Jack Reacher: The series

by Karundhel Rajesh November 21, 2015   Book Reviews

‘Cutting a throat doesn’t take much time. Given a decent blade and enough weight and force, it takes as long as it takes to move your hand eight inches. That’s all’ – Jack Reacher

’Jack Reacher’ என்ற பெயரில் டாம் க்ரூஸ் நடித்த படம் ஒன்று வந்திருப்பது தெரிந்திருக்கும். அதில் வரும் ஜாக் ரீச்சர் கதாபாத்திரம், இதுவரை 20 நாவல்களில் இடம் பெற்றுள்ளது. உலகெங்கும் சூப்பர்ஹிட்டாக விற்றுக்கொண்டிருக்கும் நாவல் வரிசை இது. தற்காலத்தில் பல நாடுகளில் மிகப் பிரபலமாக விளங்கும் கதாபாத்திரம். சென்ற மாதம் முழுக்க இந்த இருபது நாவல்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். ஒரு பிரயாணத்தின்போது ஜாக் ரீச்சரின் ஒரு நாவல் அடங்கிய (61 Hours) ரீடர்ஸ் டைஜெஸ்ட் தொகுப்பு ஒன்று கிடைத்தது. அசுவாரஸ்யமாக அதைப் படிக்க ஆரம்பித்து, பின்னர் அந்த நாவல் அட்டகாசமாக இருந்ததால் எல்லா ஜாக் ரீச்சர் புத்தகங்களையும் தேடிப்பிடித்துப் படித்துமுடித்துவிட்டேன். இதற்கு எனக்கு ஒரு மாதம் ஆனது. சராசரியாக ஒண்ணரை நாட்களுக்கு ஒரு நாவல். இந்த நாவல்களைப் படித்த காலகட்டத்தில் வேறு எதுவுமே செய்யவில்லை. இத்தனை சுவாரஸ்யமாக ஒரு நாவல் சீரீஸை இதற்கு முன்னர் படித்தது, Lord of the Rings & Harry Potter series படித்தபோதுதான். அவைகளும் விரைவில் முடிந்துவிட்டன. இருபது புத்தகங்கள் என்பது மிகவும் ஜாலியான ஒரு அனுபவத்தைக் கொடுத்தது.

Lee child

இவற்றை எழுதியவர் லீ சைல்ட் (Lee Child). இவரது இயற்பெயர் ஜிம் க்ராண்ட். 1977 முதல் 1995 வரை பதினெட்டு வருடங்கள் க்ரானடா டெலிவிஷன் என்ற இங்லாண்ட் நிறுவனத்தில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குப் பின்னணியில் உழைத்தார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் விளம்பரங்களுக்கும் ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கிறார். பதினெட்டு வருடம் உழைத்தவரை ஒருநாள் தொலைக்காட்சி நிர்வாகம் அழைத்து, வேலையை விட்டு விலகச்சொல்லிவிட்டது. அதிர்ச்சியடைந்தாலும், வேறு வழியில்லாததால், தனக்குத் தெரிந்த ஒரே தொழிலை விட்டுவிட்டு வீடு சேர்ந்தார் க்ராண்ட். உடனேயே நாவல் எழுதவேண்டும் என்ற எண்ணம் எழுந்ததாகச் சொல்லியிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் அவர் எழுதி முடித்த நாவல், கில்லிங் ஃப்ளோர் (Killing Floor). லீ சைல்ட் என்ற புனைப்பெயரில் எழுதினார். இதில்தான் ஜாக் ரீச்சர் என்ற ஹீரோவை அறிமுகம் செய்தார். இந்நாவல் 1997ல் வெளியிடப்பட்டது. சிறந்த முதல் நாவலுக்கான ஆண்டனி மற்றும் பெர்ரி விருதுகள் கிடைத்தன. நாவல் வெற்றியடைந்ததால் அமெரிக்காவுக்கு 1998ல் குடிபெயர்ந்தார். பின்னர் வருடம் ஒரு ஜாக் ரீச்சர் நாவல் என்று எழுத ஆரம்பித்தவர், இந்த 2015ல் இருபதாவது நாவலை வெளியிட்டிருக்கிறார். எல்லா நாவல்களும் பிய்த்துக்கொண்டு விற்பனையாகின்றன. பல்ப் உலகில் லீ சைல்ட் இப்போது முக்கியமான புள்ளி. உலகெங்கும் பிரபலமானவர். ஹாரி பாட்டர் எழுதிய ஜே.கே. ரௌலிங் போல இவருக்கும் உலகம் முழுக்க வெறிபிடித்த வாசகர்கள் உண்டு.

ஜாக் ரீச்சர் கதாபாத்திரத்தைத் தன்னை வைத்தே லீ சைல்ட் எழுதியுள்ளார். தனக்குப் பிடித்தமான பல அம்சங்கள் ஜாக் ரீச்சருக்கும் பிடிக்கும்வகையில் எழுதியிருப்பார்.

பல்ப் உலகில் எக்கச்சக்க நாவல்கள் உண்டு. இருந்தாலும் ஜாக் ரீச்சரில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று யோசித்தால், பல சுவாரஸ்யமான அம்சங்கள் இந்தக் கதாபாத்திரத்துக்கு உண்டு.

  • ஜாக் ரீச்சர், அமெரிக்க ராணுவத்தில் பதிமூன்று வருடங்கள் போலீஸ் வேலை பார்த்தவன் (Military Police). ராணுவத்தில் மிகச்சிறந்த சேவை செய்ததற்கான பல மெடல்கள் வாங்கியவன். ராணுவத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் வேலையை விட்டுத் தூக்கப்பட்டவன் (அச்சமயத்தில் இவனது Designation, Major). தனி ஆள். காதலி, சொந்தம், பந்தம் என்று யாரும் இல்லை. ஒரே ஒரு அண்ணன் உண்டு. அம்மா இறந்தாயிற்று. வீடு இல்லை.
  • ஆறடி ஐந்தங்குலம் உயரம். கிட்டத்தட்ட 100 கிலோ எடை. உறுதியான உடல். மிகவும் பலசாலி.
  • ஜாக் ரீச்சர் எந்த இடத்திலும் அதிக நாட்கள் தங்குவதில்லை. எப்போதுமே பயணித்துக்கொண்டே இருக்கும் நபர். அந்தந்த ஊர்களில் பிழைப்புக்கு ஏதேனும் வேலை கிடைத்தால் செய்வான். நண்பர்கள் இல்லை. அந்தந்த ஊர்களில் பரிச்சயம் ஆனவர்கள்தான் அப்போதைய நண்பர்கள். யாருடனும் அளவுக்கு அதிகமாக நட்பு பாராட்டமாட்டான்.
  • சண்டைகளில் பின்வாங்கியதே இல்லை. எப்போதும் எதிராளியை நோக்கி இரண்டு அல்லது மூன்று அடிகள் மட்டுமே கொடுப்பது வழக்கம். அதற்குள்ளேயே எதிராளி மண்ணைக் கவ்விவிடுவது வழக்கம் (ஒரே ஒரு கதையில் மட்டும், எதிராளியிடம் மூக்கு உடைபட்டது உண்டு – Worth Dying For நாவலில்). துப்பாக்கி சுடுவதிலும் ஆயுதங்கள் கையாளுவதிலும் மிகச்சிறந்தவன். மனித உடலில் எங்கெங்கு எப்படியெல்லாம் வலிக்கும் என்ற கலையில் கில்லாடி. பொதுவாக, எதிர்பாராதபோது Headbutt – நெற்றியால் எதிராளியின் முகத்தைத் தாக்குவது இவனது முத்திரை Movement.
  • பல்வேறு விதமான எதிரிகள் இவனுக்கு உண்டு. பொதுவாக இவனது சாகஸங்கள், இவன் எதோ ஒரு ஊருக்குப் போவது, அங்கே இவன் கண்முன்னால் ஏதேனும் பிரச்னை நடப்பது, அதில் இவன் தலையிடுவது, அதிலிருந்து தலைவலி துவங்குவது என்றேதான் இருக்கும்.
  • மிகவும் புத்திசாலி. Survival of the Fittest என்பதற்குக் கச்சிதமான உதாரணம் ஜாக் ரீச்சர்தான். கிட்டத்தட்ட ஷெர்லக் ஹோம்ஸும் டெர்மினேட்டரும் ஒரே உடலில் இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் ஜாக் ரீச்சர்.
  • காஃபி அடிக்ட். சர்க்கரையோ பாலோ இல்லாத Black Coffee என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாளுக்கு எக்கச்சக்க கோப்பைகள் ப்ளாக் காஃபி அருந்துவான். நன்றாக சாப்பிடுவான்.
  • அந்தந்தக் கதையில் இடம்பெறும் பெண்கள்தான் அவ்வப்போது இவனது கேர்ல்ஃப்ரெண்ட்கள். ஒரு கட்டத்தில் ஒரே பெண்ணைத் தேடி அலைந்தது உண்டு (61 Hours, Worth Dying For, A Wanted Man, Never GO Back ஆகிய கதைகள்).
  • ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு ஜாக் ரீச்சர் ஃப்ளைட்டில் போவதில்லை. பொதுவாக, Hitchhike செய்து செல்வதுதான் வழக்கம். அட்ரஸ் ப்ரூஃப் அவனிடம் இல்லை. ஒரே ஒரு பாஸ்போர்ட்டை மட்டும் (எக்ஸ்பையர் ஆனது) வைத்துக்கொண்டு சுற்றுவான். அதுவும் 9/11க்குப் பின்னரே. எல்லா இடங்களிலும் பரிசோதனைகள் நடப்பதுதான் காரணம். இந்தப் பாஸ்போர்ட்டைத் தவிர, அவனது ஒரே உடைமை, அவனிடம் இருக்கும் ஒரு Foldable toothbrush. உடைகள், பொருட்கள் ஆகிய எதையும் கொண்டுசெல்வதில்லை.
  • ஒரு உடையை அணிந்த சில தினங்களில் அவற்றைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு  புதிதாக உடைகள் வாங்கி அணிவான். அதன்பின் மறுபடியும் இது தொடரும். இதற்கு ஜாக் ரீச்சர் கொடுக்கும் லாஜிக் ஜாலியானது. உடைகளை வாங்கிச் சேமித்து வைக்க ஒரு சூட்கேஸ் தேவைப்படும். சூட்கேஸ் வந்தால் உடனடியாக சில பொருட்கள் தேவைப்படும். பொருட்களை வைக்க வீடு தேவை. வீடு என்றால் வங்கியில் கடன் தேவை. கடன் வாங்கியால் அதற்கான வேலை தேவை. இப்படி வாழ்க்கை முழுதும் அடிமையாக எதையோ தேடிக்கொண்டு வங்கிக்குப் பணம் கொடுப்பதற்காக வாழுவது அவனால் முடியாது. அந்த செலவை ஒப்பிட்டால், வாரம் இரண்டு உடைகள் புதிதாக வாங்கி எறிவது எவ்வளவோ மேல். இதனாலேயே Sherlock Homeless என்றே ஜாக் ரீச்சரை ஒரு கதாபாத்திரம் அழைக்கிறது.

ஜாக் ரீச்சர் நாவல்களில், அவன் செய்யும் சாகஸங்களெல்லாம் என்னை அதிகம் கவரவில்லை. என்னைக் கவர்ந்தவை என்னவென்றால், எந்த இடத்துக்கும் ஜாக் ரீச்சர் செல்கையில் அந்த இடத்தைப் பற்றிய அவனது அவதானிப்புகளே. மிகவும் தனிப்பட்ட முறையில், அந்த இடத்துக்கே நாம் சென்றுவந்ததைப் போலவே விவரிப்பு இருக்கும். அதேபோல் இவற்றில் பல நாவல்கள் ஜாக் ரீச்சரே சொல்வதுபோன்ற முறையில் எழுதப்பட்டிருக்கும். அது இன்னும் ஒரு பர்ஸனல் டச்சை அளிக்கும்.

ஜாக் ரீச்சருக்கென்று சில கொள்கைகள் உண்டு. அவை:

Rule 1. If in doubt drink coffee
Rule 2. Never volunteer for anything. Soldier’s basic rule.
Rule 3. Don’t break the furniture
Rule 4. Only have one woman at a time
Rule 5. Be on your feet and ready
Rule 6. Show them what they’re messing with

இதுபோன்ற விதிகளை விபரமாக விளக்கி ஒரு புத்தகமே உண்டு (Jack Reacher’s Rules). இதில், ஜாக் ரீச்சர் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும் அவனுக்குள் இருக்கும் விதிகள் எல்லாமே விரிவாக விளக்கப்படுகின்றன. ஒரு உதாரணத்துக்கு ஒரே ஒரு விஷயத்தை கவனிப்போம்.

Fighting

  • Hit early, hit hard.
  • Stand with your back to the sun so that it’s in your enemy’s eyes.
  • Make the first shot count.
  • Get your retaliation in first; show them who they’re dealing with.
  • Say you’ll count to three—then throw your punch at two.
  • Never revive a guy who has just pulled a gun on you.
  • Train yourself to use aggression in the face of danger.
  • When confronted by two or more opponents, know that the one who does all the talking is the leader. Hit him first and hit him hard; then the others will think twice.
  • Cheat. The gentlemen who behaved decently aren’t there to train anybody. They are already dead.
  • If plan A doesn’t work, move on to plan B.
  • If you have to fight five guys, then identify the ringleader. Any five guys will have one ringleader, two enthusiastic followers, and two reluctant followers. Put the ringleader down, and both of the keen sidekicks, and it’s over. The reluctant pair just run for it. It never gets worse than three-on-one.
  • Look at each opponent in turn. Serene self-confidence works wonders.
  • Try not to get into a fight when you’ve just put on clean clothes.
  • Stay alive, and see what the next minute brings.
  • Never get distracted from the job at hand.
  • Use the first precious second for the first precious blow. Fight, and win. Fight, and win.
  • Don’t think ahead—if you think about the aftermath, you usually don’t get that far.
  • Make the first shot count.
  • Look like you mean it, and people back off a lot.

FIGHTING TIPS

  • When you pull the gun, from that point on it’s all or nothing.
  • The best fights are the ones you don’t have.
  • Be on your feet and ready.
  • Assess and evaluate.
  • Show them what they’re messing with.
  • Identify the ringleader.
  • The ringleader is the one who always moves first.
  • Act, don’t react.
  • Never back off.
  • Don’t break the furniture.

இவைதான் ஜாக் ரீச்சர் சண்டையிடுவதில் கடைபிடிக்கும் வழிமுறைகள். இதுதவிர, அத்துமீறி வீடுகளுக்குள் நுழைவது, ஆயுதங்களைத் தேர்வு செய்வது, சாப்பாடு, காஃபி, முதலுதவி, கைகுலுக்குவது எப்படி, பொய்யர்களை எப்படிக் கண்டுபிடிப்பது, ஒரு மனித வெடிகுண்டைக் காட்டிக்கொடுக்கும் பன்னிரண்டு விஷயங்கள், உடலைப் பராமரித்தல், பயணம் செய்தல், பெண்கள் என்று எக்கச்சக்க அம்சங்களில் ரீச்சருக்குத் தெளிவான விதிகள் உண்டு. 20 நாவல்களில் ஆங்காங்கே அவன் சொல்வதையெல்லாம் தொகுத்து இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. நமக்கே இவை மிகவும் உதவும்.

ஜாக் ரீச்சரின் நாவல்கள் இதுவரை 20 வந்திருக்கின்றன என்று பார்த்தோம். அவற்றில் எதுவெல்லாம் அட்டகாசம்? எவையெல்லாம் மொக்கை என்று பார்த்தால், இதோ எனது சுருக்கமான கருத்து.

Killing Floor – Fantastic
Die Trying – Average
Tripwire – Good
Running Blind – Fantastic
Echo Burning – Good
Without Fail – Fantastic
Persuader – Average
The Enemy – Good
One Shot – Good (திரைப்படமாக வந்த Jack Reacher படம், இந்நாவலைத் தழுவியதுதான்)
The Hard Way – Average
Bad Luck And Trouble – Good
Nothing To Lose – Average
Gone Tomorrow – Average
61 Hours – Fantastic
Worth Dying For – Fantastic
The Affair – Good
A Wanted Man – Fantastic (ஆனால் பாதிக்கு மேல் கொஞ்சம் இழுவை)
Never Go Back – Average
Personal – Good
Make Me – Average

இதே வரிசையில், படிக்க விரும்பும் நண்பர்கள் படித்தால் ஜாக் ரீச்சர் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆவரேஜ் நாவல்களைக் கடைசியில் படிக்கலாம்.

ஜாக் ரீச்சரின் ஆவரேஜ் நாவல்களில் கூட,கையில் எடுத்தால் கீழே வைக்கமுடியாத சுவாரஸ்யமான பக்கங்கள் உண்டு. இது உண்மையில் அட்டகாசமான ஒரு கலைதான். அதைத் தொடர்ந்து 20 வருடங்களாகச் செய்துகொண்டிருக்கும் லீ சைல்ட் ஆச்சரியமான நபரே. எக்கச்சக்கமாகப் பணம் கிடைத்தாலும், மிக விரைவில் ஜாக் ரீச்சரைக் கொன்றுவிட்டு, ஏகாந்தமாக ஒரு வீட்டைப் பார்த்துக்கொண்டு குடிபுகப்போவதாகவும் சொல்லியிருக்கிறார். உங்களுக்கு ஜாலியான, சுவாரஸ்யமான, விறுவிறுப்பான நாவல்கள் வேண்டும் என்றால் நீங்கள் முதலில் படிக்கவேண்டியது ஜாக் ரீச்சர் சீரீஸ் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. படித்துப் பாருங்கள்.

பி.கு

1. திரைப்படமாக ஜாக் ரீச்சரை எடுக்கையில், அவனது ஆகிருதியான உடல் என்பதைக் காவுகொடுத்துவிட்டனர். காரனம், அப்படி ஒரு சூப்பர்ஸ்டார் ஹாலிவுட்டில் இல்லாததே. இதனாலேயே டாம் க்ரூஸ் தேர்வுசெய்யப்பட்டார். இதை லீ சைல்ட் ஜஸ்டிஃபை செய்தாலும், தனிப்பட்ட முறையில் எனக்கு அப்படம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. எம்.ஜி.ஆர் நடிக்கவேண்டிய ஒரு கதாபாத்திரத்தில் ஜெய் நடித்தால் எப்படி இருக்கும்?

2. எந்த வேலையும் செய்யாமல், குளிக்காமல் கொள்ளாமல் ஒரு Nomad போல ஒரு மூட் செட் செய்துகொண்டுதான் ஒரு மாதம் முழுக்க ஜாக் ரீச்சரைப் படித்தேன். நானே ஜாக் ரீச்சர் ஆகிவிட்டதுபோல இருந்தது. இப்படிப் படிக்க முயற்சி செய்துபாருங்கள்.

  Comments

6 Comments

  1. Ram Sridhar

    லீ சைல்ட் புத்தகங்கள் பற்றிய அலசல் அருமை. நானும் எல்லா புத்தகங்களையும் படித்துவிட்டேன். ஒரே மூச்சில் இல்லை. அவ்வப்போது வெளியாகும் போது வாங்கி படித்திருக்கிறேன். எந்த ஒரு நாவலையும் திருப்திகரமாக படம் எடுக்க முடியாது. இப்போது இரண்டாவது படமாக Never Look Back நாவலைத்தான் அதே Tom Cruise-ஐ படமாக்குகிறார்கள். நீங்கள் சொன்னதுபோல ஜாக் ரீச்சர் பாத்திரத்துக்கு இப்போதுள்ள எந்த ஹாலிவுட் நடிகரும் பொருந்த மாட்டார்கள். எனவே, Tom Cruise பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். முதல் படம் (ஜாக் ரீச்சர்-One Shot நாவலைத் தழுவி எடுத்தது) வருவதற்கு முன் ஜாக் ரீச்சராக Tom Cruise-ஆ என்று அமெரிக்காவில் கலாய்த்து தள்ளிவிட்டார்கள். படம் வந்த பிறகு அது குறைந்துவிட்டது (எழுத்தாளர் லீ சைல்ட் ஒரே ஒரு சீனில் தலை காட்டியிருப்பார்). இப்போது இரண்டாவது படம் எப்படியிருக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

    Reply
  2. Tamil

    Jack Reacher சுபாவின் கதாபாத்திரமான செல்வா உடன் ஒத்து போகிறது சரியா?

    தனியனாய் வாழ்வது,
    முன்னாள் ராணுவ வீரன்,
    சாகச காரன்,
    நிலையான காதலி இல்லாதது

    இன்னும் பல

    Reply
    • Ramesh Vasudevan

      ஆமாம் ஒத்து போகிறது…எனக்கு செல்வா முருகேஷ் பங்கு பெற்ற நாவல்கள் ரொம்ப பிடிக்கும்..சுபாவின் இந்த நாவல்கள் அனைத்தும் ஜனரஞ்சககமானவை …ஆனா இங்க அந்த மாதிரி நாவல்களை சுவாரசியமான் படம் ஆக எடுக்க ஆள் இல்லை….

      Reply
  3. Ramesh Vasudevan

    நண்பா பதிவு அருமை…இந்த ஸீரீஸ் கிராபிக் நாவல் ஆக வந்துள்ளதா?…எனக்கு உங்களை போல் கிராபிக் மற்றும் காமிக்ஸ் வகைகள் தான் முதல் தேர்வாகா இருக்கிறது…..

    Reply
  4. prasanna

    Please translates jack reachers books in Tamil language

    Reply
    • I would most definitely love to. But it would need money from the publishers to buy the rights, and to play me as a translator. As far as I know, from the peanuts they pay to translate, it’s a very tough job to do so boss. That’s the sad truth 🙁

      Reply

Join the conversation