காவியத்தலைவன் (2014) – Review

by Karundhel Rajesh November 28, 2014   Tamil cinema

கே.பி. சுந்தராம்பாளின் கதையையும் எஸ்.ஜி.கிட்டப்பாவின் கதையையும் சற்றே மாறுபட்ட கற்பனை கலந்த கோணத்தில் அளித்திருப்பதே ‘காவியத் தலைவன்’. படத்தைப் பற்றி எழுதுமுன்னர் படிப்பவர்களுக்கு ஒரு சிறிய அஸைன்மெண்ட். படத்தைப் பார்க்குமுன்னரோ பார்த்தபின்னரோ ’தீராக்காதலி’ என்று சாரு எழுதியிருக்கும் புத்தகத்தையும் (உயிர்மை பதிப்பகம்), ’கொடுமுடி கோகிலம் சுந்தராம்பாள் வரலாறு’ என்ற சோழநாடன் எழுதிய புத்தகத்தையும் (ரிஷபம் பதிப்பகம்) வாங்கிப் படித்துப்பாருங்கள். காரணம் எளிது. நமக்கெல்லாம் இங்லீஷ் க்ளாஸிக் பாடல்களைப் பற்றித் தெரியும். இங்லீஷில் வெளிவந்த நுவார் படங்கள், ஆதிகாலத்திய படங்கள் போன்றவையெல்லாம் அத்துபடி. ஆனால் தமிழில் வந்திருக்கும் பழைய படங்கள் பற்றிக் கேட்டால் பலருக்கும் தெரிவதில்லைதானே? தமிழ்க் கலையுலகுக்கு ஒரு பிரகாசமான வரலாறு உள்ளது. அதில் எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், எம்.கே. தியாகராஜ பாகவதர், சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் ராஜமாணிக்கம், கன்னையா, மதுரகவி பாஸ்கரதாஸ், உடுமலை முத்துசாமிக் கவிராயர், எம்.எஸ் விஸ்வநாததாஸ் போன்ற பல கதாபாத்திரங்கள் உண்டு. ஒவ்வொருவரின் வாழ்க்கையுமே மிகவும் சுவையானது.

மிகமிகச் சுருக்கமாக எஸ்.ஜி. கிட்டப்பாவின் வாழ்க்கையைக் கவனித்தால், 1906 ஆகஸ்ட்டில் பிறந்திருக்கிறார். கிட்டப்பாவின் அண்ணன்கள் சுப்பையாவும் செல்லப்பாவும் சிறு வயதிலேயே பிச்சையெடுத்தே உணவு உண்ணும் நிலையில் இருந்ததாகவே கிட்டப்பாவைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அவர்களது தந்தையின் பெயர், கங்காதர ஐயர். அக்காலத்தில் இருந்த பாய்ஸ் நாடகக் கம்பெனிகளில் சுப்பையாவும் செல்லப்பாவும் நடித்து வந்திருக்கின்றனர். அவர்களுடனே கங்காதர ஐயரும் கிட்டப்பாவும் இருந்திருக்கின்றனர். அப்போது சங்கரதாஸ் சுவாமிகள்தான் கிட்டப்பாவுக்குப் பாடல்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று அறிகிறோம். மிகச்சிறு வயதில் இருந்தே கிட்டப்பாவின் குரல்வளம் கேட்பவர்களை மெய்மறக்கச் செய்திருக்கிறது. ஆறு வயதில் சிங்கப்பூர் பயணப்பட்ட கிட்டப்பாவும் சகோதரர்களும், அங்கே பல நாடகங்கள் நடித்துப் புகழ்பெற்றுப் பின்னர் தென்னிந்தியாவுக்கும் (அப்போதைய) ஸிலோனுக்கும் பயணப்பட்டிருக்கின்றனர். இதன்பின்னர்தான் கன்னையா நாயுடுவின் சென்னை ஹிந்து வினோத நாடக சபாவில் சேர்ந்து சூப்பர்ஸ்டாராக விளங்கியிருக்கிறார் கிட்டப்பா.

அப்போதுதான் 1926ல் மறுபடி கொழும்புவுக்குச் செல்கிறார் கிட்டப்பா. அங்கே ஒரு பிரபலமான நாடக நடிகையைப் பற்றிக் கேள்விப்படுகிறார். பதினெட்டே வயதான சுந்தராம்பாள் என்ற அந்த நடிகை கொழும்புவில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறார். கிட்டப்பாவிடமும் சுந்தராம்பாளிடமும் அவர்களை அழைத்துவந்திருந்தவர்கள், பரஸ்பரம் இருவரும் மற்றவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிடக்கூடாது என்று எச்சரித்திருக்கின்றனர் என்று அறிகிறோம். காரணம், ஒருவரை மற்றொருவர் கலையில் தூக்கிச் சாப்பிட்டுவிடுவர் என்பதே. ஆனாலும் இதையெல்லாம் கவனிக்காத கிட்டப்பா, ஒரு நாள் நேரடியாக சுந்தராம்பாளைச் சந்திக்கச் செல்கிறார்.

நேராக உள்ளே செல்கிறார் கிட்டப்பா. சுந்தராம்பாள் படுத்துக்கொண்டிருக்கிறார். அவரது தாய் பாலாம்பாள், யாரோ ராஜ களையுடன் ஒரு இளைஞர் வந்திருப்பதை சுந்தராம்பாளிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே உள்ளே வந்து சுந்தராம்பாளின் படுக்கையில் அமர்ந்துவிடுகிறார் கிட்டப்பா. கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் இப்படி வருகிறாரே என்று நினைக்கும்போதே பேசவும் ஆரம்பிக்கிறார். அவரது பேச்சைக்கண்டு பிரமிக்கிறார் சுந்தராம்பாள். பிரபலங்களைப் பற்றிய legends எப்படி அவர்களை பாதிக்கிறது என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம். ஏற்கெனவே கிட்டப்பாவைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்த சுந்தராம்பாளுக்கு அவர் மேல் பிரமிப்பு வந்ததில் வியப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள். காதலில் விழுந்து திருமணமும் செய்துகொள்கிறார்கள். கிட்டப்பாவுக்கும் சுந்தராம்பாளுக்கும் பிரச்னைகள் வருகின்றன. சுந்தராம்பாள் கிட்டப்பாமீது உயிரையே வைத்திருக்கிறார். கிட்டப்பா சுந்தராம்பாளை பலமுறை அடிக்கிறார். ஒரு குழந்தை பிறந்து இறக்கிறது. கிட்டப்பா மதுவில் மூழ்குகிறார். சுந்தராம்பாள் கிட்டப்பாவைவிட்டுப் பிரிகிறார். காதல் கடிதங்கள் எழுதுகிறார். ‘நீங்கள் நாசமாய்ப் போவீர்கள்’ என்றும் அக்கடிதங்களில் ஒன்றில் எழுதுகிறார். சில காலத்திலேயே கிட்டப்பா தனது 27ம் வயதில் இறந்துபோகிறார்.

தனது குரலால் தமிழகத்தின் நாடக மேடைகளைக் கலக்கிய கிட்டப்பாவின் சுருக்கமான கதை இதுதான். காவியத்தலைவனிலும் கிட்டத்தட்ட இதில் சில அம்சங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுக் கதை பின்னப்பட்டுள்ளது. படம் துவங்கும்போதே அக்கால எழுத்துகளில் டைட்டில்கள் போடப்பட்டுள்ளது ஒரு குஷியான அம்சம். கொம்பு முளைத்த ளை, னை போன்ற எழுத்துகளை நீண்டகாலம் கழித்துக் காண்பது பழைய காலக் கல்கியைப் புரட்டியதைப் போல் இருந்தது.

எனக்குத் தெரிந்து இதுதான் வசந்தபாலனின் அனைத்து உணர்வுகளும் சேர்ந்து பின்னப்பட்டுள்ள முதல் படம் என்று தோன்றுகிறது. வழக்கமாக அவரது படங்களின் gloomy feel இதில் இல்லை. மாறாகப் படம் சந்தோஷமாகவே பல காட்சிகளில் செல்கிறது. அந்த வகையில் படம் எனக்கும் பிடித்தது. இன்னொரு மனிதனின் வளர்ச்சியைப் பார்த்து மனதில் புழுங்கும் ஒருவன் எத்தனை தூரத்துக்குச் செல்வான் என்ற கருவை சிறப்பாகவே காட்டியிருக்கிறது இப்படம்.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாகப் பிருத்விராஜைத்தான் சொல்வேன். இந்தப் படத்திலேயே இயல்பான, கதாபாத்திரத்துக்குத் தேவையான சரியான நடிப்பை அவர்தான் வழங்கியிருக்கிறார். பல காட்சிகளில் அவரது முகபாவங்களும் உடல்மொழியும் சரியாக இருக்கின்றன.

இந்தப் படத்தில் நான் கவனித்த சில நெருடல்களை முதலில் பார்க்கலாம். அதன்பின்னர் பாஸிடிவ்கள்.

முதலாவதாக, படத்தில் ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார். நான் கடவுளில் அவரது வசனங்கள் பல இடங்களில் அட்டகாசமாக இருக்கும் என்பது தமிழகத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் இந்தப் படத்தில் எந்தக் காட்சியிலும் கதாபாத்திரத்தின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வசனங்கள் இல்லை. நாம் பொதுவாக எந்தப் படத்திலும் கேட்கக்கூடிய வசனங்களே அதிகம். வசனங்களில் depth குறைவாகவே இருந்தது. உதாரணமாக, படத்தில் காளியப்ப பாகவதருக்கும் (சித்தார்த்) வடிவாம்பாளுக்கும் (வேதிகா) நடக்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான காட்சியில், அவரைப் பார்த்து எப்போதோ காதல் வயப்பட்டதாகவும், அவரையே நினைத்து வாழ்ந்ததாகவும், அவரைப்போலவே ஒரு குழந்தை வேண்டும் என்பதுதான் தனது ஒரே ஆசை என்றும் வடிவாம்பாள் பேசும் காட்சி. இது கே.பி. சுந்தராம்பாள் கிட்டப்பாவின் மேல் கொண்டிருந்த கருத்துகள் என்பது அவர்களைப் பற்றித் தெரிந்த அனைவருக்குமே தெரியும். அது பிரச்னையில்லை. மாறாக, அந்தக் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வதற்கு ஜெயமோகன் எதற்கு என்பதுதான் நான் சொல்லவருவது. எல்லாமே க்ளிஷேடான வசனங்கள்தான். இதில் மட்டும் அல்ல. பிற காட்சிகள் பலவற்றிலும்கூட அப்படித்தான். வசந்தபாலனே அவற்றை எளிதில் எழுதியிருக்கக்கூடும். ஜெயமோகனை அழைத்து வசனம் எழுதச் சொன்னதன் காரணம் படத்தில் எங்கும் இல்லை. கதாபாத்திரங்களின் depth வசனங்களில் வரவில்லை என்று தோன்றியது. ஜெயமோகனுக்கு இதில் ஸ்பேஸ் மிகக்குறைவு.

அடுத்ததாக, படத்தில் வரும் காளியப்ப பாகவதரும் சரி, கோமதிநாயகம் பிள்ளையும் சரி (பிருத்விராஜ்), சிறந்த நடிகர்களாகவே காட்டப்பட்டு வருகிறார்கள். மிகவும் புகழ்பெற்றவர்கள் அவர்கள். இப்படிப்பட்ட புகழ்மொழிகளைப் படத்தில் வரும் அனைத்துப் பாத்திரங்களுமே இவர்கள்மேல் பொழிகிறார்கள். அதன் காரணமும் புரிகிறது. ஆனால் அதற்கு ஏற்ற நடிப்பை இந்த இரண்டு கதாபாத்திரங்களும் வழங்குகிறார்களா என்று பார்த்தால் அங்கும் பிருத்விராஜே சிறப்பாகச் செய்திருக்கிறார். சித்தார்த் நடித்திருந்தாலும், படத்தின் கதாபாத்திரங்கள் சிலாகிக்கும் நடிப்பை அவர் வழங்கிவிடவில்லை. பிருத்விராஜுக்கு முன்னர் சித்தார்த்தின் நடிப்பு எடுபட மறுக்கிறது. போலவே படத்தில் இவர்களின் நடிப்பைப் பார்த்துப் பலரும் கண்ணீர் விடுவதுபோலெல்லாம் காட்சிகள் வருகின்றன. படம் பார்க்கையில் ஆடியன்ஸுக்கும் அப்படித் தோன்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அப்படித் தோன்றவில்லை. படத்தில் ஒரு காட்சியில் சூரபத்மனாக முதலில் பிருத்விராஜை நடித்துக்காட்டச் சொல்லிவிட்டுப் பின்னர் சித்தார்த்தை நடிக்கச்சொல்வார் சிவதாஸ் சுவாமிகள். அந்தக் காட்சியைக் கவனியுங்கள். அதில் பிருத்விராஜை விடவும் சித்தார்த் வித்தியாசமாக நடித்ததாகச் சொல்லி அவரையே தேர்வு செய்வார் நாஸர். அதில் சித்தார்த்தின் நடிப்பு எப்படி இருந்தது? அவரது உச்சபட்ச நடிப்பே அத்தனைதானா என்றுதான் நினைக்கத் தோன்றியது. இதுதான் படத்தில் அவர்களின் நடிப்பைப் புகழ்வதற்கும் நிஜத்தில் அப்படி இல்லாததற்குமான இடைவெளி.

படத்தில் அந்த இருவரும் மிகச்சிறந்த நடிகர்கள் என்பதை நடிப்பை மட்டுமே வைத்துக் காட்டாமல் அவர்கள் சமூகத்தில் எப்படிக் கொண்டாடப்படுகிறார்கள் என்பதையும் காட்டியிருந்தால் இந்த இடைவெளி குறைந்திருக்கும். அவர்களின் முக்கியத்துவம் என்ன என்பது நன்றாக establish செய்யப்படவில்லை என்று தோன்றியது.

படத்தின் இரண்டாம் பாதியில் காளியப்ப பாகவதர் பல ஸ்வதேசி நாடகங்களில் நடிக்கிறார். எஸ்.ஜி. கிட்டப்பா போலவே. ஆனால் அந்நாடகங்களில் அவர் என்ன பேசுகிறார் என்று பார்த்தால் ‘வந்தே மாதரம்’ என்றும் ‘ஜெய் ஹிந்த்’ என்றுமட்டுமேதான் பேசிக்கொண்டிருக்கிறார். அவற்றின் வசனங்கள் காட்டப்படுவதில்லை. பகத்சிங் வேடத்தில் மட்டும் ஓரிரு வரிகள் வசனம் வருகிறது. இப்படிப்பட்ட நாடகங்களையும் சில வசனங்களையும் காட்டியிருக்கலாம் என்று தோன்றியது. ஏனென்றால் ‘பாரதி’ படத்தில், என்னதான் பாரதியாரை சிறப்பாகக் காட்டியிருந்தாலும், வீட்டுக்கு வெளியே அவர் என்ன செய்தார் என்பது சரியாக இருக்காது. சமுதாயத்தில் அவரை எப்படிக் கையாண்டார்கள் என்பதும் இருக்காது. இதனால் சுதந்திரப் போரில் பாரதியின் பங்கு அந்தப் படம் பார்த்தவர்களுக்குப் புரிந்திராமல் போயிருக்கும் சாத்தியக்கூறுகளே அதிகம். அதேபோல் பாரதியின் முக்கியத்துவமும் யாருக்கும் தெரிந்திருக்காது. அப்படித்தான் இதிலும் சுதந்திரப் போருக்குக் காளியப்ப பாகவதரின் பங்கு வெறும் ‘ஜெய் ஹிந்த்’ கோஷமும் வந்தே மாதரமும்தானா என்றே தோன்றுகிறது. எஸ்.ஜி.கிட்டப்பா சில நாடகங்களில் உணர்ச்சி பொங்கப் பாடி நடித்ததுபற்றிப் படித்தது நினைவு வருகிறது.

இவ்வளவுதான் எனக்குத் தோன்றிய சிறிய குறைகள்.

பாஸிடிவ்கள் என்று பார்த்தால் ஏற்கெனவே பார்த்த பிருத்விராஜ்தான் முதல் பாஸிடிவ். பல காட்சிகளில் அவரது முகபாவம் சிவாஜி கணேசனின் சில முகபாவங்களை நினைவுபடுத்தியது. நல்ல நடிப்பு. இவருக்கு அடுத்து வேதிகா. அவருமே சிறப்பாகச் செய்திருக்கிறார். அவரது முகபாவங்களும் உடல்மொழியும் ஜோதிகாவை சில இடங்களில் நினைவுபடுத்தின (உதாரணமாக, அறிமுகப் பாடலான வாணி ஜெயராம் பாடியிருக்கும் திருப்புகழில் அப்படியே ஜோதிகா போலவே அபிநயம் பிடித்தார்). அவரைப் பார்த்தால் அக்காலத்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பெண் போலவே இருப்பது இன்னொரு ப்ளஸ். இதன்பின் நாசர். சங்கரதாஸ் சுவாமிகளை நினைவுபடுத்தும் தவத்திரு சிவதாஸ் சுவாமிகள் என்ற வேடம். பின்னணியில் சங்கரதாஸ் சுவாமிகளின் படத்தோடு நாசர் பேசும் பல காட்சிகளில் நன்றாகவே செய்திருக்கிறார். இருவரில் அவர் செய்த இதே போன்ற பாத்திரம் நினைவுக்கு வந்தது. சித்தார்த் காதல் காட்சிகளில் நன்றாக நடித்திருந்தாலும், காளியப்ப பாகவதரின் பாரத்தை அவரது தோள்கள் தாங்கவில்லை என்றுதான் சொல்வேன். ஒருவேளை மிக இளம் வயதிலேயே எஸ்.ஜி. கிட்டப்பா  இறந்துவிட்டதால் சித்தார்த்தைத் தேர்வு செய்தார்களோ என்று தோன்றுகிறது. பொன்வண்ணனின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. கொஞ்சமே வந்தாலும் சரியாகச் செய்திருக்கிறார்.

படத்தின் கதாபாத்திரங்களை வசந்தபாலன் glorify செய்யவில்லை. ’குச்சிக்காரி வீட்டுக்கு என் காசுல போனப்ப எப்படி இருந்தது?’ என்று மன்சூர் அலிகான் ஒரு காட்சியில் கேட்பார். இன்னொரு காட்சியிலும் அவுசாரி வீட்டுக்குப் போயிட்டு வந்தியா என்று நாஸர் கேட்பார். அக்காலகட்டங்களில் நிலவிய இதுபோன்ற விஷயங்கள் (இன்னொன்று – ராஜாவுக்குச் சின்னவீடாகப் போவது) படத்தில் இயல்பாகவே வருகின்றன.

நான் எப்போதும் சொல்லிவருவதுபோல, தமிழ் சினிமாவில் பாடல்கள் தனியாகக் கேட்டால் பயன் இல்லை. அவற்றைப் படத்தோடு பார்த்தால்தான் அவை எப்படி உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் என்று புரியும். அப்படிப் படத்தின் அத்தனை பாடல்களும் ரஹ்மானால் மிகச்சிறப்பாக இசையமைக்கப்பட்டிருக்கின்றன. படத்தோடு வரும் பாடல்களைக் கவனியுங்கள். நீண்ட காலம் கழித்து வாணி ஜெயராம் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அசத்தியிருக்கிறார். பாடல்கள் வந்தபோது, குரல்கள் கணீரென்று இல்லை என்று ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன். ஆனால் படத்தில் அந்தக் குறை தெரியவில்லை. இரண்டு பாத்திரங்களுக்கும் ஹரிசரண், நாராயணன், ஸ்ரீநிவாஸ் போன்ற குரல்கள் சரியாகவே பொருந்துகின்றன.

இறுதியாக, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தின் நாடக வாழ்க்கையைப் பற்றி முதன்முதலாக இப்போதிருக்கும் ஆடியன்ஸுக்கு ஒரு ஜன்னலைத் திறந்திருக்கும் வசந்தபாலன் (சில குறைகள் இருந்தாலும்) பாராட்டத்தக்கவர். இப்படி ஒரு படத்தை எடுக்க அவசியம் ’தில்’ வேண்டும். நமது வரலாற்றைத் தெரியாமல் நாம் இருப்பது எத்தனை அபத்தம்? அதற்கு இந்தப் படம் ஒரு ஆரம்பமாக இருக்கும். இதில் சொல்லப்பட்ட விஷயங்களை வைத்துப் புத்தகங்களைத் தேடிப்படித்து அக்காலகட்டத்தைச் சேர்ந்த ஜாம்பவான்களைப் பற்றித் தெரிந்துகொள்வதே இந்தப் படத்துக்கு நமது பங்களிப்பு. இருந்தாலும், இன்னும் சொல்லப்படவேண்டிய பல விஷயங்களை வசந்தபாலன் விட்டுவிட்டாரே என்றுதான் தோன்றியது. சமகாலத்தில் நடக்கக்கூடிய ஒரு கதையை இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வைத்து (சில க்ளிஷேக்களுடன்) எடுத்திருக்கிறார்.  இனியும் இதில் சொல்லப்படாத விஷயங்களை வைத்து இன்னும் ஆழமாகப் படங்கள் இனிமேல் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

அவசியம் படத்தைப் பார்க்கலாம். ஆனால் நான் பார்த்த முகுந்தாவில் பல காலி நாற்காலிகளைப் பார்த்தபோது சற்றே வருத்தமாக இருந்தது. ஓரிரு நாட்களில் அந்த நிலை மாறும் என்று நினைக்கிறேன்.

இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள்.

  Comments

15 Comments

  1. dhaya

    ningal sonnathu mulukka sari ena oppukolla manam varavillai
    irunthalum VASANTHABALAN polave ninkalum unkalathu parvaiyai thelithu irukkirirkal
    nan niraya ethir parththu sentra padam entre koralam anal ethir parththa alavukku illai enpathe unmai…
    aadukalam kathai karuvai oththi ye ullathu kavya thalaivan enpathil santhekam illai..

    oru variyel solla vendumanal

    solla vanthathai mulumaiyai solla villai vasanthabalan enpathe

    ningal sonnathupol title card l mattume palamayana eluthukal anal vasanankalil appadi edhum thenpada villai

    utharanaththirkku oru katchi :
    Kali : avarkalin nadippai parththu nadakam parpavarkal aluvathai poll oru katchi anal arankinil sirippoli saththame kettathu….
    antha alavukku makkalai kathaiyenul payanikkum vaippu thara villai
    VASANTHABALAN avarkal …..

    Reply
  2. Accust Here

    சில புத்தகங்கள் பத்தி சொல்லிருகீங்க அது இந்த படத்துக்குனு வாங்கி படிச்சிங்களா!, உங்க ஹோம்வோர்க் அற்புதம்.

    Pulp Fiction என்ன பாஸ் ஆச்சு, அந்த படம் பாதிதான் பாத்திருக்கேன் உங்க அடுத்த சாப்ட்டர்க்கு வைடிங். இந்த டிவி சீரியல்ல அடுத்த வாரம் போடுறமாதிரி நீங்களும் “அடுத்த பதிவு Pulp Fiction-Part 4 விரைவில்” அப்டின்னு போடலாமே

    Reply
  3. nambi raja

    i cant take ur review fully i expected it as “haider” like review padam kathaiku nadagam backdrop theyvai ilai
    same story coming as “isai”

    Reply
  4. Senthilkumar Baliah

    why did you change the website template… the previous one was very good….

    Reply
  5. sureshkumar

    Saw the movie… Prithivraj acting is master piece.. Climax could be better… felt very nice feel after seeing movie.. this movie satisfied my expectations.. must watch…
    @scorp why don’t you speak about camera shots. I felt great in seeing each and every scene of the movie..

    Reply
  6. STMVP

    I do not agree with you Rajesh :-). The movie is not at the best as its not giving the real feel on those Superstars or on the Drama life happened in those period. Music…yes its good but when its come to these kind of movies, how could you say good if the movies are related to Dramas where they never used latest instruments those days but ARR used and he did not give the real/original drama music but reel :-(. And we the Tamil people 1st started to protest against English people but in this movie, there is a dialogue like “we Tamil people are not patriotic people and not participated in protest”. And the camera…yes its is perfect but when we eagerly waiting to watch the 1930’s drama life then the camera should take us to those period instead its giving nothing 🙁 (Compare with Madharaasapatnam, you can feel the real). Many I can say :-).

    Reply
  7. Singaravelan

    என்ன சார் ஊரே இந்த படத்தை அடித்து துவைத்துக் கொண்டிருக்கிறது?

    Reply
  8. Mayavi

    படத்தில் நீங்கள் சொன்ன குறைகளை தவிர வேறெந்த குறைகளும் இல்லையா.?

    Reply
    • மாயமான்

      சரியான கேள்வி கேட்டிருக்கும் உனக்கு மாயமானின் டாப் டென் இரைச்சல் அடங்கிய சிடி தேளுத்தம்பியால் அனுப்பி வைக்கப்படும்.

      Reply
      • sendhel

        That would amount to homicide be careful

        Reply
  9. Mayavi

    முழு பூசணிக்காய எழுத்துக்குள்ள ஒளிச்சுப்புட்டீங்களே.! சரி. ஒ.கே. நீங்களும் அப்படி போல.

    Reply
    • மாயமான்

      தேளு அதுல கில்லாடி.வர்ற அமவுண்டு பொறுத்தே விமர்சனம் எழுதப்படும்.உங்களுக்கு தெரிந்த இயக்குனர்கள் இருந்தால் தேளுதம்பிய காண்டாக்ட் பண்ண சொல்லுங்க

      Reply
  10. மாயமான்

    அத்தனை பாடல்களும் ரஹ்மானால் மிகச்சிறப்பாக இசையமைக்கப்பட்டிருக்கின்றன./////..
    ,
    ,
    தம்பி எனக்கு நீ ரொம்ப வருசமா ஜால்ரா தட்டி வருவத பாராட்டி அடுத்த படத்துல க…ரு..ந…தே..ள்…கரு…ந்தேள்..அப்படின்னு ஒரு பாட்டு என்னோட அடி வவுத்துல இருந்து கத்தி கம்போஸ் பண்ணி உனக்கு டெடிகேட் பண்ணுறேன்.

    Reply
  11. prabu

    Karunthel ungalil vimarsanathuku nan rasigan..anal intha vimarsanam pidikavillai…theatre kaliyaga irunthatha kandipaga inum 5 days kalichu parunga theatre LA film eh irukathu…neenga nadipa Patti anaithu negative and plus galum sariyana vimarsanam….Aanal padathil adbigama preductive scene kal..aduthu enna Machi varum enbathai ellarume theatre il solli kondu irunthargal….Aduthu A.r.rahman in isai padalgal Ku matum avar pabiyatrikalam…BGM Ku sankar Ganesh eh arumaiyaga potiripar…epadi jaya Mohan space illaya a the nilamai dhan rahman kum….Next..adhan piragu sundarambal avar pillai ean vayitril irukurathae endru sollum bothu theatre I’ll irukum anaivarum sirithanar..Aana Vuna pillai kuduthudurane endru anaivarum sirithanar enaku siripe vanthathu….Ennai porutha varai..Next
    Miga periya kalam nadaga pinnani story arumaiyaga Vilayadirukalam ..actinga sambanthamana namathu varalaru ellavatrayum Asanthu pogum alavu kamichirukalam…Nan en thozhi iru inimel nalla irukum nalla irukum nu solli ava 2nd half la total ah ve thoongita…Ungal review galil kavanam selutha vendum Karundhel..
    2 out of 5..rahman song ku marum and Nadaga medai valkaiyai kamithatharku..
    Makkal pathil koori vitargal vasantha balance Ku padam flop….Inimelathu karvathai anavathai vitu Than iru satharana iyakunar enbathai unarnthu padam eduthal pizhaithu kollalam

    Reply
  12. – Appreciate your sharing giving your opinions here. One other point is when a problem pops up with a pc motherboard, humans should not make the risk of correcting that on their own for if it is not done right it can result in permanent harm to an entire notebook. Most commonly it truly is safe that will approach a dealer in the laptop for that repair with the motherboard

    Reply

Join the conversation