஒருவேளை அதனாலேயே, அந்த உறவு முறிந்திருக்கலாம் (அல்லது) அவளே அவனைக் கொன்றுவிட்டிருகலாம் – கொன்று ஆற்றில் மூழ்கடித்திருக்கலாம் என்பது போன்ற பல விஷயங்கள், நாம் நிதானமாக அமர்ந்து அவதானிக்கலாம் இப்படத்தில்.
இதைப்போலவே, கிம்மின் மற்றொரு படம் உண்டு.. அது, 3- Iron. அதில் வரும் பல காட்சிகள், நமது மண்டையை உடைக்கும். இந்த ஐல் எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ண வைக்கும். அதுபற்றியும் மிக விரைவில் எழுதுவேன் (என்னுடைய ஆங்கில வலைப்பூவில், சென்ற 2009 ஏப்ரலில் எழுதியிருக்கிறேன்).
இக்கேள்விகளைக் கேட்ட நண்பர்கள் keanu rivaz மற்றும் ஆனந்த் பாபு இருவருக்கும் நன்றி. அவர்களுமே அவர்களின் Interpretation ஃபேஸ்புக்கில் கொடுத்ததால் தான் இந்த உரையாடல் சாத்தியமானது. நண்பர்களும் அவர்களது கருத்துக்களைப் பின்னூட்டமாக எழுதலாம். இதன்மூலம், இப்படத்தைப் பற்றி ஒரு நல்ல Discussion இங்கே உருவாகிறது.
haiya 1st time me the 1st………….
// இதுதான் என்னோட ஸ்டான்ஸ். பர்சனலா சொல்லப்போனா, நானே ஒரு ஸாடிஸ்ட். ஒருவேளை, அதுனாலதான் கிம் கி டுக் படங்கள் எனக்குப் பிடிக்குதோ? 😉 //
எப்புடி பாசு இப்புடி எல்லாம் உங்களாலே படார்ன்னு போட்டு தாக்க / உடைக்க முடியுது
// இதைப்போலவே, கிம்மின் மற்றொரு படம் உண்டு.. அது, 3- Iron. அதில் வரும் பல காட்சிகள், நமது மண்டையை உடைக்கும். இந்த ஐல் எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ண வைக்கும். அதுபற்றியும் மிக விரைவில் எழுதுவேன் //
இன்னமுமா இதுக்கே தாங்க முடியலே
வேண்டாம் விட்டுடுங்க அழுதுடுவேன்
நல்லா அப்ஸர்வ் பண்ணிக்கீறீங்கோ
நண்பா பாலா,அறிவுத்தேடல் தளங்களைப் போலவே உங்கள் எழுத்துக்களையும் ஆச்சரியமாய் பார்த்து படித்து வருகின்றேன். காரணம் படங்கள் என்பது வருடத்தில் இரண்டு அல்லது மூன்று பார்ப்பது. அவ்வளவு தான். குழந்தைகள் கையில் சிக்காத போது இரவு நேரத்தில் ஸ்டார் மூவிஸ் பார்க்க புடிக்கும்.
நல்லா கவனிச்சுருக்கீங்க……… இப்படி எழுதினால் என்ன?
குறையாய் சொல்லவில்லை. பேச்சு வழக்கத்தில் வருவதை சற்று தொடக்கத்தில் சிரமப்பட்டு எழுதுவது கடினம். தான் முயற்சித்து பாருங்களேன்.
பாலா பின்னால கம்பு எடுத்துக்கிட்டு வந்தா நான் பொறுப்பல்ல……
நான் அந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை என்பதால் என்னால் பெரிய அளவில் இந்த கருத்து பரிமாற்றத்தில் பங்கேற்க முடியவில்லை. கிம்முடைய படங்களில் நான் பார்த்தது ஒன்றே ஒன்றுதான். நண்பர் செழி அறிமுகப்படுத்தி பார்க்கவைத்த “ஸ்பிரிங் சம்மர் பால் விண்டர்” தான்.
இந்த படமே கொடூரம் என்றால் நண்பர்கள் பார்க் சான் வூக்கின் பழிவாங்குதல் ட்ரிலஜி பற்றி என்ன சொல்வார்கள்?
நண்பா,
அருமையான கேள்விகேட்ட நண்பர்களுக்கும்,அதற்கு பதிவாக போட்டு பதிலளித்த உங்களுக்கும் நன்றி.இதியே கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்.
@ஜோதிஜி,
தலைவெரே,
கருந்தேளின் முத்திரையே அந்த ஸ்லாங் தான்
அதைபோயா மாற்றசொல்லுவீர்கள்?
நான் இதை வன்மையாய் கண்டிக்கித்து வெளியேறுகிறேன்:))
கிங் விஸ்வா சொன்னதுபோல “ஸ்பிரிங் சம்மர் பால் விண்டர்” கிம்கிடுக்கின் உச்ச படைப்பு.
நண்பா அப்போ நான் ஒரு சைக்கோ எனபதையும் இங்கே பதிவு செய்கிறேன்:))
சூப்பரான படத்தைப் பத்தி சூப்பரான டிஸ்கசன் போயிட்டு இருக்குன்னு மட்டும்தான் புரியுது… ஆனா, இந்த படம் நான் பார்த்ததில்லையே… 🙁 அதுனால பார்த்துட்டு வந்து பேசிக்கறேன்… நெக்ஸ்ட் மீட் பண்றேன்…
நண்பரே,
இப்படைப்பை நானின்னமும் பார்க்கவில்லை என்பதால், தங்கள் விவாதத்தை படித்து மகிழ்வதுடன் உவகை எய்கிறேன். நல்லதொரு பகிர்வு.
கிம் கி டுக்-கின் ”Bad Guy” படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் கூட வெளிப்படுவது சாடிஸம் தான் என்று எண்ணத்தோன்றுகிறது. ஒரு அப்பாவிப் பெண்ணை விபச்சாரியாக மாற்றி, அவள் அனுபவிக்கப்படுவதை அணு அணுவாக ரசிக்கும் ஒரு பொறுக்கியின் வாழ்க்கையைப் படமாக்குவதின் தேவை தான் என்ன? இதன் மூலம் கிம் கி டுக் சொல்லவருவது என்னவோ?
அல்லோ அல்லா மைக் ஒன்னு ரெண்டு மூணு
பின்னூட்ட புயல் பாலா மேடைக்கு வரவும்.
அறிவு வந்தாச்சு, நம்ம சுற்றமெல்லாம் வந்தாச்சு. வாங்க ராசா
@ கீதப்பிரியன்
//நண்பா அப்போ நான் ஒரு சைக்கோ எனபதையும் இங்கே பதிவு செய்கிறேன்:)) //
பூனை வெளியே வருது. என்கவுண்டர் பண்ணிற வேண்டிதான். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@மயில் ராவணன்,
ஓ பண்ணலாமே!!!சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ற இடத்தில சொன்னா,யாரு யாரை என்கவுண்டர் பண்ணுவாங்கன்னு தெரியும்பு.என்ன நண்பா கருந்தேள் சரிதானே?:))
பூன வந்திச்சி ,பால குடிச்சிச்சின்னு,என்னா இது? விளையாட்டு?;)பதிவு போட்டா ஓலைய அனுப்பனும்?வச்சிக்கிரேன் இரும்.
லாகின் ஆகல நண்பா
//நண்பா அப்போ நான் ஒரு சைக்கோ எனபதையும் இங்கே பதிவு செய்கிறேன்:)//
மன்னிக்கவும் நானும் ஒரு சைக்கோ என பதிவு செய்யவும்…. பின்ன என்னப்பா இங்க ஒரு வருசை கீறது தெர்ல…உங்களோட ஒரே கொடச்சலா இருக்குது பா… 😉
அப்புறம் சாமீ நீங்க துபாயா??? அபுதாபியா??? தேளு நீங்க இங்கதான் கீறிங்கன்னாரு…
@மாயாவி,
நண்பா நீங்க தானா அது ஜிமெயில்ல ஆட் பண்ண சொன்னது,ரைட்டு,!!!நான் ஷார்ஜாங்கோவ்!!
இங்க தான் ரிசெஷன் சுழல்ல தள்ளாடிக்கிட்டிருக்கேன்.நீங்க எங்கன?
நான் உன்மையிலேயே பிசிக்கோ தாங்க,சொன்னாலும் நம்பமாட்றீங்க?:)
ரொம்ப சிம்பிள் இது – படத்துல ஒரு கேரக்டர் வருதா? ரைட்டு. படத்தில் காண்பிக்கப்படும் அந்தக் கதாபாத்திரத்தின் வசனங்கள், செய்கைகள் இவைகளை மட்டுமே நாம் பார்க்காமல், படத்தில் காண்பிக்கப்படாத விஷயங்களில் அந்தக் கதாபாத்திரம் எப்படி வாழ்ந்திருக்கும், எப்படி நடந்துகொண்டிருந்திருக்கும் அப்புடீங்குறதை நாம் நினைத்துப் பார்க்க ஆரம்பித்தால், படம் க்ளியர்.”
ஹீ ஜின்னின் செயலால் ஹ்யூன் ஷிக் ரொம்ப கோவம் வந்து மீன்களனா புடிச்சி கொல்லுவான் அப்ப பாதி உடல் வெட்டப்பட்ட அந்த பச்சை மீன் [சுஷி] ய மட்டும் வெட்டாம மறுபடியும் தண்ணீர்ல விடுவான் அப்ப மட்டும் நீங்க சொன்ன மாதிரி அந்த மீனோட வலி நிறைந்த வாழ்நாட்களை தான் பீல் பண்ணினேன் ஆனா மற்ற கதாபாத்திரங்களை அந்த மாதிரி நான் பீல் பண்ணல, அது என்னோட Technical Fault. கிம் கி டுக் அந்த ஒரு காட்சில அவரோட [கருந்தேள்] எண்ணத்தினை ஹ்யூன் ஷிக் கதாபாத்திரம் மூலமாக நம்மக்கு சொல்லுறார்னு ரொம்ப சிரமப்பட்டுத்தான் தெரிஞ்சுகிட்டேன்.
மீனுக்கு காக கூட பீல் பண்ணும் நம்ம கிம் கி டுக் கண்டிப்பா SADIST கிடையாது கருந்தேள்.
தல,இந்தப் படத்த பார்த்துட்டு,அதுக்கு பின்னாடி தான் இத படிக்கணும்னு முடிவுல இருக்கேன்.அதனால உங்க கேள்வி பதில படிக்கலை.
அப்புறம்,3 iron பத்தி,நீங்க சொன்னது ரொம்ப சரி.படம் என்ன சொல்ல வருதுன்னே முதல்ல எனக்கு புரியல.அப்புறம்,மறுபடியும் பார்த்து புரிஞ்சுகிட்டேன்.
சீக்கிரம் பதிவ போடுங்க.காதலரும் சந்தோசப்படுவாரு… 🙂
கருந்தேள்,
உங்க புரோபைல் போட்டோவுல வேற யாரோட படமோ இருக்கு. கொஞ்சம் கவனிங்க. 🙂
யாருப்பா அது என்னை வம்புக்கு இழுக்கறது. கிம்கி, டம்கி எல்லாம் தெரியாதனாலதானே நான் சைலண்டா இருந்தேன்.
இப்படி வெளிப்படையா சொல்ல வச்ச ஜோதிஜி.. ஒழிக ஒழிக!!
ஒருவர், அவரோட படத்தைப் பார்க்கணும்னா, மனசளவுல தானும் ஒரு எக்ஸ்பரிமெண்டேஷனுக்குத் தன்னைத் தயார் பண்ணிக்கினாத்தான் கிம் கி டுக்கின் படங்களை முழுமையா ரசிக்க முடியும். ///
ஒரளவு சரிதான். யோசிக்க வைப்பதிலும்ம் கொஞ்சம் குழப்பிடுவதில் அதீத கெட்டிக்காரர்.
ஆனால் கிம்மிடம் உங்கள் படங்கள் மற்ற படங்களுடன் compare பண்ண முடியாத மோசமானவையாக இருக்கிறதே என்று கேட்க..
“பன்றிக்கும் முத்துகளுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டாராம்…. !!!
எது முத்து .. ? எது பன்றி என்று நீங்கள் தான் முடிவு செய்யணும் என்று தன் விமர்சனகாரர்களையும் வித்தியாசாமாய் விமர்சித்தவர்.
‘Birdscage Inn’ மற்றும் Bad Guy பார்த்து இருக்கிறீர்களா? அதில் இருக்கும் வன்முறை, காமம், குரோதம், எல்லாவற்றையும் மீறிய அன்பு இப்படித் தான் இருக்கிறது வாழ்க்கை. இப்படித்தான் படம் எடுக்க முடிகிறது கிம் கி டுக்கினால். எனக்குப் பிடித்த இயக்குனர்களின் வரிசையில் கிம் முதல் மூன்று இடங்களில் இருக்கிறார். ;))) தெளிவான விளக்கங்கள் Scorp..
🙂 உமாஷக்தி.. உங்களுக்கு மனங்களைப் படித்தறியும் ஆற்றல் இருக்கிறதா என்ன ? 🙂
இதற்குமேல் உங்கள் பின்னூட்டத்துக்குப் பதில் தரமாட்டேன்.. 🙂 விரைவில் என் தளத்தில் காணலாம் 🙂 ஹாஹ்ஹா.. 🙂
எனக்கும் கிம் கி டுக் அதே இடங்களில் தான் இருக்கிறார் 🙂 கருத்துக்கு நன்றி ..
Thala kim ki duk padangalil best of best nu etha solvinga????????????
Absolutely it’s the ‘Spring Summer Fall winter and Spring’ film boss. I loved it. Also ‘Samaritan Girl’ and ‘3-Iron’ will be great.