The last King of Scotland (2006) – English
மனித வரலாற்றின் பக்கங்களில், ரத்தக்கறை படிந்த பல அத்தியாயங்கள் உண்டு. அவை, சக மனிதனை, அதிகாரம் என்ற பெயரில் கொன்று குவித்த கொடுங்கோலர்களைப் பற்றிப் பல கதைகள் சொல்லும். இவர்களது வாழ்வைப் படித்தால், மிகச்சாதாரண நிலையில் இருந்து, மக்களின் பேராதரவைப் பெறும் வரை ராணுவ ஒழுங்குடன் வாழ்ந்துவிட்டு, அதன்பின் முழுமையாக மிருகங்களாகிப்போனவர்களைப் பற்றிய அவலம் தெரிய வரும்.
அப்படிப்பட்ட ஒரு மனித மிருகமே இடி அமீன்.
உகாண்டா என்ற பெயரைச் சொன்னதும், இடி அமீனின் நினைவு வருவது தவிர்க்கவே முடியாத உண்மை. உலகம் முழுவதும், கொடூரத்தின் மறுபெயராக மாறிப்போன ஒரு பெயர் அது. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் உகாண்டாவை ஆட்சி செய்த இடி அமீன், மொத்தமாகக் கொன்று புதைத்த மக்களின் எண்ணிக்கை, குறைந்தபட்சம் மூன்றிலிருந்து ஐந்து லட்சமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பண்டைய கால முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியைப் போல் திகழ்ந்த ஒரு பைத்தியக்காரத்தனமான ஆட்சியில், அரசுக்கு எதிராகப் பேசவோ எழுதவோ செய்த அத்தனை பேரும் கொல்லப்பட்டனர்.
உகாண்டாவின் பிரதமர் மில்டன் ஒபோட்டேவின் நம்பிக்கையான நபராகத் திகழ்ந்த இடி அமீன், அவர்களுக்குள் ஏற்பட்ட ஒரு பிளவால், ஒபோட்டே சிங்கப்பூர் சென்றிருந்த சமயத்தில், ஒரு ராணுவப் புரட்சி செய்து, ஆட்சியைக் கைப்பற்றினான். ஆண்டு 1971.
அவன் ஆட்சியைக் கைப்பற்றிய சமயத்தில் இருந்து, அவனது ஆட்சி முடிவடைந்த காலத்திற்குச் சற்றுமுன்வரை நடந்த சம்பவங்களை நமக்கு விவரிக்கும் படமே இந்த ‘லாஸ்ட் கிங் ஆஃப் ஸ்காட்லேண்ட்’.
டாக்டர் நிகோலஸ் காரிகன் என்ற இளைஞன், ஸ்காட்லாண்டில் இருந்து உகாண்டா வருவதில் ஆரம்பிக்கிறது படம். வாழ்வைத் துடிப்புடன் வாழ்வதில் நம்பிக்கையுள்ள நிகோலஸ், தனக்கு முன்பின் பரிச்சயமே இல்லாத ஒரு நாட்டுக்குச் சென்று, பொழுதைக் கழிக்க வேண்டும் என்று எண்ணி, தற்செயலாக உகாண்டா வருகிறான். அங்கு, டாக்டர் டேவிட் மெர்ரிட் என்பவர் நடத்திக் கொண்டிருக்கும் மருத்துவமனையில் சேர்கிறான். அந்தச் சமயத்தில்தான் இடி அமீன், ஆட்சியைக் கைப்பற்றிப் பதவிக்கு வருவது நடக்கிறது.
இடி அமீன் பேசும் ஒரு கூட்டத்துக்குச் சென்று, அவனது பேச்சைக் கவனிக்கிறான் நிகோலஸ். மக்களிடம் பேராதரவைப் பெற்றிருக்கும் இடி அமீன், தான் ஒரு ராணுவ வீரன் மட்டுமே என்று அந்தக் கூட்டத்தில் அறிவிக்கிறான். உகாண்டாவின் நலனுக்காக மட்டுமே இனித் தான் போராடப்போவதாகச் சொல்லி, மக்களின் கைத்தட்டலைப் பெறுகிறான்.
அந்தக் கூட்டத்தில் இருந்து, மெர்ரிட்டின் மனைவியுடன் வெளியேறும் நிகோலஸை, ராணுவ ஜீப் ஒன்று வழிமறிக்கிறது. இடி அமீன் காயமுற்றுவிட்டதாகவும், மருத்துவ உதவி உடனே தேவை என்றும் சொல்லி, நிகோலஸை அழைத்துப் போகின்றனர் அந்த ராணுவப்படையினர்.
இடி அமீன் சென்ற ஜீப், ஒரு மாட்டின் மேல் மோதியதால், அமீனின் கையில் ஒரு சிறிய சிராய்ப்பு. அவ்வளவே. அங்கு செல்லும் நிகோலஸ், அந்தக் காயத்துக்கு மருந்து போடுகையில், மாடு கத்திக் கொண்டே இருப்பதைப் பார்த்து எரிச்சலுற்று, அமீனின் துப்பாக்கியை எடுத்து மாட்டைக் கொன்று விடுகிறான்.
அதிர்ந்து போகும் அமீன், சுதாரித்துக் கொண்டு, நிகோலஸைப் பற்றி விசாரிக்கிறான். அவன் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவன் என்று தெரிந்து, மிகவும் மகிழ்ச்சியடைகிறான். ஏனெனில், அமீன் ராணுவத்தில் இருந்த போது, ஸ்காட்லாந்து வீரர்களுடன் சேர்ந்து போரிட்டிருக்கிறான். நிகோலஸ் அணிந்திருக்கும் ஸ்காட்லாந்துக் கொடி பதித்த டி-ஷர்ட்டைத் தனது மகன் கேம்ப்பெல்லுக்குத் தருவதற்காக வாங்கிக்கொண்டு, அதற்குப் பதில் தனது ராணுவ சட்டையையே கழற்றித் தந்துவிட்டுச் சென்றுவிடுகிறான்.
அந்த நொடியில் இருந்து, நிகோலஸின் வாழ்க்கை மாறுகிறது. மறுநாள் காலையில், இடி அமீனின் ஆட்கள் வந்து நிகோலஸைத் தலைநகர் கம்பாலாவுக்கு அழைத்துச் செல்கின்றனர். தனது பிரத்யேக மருத்துவராக நிகோலஸை நியமிக்க விரும்புவதாகச் சொல்லும் அமீன், நிகோலஸ் ஒரு முடிவுக்கு வரும்வரை, அங்கேயே தங்கிக்கொள்ளலாம் என்று சொல்லி, அவனுக்குச் சகலவிதமான வசதிகளையும் செய்து கொடுக்கிறான்.
கம்பாலாவின் அரசு மருத்துவமனையிலேயே பணிக்குச் சேரும் நிகோலஸ், விரைவிலேயே இடி அமீனின் நம்பிக்கைக்குகந்த ஆலோசகனாக மாறிவிடுகிறான். எந்த விஷயமாக இருந்தாலும், நிகோலஸைக் கேட்காமல் அமீன் செய்வதில்லை. மிகவும் நட்பாகவும் பாசமாகவும் தன்னுடன் பழகும் இடி அமீனின் எளிமையைக் கண்டு வியந்து போகிறான் நிகோலஸ்.
அதே சமயம், நாட்டில் நிகழும் துப்பாக்கிச்சூடுகளைப் பற்றியும் செய்திகள் நிகோலஸுக்குத் தெரிய வருகின்றன. ஆனால், அது எல்லாமே, ஒபோட்டேவின் ஆதரவாளர்கள் தன்னைக் கொல்ல முயற்சி செய்வதன் விளைவு என்று சொல்லி, நிகோலஸைச் சாந்தப் படுத்துகிறான் அமீன்.
இடி அமீனை முழுமையாக நம்பும் நிகோலஸ், அமீனின் குடும்பத்துடனும் நெருங்கிப் பழகுகிறான். அமீனின் மனைவியருள் ஒருத்தியான கே என்பவளை, நிகோலஸுக்குப் பிடித்துப் போகிறது. அதே நேரத்தில், எப்பொழுதாவது தன் மேல் எரிந்து விழும் அமீனின் நிலையில்லாத தன்மையையும் நிகோலஸ் விரும்புவதில்லை. ஒருமுறை, நிகோலஸின் கண் முன்னரே அமீனைக் கொல்லும் முயற்சி நடக்கிறது. ஆனால் அமீன் தப்பித்துவிடுகிறான்.
அமீனின் ஆட்சியின் அத்தனை சுகங்களையும் அனுபவிக்கும் நிகோலஸுக்கு, உலகம் அவனை ‘அமீனின் வெள்ளைக் குரங்கு’ என்று அழைத்துப் பரிகாசப் படுத்துவது தெரிவதில்லை. அமீனை, ஒரு உயர்ந்த லட்சியத்துக்காகப் போராடும் தியாகி என்றே எண்ணி வருகிறான் நிகோலஸ். ப்ரிட்டிஷ் தூதரகத்தில் உள்ள அதிகாரிகள், இவனிடம், அமீனைப் பற்றிய முக்கியத் தகவல்களைத் தங்களிடம் கொடுக்கச் சொல்லும்போதுகூட, அமீனை ஒரு தியாகியாகவே கருதிப் பேசி, அவர்களைத் திட்டி அனுப்பி விடுகிறான் நிகோலஸ்.
பொதுவாகவே, இது உலகத்தில் அடிக்கடி நடக்கும் ஒரு விஷயம். ஒரு கொடுங்கோலனின் அருகில் இருக்கும் மக்கள், அவனைத் தியாகி என்றே கருதுவார்கள். அவன் செய்யும் அட்டூழியங்கள் அவர்களுக்குத் தெரிந்தாலுமே, அதனை நியாயப்படுத்துவார்களே தவிர, அவனை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ராஜ்குமார், வீரப்பனைப் புகழ்ந்தது இதற்கு ஒரு உதாரணம்
இப்படி இருக்கையில், உகாண்டாவின் சுகாதார அமைச்சர், இந்தப் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளிடம் ஒரு மதுபான விடுதியில் வைத்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் நிகோலஸ், அது ஒருவேளை அரசுக்கு எதிரான சதியாக இருக்குமோ என்று சந்தேகித்து, இடி அமீனிடம் போய் இதைப்பற்றிச் சொல்லி விடுகிறான். மறுநாளில் இருந்து, சுகாதார அமைச்சர் முற்றிலும் காணாமல் போய் விடுகிறார்.
ஒருநாள், தனது வீடு முற்றிலும் சோதனையிடப்பட்டு, கலைந்து கிடப்பதைப் பார்க்கும் நிகோலஸ், தனது ஸ்காட்லாந்து பாஸ்போர்ட் களவாடப்பட்டு, அதற்குப் பதில் உகாண்டா பாஸ்போர்ட் வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். இதைப்பற்றிக் கோபம் கொள்ளும் அவன், இடி அமீனிடமே போய்ப் பேசும்போது, அவன் இனி உகாண்டாவில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றும், உகாண்டாவுக்குத் தான் இனிமேல் அவனது சேவை தேவைப்படும் என்றும் சொல்லி, அவனை மிரட்டி அனுப்பி விடுகிறான் அமீன்.
மெல்லத் தெளிவு பெறத் தொடங்கும் நிகோலஸ், பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளிடமே போய், தான் ஸ்காட்லாந்து செல்ல விரும்புவதாகச் சொல்ல, அதற்கு, இடி அமீனைக் கொன்றால் தான் அது நடக்கும் என்று சொல்லி, அவனது உதவியைக் கோருகிறார்கள் அதிகாரிகள். குழம்பிப்போய், அங்கிருந்து சென்றுவிடுகிறான் நிகோலஸ்.
நிகோலஸ் பரபரப்பாக இருப்பதைப் பார்த்து, உகாண்டாவில் நடக்கும் ஒரு விழாவுக்கு அவனை அழைத்துச் செல்கிறான் இடி அமீன். அங்கு, கேவைச் சந்திக்கும் நிகோலஸ், அவளோடு உறவு கொண்டு விடுகிறான்.
சிறிது நாட்களிலேயே கேயின் வயிற்றில் கரு உருவாக, பீதியடையும் கே, இவனிடமே வந்து, கருவைக் கலைக்கச் சொல்கிறாள். இது மட்டும் இடி அமீனுக்குத் தெரிந்தால், இருவரும் கொல்லப்படுவது உறுதி என்று அழுகிறாள். அதற்கு ஏற்பாடுகள் செய்யும் நிகோலஸ், அந்த நாளில், இடி அமீன் ஏற்பாடு செய்யும் ஒரு ப்ரஸ் மீட்டில் சற்றுத் தாமதமாகி விடுவதால், கேவைப் பார்க்கச் செல்லும் நேரத்தில், அவள் ஒரு கிராமத்து மருத்துவரிடம் சென்றுவிடுகிறாள். அங்கு, கருவைக் கலைப்பதில் பிரச்னையாகி, படு சீரியஸான உடல்நிலையில், அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு விடுகிறாள்.
இதைத் தெரிந்து கொள்ளும் நிகோலஸ், மருத்துவமனைக்கு விரைகிறான். அங்கு, பிணவறையில், கேவின் உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில்.
ஆத்திரமாகும் நிகோலஸ், இடி அமீனைக் கொன்றே தீருவது என்ற முடிவுக்கு வந்து, விஷ மாத்திரைகளைத் தயார் செய்கிறான். அவற்ரை எடுத்துக்கொண்டு, அமீனைச் சந்திக்கச் செல்கிறான்.
இதன் பின் என்ன ஆனது? அமீன், விஷ மாத்திரைகளைச் சாப்பிட்டானா? நிகோலஸினால் ஸ்காட்லாந்து செல்ல முடிந்ததா?
படத்தைப் பாருங்கள்.
உண்மையில், நிகோலஸ் என்ற ஒரு கதாபாத்திரம் இல்லவே இல்லை. இடி அமீனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களோடு, சில கற்பனை நிகழ்ச்சிகளையும் சேர்த்து, ஜைல்ஸ் ஃபோடென் (Giles Foden) என்ற ஆங்கிலக் கதாசிரியர் எழுதிய நாவலை முன்வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தில், இடி அமீனாக நடித்திருப்பது, ஹாலிவுட்டின் அழுகை மன்னன் ஃபாரஸ்ட் விடேகர். இவரை, ஸ்பீஷீஸ் படத்திலேயே நாம் பார்த்திருக்கிறோம். இன்னும் பல படங்களில், நாள் முழுவதும் அழுதுகொண்டே இருக்கும்படியான ரோல்களில் நடித்துப் புகழ் பெற்றவர். ஆனால், இப்படத்தில், பிரம்மாண்டமான உருவெடுத்திருக்கிறார். படம் முழுவதும், நான் இடி அமீனை மட்டுமே பார்த்தேன். விடேகர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதிரடி நடிப்பு. மனிதர் பேசும்போதே, அடுத்தது என்ன செய்வாரோ என்ற பயத்தை நமது மனங்களில் கிளப்பி விடுகிறார்.
விடேகருக்கு, 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் ஆஸ்கர், இப்படத்துக்காகக் கிடைத்தது.
இப்படத்தையும், குந்தூன் படத்தையும் ஒன்றாக பிக்ஃப்ளிக்ஸில் ரெண்ட் செய்தோம். இரு படங்களும், உண்மைக் கதைகள். இரண்டுமே, இரண்டு உலகத் தலைவர்களைப் பற்றிய படங்கள். ஆனால், ஒன்றில் (குந்தூன்), ஒரு சாதாரண மனிதன், எப்படித் தனது நாட்டுக்காக அஹிம்ஸை வழியில் இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறான் என்றும், இன்னொன்றில், ஒரு சாதாரண மனிதன், பதவி கிடைத்ததும் எப்படிக் காட்டுமிறாண்டித்தனமாக நடந்து கொண்டான் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒரு அற்புதமான காண்ட்ராஸ்ட்.
மொத்தத்தில், ஹோட்டல் ருவாண்டாவைப்போல், இப்படமும், பார்ப்பவர்களை உலுக்கியெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
The Last King of Scotland படத்தின் ட்ரெய்லர் இங்கே
அதிர்ச்சியில் உறைய வைத்த திரைப்படம்.
கமல் தசாவதாரத்தில் இந்த திரைப்பட இறுதிக்காட்சியை தனது முதல் அறிமுகத்தில் கொண்டு வந்திருப்பார் 🙂
அடடே அப்புடியா…? இந்தத் தகவல் ரொம்பப் புதுசா இருக்கே ? 😉 ரொம்ப நாளு களிச்சி இந்தப் பக்கம் வந்துக்குறீங்கோ… வாங்க வாங்க 😉
அடடா அதுக்குள்ளார உள்ள பூந்துட்டாறையா
any how me the 2nd
இறுதியில் தப்பிக்க நினைக்கும் நிகோலஸை விமான நிலைய அறையில் சித்திரவதை செய்யும் காட்சியை, தசாவதாரத்தில் அழகாக உணர்ச்சிகரமாய் பாடலுடன் காட்டியிருப்பார்கள் 🙂
நண்பரே,
அருமையான கதைசொல்லல். விட்டேக்கர் நல்லதொரு நடிகர், சமயம் கிடைக்கும்போது பின்னி எடுத்துவிடுவார் என்பதற்கு இத்திரைப்படம் ஒரு சான்று.
அதிகாரம் கையில் வந்தபின் புரட்சியாவது, புடலங்காயாவது… பவர்.. பவர்.. பவர்.. இதுதானே தாரக மந்திரம் :))
சிறப்பான பதிவு நண்பரே.
இந்தப் பதிவ நானு எதிர்பார்த்தேன். 🙂
@ cibi – ஹீ ஹீ… ஆனா அவரு மீ த ஃபர்ஸ்ட் சொல்லல தானே.. சோ, மீ த செகண்டுன்னு சொன்ன ஃபர்ஸ்ட் ஆளு நீங்க.. எனவே, நீங்க தான் மீ த ஃபர்ஸ்ட் ! எப்புடி நம்ம லாஜிக்?
@ சென்ஷி – அட ஆமாம் ! பின்னிட்டீங்க 😉 இப்ப நினைவு வருது 😉
@ காதலரே – பதவி என்பது பல சமயம் அப்படித்தான் இருக்கிறது.. உங்கள் கருத்துக்கு நன்றி..
ரஃபீக்கின் ரேப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துகினு கீறேன்.. எங்களை எப்போது குஷிப்படுத்தப் போகிறீர்கள்? 😉
@ இலுமி – இதுக்குத்தான் ஃபேஸ்புக் பக்கம் ரொம்ப வரக்கூடாதுன்றது 😉 இனியும் இப்புடி நெறைய படங்கள் பத்தி நம்ம ‘வூட்டாண்ட’ அங்க போடுவாங்க.. 😉
தல இப்புடி கேப் உடாம பதிவு போட்டு தள்ளி கிட்டு இருந்தால் எப்புடி
எனக்கு ஒரு டவுட்டு காதலர்கிட்ட இருந்து கன்னி மாதுளை மதன புஷ்டி லேகியத்தை
வாங்கி சாப்பிட்டீர்களோ
.
@ சிபி – அது எப்புடி கரெகிட்டா கண்டு புடிச்சீங்க? கன்னி மாதுளை லேகியம் மட்டும் இல்ல.. இன்னும் பல மேட்டர்கள் உண்டு.. அது பத்தியெல்லாம் எழுதுங்கன்னு சொன்னா, இன்னும் ரஃபீக்கோட ரேப்பே அவுரு எழுதல.. சீக்கிரம் எளுதுங்க காதலரே .. இல்லேன்னா, நாங்களே ஆளுக்கொரு கதை எளுதிப்புடுவோம் 😉
இப்போ வெளீல சாப்புட்டு, மதராசப்பட்டினம் ப்டத்துக்குப் போறதுனால, இனி நைட்டு தான் வருவேன்… அந்தப் படம் எப்புடி இருக்கப் போகுதோ ஆண்டவா….. (ஆனா அதுல ஒரு ஃபாரின் ஃபிகரு கீது.. ஹீ ஹீ)..
ம்ஹீம் இந்த விளையாட்டுக்கு நான் வரல
ஏன்
ஏன்
ஏன்னா
எனக்கு கதை எழுத தெரியாது படிக்க மட்டும் தான் தெரியும் 🙂
.
// ஹீ ஹீ… ஆனா அவரு மீ த ஃபர்ஸ்ட் சொல்லல தானே.. சோ, மீ த செகண்டுன்னு சொன்ன ஃபர்ஸ்ட் ஆளு நீங்க.. எனவே, நீங்க தான் மீ த ஃபர்ஸ்ட் ! எப்புடி நம்ம லாஜிக்? //
ஹையா Me the 1st
எப்புடிங்கோ இப்புடி எல்லாம் யோசிக்குரீங்கோ
தலன்னா சும்மாவா 🙂
.
@ சிபி…
நான் மீ த ஃபர்ஸ்ட் போடத்தான் நினைச்சேன். அப்புறம் தெனம் முன்னாடி வர்றவங்க வருத்தப்படுவாங்கன்னு விட்டுட்டேன் 🙂
@ சிபி – அக்காங் நைனா ! இதெல்லாம் கிட்னி… 😉 (படத்துக்கு கிளம்ப இன்னும் 10 நிமிஷம் கீது.. கை பரபரங்குறதுனால, கமெண்ட்டு ரிப்ளை பண்ண வந்துட்டேன் . . ஹீ ஹீ)..
@ சென்ஷி – சூப்பர் ! இனிமே நீங்களும் அடிக்கடி வந்து கமெண்ட்டு போட்ருங்க. . அப்புறம் நாம அடிக்கடி இந்த வெளையாட்டு வெளாடலாம் 😉 ..
//மதராசப்பட்டினம் ப்டத்துக்குப் போறதுனால, இனி நைட்டு தான் வருவேன்… அந்தப் படம் எப்புடி இருக்கப் போகுதோ ஆண்டவா…//
படம் ஒக்கே தான் (என்ன, ஆரம்ப சீன தான் டைட்டானிக் மாதிரியே இருக்கும்).
நண்பர் விஜய்யின் படம் என்றுமே பார்க்குமளவுக்கு இருக்கும், இது சிறப்பான ஒரு பட வரிசையில் இடம் பெரும்.
விஜய்க்கு ஒரு மைல் கல் இது.
செம படம் ,செம விமர்சனம் நண்பா,
ஒரே குறை விட்டேகர் நடிப்பின் முன்பு டாக்டர் நிகோலஸாய் வரும் ஜேம்ஸ் மெக்வாயின் அருமையான பெர்ஃபார்மென்ஸ் எடுபடவேயில்லை,
அந்த விடேகருக்கு,பேஸ்பால் மட்டை கொண்டு கேஸை ரிலீஸ் செய்யும் காட்சிகள் .
முக்கியமாக நம்மூரில் பறக்கும்காவடி எடுப்பதுபோல,டாகடரை தொங்கவிடும் காட்சியும்,அமீனின் மனைவியை மாறுகால் மாறுகை எடுத்து மாற்றி தைப்பதும்,செம டீடெய்ல்ஸ்.
மேலும் ஹோடல் ருவாண்டாவை விட இப்படம் உசத்தி.ஹோட்டல் ருவாண்டா எனக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை,அதை விட johny mad dog என்னும் படம் பாருங்கள்,புருஷன் மனைவி மட்டும் அழும் சோக காட்சிகள் இருக்காது இதில்..செம டீடெய்ல் உள்ள படம் பட்டவர்த்தனமாய்..!!!
http://www.guardian.co.uk/film/2009/oct/22/johnny-mad-dog-review
@நண்பா,
கிரிடம் விஜய்,என் நண்பர் குண்டு சத்யா என்பவருக்கும் நண்பர்.இது பற்றி பேசியிருக்கோம்,இந்த படம் இங்கே ரிலீஸ் ஆகுமா தெரியாது!! இங்கே உள்ள மார்வாடிகள்,இது போல புது முயற்சிகளை வெளியே தெரிய விடமாட்டார்கள்..!!!பையா போன்ற படங்களை தான் காட்டுவார்கள்
ஸாரி தல..விமர்சனத்தில் கொஞ்சம் தப்பிருக்கு..
பர்சூட் ஆப் ஹாப்பினெஸ் படத்த அவார்டு ரேஸ்ல தோற்கடிச்ச படம்னு மட்டும்தான் தெரியும். இன்னும் இந்த படத்த பார்த்ததில்ல. பார்த்துட வேண்டியதுதான் :-).
@ விஸ்வா – ரைட்டு… நான் இந்தப் படம் பார்க்கப்போறேன்னு சொல்லிட்டு, வீட்ல இருந்து கிளமின உடனேயே மழை பின்னியெடுக்க ஆரம்ப்பிச்சிட்டதுனால, ப்ளான் ட்ராப் பண்ணிட்டு, பக்கத்துல இருக்குற ஷாப்பிங் மால் பக்கம் ஒதுங்கிட்டோம்.. நாளை மாலை தான் மதராசப்பட்டினம் போறேன்.. ஹ்ம்ம்ம்ம்… ;-(
@ கார்த்திகேயன் – நீங்க சொல்றது உண்மை.. ஜேம்ஸ் மெக்வாய் நடிப்பு சூப்பர்.. ஆனா அது எடுபடவே இல்லை.. விடேகர் ஒரு காட்ஸில்லா மாதிரி நிக்குறது தான் காரணம்… ஜானி மேட் டாக் பத்தி எதுவுமே தெரியாது நண்பா.. கண்டிப்பா லிஸ்ல போட்டு வெச்சிக்குறேன்..
அப்ப்றம், அடடா.. அங்க மதராசப்பட்டினம் வராதா? பையா மாதிரி படத்த பாக்குறதுக்கு, ரெண்டு பெக் அடிச்சிட்டு மல்லாந்துரலாமே.. 😉
@ இரும்புத்திரை – //ஸாரி தல..விமர்சனத்தில் கொஞ்சம் தப்பிருக்கு..//
அது என்ன தவறுன்னு சொன்னா, சரி பார்த்துரலாம்.. 😉 அதப்பத்தியும் தாராளமா நீங்க இங்க சொல்லலாம் தல..
@ இராமசாமி கண்ணன் – ரைட்டு தல.. பார்த்துருங்க.. மனச சும்ம அப்புடியே ‘டச்சிங்ஸ்’ பண்ணிரும்.. 😉
அருமையான விமர்சனம் நண்பரே.
எனக்கு ரொம்ப பிடிச்ச படம் இது.
நான் பள்ளி மாணவனாக இருக்கும்போது இடி அமின் பற்றி படித்தேன்.சினிமாவாக இந்த படம் மட்டும்தான பார்த்தேன்[அமின் பற்றி நெறய படம் உள்ளது]படத்தைவிட விமர்சனம் மிக நன்று……
ஆனால் நம் காலத்திலேயே இடி அமினை சிறுவனாக்கி விட்டான் கோத்தபய ராஜபக்செ
இடி அமின் பற்றி படித்த புத்தகம் பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்று இருகிறேன். அதற்கு முத்தாய் உங்களின் பதிவு ..
thanks for sharing this movie..
@ சரவணக்குமார் – நன்றி நண்பா… மீண்டும் வருக 😉
@ நல்லசினிமா – மிகச்சரி.. இடி அமீனெல்லாம் எம்மாத்திரம்? ராஜபக்சேக்கள் முன்.. ஹும்ம்.. உங்கள் முதல் வருகைக்கு நன்றி.. சீக்கிரம் பதிவு போடுங்கள் தல.. 😉
@ அஷ்வின் – மிக்க நன்றி..
அடடே சென்ஷியெல்லாம்.. இன்னும் நம்மளை எல்லாம் நினைப்பு வச்சிருக்கறாரா??? பேஷ் பேஷ்!! 🙂
எந்தப் படத்தைப் பத்தி எழுதினாலும்… கார்த்திக்கேயன் வந்து இன்னொரு ரெஃபரன்ஸ் கொடுக்கறாரே?? கல்யாணம் ஆனாலும்.. கொடுத்து வச்ச மனுசன்! 🙂 🙂 நம்மளைப் பாருங்க. இப்பல்லாம் எதுனா பார்க்க ஆரம்பிச்சா.. அது குடும்பத்துக்கே பொதுவானப் படமா இருக்கான்னு பார்த்துட்டுதான்.. டிவிடியை போட முடியுது.
//ஹாலிவுட் பாலா said…
அடடே சென்ஷியெல்லாம்.. இன்னும் நம்மளை எல்லாம் நினைப்பு வச்சிருக்கறாரா??? பேஷ் பேஷ்!! :)//
உங்களைப் பத்தி பேசினது அடுத்த பதிவுல.. இதுல இல்லைன்னு நெனைக்கறேன். 🙂
//உங்களைப் பத்தி பேசினது அடுத்த பதிவுல.. இதுல இல்லைன்னு நெனைக்கறேன்//
அதை அப்ப படிக்கலை சென்ஷி. நீங்க ரொம்ப நாளா.. இந்த மாதிரி சினிமா ஏரியாவில் கமெண்ட் போடவே இல்லையா (கார்த்திக்கேயன் பதிவு உட்பட)? அதான்… அப்படி கேட்டேன். ‘நம்மளை’-ன்னு சொன்னது.. கருந்தேளையும் சேர்த்து.
பதிவு அரசியலில் எங்களை மறந்துடாதீங்க!! 🙂
படம் வந்த புதிதில் பார்த்தது… நல்ல படம், நல்ல விமர்சனம்… மதராசப்பட்டினம் எப்படி?
//ஹோட்டல் ருவாண்டா எனக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை//
கார்த்து என்னங்க இப்புடி சொல்லுப்புட்டீங்க? சரி விடுங்க.
இந்தபடம் பார்த்து ரொம்ப நாளாச்சு.நல்ல படம். நல்லாவே எழுதியிருக்கிரீங்க.
very nice movie. i loved the acting of forrest whittekar in this. i enjoyed his acting in great debaters too. good sharing
நல்ல படம். படத்தைப் பார்த்து முடித்த உடன் பயமும், அந்த பரிதாப மக்களின் நிலையை நினைத்து கவலையும் வருவது தவிர்க்க இயலாதது
Thanks for introducing this movie bro… I will check that for sure.. 🙂
This guy really looks like Amin.. 🙂
விட்டேகர் அருமையான கலைஞன். மனைவியை தன் நம்பிக்கைக்கு உரிய ஒருவன் உசார் பண்ணும் எண்ணத்தோடு பார்க்கும் போது விட்டேகரின் முகபாவம் மிகச்சிறப்பாக இருக்கும். அது அதிகபட்சம் திரையில் 10 நொடி வரும் காட்சி.
மற்றொன்று ஏன் என்னை நரமாமிசம் தின்பவன் என்றும் லூசுப் பயல் என்றும் எழுதுகிறார்கள் என்று கேட்கும் காட்சி.
படம் முடிந்த பிறகு என் நண்பன் என்னிடம் சொன்னது:
இந்த ஹீரோ ஏன் எப்பவுமே அடுத்தவன் போண்டாட்டியவே உசார் பண்ணுறான்?
அப்பிடிப்பண்ணுனா கொக்கில கோர்க்காம கொலு வச்சா கொண்டாடுவாணுக?
அந்த கருப்பு டாக்டர் தப்பிசுருக்கணும் …. இந்த வெள்ளைகாரன சாவடிசுருக்கணும்….
விமர்சனம் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
படத்தின் பெயருக்கான காரணம் என்ன? என்ன யோசித்தாலும் புரியவில்லை.
இடி அமீன் தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட பட்டம் அது பாஸ்
Thanks.