எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 6 – கமல் ரஜினி யுத்தம்
இந்தத் தொடரை ஆரம்பித்த முதல் கட்டுரையில் இருந்தே, இப்போது எழுதப்போகும் விஷயத்தை எழுதியே ஆகவேண்டும் என்பது என் ஆசை. ஆனால், அதற்கு நேரம் இன்றுதான் கிடைத்தது. சும்மா எழுதவில்லை; கிட்டத்தட்ட ஒரு 25 பாடல்களை வரிசையாகக் கேட்டுவிட்டே எழுதுகிறேன். எண்பதுகளில் வந்த தமிழ்ப்படங்களில், கமலும் ரஜினியும் ஒருவரோடொருவர் நேரடியாகவே மோதிக்கொண்ட பல சுவாரஸ்யமான போர்க்களங்கள் உள்ளன. அந்தப் போர்க்களங்களில், சிலமுறை ரஜினியும், சிலமுறை கமலும், சிலமுறை இருவருமே சேர்ந்தும், ஓரிருமுறை இருவருமே தோல்வியடைந்து, மூன்றாவதாக இன்னொருவர் வெற்றியடைந்ததும் நடந்திருக்கிறது. எண்பதுகளின் திரைப்படங்களுக்கு விசிறிகளாக இருப்பவர்களுக்கு நான் சொல்லும் சம்பவங்கள் நினைவிருக்கலாம்.
ரஜினி கமல் படங்கள் ஒரே நாளில் வெளிவந்த சம்பவங்களைப் பற்றி எனக்கு நினைவிருந்தாலும், அவை எப்போதெல்லாம் – அதாவது தீபாவளியா பொங்கலா இத்யாதி – வந்திருக்கின்றன என்பதில் சில விபரப் பிழைகள் என் மனதில் இருந்ததால், இணையத்தில் இதனைப் பற்றித் தேடினேன். இரண்டு அட்டகாசமான கட்டுரைகள் கிடைத்தன. அந்தக் கட்டுரைகளில், என் மனதில் இருந்த லிஸ்ட் இருந்ததைக் கண்டு சந்தோஷம் அடைந்தேன். ஓரிரு புதிய விஷயங்களையும் அவற்றில் இருந்து தெரிந்து கொண்டேன். முதலில், அந்தக் கட்டுரைகளைப் படித்துவிடுங்கள். அவை இங்கே:
- ரஜினி Vs கமல்: தீபாவளி ஸ்பெஷல் (இது ஒரு ரஜினி ரசிகரின் பார்வை)
- Clash of the Titans
கட்டுரைகளைப் படித்தாயிற்றா? ரைட். இப்போது, இந்தப் படங்களைப் பற்றி என் பெர்ஸனல் கருத்துக்களை எழுதப்போகிறேன். அவற்றில் ஏதாவது பிழைகள் இருந்தாலும், நண்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
எண்பதுகளின் முன்பாதியைப் பொறுத்தவரை, கமலும் ரஜினியும் மசாலாப் படங்களிலேயே நடித்து வந்தனர். மிக அரிதாக, இருவருக்கும் ஏதாவது சீரியஸ் படம் அமைந்தாலும் கூட. அப்படி அவர்கள் நடித்த மசாலாக்களே பெருவெற்றியும் அடைந்துவந்திருக்கின்றன. கமலைப் பொறுத்தவரை, அதிகமான ரீமேக்குகள் இல்லாமல், தமிழிலேயே கதைகள் எழுதப்பட்டு (உதா: காக்கி சட்டை – சத்யா மூவீஸ் கதை இலாகா) அதில் நடித்தார். ரஜினியோ, அலட்டிக்கொள்ளாமல், அமிதாப்பின் படங்களை ரீமேக் செய்து, தனக்கேற்றவாறு டிங்கரிங் செய்யப்பட்ட கதைகளில் நடித்து, சுலப வெற்றியை சம்பாதித்தார். இதில் ஓரிரண்டு விதிவிலக்குகளும் உண்டு.
நமது லிஸ்ட்டின் முதல் போட்டி – 1980 – வறுமையின் நிறம் சிவப்பு Vs பொல்லாதவன். தீபாவளி.
1980யை எடுத்துக்கொண்டால், ஆல்ரெடி இருவரும் பாக்ஸ் ஆஃபீஸ் கதாநாயகர்கள் என்ற உண்மை நிரூபிக்கப்பட்டிருந்தது. கமலைப் பொறுத்தவரை, அதற்கு முந்தைய வருடம் தான் ‘நீயா’ பெருவெற்றியடைந்திருந்தது. அதற்கும் முந்தைய வருடத்தில்(1978) ‘சிவப்பு ரோஜாக்கள்’ , ‘மரோசரித்ரா’ ஆகிய இரண்டு சூப்பர்ஹிட்கள் வேறு. ரஜினியை எடுத்துக்கொண்டால், 1979ல் ‘தர்மயுத்தம்’, ‘அன்னை ஓர் ஆலயம்’ ஆகிய ஹிட்கள். கூடவே, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ என்ற சீரியஸ் படம். 1978ல், 21 படங்களை நான் ஸ்டாப்பாக நடித்துவேறு இருந்தார் ரஜினி. அந்தக் காலகட்டத்தில், தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கமலும், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரஜினியும் படு பிஸியாக இருந்த நேரம். கூடவே, இருவருமே இணைந்து நடித்து சூப்பர் ஹிட் ஆன ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தைப் போன்று இன்னும் சில படங்களும் வெளிவந்திருந்தன (அலாவுதீனும் அ.வி, இளமை ஊஞ்சலாடுகிறது etc)
இந்த பிஸியான ஸ்கெட்யூலில், பாலசந்தரின் படமாக கமல் நடித்து ‘வறுமையின் நிறம் சிவப்பு’ வெளிவர, ரஜினியின் படமாக ‘பொல்லாதவன்’ வெளிவந்தது. இப்படத்தை இயக்கியிருந்தவர் முக்தா சீனிவாசன். பொல்லாதவனுக்கு முன்னர் அதே வருடத்தில் வெளிவந்து சக்கைப்போடு போட்ட படம் ‘பில்லா’. அதேபோல் கமலுக்கு, இரண்டு வருடங்களுக்கு மேல் படப்பிடிப்பில் இழுத்துக்கொண்டிருந்த ‘குரு’ (இப்படத்தில், பாடல்காட்சிகளில் சிவப்பு ரோஜாக்கள் கால கமலும், மற்ற காட்சிகளில் கொஞ்சம் மாடர்ன் கமலும் தோன்றுவதை நண்பர்கள் கவனித்திருக்கலாம்).
இரண்டுமே நன்றாக ஓடிய படங்கள். ஆனால், இன்றும், பொல்லாதவன் ஒரு மசாலாவாகவும், வறுமையின் நிறம் சிவப்பு ஒரு நல்ல படமாகவும் இருதரப்பு ரசிகர்களாலும் எடுத்துக்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில், பொல்லாதவனில், ‘நான் பொல்லாதவன்’ பாடலைத் தவிர வேறு எந்தக் காட்சியையும் நினைவுகூர முடியவில்லை. ஆனால், வறுமையின் நிறம் சிவப்பு, ஸீன் பை ஸீன் நினைவிருக்கிறது. இரண்டு படங்களையும் நான் கடைசியாகப் பார்த்தது, பல வருடங்களுக்கு முன்.
அடுத்த போட்டி – 1982 தமிழ்ப் புத்தாண்டு. சிம்லா ஸ்பெஷல் Vs ரங்கா.
இந்தக் காலகட்டத்தில், தமிழின் தவிர்க்கமுடியாத இரண்டு சக்திகளாக இருவரும் வளர்ந்துவிட்டனர் என்று துணிந்து சொல்லலாம். 1981லேயே கமலின் நூறாவது படம் வெளிவந்துவிட்டது. 1981ல் வெளிவந்திருக்கும் கமலின் படங்களைப் பாருங்கள்: ஏக் துஜே கேலியே (கமலின் 101வது படம்), சவால், சங்கர்லால் (பாதி படத்துக்கு மேல் இப்படத்தை இயக்கியவர் கமலே தான். அந்த வகையில், கமலின் முதல் direction முயற்சி இதுதான். ஆனால் டைட்டிலில் பெயர் வந்திருக்காது. இந்த விஷயத்தை தொண்ணூறுகளில் வெளிவந்துகொண்டிருந்த ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடிகரைப் பற்றிய பல அட்டகாசமான தகவல்கள் அதில் இருக்கும். பெயர் மறந்துவிட்டது. நல்ல வழவழா பேப்பரில், கலர்ப்படங்கள் போட்டு இருக்கும் (பேசும் படம், பொம்மை அல்ல). அந்தக் கட்டுரைகளை சேகரித்து வைத்திருந்தேன். அப்போது என் வயது – 13).
ரஜினிக்கு, 1981ல், தில்லுமுல்லு, நெற்றிக்கண் ஆகிய டக்கரான படங்கள்.
இந்த இரண்டு படங்களில், எனக்குத் தெரிந்து, சிம்லா ஸ்பெஷல் படுதோல்வியடைந்தது. இயக்கியவர், அதே முக்தா சீனிவாசன். ரங்கா, ஆர். தியாகராஜனால் இயக்கப்பட்டது. தியாகராஜன், எடிட்டராக இருந்து இயக்குனராக ஆனவர். ராஜேஷ் கன்னா நடித்த ‘ஹாத்தி மேரா சாத்தி’ படத்தின் எடிட்டர். Bewafai(1985) என்ற ஹிந்திப் படத்தை ரஜினியையும் ராஜேஷ் கன்னாவையும் வைத்து இயக்கியிருக்கிறார். தேவர் பிலிம்ஸையும் இவரையும் பிரிக்கவே முடியாது என்பதுபோல், எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் துவக்கத்திலும், தேவர் பிலிம்ஸ் படங்களில் 99% இயக்கியது இவரே (ஆட்டுக்கார அலமேலு, ராம் லக்ஷ்மன் etc). ஆக, ரங்கா வெளிவந்தபோது நட்சத்திர அந்தஸ்தில் இருந்த இயக்குநர். இதற்கு முன்னும் ரஜினியை வைத்து சில வெற்றிப்படங்கள் இயக்கியவர் (அன்புக்கு நான் அடிமை, அன்னை ஓர் ஆலயம், தாய் மீது சத்தியம்). இருந்தாலும், ரங்காவை அவரால் காப்பாற்ற முடியவில்லை என்றே தெரிகிறது.
எனக்கு சிம்லா ஸ்பெஷலே பிடிக்கும். குறிப்பாக, எஸ்.வி சேகர் + கமல் கூட்டணி அடிக்கும் மொக்கை ஜோக்குகள் (எஸ்.வி சேகர் நாடகங்களையும் மாமாவின் இசைத்தட்டு நூலகத்தில் இருந்தபோது பலமுறை கேட்டிருக்கிறேன்). அதேபோல், ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா’ பாடலையும் மறக்கவே முடியாது.
அடுத்த போட்டி – அதே வருடமான 1982 – சுதந்திர தினம் – சகலகலா வல்லவன் Vs எங்கேயோ கேட்ட குரல்.
எந்தப் படம் வெற்றிபெற்றது என்பதை சொல்லவே தேவையில்லை. சகலகலா வல்லவன் வசூல் சாதனை புரிய, எங்கேயோ கேட்ட குரல் தோல்வி. எஸ்.பி. முத்துராமன்தான் இரண்டுக்கும் இயக்குநர். இந்தப் படங்களில், என்னால் சகலகலா வல்லவனையே நினைத்துப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, இதோ இந்தப் பாடல். இளமை இதோ இதோவெல்லாம் இப்பாடலுக்கு முன் பிச்சை வாங்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. இப்பாடலின் இசையை ஹெட்ஃபோனில் கேட்கவும். அடி பட்டையைக் கிளப்பியிருப்பார் இளையராஜா. இதில் கமல் வைத்திருக்கும் அட்டகாசமான தாடிக்கு இப்போதும் நான் ரசிகன்.
இந்தக் காலகட்டத்தில், ரஜினியும் கமலும், முறையே 32 மற்றும் 28 வயதுக்காரர்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள் (தனது 27வது வயதில், சதமடித்தார் கமல்).
அடுத்த போட்டி – 1983 – தீபாவளி. தூங்காதே தம்பி தூங்காதே Vs தங்கமகன்.
எனக்குத் தெரிந்து தங்கமகனும் வெற்றிகரமாக ஓடினாலும், தூங்காதே தம்பி தூங்காதே, மெகாஹிட் படம். தூ.த.தூ படத்தை இயக்கியவர் எஸ்.பி. முத்துராமன். தங்கமகன், ஏ. ஜெகன்னாதனால் (மூன்று முகம், காதல் பரிசு) இயக்கப்பட்டது.
கமலுக்கு 1983 ஒரு சிறந்த வருடம். சாகர சங்கமம் (சலங்கை ஒலி), சட்டம், சத்மா (மூன்றாம் பிறை) ஆகிய படங்களோடு சேர்ந்து தூ.த.தூவும் ஹிட் (முதல் மூன்று படங்களில் ‘ச’ செண்டிமெண்ட் இருக்கிறதோ?). அதே வருடத்தில் வெளிவந்திருந்த ‘பொய்க்கால் குதிரை’ படத்தில், சலூன் ஃபோட்டோவில் இருந்துகொண்டு, ஹீரோ ரவீந்தருக்கு காதல் டிப்ஸ்கள் கொடுக்கும் கமல்ஹாசனாகவே கௌரவ வேடத்தில் நடித்திருப்பார் (கவிஞர் வாலி பிய்த்து உதறியிருக்கும் படம். பாலசந்தர் இயக்கம். எனக்குப் பிடிக்கும்). ரஜினிக்கு, அது கொஞ்சம் ஆவரேஜ் வருடம்தான். பாயும் புலியில் தொடங்கிய வெற்றி, தாய்வீட்டில் நிலை பெற்று, அடுத்த வாரிசில் முடிந்திருந்தபோதுதான் தங்க மகன் வெளிவந்திருந்தது (தாய்வீட்டின் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக, சுஹாஸினி பாடும் தங்கை செண்டிமெண்ட் பாடல் ‘ஆசை நெஞ்சே‘, இப்போதும் என் ஃபேவரைட். கூடவே, ‘அழகிய கொடியே ஆடடி’ , ‘உன்னை அழைத்தது பெண்’ ஆகிய சூப்பர் பாடல்கள் இதில் எனக்குப் பிடிக்கும். சங்கர் கணேஷ், ஹிந்தி சாயலில் இசையமைத்திருந்த படம்).
சரியாக ஒரு வருடம் கழித்து – 1884 – தீபாவளி. எனக்குள் ஒருவன் Vs நல்லவனுக்கு நல்லவன்.
இம்முறை ஹிட்டானது ரஜினி படம். 1983 தூ.த.தூவுக்குப் பிறகு, 1984 துவக்கத்தில் இருந்து நான்கு ஹிந்திப்படங்கள் (Yeh Desh – கௌரவ வேடம். Ek Nai Paheli, Yaadgar & Raajtilak.. மூன்றும் ஹிந்தியில் ஃப்ளாப் என்பது இத்தொடருக்கு சம்மந்தமில்லாத விஷயம்) தொடர்ச்சியாக நடித்துமுடித்திருந்த கமலுக்கு, அந்த வருடத்தின் முதல் தமிழ்ப்படமாக அமைந்தது ‘எனக்குள் ஒருவன்’. கிட்டத்தட்ட பத்து மாதங்கள் எந்தப் படமும் தமிழில் வராததால், எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த படம். ரஜினிக்கோ, கை கொடுக்கும் கை, நான் மகான் அல்ல, தம்பிக்கு எந்த ஊரு ஆகிய ஹிட்கள், அந்த வருடத்தைத் தமிழில் நன்றாகவே அவருக்கு ஸ்திரப்படுத்தியிருந்தன. அவ்வருடத்தில், ரஜினியும் ஹிந்தியில் இரண்டு படங்கள் நடித்திருந்தார் (Meri Adhaalat மற்றும் Gangvaa. அவையும் ஃப்ளாப்கள் தான்). ஆனால், நல்லவனுக்கு நல்லவன், ஒரு மசாலாப் படத்துக்கான அத்தனை அம்சங்களும் கொண்டிருந்த AVM படம் என்பதால், பெருவெற்றி அடைந்தது. எனக்குள் ஒருவனோ, Reincarnation of Peter Proud மற்றும் Karz படங்களின் Rip off. தோல்வி. பாலசந்தர் தயாரிப்பு. இம்முறையும் இரண்டு படங்களையும் இயக்கியிருந்தவர் எஸ்.பி. முத்துராமன். (ஆனால், இப்படத்துக்குப் பின் வெளிவந்த ‘கைதியின் டைரி’, கமலுக்கு மெகா ஹிட் ஆனது).
அடுத்த போட்டி – 1985 – தமிழ்ப் புத்தாண்டு. காக்கி சட்டை Vs நான் சிகப்பு மனிதன்.
காக்கி சட்டை, சத்யா மூவீஸின் ஃபார்முலா படம். ராஜசேகர் இயக்கம். இன்றளவும் பல படங்களுக்கு முன்னோடி. சூப்பர் ஹிட் பாடல்கள். படமும் பயங்கர ஹிட். நான் சிகப்பு மனிதனோ, Death Wish படத்தின் காப்பி. எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கம். ராபின்ஹூட், பழிவாங்குதல், கோர்ட் காட்சிகள், கூடவே பாக்யராஜின் காமெடி நடிப்பு ஆகிய பல விஷயங்களோடு சேர்த்து, அக்கால கட்டத்தின் தவிர்க்கமுடியாத வில்லனாக மாறியிருந்த சத்யராஜின் டக்கர் வில்லத்தனம் ஆகியவை, படத்தை வெற்றிப்படமாக்கின. ஆனால், இந்தப் போரில் வென்றது காக்கி சட்டை என்பதில் சந்தேகமே இல்லை.
(ரயிலில் ராபின்ஹூட்டாகப் பயணிக்கும்போது, பேப்பர் படிப்பார் ரஜினி. அப்போது, ஒரே ஷாட்டில், மிக அனாயாசமாக, ஒரு பக்கத்தை விரிக்கும்போதே, வாயில் உள்ள சிகரெட்டை உள்ளங்கையில் ஒரே கையில் இருக்கும் தீக்குச்சியை உரசுவதன் மூலம் பற்ற வைப்பார். இது ‘ஸ்டைல்’ என்று அவர் வெளிப்படையாக செய்யும் வகையில் சேராது. அது மிக சீரியஸான ஒரு ஸீன். அந்த ஷாட், மூன்று நொடிகளே வரும். மிக மிக சாதாரணமான ஒரு ஷாட். அது இவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம் – ‘ராபின்ஹூட், பேப்பர் படிக்கிறான். ஒரு பக்கத்தில் இருந்து, இன்னொரு பக்கத்தை விரிக்கிறான்’. அந்தக் காட்சியில் கூட இப்படி ஒரு பட்டையைக் கிளப்பும் விஷயம் – . இதனால் தான் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று அன்று புரிந்து கொண்டேன் – ஆனால் இதே போல் ஒரு ஷாட், Good bad and the uglyயில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் செய்ததைக் கவனித்திருக்கிறேன்., அந்த ஷாட்டின் அட்டக்காப்பிதான் நான் சிகப்பு மனிதனில் வரும் ஷாட்).
1985 தீபாவளி. இம்முறை, ஜப்பானில் கல்யாணராமன் Vs படிக்காதவன்.
படிக்காதவன் வெற்றியடைந்தது (even though it was a copied film). நல்ல பாடல்கள், ஜப்பானில் ஷூட்டிங் ஆகிய விஷயங்கள் இருந்தபோதிலும், வலுவான திரைக்கதை இல்லாததால், ஜப்பானில் கல்யாணராமன் தோல்வியடைந்தது. இப்படத்திலும் சத்யராஜே வில்லன்.
இதற்கு அடுத்த வருடமான 1986 தான் என்னால் மறக்கவே முடியாத வருடம். கோவை அப்ஸரா தியேட்டரில், கோட் சூட் அணிந்து, ஒரு கையில் பிஸ்டலை வைத்துக்கொண்டு, திரும்பிப் பார்க்கும் கமலின் பிரம்மாண்டமான கட் அவுட்டைப் பார்த்தேன் (7 வயது). கட் அவுட்டின் அடியில், டிஜிடல் எழுத்துக்களில், ‘வி க் ர ம்’ என்று படு ஸ்டைலாக எழுதப்பட்டிருக்கும். விபரம் தெரிந்த பின், தமிழில் கமல் என்று ஒரு நடிகர் இருக்கிறார் என்பதை எனக்குத் தெரியவைத்த படம். இதன்பின்னர்தான் ரஜினியைப் பற்றித் தெரிந்துகொண்டேன். இப்படத்துக்குப் பின் வெளியாகி, பெருவெற்றி அடைந்த படம் – சத்யராஜின் ‘முதல் வசந்தம்’. அந்த வருடத்தின் தீபாவளியில், புன்னகை மன்னன் வெளியாகி, வெற்றியடைந்தது. அப்படத்தின் கூடவே வெளியான ரஜினியின் சொந்தப்படமான மாவீரன், தோல்வியடைந்தது. விக்ரம், மாவீரன் இரண்டையும் இயக்கியவர், ராஜசேகர்.
அடுத்து, 1987 தீபாவளி. இந்த முறை போட்டியிட்ட படங்கள், நாயகன் மற்றும் மனிதன்.
நாயகனைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல், நண்பர் அராத்து தெரிவித்தார். அக்காலத்தில், திரைப்பட போஸ்டர்கள் அந்த அளவு பிரமாதமாக இல்லாத காலம். ஆனால், இப்படத்துக்கு, உடல் கிழிந்து, போலீஸ் ஸ்டேஷனில் கமல் தொங்கிக்கொண்டிருக்கும் படத்தை போஸ்டரில் அடித்து வெளியிட்டிருந்தார்களாம். அக்காலத்தில் இது எப்பேற்பட்ட சென்சேஷனை ஏற்படுத்தியிருக்கும் என்பது சொல்லவே தேவையில்லை அல்லவா? கமல் மீசையை வேறு எடுத்துவிட்டு நடித்திருந்த படம். மணிரத்னத்தின் வருகையைத் தமிழகம் மௌன ராகத்தினால் உணரத் தொடங்கியிருந்த காலம். அக்காலகட்டத்தில் மட்டுமல்ல, இப்போது பார்த்தாலும், பார்ப்பவர்களின் மனதில் தீராத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படமாக நாயகன் அமைந்தது. அற்புதமான பாடல்கள். சிறந்த நடிப்பு (அல் பசீனோவையும் ராபர்ட் டி நீரோவையும் கமல் உற்றுக் கவனித்து அதே போல் நடித்திருந்தாலும்). இத்தோடு ஒப்பிட்டால், மனிதன் என்பது படு சாதாரணமான ஒரு மசாலா. ஆனால், இரண்டுமே வெற்றிபெற்றன.
அடுத்த போட்டி – 1989 தீபாவளி. மாப்பிள்ளை Vs வெற்றிவிழா.
இரண்டுமே ஹிட். இப்படங்களில், வெற்றிவிழா ஷாட் பை ஷாட்டாக எனக்கு நினைவிருக்கிறது. ஜிந்தாவை மறக்கமுடியாது. கூடவே, இதோ இப்பாடலையும்.
இன்னொரு விஷயம் – எண்பதுகளில், ஒரு சிறிய விஷயத்தைக் கவனித்திருக்கிறேன். தர்மத்தின் தலைவன் வந்த புதிது. அதில், ‘ஒத்தடி ஒத்தடி’ பாடலில், இந்த வரி இருக்கும்.
‘வில்லாதி வில்லனடி… எனக்கு இணையாகத்தான் கில்லாடி இல்லையடி…’
அதன்பின் வெளிவந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில், அண்ணாத்த ஆடுறார் பாடலில், இவ்விதமாக அந்த வரிகளுக்குப் பதிலடியும் இருக்கும்.
‘வில்லாதி வில்லனும் அஞ்சணும் கெஞ்சணும்…வந்திங்கு வந்தனம் சொல்லணும்’
கூடவே, இந்த வரியும்.
‘கில்லாடி ஊரிலே யாரடா கூறடா மல்லாடிப் பார்ப்பமா வாங்கடா’
முதல் பாடலில் இருக்கும் அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி, இப்படியும் பதிலடி கொடுக்க முடியும் என்பதை இப்பாடல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
இதற்குப் பிறகு தொண்ணூறுகளில் என்ன ஆனது என்பது இத்தொடருக்குத் தேவையில்லாத விஷயம் என்பதால், இத்துடன் முடித்துக்கொள்வோம்.
பி.கு–
- தொடர்புடைய கட்டுரைகளை, இதோ இங்கே சென்று ஆற அமர படிக்கலாம் – எண்பதுகளின் தமிழ்ப்படங்கள்
- இப்படங்களைப் பற்றிய தகவல்களுக்காக பலமுறை நான் தொலைபேசியில் அழைத்த என் உற்ற நண்பன் பாலசுந்தரத்துக்கு வெகுவாகக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னைவிடப் பல விஷயங்கள் தெரிந்த சினிமா அகராதி அவன்.
நண்பா,
ஒண்டர்ஃபுல் கட்டுரை,
அந்த சினிமா பத்திரிக்கை ஜெமினி சினிமாவா?சினிமா எக்ஸ்ப்ரெஸ்ஸா?நானும் அப்போது சிலது சேர்த்துள்ளேன்,நோஸ்டால்ஜியா கிளப்பிய பதிவு,28 வயசில் கமல் சதம் அடித்த தகவலும் 32 வயதில் ரஜினி சதமடித்த தகவலும் புதிது.கமலின் அந்த லாக்கப் போஸ்டர் பார்த்த நினைவு உள்ளது,புன்னகை மன்னனை சேர்க்கவில்லையே நண்பா?நேத்து ராத்திரி அம்மா மிகுந்த உற்சாகம் கொடுக்கும் பாடல்,அந்த நிலா காயுதுவும் மலேசியாவின் டாப்க்ளாஸ் பாடல்,இந்த பதிவிற்கு சம்மந்தமில்லாத அந்தி வரும் நேரம் ,வந்ததொரு ராகம் பாடலையும் மறக்கவே முடியாது,இசைஞானியின் எக்ஸ்பெரிமெண்ட் துவங்கியதன் உச்ச காலம்.
வண்ணத்திரை?
கருந்தேள் நடுநிலை தவறாமல் எழுதியிருக்கும் இந்த பதிவு நடுநிலை தவறாமல் எழுதியிருப்பதை தாண்டி முக்கியமானது. இன்னும் சில காலங்கள் கழித்து இந்த அஜீத் – விஜய் , தனுஷ் – சிம்பு பற்றி எழுதுவதற்கு இந்த அளவுக்கு சுவாரசியமான விஷயங்கள் இருக்குமா என தெரியவில்லை ( என் தலைவன் கரெக்ட் பண்ன ஃபிகர உன் தலைவன் சுட்டுட்டான் என இருக்குமோ என்னவோ). நாயகன் போஸ்டரில் இன்னொரு போஸ்டரும் முக்கியமானது . பெரிய கருப்பு – வெள்ளை போஸ்டரில் கமல் புட்டத்தை காட்டிக்கொண்டு ஒண்ணுக்கு அடித்துக்கொண்டிருப்பார். இன்னொரு போஸ்டரில் அந்த மார்க்கெட் சண்டை . மனிதனில் ரஜினி பாக்கெட் மணி போல பாக்கெட் இருக்கும் இடமெங்கும் பாம் கட்டி தொங்க விட்டிருப்பார். ரூபிணி ரஜின் தோள் மேல் சாய்ந்து கொண்டு அதிரடியான என் 2 பாம்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம் என்பது போல போஸ் கொடுத்துக்கொன்டிருப்பார்.
செம….கட்டுரை… இந்தப்படங்கள் வெளிவந்த காலகாட்டங்களை நினைவுகூர வைத்தது. விக்ரம் படம் வந்தபோது கமல் ரசிகர்கள் தியேட்டரில் அன்னதானம் கொடுத்தார்கள்.:)
//அடுத்த போட்டி – 1989 தீபாவளி. மாப்பிள்ளை Vs வெற்றிவிழா. இரண்டுமே ஹிட்//
இல்லயே தலைவா…. வெற்றி விழா பெரிய ஃப்ளாப் ஆனபடம், என நினைவு. ஒரு பத்திரிக்கையில் வந்த விமர்சனத்தில் படத்தை நாறடித்து வைத்திருந்தார்கள். பல பேருக்கு கதையே புரியவில்லை என பேசிக்கொண்டதும் நினைவு.
ஆள்தோட்டபூபதியாரே…வண்ணத்திரை இன்னும் அந்த சாணிப்பேப்பரில் 10×10 அளவில்தான் வருகிறது:)
80 களில் வந்த உயர்ந்த உள்ளம், வாழ்வே மாயம் மிஸ்ஸீங்னு நினைக்கிறேன் தல….
யோவ் வெறுந்தேளு. படிக்காதவன் பாட்டுக்கு பதில் வேலைக்காரன் பாட்டு லிங்க் குடுத்துருக்கியே. . நீயெல்லாம் மனுசனா?
அதானே? உங்களுக்குன்னு ஒரு ஃப்ரூஃப் ரீடர் இல்லாதனால என்ன வேணும்னாலும் போஸ்ட் பண்ணுறதா?
ராஜேஷ்..
தேவர் பிலிம்ஸ் படங்களை இயக்கிய தியாகராஜன், தேவரின் மருமகன்..! அந்த உறவு நெருக்கத்தில்தான் தேவர் பிலிம்ஸ் படங்களை தொடர்ந்து இயக்கினார்..!
/ (தாய்வீட்டின் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக, சுஹாஸினி பாடும் தங்கை செண்டிமெண்ட் பாடல் ‘ஆசை நெஞ்சே’, இப்போதும் என் ஃபேவரைட். கூடவே, ‘அழகிய கொடியே ஆடடி’ , ‘உன்னை அழைத்தது பெண்’ ஆகிய சூப்பர் பாடல்கள் இதில் எனக்குப் பிடிக்கும். சங்கர் கணேஷ், ஹிந்தி சாயலில் இசையமைத்திருந்த படம்). //
இப்படத்திற்க்கு இசை பப்பிலகரி.
தமிழ்,இந்தி இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்ட படம்.
தேவர் பிலிம்ஸ் சொத்துக்களை இழந்து…
நடுத்தெருவில் நின்றது இப்படத்தால்.
சூப்பர் தல… வெறித்தனமா சினிமா பாத்துருப்பீங்க போல… :):) என்னை மாதிரி 80களின் இறுதியில் பிறந்த சின்ன பசங்களுக்கு இந்த கட்டுரை செம்ம ட்ரீட்… முந்தின தலைமுறையோட ரஜினி-கமல் போட்டி பத்தியெல்லாம் சொன்னது செம்ம இன்ட்ரஸ்டிங்…
ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு கட்டுரைல ‘நான் சிகப்பு மனிதன்’ல வர வெண்மேகம் விண்ணில் பாட்டு உங்களுக்கு ரொம்ப பிடிச்சதுன்னு சொல்லிருந்தீங்க… இப்போ இன்னோரு தங்கை சென்டிமென்ட் சாங்… :):)
கலக்கல் கட்டுரை தல! தொடரை மெருகேற்றியிருக்கிறது இந்தப் பதிவு..
அறியாத பல விடயங்களை அறிந்துகொண்டேன், நன்றி!
இந்தக் காலகட்டத்தில் வேறு எந்த நடிகர்களும் இவர்கள் மாதிரி போட்டி போட்டுக்கொள்ளவில்லையா?
*80களில் விஜயகாந்த் ஒரு வருடத்துக்கு 11 படம் வீதம் வெளியிடுவாராமே.. அவரைப் பத்தி தொடரில் வருமா??
இது ஒரு மிக முக்கியமான கட்டுரை. ஏனெனில் இது பதிவு செய்வது வெறும் இரண்டு நடிகர்களின் போட்டியை மட்டும் அல்ல. அது எண்பதுகளில் நம் தமிழகத்து மக்களின் வாழ்வியலோடு கலந்திருக்கும் விஷயமும் கூட! நான் எண்பதுகளில் மிகவும் சிறுவனாக இருந்ததால், நீங்கள் குறிப்பிட்ட படங்களை எல்லாம் தொன்னூறுகளில் பார்த்த ஞாபகமும்,அந்த கட்டத்தில் ரஜினியின் மீது உயிராய் இருந்ததும்,கமல்ஹாசனை யாராவது பிடிக்கும் என சொன்னால் அவனை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும் சகஜமாக இருந்தது எங்கள் ஊரில். அப்போது எங்கள் ஊரில் இரண்டு டூரிங் கொட்டாய்கள் உண்டு. இரண்டுமே இப்போது பிளாட்களாக நிற்கின்றன.ரஜினியும்,கமலும் “எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்” என இன்றும் ஒவ்வொரு திருவிழாவிலும் இணைந்து பாடிக்கொண்டே இருக்கிறார்கள்!!!!!!!!!!!!!!!!!!!
valakam pola pattaya kelapeeta..super..v.good..bramaandam:)
dei..araathu mentioned the nayagan’s poster where kamal was pissing and looks back..super machi..i still clearley remember that poster its a b&w poster..appo vandha cinema poster’s laya adhu romba differenta irundhuchu and i was puzzled and cant belive its kamal..oru chinna matteru..u missed naanum oru thozhilaali,uyarndha ullam, and pesum padam 🙂
oru mukyamaana padtaha uttuta..Bharathu Bharathu nu solluvaanga…Mr.Bharath
Super Karundhel.
I have a request .. An article on the heroines of the 80s, apdiye Thalaivi Amala pathi oru complete article. 🙂
நல்ல கட்டுரை. அப்படியே உங்கள் வயதையும் தெரியப்படுத்தி விட்டீர்களே !
யெப்பா..படித்து முடிக்கவே நாக்கு தளர்ந்துவிட்டது..ஆனால், சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இல்லை..நான் பிறக்கவே இல்லாத காலத்தில் வந்த இரு துருவங்களின் திரைப்படங்களை குறித்த நினைவு மீட்டல் தங்களது இப்பதிவு.அருமை..மிக்க நன்றி சார்.
//சரியாக ஒரு வருடம் கழித்து – 1884 – தீபாவளி. எனக்குள் ஒருவன் Vs நல்லவனுக்கு நல்லவன். //
1884 ??
சிறப்பான கட்டுரை நண்பா.
நல்ல அலசல் !
boss, from your write-up about vikram, i am realizing that both of us are of exactly same age, and have seen tamil movies with ‘the same eyes’!! god bless!
நண்பர்களே… என்னைப்போலவே எண்பதுகளின் திரைப்படங்களுக்கு ஒரு ரசிகர் படையே இருப்பதை, பின்னூட்டங்களிலிருந்து அறிந்துகொண்டேன். எண்பதுகளின் படங்களில் இன்னமும் பல சுவாரஸ்யங்கள் மிச்சம் இருக்கின்றன. அவதியும் படிப்படியாக, மெதுவாகப் பார்க்கலாம். உங்கள் பின்னூட்டங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@ உலக சினிமா ரசிகரே – தாய் வீடுக்கு எனக்குத் தெரிஞ்சவரைக்கும் சங்கர் கணேஷ் தான் இசை. எனக்கே அது நல்லா நினைவிருக்கு. இணையத்துலயும் பார்த்தேன். அதுலயும் சங்கர் கணேஷ்தான் போட்ருக்கு. பப்பி லஹரி ஒருவேளை இதோட ஹிந்தி பதிப்புக்கு இசையமைச்சிருப்பாரோ?
ரஜினி “நடிக்கிறத” நிப்பாட்டுனது எண்பதுகளில் இருந்து தான்..
கமல் கமலஹாசனாகவே எல்லா படங்களிலும் நடிக்க ஆரம்பிச்சது அதே 80களில் இருந்துதான்.
டைரக்டர்கள் பேரு போக, இசையமைப்பாளர் – ஒளிப்பதிவாளர்களுக்காக படம் ஓட ஆரம்பிச்சதும் இந்த 80களில் இருந்துதான்.
தனிப்பட்ட முறையில், பாரதிராஜாவின் வரவு ஒரு மிகபெரிய radical change என்று சொல்லுவேன் (ஹி..ஹி…பெரிய கண்டுபிடிப்பு)..
—————-
கட்டுரை குறித்து, உங்கள் தனிப்பட்ட அனுபவங்களை இன்னும் அதிகமாக விவரித்து – முன்னிலைபடுத்தியிருக்கலாமோ என்று தோணியது. Of course, ரெண்டு மூணு வயசுல நடந்தது ஞாபகம் இருக்க போறதில்ல. குறைந்தபட்சம் போஸ்ட் – விக்ரம்……….
எண்பதுகளில் ரஜினி கமல் இருவரும் ஒரே மாதிரியான மசாலா படங்களாக நடித்திருந்தாலும், கமல் ரஜினிக்கு சரியான போட்டியாகவே இருந்துள்ளார்.பின்னர் நாயகன் படத்தில் நடித்த பிறகு பிடித்தது அவருக்கு.அதன் பின் பாதை மாறி நடிக்க வாய்ப்புள்ள வித்தியாசமான படங்களாக நடிக்க துவங்கினார்.ஆனால் ரஜினி பாதை மாறவில்லை. பெரிய பேனர்,பெரிய இயக்குனர்,ரீமேக் படம் என்று பாதுகாப்பாகவே இருந்துள்ளார். இப்பவும் எனக்கு கமல் பாதை மாறாமல் அப்படியே மசாலா படங்களாக நடித்திருந்தால் என்னாவது என்று நினைபதுண்டு. ஆனால் என்னதான் ரஜினி கமலை முந்தினாலும் 90 களில் கமல் முயலும் பல விஷயங்களில் அவரும் ஈடுபட்டதுண்டு.
இதுபற்றி நான் விரிவாக ஒரு பதிவு போடலாம் என்று உள்ளேன்.
Boss, I think Mr Bharath was a mega hit for Rajni in 80s
dear rajesh i cant able to open the web pages of charuonline.com will u plz write me the exact url of ur friend
பிரிட்டிஷ்காரன் இந்திய வரலாற்றை எழுதுவது போல்….சகட்டுமேனிக்கு வரைஞ்சு தள்ளியாச்சு… இதெல்லாம் காலக்கொடுமை! 5 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததையே தமிழனால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாது.. இதுல 25 வருஷத்துக்கு முந்தைய மேட்டர்தானே.. சும்மா அடிச்சு விடுங்க
Nice Review
hmm…many corrections 🙂
Sattam- Flop (In one of the magazines, the review had the tagline ‘Sattam – Mattam’)
Thai Veedu – Disaster (Huge losses for Devar Films)
Raj Thilak – Hit (Multistarrer)
Kai Kodukkum Kai – A big flop for Mahendran
Vetri Vizha did well in B&C and average in A centers.
நீங்க கமலை விமர்சித்து பதிவு போட்ட போது கமல் ரசிகர்கள் திட்டி தீர்த்தார்கள் .’
இப்போ தீவிர கமல் வெறுப்பர் வருண் என்பவர் உங்களை கேவலமாக திட்டி தீர்த்து வருகின்றார்.
மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி தான்
உங்க கமெண்ட்டை பார்த்துட்டு வருண்னு கூகிள் பண்ணி படிச்சி பார்த்தேன். செம்ம காமெடி 🙂 .. 2012 ஏப்ரல்ல நான் போட்ட போஸ்டை இப்போ படிச்சி பார்த்துட்டு காமெடி பண்ணிருக்காரு :-).. செம்ம மொக்க போஸ்ட் அது 🙂
வாழ்வே மாயம் விடுபட்டுள்ளது.
தூங்காதே தம்பி தூங்காதே ஹிட் படம் என்று கூறியுள்ளீர்கள். நான் அதை திருட்டு கசெட்டில் தான் பார்த்தேன். ஆனால் அது எப்படி ஹிட் ஆகிச்சு என்று தெரியவில்லை.
வறுமையின் நிறம் சிகப்பு தோல்வி படம் ஆனால் நல்ல படம். பாலசந்தர் தான் இயக்கினாரா என்பது சந்தேகத்தை தோற்றுவிக்கும் படம். பாலசந்தரின் வழமையான கிளிசே காட்சிகள் இல்லாத படம்
வாழ்வே மாயத்துக்கூட எதாவது ரஜினி படம் வந்ததா? இது ரஜினி – கமல் படங்கள் ஒரே நாளில் வந்ததைப் பத்தின போஸ்ட்தான் பாஸ். அதேபோல், எனக்குத் தெரிஞ்சி தூ.த.தூ ஹிட்தான். ஒருவேளை அது ப்ளாப்ன்னு உங்களுக்கு உறுதியா தெரிஞ்சா இங்க கமண்ட் போடுங்க.. படிக்கிறவங்களுக்கு ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்.
படத்தை தியேட்டரில் மக்களோட பார்த்திருந்தா தெரியும்….இல்ல GOOGLE பண்ணி பாரு
” சாதா சினிமா ரசிகன” …
படத்தை தியேட்டரில் மக்களோட பார்த்திருந்தா தெரியும்….இல்ல google பண்ணி பாரு
Awesome blog! Is your theme custom made or did you download it from somewhere?A theme like yours with a few simple adjustements would really make my blog jump out.Please let me know where you got your design. Thank you
This is such a great resource that you are providing and you give it away for free. I love seeing websites that
understand the value of providing a quality resource for free.
Thanks for this great resource thanks a lot for giving everyone remarkably memorable opportunity to read in detail from this web site.
I am really impressed along with your writing abilities
filimalaya endra pathirikkai ena ninaikiren sariya
கமலுக்கு ஜகா வாங்கரானுங்க பொட்ட பசங்களா
இந்த போட்டவன் கமலுத சப்பி சப்பி போட்டிருப்பான் போல செம ஓலு பாடு பொட்ட link கமலுக்கு மட்டும் கொடுப்பாராம் பில்லா முரட்டுக்களை மன்னன் தளபதி பத்தி சொல்ல மாட்டாராம் ஆனா 90 களில் அப்பறம் வந்த கமல் படம் பற்றி எல்லாருக்கும் தெறியும் இல்ல அதான் ஜெகாவாங்கிட்டான் போல
கை கொடுக்கும் கை is a HIT ?????
Ok Sir. I got it. U are a BIG fan of Kamal…
நீங்கள் 90 களில் யாருடைய படம் மாபெரும் வெற்றிகளை குவித்தது என்பது எழுதாமல் ஜெகா வாங்கியதில் இருந்தே தெரிகிறது நீங்கள் யாருக்காக ஜால்ரா தட்டனீங்கனு 90 களில் யார் படம் மாபெரும் வெற்றிகளை குவித்தென்று மக்களுக்கு தெறியும் அதனால் ஜெகா வாங்கிவிட்டார் வெற்றியில் ரஜினியை மிஞ்ச எவனும் இல்லடா