நானும் Kill Billலும்
பல வருடங்களுக்கு முன்னரே Kill Bill பார்த்திருந்தாலும், வருடத்திற்கு அட்லீஸ்ட் ஒருமுறையாவது மறுபடி மறுபடி பார்த்துக்கொண்டே இருப்பது வழக்கம். ஏற்காடு சென்றிருந்த போது, நண்பர் சு.ரா (அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள். முழுப்பெயர் சுரேஷ் ராஜமாணிக்கம்), ஏற்காட்டில் இருந்து சேலம் வரும்வழியில், காரில், திடீரென்று Kill Bill soundtrack ஓடவிட்டார். அது, மீண்டும் என்னைக் கில் பில் பார்க்க வைத்துவிட்டது. ஆகவே, கில் பில்லைப் பற்றிய எனது எண்ணங்களை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.
ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில்,பக்கம்பக்கமாக எழுத சோம்பேறித்தனப்பட்டு,டகாலென்று வீடியோ ஒன்றில் பேசிவிட்டேன். அதைத்தான் இங்கே காணப்போகிறீர்கள்.
எப்படி இருக்கிறது? இது, ஒரு குறிப்பிட்ட பகுதிதான். அதாவது, கில் பில் இசை பற்றிய ஆரம்பம். இன்னும் எக்கச்சக்கமாக இருக்கிறது. உங்களுக்குப் பிடித்திருந்தால்,மற்றதையும் வீடியோவாகப் போடுகிறேன். இல்லையென்றால், எழுதிவிட வேண்டியதுதான்.
கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள். நன்றி.
பின்குறிப்புகள்
- ஒரு விஷயத்தை எழுதுவதை விட, பேசிவிடுவது மிக எளிது என்பது என் கருத்து.
- இந்த வீடியோவில், ‘இசைன்னா…..இசை’ என்று நான் பேசுவது போல ஒரு இடம் வருகிறது :-)… வீடியோ போட்டுப் பார்க்கும்போதுதான் அது ‘மூணத்தொட்டது யாரு’ போலவே வந்திருப்பதை அறிந்தேன். அதேபோல், அவ்வப்போது, ஆங்கில டயலாக் சொல்லிவிட்டு அதனைத் தமிழில் சொல்கையில், மேஜர் சுந்தர்ராஜனாக மாறிவிட்டது போலவும் உணர்ந்தேன். ஆனால் வேறு வழியில்லை ?
- க்வெண்டின் மற்றும் ரோட்ரிகஸ் பற்றி இன்னும் நிறைய பேச நினைத்தேன். ஆனால், அதெல்லாமே, இந்த வீடியோ ஓகே என்று நண்பர்கள் நினைத்தால் மட்டுமே.
- பிடித்திருந்தால், அவ்வப்போது ஒரு வீடியோ விமரிசனம் போடலாமா? தயக்கப்படாமல், நண்பர்கள் வெளிப்படையாக எழுதலாம். பிடிக்கவில்லை என்றாலும் தெளிவாகவே சொல்லுங்கள். நிறுத்திவிடலாம்.
- பக்கம்பக்கமாக எழுதிக்கொண்டே இருப்பதை விட, அடுத்த ஸ்டெப்பாகத்தான் இந்த வீடியோ விமரிசனங்கள். இன்னும் நிறைய ஸ்டெப்கள் உள்ளன. அவ்வப்போது ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்துவேன் ?
- இந்த வீடியோவைப் பற்றி ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால், this is my tribute to Quentin !
இதோ வீடியோ. இந்த வீடியோவில், நான் பேசும்போது, பின்னணியில் (அவ்வப்போது) ஒலிக்கும் இசையை கவனிக்க முயலுங்கள். நன்றி.
This comment has been removed by the author.
தமிழில் முதல் முறையாக-ன்னு என்னென்னமோ அறிமுகப் படுத்துவீங்க போல..! 🙂
1. துப்பாக்கி சுடும் சத்தத்தை கேட்டப்ப, ஷீரீ எதோ பாத்திரத்தை கீழ போட்டுட்டாங்களோன்னு நினைச்சேன். 🙂 🙂
2. பேங்.. பேங்.. ஆரம்பிச்ச பின்னாடி, நீங்க என்ன பேசினீங்கங்கறது… கடவுளுக்கே வெளிச்சம். அத்தனை சவுண்டா பேக்ரவுண்ட்ல சத்தம்.
3. ஆடியோ சவுண்ட் பிரச்சனை எனக்கில்லை. நார்மலாதான் இருக்கு.
4. நிறைய இம்ப்ரூவ்மெண்ட் தேவைப்படுது. குறிப்பா சொல்ல வர்ற பாய்ண்டுக்கு நீங்க வர்றதுக்குள்ள.. ஒரு நிமிஷம் ஆகிடுது. ஆனா நிச்சயம் போகப் போக சரியாகிடும்னு நம்புறேன்.
5. ‘இப்பவே தெரிஞ்சிருக்கும் என்ன படம்னு’-ன்னு நீங்க சொல்லும் போது 56-வது செகண்ட். ஏற்கனவே ப்லாக் ஆரம்பிச்சி, யுட்யூப் வரைக்கும் ‘கில் பில்’-ன்னு டைட்டில் கொடுத்த பின்னாடியுமா? 🙂 🙂 🙂 [அதுக்கு முன்னாடியே ரெக்கார்ட் பண்ணியிருப்பீங்க. ஆனாலும்.. நீங்க சொல்ல நினைச்சதின் எஃபெக்ட் கிடைக்காதே]
6. உங்க முகத்தில் கண்/மூக்கை தவிர வேற எதுவும் வீடியோவில் தெரியலை. எதுனா ப்ளேடு கிடைக்கிறதுல பிரச்சனையா தல? இல்ல.. என் மானிட்டர்ல காண்ட்ராஸ்ட் பிரச்சனையா?
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
படத்தின் காட்சியை விளக்கும் போது…
ஒரிஜினல் படத்தின் காட்சிகளை இணைக்கலாமே!
காப்பி ரைட் பிரச்சனை வரும் என்றால் தவிற்த்து விடவும்.
என் கருத்து –
1. சூப்பர் ஃபில்ம். இதப்பத்தி நிறைய எழுதணும் சொல்லணும் என நீங்க நினைக்கும் படங்களுக்கு மட்டும் வீடியோ விமர்சனம் போடலாமே? டைம் மிச்சம். மொக்கைப் படங்களுக்கு நார்மலா எழுதிவிடுங்க.
2. அதே போல நீங்க சுத்தி வளைச்சு மெயின் மேட்டருக்கு வர டைம் எடுக்குது. அதே போல வீடியோவைக் கொஞ்சம் ட்ரிம் பண்ணி ஒரு 10நிமிடங்களுக்குள் கொண்டு வந்தால் நல்லாயிருக்கும். ஏன்னா நிறைய பேருக்கு 15-20 நிமிஷம் உட்கார்ந்து விமர்சனம் கேட்க முடியாமலிருக்கும். வாசிச்சா 5 நிமிடங்களில் கேம் ஓவர்.
3. மேலே உலகசினிமாரசிகன் சொன்னது போல படத்தின் நல்ல காட்சிகளை இணைக்கலாம். ஆனால் வீடியோ லென்த் கூடும். யோசிச்சு பாருங்க. காட்சியை விவரிக்கும்போது Picture-in-picture போல வீடியோவின் ஒரு மூலையில் படத்தின் க்ளிப்பை ஓடவிடலாம்.
இவ்வளவு தான் தோணிச்சு. நல்லதொரு ஆரம்பம். ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க.
பேக்ரவுண்ட்ல யாரோ இருமுறாங்களா? யாரோ ஒருவரின் சத்தம். உங்க பேச்சை சரியா கேட்க முடியல.
ரூம்ல ஒருமாசமா நெட் இல்ல.. அபிஸ்ல விடியோ பாத்தா அப்புடியே வீட்டுக்கு தொறத்திடுவாங்க… Wat to do…
நல்லா இருக்குதுங்க…. இன்னும் கொஞ்சம் டோராண்டினோ பத்தி பேசுங்க ப்ளீஸ்…
good move keep it up ji
வீடியோவை விட எழுதுவதே அருமை… நீங்கள் எழுதும் பாணி மிகவும் மிகவும் அருமை… எனவே எழுதுவதையே தொடரவும்… இது என் தாழ்மையான கருத்து…
ஒரு முக்கியமான ட்ரிபியுட்ட விட்டுட்டீங்க……..
The brideன் எல்லோ உடை……..
வீடியோ, a bit disappointing..ஏற்கனவே பல பேர் சொல்லிட்டாங்க. எடிட்டிங் செஞ்சிருந்தா பக்காவா இருந்திருக்கும்…
இன்னொன்னு தோணுச்சு.. 10 நிமிஷம்ன்னு முடிவு செஞ்சிட்டு அத்த ரெண்டு ரெண்டு நிமிஷமா பிரிச்சிட்டு அதுக்கு – சாப்டர் மாதிரி – இசை, இயக்கும்,குவிண்டின் இப்படி அஞ்சு டாபிக்…
சாப்டர்கள கலச்சு கூட சொல்லலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
நாந்தான் 600
வீடியோல நெறைய விசயங்களை கம்மி நேரத்தில் convey பண்ணினரலாம்.. அதனால் எனக்கு இந்த முயற்சி பிடிச்சிருக்கு.. so while doing video review provide us more info on movies which we don’t know.. that would be great..
வீடியோவை விட எழுதுவதே அருமை…….video method avlo nalla illainga…
புது முயற்சி.நீங்கள் சர்வே பற்றி வீடியோவில் சொல்லும்போதே இப்படியொரு ஐடியா எனக்கு உதித்தது.இதன் வரவேற்ப்பு பற்றி என்னால் யூகிக்க முடியவில்லை.ஏனென்றால் உங்கள் ப்ளாக் படிபவர்கள்,உங்கள் எழுத்தின் நடை விரும்பி படிபவர்கள்.மேலும் எடிட் பண்ணி சொன்னால் நல்லது.எழுதுவதை குறைத்துக்கொள்ள வேண்டாம்.
நண்பர்களே … அத்தனை கமெண்டுகளுக்கும் நன்றி. ஆக்சுவலி, இது ஒரு டெஸ்ட் ஒளிபரப்பு மட்டுமே. இப்படி ஒரு வீடியோ விமர்சனம் போட்டால் நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பரிசோதித்தேன். பல கமெண்ட்கள் வந்துள்ளன. இனி ஆட்டத்தில் இறங்குவோம். வெகு விரைவில்………..
ஐ…குட் ஐடியா தல…. ஒங்க பழைய பதிவுகளை அப்படியே அசைபோடறேன்…
வீடீயோ விமர்சனம் நல்லாருக்கு…ஒரு சஜஷன்… ஸ்க்ரீன் ப்ரென்டேஷன் கொடுக்கும்போது… இவ்ளோ க்ளோசப் வேண்டாம்…. உக்காந்திருக்கற மாதிரி இருந்தா நல்லாருக்கும், முக்கியமா க்ளீன் ஷேவிங், அப்புறம் கழுத்துல கறுப்பு கயிறு இல்லாம இருந்தா இன்னும் நல்லாருக்கும்…:)