கோச்சடையான் (2014): 3D – Tamil

by Karundhel Rajesh May 24, 2014   Tamil cinema

Uncanny Valley – when human features look and move almost, but not exactly, like natural human beings, it causes a response of revulsion among some human observers.

1. ’அன்கேன்னி வேலி’ என்று இங்லீஷில் ஒரு உளவியல் பதம் உள்ளது. என்னவென்றால், மனிதர்களைப் போலவே சில உருவங்களை உருவாக்கி நடமாடவிடுகிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். அவைகள் மனிதர்கள் போலவே கைகால்களை ஆட்டுகின்றன. பேசுகின்றன. நடக்கின்றன. அவைகளைப் பார்த்த மாத்திரத்தில் நிஜமான மனிதர்களுக்கு முதலில் மனதில் தோன்றும் உணர்ச்சி வெறுப்புதான் என்று இந்தத் தியரி சொல்கிறது.

2. ஹாலிவுட்டின் சரித்திரத்தில் முழுவதும் Performance Capture தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் – Polar Express.  இந்தப் படத்தைப் பார்த்த பலரும்,  அதன் அனிமேஷன் மிகவும் கொடுமையாக இருந்ததாகச் சொல்லியிருக்கின்றனர். சிலருக்கு அந்த அனிமேஷனைப் பார்த்ததும் பய உணர்ச்சியும் வந்திருக்கிறது. இது ஏனெனில், நாம் மேலே பார்த்த உளவியல் விஷயம்தான். Uncanny Valley. எதுவுமே முதன்முதலாக இப்படிச் செய்யப்படும்போது அதனை அடிமனம் வெறுக்கத்தான் செய்யும் என்பதே இதன் சாராம்சம்.


ஒரு அனிமேஷன் படத்தில் ஒலி எப்படி இருக்கவேண்டும்? என்னதான் நாம் பார்ப்பது அனிமேஷன் என்றாலும், ஒலியைப் பொறுத்தவரை எத்தனைக்கெத்தனை நிஜமான ஒலிகளோடு ஒன்றுபடுகிறதோ, அத்தனைக்கத்தனை அந்தப் படத்தின் செயற்கைத்தன்மை குறையும். இந்த விஷயத்தைக் கோச்சடையானில் துல்லியமாகச் செய்திருக்கிறார் ரஸூல் பூக்குட்டி. படத்தில் வரும் போர்க்களக் காட்சிகளுக்காக 150 பேரை வெறியுடன் கத்தச்செய்து அதனைப் பதிவு செய்து படத்தில் உபயோகப்படுத்தியிருக்கிறார். இதெல்லாம் ஹாலிவுட்டில் சர்வ சாதாரணம். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களில் ஒலியைக் கச்சிதமாகக் கொண்டுவர என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதை யூட்யூபிலும் behind the scenes ப்ளூரேக்களிலும் பார்த்துக்கொள்ளலாம். அதேபோல் கோட்டைகளுக்கு நேரில் சென்று அங்கு தர்பார்களில் பேசும்போது எப்படியெல்லாம் ஒலி அதிர்கிறது, எதிரொலிக்கிறது என்பதையும் தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார். அந்த சாம்பிள்களை வைத்துக்கொண்டுதான் படத்தின் தர்பார் காட்சிகளில் வசனங்கள் பேசும் ஒலிமுறையையும் சத்தங்களையும் வடிவமைத்திருக்கிறார்.

இது மட்டும் இல்லாமல், கவசங்கள், அணிகலன்கள் ஆகியவற்றை அணிந்துகொண்டு ஒரு மனிதன் நடக்கும்போது என்னென்ன சத்தங்கள் எழும்? இதையும் நன்றாக ஆராய்ச்சி செய்து, படத்தில் உபயோகித்திருக்கிறார். பொதுவாக இதுபோன்ற அனிமேஷன் படங்களில் அனிமேஷன் ஒவ்வொரு அடுக்காகத்தான் உருவாக்கப்படும். உதாரணமாக ஒரு மனிதனைக் காண்பிக்கவேண்டும் என்றால் முதலில் அவனது உடலின் ஔட்லைன், பின்னர் அந்த உடலின்மீது முடி, உடைகள், அணிகலன்கள் ஆகிய ஒவ்வொன்றுமே அடுக்கடுக்காக உருவாக்கப்படும். இதனால் ஒலியையும் அதேபோல் ஒவ்வொரு அடுக்காகவே உருவாக்கும் நிர்ப்பந்தம். அதையும் கச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறார் ரஸூல்.

அவரது முயற்சிகளைப் பற்றி இந்தப் பேட்டியில் விரிவாகப் படித்துக்கொள்ளலாம்.

ஒரு அனிமேஷன் படம் மிகச்சுலபமாக உருவாகிவிடும் என்ற பொதுவான நம்பிக்கையில் உண்மை இல்லை என்று சொல்வதற்காகவே ஒலியைப் பற்றி எழுதினேன். இதுபோன்ற பல அம்சங்கள் ஒன்றுசேர்ந்தால்தான் அனிமேஷன் வெற்றிகரமாக உருவாகும். நிஜத்தில் ஒரு திரைப்படம் எடுப்பதைவிடப் பலமடங்கு கஷ்டப்பட்டால்தான் அனிமேஷன் படம் எடுக்கமுடியும்.


’ராணா’ என்ற கோச்சடையான் ரணதீரன், கோட்டைப்பட்டினம் என்ற நாட்டில் இருந்து சிறுவயதில் காளிங்கபுரிக்குக் கடலில் தத்தளித்து வந்துசேர்கிறான். அந்த ஊரில் பெரும் விரனாக வளர்ந்து மன்னன் ராஜமஹேந்திரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, அந்த நாட்டின் தளபதி ஆகிறான். அவர்களது எதிரி நாடு கோட்டைப்பட்டினம். அந்த நாட்டின் அரசன் ரிஷிகோடகன். கோட்டைப்பட்டினத்தின் மூவாயிரம் வீரர்கள் காளிங்கபுரியில் கைதிகளாக இருக்கிறார்கள். அவர்களைக் கவனிக்கும் ரணதீரன், அவர்களுக்கு விடுதலை அளித்து அவர்களைத் தாய்நாடான கோட்டைப்பட்டினத்துக்கு எதிராகவே திருப்பிவிடுகிறான். போர் மூள்கிறது. அப்போது நடக்கும் சில சம்பவங்களால் காளிங்கபுரியின் மன்னன் ராஜமஹேந்திரன் ரணதீரனின் மீது கோபமடைகிறான். அதேசமயம் கோட்டைப்பட்டினத்தின் மன்னன் ரிஷிகோடகனுக்குமே ரணதீரனின் மீது பொறாமை கலந்த கோபம். இரண்டு மன்னர்களின் கோபத்துக்கும் ஆளாகும் ரணதீரன் யார்? அவனது நோக்கம் என்ன? அந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறானா என்பதே கதைச்சுருக்கம் (சுருக்கத்தைப் படித்ததும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ‘A Fist Full of Dollars’ படம் போலவே இருக்கிறதே என்று தோன்றுகிறதா? அதற்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை).

கடைசியாக ரஜினி நடித்து எனக்குப் பிடித்த படம் – 1995ல் வெளிவந்த ‘முத்து’. அதற்கு முன்னர் ’பாட்ஷா’. முத்துவுக்குப் பின்னர் வந்த படங்கள் எதுவுமே சுவாரஸ்யமாக இல்லை (சந்திரமுகி உட்பட) என்பது என் கருத்து. ‘முத்துவுக்குப் பின்’ என்றதும் ரஜினி எக்கச்சக்கமான படங்கள் நடித்துவிட்டதாக நினைத்துவிடவேண்டாம். கௌரவ வேடங்களை விட்டுவிட்டுப் பார்த்தால், முத்துவுக்குப் பின்னர் ரஜினி 19 ஆண்டுகளில் ஹீரோவாக ஏழே படங்களில்தான் நடித்திருக்கிறார் (அருணாச்சலம், படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி, குசேலன், எந்திரன்). இவைகள் எல்லாவற்றிலுமே எதுவோ ஒன்று மிஸ்ஸாவதுபோலவே எனக்குத் தோன்றியது. இந்தப் படங்களை என்னால் முழுதாக ரசித்துப் பார்க்க முடியவில்லை. குறிப்பாக எந்திரன் படம். இத்தனை வருடங்கள் கழித்து இந்தப் பத்தொன்பது ஆண்டுகளில் ரஜினி நடித்து நான் ரசித்துப் பார்த்த படமாக ‘கோச்சடையான்’ படத்தைத்தான் சொல்லுவேன்.

காரணம்? ரஜினியின் ப்ளஸ் பாயிண்ட்களை கச்சிதமாகக் கோச்சடையான் capture செய்திருக்கிறது. ரஜினிக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள். ரணதீரனாகவும் கோச்சடையானாகவும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ரஜினிக்கே உரிய மேனரிஸங்கள், ஸ்டண்ட்கள், நடனங்கள், வசனங்கள் என்று முழுமையாக ’முத்து’வுக்குப் பின்னர் ரஜினியை ரஜினியாகவே காட்டியிருக்கிறது இந்தப் படம் என்பது என் கருத்து (படையப்பாவில் கொஞ்ச நேரம் இது இருந்தாலும், பின்னர் வேறு ரேஞ்சில் போய்விடும். அதில் ரஜினியைப் பார்த்து அவ்வப்போது ‘வயசாயிருச்சு’ என்னும் விதத்தில் அமைந்த டயலாக்ஸ் வேறு இருக்கும். பாபாவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. சந்திரமுகியில் ரஜினி ஹீரோவா இல்லை நகைச்சுவை நடிகரா என்ற சந்தேகம் நீண்டநேரம் இருந்தது. சிவாஜியில் ஷங்கர் ரஜினியை வைத்துப் பல கோமாளித்தனங்களை அரங்கேற்றினார்.  குசேலன் & எந்திரன் – ஆளை விடுங்க சாமி).

படத்தின் ஆச்சரியம் – நாகேஷ். அவரது கதாபாத்திரம் ரஜினிக்குப் பிறகு நன்றாகவே கேப்சர் செய்யப்பட்டிருக்கிறது. வசனம் உட்பட. படத்தில் தீபிகா, சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷ்ராஃப் உட்பட பிறர் எல்லாருமே கௌரவ வேடம்தான். ரஜினிக்கு சரிசமமாகப் படம் முழுக்க வருபவர் நாசர் மட்டுமே. கூடவே நாசரின் கைத்தடியாக வரும் சண்முகராஜனையும் சொல்லலாம்.

படத்தின் ஒலிக்குப் பிறகு என்னைக் கவர்ந்த விஷயம் – படத்தின் காட்சிகளில் பின்னணிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம். படத்தின் களத்தின் பிரம்மாண்டத்தை நன்றாகவே பின்னணிகள் பிரதிபலிக்கின்றன. அதேபோல் படத்தின் பாடல்களும் இசையும் அவசியம் படத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன. படத்தின் இன்னொரு அட்வாண்டேஜ் – படத்தின் நீளம். மொத்தம் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவு என்பதால் வேகமாகவே முடிந்துவிடுகிறது படம்.

எந்த நடிகராக இருந்தாலும் சரி – அவரது வளர்ச்சியில் சில இயக்குநர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருப்பார்கள். எண்பதுகளில் ரஜினிக்கும் கமலுக்கும் ஏற்ற பல படங்களை எஸ்.பி. முத்துராமன் எடுத்தார். குறிப்பாக ரஜினியைப் பிரபலப்படுத்தியவர்களில் இவர் முக்கியமானவர் (ஹிந்தியில் இதே காலகட்டத்தில் அமிதாப்பின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியவர்களில் ப்ரகாஷ் மெஹ்ராவும் மன்மோஹன் தேஸாயும் முக்கியமானவர்கள்). அதே எண்பதுகளில் கமலுக்கு ராஜசேகர் கிடைத்தார். ராஜசேகருக்குப் பின் சுரேஷ் கிருஷ்ணாவும் சிங்கீதம் சீனிவாசராவும். அப்படி ரஜினிக்கு இந்தப் படத்தில் கே.எஸ். ரவிகுமார் (படத்தின் இயக்குநர் அவர் அல்ல – சௌந்தர்யா என்றபோதிலும், கதை, வசனம், திரைக்கதை ஆகியவை கே.எஸ் ரவிகுமாரின் பங்களிப்புதான்). எனக்குப் பிடித்த கடைசி ரஜினி படமான முத்துவும் ரவிகுமாரின் கைவண்ணம்தான்.

படத்தின் நெகட்டிவ் அம்சம் என்ன?

படத்தின் ஸிஜி சரியாக செய்யப்படவில்லை என்பது உண்மை. கடந்த மார்ச் 10ம் தேதி, கோச்சடையானின் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு இப்படி ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன்.  இதோ இங்கே:


கோச்சடையான் & Performance capture.

இந்தியாவின் முதல் பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் படமாகக் கோச்சடையான் வரப்போகிறது. படத்தின் ட்ரெய்லர் வந்துவிட்டது. இதைப்பற்றிச் சொல்லவேண்டும் என்றால், இதற்குமுன் வந்திருக்கும் பர்ஃபார்மன்ஸ் கேப்சர் படங்களைப் பற்றிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் இது என்ன ஏது என்பது தெளிவாகப் புரியும். பின்னர்தான் அது மொக்கையா சுவாரஸ்யமா என்றெல்லாம் விவாதிக்கமுடியும்.

பொதுவாக இந்தத் தொழில்நுட்பத்துக்கு அவதார்தான் எல்லா இடங்களிலும் உதாரணமாகச் சொல்லப்படும். ஆனால் க்ளாடியேட்டரிலேயே இது வந்துவிட்டது. அதற்கும் முன்னர் மம்மி. உலகின் முதல் 3d பர்ஃபார்மன்ஸ் கேப்சர் படம் (முழுதாக இதே தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டது) – போலார் எக்ஸ்ப்ரஸ். அதேபோல், லார்ட் ஆஃப் த ரிங்ஸின் ட்வின் டவர்ஸ்தான் ஆஸ்கரால் அங்கீகரிக்கப்பட்ட முதல் பர்ஃபார்மன்ஸ் கேப்சர் படம்.

ரைட். இப்போது கோச்சடையான்.

அவதாரின் பட்ஜெட் – 237 மில்லியன். அதாவது, தோராயமாக 1443 கோடி ரூ. கோச்சடையானின் பட்ஜெட், அஃபிஷியலாக 125 கோடி என்று தெரிகிறது. அந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற பெர்ஃபார்மன்ஸ் காப்சரிங் கன்வெர்ஷன் தான் இதில் இருக்கும்.நாம் எல்லோரும் இங்லீஷ் படங்கள் பார்த்தே ஒப்பிட்டுப் பழகிவிட்டதால், தற்போது ட்ரெய்லர் பார்த்ததும் விமர்சனம் செய்வது எளிதாக இருக்கிறது. ஆனால் இந்தியாவின் முதல் பர்ஃபார்மன்ஸ் கேப்சர் படமாக இது வரப்போகிறது என்பதை மறக்கக்கூடாது. ஒருவேளை இதைப்போன்ற படங்கள் பல வந்தபின்னர் அவதாரின் ரேஞ்சுக்கு ஒரு படம் சாத்தியமாகலாம்.

விஸ்வரூபம் படம் டிடிஹெச்சில் வரப்போவதாகக் கமல் அறிவித்ததைப்போல் இதுவும் தொழில்நுட்பத்தில் ஒரு பாய்ச்சல்தான். இந்தத் தொழில்நுட்பத்தை வரவேற்றுப் பார்க்கலாம் என்பது என் கருத்து. அஃப்கோர்ஸ் படம் மொக்கையாக இருந்தால் அதை விமர்சிக்கத்தான் போகிறோம். ஆனால் நான் சொல்லவருவது இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி.

இதனால் விரைவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி போன்றவர்கள் விரைவில் அதிரடியாக இணைந்துகூட நடிக்கமுடியும். தமிழர்கள் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்பார்கள் என்பதால் சில்க் ஸ்மிதாவைக் கதாநாயகியாகப் போட்டுக்கூட விரைவில் படம் வரலாம். (அவர்கள் உயிரோடு இல்லாததால் அவர்களைப் போன்றவர்களைக் கேப்ச்சர் செய்யவேண்டும்).

படம் வரட்டும். விமர்சனம் செய்வோம்.


பர்ஃபார்மன்ஸ் கேப்சரிங் அறிமுகப்படுத்தப்பட்ட 2004ல்,  Polar Express படத்தின் பட்ஜெட் – 165 மில்லியன் டாலர்கள். அதே பட்ஜெட்டில் அந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தால், அப்போது பர்ஃபார்மன்ஸ் கேப்சர் தொழில்நுட்பப் படங்கள் இந்தியாவில் வந்திருக்காததால் கோச்சடையான் இன்னும் பெரிதாகப் பேசப்பட்டிருக்கலாம். ஆனால் நாம் எக்கச்சக்கமான ஹாலிவுட் பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் திரைப்படங்களைப் பார்த்துவிட்டதால் கோச்சடையானின் ஸிஜி அந்த அளவுக்கு நமக்குப் பிடிக்காது. கூடவே, இந்தக் கட்டுரையின் முதல் வரியையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவும். இந்தியாவில் இதுதான் முதல். இப்போதுதான் வந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தத் தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சியடையும்போது இன்னும் துல்லியமான பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை.

கூடவே, இந்தியாவில் அனிமேஷனுக்கும் கார்ட்டூனுக்கும் வித்தியாசம் தெரியாத பிரச்னையும் இருக்கிறது. இன்னுமே நம்மில் பலரும் அனிமேஷன் என்றால் அது குழந்தைகளுக்கானது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். காரணம் நம்மில் 90% மக்கள் காமிக்ஸ் படிக்காமல், தொலைக்காட்சியில் அனிமேஷன்கள் பார்க்காமல் வளர்ந்தவர்கள்தான். அதில் தவறும் இல்லை என்றாலும், இப்போதாவது அந்த வித்தியாசத்தைத் தெரிந்துகொண்டால் நல்லது.  மேன்மேலும் இதுபோன்ற முழுநீள அனிமேஷன் படங்கள் இந்தியாவில் வருவதை அது இன்னும் ஊக்கப்படுத்தும்.

கோச்சடையான், அதில் இருக்கும் சில குறைபாடுகளை மீறியும் ஒரு சுவாரஸ்யமான entertainer என்பதில் எனக்கு சந்தேகமில்லை. படத்தைப் பார்த்தவர்கள் அவர்களின் கருத்தை இங்கே பின்னூட்டங்களில் சொல்லலாம்.

கோச்சடையானின் மேக்கிங் பற்றிய ஒரு வீடியோ இங்கே.

  Comments

37 Comments

    • Rajesh Da Scorp

      Vinoth – கமல் இதை எடுத்திருந்தாலும் அதே அளவுகோல்தான். ஃபுல்லா உக்கார முடியுதா இல்லையா? அதான் மேட்டர். You say that you keep a tab on my kamal posts. But have you taken a look at my endhiran post? Obviously U have not. And just because some bakwaas firstpost guy posts a bad review, I cannot post the same, and please do not expect me to write what you have in your mind. I am damn sure the firstpost guy has not covered these many points I covered in my post, and secondly he would never have seen as many films I have seen. I am not writing this out of ego or something, but in mas media, 99% of the movie reviewers are not qualified to be so.

      Reply
      • Rajesh Da Scorp

        one more. this guy would go gaga on the movie if SRK or aamir khan would have acted in an animation. Trust me 🙂

        Reply
        • Rajesh Da Scorp

          I am right. It gets confirmed more and more. This guy Mihir Fadnavis, who wrote this bakwaas ROFL review in firstpost has written Godzilla and Amazing Spiderman 2 are great. LMFAO man. This proves what I wrote in my previious comment, and I just saw his blog. Seriously funny guy he is :P. Doesn’t know anything about movies. As simple as that.

          Reply
      • Vinothkumar Parthasarathy

        I know you are a better Movie critic than this minion named Mihir. I’m a great fan of your reviews. Kamal is a pseudo and lot many people who watches fine movies knows that very well but that’s not my point here. In Kamal’s case most of the time you let your bias to override your neutrality whenever you pen your criticism on Kamal. I guess you are a hard core fan of Rajini that lets you to praise this Movie ‘கோச்சடையான்’. I just feel like that. No offence buddy. 🙂

        Reply
        • Rajesh Da Scorp

          No Vinoth. I am not a Rajini fan. No bias intended :-). U can trust me. If I am a rajni fan, will I write a review like what I wrote for Endiran? please read it and then you might understand. And in Kamal’s case, Kamal and Rajni are totally different right? It’s that difference I had tried to portray :-).. Anyway, I too know there is no offence, and you are most welcome to give your open feedback. I shall take the feedback as it is and will try to retrospect 🙂

          Reply
          • Sorry Rajesh! A friend of mine has recommended to read one of the articles (TODAY) you have written about Kamal’s copying of other movies. Though I am an admirer of Kamal, I did not have any hard feeling about your accusations. Further, as a Blog writer, I was appreciating your writing skills. But, as Vinoth mentioned it is open secret that your bias is forward-biased. In that article, you have clearly mentioned that you are a fan of Rajini; this is just to remind you. Just wanted to point out this here: though I am an admirer of Kamal, I have never missed any of Rajini’s movies; any one can dream of becoming a Super star like Rajini. But, honestly, there is no one who can replace Rajini; As he says himself in is movies, he too a “தனி மனிதன்”!. I am not sure what you have written about Enthiran! I shall read it later but I HAVE THOROUGHLY ENJOYED THAT MOVIE. A week back my 5-old year daughter has (For the first time) ignored my Skype-Call for the reason that she is glued with the movie Endhiran on Television. What else we need for to say about Rajini. Anyway, I repeat that you are definitely missing the centre-line when comes to the articles about Kamal. A clear example is your review on Vishwaroopam (Just take a moment to compare these 2 reviews by yourself).

            Hat’s off to your writing skills mate! Keep rocking!! 🙂

  1. Dany

    எத்தனை பேர் one day match ல 200
    அடிச்சாலும் , சச்சின் தான் first…அது
    போல இத எடுத்துக்கலாம்…

    Reply
  2. ARAN

    Rajesh I’m a diehard rajini fanatic most of the time u criticised rajini and few times u have acknowledged his unimmittable styles in some posts especially the one I can remember the one in naan sigappu manithan ciggarette scene in train and I know u very well u r neutral to both actors when it comes to quality. U lauded kamal for Viswaroopam also. So no need to explain. As a rajini fan we are also skeptical about few things about Kocahaiyaan but now we are cleared n received very good reviews from everyone. Today I’m going to watch Kocahaiyaan 3D in Brookfields In our Coimbatore.

    Reply
  3. Sujith N Subbu

    கோச்சடையான் – மயிராண்டி பார்வை (ஸ்பாய்லர் ஆளார்ட்):
    படத்தோட முதல் விமர்சனமே படத்தில் செய்யப்பட்டிருக்கும் அனிமேஷன் கிராபிக்ஷ பற்றியதாகவே படம் வெளியாவதற்க்கு முன்பு இருந்து வைக்கப்பட்டு வந்தது. நமக்கு அந்த அளவுக்கு எல்லாம் அறிவு கிடையாது. அனிமேஷன் சூப்பரோ சுமாரோ… அதை பற்றி பேச விருப்பம் இல்லை..
    நானும் படம் நல்ல தான் இருக்கப்போகுது , படத்தை பார்த்துட்டு வந்து அதை பத்தி தப்பா பேசுனவங்களா எல்லாம் ஒரு ‘வரு வருத்தெடுக்கலாம்னு’ ஒரு மினிமம் நம்பிக்கையோடத்தான் படத்துக்கு போனேன்.

    படம் துவங்கி ஒரு கால் மணி நேரம் ஏதோ கதை சொல்ல போறாங்க அப்டின்னு ஒரு ஆவலா இருந்தா அதுக்குளையே டமால் டுமீள்னு ஒரு மூணு நாலு டுவிஸ்ட்டு… கொய்யால படம் டக்கரு டோய் னு நிமிர்ந்து உக்காந்தா… அங்க தான் நம்ம அக்கா தீப்பிகா வராங்க…
    அப்டியே ராணா மேல காதல் வயப்படுறாங்க.. இந்த நேரத்துல சரத்துக்குமாரு வேற ரஜினி தங்கச்சி மேலையே காதோல் வையப்படுறார்…
    ஆரம்பித்தது காதல் அத்தியாயம்.. ஒரு மூணு காதல் பாட்டு…
    அதுவும் எல்லாம் “எங்க போன ராசா” ஸ்டேயில்ல….
    காதல் பண்ணி , பட்டு பாடி, ஆட்டம் ஆடி முடுச்சா … மிடியலடா சாமினு இன்டெர்வல்…
    அதுக்கு அப்புறம் பரவால்லா… படம் ஏதோ பிக்கப்பாகி , ஒருவழியா தடபுடா கிளைமாக்ஸ் சண்டையோட
    சுபம்னு போடாம , தொடரும்னு போட்டு முடுச்சாங்க…

    எனக்கு ஒரு மிகப்பெரிய டவுட்டு..
    எதுக்கு இந்த கதையை அனிமேஷன்ல எடுக்கணும்…. இல்லை அனிமேஷன்ல எடுக்க இதைவிட சுவர்சியமான கதையே கிடைக்கிளையா… நெறையா தமிழ் சினிமாவுல பார்த்த அதே மாசாலா பேக்காப்தான் திரும்ப ரிபீட் ஆகி இருக்கிறது…
    அதுவும் முதல் பாதியில் வரும் கல்யான காட்சிகள் எல்லாம் “ஓ மை காட்” என்பது போலவே இருந்தன…
    இன்னும் திரைக்கதையில் சுவாரஸ்யமான விசயங்களை சேர்த்திருக்கலாம் போலவே தோன்றியது…
    “மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, ரெண்டாவது , மூணாவது காதல் பாட்டு வரும் போது உங்களுக்கே ‘என்னடா இது’ னு ஒரு பீலிங்க வரல…?”
    நாலு , அஞ்சு அழகான டுவிஸ்டுகள மட்டும் வைத்துக்கொண்டு மீதியில் கோட்டை விட்டது போலவே தோன்றியது.

    “ஏன்டா ..த்த்தா.. படத்துல நல்லத எதுவேமே இல்லையாடா சு.. னு நீங்க கேக்குறது புரியுது…”
    நாகேஷ் அவர்களோட கதாபாத்திரத்தை மீண்டும் உருவாக்கி இருந்தது அற்புத… யாருப்பா டப்பிங் பேசுனது.. அவ்ளோ ஆப்ட்டா இருந்துச்சு…
    அப்புறம் கொஞ்சம் சுவார்ஸ்யமா இருந்தது இரண்டாம் பாதியில் கோச்சடையானின் பகுதி…
    அனிமேசனுக்கான சரியான களம் அதுவே…
    ராணாவை அடைத்து வைத்திருக்கும் சிறையில் மிருகங்களுடன் நடக்கும் சண்டை காட்சி கொஞ்சம் விறுவிறுப்பு.
    படத்தின் கடைசி போர்க்கால காட்சி… பட்டாசு.. மொத்த படத்துக்கும் கடைசி சுறு சுறுப்பான “இது போதும்டா…!!” என்பது போலான பரபரப்பான ஒன்று….

    இதுவரை நாம் கேட்காத கதையையோ , இல்லை இன்னும் சுவாரஸ்யமான புதுமையான நிகழ்வுகளுடன் கூடிய திரைக்கதையையோ அமைத்திருந்தால் கோச்சடையான் அட்டகாசமாய் அமைந்திருக்கும்…
    அனிமேஷன்ல , இந்தியன் மோஷன் கேப்சரிங்ல இது ஒரு மைல்க்கல் தான்…
    என்ன தான் ஆகா தூக்கா டெக்குநாலாஜியா இருந்தாலும் சுவார்ஸ்யமாக கதை சொல்லுவது தான் முக்கியம் தலைகளா…

    பின் குறிப்பு : இது தனிப்பட்ட பார்வை மட்டுமே. விமர்சனம் அல்ல.. விமர்சனம் எழுதவும் மதிப்பெண் போடவும் பல அறிவுஜீவிகள் காத்திருக்கிரார்கள்.. சோ திஸ் இஸ் ஜஸ்ட் அ வ்யூ…
    அப்பாலிகா நமக்கு யார் நெஞ்சையும் நக்க வேண்டிய அவசியமும் கட்டாயமும் இல்லை…

    Reply
  4. S.Mohammed Arafath

    @ all : you are right.. kadippa itha rajiniya vida vera yaravathu nadichu irutha.. vimarsaname vera matri iruthu irukum…
    “(சுருக்கத்தைப் படித்ததும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ‘A Fist Full of Dollars’ படம் போலவே இருக்கிறதே என்று தோன்றுகிறதா? அதற்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை).”

    athuvum kamal nadichu irutha… inthu mela sonna padathin appata Kappi.. itharkaka naan atha english padatha edutha director ku complaint mail poduren nu ellam soli irupeenga. neenga @RAJESH… aana ithu rajini padam so அதற்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை).”

    ithu oru RAJINI fan’s vimarsanam.

    I am a fan of ur hollywood reviews… i m waiting everyday for all day for ur reviews of MARVEL movies and mostly i waiting for ur review b4 watch that movie.

    but ipadi tamil padangaluku aal parthu vimarsanam panrathuku tamil pada vimarsaname eluthama irukalam…

    Reply
    • அராஃபத். உங்க மனசுல நீங்க நினைச்சிக்கினு இருப்பதை நான் விமர்சனமா எழுத முடியாது. கமல் படங்களை பாராட்டியும் எழுதி இருக்கேன். ரஜினி படங்களை திட்டியும் எழுதி இருக்கேன். என் எந்திரன் விமர்சனம் படிச்சி பாருங்க. உஙளுக்குப் படம் புடிக்கலன்னா அதையே நானும் எழுதணும்னு நீங்க நினைச்சா நான் என்ன செய்ய முடியும்?

      //but ipadi tamil padangaluku aal parthu vimarsanam panrathuku tamil pada vimarsaname eluthama irukalam…/

      உங்க திடீர் தீர்ப்பை வழங்கியதற்கு நன்றி. இனிமே என் விமர்சனங்களை அப்போ நீங்க படிக்காம இருக்கலாம்.

      Reply
  5. sukumar senthil raj

    Boss….125 core for this movie is too much…. still u can do much better movie with this budget….it simply says the technicians /director worked in this film don’t have any updated knowledge in animation/vfx/motion capture….don’t compare with any Hollywood movies for quality and budget….. the quality is proportional to the pay/salary/technical support they r giving……actually they are spoiling the animation industry….me too rajini fan,i can watch it for rajini – nothing else….most of them don’t know how many employees lost their jobs coz of this film/company….they suffered a lot-salary issue,low salary than industry standard,not proper technical support and so on….actually they put a very good effort for this film- blindly….advice to actual film director (don’t want to mention here) always keep some good persons/lead workers around u……not JALARS….

    Reply
    • Seems that you know a lot of the behind the scene information about the film boss. Good to know these details as well

      Reply
  6. Accust Here

    உங்களோட எந்திரன் விமர்சனத்த பாத்துட்டு அடுத்த ரஜினி படம் விமர்சனத்த படிக்க கூடாதுன்னு இருந்தேன், ஆனா உங்ககிட்ட இப்படி ஒரு பாசிடிவ் விமர்சனத்த எதிர்பாக்கல. As a RAJNI fan I liked this movie very much. waiting for your X Men review. Avengers மாதிரி X Menக்கும் ஒரு சீரீஸ் பதிவு போடுங்களேன்.

    Reply
    • X Men நாளைக் காலைல போறேன். அதுக்கு சீரீஸ் பதிவு போடுவதை விட, ஒரே பதிவுல எல்லா ஏஸ்பெக்டையும் கவர் பண்ணிடலாம் பாஸ். நாளை இரவு விபரமா போஸ்ட் போடுறேன்

      Reply
  7. Mohd

    unmaiya sonna aenga unagaluku ivlo kobam varuthu..??
    RAJINI padam 125 crore budget… avatar 1200 crore so enna budget to athuku etha matri than movie irukum nu solra neenga..
    matha hero padangala matum aen hollywood padathoda companre panreenga..
    tamil padatha tamil naatu mangaluku puriyara matri edukum pothu sila

    Reply
    • நான் எந்தத் தமிழ்ப் படத்தை ஹாலிவுட் படத்தோட கம்பேர் பண்ணேன்னு சொல்லமுடியுமா? சும்மா குருட்டாம்போக்குல அடிச்சி உடாதீங்க. என்னோட ஒரே criteria – படத்துக்குப் போனா கடைசிவரை கொம்மையைப் போடாம உக்கார முடியுதா இல்லையான்றதுதான்.

      தமிழ்ப் படங்களுக்கு ஆள் பார்த்து விமர்சனம் பண்றேன்னு நீங்க உங்க ஜட்மெண்ட்டை என் மேல பாஸ் பண்ணும்போது கோபம்தான் வரும். அது உண்மைன்னு வேற அறிக்கை உடுறீங்களே..

      Reply
      • கொம்மை = மொக்கை

        Reply
  8. I like the way you explain all the nuances of the movie techniques, which I am not familiar with. I just watch a movie and it should touch me to keep my concentration in it. Otherwise my mind just drifts off!

    Now, I want to watch this movie (I was reluctant to do it, before reading this) with a new eye/angle.

    I love Basha than Muththu!

    Reply
    • Rajesh Da Scorp

      Thank you sandhya. It happens since I love movies beyond anything. The feeling of sitting in the closed theater, when any film slowly begins, is priceless. May be that’s why you are finding the reviews helpful 🙂 .. Cheers.

      Reply
  9. Rajkumar

    என்ன ஜி இப்படி எழுதியிருக்கீங்க (நீங்களா லார்டாப் தி ரிங்க்ஸ் பத்தி எழுதினது ?) Bewolf அளவுகூட இந்த படத்துல பெர்பாமன்ஸ் இல்லையே – மெயின் ஆர்டிஸ்டுக்கு கொடுக்குற இம்பார்டன்ஸ் பேக்கிரவுண்ட் ஆர்டிஸ்ட்க்கும் கொடுக்கணுமே.. இல்லையின்னா இதுவும் ஒரு சராசரி 2D கார்டூன் தானே (ஓடும்போது மரம் மலை ரிபீட் ஆகுரமாதிரி).
    சவுந்தர்யா பெத்த படிப்பெல்லாம் படிச்சிருக்காங்க… இருந்தாலும் ஏட்டுசுரைக்காய் கோச்சடையானுக்கு உதவாது.

    Reply
    • punnavarayan

      ஏம்பா தம்பி சுல்தானையும் ராணாவையும் கம்போஸ் பண்ணி படமெடுத்துருக்கானுவோபா

      Reply
      • Rajesh Da Scorp

        Ha ha ha ha 🙂

        Reply
  10. sowndharya idhea motion capturing technologyil ponniyin selvanai edukka mudiyum endru solliyirukkiraar. ponniyin selvanai edukka mudindhaal adhu maaberum padaippaaka irukkum….

    Reply
    • Rajesh Da Scorp

      Yes boss. It would be great. But it demands a hue budget than the budget of this film. May be in the future they will do it

      Reply
  11. Rajesh Da Scorp .. How much u got from film crew to write such a non sense review…

    U can be a great screenplay consultant.. But u know nothing about how the 3D industry technology works.. i can show u a number of demo-reels created by some jobless fellow in all over world (Including India). So dont say for 125 crores.. Only this animation is possible.. If u want i can share u number of link on 3D.. What you say>>>?

    Reply
    • Rajesh Da Scorp

      Ahamed Mansoor..

      Just coz I don’t write whatever u think in your mind, does it mean I have received money from the filmmakers? What a nonsense logic it is ! You run your mouth saying I do not know anything about how the CG industry works. How do you know? Do you think they invested all 125 crores in CG? What about the paynments to all the stars and technicians? After everything, how much do you think was spent on the CG? Get your facts straight before running your mouth again. And do not pass your immatured judgements on others at random. Think before you comment. I still stand by my opinion saying that it’s is a beginning. I am very confident that in the future, things will be good in Tamil Cinema. It’s that hope which makes me to appreciate new innovations. Full Stop.

      Reply
      • I’m not saying the whole god damn money was invested in CG., you need to understand.. the problem is in technicians…. So are u ready.. i can prove how a small team (students) in world does animation.. more than this VERY TALENTED.. peoples No full stop,

        Reply
        • Please don’t take it as personal.. I’m working in this industry as a freelancer.. i know how this works.. it hurts.. when peoples say its all about budget. (Truly its not budget)

          Reply
          • Rajesh Da Scorp

            I am not taking it personal at all. But the way you wrote your comment made me to think it’s very immatured. And, I know very well there are good animations which can surpass this film. But my point is simple. So far this had not been tried. Performance capture in a tamil film had to begin somewhere, isn’t it? And it had begun here. That’s why I am appreciating it, fully aware about the pitfalls of this film. Even in my review I had mentioned that the CG is not good, isn’t it? I would have said the same thing if it’s a movie by somebody else too. So, that sums up my argument. You are most welcome to post your views here. Cheers boss.

          • Oh.. well cheers too… U are doing a great job.. i like most of your posts… I read about screenplay articles in your blog cause i think ur expert in that. But for me CG is like life, love everything,. i can’t bear if some one says bad CG is good.. I can likely to help if u have any technical question in CG.. Thank you..End of argument hahaha..

Join the conversation