Karundhel.com சர்வே முடிவுகள் – 2012 March

by Karundhel Rajesh March 16, 2012   Announcements

சர்வே முடிந்தாகிவிட்டது. முதலில், ஏன் இந்த சர்வே என்பதைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடலாம். காரணம், சர்வேக்களை நடத்திப் பார்க்கும் அளவுக்கு நமது தளம் விகடனோ அல்லது ஜூ.வியோ இல்லையல்லவா?

யாராக இருந்தாலும் சரி; அவரைச் சுற்றியுள்ள வட்டத்திலிருந்து கிடைக்கும் ஃபீட்பேக்கானது, அந்த நபரது வாழ்க்கையை உயர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பது நான் கற்றுக்கொண்ட அசைக்கமுடியாத பாடம். நாம் எப்படி நடந்துகொள்கிறோம்; நாம் எப்படி நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் பழகுகிறோம்; பிறருக்கு நம்மீது என்ன அபிப்பிராயம் உள்ளது; மற்றவர்களுக்கு நாம் project செய்யும் பிம்பம் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் நமக்குப் புரியவைக்கும் சக்தி, இந்த ஃபீட்பேக்குக்கே உள்ளது என்பது என் தாழ்மையான கருத்து. அதாவது, நம்மைப்பொறுத்தவரை, நாம் எந்தத் தவறுமே செய்யாத, நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் கண்ணியமான மனிதனாக இருக்கலாம். ஆனால், நம்மையும் அறியாமல் நாம் நடந்துகொள்ளும் இயல்பு, எப்படி நம்மைப் பிறருக்குக் காட்டுகிறது என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், பிறரிடம் நாமே சென்று நம்மைப்பற்றிய ஃபீட்பேக் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும்.

இந்தியாவில் மட்டுமல்ல. உலகின் எந்த நாடாயினும் சரி – ஒரு பிரச்னைக்குக் காரணமாக இருக்கும் நபரிடம் சென்று, வெளிப்படையாக அந்தக் காரணத்தைச் சொல்லி, ’இதனால்தான் பிரச்னை; இதை நீ திருத்திக்கொள்ளவேண்டும்’ என்று சொல்லக்கூடிய வழக்கம் இல்லவே இல்லை. எங்காவது யாரிடமாவது அது இருக்கலாம். ஆனால், பெரும்பாலும், பிரச்னைக்குக் காரணமானவரை விட்டுவிட்டு, நமது காதலியிடமோ மனைவியிடமோ நண்பர்களிடமோ சென்று புலம்பும் வழக்கத்தைத்தான் நாம் மேற்கொண்டு வருகிறோம். அதாவது, சம்மந்தமே இல்லாதவர்களிடம் சென்று, ஒரு பிரச்னையைப் பற்றிப் பேசுவது. இதனால் எள்ளளவும் பயன் இல்லையல்லவா? இப்படிப் புலம்புவதால் அந்த நேரத்தில் நமது மனம் நிம்மதியடையலாம். ஆனால், அந்தப் பிரச்னை எப்படித் தீரும்? வெளிப்படையாகச் சென்று சம்மந்தப்பட்டவரிடம் பேசினால் மட்டுமே திரும்.

ஓகே. பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு, சர்வே முடிவுகளைப் பார்ப்போம்.

அதற்கு முன், இந்த வீடியோவைப் பார்க்க முயலுங்கள். சர்வே முடிவுகளைப் பற்றி ஒரு முன்னோட்டமாக, இதில் சில விஷயங்கள் பேசியிருக்கிறேன்.

வீடியோவில் மீசையைப் பார்த்து பயந்துவிடாதீர்கள். இன்னும் பெரிதாக வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். அதேபோல், வீடியோவின் தம்ப்நெய்ல், தலைகீழாகத் தெரியும். அது ஒரு சிறிய டெக்னிகல் எரர். ஆனால் வீடியோ சரியாகவே இருக்கும்.


சர்வே முடிவுகள்

சர்வே ஆரம்பித்த தேதி : March 7, 2012 – 12:40 PM
சர்வே முடிந்த தேதி : March 16, 2012 : 12:40 PM
சர்வேயில் பங்குபெற்றவர்கள்: 157 பேர்


கேள்வி 1: இந்தத் தளத்தின் டெம்ப்ளேட்: மாற்றவேண்டுமா அல்லது இதுவே நன்றாக இருக்கிறதா?

இந்தக் கேள்விக்கு, 108 நண்பர்கள், டெம்ப்ளேட் மாற்றவேண்டாம் என்று பதிலளித்துள்ளனர்.  மாற்றவேண்டும் என்று சொல்லியிருப்பவர்கள், 27 பேர். அவ்வப்போது மாற்றலாம் என்று சொல்லியிருப்பவர்கள் 17 பேர். கருத்து சொல்ல இயலாது என்பது 5 பேர்.

என் பதில்: அவ்வப்போது – அதாவது மூன்று அல்லது நான்கு அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை டெம்ப்ளேட் மாற்றலாமா என்று யோசித்துவருகிறேன். அடிக்கடி டெம்ப்ளேட் மாற்றுவதில் உள்ள கஷ்டங்கள் என்னவெனில், HTML Codeல் உள்ள சில விட்ஜெட்களை மாற்றுவதில் உள்ள சிக்கல்தான். மட்டுமல்லாது, டெம்ப்ளேட்டை எனக்குப் பிடித்ததுபோல் கஸ்டமைஸ் செய்துள்ளதால் (எழுத்துவகை, எழுத்து அளவு, எழுத்தின் இடையே உள்ள இடைவெளி, பார்டர், இத்யாதி), புதிய டெம்ப்ளேடில் இதையே செய்யவேண்டும். அது, கொஞ்சம் நேரம் எடுக்கும் விஷயம்.

ஆகையால், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் டெம்ப்ளேட் மாற்றலாம் என்பது என் முடிவு. இன்னொரு காரணம், பார்த்துப்பார்த்து இந்தப் பழைய டெம்ப்ளேட் போர் அடித்துவிட்டதே. இதைப்பற்றி விரைவில் நண்பர்களே தெரிந்துகொள்ளலாம்.

இது தவிர, டெம்ப்ளேட் பற்றிய அத்தனை பரிந்துரைகளையும் படித்துவிட்டேன் நண்பர்களே. கட்டாயம் உங்களது கருத்துக்களை நடைமுறைப்படுத்துவேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

சில சுவாரஸ்யமான பதில்கள்:

  • அழகு முக்கியம் இல்லை, i love ur writings not a template..so no probs for me
  • why this kolaveri thala, this template good, but ennaku before iruntha scorpian type than oru gunza irrukum.
  • டெம்ப்ளேட் எல்லாம் ஒரு மேட்ரே இல்ல கருந்தேள்
  • உங்கள் தளத்தின் உள்ளது அருமையான டெம்ப்ளேட். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஒரே ஒரு வேண்டுகோள்… ‘இதுவரை எழுதியவை’ widget-ஐ sidebar-ன் மேலே கொஞ்சம் போட்டால் நன்றாக இருக்கும் (எனது பதில் – போட்டுவிடுகிறேன் நண்பரே)
  • Pls Change it boss… old is gold…but புதுசா இருந்தா தான் நல்லா இருக்கும்…அப்புறம் இந்த ரெட் கலர் கொஞ்சம் மாத்துங்க….ஏதோ ரஷ்யன் வெப்சைட் பார்கிறமாதிரி பீலிங் (எனது பதில்: ரைட்டு தலைவா)
  • இது பரவாயில்லை. மாற்றம் வேண்டும் என்றால் தலையில் இருக்கும் படங்களை மாற்றலாம். காரணம் உங்கள் தளத்தில் முக்கியமானதும் நான் திரும்ப வரச்செய்வதும் உள்ளடக்கம். எனவே அதற்கு அதிக இடம் கொடுக்கவும். (உங்கள் தளத்தில் Hot, Hottest பார்க்க வருவதில்லை:-) ) – ஆஹா….
  • This is fine. But When i am clicking subcategories few are not working which means it doesn’t go to any link. For example Romantic movies. check that. (எனது பதில் – அது, ஒரு சோம்பேறித்தனத்துல அப்டேட் பண்ணாமல் இருந்தேன். சரி செய்து விடுகிறேன்)

கேள்வி 2: புதிய கட்டுரைகள் எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை வரவேண்டும் என்பது பற்றி?

பெரும்பாலான பதில்கள், தினமும் ஒரு பதிவு போடுங்கள் என்று இருக்கின்றன. அதன்பின், வாரம் இரண்டு, வாரம் ஒன்று, மாதம் இரண்டு, மாதம் ஒன்று என்று போகின்றன.  தினமும் ஒன்று வேண்டும் என்று பதிலளித்தவர்கள், 45 பேர். வாரம் மூன்று முறை என்று சொன்னவர்கள் 16 பேர். வாரம் இரண்டு பதிவுகள் வேண்டும் என்று பதிலளித்தவர்கள், 33 பேர். வாரம் ஒன்று என்று சொன்னவர்கள், 24 பேர். மாதம் இரண்டு பதிவு என்று சொன்னது, 5 பேர். மாதம் ஒரு பதிவு வேண்டும் என்று சொன்னவர்கள் 3 பேர். உங்கள் இஷ்டப்படி போட்டுத்தாக்குங்கள் என்று சொன்னவர்கள் 20 பேர்.

இந்த பதில்களை கவனித்தால், வாரம் இரண்டிலிருந்து மூன்று பதிவுகள் வேண்டும் என்று சொல்பவர்களே மெஜாரிட்டி என்று தெரிகிறது (தினமும் ஒரு பதிவு என்பதெல்லாம் கட்டாயம் முடியாத விஷயம் நண்பர்களே. ஏனெனில், நான் எழுதும் கட்டுரைகள் எல்லாமே, கொஞ்சமாவது ஹோம்வொர்க் செய்துதான் எழுதுவது என்பது என் எளிய அபிப்பிராயம். அதற்கே கணிசமான நேரம் தேவைப்படுகிறது). ஆகையால், வாரம் மூன்று என்ற pattern ஃபாலோ செய்யமுடியுமா என்று பார்க்கிறேன்.

அதேபோல், பதில்களில் உள்ள அருமையான சஜஷன்கள் அத்தனையுமே கட்டாயம் ஒன்றின்பின் ஒன்றாக நடைமுறைப்படுத்தப்படும்.

சில சுவாரஸ்யமான பதில்கள்:

  • தினமும்….ஒவ்வொரு நாளும் ஒரு சுவை….கேம் மட்டும் போட்டு கொலை பண்ணாதிங்க….இருக்கிற பொருளாதார நிலைமையில் அவன் அவ டேபலட்  பிசி வாங்க கஷ்ட படுறான் இதுல ப்ளே ஸ்டேஷன் வேற…#வயித்தெரிச்சல்
  • இது தங்களின் விருப்பம் மற்றும் நேரம் சார்ந்தது… எனினும் நான்கு நாட்களுக்கு ஒருமுறையாவது வந்தால் நலம். அதிலும் தங்களின் அனைத்து தொடர்களையும் படிப்பவன் என்ற காரணத்தால், தொடர் வரிசைகள் சீக்கிரமாக வரவேண்டும் (குறைந்தது வாரம் ஒரு முறை. வாரத்துக்கு ஒரு தொடரின் ஒரு அத்தியாயம் என்று வாராவாரம் ஒவ்வொரு தொடரின் அத்தியாயங்களையும் சுழற்சி முறையில் எழுதினால் நலம்) என்பது அவா. தங்களின் LOTR தொடர் என்னுடைய மனங்கவர்ந்த ஓன்று… எப்போது இது ebook அல்லது புத்தகமாக வரும் என்று காத்து கொண்டிருக்கிறேன். அதே போன்று மற்ற தொடர்களையும் சீக்கிரமாக தொடருங்கள்…
  • தினமும் வந்தால் நன்றாகத்தான் இருக்கும். உங்க மேல பரிதாபப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறைன்னு சொல்றேன்.
  • புதிய கட்டுரைகள் அடிக்கடி எழுதுங்கள். im ur regular visitor. unka blog enda favourite barr le iruku.:p. எவ்ரிடே உங்க ப்ளாக்குக்கு வரேன் நான். எதாவது புதிய கட்டுரை எழுதிருக்கீங்களா எண்டு பார்க்க. நிறைய கட்டுரைகள் எழுதுங்க. one kadurai per day if u can lol :p
  • daily :). i need series like LOTR n வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் to be posted AT LEAST once in a week r 2 weeks once…

கேள்வி 3:தமிழ் சினிமா விமர்சனங்கள் அடிக்கடி இடம் பெற வேண்டுமா?

இந்தக் கேள்விக்கு ஏகோபித்த பதில், ‘கட்டாயம்’ என்பதே. 92 பேர், அவசியம் தமிழ் சினிமா விமரிசனங்கள் வேண்டும் என்றும், 29 பேர், தமிழ் விமரிசனங்கள் துளிக்கூடத் தேவையே இல்லை என்றும், 36 பேர், நல்ல படங்களுக்கு மட்டும் அவ்வப்போது விமரிசனம் எழுதுங்கள் என்றும் பதில் அளித்திருக்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரையில், நான் தமிழ்ப்பட விரும்பி. தமிழ்ப்படங்கள் பார்ப்பது எனக்கு மிகப்பிடித்தமான பொழுதுபோக்கு. ஆனால், சர்வதேசத் தரத்தில் தமிழ்ப்படங்கள் வருவதில்லை என்பதாலேயே, எனது விமர்சனங்கள் சற்றே தமிழ்ப்படங்களைத் திட்டுவது போல அமைந்துள்ளன. இருப்பினும், ஆரண்ய காண்டம், முதல் மரியாதை, வேதம் புதிது, மௌனகுரு, யுத்தம் செய் போன்ற படங்கள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதால், அவ்வப்போது வெளியாகும் எதிர்பார்ப்பு மிகுந்த படங்கள், தரமான படங்கள் ஆகியவற்றூக்கு விமர்சனங்கள் எழுதுவேன். திடீரென்று, இடையிடையே முன்னைப்போல் இல்லாமல் சில தமிழ்ப்படங்கள் இந்தத் தளத்தில் எட்டியும் பார்க்கலாம். ஆகவே, தயாராக இருங்கள் ?

மட்டுமல்லாமல், நிஜமாகவே பல அட்டகாசமான பரிந்துரைகள் வந்துள்ளன. அவற்றை ரகசியமாக செயல்படுத்தப்போகிறேன். போகப்போக இந்தத் தளத்தைப் படிக்கும் நண்பர்கள் அதனை உணர்வீர்கள்.

சில சுவாரஸ்யமான கருத்துகள்:

  • no need… our time is PRECIOUS…. dont waste ur time and dont forget to write reviews about highly expected movies…
  • அவசியம். ஆனால், விமர்சனம் encourage செய்வதாக இருக்கவேண்டும். கமலைப் பற்றி இனி பேச வேண்டாம். ஏற்கெனவே நிறையப் பேசியாகிவிட்டது.
  • would be great if you start reviews for more and more unpopular Hero’s / Dir / and Movies unnoticed by people, since our regular hero movies whatever you review there is big fans to follow them irrespective of your review, so you can also avoid your time reply to their bullshit comments.
  • kandippa…ஆனா மற்ற மொழிப் படங்களையும் நீங்க விமர்சிக்கணும் பாஸ். குறிப்பா தெலுங்குப் படங்கள்…(எனது பதில்: தெலுங்கா???? நான் அம்பேல். தெலுங்குப் படங்கள்ல, எனக்குப் புடிச்ச வகையான படங்கள் ரொம்பக் கம்மியாச்சே தலைவா? இருந்தாலும், சொல்லிட்டீங்கல்ல… இனிமே கண்டபடி சில தெலுங்குப் படங்கள் பார்த்துடுறேன். அப்பால வரேன்)
  • nope…. tamil cinema world cannot change as faster as u expect… for the reason, peoples standards r like that…. many times , what it remains being contradictions and controversies… we would like to see new unexplored windows through rajeshs windows….. more of kim ki duk like stuffs….
  • அவசியம் இல்லை. அதற்கு என்று கேபிள் சங்கர் தன்னை தானே நேர்ந்து விட்டு கொண்டார் :)) (எனது பதில்: கேபிள் இந்தக் கமெண்டை தப்பா எடுத்துக்க மாட்டார்ன்னு எனக்குத் தெரியும்)
  • இல்லையா பின்ன,முக்கியமாக கமல் , மணி,சுகாசனி,போன்ற ஜென்மங்களை முக்க வைக்க வேண்டும் (எனது பதில்: ஆஹா….. மறூபடியும் மொதல்லருந்தா? )
  • தமிழ் சினிமாவை விட உலக சினிமா விமர்சனம் தான் நல்லா இருக்கும் தமிழ் சினிமா 5 பாட்டு ஒரு ரவுடி வாள் வாள்னு கத்தரத தவிர பெர்சா ஒன்னும் வராது அதுக்கு எதுக்கு விமர்சனம் . வேணும்னா ஒன் லைன் விமர்சனம் போடலாம் (எனது பதில்: இது நல்லா இருக்கே)
  • குழப்பமான கேள்வி… சாதாரண தளமாக இருந்தால் வேண்டும் என்று பதிலிட்டிருப்பேன். இதுவோ பல்சுவைத் தளம். எனவே தங்களின் தளத்துக்கென்று ஒரு தரம் இருக்கிறது… அத்தரம் வாசகர்களாகிய நாங்கள் ஏற்ப்படுத்தியது இல்லை. தாங்களாகவே ஏற்ப்படுத்திக்கொண்டது. எனவே தங்களிடமிருந்து தரமான படங்களின் விமர்சனங்களையே எதிர்பார்க்கிறேன். எனவே அப்படிப்பட்ட திரைப்படங்கள் தமிழில் வரும் பொது விமர்சனங்கள் வந்தால் போதும். அடிக்கடி வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.

கேள்வி 4: ஆங்கில / உலகப் படவிமர்சனங்கள் எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இடம்பெறவேண்டும்? 

இதற்கு நண்பர்கள் கச்சிதமாகவே பதில் அளித்திருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.  தினமும் என்பவர்கள் 12 பேரும், வாரம் 3 முறை என்பவர்கள் 8 பேரும், வாரம் இரண்டு முறை என்பவர்கள் 16 பேரும், வாரம் ஒரு உலகப்பட / ஆங்கிலப்பட விமர்சனம் என்பவர்கள் 55 பேரும், மாதம் இரண்டு முறை என்பவர்கள் 14 பேரும், மாதம் ஒரு விமர்சனம் என்பர்கள் 10 பேரும், அடிக்கடி விமர்சனங்கள் வரவேண்டும் – காலமெல்லாம் தேவையில்லை என்பவர்கள் 22 பேரும், உங்கள் இஷ்டப்படி போடுங்கள் என்பவர்கள் 15 பேரும் உள்ளனர்.

எனது பதில்: கொஞ்ச காலமாக, உலகப்படங்களோ, ஆங்கிலப்படங்களோ இங்கு அதிகம் இடம்பெறவில்லை என்பதைக் கவனித்திருப்பீர்கள். காரணம், தொடர்களும் அலுவலும்தான். இனிமேல், நண்பர்கள் விருப்பப்படி, அட்லீஸ்ட் வாரம் ஒரு படம் (உலகப்படம் அல்லது ஆங்கிலம்) என்பது கட்டாயம் வந்துவிடும். அதற்குமேல், அவ்வப்போது வாரம் இரண்டு என்கிற ரீதியில்கூட வரலாம். I’m back in form.

இந்தப் பதிலிலும் பல உபயோகமான பரிந்துரைகள் உள்ளன. இந்த கிடைத்தற்கரிய கருத்துகளை கட்டாயம் செயல்படுத்துவேன்.

சில சுவாரஸ்யமான கருத்துகள்:

  • One or two films a week. Preferably Mondays so that the film is not watched in a hurry.
  • Weekly once..I watched all of Kim ki duk’s movies just because of your blogs..Introduce us more good world movies..
  • ice creams/ carrot halwa/ caramel custards/ tendercoconut souffle…..whatever it is twice a week tastes better ??? !!! )- )- )-
  • once in a week… பழையே கூட republish பண்ணலாம்… குறிப்பா படிக்கறவங்கள புது புதுசா படம் பார்க்க துண்டனும்.. நிறைய கண்றாவி படங்கள… ரத்தம் சிந்தற வாந்தி எடுக்க வைக்கற படங்கள மக்களுக்கு (எனக்கு) சிபாரிச்சு மண்ட காய வைக்ககூடாது
  • மசாலா ஹாலிவுட் திரைப்படங்களை அறவே தவிர்த்து விடுங்கள்.
  • டெய்லி போட்டா கூட யாரும் ஒன்னும் சொல்ல மாட்டங்கப்பா ..உலக சினிமால சாவறதுக்கு உள்ள பார்த்தே தீர வேண்டிய படங்கள் … இந்த படத்த பார்கலேன்னா நீ ஆம்பளையே இல்ல .. IMDB 250 . ஈரான் மற்ற நாட்டு படங்கள் பத்தி தாரளம எவ்வளவு வேணும்னாலும் போடலாம் கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன் தமிழ் சினிமாவ எவனும் விமர்சனத அடிப்படயா வச்சு பாக்க மாட்டோம் பொதுவா சொல்றன் ஆனா உலக சினிமா அப்டி இல்ல எப்டி இருக்கும்னு தெரியாது சோ ஒரு ஆர்வம் உருவாகனும்ன ஒரு விமர்சனம் தேவ உங்க சைட் ல இருந்து மட்டும் நான் ஒரு 15 , 20 படம் விமர்சனத வச்சு பார்த்திருப்பன் அதான் எவ்ளோ உலக சினிமா எழுதனுமோ எழுதலாம் சிவப்பு கம்பள வரவேற்பு உங்களுக்கு அதே மாதிரி கேமும், காமிக்சும் கொஞ்சம் குறைக்கலாம் பாஸு
  • இந்த செக்சன் தான் உங்களிடம் எனக்கு மிகவும் வேண்டப்பட்டது பிடித்தது. வாரத்திற்கு அட்லீஸ்ட் 1 அல்லது 2 திரைப்படங்கள் பற்றி எழுதுங்கள். நிறைய நல்ல ஆங்கில, உலகப்படங்களை அறிமுகப்படுத்துங்க.

கேள்வி 5: தளத்தில் தொடர்கள் இடம்பெறலாமா? ஆம் எனில், எந்தத் தொடர் உங்களுக்குப் பிடித்திருக்கிறது? 

நண்பர்களில் 99 சதவிகிதத்தினர், தொடர்கள் பிடித்திருக்கிறது என்றே சொல்லியிருக்கின்றனர்.  மிகச்சிலரே, தொடர்கள் வேண்டாம் என்று சொல்லியிருக்கின்றனர்.  எந்தெந்தத் தொடர்கள் பிடித்திருக்கின்றன என்பதில், Lord of the Rings தொடர் 44 பேருக்கும், ஏலியன்ஸ் தொடர் 40 பேருக்கும், திரைக்கதையைப் பற்றிய தொடர் 26 பேருக்கும், 80களின் தமிழ்ப்படங்கள், கமலின் காப்பிகள், தமிழ்ப்பட காப்பிகள் போன்றவை தலா பத்து பேருக்கும், ஷெர்லக் ஹோம்ஸ் தொடர் 8 பேருக்கும் பிடித்திருக்கிறது.

தொடர்களைப் பற்றிச் சொல்லும்போது, ஆரம்பித்த தொடரை முடியுங்கள் என்றும், தொடர்களுக்கிடையே இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது என்றும் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இதோ அதை சரி செய்துவிடுகிறேன். வரிசையாக அத்தனை தொடர்களையும் முடித்துவிடலாம் நண்பர்களே. இனிமேல் இடைவெளி இருக்காது.

சில சுவாரஸ்யமான கருத்துகள்:

  • ஆம், நான் உங்களிடம் எதிர்பார்பது சினிமா சம்ந்தபட்டவைதான்.
  • தொடரலாம்…திரைக்கதை எழுதுவது எப்படி போன்ற தொடர்கள் போரடிக்கிறது. லார்ட் ஆப் ரிங்க்ஸ் போன்ற தொடர்கள் போடலாம்.
  • இந்த தொடர் தாக்குதல் ஆரம்பத்தில் நல்ல இருக்கு அப்புறம் போர் அடிக்குது…உதாரணம்
  • வளையங்களின் கடவுள் ….
  • கண்டிப்பா …. தொடர் எழுத தகுதி உள்ள ரெண்டு மூணு பதிவர்கள நீங்களும் ஒருத்தர்… இது கொஞ்சம் ஓவரா தெரியலாம், சத்தியமா ஆனா இதான் உண்மை…. ஒரு சின்ன suggestion தொடருக்கு நடுல ரொம்ப gap எடுத்துக்காதிங்க தல…
  • எனக்கு ரொம்ப புடிச்சது LOTR தன், இது வரைக்கும் அதுல வந்த ஒரு லைன் கூட மிஸ் பன்னதில்லை, அசாத்தியமான உழைப்பு…
  • எனக்கு கமலஹாசன் பற்றி வந்த பதிவுகளின் தொடர்ச்சி தான் பிடித்திருந்தது. (அது தொடராக ஏற்றுக் கொள்ளப் படுமாயின்..)
  • கண்டிப்பாக இடம் பெற வேண்டும். ஏலியன்ஸ் பற்றிய தொடர் மிகவும் அருமை.

கேள்வி 6: புத்தக விமர்சனங்கள் இடம்பெற வேண்டுமா? ஆம் எனில், எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை? 

இந்தக் கேள்விக்கு, சொல்லிவைத்தாற்போல் அத்தனைபேரும், மாதம் ஒரு முறை என்று சொல்லியிருக்கின்றனர். புத்தக விமர்சனமே வேண்டாம் என்றவர்கள் மிகச்சிலர்தான். போலவே, வாரம் ஒரு முறை அல்லது வாரம் இரண்டு மூன்று என்பவர்களும் மிகச்சிலரே.

சில சுவாரஸ்யமான கருத்துகள்:

  • honestly, would u like to change your reading habits just for this blogposts ???? u be yourself and post whenever u like (என் பதில்: இல்லை நண்பரே. நான் படித்து, எழுதாத புத்தகங்கள் பல. ஆகவே, ஒருவேளை அவற்றை எழுதினால், எப்போதெல்லாம் எழுதலாம் என்றே கேட்க விரும்பினேன். நன்றி)
  • yes. once in a month. you need a two weeks to read it, one week to analyse it and one week to write it (to maintain the quality of your output)
  • பொதுவாக எனக்கு நாவல், இலக்கியம் தொடர்பான புக்ஸ் படிக்க பிடிக்காது, வரலாறு,அரசியல் ரொம்ப பிடிக்கும் அதுனால நோ கமெண்ட்ஸ்
  • ஆம், மாசத்துக்கு ஒன்னு நச்சுன்னு … அதுவும் கண்றாவி புக்குகளா இருக்ககூடாது
  • ஐயா,எப்போது எழுதினாலும் நலமே,சாருவின் புத்தகம் என்றால் டபுளோக்கே,எஸ்ரா ,உத எல்லாம் வேண்டாம்
  • ஆம். இதுவும் தங்களின் நேரத்தை பொறுத்தது… ஏனென்றால் புத்தக விமர்சனம் என்பது மிகவும் நேரம் கோரக்கூடிய ஒன்று. என்னைப் பொறுத்தவரை ஒரு புத்தகத்தை படித்த பின்னர் எனக்கும் எழும் வினாக்களையும், விவரங்களையும் பிறர் எப்படி பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும், பல புதிய புத்தகங்களை அறிந்து கொள்ளவுமே புத்தக விமர்சனங்களை நாடுகிறேன். எனவே தங்களின் நேரம் பொறுத்து விரிவான, தரமான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன். குறைந்தது வருடத்துக்கு இரு முறை
  • இருக்கலாம். கட்டாயம் கிடையாது. உங்கள் தளத்தை தொடர்ந்து வாசிப்பதே சினிமாவுக்காக..
  • இலக்கிய பரிச்சியமுள்ள உங்களை போன்றவர்கள் நிறைய எழுதலாம்.படிப்பவர்களில் 100-ல் ஒருத்தர் அந்த புத்தகத்தை வாங்கி படித்தாலும் நல்லது தானே.., என்ன ஹிட்ஸ் குறையும் அதை பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படம் ஆள் இல்லைன்னு நினைக்கிறேன்… (எனது பதில்: ஹிட்ஸ் பத்தி எந்தப் பிரச்னையும் இல்லை நண்பா..)

கேள்வி 7: கேம் விமர்சனங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அவற்றைப் பற்றிய கருத்துகள் 

இங்கும், நண்பர்கள், மிகத்தெளிவாகப் பதிலளித்துள்ளனர். கேம் விமரிசனங்கள் வேண்டாம் என்று சொல்லியுள்ளவர்கள், 77 பேர். கேம்களைப் பற்றி எழுதுங்கள் என்று சொன்னவர்கள், 62 பேர். நோ கமெண்ட்ஸ் என்று சொல்லியுள்ளவர்கள் 18 பேர்.

PS3 கேம்களைப் பற்றி நீங்கள் எழுதுகிறீர்கள்; ஆனால், என்னிடம் console இல்லை. ஆகையால் விளையாட இயலாது என்று பலரும் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், அதேசமயம், எனக்குப் பிடிக்காது; இருந்தாலும் பிடித்த மற்றவர்களுக்காக எழுதுங்கள் என்றும் பலரும் சொல்லியிருக்கிறீர்கள். ஆகவே, இப்போது உள்ள frequencyயைக் குறைத்துக்கொண்டு, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கேம்களைப் பற்றி எழுத முயல்கிறேன். ஒருவேளை எப்போதாவது ஒன்றிரண்டு விமர்சனங்கள் அடிக்கடி வந்தாலும், கேமின் கதையை சுவாரஸ்யமாக எழுதப் பார்க்கிறேன்.

அதே சமயம், கேம்களைப் பற்றிய அற்புதமான பரிந்துரைகளும் நிறைய வந்துள்ளன. அவற்றை இந்த நிமிடத்திலிருந்தே அமல்படுத்திவிடுகிறேன். அடுத்த கேம் விமர்சனத்தில் இந்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம் நண்பர்களே. அந்தந்தக் கருத்துகளைச் சொல்லியுள்ளவர்கள், தகுந்த மாற்றங்களைக் கவனிப்பீர்கள்.

சில சுவாரஸ்யமான கருத்துகள்:

  • பக்காய்யா ! கேம்ல இருந்து கூட காப்பியடிக்கிறாங்கன்னு உங்க விமர்சனத்தைப் பார்த்தாத்தான் தெரியுது
  • I just pass through it with a brotherly smile…. ofcourse we can sense ur happiness in those posts…. so red carpets !!!!! (என் கருத்து: மிகச்சரியாகப் புரிந்துகொண்டுள்ளீர் நண்பரே. படங்கள் பார்ப்பதைவிட, கேம் விளையாடுவதில்தான் எனக்கு சந்தோஷம் அதிகம்.  இந்தக் கருத்தைப் படித்ததும் நீங்கள் யார் என்று தெரிந்துவிட்டது. ரொம்ப நாள் ஆச்சே பேசி).
  • கேம் பற்றிய பதிவை நான் படிப்பதில்லை. கட்டில், கபடி தவிர எந்த விளையாட்டிலும் விருப்பம் இல்லாதவன் (என் கருத்து: வாரே வாவ் )
  • I do not personally play them. However, I look at your PS3 reviews before i buy for my 12 year old son
  • நீங்க போடுற கேம் எல்லாம் ரொம்ப பெருசா இருக்கு. முடிந்தால் சின்ன சின்ன கேம்ஸ் அறிமுகபடுத்தவும் (என் கருத்து: என்னை வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே…சரி விடுங்க.. சூப்பர் மாரியோ விமர்சனம் போட்டுடுறேன்)
  • நான் அதில் இன்னும் நுழையவில்லை,முக்கியமாக நான் இன்னும் க்ராபிக்ஸ் படங்கள்,மற்றும் அனிமேஷன் படங்களில் லயிக்க துவங்கவில்லை,எனக்காக அவற்றை நான் எழுத வேண்டாம் என சொல்லுதல் அயோக்கியதனம்.ஆகவே தொடருங்கள்,ஆனால் இடையில் நான் கேட்டவற்றை எழுதவும் (என் பதில்: கட்டாயம் நண்பா… நீங்க சொல்லி நான் அதை தட்டிருக்கேனா? கருத்தைப் பார்த்ததும் உங்களைக் கண்டுபுடிச்சிட்டேனே)
  • கண்டிப்பாக. வேறு யாருமே தமிழில் கேம் விமர்சனம் எழுதுவதில்லை. நீங்களாவது இதை விட்டுவிடாமல் தொடரவேண்டும்!
  • எழுதுங்க ஆனா என்ன 2 வருஷமா ஒரு கேம்மை முடிக்காம இருக்கும் என்ன மாதிரி ஆட்கள் திருந்த போறது இல்ல..

கேள்வி 8: இந்தத் தளத்தில் உங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் என்னென்ன? ஏன் பிடிக்காது?   

புதையல் போன்ற பல அரிய கருத்துகள் எனக்குக் கிடைத்தது இந்தக் கேள்வியில்தான். அட்டகாசமான பரிந்துரைகள் !

பெரும்பாலானவர்கள், அனானிகளை அவர்களைவிட அதிக கெட்டவார்த்தைகள் உபயோகித்து நான் திட்டுவதையே விமர்சித்து எழுதுயிருக்கின்றனர். அவையெல்லாம் சென்ற வருடத்தோடு மலையேறிவிட்டது நண்பர்களே. இனி அப்படியெல்லாம் நடக்காது என்று உறுதி கூறுகிறேன் (இதான் சாக்கு என்று கண்டபடி அனானி விமர்சனங்களைத் தொடங்கி, என்னை டெஸ்ட் செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன்).

கூடவே, தொடர்களை முடிக்கவேண்டும் என்பதும் இன்னொரு விஷயம். அதையும் கட்டாயம் அமல்படுத்திவிடுகிறேன்.

இன்னொரு கருத்து, ‘நீ பெரிய ஜீனியஸ் போல அவ்வப்போது எழுதுவதைக் குறைக்கவும்’ என்று இருக்கிறது (அய்யனார் கவனிக்க).  இதற்கு என் பதில், நானெல்லாம் ஒரு டண்டணக்கா. ஜீனியஸ் என்ற பெரிய விஷயமெல்லாம், சுட்டுப்போட்டால்கூட எனக்குக் கிடைக்காது. ஆகவே, இந்தப் பீலாவை நம்பிவிடாமல், எப்போதும்போல படியுங்கள் நண்பர்களே. ஒருக்கால், இனியும் அப்படித் தோன்றினால், கவலையே படாமல் ஒரு பின்னூட்டமோ மெயிலோ தட்டுங்கள். சரி செய்துவிடலாம்.

இவை மட்டும் அல்லாமல், இன்னமும் பல விஷயங்களைப் பற்றிக் கருத்துகள் வந்துள்ளன. அத்தனையும் நோட் செய்தாயிற்று. ஒவ்வொன்றாக அவை அமல்படுத்தப்படும்.

சில சுவாரஸ்யமான கருத்துகள்:

  • No doubts, am very clear with a list…
    • 1. ur temper tantrums when u become angry…. and the abusive language… i was not born in your family to pull ur ears when ever u do like that….
    • 2. often u try to thrust/ enforcen few things… especially charus ideologies…. we are ur friends , we would like to accept u in any form, but why should we accept others for ur sake ??? ( probably, my questioning is in your way!!!!)
    • 3. your comment box becomes a chatting box, which is not always fair….
    • 4. abusive… abusive….. abusive lingo again again.. plz reduce it.
  • கொஞ்சம் அதிமேதாவி தனமா இருப்பது…
  • இந்த கேம்ஸு… அப்புறம் சுயபிரபாத பின்னூட்ட நண்பர்களின் ஆனந்த தொல்லை ?
  • தொடர் ஆரம்பிச்சிட்டு..அத பத்தி மறந்துடறது சுத்தமா புடிக்கல தலைவா,, aliens தொடர continue பன்னு mama…
  • தங்களது தளத்திற்கு வரும் வெட்டி பின்னூட்டங்களுக்கு (பல சமயங்களில் அவை அனானி பின்னுட்டங்களாகவே இருக்கும்) சில சமயங்களில் தாங்கள் புரிந்த எதிர்வினைகள் எனக்கு பிடிக்கதவைகளுள் ஒன்று. நாம் பதில் சொல்லுவதெற்கு கேள்வி கேட்பவரின் தகுதி, அல்லது கேள்வியின் தகுதி மிக முக்கியமானது… தற்சமயம் அத்தகைய நிகழ்வுகளை குறைத்துள்ளீர்கள் என நினைக்கிறன்… அல்லது நான் கூகிள் ரீடரில் படிப்பதால் பின்னூட்டங்கள் தெரியவில்லையா?
  • அதேபோல் சாருவின் எதிர் தரப்புகளுக்கு நீங்கள் ஆற்றிய எதிர்வினைகள்…. பலசமயங்களில் ஒரு கட்சி தொண்டனைப்போல் எதிர்வினை ஆற்றி இருப்பீர்கள். தற்போது, அதிலும் கடந்த வருடத்தில் அத்தகைய எதிர்வினை ஒன்றும் தங்களிடமிருந்து வரவில்லை என்பது மகிழ்ச்சி…
  • தங்களை இரண்டு வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வருபவன் என்ற முறையில் தங்களின் எழுத்துக்கள் மிக நன்றாக மெருகேறி இருக்கின்றன என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்… உதாரணத்துக்கு தேவையில்லாத தனி மனித தாக்குதல்களை மிகவும் குறைத்துள்ளீர்கள். தொடர்ந்து தங்களின் எழுத்துக்கள் மேம்பட்டு வருகின்றன… இப்படியே தொடரவும்
  • கமல், மணிரத்னம் மீதான மிக கடுமையான் விமர்சனங்கள். அவர்கள் காப்பி அடிக்கும் குற்றங்களைக்காட்டிலும், அவர்களின் பரிசோதனை முயற்சிகளும், trend setting -ம் தமிழில் எல்லோராலும் ரசிக்க , ஏற்றுக்கொள்ளபட்டது. அதனையும் மறக்ககூடாது.
  • there are some big gaps between the posts,and I find difficult to follow it,if there’s a big gap..I almost forget what was written in your previous post’s I have serach it and read it and then I have to continue in the latest one….may be you can cut short the Gaps:) – எனது பதில். கட்டாயம்.

கேள்வி 9: இந்தத் தளத்தில் புதிதாக ஏதாவது சேர்க்க வேண்டுமா? அதைப்பற்றி உங்கள் கருத்துகள்…

இந்தக் கேள்விக்கும், பல அற்புதமான பரிந்துரைகள் கிடைத்துள்ளன. அவற்றை அவசியம் நடைமுறைப்படுத்த முயல்கிறேன் நண்பர்களே. அவற்றையெல்லாம் அமல்படுத்தினால், அவசியம் இந்தத் தளம் ஒரு மிகச்சுவாரஸ்யமான தளமாக மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை எனக்கு. ரகசியமாக, ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு செய்ய ஆரம்பிக்கிறேன் என்பதை மட்டும் உறுதி கூறுகிறேன்.

பல பேர், அரசியல் கட்டுரைகளும் சமூகக் கட்டுரைகளும் தேவை என்று சொல்லியுள்ளனர். அவற்றை எழுத மினிமம் தகுதி எதுவும் என்னிடம் இல்லை. இருப்பினும், இந்தப் பகுதியில் எக்கச்சக்கமான பதில்கள் இப்படியே இருப்பதால், எழுத முயல்கிறேன். பயந்துவிடாதீர்கள். எப்போதாவதுதான். (படிச்சிட்டு வந்து கண்டபடி திட்டக்கூடாது ஆம்மா).

சில சுவாரஸ்யமான கருத்துகள்:

  • make it subscription based….man you’ve got the best of the reviews, and other info. I will be ready to pay 100 Rs per month or so to access them. (அன்புள்ள நண்பர் S.H – இப்போதைக்கு இது சாத்தியமா என்பது தெரியவில்லை. இருந்தாலும், இது இப்போது under processingல் வைக்கப்படுகிறது. இதைப்பற்றி நண்பர்கள் எழுதுங்கள்).
  • Writing Competitions. Difficult but worth a try.
    •  you can add music reviews..
    • you are having an excellent sense of humor, so you can add some spoofing posts or humor posts regularly.
    • and write about some good humor movies, hollywood classics, and best of horror movies..
  • அரசியல் கட்டுரைகள். இதுவரை, தமிழில் எந்த இடத்திலும் நடுனிலையான அரசியல் கருத்துகளைப் படிக்கவில்லை. articles on like Velacheri encounter. Tamil readers seem to be gone to stone age by supporting killings. I am not sure whether you support police or not. But I will participate in such debates. (என் பதில் – அரசியல் கட்டுரைகள் எழுத எனக்கு எந்தத் தகுதியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை நண்பரே. இருந்தாலும், இதுபோன்ற பல கருத்துகள் வந்துள்ளதால், ஆரம்பிக்க முயக்கிறேன்).
  • டர்டி ஜோக்ஸ் என்ற சிறிய காலம் சேர்த்தால் என்ன???? இந்த கிம்-கி-டுக் -க்கு தனி tab ஆரம்பித்திவிட்டு அவரது பாதிபடங்களை மட்டுமே விமர்சித்துள்ளீர். அதை தொடருங்கள். (என் பதில் – கட்டாயம். வெகு விரைவில் கிம் கி டுக் சீஸன் 2 பிகின்ஸ்).
  • நீங்கள் சென்னை மற்றும் பெங்களூரில் வாழ்ந்துள்ளீர்கள். இரு நகரங்களை பற்றி எழுதலாம். படங்கள் தான் உங்கள் தளத்தின் முக்கிய பகுதி என்பதால் நீங்கள் ரசித்த தியேட்டர்கள் பற்றியும் எழுதுங்கள். எனக்கு விதம் விதமான தியேட்டர்களில் படம் பார்ப்பது பிடிக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அணுபவம்.
  • நீங்க அரசியல் பற்றி அவ்வளவா எழுதுறது கிடையாது. ஆனா அடிக்கடி வெளிப்படுற உங்கள் அரசியல் கருத்துகள் எனக்கு ரொம்ப பிடிக்கும், உ.ம் ஒரு முறை, பேஸ்புக்கில் சந்திரமோகன் செந்தில் குமார் அவரது பக்கத்தில் நடந்த நரேந்திர மோடி பற்றிய விவகாரம்…. அரசியல் பற்றியும் நீங்கள எழுதினால் கண்டிப்பாக நல்லாருக்கும், உதாரணம், FDI, கூடங்குளம், போன்ற அரசியல் பிரச்சனைகள், ஒரு நல்ல விவாதத்தை திறந்து விடும்….
  •  என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் : அரசியல் விமர்சனமும் வரவேண்டும்.  தலைவா புது கட்சி ஆரம்பிச்சிடலாம் . நான்தான் கொபசே.
  • You write about movies, subjects.. why dont u write about your experiences with fellow human beings. your learings.. etc.. You have a gift of fluent and gripping writing style in english and tamil.. Whatever you are writing may give the knowledge and reading pleasure to the reader..but i would like your wrtings to do some changes in the people who are reading it.. Hope you understand what i am saying.. if not, please let me know, I will call you and we can discuss… My nymber is ****. Me–**** **** living in ************* (நண்பரே… கட்டாயம் பேசலாம். அழைக்கிறேன்).
  •  முன்னாடி ஹாலிட்பாலா அவர்கள் +18 அப்படின்னு ஒரு தனி தொடர் போட்டாரு அந்த மாதிரி நீங்களும் ஒரு தனிப்பிரிவு இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். (என் கருத்து: ஆஹா…. இதைப்பத்தி அவரே இங்க வந்து சொல்லுவாரு).

கேள்வி 10: இந்தத் தளத்துக்கு ரேட்டிங் கொடுக்கவேண்டும் என்றால் ஒன்றிலிருந்து பத்துக்குள் எந்த ரேட்டிங் கொடுப்பீர்கள்? (1 – மோசம்; 10 – சூப்பர்). உங்கள் ரேட்டிங் குறைவாக இருந்தால், அது அதிகரிக்க இங்கே என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? 

ஒன்று என்ற ரேட்டிங் (படுமோசம்) கொடுத்தவர் ஒருவர். மூன்று என்ற ரேட்டிங், மூவர். ஐந்து என்ற ரேட்டிங், ஆறுபேர். ஆறு ரேட்டிங், 10 பேர். ஏழு ரேட்டிங், 38 பேர். எட்டு ரேட்டிங், 41 பேர். ஒன்பது ரேட்டிங், 29 பேர். பத்து (சூப்பர்) ரேட்டிங், 17 பேர். ரேட்டிங்கில் நம்பிக்கையில்லை என்றவர்கள், 11 பேர்.

இதிலும், பல அரிய கருத்துகள் வந்துள்ளன. அவையெல்லாவற்றையும் சீக்கிரம் அமல்படுத்துவேன்.

சில சுவாரஸ்யமான கருத்துகள்:

  • பிடிச்சதுக்கு எப்போவுமே மார்க் போடுறது எனக்கு பிடிக்காது..உங்களுக்கு மார்க் கண்டிப்பாக தெரிய வேண்டும் எண்டால் 10 marks
  • I would give it a 6 with the firm belief that anything can be improved. On the whole, I thought you write twice as well in Tamil compared to English and your passion for films shines through. Keep up the good work and thanks!
  • ஒன்பதுதான் கொடுப்பேன்.பத்து கொடுக்க மாட்டேன். மார்க் போடுவதில் நான் தமிழ் வாத்தியார்.
  • 8 (personally).  Hope this won’t hurt you. You’re not a full time blogger but still you have lots of information amidst all your work, which will rate you about 9. Finally, I’m also from Coimbatore and living in ********** now. Great to know about you. Please drop a line to di******************@yahoo.com when you get a chance. (என் கருத்து: கட்டாயம் நண்பா).
  • Mostly I am a silent reader. But I thought at-least this time i have to spend few minutes to fill this for you.(Well i took 25 min to write all these answers.) And Regarding the RATING … forget about it…… After you wrote a post you felt satisfied then its 10. If you want to write for others rating i am afraid you may loose you quality.
  •  7.. நான் எதுவும் இங்கே மேதாவித்தனமாக சொல்ல வரவில்லை அண்ணா.. ஒரு சில எண்ணங்கள் மாத்திரம்..!  நான் பதிவெழுத வந்த புதிதில் (2010), உங்கள் பதிவுகள் எல்லாம் செமயாக இருக்கும்.. இப்போ அந்த exciting value கம்மியாக இருப்பதாகவே படுகிறது. ரொம்ப fact-fullலாக எழுதுவதால் உங்க காமெடிகள் குறைந்துவிட்டதோ?..(அதை மீள எதிர்பார்க்கிறேன்.. )”2011ன் சிறந்த பாடல்” மாதிரி அடிக்கடி ரிலாக்சான பதிவுகளை எழுதி வாருங்கள்
  • என்னோட கணக்கு 9 மார்க் தல ;-)) தொடர்கள் அதிகம் வருவது போல இருக்கு அதை கொஞ்சம் சரி செய்து படங்களை மேலும் தனிப்பட்ட திரைத்துறையினர் பற்றியும் எழுதினால் இன்னும் உங்கள் தளம் மின்னும் ;-)) என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் & நன்றிகள் ?
  • My rating 8. Reason / my view to increase it to 10.  1. Reviews / recommendations of more English movies. I like your taste already. So getting your recommendation would be great. For example, I got inputs from a movie called oldboy from one of the comments in your section. It turned out great, and was wondering how you missed it.  2. Lesser importance to the nostalgic 80s or 90s movies, comics, etc. I understand you like them. But the frequency had started increasing now. This is only my personal opinion. You should use this blog for your personal satisfaction. If you feel good about writing something, you should write it, without worrying about people like me who might or might not like certain things. You obviously cannot satisfy everybody.  Having said all this, I really appreciate the work you are doing, and will forever be indebted to you for the effort you are putting to enlighten some of the poor souls like me. Great job and keep it up.

அவ்வளவுதான். 

இந்த சர்வே துவக்கத்தில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. நண்பர்களின் நேரத்தை வீணடிக்கிறேனோ என்று. ஆனால், மடை திறந்ததுபோல் வந்த பதில்கள், அப்படி இல்லை என்பதை நிரூபித்துவிட்டன. யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் 157 பதில்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. என் பொருட்டு இத்தனை நேரம் எடுத்து சிரத்தையாக இந்த சர்வேவை நிரப்பிய நண்பர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள் நண்பர்களே. நீங்கள், இது உங்கள் தளம் என்ற உரிமையுடன் சொல்லியுள்ள அத்தனை பதில்களுமே எனக்குப் பொக்கிஷம் போன்றவை. ஒவ்வொன்றாக அவைகளை அமல்படுத்துகிறேன். இனியும் எதாவது தோன்றினால், அவசியம் எனக்கு எழுதுங்கள். 

இவ்வளவு பெரிய பதிவைப் படித்ததற்காகவும் ஒரு ஸ்பெஷல் நன்றி.

  Comments

18 Comments

  1. உங்க தி.எ.இ பதிவில் நான் போட்ட கமெண்ட்.

    ///
    இந்த தொடர் முடியும் வரை, உங்க ஆர்வம் குறையாமல் இருக்கனும்னு உஜிலாதேவிகிட்ட வேண்டிக்கிறேன்!!!

    (LOTR-ல் முன்னாடியிருந்த ஆர்வம் இப்ப உங்களுக்கு கம்மியாகிடுச்சோ-ன்னு எனக்கு டவுட். இப்படி சொல்லுறதை தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்)
    ///

    இந்த டவுட் இன்னும் எனக்கு இருக்கு. தொடர் எங்க போகுதுன்னே தெரியலை. இன்னும் ஒரு மாசத்தில் ஒரு வருசம் ஆகப்போகுது. இப்பவும் தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னுதான் நினைக்கிறேன். 🙂 🙂

    இந்த “ஆரம்ப்பிச்சோ… முடிக்காதோ” வியாதி எனக்கும் இருக்கு. ஒரு ப்ராஜக்டை ஆரம்பிச்சவுடனே… அடுத்த ப்ராஜக்ட் மேல மொத்த ஆர்வமும் வந்துடும் [பிக்ஸார் ஸ்டோரி எழுதும் போது அதே எண்ணம் வந்துச்சி. ஆஃபீஸ்லயே உட்கார்ந்து மொத்தத்தையும் எழுதி ஒரே நாள்ல 2-3 பதிவா போஸ்ட் பண்ணி முடிச்சேன்னு நினைக்கிறேன்].

    உக்களுக்கும் அதே!!!! LOTR எழுதும் போது.. ஸ்க்ரீன்ப்ளே பத்தின பார்ட் வந்ததும்…. அடுத்த பதிவு “திரைக்கதை எழுதுவது இப்படி”.

    முரளி ‘மாயன் காலண்டர்’ பத்தின தொடரை ஷேர் பண்ணினவுடனே “ஏலியன்ஸ்” தொடர்!! 🙂 🙂 🙂

    =======

    சரி.. இதெல்லாம் விடுங்க!! இந்த சர்வேயில் எனக்கு புரியாத ஒரு விசயம் என்னன்னா…. எப்படி ஒருத்தர் கிட்ட இருந்து எல்லா விதமான கட்டுரை/பதிவை இவங்க எதிர்பார்க்கறாங்க? அரசியல், சினிமா, இலக்கியம், புத்தகம், கேம், டெக்னாலஜி……. -ன்னு இத்தனை பிரிவுலயும் எழுத நீங்க என்ன ஜீஜிக்ஸ்.காம் ஸ்வேதா-வா?

    =======

    அந்த ஒன்பதாவது கேள்விக்கு 10-வது பதில்! ஆஹா…!! நான் கூட அதை எழுதினதை மறந்துட்டேன். நம்மை ‘எதுக்கெல்லாம்’ நினைப்பு வச்சிருக்காங்க பாருங்க? 🙂 🙂

    தலைவர் ஜாக்கி அதை பத்தி எழுதினதுதான் நினைப்பு வருது. “இவர் 18+ படங்கள் என்ற தலைப்பில் எழுதி.. இளைஞர்களின் கைரேகை அழியக் காரணமானவர்”!!! ஜெய் ஜாக்கி!

    Reply
  2. கேம் விமர்சனம் நிச்சயம் தேவைன்னு நினைக்கிறேன். நீங்க தலைப்பில் PS3-ங்கறதை எடுத்துட்டாலும்… கம்ப்ளைண்ட் பண்ணத்தான் செய்வாங்க (நீங்க எழுதின கேம் அத்தனைக்கும் பிஸி வெர்ஷனும் இருக்கு.). PS3-யே இருந்தா கூட, அதை கேம் கன்ஸோலா யூஸ் பண்ணுறது எத்தனை பேர்? 🙁

    உங்க நண்பர் சாரு சொல்ற மாதிரி (20 வருசத்துக்கு முன்னாடி எழுதின ஜோக்கர் கதையை இப்ப விவாதம் பண்ணுறாங்க), நீங்க நம்ம கம்யூனிட்டிக்கு ரொம்ப அட்வான்ஸா இதையெல்லாம் எழுதி வைக்கறீங்க. இன்னும் 4-5 வருடத்தில் இதையெல்லாம் படிப்பாங்க (அப்ப PS4 வந்திருக்கும்). நானும் 2009-ல் எல்சிடி/எல்இடி/பிஎஸ்3-ன்னு எழுதி (அதுக்கு தனியா ஒரு ப்லாக் எழவு வேற) மண்டை காஞ்சதுதான் மிச்சம். கேம் பத்தி எழுதனுங்கற ஆர்வம் அப்பவே போய்டுச்சி.

    Reply
  3. சர்வேயில் இல்லாத ஒன்னை சொல்லிட்டு எஸ்ஸாய்க்கிறேன்.

    நீங்க ஆங்கில டிவி தொடர்களை பத்தி நிறைய எழுதுனுங்கறது என்னோட விருப்பம். கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஷெர்லாக்கோட அது முடிஞ்சிட கூடாது.

    Reply
  4. பாஸ் … முதல்ல உங்க பதிவு கூகுள் ரீடர்ல காட்டல. ஃபீட் அப்டேட் ஆகலன்னு நினைக்கிறேன். கொஞ்சம் பாருங்க.

    Reply
  5. ஸ்ஸ்ஸ்அப்பா ….பதிவுல இருக்கிற கருத்துக்களை வாசிக்கவே மூச்சு முட்டுது. நீங்க எப்படி 1570 கருத்துக்களையும் வாசித்தீங்க? வாசித்து தொகுத்தும் கொடுத்திருக்கீங்க பாருங்க. க்ரேட்.

    அப்படியே அந்த 80களின் தமிழ்சினிமா தொடரை ப்ளீஸ் ப்ளீஸ் மீண்டும் அடிக்கடி எழுதுங்க.

    Reply
  6. ஒரு பத்து நாள் ஊர்ல இல்லாதது தப்பாப் போச்சு…! சர்வே போட்டு ரிசல்ட்டும் சொல்லிட்டாய்ங்க…! ஆனா அந்த மெஜாரிட்டி ஆப்சன்ஸ் பூராவுமே நா சொல்ல நினச்சதுதான்..! ஆனா.. தொடர்கள்ள மட்டும் “திரைக்கதை எழுதுவது எப்படி”தான் என்னோட ஃபேவரைட்…!!

    Reply
  7. machan.. kalakida.hard work theriyuthu.

    Reply
  8. சர்வேயில் பங்கு பெற்றவர்கள் 157 பேர்.. அதுல என்ன மாதிரி மட்டமான Net connection னால feed back சொல்லமுடியாம போனவங்க ஒரு 150 வெச்சிக்கலாம்.. உங்களையே நம்பி இருக்கற இவங்களுக்காக என்ன செய்யபோரிங்க 🙂 🙂

    Reply
  9. சொன்னது போலவே அனைத்து பதில்களையும் படித்து மிக பெரிய ஒரு பதிவாக போட்டுள்ளீர்கள் தல. உங்கள் உழைப்பு அசர வைக்கிறது 🙂

    Reply
  10. முதலில் இந்த அட்டகாசமான சர்வேவிற்கு எனது வாழ்த்துகள்.

    இந்த சர்வே – ப்ளாக் – பதிவு, இதெல்லாம் ஒதுக்கி வெச்சிட்டு – முதல் ரெண்டு பேராவ படிச்சா….நாங்க, அட்லீஸ்ட் நா கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.

    இந்த பதிவுகள் – ப்ளாக் – தொடர் எல்லாம் தாண்டி – நீங்களே சொல்லியிருக்குற மாதிரி “மற்றவர்களுக்கு நாம் project செய்யும் பிம்பம் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் நமக்குப் புரியவைக்கும் சக்தி”, project ஆகியிருக்குற கருந்தேள் என்ற பிம்பத்திற்கும்(??) ராஜேஷ்க்கும் ஒரு வித்தியாசம் கூட எனக்கு – கொஞ்சமே பழகியிருந்தாலும் – தெரியல. மத்த நண்பர்களுக்கும் அப்படித்தான்னு நினைகிறேன்.இதுவொரு முக்கிய – பெரிய விஷயமா எனக்கு தெரியுது. எந்த aspectலன்னு உங்களுக்கே தெரியும்.

    இதுபோன்ற – கருத்து பரிமாற்றங்கள் தான் பதிவுலகத்த அடுத்த லேவலுக்கு எடுதுத்திட்டு போகச் செய்யும்னு நினைக்கிறேன். இதுல நண்பர்கள் பகிர்ந்துள்ள பல கருத்துகள் – உங்களுக்கு மட்டுமின்றி எங்கள மாதிரி பல ஆரம்பகால பதிவர்களுக்கு மிக மிக பயனுள்ளதா இருக்கும். அதற்கும் சேர்த்து உங்களுக்கும் பல நண்பர்களுக்கும் ஒரு நன்றி.

    Reply
  11. ஆனால் ஒரு மிகப் பெரிய வருத்தம் இந்த பதிவுல எனக்கு இருக்கு. “வாசகன்” என்ற பதம் ஒரே ஒரு முறைதான் வருது. அதுவும் ஒரு நண்பரின் கருத்துல தான். என்னவோ போங்க. உங்களுக்கு வாசாகர்களை மதிக்க தெரியல…

    Reply
  12. சூப்பரப்பு..

    வாழ்த்துகள் நண்பா. கலக்குங்க.

    இந்த பிஸியிலதான் போன் அட்டண்ட் பண்ணலியா? 🙂

    Reply
  13. very very nice

    Reply
  14. கலக்கிட்டிங்க ராஜேஷ், இவ்வளவு கருத்துக்களையும் படிக்குறதே பெரிய விஷயம், ஆனா அத்தனையும் படிச்சுட்டு ஒரு பதிவு வேற… சான்சே இல்ல… வாழ்த்துக்கள் ராஜேஷ்…

    நான் சொல்லலாம் ன்னு நினச்சத்த கொழந்த சொல்லிட்டாரு,

    முக்கியமா இது,
    ” project ஆகியிருக்குற கருந்தேள் என்ற பிம்பத்திற்கும்(??) ராஜேஷ்க்கும் ஒரு வித்தியாசம் கூட எனக்கு – கொஞ்சமே பழகியிருந்தாலும் – தெரியல. மத்த நண்பர்களுக்கும் அப்படித்தான்னு நினைகிறேன்”

    Reply
  15. எப்படியோ இந்த சர்வே ல கிடச்ச இன்னொரு நல்ல விஷயம், பாலா ரொம்ப நாள் கழிச்சு ஒரு பதிவ இங்க கமெண்ட் ல போட்டது :):)

    யாய்ய்ய்யி யாரது என் தலைவன ஓட்டுறது….??!!!

    ///“இவர் 18+ படங்கள் என்ற தலைப்பில் எழுதி.. இளைஞர்களின் கைரேகை அழியக் காரணமானவர்”!!!///

    நீங்களாவது ஒரு லேபில் போட்டு எழுதுனிங்க, ஆனா ஒரு காலத்துல அவர் எழுதுன எல்லா பதிவுமே அப்படி தான் இருந்துச்சு… 😉 😉

    Reply
  16. @ ஆல்தோட்ட பூபதி – இந்தத் தொடர் கிளிஷேல இருந்து மொதல்ல விடுபடணும் பாலா… 🙂 . . ஒன்னொன்னா எல்லாத்தையும், இடைவெளி இல்லாம மொதல்ல முடிக்கிறேன். ஏன்னா, ஆல்ரெடி, இன்னும் ரெண்டு புது தொடர் எழுதுறதுக்கான மெடீரியல் கைல இருக்கு… ஹீ ஹீ

    அதே மாதிரி, எல்லாத்தஹியும் எழுதனும்னு நண்பர்கள் சொல்லிருக்குறது, நம்ம மேல இருக்குற அன்புன்னு எடுத்துக்க வேண்டியதுதான் 🙂 . .

    கேம்ஸ் பத்தி – நான் அதை அடியோட விட்டுரப்போறது இல்லை. அப்பப்போ, 2 -3 மாசத்துக்கு ஒருவாட்டி, இன்னும் நிறைய டீட்டெய்லா எழுதலாம்னு இருக்கேன். கேம் ப்ளே, Controls , ரேட்டிங் … இப்புடி… பார்க்கலாம்

    ஆங்கிலத் தொடர்கள் – கட்டாயம் முடிஞ்ச வரைக்கும் எழுத முயற்சி பண்ணுறேன் தல..

    @ ஹாலிவுட் ரசிகன் – உண்மையில், அத்தனை கமன்டையும் படிச்சி தரம்பிரிக்குறதுக்குள்ள பெண்டு நிமிர்ந்துருச்சி. ஆனாலும், நம்மளைப் பத்தின feedback தெரிஞ்சிக்கிறது எப்பவுமே நல்லதுதானே 🙂

    @ logu – கவலைய உடுங்க நண்பா… அதான் சொல்லிட்டீங்கல்ல.. ஒண்ணொண்ணா செயல்படுத்துவோம் 🙂

    @ john – 🙂

    @ castro Karthi – அடப்பாவி. இது வேறையா? சரி உடுங்க மனசுல ஒரு இடம் கொடுத்துருவோம்

    @ kanagu – நமக்குப் புடிச்சதை செய்யுறது சந்தோஷம் தானே தல 🙂

    @ கொழந்த – நான் வெளில எப்புடி ப்ராஜெக்ட் ஆகுறேன்றதை தாண்டி, எனக்குன்னு ஒரு ஐடன்டிடி இருக்கு. அது ஷ்ரீக்கு மட்டுமே தெரியும் 🙂 .. அப்பால, இது ஒரு ஆரம்பம் தான். கருத்துப் பரிமாற்றம் இனியும் தொடரும். வேற வடிவத்துல. .. lets c ..

    என்னாது வாசகரா? ஆள உடுங்க சாமி

    @ செ. சரவணக்குமார் – தெரியலையே… உங்க நம்பர் அனுப்புங்க.. நானே கூப்புடுறேன்

    @ சுபாஷ் – நன்றி 🙂

    @ ஷாஜி – நன்றி 🙂

    @ முரளி – உண்மைல, அத்தனை கருத்துகளும், மொத்தம் 60 பக்கங்கள் இருக்கு. ஒரு வேர்ட் ஃபைல்ல … அத்தனையும் ஒண்ணுவிடாம படிச்சாச்சு. ஒண்ணொண்ணா செயல்படுத்த வேண்டியதுதான்.

    //நீங்களாவது ஒரு லேபில் போட்டு எழுதுனிங்க, ஆனா ஒரு காலத்துல அவர் எழுதுன எல்லா பதிவுமே அப்படி தான் இருந்துச்சு// – ஹாஹ்ஹா 🙂

    Reply
  17. நண்பா உங்க இனயதளத்துக்கு 2 மாசதுக்கு அப்புரம் இப்பதான் வந்தேன் சர்வே , வீடியோனு கலக்கிடிஙக போங்க நெறய உலக சினிமாவ பத்தி எழுதுங்க உங்கள வீடியோல பார்தது ரொம்ப சந்தோஷம் நண்பா உஙக விமர்சனம் எல்லாம் நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்க

    Reply

Join the conversation