Kundun (1997) – English
தனது நாட்டைச் சேர்ந்த அத்தனை மக்களாலும் கடவுள் என்று கருதப்படும் ஒரு நபர். அந்த மக்களின் தலைவரும் அவரே தான். அவரது நாடோ, மற்றொரு வலிய நாட்டின் கீழ் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அவரது குறிக்கோள் என்ன?
தலாய் லாமா.
திபெத்தின் அத்தனை மக்களாலும் கடவுளாகவே வழிபடப்படும் ஒரு நபர். அவரது மிகச்சிறுவயதில் தொடங்கி, அவரது இளமைக்காலம் வரை நமக்குச் சொல்லும் ஒரு படமே இந்தக் குந்தூன்.
இதை இயக்கியவர் யாரென்று பார்த்தால், நம்ம அதிரடி மன்னன் மார்ட்டின் ஸ்கார்ஸெஸி. ’இவுரு எப்புடிய்யா இந்த மேரி ஒரு படத்த எடுத்தாரு?’ என்று நம்மை வியக்க வைக்கும் வகையில் இப்படத்தை எடுத்து வைத்திருப்பது இவரது மேதமைக்கு ஒரு சாம்பிள். இதற்கு முந்தைய படம், ‘கஸினோ’. இதற்கு அடுத்த படமோ, ‘Bringing Out the Dead’. இவ்விரண்டு படங்களுக்கு நடுவில், இப்படி ஒரு படம் !
Seven Years in Tibet பார்த்திருக்கிறீர்களா? (ஒரு காலத்தில் HBOவில் டேப் தேயும் வரை போட்டுக்கொண்டே இருந்த ஒரு படம் – அப்போதுதான் நானும் பார்த்தேன் – கி.பி 2000). இவ்விரண்டு படங்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. அதேபோல், இரண்டு படங்களுமே மிகக்குறைந்த இடைவெளியில் வெளியிடப்பட்டவை. இரண்டிலுமே தலாய்லாமா வருவார். (ஆனால் Seven years in Tibetல், ஹீரோ ஹெய்ன்ரிச் ஹேரியருக்கும் தலாய்லாமாவுக்கும் உள்ள நட்பு காண்பிக்கப்பட்டிருக்கும். உண்மையிலும், தலாய்லாமாவின் ஆசிரியராக, நண்பனாகக் கடைசிவரை வாழ்ந்து மறைந்த ஒரு மனிதனே ஹேரியர்)
இந்தக் குந்தூன், தற்போது உள்ள தலாய்லாமாவின் இளமைக்காலத்தைப் பற்றிப் பேசும் படம். திபெத்தில், ஆம்டோ என்று ஒரு ஊர். அந்த ஊரில், ’லாமோ’ என்ற ஒரு இரண்டு வயதுக் குழந்தை. அக்குழந்தையைத் தேடி, ஒரு நாள், சில மனிதர்கள் வருகின்றனர். அந்தக் கும்பலின் தலைவர், ‘ரெடிங்’. இக்குழந்தையைப் பற்றிய குறிப்பு, ரெடிங்கின் கனவில் வருவதால், அக்குழந்தையைத் தேடி ரெடிங்கும் இன்னும் சில லாமாக்களும் வந்துவிடுகின்றனர்.
இப்போது, தலாய் லாமாக்களைப் பற்றிய ஒரு குறிப்பு. இதனைப் படித்தால், மேலே படிப்பதற்கு வசதியாக இருக்கும்.
கி.பி பதினான்காம் நூற்றாண்டில் பிறந்த ’கெந்துன் ட்ரப்’ என்ற புத்த சந்நியாசியின் வழித்தோன்றல்களே தலாய்லாமாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவரில் தொடங்கி, இன்றுள்ள பதினான்காம் தலாய்லாமா வரை, ஒவ்வொருவரும், இதற்கு முந்தையவரின் மறுபிறவி என்று நம்பப்படுகிறது. இந்த முதல் தலாய்லாமாவோ, போதிசத்வரின் மறு அவதாரமாகக் கருதப்படுகிறார் (போதிசத்வரைப் பற்றித் தெரிந்துகொள்ள, ‘புத்த ஜாதகக் கதைகள்’ – அமர் சித்திரக்கதையைத் தேடிப்பிடித்து தூசிதட்டிப் படித்துக்கொள்ளவும்).
ரெடிங் என்பவர், தலாய்லாமா இல்லாதபோது, அவரது ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கும் காவலர். ஒரு சக துறவி. பதிமூன்றாம் தலாய்லாமா இறந்தபின், அவரது மறுபிறவியைப் பற்றிய குறிப்பு இவரது கனவில் வரவே, இந்த கிராமத்துக்கு, இக்குழந்தையைத் தேடி வருகிறார்கள் ரெடிங்கும் மற்ற துறவிகளும்.
அங்கு, குழந்தை லாமோவின் முன், பதிமூன்றாம் தலாய்லாமா உபயோகித்த பொருட்கள், மற்ற பொருட்களோடு கலந்து வைக்கப்படுகின்றன. குழந்தை லாமோ, மிகச்சரியாக அவரது பொருட்களை எடுப்பதோடு மட்டுமல்லாது, ‘இது என்னுடையது!’ என்று கத்தவும் செய்கிறது. எனவே, அடுத்த தலாய்லாமா முடிவு செய்யப்படுகிறார்.
இக்குழந்தையைத் தங்களுடன் அழைத்துச் செல்லும் துறவிகள், பொடாலா என்ற ஒரு புராதன மடாலயத்துக்கு வருகின்றனர். இங்குதான் தலாய்லாமாவாக அக்குழந்தை முடிசூட்டப்பெறும்.
குழந்தைக்கு அத்தனை பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
குழந்தை, மெதுவாக வளர்கிறது. வளரும்போதே, உலகின் மற்ற நிகழ்வுகளையும் அவதானிக்கிறது. ஹிரோஷிமாவில் போடப்பட்ட குண்டு, சீன ஆதிக்கம், திபெத்திய மக்கள் சீனாவிடம் படும் துன்பம் ஆகிய அனைத்தையும் பற்றித் தெரிந்துகொள்கிறது. இக்குழந்தையைப் பார்த்துக்கொள்பவர்கள் – அதாவது தலாய்லாமாவின் உதவியாளர்கள் – இருவர். இவர்கள், தலாய்லாமாவின் ஆசிரியர்களாகவும் இருந்து, அவருக்குச் சகலவிதமான புத்தமதக் கொள்கைகளையும் பயிற்றுவிக்கின்றனர்.
தலாய்லாமா, இளைஞனாகிறார். அவரது தந்தையின் மரணம். தந்தையின் உடல், துண்டுதுண்டாக வெட்டப்பட்டு, வல்லூறுகளுக்கு இரையாக்கப்படுகிறது. தாயின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு, இவரது பதில், மௌனம். ,மறுபடி மடாலயத்துக்கே திரும்புகிறார்.
சீனா, முழுமையாகத் திபெத்தின் மீது படையெடுக்கிறது. திபெத்தை ஆக்ரமித்தும் விடுகிறது. இதைத் தடுக்க, சீனாவின் சேர்மன் மா சே துங்கைச் சந்திக்கச் செல்கிறார் தலாய்லாமா – ஆண்டு 1955.
மா சே துங், மதம் என்பது விஷம் என்ற கொள்கையுடையவர். தலாய்லாமாவிடமும் இதையே சொல்கிறார். திபெத், மதத்தினால் பண்டைய காலம் முதலே கெட்டுப் போயிருந்தது என்றும், இப்போது கம்யூனிஸம் திபெத்தில் நுழைந்தால் தான் மக்கள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள் என்றும் சொல்லி, திபெத்தின் மீதான படையெடுப்பை நியாயப்படுத்துகிறார்.
வெறுங்கையோடு திபெத் திரும்புகிறார் தலாய்லாமா. சீனத் தாக்குதல் மேலும் மேலும் வலுப்பெறுகிறது. தலாய்லாமாவைக் கொல்லும் நோக்கத்தோடு இத்தாக்குதல்கள் நடைபெறுவதால், அவரை அங்கிருந்து தப்புவிக்க முயற்சி நடக்கிறது.
கடைசியில், தலாய்லாமா அவரது மடாலயத்தினுள் சிறை வைக்கப்படுகிறார். சுற்றிலும் சீனப் படைகள்.
அவர்கள் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு, மாறுவேடத்தில் இந்தியா வருகிறார் தலாய்லாமா. ஆண்டு – 1959.
மிகக்கடினமான ஒரு பாதையில், நோய்வாய்ப்பட்டு, சோர்ந்துபோய் இந்தியா வரும் தலாய்லாமாவிடம், ஒரு இந்திய சிப்பாய், ‘நீங்கள் தான் புத்தரா?’ என்று கேட்கிறான்.
தலாய்லாமா, இதற்கு அற்புதமான பதில் ஒன்றைத் தருகிறார்.
‘சந்திரன் தண்ணீரில் தெரிவதைப் போல, நான் ஒரு பிரதிபிம்பம் மட்டுமே. என்னை நீங்கள் பார்க்கையில் – நான் ஒரு நல்ல மனிதனாக மாற முயற்சி செய்துகொண்டிருப்பதைப் பார்க்கையில், நீங்கள் உங்களையே பார்த்துக் கொள்கிறீர்கள்’.
இந்த வரிகளுடன் படம் முடிகிறது.
அதன்பின், இன்னமும் தலாய்லாமா தாயகம் திரும்பவே இல்லை. அதற்கான சந்தர்ப்பம் வரும். அதனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.
இப்படத்தில், நடிப்புக்குப் பின் என்னைக் கவர்ந்த ஒரு அற்புதமான விஷயம் – இசை! பிலிப் க்ளாஸ் என்ற கலைஞன், பின்னியெடுத்திருக்கிறான்! படம் நெடுகிலும் வரும் ஒரு ’Cymbal’ சத்தம், நமக்குள் ரோமாஞ்சனத்தை உண்டுபண்ணுகிறது. இந்த இசை ஒரு அற்புதம். நீங்களே கேட்டால் தான் அதன் தாக்கம் புரியும்.
நல்ல நடிப்பு. தலாய்லாமாவின் வாழ்க்கையில் இருந்தே எடுக்கப்பட்ட வசனங்கள். அவரது வாழ்க்கை, நமது கண் முன் விரிகிறது.
தலாய்லாமா நல்லவரா கெட்டவரா என்ற வாதத்திற்கு உள்ளேயே நான் செல்ல விரும்பவில்லை. அது எனக்குத் தேவையும் இல்லை. என்னைப் பொறுத்த வரையில், தனது தாயகம் அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு நிலையில், அஹிம்சையைக் கடைப்பிடித்து, இன்னமும் பிடிவாதமாக மற்ற நாடுகளிடம் உதவி கேட்டுக்கொண்டு, தனது நாட்டு மக்களுக்காக வருந்தி வாழும் ஒருவரைத் தாராளமாக, ‘துறவி’ என்ற அடைமொழியைக் கொடுத்து என்னால் அழைக்க முடியும்.
தலாய்லாமாவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் – இதோ அவரது ட்விட்டர் முகவரி.
பி.கு 1 – குந்தூன் என்பது, தலாய்லாமாவின் செல்லப்பெயர்.
பி.கு 2- இப்படத்தை பிக்ஃப்ளிக்ஸில் ஆர்டர் செய்த நாள் – 6வது ஜூலை – தலாய்லாமாவின் 75வது பிறந்தநாள். ஆர்டர் செய்தபோது அது சத்தியமாக எங்களுக்குத் தெரியாது. ஆர்டர் செய்த நபர், எனது தோழி – அடச்சே – மனைவி ? இதை எழுதிக்கொண்டிருக்கையில் தான் அது தெரிய வந்தது.
குந்தூன் படத்தின் ட்ரெய்லர் இங்கே
Haiya me the 1st………..
// இப்படத்தை பிக்ஃப்ளிக்ஸில் ஆர்டர் செய்த நாள் – 6வது ஜூலை – தலாய்லாமாவின் 75வது பிறந்தநாள். //
ச்சே என்னே ஒரு கோ இன்சிடென்ட் பாருங்க கருந்தேளாரே
அதுவுமில்லாமல் சீனாவில் ஆறாவது ‘வாழும் புத்த பகவான்’ தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
this also on 6th July
ஆஹா.. சிபி.. இங்கயுமா? இப்பத்தான் பயங்கரவாதி பதிவ படு லேட்டா பார்த்தேன் . . 😉 இதோ விஸ்வா புட்டு தின்னுபுட்டு வர்ராரு . . வெயிட் ப்ளீஸ் 😉
தல நமக்கும் அப்படியே ஒரு பார்சல் ப்ளீஸ்
உங்க விமர்சனங்கள் மூலமா பல அருமையான படங்களை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. அருமை நண்பரே…………..
என்னாது பார்சலா ? 😉 விஸ்வா.. பாருங்க இவுர.. மீ த ஃபர்ஸ்ட் வேற போட்டுட்டு இப்ப புட்டுலயும் பார்சல் கேக்குறாரு… வந்து டங்கு மேல பல்லப் போட்டு நாலு கேள்வி கேளுங்க இவுர..
@ கவிதை காதலன் – டாங்க்ஸ் நண்பா. . அடிக்கவி வந்து, உங்க கருத்தைப் பதியுங்க..
// என்னாது பார்சலா ? 😉 விஸ்வா.. பாருங்க இவுர.. மீ த ஃபர்ஸ்ட் வேற போட்டுட்டு இப்ப புட்டுலயும் பார்சல் கேக்குறாரு… வந்து டங்கு மேல பல்லப் போட்டு நாலு கேள்வி கேளுங்க //
வேண்டாம் பாஸ் தலைவர் இப்போ எல்லாம் ரொம்ப பிஸி முன்ன மாதிரி இல்ல
இப்ப கலைஞரின் இளைஞன் பட தயாரிப்பில் இருக்கிற மாதிரி கேள்வி
எதோ என்னால முடிஞ்சது
அம்புட்டுதான்
இந்தப் படத்தோட டிவிடியை நான் ஹாலிவுட் டிவிடி ஷாப்பில் வாங்கி பல நாட்கள் ஆகிறது! இப்போது திரு.பாஸ்கரனிடம் ஸ்டாக் இருக்குமான்னு தெரியல! எதுக்கும் கேட்டுப் பாருங்க!
தலைவர்,
அ.கொ.தீ.க.
நண்பரே,
சிறப்பான விவரங்களுடன் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
//தேடிப்பிடித்து தூசிதட்டிப் படித்துக்கொள்ளவும்// :)) அருமை அருமை.
எனக்கும் புட்டுப் பார்சல் அனுப்பவும் :))
நண்பா,
மிக அருமையான படம்,அருமையான விமர்சனம்,இதை பிரசன்னா இராசன் முன்பு எழுதினார்,அப்போது தரவிறக்கி பார்த்தேன்,மார்டின் ஸ்கார்சஸி ஓர் மகா கலைஞன்,அவரிடம் இன்னும் என்ன திறமையெல்லாம் ஒளித்து வைத்துள்ளாரோ?அருமையான படம்.நேற்று மீண்டும் ஏவியேட்டர் பார்த்தேன்.சான்சே இல்லை.இவரின் படங்களை இப்போதே ஆவணகாப்பு செய்ய ஆரம்பிச்சுட்டாங்கன்னா சும்மாவா?
நல்ல விமர்சனம் நண்பா..!!!!
http://www.newspiritualbible.com/index2
சீனர்களின் விஷம புத்தியை பாருங்கள்.நல்லவரை கெட்டவராக்குவதிலும்,கெட்டவரை நல்லவராக்குவதிலும் ஆபார கற்பனை உடையவர்கள்.
என்ன கொடுமை சார் இது?
எனக்கு பிடித்த ஒரு நல்ல இயக்குனரின் படத்தை பற்றி படிக்க வந்தால் என்னை ஒரு புட்டு வியாபாரி ஆக்கிவிட்டார்களே?
இருந்தாலும்கூட புட்டு நெறைய ஸ்டாக் உள்ளது. தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் (பயங்கரவாதி நீங்கலாக).
இந்த படம் பல காண்டிரவர்சி நடுவில் வந்த படம். ஒரு சமயம் நான் ஸ்கார்சிசி வெறியன் (இப்போதும் தீவிர ரசிகனே).
இந்த பதிவை திறந்து வைத்தல் அலுவலக நண்பர் வந்து என்னது, குமுதமா? என்று கேட்கிறார். ( Kundun = Kumudham) 🙂
//இந்தப் படத்தோட டிவிடியை நான் ஹாலிவுட் டிவிடி ஷாப்பில் வாங்கி பல நாட்கள் ஆகிறது!//
என்ன கொடுமை? நான் சென்னையில நீங்க சொல்லித்தான் வாங்கினேன் (சுமார் ரெண்டரை வருஷத்திற்கு முன்னாடி – நினைவிருக்கா தலைவரே?)
//எனக்கும் புட்டுப் பார்சல் அனுப்பவும் :)//
நன்றி.
தமிழ் புட்டு உலகம்?
//வந்து டங்கு மேல பல்லப் போட்டு நாலு கேள்வி கேளுங்க இவுர.//
அதே அலுவலக நண்பர் இந்த கமெண்டை படித்துவிட்டு புரியாமல் விழித்தார். விளக்கியவுடன், பல்லு சுளுக்கிகிற மாதிரி சிரித்தார்.
இந்த படத்தையும் பிராட் பிட் நடித்த 7 ஹியர்ஸ் இன் திபெத் படத்தையும் அடுத்ததுத்து பாருங்கள், ஓரளவுக்கு தலாய் லாமா பற்றி தெரிந்து கொள்வீர்கள்.
ச்சே.. சிங்கம் தூங்கும் போது.. பதிவு போட்டா… சிறு நரிகள் எல்லாம் வந்து ஜிங்கு ஜிங்குன்னு குதிக்குதே..!!
///இந்த படத்தையும் பிராட் பிட் நடித்த 7 ஹியர்ஸ் இன் திபெத் படத்தையும் அடுத்ததுத்து பாருங்கள், ஓரளவுக்கு தலாய் லாமா பற்றி தெரிந்து கொள்வீர்கள்
///
படமா பார்க்காம… சில டாகுமெண்ட்ரிகள் பார்க்கலாம்.
10 Questions for the Dalai Lama (2006)
Tibet: Cry of the Snow Lion (2003)
Unmistaken Child (2008)
ஐயம் பேக் ஃபார் த கும்மி,
விஸ்வா புட்டு சாப்பிட்டார் ,சரி,அது யாருக்கு சுத்துன புட்டு?
//பிராட் பிட் நடித்த 7 ஹியர்ஸ் இன் திபெத் படத்தையும் அடுத்ததுத்து பாருங்கள்//
ரெடியா இருக்கு ஹார்டிடிஸ்கில்,வீக்கெண்டுக்கு..
நண்பா சைக்கிள் கேப்பில் பதிவு போட்டீங்க?செம ஸ்பீடு.
தலாய் லாமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என பல நாளாக நினைத்து கொண்டிருக்கிறேன்… இந்த படம் தான் அதற்கு ஆரம்பமாக இருக்கும் என நம்புகிறேன்… 🙂 நல்ல தெளிவான விமர்சனம் சகோதரரே…
இந்த படத்த பல முறை நான் வாங்கும் டிவிடி கடையில் பார்த்திருக்கிறேன்.. ஆனால் அடுத்த முறை அடுத்த முறை என வாங்காமல் போய் கொண்டிருக்கிறது… மார்ட்டின் ஸ்கார்சசே என்ற பெயரை பார்த்ததும் நம்ப முடியவில்லை.. ஏனெனில் இந்த படத்தை பற்றி அவ்வளவு வெளிப்பாடு இல்லை…
சீக்கிரம் வாங்கி பார்த்துவிடுகிறேன்…
கிம்-கி-டுக் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி… அவர் படங்கள் சீக்கிரம் பார்க்க ஆரம்பிக்கிறேன்… 🙂
உங்களது ஆங்கில வலைதளத்தில் உள்ள விமர்சனங்களை படித்தேன்… மிக சிறப்பான பகிர்வுகள்.. அறிமுகங்கள்… 🙂
பல படங்களை அங்கிருந்து படித்து பார்க்க இருக்கிறேன்… 🙂
hope you have not missed bertoloucci’s little buddha. thanks for the introduction to kundun.
இந்தப்படத்தை நீங்க சொன்னாமாதிரி HBO பார்த்தாமாதிரி ஒரு ஞபாகம் சரியாநினைவில்லை.
கம்யுனிசம் திபெத்துக்குள் நுழைந்தால் மதவெறி ஒழியும் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் அதை வலுக்கட்டாயமாக நுழைப்பதுதான் தவறு…. நீங்க என்ன சொல்றீங்க தல….
எனைக்கேட்டா நம்மநாட்டுக்கு கம்யுனிசம் ரொம்ப அவசியம்…
@ பயங்கரவாதி – இப்போ அவருகிட்ட ஸ்காக் இருக்கும்னு தான் நினைக்கிறேன்.. மறுபடி ஃபுல் ஸ்விங்க தலைவர் கடையை ஆரம்பிச்சிட்டாரு.. 😉
@ காதலரே – புட்டு பார்சல் தானே? ரெடி.. ஆனால், நீங்கள் ரஃபீக்கிற்கு நேர்ந்த கொடுமையை, ரேப் டிராகனில் எழுதினால் மட்டுமே புட்டு அனுப்பப்படும் 😉
@ கார்த்திகேயன் – நண்பா.. ஸ்கார்ஸெஸி படங்கலை நானும் தூசு தட்ட ஆரம்பிச்சாச்சி;-) சீக்கிரமே பல பதிவுகள் வரும் 😉 அந்த லின்க் பார்த்தேன்… இது எதிர்பார்க்கக்கூடியது தானே, சீனர்களிடம்? அவர்கள் கிடக்கிறார்கள்..
@ விஸ்வா – குமுதம் – குந்தன்… ஹீஹீ… 😉
தமிழ் புட்டு உலகம் – ஆஹா… சூப்பரு! ஆரம்ப்பிங்க… அங்க கூட்டு கும்மிகளை அரங்கேற்றலாம் 😉
@ பாலா – ஆஹா… நீங்க முச்சிங்கங்களையும் பார்த்த பெருஞ்சிங்கமாச்சே 😉 கமெண்ட்டு ரொம்ப லேட்டு.. என்ன பண்ணுறது… வேலை ! ஹ்ம்ம்ம்
@ mythoughtsintamil – அடடா… இப்பவே வாங்குங்க.. மிஸ் பண்ணக்கூடாத படம் இது.. இன்னமும் கிம்மின் இரண்டு படங்கள் வரப்போகின்ரன நம்ம பதிவில்.. அதையும் பாருங்க 😉 . . ஆங்கில வலைத்தளத்தைப் பார்த்ததற்கு நன்றி 😉
@ உமா – லிட்டில் புத்தா பார்த்துவிட்டேன்.. அருமையான படம் அது.. உங்கள் கருத்துக்கு நன்றி.. அடிக்கடி வாருங்கள்..
@ நாஞ்சிலாரே – திபெத் பாவமான ஒரு ஊரு தல.. அதுக்குள்ள கம்யூனிஸம் வந்தா, மக்கள் செத்தாங்க.. இப்பவே, கம்யூனிஸம் இருக்கும் நாடுகலைப் பார்த்தால், அங்கு தலைவிரித்தாடும் ஏழ்மையும் ஊழலும் ரொம்பக் கொடுமை. கம்யூனிஸம் செத்துப்போச்சோ என்பது தான் எனது எண்ணம்.. நம்ம நாட்டுப்பக்கம் கம்யூனிசம் வந்தா, மோடி மாதிரி ஆளுங்க அந்தப் பக்கம் போயி, மக்களை கேங் மர்டர் பண்ணிருவானுங்க என்பது என் கருத்து தல..
ஒளிப்பதிவு மிகவும் அருமை (ஏதோ எனக்குத் தெரிந்தது)
இப்போது ‘Blockbusters @ 99′ என்னும் Series-ல் 99 ரூபாய்க்குக் கிடைக்கிறது (அதனால்தான் நான் வாங்கிப் பார்த்தேன்)