Lingaa (2014) & Rajinikanth
தமிழ்ப்படங்களும் so called மசாலாக்களும் என்று காட்சிப்பிழையில் சென்ற மாதம் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் என்னென்ன பிரச்னைகளைக் கொடுத்திருந்தேனோ அவைகளேதான் லிங்காவின் பிரச்னைகளும். அந்தக் கட்டுரை பெரும்பாலும் அஜீத், விஜய் ஆகியவர்களின் படங்களையும் அவற்றைப்போலவே வெளியாகும் ‘சூப்பர் ஹீரோ’ தமிழ்ப்படங்களையும் பற்றியது. அந்த வரிசையில் லிங்காவும் இப்போது சேர்ந்திருக்கிறது.
ஒரு தரமான மசாலா எப்படி இருக்கவேண்டும் என்று ரஜினியையே உதாரணமாக வைத்துக்கொண்டு யோசித்தால், சமீபகாலத்தில் படையப்பாவைச் சொல்லலாம். அதற்கு முன்னர் பாட்ஷாவும் முத்துவும். இன்னும் பின்னால் போய் யோசித்தால் அண்ணாமலை, மன்னன், தளபதி, மாப்பிள்ளை, குரு சிஷ்யன், வேலைக்காரன், மிஸ்டர் பாரத், படிக்காதவன், நான் சிகப்பு மனிதன், நல்லவனுக்கு நல்லவன், தம்பிக்கு எந்த ஊரு, மூன்று முகம், நெற்றிக்கண், முரட்டுக்காளை என்று ஒரு பட்டியல் போடமுடியும். முரட்டுக்காளைக்கு முன்னரும் ரஜினிக்குத் தில்லுமுல்லு போன்ற நல்ல மசாலாக்கள் இருக்கின்றன என்றாலும், எண்பதுகள் துவங்கியதிலிருந்தே பட்டியல் போடலாம். இவற்றைப்போல் ‘தரமான’ என்ற அடைமொழியைச் சேர்க்காமல், ’ரஜினி படம்’ என்று யோசித்தால் கோச்சடையான், சிவாஜி, சந்திரமுகி, அருணாச்சலம், வீரா, உழைப்பாளி, தர்மதுரை, பணக்காரன், ராஜாதி ராஜா, சிவா, கொடி பறக்குது, மனிதன், மாவீரன், விடுதலை, உன் கண்ணில் நீர் வழிந்தால், கை கொடுக்கும் கை, நான் மகான் அல்ல, தங்கமகன், தாய்வீடு, அடுத்த வாரிசு, பாயும் புலி, புதுக்கவிதை, ரங்கா, தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, ராணுவவீரன், கழுகு, தீ ஆகியவைகளை அதே காலகட்டத்தில் சொல்லலாம். இந்த இரண்டு வகைகளிலும் இல்லாமல், மோசமான ரஜினி படம் என்றால் எந்திரன், குசேலன், பாபா, வள்ளி, எஜமான், பாண்டியன், நாட்டுக்கு ஒரு நல்லவன், அதிசய பிறவி, ராஜா சின்ன ரோஜா, ஊர்க்காவலன், கர்ஜனை என்று இன்னொரு பட்டியலும் போடலாம் (இவற்றில் ஸ்ரீராகவேந்திரர், நான் அடிமை இல்லை, அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல், ரஜினி நடித்த ஹிந்திப்படங்கள் ஆகியவற்றைச் சேர்க்கவில்லை. அவை வேறு வகை என்பதால்).
இதுதான் ரஜினி படங்களைப் பற்றிய என் பட்டியல்கள். இவற்றில் லிங்கா, அவசியம் மோசமான ரஜினி படம் என்ற வகையிலேயே சேரும். என்ன காரணம் என்பது படம் பார்த்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எளிதிலேயே தெரிந்திருக்கும். ரஜினியின் படங்களில் ரஜினி மட்டும் இருந்தால் போதும் என்பதுதான் மேலே இருக்கும் மோசமான ரஜினி படங்களின் பட்டியலில் தெரியும் விஷயம். அதுவேதான் லிங்காவிலும் நடந்திருக்கிறது. ரஜினியைக் குறுக்கும் நெடுக்கும் நடக்கவைத்து, முத்து, படையப்பா ஆகிய கே.எஸ். ரவிகுமார் படங்களில் வரும் ‘தியாகி’ ரஜினி எபிஸோட்களை அப்படியே எடுத்து இதிலும் வைத்து, புதிதாக எதையும் சேர்க்காமல் படம் பார்க்க வரும் ரசிகர்கள் இதிலேயே திருப்தி அடைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்து எடுக்கப்பட்ட படம்தான் லிங்கா. அதுதான் படத்தின் பிரச்னை. படம் பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு ரஜினி படத்தில் இருந்து சோர்ந்த முகத்துடன் வெளியேறியதை நான் கடைசியாகப் பார்த்தது குசேலனிலும் பாபாவிலுமே. அது அப்படியே இங்கும் நடந்தேறியது.
முதலில், இப்போதைய தமிழ்ப்படங்கள் இந்த ரஜினி ஃபார்முலாவில் இருந்து விலகி வேறு இடத்துக்குச் சென்றுகொண்டிருக்கின்றன என்பதை இன்னும் கே.எஸ். ரவிகுமாரும் ரஜினியும் உணரவே ஆரம்பிக்கவில்லை என்பது லிங்காவின் பல காட்சிகளில் தெரிகிறது. முத்து மற்றும் படையப்பாவில் இதன் காட்சிகளை ஏற்கெனவே பார்த்தாயிற்றே? மறுபடியும் ஏன் இப்போது அவற்றையே பார்க்கவேண்டும்? ரஜினியின் முகம் திரையில் தெரிந்ததுமே ‘தலைவா!!’ என்று அலறும் ரசிகன் கூட உள்ளூற இதை உணர்ந்திருப்பான். ஆனால் வெளியே, ‘லிங்கா செம்ம படம்’ என்று சொல்லக்கூடிய தர்மசங்கடமான நிர்ப்பந்தத்தை அவனுக்கு ரவிகுமாரும் ரஜினியும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
அடுத்ததாக, ரஜினியின் ஓப்பனிங் பாடல் மட்டுமே படத்தின் ஆரம்ப நிமிடங்களைக் காப்பாற்றிவிடும் என்று ரவிகுமார் நினைத்தது இப்போதைய தமிழ்ப்படங்களைப் பற்றி அவருக்குத் தெரியவே தெரியாது என்பதை நிரூபிக்கிறது. படையப்பாவின் ஓப்பனிங் எப்படி இருந்தது? அந்த ஓப்பனிங் இப்போது லிங்காவில் வந்தால்கூட இப்போதைய படங்களின் வேகத்துக்குப் போதவே போதாது. இது அந்தக் காலகட்டம் அல்ல. ரஜினியாக இருந்தாலும் அமிதாப்பாக இருந்தாலும்- ஏன் – எம்.ஜி.ஆராகவே இருந்தாலும்கூட, படத்தின் துவக்கத்திலேயே கதை துவங்கிவிடும் காலம் இது. இப்போதெல்லாம் ஓப்பனிங் சாங், அதன்பின்னர் கதாநாயகன் நான்கு காமெடியன்களுடன் சுற்றுவது, கதாநாயகி நாயகன் பின்னால் சுற்றுவது போன்ற காட்சிகள் காலாவதி ஆகிவிட்டன. கடைசியாக இப்படிப்பட்ட காட்சிகளை ‘பாபா’வில்தான் பார்த்தேன். அந்தக் காலகட்டத்திலும் அவை காலாவதி ஆன காட்சிகளே. எண்பதுகளில் வெளிவந்த படங்களில்தான் இப்படிப்பட்ட காட்சிகள் இருக்கலாம். இத்துடன் சேர்ந்து, நகைக்கடையில் ரஜினி & கோ அரங்கேற்றும் கொள்ளை எப்படி இருக்கிறது? துளிக்கூட சுவாரஸ்யமே இல்லாத இப்படிப்பட்ட காட்சிகளை எப்படி ரஜினிக்கு வைக்க ரவிகுமாரால் முடிந்தது? மனசாட்சியே இல்லாமல் யோசித்தால் மட்டுமே இந்தக் காட்சிகளை 2014ன் இறுதியில் ஒரு தமிழ்ப்படத்தில் வைக்கமுடியும். ’கதை விவாதம்’ என்று தோராயமாக பத்து பேர் அடங்கிய பட்டியல் (ரமேஷ் கன்னா உட்பட) படம் முடிந்ததும் ஓடுகிறது. பத்து பேர் அடங்கிய இந்தக் குழுவால் இவ்வளவுதான் கதையை உருவாக்க முடிந்ததா?
இதன்பின்னர் நாயகியின் ஊருக்கு ரஜினி செல்வது, அங்கே ஃப்ளாஷ்பேக் துவங்குவது, படத்தின் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமிக்கும் ஃப்ளாஷ்பேக் போன்றவையெல்லாம் ‘கத்தி’ படத்திலேயே பார்த்தாகிவிட்டது. உண்மையைச் சொன்னால், எனக்குக் கத்தி பிடித்திருந்தது. அதன் முதல் 40 நிமிடங்கள் திரையரங்கில் அமரவே முடியாமல் லிங்காவைப்போல்தான் இருந்தன. ஆனால் உணர்ச்சிகரமான ஃப்ளாஷ்பேக், அது முடிந்ததும் வரும் வேகமான காட்சிகள் ஆகியவையால் கத்தி அலுக்காமல் சென்றது. லிங்காவில் ஃப்ளாஷ்பேக்கில் இருந்து ரஜினி நம்பவே முடியாமல் மலையில் இருந்து பலூனில் பாயும் க்ளைமேக்ஸ் வரை படத்தில் ஒன்றவே முடியாமல் எத்தனை மெதுவாகச் சென்றது என்பதும் படம் பார்த்தவர்களுக்குத் தெரியும். மூன்று மணி நேரம் ஓடும் லிங்காவில் நல்ல காட்சிகள் என்று எதுவுமே இல்லை. ரஜினிக்காகப் பார்க்கலாம் என்று தோன்றியது ஃப்ளாஷ்பேக்கிலும் ஓரிரண்டு காட்சிகள் மட்டுமே. ஃப்ளாஷ்பேக் முடிந்ததுமே வரும் அத்தனையும் மிக மோசமான காட்சிகள். மலையில் இருந்து பலூனில் குதிப்பதெல்லாம் இக்காலத்தில் யார் செய்தாலும் சிரிப்புதான் வரும். மிக விரைவில் இந்தக் காட்சி இணையத்தில் நகைச்சுவை செய்யப்பட பல வாய்ப்புகள் உண்டு. ரஜினியைப் பற்றிய துணுக்குகளுக்கெல்லாம் இந்த வீடியோதான் சிகரம் வைத்ததைப் போல் இருக்கப்போகிறது. கிட்டத்தட்ட பாலகிருஷ்ணா ரயிலை ஒரே ஒரு விரலசைப்பால் திருப்பி அனுப்புவதைப் போன்ற காட்சி இது. குருவியில் விஜய் குதித்ததுகூட இதன் பக்கத்தில் வரமுடியாது.
ரஜினியின் ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு, ரஜினி வந்தால் மட்டும் போதும் என்ற கருத்தில் எடுக்கப்படிருக்கும் லிங்காதான் இதுவரை ரஜினியின் திரை வாழ்க்கையிலேயே இப்படி மூன்று மணி நேரத்தில் பெருமளவு அலுப்பாகவே நகர்ந்த படம். இதற்குச் சரியான இணை என்றால் நாட்டுக்கு ஒரு நல்லவன் படம்தான். அந்தப் படம் மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு மூன்றிலும் படுதோல்வி அடைந்த ரஜினி படம். ஒரு நிமிடம் கூட உங்களால் அப்படத்தைப் பார்க்கமுடியாது. இத்தனைக்கும் ரஜினி பீக்கில் இருந்தபோது வந்த படம் அது.
லிங்காவின் பிற பாத்திரங்கள், நடிப்பு, இசை ஆகிய அனைத்துமே மிகவும் அலுப்பையே கொடுத்தன. ரஹ்மானின் மிக மோசமான படம் இது. கூடவே விஜயகுமார், ராதாரவி, ஆர். சுந்தர்ராஜன் போன்ற ரஜினியின் சம வயதுடையவர்கள் ரஜினியைச் சூழ்ந்துகொண்டு எதுவோ முதியோர் பள்ளிக்கூடம் போன்ற உணர்வையும் அளித்தனர். விஜயகுமாருக்கு சரியான விக் வேறு கொடுக்கப்படவில்லை.
லிங்காவின் அடுத்த பிரச்னை – அடிக்கடி படத்தில் வரும் அரசியல் வசனங்கள். இனியும் மக்களை இப்படிப்பட்ட வசனங்களால் ஏமாற்ற முடியாது என்றே தோன்றியது. இன்னும் எத்தனைகாலம்தான் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிப் பிற கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருக்கப்போகிறார்கள்? இவற்றையெல்லாம் ரஜினி தொடர்ந்து அனுமதிப்பதன்மூலம், அவருக்குமே இந்த வசனங்களில் ஆசை உண்டு என்றே முடிவுசெய்யவேண்டியிருக்கிறது. அதிலும் அனுஷ்கா பேசும் ‘உன் கை, காலு, தலை, இதயம், லிவர், கிட்னி, காது, மூக்கு பூரா மூளைய்யா..நீ எங்கயோ…பார்லிமெண்ட் வரை போகப்போற பாரேன்’ வசனம் கேட்டதும் எரிச்சலே மேலிட்டது.
எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்தது என்றால், படம் பார்க்க வந்தது பெரும்பாலும் முப்பது வயதைத் தாண்டியவர்கள். பல வருடங்களுக்கு முன்னர் ரஜினியின் ரசிகர்களாக இருந்து, இப்போதும் ஒரு நல்ல ரஜினி படம் வராதா என்ற ஏக்கத்தில் இருப்பவர்கள். ரஜினிக்கு அப்போதைய fan base இன்னும் அப்படியே இருக்கிறது. அவர்கள் இடைவேளையிலும் படம் முடிவிலும் மனம் வெறுத்துப் பேசியதை என்னால் கேட்க முடிந்தது. அவர்களின் பார்வையில் இன்னும் ரஜினியால் ஒரு பாட்ஷாவையோ படையப்பாவையோ முத்துவையோ கொடுக்க முடியும். அவர்களின் இந்த நம்பிக்கை – அவர்களின் ஆதர்சமான ரஜினி என்ற ஹீரோவின் திரைவாழ்க்கை முடிந்துவிட்டது என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டும் இன்னும் நம்பிக்கையாகவே அவர்கள் பேசியதுதான் ஆச்சரியம். வேறு எந்த ஹீரோவுக்கும் இப்படிப்பட்ட நம்பிக்கையுடைய ரசிகர்கள் தமிழில் இல்லை.
என் கருத்தில், இனிமேல் இப்படி ஒரு படம் ரஜினியை வைத்து வந்தால், ரஜினி இதுவரை சேர்த்து வைத்திருந்த ரசிகர்கள் உடைந்து சிதறுவதை அவர் காண நேரிடலாம். இப்படத்தின் மூலமே அவர்களில் பலர் மனம் வெறுத்துவிட்டனர். ரஜினியின் திரைவாழ்க்கைக்குக் கே.எஸ். ரவிகுமார் செய்த மிகப்பெரிய இன்சல்ட் லிங்காதான். இப்படிப்பட்ட கதையைக் கேட்டு சம்மதிக்க எப்படி ரஜினியால் முடிந்தது என்பதும் ஆச்சரியம். எத்தனைதான் மேக்கப் செய்தாலும் ரஜினியின் முதுமை மிகவும் வெளிப்படையாக இப்படத்தில் தெரிகிறது. அவரால் நடனம் ஆட முடியவில்லை. வேகமான ரஜினி மூவ்மெண்ட்கள் எதுவும் பழையபடி இல்லை. அப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் சரியில்லைதானே? அறுபத்தைந்து வயது நிரம்பிய ரஜினியால் எப்படி இருபது வருடங்கள் முன்னர் அவர் செய்ததையெல்லாம் திரும்பி அதே வேகத்தில் செய்ய இயலும்?
ரஜினி இனி திரைப்படங்களில் நடிக்கையில், நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்தாலே அவசியம் அவருக்கு இருக்கும் ரசிகர்களுக்குப் பிடிக்கும். அமிதாப் ஹிந்தியில் ரஜினியை விடவும் சூப்பர்ஸ்டாராக இருந்தவர். ரஜினியின் பல படங்கள், அமிதாப்பின் ரீமேக்குகளே. அப்படிப்பட்ட அமிதாப் தனது 65வது வயதில் என்ன செய்தார் என்று பார்த்தால், சீனி கம் படத்தில் அவரது திரைவாழ்க்கையில் மறக்கமுடியாத படம் ஒன்றைக் கொடுத்தார். அதே சமயத்தில்தான் நிஷப்த் வெளியானது. சர்க்கார் வெளியானதும் அப்போதுதான். பண்ட்டி ஔர் பப்லி படத்தில் கலக்கலான போலீஸ்காரராக அமிதாப் நடித்தது அப்போதுதான். ப்ளாக் படத்தில் ராணி முகர்ஜியுடன் சேர்ந்து அட்டகாசமாக நடித்தது அச்சமயத்தில்தான். The Last Lear படம் அப்போதுதான் வந்தது. இந்தப் படம் அமிதாப்பின் சிறந்த படங்களில் ஒன்று என்று நம்புபவர்களில் நானும் ஒருவன். இத்தனை படங்களில் இத்தனை வித்தியாசமான பாத்திரங்களில் அமிதாப் நடித்தது அவரது அறுபதுகளில்தான். கடைசியாகத் தனது பழைய ஹீரோ கெட்டப்பில் அமிதாப் நடித்தது ’சூர்யவன்ஷம்’ படத்தில். வெளிவந்த ஆண்டு 1999. அது அவரது ஐம்பத்தேழாவது வயது. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் எண்பதுகளின் இந்திய சூப்பர்ஸ்டாரான அமிதாப்பின் கடைசி ஹிட் படம் 1990ல் வெளிவந்த அக்னீபத் தான். அதன்பின்னர் 1999 வரை அவருக்கு ஹிட்கள் இல்லை. 1990ல் இருந்து 1999 வரை அவர் ஹீரோவாக நடித்த படங்கள் எடுபடவே இல்லை. 1991ன் ஹம் படமும் 1998ன் படே மியா ச்சோட்டே மியா படமும் ஓரளவே ஓடின. உண்மையைப் புரிந்துகொண்டு அடுத்த ஆண்டே ‘மொஹப்பதேய்ன்’ படம் ஷா ருக் கானுடன் இணைந்து நடித்தார். மொஹப்பதேய்னில் இருந்து அமிதாப் திரும்பியே பார்க்கவில்லை. இப்போதும் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
இதுதான் படையப்பா முடிந்ததுமே ரஜினிக்கும் நடந்திருக்கவேண்டும். அப்படி மட்டும் நடந்திருந்தால் தமிழின் சிறந்த நடிகர்களில் ஒருவராக ரஜினிகாந்த் இன்றைய தேதியில் மாறியிருக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் அப்படி நடக்காமல் போனதால் இன்று லிங்கா வெளிவந்து, ரஜினியின் திரைவாழ்க்கையின் அபத்தமான படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. இப்போதாவது ரஜினி உண்மையை உணர்ந்து, துணிச்சலாக ஒரு நல்ல திரைக்கதையைத் தேடியெடுத்துத் தனது வயதுக்கேற்ற பாத்திரங்களை வெளிப்படையாக நடித்தால் அவசியம் மக்கள் அவரை உள்ளது உள்ளபடியே ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. உலகம் முழுக்க உள்ள நடிகர்களில் எல்லாருக்குமே அதுதான் நடந்திருக்கிறது. ஒன்று – திரைவாழ்க்கையின் உச்சத்தில் தனது நடிப்பை நிறுத்திக்கொண்டனர். அல்லது அபத்தமான, வயதுக்கு மீறீய பாத்திரங்களில் நடித்துத் தங்களது மரியாதையைட் தாங்களே கெடுத்துக்கொண்டு, பின்னர் உண்மையைப் புரிந்து வயதுக்கு ஏற்ற பாத்திரங்களை நடித்தனர். ஜாக் நிகல்ஸனில் இருந்து க்ளிண்ட் ஈஸ்ட்வுட் வரை இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. ஷான் கான்னரி இன்னொரு உதாரணம். மைக்கேல் டக்ளஸ், கெவின் காஸ்ட்னர், தமிழில் சிவாஜி கணேசன், கன்னடத்தில் ராஜ்குமார், தெலுங்கில் என்.டி.ஆர் ஆகியோரும் உதாரணங்கள்.
ரஜினியின் இப்போதைய வயதைக் கொண்டு யோசித்தால், என்னாலேயேகூட மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதை ஒன்றை அவருக்காகத் தயார் செய்யமுடியும். த்ரில்லர், ரொமான்ஸ், நகைச்சுவை, ஆக்ஷன் என்று எப்படி யோசித்தாலும் இப்போதைய ரஜினியை வைத்துக்கொண்டு அட்டகாசம் செய்யமுடியும் என்பதில் கொஞ்சம் கூட எனக்கு சந்தேகமில்லை. மூன்று மாதங்கள் போதும் – நல்ல திரைக்கதை ஒன்றைத் தயார் செய்ய. இனியும் ‘சார்.. நீங்க போன ஜென்மத்துல ஒரு பெரிய மகாராஜா.. உங்களுக்குப் பெரிய சாம்ராஜ்யம் இருந்திச்சு.. ஆனா எல்லாத்தையும் ஏழைகளுக்காக எழுதி வெச்சிடுறீங்க’ என்று யாராவது இயக்குநர் கதை சொல்லவந்தால் அவரை ஓட ஓடத் துரத்தியடிக்கவேண்டியது ரஜினியின் பொறுப்பு. இப்படிப்பட்ட முதிய இயக்குநர்களை விட்டுவிட்டு இளைஞர்களின் பக்கம் ரஜினி வந்தாலே போதும். அட்டகாசமான படங்கள் (Bucket List, Seven, Dirty Harry, Bridges Of Madison County போன்ற உதாரணங்களைப் பார்த்தால் எப்படிப்பட்ட திரைக்கதைகள் ரஜினிக்காக எழுதிப் பட்டையைக் கிளப்பலாம் என்பது தெரியும்) எழுதலாம். எடுக்கலாம்.
இனி ரஜினிதான் முடிவுசெய்யவேண்டும். ரேஸில் பங்கேற்காமலேயே நம்பர் ஒன் என்ற அவரது இடம் இப்போது இல்லை. அந்த இடத்தில் (என்னதான் நடுநிலையாக யோசித்தாலும்) தமிழில் விஜய்தான் இருக்கிறார். விரைவில் நல்ல படங்கள் நடித்தால் தொடர்ந்து அவர் அங்கே இருக்கமுடியும் என்பது என் கணிப்பு. எனக்கு ஒரு நடிகராக விஜய்யைப் பிடிக்காது. ஆனால் காதல் மன்னன், அமர்க்களம் போன்ற படங்களை ஒருகாலத்தில் நடித்துவிட்டு இப்போதெல்லாம் அபத்தமான படங்களையே தொடர்ந்து நடிக்கும் அஜீத்தின் மர்மமும் புரியவில்லை. ரஜினியின் போட்டியாளராக ஒரு காலத்தில் இருந்த கமல்ஹாஸன் கடந்த சில வருடங்களாக இப்போது ரஜினி செய்துவரும் அபத்தத்தைச் செய்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நடுத்தர வயது ஹீரோவாகத்தான் கமல் நடித்து வருகிறார். ஓரளவு வயதுக்கு ஏற்ற பாத்திரங்கள்தான் செய்கிறார். ரஜினி செய்வதைப்போல் கடைசியாகக் கமல் செய்தது (இளைஞராக நடித்து இளம் ஹீரோயின்களுடன் ஆடியது) தெனாலியில்தான். (2000ல் வந்தது). அதன்பின்னர் ஆளவந்தான், பம்மல் கே சம்மந்தம், பஞ்சதந்திரம், அன்பே சிவம், விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன், மன்மதன் அம்பு, விஸ்வரூபம், இப்போதைய உத்தம வில்லன் மற்றும் பாபநாசம் படம் வரை வித்தியாசமான கதையம்சம் மற்றும் நடிப்பால் தனது படங்களை டிபிகல் மசாலாவாக இல்லாமல் கொஞ்சமேனும் வேறுபாடுகளை உள்ளே வைத்து, அவரது வயதுக்கு ஒத்த நாயகிகளுடனேயேதான் நடிக்கிறார். கமல் இந்த விஷயத்தை எப்போதோ புரிந்துகொண்டுவிட்டார் என்றே தோன்றுகிறது (அஸினுடன் கமல் ஆடவில்லையா? ஆடவில்லை. கதாநாயகியாக அஸினை நடிக்கவைத்தாலும், ஜெயப்ரதாவுடன்தான் ஆடினார்).
எனவே, என் பள்ளி நாட்களில் நான் பார்த்து ரசித்த, தங்களது திரைவாழ்க்கையின் உச்சங்களை அச்சமயங்களில் அடைந்த ரஜினி & கமல் ஆகியவர்களில் ஒரு டிபிகல் தமிழ் சூப்பர்ஹீரோவாக ரஜினியின் திரைவாழ்க்கை அரைகுறையாக எடுக்கப்பட்ட லிங்காவுடன் முடிந்துவிட்டது என்பது என் கருத்து. இனி ரஜினி தனது இயல்பான வயதில் அந்த வயதுக்கேற்ற பாத்திரங்களைச் செய்தால் இன்னும் குறைந்த பட்சம் 15 வருடங்கள் தமிழில் சிறந்த நடிகராக வலம் வரமுடியும். மீறி மறுபடியும் லிங்கா போன்ற படங்களைக் கொடுத்தால், ஏற்கெனவே சிதற ஆரம்பித்துவிட்ட ரஜினியின் விசுவாசமான ரசிகர் கூட்டம் முற்றிலுமாக உடைந்து சிதறுவதை அவரே பார்க்க நேரிடும் என்று தோன்றுகிறது.
செம க்ளியரான அனாலசிஸ்.
விஜய் குதிச்சது குருவி ல தான…கில்லிலயா???
ஆமா பாஸ் :-). அது டைபோ. ஆல்ரெடி கொஞ்ச நேரத்துக்கு முன்னாலயே திருத்திட்டேன்
‘Seven’ படமா அட போங்க பாஸ், காமெடி பண்ணிட்டு. தலைவர் Brad Pitt நடிச்ச கேரக்டர்ல நடிக்கணும்னு சொல்லிட்டா அப்புறம் என்ன ஆகுறது….
சொன்னா பிரச்னைதான். இதுக்குமேல அப்படி சொல்லமாட்டார்ன்னு நம்புவோம் 🙂
Nice review boss.
I really want Rajini to do Liam Neeson’s character from “Taken”. It will be really apt for him and he can really pull it off.
Yes. I t would be nice if he does those characters which are apt for his age.
Taken tamila eduthatchu.. viruthagiri..
cinema எடுப்பது கடினம்.
விமர்சனம் செய்வது எளிதானது.
தமிழ் மக்களின் ரசனையை புரிந்து கொள்வதது கடினம்.
அம்மன் கோவில் கிழக்கால படத்திற்க்கு ஆனந்த விகடன் 30 த்திற்க்கும் குறைவான மார்க் கொடுத்தது. ஆனால் அந்த படம் super ஹிட் .
நான் கூட சொல்வேன் எனக்கு 10000 கோடி கொடுத்தால் அவதார் படத்தை விட சிறந்த படம் எடுப்பேன்.
சொல்லுதல் யாருக்கும் எளிய
சினிமா எடுப்பது கடினம்தான் பாஸ். ஆனா கொஞ்சம் யோசிச்சி நல்ல படமா எடுத்திருக்கலாம்னுதான் சொல்றேன்
Good review Rajesh ..expecting movie like bucket list from now onwards
Me too arun. let’s hope
படம் பார்க்க வந்தது பெரும்பாலும் முப்பது வயதைத் தாண்டியவர்கள். பல வருடங்களுக்கு முன்னர் ரஜினியின் ரசிகர்களாக இருந்து, இப்போதும் ஒரு நல்ல ரஜினி படம் வராதா என்ற ஏக்கத்தில் இருப்பவர்கள். ரஜினிக்கு அப்போதைய fan base இன்னும் அப்படியே இருக்கிறது.
அருமையான கட்டுரை.முதல் மரியாதை போன்ற கதை அம்சம் உள்ள படங்களில் எல்லாம் ரஜினி நடித்தால் எப்படி இருக்கும்?
அட்டகாசமாகத்தான் இருக்கும். பொறுத்துப் பார்க்கலாம் முரளி 🙂
ரஜினி இப்படியே போன, சூப்பர் ஸ்டார் சீக்கரம் பவர் ஸ்டாரா மாறிடுவார்
Let’s hope he wakes up before that happens
பிரச்சனை என்னன்னா, மற்ற நடிகர்களை திரையில் அந்த படத்தின் கதாபாத்திரமாகத்தான் பார்ப்பார்கள். ஆனா, ரஜினியை திரைபடத்திலும் ரஜினியாகத் தான் பார்க்கிறார்கள். ஊருக்காக தியாகம், அநியாய துரோகம், பழிவாங்கல் இந்த டெம்ப்ளேட் தான் ரஜினிக்கு ஏறக்குறைய எல்லா படங்களிலும். இந்த மைன்ட் செட்டில் இருந்து ரஜினி வெளிவருவது மிக கஷ்டம். குசேலன், பாபா போன்ற படங்கள் அடிப்படையில் நல்ல கதை. ஆனா ரஜினி இருக்கிறார் என்பதால் தேவையற்ற பிம்பத்தை வலிந்து திணித்து பில்டப் செய்ததால் மரணஅடி வாங்கியது. நீங்க சொல்வது போல, ரஜினி இனிமேல் நடிக்க விருப்பப்பட்டால், தனது சூப்பர் ஹீரோ இமேஜில் இருந்து வெளிவந்தாகவேண்டும். ஆனால் பிரச்சனை அவரது நடிப்பல்ல. அவர் உருவாக்கி வைத்திருக்கும் இமேஜ். அந்த இமேஜ் ரஜினிக்கு பொருளாதார ரீதியாக மிக முக்கியம். அவரது மகள் + குடும்பம் ரஜினியை மார்வெல் / டிசி காமிக்ஸ் சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு வைத்துக்கொள்ளவே விரும்புகிறார்கள். அது வருங்காலத்தில் எப்போதும் பணம் காய்ச்சும் மரமாக இருக்கக்கூடும். அதன் விளைவு தான் கோச்சடையான் பரிசோதனை.
உங்கள் கருத்தே எனது எண்ணமும்.
ரஜனியின் மறைவின் பின்னரும் அந்த பிம்பத்தை திரையில் உலவவிடும் தந்திரமாகவே எனக்கு கொச்சடையான் தோன்றியது.
ரஜனி ஒருபோதும் தனது பிம்பத்தை மீறி வரப்போவதில்லை, வர அவரது குடும்பமும் விடப்போவதில்லை என்றே தோன்றுகின்றது.
//ரஜனி ஒருபோதும் தனது பிம்பத்தை மீறி வரப்போவதில்லை, வர அவரது குடும்பமும் விடப்போவதில்லை என்றே தோன்றுகின்றது// – If that happens, he will slowly fade out from the minds of his fans and fanatics.
கரெக்ட் பாஸ். ரஜினிக்கு அந்த டெம்ப்ளேட் மொதல்ல வொர்க் அவுட் ஆச்சு. ஆனா இப்போல்லாம் ரசிகர்கள் வேற லெவலுக்குப் போயிட்டு இருக்காங்க.. அவங்களை திருப்திப்படுத்த அவசியம் நல்ல திரைக்கதையை ரெடிபண்ணாமட்டும்தான் சாத்தியம். இனியும் சூப்பர்ஹீரோ சப்ஜெக்ட்ஸ் தமிழ்ல வொர்க் அவுட் ஆகாதுன்னு தோணுது
ரஜினிகாந்த் கடைசியாக ஒழுங்காக நடித்த படம் என்றால் அது தளபதியாகத்தான் இருக்கும். அவர் இமேஜ் வட்டத்தை விட்டு வெளியே வரப்போவதில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. ரஜினி ரசிகர்கள் பாவம்தான்.
ஆமாம். தளபதிக்கு அடுத்து மாறுபட்ட, சூப்பர்ஹீரோவாக இல்லாத கதாபாத்திரத்தில் அவர் நடித்ததே இல்லைதான். இமேஜ் வட்டத்தில் இருந்து இப்போதாவது வெளிவரலாம் என்று புரிந்துகொண்டிருப்பார் என்றே நினைக்கிறேன்
May be you are right(yet not c the movie). But you have to accept that you are not always right (velai illa patathari). Dont juge….just review…
No boss. I am not judging anything. I am unbiased. As a reviewer, I had given here everything I felt. And about VIP, I would still stand firm in my stance that it’s not a well scripted movie. Also, good scripts which doesn’t fair well in the box office and bad scripts whcih fair well there are not related, isn’t it? Box office is never a benchmark to decide good films. For ex, please consdider Kick, Chennai express etc.. they all scored well in BO. But are they good ones?
Box Office is never a yardstick to decide on how good a film is ! But it is definitely a yardstick to decide on how good a film is commercially made. And commercial success of the movie is decided by the masala flavors and not just the marketing alone.
Yes Manikandan. I will not completely agree to your statement. Reason is, these days, how many multiplexes a movie is screened is directly proportional to raking up the moolah. For ex: Kick was a blockbuster in box office in very few days. That’s coz many people watched it even before the reviews came. Same is happening with Lingaa too.
First of all its really a Very Good Post. I’m a die hard fan of Rajni, but after seeing him in the movie i thought its better for him not to continue acting like this. For me for rajni the movie is good except for he last fight, but i felt the same as you felt, its time for Rajni to move ahead and leave the hero Rajni behind him. Lets hope someone near to him tells this frankly to him and he realizes the fact.
Absolutely right. I don’t think Rajini is dumb enough for the others to tell him. I think he would have understood it by this time. Let’s expect some good films from him in the future
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுவிக்கை பற்றிய அவதூறான தகவல் மற்றும் நடந்த வரலாறை புரட்டும் மோசடியும் இந்தப் படத்தில் நடந்திருப்பது பற்றியும் ஒன்றிரண்டு வார்த்தைகள் நீங்கள் எழுதியிருக்கலாம். இதை எப்படி மதுரை மாவட்ட மக்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும்.
அந்தப் பகுதியை நான் தொட விரும்பவில்லை பாஸ். காரணம் பென்னிகுவிக்கைப் பற்றித்தான் எடுக்கிறோம் என்று அவர்கள் யாரும் சொல்லவில்லை. எனவே அது ரசிகர்களின் தவறான புரிதல் என்று அவர்கள் சொல்லக்கூடும். பரதேசியைப் போல், ஏழாம் அறிவைப்போல் முன்னரே சொல்லிவிட்டு செய்திருந்தால் அதை ஆராய்ந்திருக்கலாம்
அம்சமான ரிவ்யூ.. வாழ்த்துகள் கருந்தேள்!
Cheers Ram 🙂
rajini உங்கள் அறிவுரையை கேட்டு திருந்திவிட்டார். இனி வரும் படங்களில் duet இருக்கும். ஆனால் அவர் ஆட மாட்டார். அவருக்கு பதிலாக அவர் மாப்பிள்ளை தனுஷ் ஆடுவார்.
அவ்வ்வ்வ்… இது என்ன வெடிகுண்டு 😛
super rajesh…. உங்க கருத்தை அப்படியே நானும் ஒத்துக்கிறேன்… படம் பார்க்கும் அத்தனை பேரும், ரஜினி ஸ்டைலும் அந்த எனர்ஜியும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வருபவர்கள் தான். எல்லோருக்கும் ரஜினியை பார்த்த திருப்தி இருக்கு… ஆனால் முடியும் போது ஏதோ, ஒன்னு மிஸ்சாகுதே என்ற உணர்வு தான் மேலோங்குது….
கரெக்ட் ஹரி. அந்த ஸ்டைலையும் மேனரிஸங்களையும் இனி எத்தனை நாள்தான் அவரால் கொடுக்க முடியும்?அவரிடம் இனி தேவை – நல்ல படங்கள்..
நல்ல படங்கள் தேவை தான். அது ஏன் ரஜினி கொடுக்கணும் ? 🙂
ம்க்கும் 🙂 … ரஜினி எப்பவுமே நல்ல படங்கள் கொடுக்கணும்னு சொல்லல.. கொஞ்சமாவது சுவாரஸ்யம் இருந்தா நல்லாருக்கும்னுதான் சொல்றேன் 🙂
அதே போல, எத்தன பேர் கழுவு ஊத்தினாலும், விஜய்க்கு இருக்கும் மார்க்கெட் ஸ்டார் வேல்யூ வேற யாருக்கும் இல்ல… அதையும் வெளிப்படையா சொல்லிட்டீங்க….
உண்மையை யோசிச்சா அதான் நிஜம் இல்லையா?
“எங்களுக்கு எதுவும் தேவையில்லை. ரஜினி வந்தால் மட்டும் போதும்” என்றுதானே ரசிகர்கள் நினைக்கிறார்கள். அப்புறம் ஏன் தேவையில்லாமல் இரண்டு நாயகிகள், தேவையில்லாத பாடல்கள். என்னதான் படம் என்றாலும், ரஜினி நாயகிகளுடன் கொஞ்சும்போது, எனக்கே ஒரு மாதிரி இருக்கிறது. ஏன், திரைக்கதையில் அவர்களை திணித்து உள்ளீர்கள்? தாத்தா ரஜினி ஏற்கனேவே திருமணம் ஆகியுள்ளவர் போலவும், அனுஷ்கா பாத்திரத்தை ஆண் பாத்திரமாகவும் வைத்திருக்கலாமே?
மக்களுக்கு தேவை ரஜினி திரையில் ஆட வேண்டும், அடிக்க வேண்டும். ஆனால், கண்டிப்பாக இருபது வயது பெண்ணுடனும், ஐஸ்வர்யா ராயுடனும்தான் ஆட வேண்டும் என்று யாரும் எதிர் பார்ப்பதில்லை. (இது கமலுக்கும்தான்)
ரஜினியைப் பிடிக்காதவர்கள் ரஜினி அமிதாப் போல நடிக்க வேண்டும் என்று கூறுவது மேற்கூறிய காரணத்திற்காக மட்டுமே. ரஜினி மட்டும் ஜோடி இல்லாமல், ஒரு முழு நீள அதிரடிப் படத்தில் நடிக்கட்டுமே, கண்டிப்பாக இப்படி சொல்லியவர்கள் வாயை மூடுவார்கள்.
இல்ல பாஸ். அது முழுக்காரணமும் இல்லை. உண்மையில் ரஜினி வயதுக்கு ஏற்ற பாத்திரத்தில் வந்து, எந்த ஹீரோயினோடும் நடிக்கட்டும். ஆனால் சீனி கம் போல அது இருக்கவேண்டும். இயல்பாக. திணிக்கப்படாமல். ரஜினி வந்தா மட்டும் போதும் என்பதைவிட, ரஜினி வரட்டும். நல்ல கதைகள் அமையட்டும். அப்போது அனைவருக்கும் அவரைப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்
“Aakhree Raasta” அமிதாப்போட கடைசி ஹிட்டுனு கேள்விபட்டேன்…..
அதுக்கு அப்புறமும் சில ஹிட்ஸ் கொடுத்திருக்காரு. அது அவரோட சூப்பர்ஹிட்கள்ள ஒண்ணு.
சூப்பர் பதிவு கருந்தேள் !!! தீவிர ரஜினி ரசிகனான எனக்கும் இந்த படம் பார்த்து விட்டு மனம் ஒப்பவில்லை… இனிமேலாவது ஒரு நல்ல இளம் இயக்குனரிடம் தலைவர் கைக்கோர்க்கட்டும்…
எதிர்பார்க்கலாம் பாஸ். நல்லது நடந்தா ஜாலிதானே
அருமையாகவும், விறுவிறுப்பாகவும், சுவராஷ்யமாகவும் நடுவு நிலையோடு உண்மையை எழுதியிருக்கிறீர்கள், மிக்க நன்றி.
Cheers boss 🙂
Padikkavea dired ah irukku. Semayaana alasal
அவ்வ்.. இனி லெந்த்தைக் குறைச்சிரலாம்
Neenga vijay fanu theriyama nadunilayana vimarsanamnu vasichittu irunthen….ana rajini idathula vijaynu oru vadaya suttinga parunga appotha therinjathu neenga thuppakida kostinu…..
ha ha idhu engalukku munnadiye theriyum boss.sura cutoutkku paal abishekam pannaru rajesh.thuppakkida!!!
Raja – பாஸ். நான் யாரோட ஃபேனும் இல்ல. இப்போதைய தமிழ்த்திரை நிலவரம் அதுதான். விஜய்தான் நம்பர் ஒன். ஒருவேளை அஜீத்தின் உன்னை அறிந்தால் அதை உடைச்சா அவர் அந்த இடத்துக்கு வருவார். அதன்பின் ரஜினி நல்ல படம் ஒண்ணைக் கொடுத்தார்ன்னா அவரும் அங்க வரலாம். அது இப்போ நிலையான இடம் இல்லை. ரஜினிதான் எப்பவுமே நம்பர் ஒன்ன்னு நீங்க நினைச்சா, எம்.ஜி.ஆர் தான் எப்பவும் நம்பர் ஒன்னுனு அவர் ரசிகர்கள் நினைப்பதற்கு சமம் அது. இப்போதைய நிலவரத்தையும் பாருங்க
ரஜினி சார் இனிமேலாவது அவருடைய வயசுக்கு தகுந்த படங்கள் மட்டும் நடிக்கனும்னு எதிர்பார்க்கிரேன்
எல்லாரோட எதிர்பார்ப்புமே அதான். பார்க்கலாம்
அந்த டுபாக்கூர் மாயமானின் இரைச்சல் தாங்கல.இதுல உச்சகட்ட காமெடி என்னன்னா பீச்சடையான் இசை ஆஸ்கார் பட்டியலில் இருக்காம்.ஏற்கெனவே சிலம்டாக் என்ற குப்பைக்கு ஆஸ்கார் கொடுத்து ஆஸ்கார் கமிட்டியின் லங்கோடு அவிழ்ந்து நின்னிச்சி,.இப்ப castration செய்துகொள்ளப்போகிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே..எல்லா பத்துகோடி சம்பளமும் எனக்கே
nee yenna o.c kka velai parkura?
I knew that Rajini cannot look young anymore and show expressions on his face with 2 inches’ make up. Sonakshi also is a drawback. I like his short stories, the way he interacts with the crowd when he gives speech, etc. Kamal is weak when he is out of movie camera! Hope Kamal’s movie which Ravikumar directs, is good. I liked Thenaali.
You forgot to mention Ajith’s ‘Vaali’, which never bores me even now. I never liked any other movie of his, later.
Hope he takes a leaf from Amitabh and acts in movies with good storyline and which fits his age. He has got good sense of humour. He should utilize it.
Enjoyed reading your well-analysed review, Rajesh.
Yes Sandhya. I indeed forgot Vaali. A good one for Ajith. About Ravikumar, I think he had lost his magic tough as a director, and he should hereafter concentrate on the stories, just like Parthiban did when he bounced back with Kadhai thiraikkadhai vasanam iyakkam.
Let’s see how Rajini’s next venture is going to be. Cheers.
ரஜினி Strategy…
தெரிஞ்சே flop கொடுத்து அப்புறம் ஒரு ஹிட் கொடுத்தா, அந்த flop படத்த விட இது சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்..
Everything revolves with money. Including Rajini Films
40 வருஷமா FIELD ல இருக்குர 150 படம் நடிச்ச, 50 படங்களுக்கு மேல direct பண்ணவங்களுக்கு தமிழில் எப்படி படம் எடுக்கனும்ணு தெரியலயாம் அது தேள் கொடுக்கு சொல்லி குடுக்குதாம். படத்த பத்தி விமர்சனம் செய்ரது உன் உரிமை. பண்ணு. ஆனா படம் இப்படி தான் ஓடும். ரசிகர்கள் எல்லாம் இப்படி தான் இருப்பாங்கன்னு சொல்ல எவனுக்கும் யோக்கியத இல்ல. ஆண்டவண் எல்லாருக்கும் எல்லாத்தையும் அளந்து தான் வெச்சிருக்கான். கருந்தேளையும் எங்கே வெக்கனுமோ அங்கே தான் வெச்சிருக்கான்.
@ராஜா …சரியா சொன்னீர்..அதுவும் அந்த கடைசிவரி ஓகோ!இப்பெல்லாம் கம்பெனியில் ஓசியில் இன்டர்நெட் வசதியில் சகட்டு மேனிக்கு படத்தை கிழிப்பது சகஜமாகிவிட்டது.அடிப்படை புரிதல் இல்லாமல் உளறுவது பேஷன்.ஆனா ஓடுற படங்கள் ஓடிகிட்டுதான் இருக்கு.உதாரணமாக விஜய் மீது சமூக வலைதளங்கள் என்னதான் காழ்ப்பு காட்டினாலும் அவர்தான் நம்பர் ஒன்.சும்மா இந்த meagre கணக்கில் இருக்கும் சில விமர்சகர்கள் செய்யும் விமர்சனம் எழுதுனவருக்கே பாதி நேரம் புரியாது என்பதுதான் உண்மை.இந்த போலிகள் முகமூடி விரைவில் தானே அவிழும்.பிறகு அவர்களை கண்டுகொள்ள யாரும் இருக்கமாட்டார்கள்.
Super Prakash., Arumayaana Vaarthaigal.
பிரகாஷ் – //ப்பெல்லாம் கம்பெனியில் ஓசியில் இன்டர்நெட் வசதியில்// – தோ வந்துட்டார்ரா ஞானி… விஜய்ய பத்தி நான் என்ன எழுதிருக்கேன்னு பார்த்திங்களா? பார்க்காமயே உளரக்கூடாது. போயி ஒழுங்கா படிச்சிட்டு வாங்க. பேசலாம். அப்பால, வாங்க.. முகமூடிகளை சேர்ந்தே அவுக்கலாமே?
Raja – //கருந்தேளையும் எங்கே வெக்கனுமோ அங்கே தான் வெச்சிருக்கான்// – என்னமோ கூடவே இருந்து பார்க்குறமாதிரி அளந்து உட்டுருக்க? நான் இங்க யாருக்கும் எதையும் சொல்லிக் கொடுக்கல. என் கருத்தை எழுதிருக்கேன். புடிச்சாலும் புடிக்காட்டியும் உன் கருத்தை சொல்லு. விவாதிக்கலாம். அத்த உட்டுட்டு காமெடி பண்னாத. சிரிப்பு வருது.
Kamal simran kooda panchathanthiram, pks, appuram Thrisha kooda manmadhanambu, vettaiaadu vilayadu la kamalini, vasool raja la sneha, mattra sila padangala duet songs illaya? Kamaluku pathila vera yaarachum addunangala? Puriyaleye sir. Dasacathaarathula Kamal asin kooda aadala, jayapradha kooda than aadunaarnu sonnathukkaga kekuren.
Boss.. I am talking about the character differences here. Kamal’s characters were not typical youthful characters in his films. He always choses the mcarefully to be more matured. And I don’t think his duets can be compared with Rajini. That’s the point I wanted to make.
Unga reviews thodanthu padichitu varen, arumai , ungalidam 3 question.
1. (Naalla thiraipadangal varavendum endru aathanga padukirirgale )ungaludaiya thiraikathai eppo thiraiyil paakalm?(vivathathirkaga kekala, serious ha ve eppo varum)
2. Thalaivar Superstar ku neengal ezhuthalame , so tamil flim ll reach world class ( u may also know many writters with diff stories?)
3. Rajni padam PUNCH MASS HEROISM ellam vechu vantha same RAJNI MASALA nu solluranga, Illa ethuveme illama kathaiya base panni vantha ITHU RAJNI PADATHUKANA ETHUVUME ILLA sollunranga, UNGAL KARUTHU.
Here are my answers boss.
1. இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள 🙂
2. இது, முதல் பதிலை ஒட்டியே நடக்கும். வருங்காலத்தில் பார்ப்போம். ரஜினிக்கு திரைக்கதை எழுதுவது என்பதற்கு எக்கச்சக்க கோட்டை வாசல்களைத் தாண்டவேண்டும். வாய்ப்பு தானா வந்தா அவசியம் நடக்கும்
3. என் கருத்து- ரஜினி படம்னு பொதுவா சொல்லப்படும் வகையான (பஞ்ச், மாஸ் ஹீரோயிஸம் எல்லாமே) ஒரு காலத்துல அவருக்கு மட்டும்தான் இருந்தது. ஆனா இப்போ எல்லாருமே அப்படித்தான் நடிக்கிறாங்க. அந்த ஃபார்முலா வழக்கொழிஞ்சி போச்சு. கூடவே ரஜினி யூத்தும் இல்லை. அவருக்கேற்ற கதைகள் ரெடியாக இதுதான் நல்ல சமயம்னு நினைக்கிறேன்
Reply pannathu ku Nandri……:)
Ungal padathirka waiting……
#seeyousoon
மிகத் துல்லியமான விமர்சனம் .. படம் பார்த்த எனக்கும் அப்படிதான் இருந்தது.
நம்ம லிங்கு எடுத்த அன்ஜானே இதுக்கு பரவா இல்லைன்னு தோணுது.
அப்புறம் ஒரு மனுஷன் 20 வருஷமாவா அரசியலுக்கு வருவான்னு நம்புவீங்க. சிரிப்பு வருது போங்க. அரசியலுக்கு வரணும்னா விஜயகாந்த் மாதிரி சட்டு புட்டுன்னு கட்சி ஆரம்பிக்கணும். ஜெய்ச்சரோ இல்லையோ.. ஆனா நின்னாரு. அதான் மேட்டர்.
ஒரு விஷயம் கொஞ்சம் நெருடலா இருக்கறது என்னனா. விஜய் No.1 நு சொன்னதுதான். சத்தியமா அஜித்தும் இல்லை. என்ன பொறுத்த வரை இப்ப இருக்குற யாருக்குமே நிலையான தகுதி இல்ல. 200 படம் பண்ணிட்டு உலக நாயகன் மூடிட்டு இருக்கும் போது, 4 படம் பண்ணிட்டு அந்த விஜய் டிவி காமடியன் பண்ற அட்டகாசம் ஐயோ .. ராமா .. முடில ..
நம்ம தலைவர் கௌண்டமணி அண்ணன் சொன்ன மாதிரி .. ஆனா ஊனா ஏழை, வறுமை, பசி, ஊழல், பட்டினி நு பேசறானுங்க ஆனா உண்மை என்னனா இவனுங்க யாருமே ஏழை இல்ல ..
2005 கு முன்பு பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் லாம் இல்ல .. ஆனா கோடான கோடி ரசிகர்கள் இருந்தாங்க. எப்படி ? அதுதான் உண்மையான வெற்றிக்கு அறிகுறி .. இப்ப இருக்குறவனுங்க தல கால் புரியாம ஆடுரனுங்க தவிர, யாருக்கும் ஒரு மக்களின் தலைவர் நு சொல்ற தகுதி இல்ல ..
ரஜினி பத்தி நீங்க சொன்ன எல்லாம் கரக்ட். ஆனா இன்றைய நடிகர்கள் பத்தி சொன்னதுல எனக்கு உடன்பாடு இல்லை. இந்த அரசியல் சார்ந்த சினிமா உலகம், ரஜினியுடன் ஒழியட்டும். நல்ல படங்கள் வரட்டும். குடுகின்ற 120 ரூபாய்க்கு என்ன இருக்குனு மட்டும் பார்ப்போம். படம் ஹிட்டான என்ன, எத்தன கோடி வசூலிச்சா நமக்கு என்ன. என் புள்ள குட்டிங்கள நாந்தான் காப்பாத்த வேணும். மோடியோ ரஜினியோ என் வீட்டுக்கு வந்து சோறு போட மாட்டாங்க .
Your comment is more apt and balanced than the author’s.. Karundhel looks biased towards vijay. Just my opinion and no offense..
Good work Venkat and keep writing.
Prakash.. I am not biased towards anyone. I am giving here a comment I gave previously here.. This is my view
//Raja – பாஸ். நான் யாரோட ஃபேனும் இல்ல. இப்போதைய தமிழ்த்திரை நிலவரம் அதுதான். விஜய்தான் நம்பர் ஒன். ஒருவேளை அஜீத்தின் உன்னை அறிந்தால் அதை உடைச்சா அவர் அந்த இடத்துக்கு வருவார். அதன்பின் ரஜினி நல்ல படம் ஒண்ணைக் கொடுத்தார்ன்னா அவரும் அங்க வரலாம். அது இப்போ நிலையான இடம் இல்லை. ரஜினிதான் எப்பவுமே நம்பர் ஒன்ன்னு நீங்க நினைச்சா, எம்.ஜி.ஆர் தான் எப்பவும் நம்பர் ஒன்னுனு அவர் ரசிகர்கள் நினைப்பதற்கு சமம் அது. இப்போதைய நிலவரத்தையும் பாருங்க//
அருமை அருமை நண்பா .. சரியாக சொன்னீர் ..
இப்போதைய நடிகர்கள் நடிகையர்களுக்கு அடக்கம் என்பது துளிகூட இல்ல
ஆட்டம் கூத்து கும்மாளம் .. இதுதான் இன்றைய தமிழ் சினிமா .
மிகவும் பொருந்துகிற மாதிரி கதை என்றால் ரஷினிக்கு ஸ்ரீ ராகவேந்திரா கதையைத்தான் குறிப்பிடுவேன்
i was thinking exactly the same.really like your review.epovachum oru nall a scenu vanthurunuu nincahom..enaku therinchu ivlo silenta rajini padam pathathe ila!
1)thanni panjam nu nranga but bridge katum podhu pinnadi periya falls ooduthu.
2)rajnini appalam sudra scene.(theaterea kadupayitanga)
3)baloon scenu (kodaikanal malai lernthu karataka dam ku kuthikirar kannadi matum kalarla -ithu theaterlla vantha commentu)…inamum epdi ipdi yosikiranganu therla..
but sila peru padam pakalmnu review podranga …hope rajini wont belive that and never do this again
naan unga website romba days ah read pandren…. it’s all good.. btw… lingaa it’s typical masala film kooda illa.. because masala film ellam ella taste um irukum.. but idhula ellam uppu kaaram onnume illa…only rajini.. rajni irundha rasigan evlo venumnalum pannuvan. apdinu nenachi eduthadhu.. ini avar thannoda valia maathikalana veena name poidum….
i favourite rajini film only before 80…. mullum malarum.. 6 irundhu 60 varai….. thillu mullu…. & all kamal & rajini combination films.. after years baadsha & padayappa , muthu only… apram rajini oru trademark for marketing only… yaarum nalla padam kudukala…
ippolam game reviews edhum illaya… new games edhum vilayadrathillaya… i’m big fan of gaming…. tamil review website irundha konjam nalla irukum… mathavanga feeling therinjikalam
எப்பவும் தலைவர் ரஜினி பற்றிய உங்கள் விமர்சனங்களை கழுவி கழுவி ஊத்தும் நான் இதை ஆமோதிக்கிறேன். நடுநிலையான நல்ல விமர்சனம். ஆனா எந்திரன்ல காலம் போன கடைசிலனு எழுதுனதுதான் செம கோவம். தப்பு தலைவா. இதே மாதிரி எழுதுங் நாங்களும் ஆதரிப்போம்.
unnoda 3hr comment ah padikurath Ku name thalaivaroda padatha pathuduvan
Hi Rajesh,
Hi Rajesh,
I am a fan of your reviews. You have introduced so many good movies to me. Have you seen Al pacino’s Stand up guys. If possible write a review about that movie. Did you write any article about al pacino’s movies?
@Rajesh,
how come Yejaman in the Rajini’s Bad movie list? I think it is a typo… 🙂
Arpudhamaana vimarsanam Boss, Ungalin indha pani thodara ennudaiya vazhthukkal,,,,,,
அருமையான விமர்சனம்,
உங்களை இயக்குனராக காண மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன்,,,,
// ஒரு தரமான மசாலா எப்படி இருக்கவேண்டும் என்று ரஜினியையே உதாரணமாக வைத்துக்கொண்டு யோசித்தால், சமீபகாலத்தில் படையப்பாவைச் சொல்லலாம். // NO CLUE ON WHAT PARAMETERS, YOU INCLUDED PADAIYAPPAA IN THE LIST OF GOOD MASALA FILMS. ITS KIND OF ORDINARY, TEMPLATE BASED PLOT AND SCREEN PLAY. PLEASE LIST DOWN THE STANDARDS THAT PADAIYAPPA MET TO GET QUALIFIED AS A GOOD MASALA SO WE COULD UNDERSTAND THE YARDSTICKS OF YOURS AND APPLY THEM TO SEE WHETHER PADAIYAPPA REALLY A CANDIDATE FOR SUCH PRAISE. AM WAITING.
என்னங்க விமர்சகரே..
மூச்சுக்கு முன்னூறு தடவ இது தான் பொழப்புனு உக்காந்து நெகட்டிவ் நியூஸ் போட்டும் இந்த வாரம் கூட தியேட்டர்ல ‘ஹவுஸ்புல்’ போடு தொங்கவிட்டுட்டாங்களே…
இன்னும் நீங்க …..ல தொங்கல..?
Hi..are u joking? ‘VIJAY is no 1.’ Nobody accept that..After Rajinikanth , AJITH is a no 1 actor in tamil industry even THALA without promote his films and fans club..see ‘Ennai Arinthal’ official teasers like… page..’https://www.youtube.com/watch?v=SPJDMCQGq7M’
its tell you Thala mass..
I agree that Linga was not up to the mark but I cannot agree kaththi is a good movie.It is also a crap.
I am a die hard fan of rajini but a true critic as well.I think rajini should have understood the imapct of Linga movie.He will surely recover.He is always “SUPERSTAR” no matter whoever tries to take that from him.