Karakter (1997) – Dutch
தந்தையின் பெயர் தெரியாமல் இச்சமூகத்தில் வாழும் புதல்வர்களை, சமூகம் எப்படி எதிர்கொள்கிறது? நமது ஊராக இருந்தால், அடித்தே கொன்றுவிடுவார்கள். அதுதான் வழக்கம். எனவே, வெளிநாடுகளைப் பற்றி யோசிப்போம். நெதர்லாந்து. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள். தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் ட்ரெவர்ஹாவன் என்ற கோர்ட் அமீனாவைப் பார்க்கிறோம். ‘ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது’ என்ற ஒரு சொலவடை தமிழகத்தில் உண்டு. அமீனா ஒரு வீட்டுக்குச் செல்வதே, அந்த வீட்டு மக்களைக் காலி செய்ய வைப்பதற்குத்தான். நெதர்லாந்திலும் இதே தான் நடக்கிறது. ட்ரெவர்ஹாவன் நீதிமன்ற ஆர்டரை வைத்துக்கொண்டு எந்த வீட்டுக்குச் சென்றாலும், அது, அந்த வீட்டு மக்களை உடனடியாகக் காலி செய்ய வைப்பதற்காகத்தான் இருக்கும்.
மழை பெய்தாலும் சரி, வீடே பற்றி எரிந்துகொண்டிருந்தாலும் சரி.. அவரது இந்த வேலையை சீரும் சிறப்புமாகச் செய்வதே அவரது தனித்தன்மை. இவர் செல்ல வேண்டிய இடம், ஒரு போர்க்களத்துக்கு மத்தியில் இருப்பதாக இப்படத்தில் ஒரு காட்சி வருகிறது. அங்கேயும் தயங்காமல் சென்று காலிசெய்யச் சொல்லும் நீதிமன்ற உத்தரவை ட்ரெவர்ஹாவன் ஒட்டிவிட்டு வருகிறார்.
இப்படிப்பட்ட கடமை தவறாத கண்ணியமில்லாத அதிகாரியான ட்ரெவர்ஹாவனுக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கிறது.
அவரது வீட்டைப் பார்த்துக்கொள்ளும் யோபா என்ற பெண்மணி, வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் ஆகியும், ட்ரெவர்ஹாவன் அவருடன் ஒரு வார்த்தை கூடப் பேசியவரில்லை. அப்படி இருக்கையில், ஓர் நாள், அந்த அம்மணி ஒரு பொருளை உடைத்துவிட, அவரைக் கோபத்துடன் நெருங்கும் ட்ரெவர்ஹாவன், அந்த அம்மாள் மீது பாய்ந்து மேட்டர் பண்ணி விடுகிறார். இதன் விளைவாக, அந்த அம்மாள் கருத்தரிக்கிறார். உடனேயே வேலையை விட்டும் நின்று விடுகிறார்.
அன்றில் இருந்து, ஒவ்வொரு வருடமும் ட்ரெவர்ஹாவன் அந்த அம்மாளுக்கு ஒரு கடிதம் எழுதுவார். அதில், இந்த ஒரே வரிதான் இடம்பெற்றிருக்கும்.
‘எப்போது திருமணம் செய்துகொள்ளலாம் யோபா?’
அதில், பதில் எழுதுவதற்குமான ஒரு தபால் உறையையும் கூடவே வைத்து அனுப்புவார் தலைவர் ட்ரெவர்ஹாவன். ஆனால், ஒவ்வொரு முறையும் அதனை வாங்காமல், திருப்பி அனுப்பிவிடுவது யோபாவின் வழக்கம். ஆனால், விதி, தனது இருண்ட கண்களால் யோபாவைப் பார்த்துச் சிரித்த ஒரு நாள்… இந்தக் கடிதத்தை வாங்கி, அதற்கு ஒரு பதிலும் எழுதி அனுப்புகிறார் யோபா.
‘ஒருக்காலும் உன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் ‘
கடுப்பின் உச்சத்துக்குச் செல்லும் ட்ரெவர்ஹாவன், யோபாவைப் பழிவங்கும் வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கிறார்.
யோபாவுக்கு இதற்குள் பிறந்துவிட்டிருந்த மகன் – பெயர் கேடட்ரூஃப் – பள்ளி செல்லத் தொடங்கிவிடுகிறான். அங்கே, தகப்பன் பெயரைக் கேட்டு இவனைக் கேலி செய்யும் சிறுவர்களுடன் பதிலுக்குச் சண்டையிட்டு, ஒருவனைத் தாக்கி விடுகிறான். இதனால், யோபா வீடு மாறிச் செல்லும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
புதிய இடத்துக்குச் செல்லும் யோபா, மகனை நல்லபடியாக வளர்க்கத் தலைப்படுகிறாள். ஆனால், சிறுவன் கேடட்ரூஃபுக்கு, தனது தந்தையான ட்ரெவர்ஹாவனைப் பற்றித் தெரிந்திருக்கிறது. அவரது அலுவலகம் முன்பு அடிக்கடி நடமாடத் தொடங்குகிறான்.
இப்படி இருக்கையில், ஒரு திருட்டுக் கேஸில் சிக்கிச் சிறைக்குச் செல்லும் கேடட்ரூஃப், தனது தந்தையின் பெயர் ட்ரெவர்ஹாவன் என்று சொல்ல, போலீஸ் அதிகாரிகள் மத்தியில் சலசலப்பு உண்டாகிறது. ஆனால், அங்கு வரும் ட்ரெவர்ஹாவன், தனக்கும் அந்தச் சிறுவனுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று சொல்லிவிடுகிறார். இதனால், தர்ம அடி வாங்கும் சூழ்நிலை கேடட்ரூஃபுக்கு.
அங்கிருந்து தப்பிக்கும் சிறுவன் கேடட்ரூவ், தனது தாயிடம் வந்து சேர்கிறான். தாய் அவனுக்குப் பல புத்திமதிகள் சொல்கிறாள். கேடட்ரூஃப் மெல்ல வளர்ந்து பெரியவன் ஆகிறான் (இந்த இடத்தில் தமிழ்ப்படத்தின் நினைவு தவிர்க்க முடியாமல் வந்தது). தனது தாய், இவன் வேலையே செய்யாமல் சும்மா இருப்பதால் தான் தன்னிடம் பேசுவதில்லை என்று அவனுக்குப் புரிகிறது.
பலவிதமான வேலைகளுக்கும் செல்லும் கேடட்ரூஃபுக்கு, நிலையான வருமானம் இருப்பதில்லை. அந்த நேரத்தில், அவனது வீட்டில், கேடட்ரூஃபின் அறையை, அவனது தாய், இன்னொருவனுக்கு வாடகைக்கு விடும் கொடுமையும் நடக்கிறது. கடுப்பு, கோபம், எரிச்சல், இன்னபிற உணர்வுகளின் உச்ச நிலையை அடையும் கேடட்ரூஃப், தினசரி ஒன்றில் வந்த விளம்பரம் ஒன்றைக் கண்ணுற்று, ஒரு சிகரெட் விற்கும் கடையை வாடகைக்கு எடுக்கத் தலைப்படுகிறான்.
நமது பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் வருவதைப் போலவே, இவன் செல்லும் அத்தனை வங்கிகளும், இவனுக்குப் பணம் தர மறுக்கின்றன. கேடட்ரூஃபை இப்போது நாம் தொட்டால், அவன் வெடித்துச் சிதறி, அவனுக்குள் இருக்கும் கோபம் பொங்கி வழியக்கூடும். அத்தனை வெறியில் நடமாடிக்கொண்டிருக்கிறான்.
ஒரே ஒரு வங்கி மட்டும் இவனுக்குப் பணம் தர முன்வருகிறது. சந்தோஷத்தில், அந்த சிகரெட் கடையை வாங்கிவிடுகிறான். தனது முதல் தொழில் என்ற குஷியில், தாயிடம் சொல்லிக்கொண்டு, வேலைக்கு வருகிறான். அவன் அலுவலகத்தில் நுழையும் நேரத்தில் தொடங்கும் மழை, அடுத்த பல நாட்களுக்குக் கொட்டித் தீர்க்கிறது. கடைக்கு ஒரு வாடிக்கையாளரும் வரவில்லை. அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெரிய பெரிய பெட்டிகளிலும், சிகரெட்டுகள் இருப்பதில்லை. வெறும் வைக்கோல தான் இருக்கிறது.
தான் ஏமாற்றப்பட்டது தெரிந்த கேடட்ரூஃப், மறுபடியும் தாயிடமே வந்து சேர்கிறான். அதே நேரத்தில் தான், அவன் கடன் வாங்கிய வங்கியானது, , தனது பழிவாங்கும் தந்தை ட்ரெவர்ஹாவனின் சொந்த வங்கி என்பது அவனுக்குப் புரிகிறது..
அய்யகோ? இதற்குப் பின் என்ன தில்லுமுல்லு ட்ரெவர்ஹாவன் சிந்தித்து வைத்திருப்பாரோ?என்று கேடட்ரூஃப் எண்ணிக்கொண்டிருக்கையில், அவனது பணத்தை உடனடியாகக் கட்டும்படி, செய்தி வருகிறது. அதுவும் அவனது தந்தையின் வேலைதான் என்பது கேடட்ரூஃஃபுக்குப் புரிகிறது.
இதுவரை நான் சொல்லியுள்ளது, கதையின் ஆரம்ப அரை மணி நேரம் மட்டுமே. இதற்குப் பின் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள, படத்தைப் பாருங்கள்.
பொதுவாக, உலகப்படங்கள் என்றால் கொஞ்சம் மெதுவாகப் போகும். ஒரே சீரியஸாக வேறு இருக்கும் (என்பது உலக நம்பிக்கை). ஆனால், இப்படம், நகைச்சுவையாகவும், கொஞ்சம் விறுவிறுப்பாகவும் செல்கிறது. தந்தை மகனுக்கிடையில் இருக்கும் விரோதமும், குரோதமும், நகைச்சுவை கலந்த நடையில் சொல்லப்பட்டிருப்பதால், இப்படம் அலுப்பதில்லை.
இப்படத்தில், தந்தையாக நடித்திருக்கும் Jan Decleir , கச்சிதமான வேலையைச் செய்திருக்கிறார். அவரைப் பார்க்கும்போதெல்லாம், நமக்கு வரும் வெறுப்பும், சிரிப்புமே இந்தக் கதாபாத்திரத்தின் வெற்றி. படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை, இவரது கடமை தவறாத காமெடிகள் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன. பிரகாஷ்ராஜை நினைவுபடுத்தியது இவரது கதாபாத்திரம்.
இப்படத்தின் குறைகள் என்று சொன்னால், பெரிதாக ஒன்றும் இல்லை. வங்கி சம்மந்தமாகவும், கோர்ட் சம்மந்தமாகவும் சில சிக்கலான பதங்கள் அவ்வப்போது கையாளப்படுகின்றன. அவை, புரிவதற்குச் சற்று நேரம் பிடிக்கிறது. இருந்தாலும், அவை இப்படத்துக்கு முக்கியமில்லை. இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையே நிலவும் முரண்பாடுகளே இப்படத்தை மேலும் மேலும் ரசிக்க வைக்கின்றன.
இப்படம், 1998 ஆஸ்கரில், சிறந்த வெளிநாட்டுப்படத்துக்கான விருதை வாங்கியது. இதன் இயக்குநரான Mike Van Diem இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று நெட்டில் நோண்டினேன்.. அவர் இப்போது விளம்பரப் படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாராம்.
படத்தைக் கொடுத்து உதவியவர், நமது ஹாலிவுட் பாஸ்கரன் அவர்கள். இதுமட்டுமில்லை. இன்னும் பல படங்கள். வரிசையாக வரும் ? .
Karakter படத்தின் ட்ரெய்லர் இங்கே.
அருமையான பதிவு…கவர்ச்சியான நடை. வாழ்த்துக்கள்
உங்களது எல்லா பதிவுகளும் தூண்டுகிறது —— அதாவது படம் பார்க்க
அடுத்து வாடா படத்தின் விமர்சனம் வேண்டும். இது போன்ற முயற்சிகளை ஆதரித்தால்தான் தமிழ் சினிமா உலக தரத்தில் வர ஆரம்பிக்கும்.
—-இப்படிக்கு nerolac paint தல @ சுந்தர்.C வெறியர்கள் சங்கம்
அனானி said..
//கவர்ச்சியான நடை//
என்ன.. ஒரு சிலுக்கு ரேஞ்சுல இருக்குமா நடை?
அட நானே வாடா பார்க்கலாம்னு தான் இருக்கேன்.. சுந்தர் சியோட மொக்கை காமெடி படங்கள் மேல ஒரு கண்ணு 🙂
//ஒரு சொலவடை தமிழகத்தில் உண்டு//
அந்த வடை எங்க கிடைக்கும்
அந்த வடை, இப்போது எங்கயும் கிடைக்குறதில்ல.. அதுக்குத் தட்டுப்பாடு வந்திருச்சாம்ல .. காரணம் அறிய, வெறுந்தேள் வெங்காயத்தின் புதிய பதிவைப் படியுங்கள்.. 🙂
நானே என்னுள் இல்லை – கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,கேமரா,ஆக்சன்,ப்ரோடக்சன் – கலைமாமணி ஜெயசித்ரா
நடிப்பு,இசை – உங்கள் அமரேஷ் கணேஷ்
இந்த படம் பார்க்க பரிந்துரை செய்கிறேன்
(உபயம் – -தினத்தந்தி, சலூன் கடை)
ரெம்ப நல்ல இருக்கு உங்க விமர்சனம்,
என்ன உலக படத்தின் dvd க்கு என்றே மாத சம்பளத்தில் ஒரு பெரிய தொகையை ஒதுக்கி விடுவிர்கள் போல ……..
//அந்த அம்மாள் மீது பாய்ந்து மேட்டர் பண்ணி விடுகிறார்//
மேட்டர்னா – Solid,Liquid,Gas இதுபோக Fourth state of Matter – Plasma
இதுல ஏதாவது ஒண்னுங்களா
உங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிற்து
பி.கு : இது டெம்பளெட் பின்னூட்டம் இல்லை.
என்னாது நானே என்னுள் இல்லையா?
அய்யகோ.. மீ த சூசைட் 🙂
//அந்த அம்மாள் மீது பாய்ந்து மேட்டர் பண்ணி விடுகிறார்//
மேட்டர்னா – Solid,Liquid,Gas இதுபோக Fourth state of Matter – Plasma
இதுல ஏதாவது ஒண்னுங்களா
—
இல்லிங்கோ மேட்டர்னா.. ஜிம்பலிக்கா ஜிம்பாலி 🙂
@ மொக்கராசா – ம்ம பிக்ஃப்ளிக்ஸ் (Bigflix) இருக்க பயமேன் ? அதுவே துணை.. renting தான்.. ஒன்லி வாடகை.. 🙂
மேலே இருக்கும் கமெண்ட்களுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. சீனாவிலிருந்து யாரோ என் நெட்வொர்க்யை ஹேக் செய்திருக்கிறார்கள்.
இதுக்கு மேல அதிகப்பிரசங்கித்தனமா கமெண்ட் போட்டா தல காண்டாயிடுவாரு…அதுனால நா ஒழுங்கா முழுவதும் பதிவை படிக்க போகிறேன்..
இன்னுமா யாரும் வரல…என்னடா இது..மதுரைக்கு வந்த சோதன…..
நானே என்னுள் இல்லை – கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,கேமரா,ஆக்சன்,ப்ரோடக்சன் – கலைமாமணி ஜெயசித்ரா
நடிப்பு,இசை – உங்கள் அமரேஷ் கணேஷ்
இந்த படம் பார்க்க பரிந்துரை செய்கிறேன்
(உபயம் – -தினத்தந்தி, சலூன் கடை)
–
Pretty good reward.
//மேட்டர்னா – Solid,Liquid,Gas இதுபோக Fourth state of Matter – Plasma
இதுல ஏதாவது ஒண்னுங்களா
—
இல்லிங்கோ மேட்டர்னா.. ஜிம்பலிக்கா ஜிம்பாலி :)//
ஆஹா…அற்புதமான கருத்துக்கள்.. ஆழ்ந்த சொற்கள்.. தீர்ந்தது சந்தேகம் 🙂
மூகம் எப்படி எதிர்கொள்கிறது? நமது ஊராக இருந்தால், அடித்தே கொன்றுவிடுவார்கள்.
—–
???????????????????????????????
கருந்தேள் கண்ணாயிரம் said…
//மேட்டர்னா – Solid,Liquid,Gas இதுபோக Fourth state of Matter – Plasma
இதுல ஏதாவது ஒண்னுங்களா
—
இல்லிங்கோ மேட்டர்னா.. ஜிம்பலிக்கா ஜிம்பாலி :)//
ஆஹா…அற்புதமான கருத்துக்கள்.. ஆழ்ந்த சொற்கள்.. தீர்ந்தது சந்தேகம் 🙂
—
நன்று 🙂
//Pretty good reward.//
அந்த இங்கிலிபீச்சு படம் எந்த தியேட்டரில் ஓடுது…..
@ கொழந்த – மீண்டும் அனானி ஆப்ஷனை தொறக்கலாம்னு கீறேன்… அப்பதான் நிறைய பேரு வருவாய்ங்களோ? 🙂 என்ன, என்னோட எந்திரன் பதிவுல வந்திருக்குற கமெண்ட்ஸ் போல நிறைய வரும் 🙂 .. அதை ஒரு லுக்கு விடவும் 🙂
//Pretty good reward.//
அந்த இங்கிலிபீச்சு படம் எந்த தியேட்டரில் ஓடுது…..
—
மதுரை தங்கரீகல் தியேட்டர்ல கொழந்த
//தந்தையின் பெயர் தெரியாமல் இச்சமூகத்தில் வாழும் புதல்வர்களை, சமூகம் எப்படி எதிர்கொள்கிறது?//
இதையே எங்கள் ஓலக சினிமா மேதை – மணிரத்னம் தளபதியில் எடுத்து விட்டார். அவரை விட்டுவிட்டு ஆங்கிலேயர்களையே புகழும் உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமா mm கூட வளராது
//கொழந்த – மீண்டும் அனானி ஆப்ஷனை//
தல..எனக்கு அந்த பழக்கம் கிடையவே கிடையாது..எப்படி என்று கூட தெரியாது..அதை எப்படி பண்றது என்று ஒரு crash course தர வேண்டுகிறேன்..நேத்து ஒருத்தர் கருணாநிதி குடும்பத்தை total damage பண்ணிட்டார்..வெறி கொண்டு உளவுத்துறை அவரை தேடிக்கொண்டிருக்கிறது
நேத்து ஒருத்தர் கருணாநிதி குடும்பத்தை total damage பண்ணிட்டார்..வெறி கொண்டு உளவுத்துறை அவரை தேடிக்கொண்டிருக்கிறது
—
யாரது கொழந்த 🙂
//நேத்து ஒருத்தர் கருணாநிதி குடும்பத்தை total damage பண்ணிட்டார்..வெறி கொண்டு உளவுத்துறை அவரை தேடிக்கொண்டிருக்கிறது//
அடடே… அன்னாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக.. அவரு யாருன்னு எதாவது க்ளூ கிடைச்சதா?
@இராமசாமி கண்ணண்
//மதுரை தங்கரீகல் தியேட்டர்ல //
ணா..தங்கரீகல் தியேட்டர் எவ்வளவோ மாறிருச்சு. எல்லாம் புதுப் படங்கள் தான். வாசல்ல இருந்த பழைய புத்தகக்கடை மட்டும் இருக்கு
அப்படியா .. இது ஒரு துன்பியல் சம்பவம் 🙂
//அவரு யாருன்னு எதாவது க்ளூ கிடைச்சதா//
இல்ல தல…தசாவதாரம் கமலுக்கு அப்பறம் பல கெட்-அப்களில் சுத்துறாராம்.தீடீர்னு மூக்கு பக்கம் ஒரு மரு இருக்குமா டக்குனு அது இருக்காதாம்…கண்ணாடி இருக்குமாம் அதுவும் சில சமயம் இருக்காதாம். அதுனால RAW ரொம்பவே சிரமப்படுறாங்க…அந்த பக்கம் வந்த பிடிச்சு வைய்யுங்க…அப்படியே என் பதிவுகள படிக்க உடுங்க..அதுவே அவருக்கு கிடைக்கும் கொடுமையான தண்டனை
நீங்க சொல்ற அடையாளத்தையெல்லாம் வெச்சிப் பார்க்கும்போது, நம்ம ராமசாமி கண்ணன் மாதிரித்தான் இருக்கு… நம்ம நாஞ்சில் இவரைப் பத்தி என்ன்னாண்ட நிறைய சொல்லிருக்காரு 🙂
பதிவு போட்டு எவ்வளோ நேரம் ஆச்சு..ஒருத்தரையும் காணோமே..
ஒரு சமுதாய அக்கறை வேண்டாம்…சுத்தமா யாருக்கும் பொறுப்புணர்ச்சியே இல்ல..என்ன சமூகம் இது….இந்த குடும்ப ஆட்சி தான் இதற்கு காரணம்..
நீங்க சொல்ற அடையாளத்தையெல்லாம் வெச்சிப் பார்க்கும்போது, நம்ம ராமசாமி கண்ணன் மாதிரித்தான் இருக்கு… நம்ம நாஞ்சில் இவரைப் பத்தி என்ன்னாண்ட நிறைய சொல்லிருக்காரு 🙂
—
இன்னா நைனா.. நான் மாட்டுக்கு சும்மா குந்தின்னுருக்கேறேன்.. ஏன் இப்படி.. ரணகளம் ஆக்காம விடமாட்டிங்களா 🙂
ஹாஹ்ஹா 🙂 .. மக்கள்லாம் பொறுமையா நாளைக்கு வருவாய்ங்க போலயே 🙂 .. சே சே.. தமிழகத்தின் பொற்கால ஆட்சியைப் பத்தி இப்புடில்லாம் பேசிகிட்டு.. வாயக் கழுவுங்க
நல்ல விமர்சனம்,படம் download போட்டாச்சு night-டே பாத்துதிட வேண்டியதுதான்,
//இன்னா நைனா.. நான் மாட்டுக்கு சும்மா குந்தின்னுருக்கேறேன்.. ஏன் இப்படி.. ரணகளம் ஆக்காம விடமாட்டிங்களா :)//
அட நெசம்மாத்தேன்… நாஞ்சில் உங்களைப் பத்தி நிறைய சொன்னாரு 🙂 .. அவரே வந்து இதை ஒத்துக்குவாரு பாருங்க 🙂 நீங்களும் அதை லைக் பண்ணுறீங்களாம்ல 🙂
@ டெனிம் – உங்களோடது, டெம்ப்ளேட் பின்னூட்டம் இல்லையே 🙂 சும்மாத்தான் கேட்டேன் 🙂
அட நெசம்மாத்தேன்… நாஞ்சில் உங்களைப் பத்தி நிறைய சொன்னாரு 🙂 .. அவரே வந்து இதை ஒத்துக்குவாரு பாருங்க 🙂 நீங்களும் அதை லைக் பண்ணுறீங்களாம்ல 🙂
—
எத… அட பாவிகளா மொத்த கிளம்பிட்டிங்களா 🙂
எதையா… அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன் 🙂 அவராண்டையே கேட்டுத் தெரிஞ்சிக்கங்க 😉 ஹீ ஹீ
அப்படியெல்லாம் கிடையாது தேள்,படம் பார்த்துவிட்டு காலையில் comment போடுகிறேன்
//அப்படியெல்லாம் கிடையாது தேள்,படம் பார்த்துவிட்டு காலையில் comment போடுகிறேன்//
அப்ப ரைட்டு .. கருத்தைக் காலையில் பதிக்கவும் ..
யாரயாவது வம்பிளுக்கணும்னு துடியா துடிக்குது…இத என்ன பண்றது..ஏதாவது ஒரு வலிசொல்லுங்க..
@கொழந்த
எது துடிக்குது கொழந்த
யாரயாவது வம்பிளுக்கணும்னு துடியா துடிக்குது…இத என்ன பண்றது..ஏதாவது ஒரு வலிசொல்லுங்க.
—
கிம்டுக்க பத்தி கெட்ட வார்த்தல திட்டி பதிவு போடுங்க. கொரங்கு கண்ணாயிரத்த வம்புக்கிழுகலாம்
அய்யா டெனிம் கொஞ்சம் பலகைக்கு வரீங்களா
சீரியஸ்ஸா…
இப்ப தான் முதல்முறையாக 44 கமெண்ட்வரை வேறுயாரும் கருந்தேளாரின் பதிவுக்கு பின்னுட்டம் போடாமல் இருக்கீறார்கள்..அய்யகோ..எங்கே போகிறது இந்த தேசம்…
இத தட்டிக்கேட்க யாருமேயில்லையா…?
பால் தாக்கரேயின் பேரனே…நீயாவது ஏதாவது கருத்து சொல்லக்கூடாதா?
டச்சு பண்ண படமோ!
உங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிற்து
பி.கு : இது டெம்பளெட் பின்னூட்டம் இல்லை.
அருமையா இருக்கு தேள்.நனி நன்று. வடைகொத்தி பறவை ராமசாமி பேக் டு தி ஃபார்மா?
This comment has been removed by the author.
இதுதான் சரியான் கமெண்ட்:-
————————–
நண்பா,
எழுத்து நடையை அழகாக மாற்றியிருக்கிறீர்கள்,பல புதிய சொற்கள் ,தூள்.நல்ல விறுவிறுப்பு,டவுன்லோடு ஆரம்பம்,பார்த்துவிட்டு சொல்கிறேன் நண்பா.
======
@கொழந்த
நானே என்னுள் இல்லை – கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,கேமரா,ஆக்சன்,ப்ரோடக்சன் –
//கலைமாமணி ஜெயசித்ரா
நடிப்பு,இசை – உங்கள் அமரேஷ் கணேஷ்
இந்த படம் பார்க்க பரிந்துரை செய்கிறேன்
(உபயம் – -தினத்தந்தி, சலூன் கடை)//
இன்னுமா கொழ்ந்த இந்தம்மாக்கு,படம் எடுத்து தானே ஹீரோயினியா நடிக்கும் வெறி விடலை,அதுக்கு தான் அப்போவே கமலகாசன கல்யாணம் பண்ணியிருக்கோனும்னு சொல்றது.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நானே என்னுள் இல்லை – கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,கேமரா,ஆக்சன்,ப்ரோடக்சன் –
கலைமாமணி ஜெயசித்ரா
===
நண்பா இது 1991 ஆம் ஆண்டி இவங்க இயக்கி வெளிவந்து கலைமாமாமணி வாங்க காரணமான புதியராகம் என்னும் படத்தின் 2ஆம் பாகமாம்.
===
இந்த 55 வயதிலும் ஹீரோயினாக நடிக்கும் ஒரே நபர்.அடுத்து ராதிகா இவர் சீரியலில் தான் நாயகி
//நண்பா இது 1991 ஆம் ஆண்டி இவங்க இயக்கி வெளிவந்து கலைமாமாமணி வாங்க காரணமான புதியராகம் என்னும் படத்தின் 2ஆம் பாகமாம், இந்த 55 வயதிலும் ஹீரோயினாக நடிக்கும் ஒரே நபர்//
இந்த தகவல்கள் தமிழ்நாட்டுல இருக்குற எங்களுக்கே தெரியாது….உங்களுக்கு எப்படி???? டவுன்லோட் போட்டாச்சு டவுன்லோட் போட்டாச்சு சொல்றதேல்லாம் ஆண்ட்டி ஹீரோ படங்களத்தானா……..
இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் பற்றி மிகப்பெரிய விவாதம் கோணங்கள் திரையிடலில் நிகழ்ந்தது.அங்கு கேட்ட கேள்வி… உங்களுக்கு பார்வேர்டு செய்கிறேன்.ட்ரவர்ஹோவன் கொலை செய்யப்பட்டாரா?விபத்தா?
படம் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்பது படிக்கும் போதே தெரிகிறது.அருமையான நடை. 🙂
முதல் அரை மணி நேரமும் ஒரு தமிழ் படக் கதை போல் தான் உள்ளது…இந்த படத்த நோட் பண்ணிக்கிறேன்…
நண்பரே,
விறுவிறுப்பான கதை கொண்ட ஒரு படத்தை உங்கள் எழுத்தின் ஓட்டம் சுவையாக்கி அழகுபோர்த்தி உலா வர விட்டிருக்கிறது. [ மிஸ்டர் பாரத்தில் கூட தந்தை மகனிற்கு இடையில் ஒரு போட்டியான மோதல் இருக்கும் அல்லவா] அங்காங்கே தமிழ் சினிமாவுலக உதாரணங்கள் பலே பலே.
ஆவலைத் தூண்டும் நல்லதொரு அறிமுகம். நன்றி நண்பரே.