LOTR EBook – Sneak Peek!

by Karundhel Rajesh May 28, 2012   series

இன்னமும் ஒரே வாரம்தான் இருக்கிறது. மின்புத்தகம் வெளியாவதற்கு. ஏற்கெனவே வெளியிடப்பட்ட ட்ரைலர் பிரம்மாண்ட ஹிட். இதோ அடுத்த teaser. மின்புத்தகம் எப்படித் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் சொல்ல உத்தேசம்.

  • மின்புத்தகத்தின் மொத்த பக்கங்கள் இதுவரை 250. அவை இன்னமும் அதிகரிக்கக்கூடும்.
  • ஒவ்வொரு அத்தியாயத்திலும் அந்த அத்தியாயத்துக்குத் தேவையான வண்ணமயமான படங்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல், அந்தப் படங்களிலேயே கட்டுரைகளில் சொல்லப்படாத சில விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
  • சில அத்தியாயங்களில், Brian de Palma வின் டெக்னிக் பின்பற்றப்பட்டுள்ளது. திரைப்படத்தின் ஒரே ஷாட்டில் பக்கம்பக்கமாக இரண்டு ஷாட்களை ஓடவிடுவது அவரது தனித்திறன். இது கில்பில் படத்திலும் வருவதைப் பார்த்திருக்கலாம். இதே முறையில், ஒரே கட்டுரையில் இரண்டு கட்டுரைகளைப் படிக்கலாம். அதாவது, ஒரு பக்கத்தில் இடதுபக்கம் ஒரு கட்டுரை இருக்கும். அது அடுத்த பக்கத்திலும் அதே இடது பக்கத்தில் தொடரும். அதே சமயம், வலது பக்கத்தில் அந்தக் கட்டுரையோடு சம்மந்தப்பட்ட இன்னொரு கட்டுரை இருக்கும்.
  • இனி வரப்போகும் The Hobbit படத்தைப் பற்றி ஒரு விபரமான கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது. அந்தப் படம் எடுக்கப்பட்டதில் உள்ள சிக்கல்கள், அவை எப்படி சரிசெய்யப்பட்டன ஆகிய விரிவான அனாலிசிஸ் இதில் இருக்கும்.
  • இருபதுக்கும் மேற்பட்ட மிடில் எர்த்தின் வரைபடங்கள் பெரிய அளவில் இந்த மின்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் படம் பார்க்கும்போதோ அல்லது இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதோ எப்போதுவேண்டுமானாலும் refer செய்துகொள்ள உபயோகமாக இருக்கும்.
  • ஏற்கெனவே எழுதப்பட்ட கட்டுரைகள் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட புதிய அத்தியாயங்கள் இதில் உள்ளன. மட்டுமல்லாமல், ஏற்கெனவே எழுதப்பட்ட அத்தியாயங்களே மேலும் சில புதிய தகவல்களையும் கொண்டிருக்கின்றன. கூடவே, இதுவரை எழுதப்பட்ட வரிசையில் அல்லாது, ஒரு புதிய வரிசையில் இந்த அத்தியாயங்கள் கோர்க்கப்பட்டுள்ளன.
  • மின்புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கீழே அடிக்குறிப்பாக இப்படங்களைப் பற்றிய ஒவ்வொரு trivia  – துணுக்குச்செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன.இந்த வகையில், மொத்தம் நூற்றைம்பதுக்கும்  அதிகமான துணுக்குச்செய்திகள் இப்புத்தகத்தில் உள்ளன. அவைகளைப் படிப்பதே ஒரு அட்டகாசமான அனுபவமாக இருக்கும்.
  • ரிங்ஸ் நாவலைப் படித்திருப்பவர்களுக்காக – படங்களுக்கும் நாவலுக்கும் என்னென்ன வித்தியாசங்கள்? ஒவ்வொரு படத்துக்கும் இந்த வகையில் ஒரு தனி அத்தியாயம் டெடிகேட் செய்யப்பட்டுள்ளது.
  • படங்களில் உபயோகப்படுத்தப்படும் மிருகங்கள் என்னென்ன? கவலையே வேண்டாம். இந்த மிருகங்கள் / ஜந்துக்கள் எல்லாம் தனியாக ஒரு அத்தியாயத்தில் விளக்கப்பட்டிருக்கின்றன.
Shageevan design செய்த அட்டகாசமான போஸ்டர்

Shageevan design செய்த அட்டகாசமான போஸ்டர்

இப்போது ஒரு சிறிய sneak peek. மின்புத்தகத்தின் மிகச்சில பக்கங்கள் மட்டும் நண்பர்களுக்காக. இதோ இப்படித்தான் இருக்கப்போகிறது நமது மின்புத்தகம். கீழே இருக்கும் இரண்டாம் ட்ரெய்லரை தயாரித்தவர் நமது சரவண கணேஷ் (கொழந்த). அருமையாக வந்திருக்கிறது இது. ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள ஸ்பெஷல் எஃபக்ட்ஸை காணத் தவறாதீர்கள். உதாரணத்துக்கு, முதல் பக்கத்தில், பழைய சினிமாவில் கோடுகள் வருமே – அப்படி அவர் செய்திருக்கிறார். ஒவ்வொரு பக்கத்திலும் எதுவோ ஒரு எஃபக்ட் அப்படி உள்ளது. பார்த்துவிட்டு உங்களது கருத்தைப் பதியுங்கள்.

முக்கிய அறிவிப்பு – கீழே உள்ள embed செய்யப்பட்டுள்ள பக்கங்கள் சிறிதாகத்தான் தெரியும் என்பதால், இதோ இந்த லிங்க்கை க்ளிக் செய்தால், அட்டகாசமான ஒரிஜினல் பெரிய sizeல் இந்த மின்புத்தகங்களின் பக்கங்களைக் கண்டு ரசிக்கலாம் – மின்புத்தக Teaser: click செய்யுங்கள்

Juz a week more. Be ready on June 4th!

Shageevan design செய்த அட்டகாசமான போஸ்டர்

  Comments

18 Comments

  1. அட்டகாசம்……இன்னும் ஒரே வாரம்……..டிசைன்ஸ் பயங்கர கலர்ஃபுல்லா இருக்கு. நா இதுவரை தமிழ்ல இப்படி ஒரு முயற்சிய பாத்ததில்ல….வாழ்த்துக்கள்.நன்றி….

    ——–

    அப்பறம், சரவண கணேஷ் தான் கொழந்த என்பது – சூரியன் உதிக்கும் திசை கிழக்கு – மாதிரி உலகறிஞ்ச உண்மை….()குள்ள போட்டு சொல்லும் அளவுக்கு நா என்ன சின்ன பாதிவர ?? என்னவொரு அவமரியாதை ???

    Reply
  2. சூப்பர்ராய் இருக்கு இது ரொம்ப ஆவல் அதிக படுத்துகிறது….

    Reply
  3. ஹாய் கருந்தேள்

    மிக சிறப்பான முயற்சி. தமிழில் Fantasy, Technically Impressive-ஆன Websites மிக குறைவு. அதனால் தன் விஷயம் இருந்தாலும் படிக்க முடியாமல் போவது. உங்கள் இணையதளம் Youngster’s in மூளையில் நேராக போய் பதிகிறது. இந்த PDF முயற்சி மிக சிறப்பு. இதை போன்ற புதிய சிந்தனைகள் தான் சக நண்பர்களையும் புதியதாக சிந்திக்க வைக்கும். குறிப்பாக “2012 நவீனமும்” “< = 1900 பழமையும்" கலந்து நீங்கள் தரும் விஷயங்கள் அபாரம். கருந்தேளில் சிறப்பாக நான் கருதுவது
    “கண்மூடித்தனமாக எதையும் மறுப்பதுமில்லை, ஏற்றுக்கொள்வதுமில்லை”
    “Versatile -ஆன விஷயங்கள்”
    “Technically sound – ஆன website “
    “தமிழ் பற்றிய சரியான புரிதல்”
    “நேர்பட அலசுதல்”

    இவை என்றும் தொடரவேண்டும் என்பதே என் அவா

    என்றும் அன்புடன்
    பாவாணன்
    http://paavaanan.in

    Reply
  4. அட்டகாசம். கலக்கியிருக்கீங்க.. ரொம்ப சந்தோஷமாவும் ஆர்வமாவும் இருக்கேன். கருந்தேள் ராக்ஸ்.. :))

    Reply
  5. நான் எப்போதுமே தொடர்களை படிக்காதவன்.
    புத்தகமாக வ்ந்தால் படித்து விடுவேன்.
    என்னை தொடர் எழுத வைத்த பாவம் உங்களையே சாரும்.

    தமிழில் இது போன்ற முயற்ச்சிகள் தொடர்ந்து வர வேண்டும்.

    கிராபிக்ஸ்…இடம் பெறும்… பக்கங்களின் உள்ளடக்கத்துக்கு… பக்கபலமாக இருந்தால் மட்டும் பயன்படுத்துங்கள்.
    இல்லையேல் சங்கர் பட கிராபிக்ஸ் போல் ஆகி விடும்.

    இந்த பின்னூட்டத்துக்கும் கருப்பு பெட்டியின் தர்ம அடியை எதிர்பார்க்கிறேன்.

    Reply
  6. அனேக கோடி நன்றிகள் ராஜேஷ். PIXAR ebook க்கு அப்புறமா நான் படிக்கப்போகும் அடுத்த ebook இது தான். உண்மையாவே பாலா மற்றும் கொழந்தையின் திறமை பிரமிப்பூட்டுகிறது.

    என்ன தான் “making of the movie” ல இருந்து எடுத்தேன், விக்கிபீடியா மற்றும் நாவல்களைப் படித்து தான் எழுதினேன்னு நீங்க தன்னடக்கமாகச் சொன்னாலும் 250 பக்கங்களுக்கான உழைப்பு மிக மிக அதிகம் என்று எங்களுக்கு தெரியும்… அதுவும் பொட்டி தட்டுற வேலையில இருந்துகிட்டு இவ்வளவு படிக்கிறதுக்கும், எழுதுறதுக்கும், பாக்கிறதுக்கும் நேரம் கண்டுபிடிச்சீங்க பாருங்க… அத பதியே தனியா ஒரு தொடர் பதிவு போடலாம் (expecting one). இந்த அசுர உழைப்புக்கு உங்களுக்கு பக்க(கா) பலமா இருந்த உங்க மனைவிக்கும் எனது நன்றிகள். எல்லாத்துக்கும் மேல இந்த உழைப்பை வைத்து காசு பாக்காம இருக்கீங்க பாருங்க அதுக்கே ஒரு ராயல் சல்யுட்.

    அப்புறமா தல பாலாவ கொஞ்சமாவது எழுத சொல்லுங்களேன்… அவரோட ஒட்டுமொத்த பதிவுகளையும் படிச்சு, எப்படா அடுத்த பதிவு வரும்னு நினச்சுட்டு இருந்த(க்கிற) அவரோட பின்னூட்டமிடாத ரசிகர்களில் நானும் ஒருத்தன்… அவர ரொம்ப கேட்டதா சொல்லுங்க… ஜூன் 4 க்கு வெயிட்டிங்.

    Reply
  7. வாழ்த்துகள் ராஜேஷ்/பாலா/கொழந்த…!!!! 🙂 🙂 டீசர்ல இருக்குற பக்கங்களோட டிசைன்ஸ்…படங்கள்… அனிமேஷன்ஸ் எல்லாமே அட்டகாசமா இருக்கு…!! புத்தகத்துக்காக ஆவலோடு காத்திருக்கின்றோம்…அப்டியே எனக்கும் போட்டோஷாப்ல டிசைன் பண்ற மாதிரி போஸ்டர் வொர்க் ஏதாவது கொடுத்தா நல்ல இருக்கும்..!! 🙂

    Reply
  8. //ஏற்கெனவே வெளியிடப்பட்ட ட்ரைலர் பிரம்மாண்ட ஹிட். //

    thala itha sathiyama thangave mudiyala……

    Reply
  9. வர வர ஆர்வத்தை உயர்த்திக்கிட்டே போகுது இந்த மின் புத்தகம்..இன்னும் ஒரு வாரம்..கட்டாயம் படித்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்..சிறப்பான பணி சார்..ரொம்ப நன்றி.

    Reply
  10. பதிவுலகின் ஜேம்ஸ் கேமரூன்,பீட்டர் ஜாக்ஸன்,ஸ்பீல்பெர்க்குக்கு வாழ்த்துக்கள்…

    Reply
  11. சூப்பரா இருக்கு… பாராட்ட வார்த்தை இல்ல…

    இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணனுமா?

    Reply
  12. சூப்பரா இருக்கு

    Reply
  13. காத்திருக்கும் கண்களே!

    Reply
  14. மிக்க நன்றி நண்பர்களே… இன்னும் இரண்டே நாட்களில்!

    Reply
  15. கட்டுரைகளாக வந்தபோதே முக்கால்வாசி வாசித்துவிட்டேன். முழுமையாக வாசிக்கவும் வாய்ப்பு வந்திருக்கிறது. LotR நாவலையும் இன்னொரு முறை வாசித்து, படங்களையும் பார்த்து முடித்தால், உங்களது நூலின் பயனை இன்னும் கூடுதலாய் அடைய முடியும் என்று எண்ணுகிறேன். முயல்வேன். நன்றி!

    இப்படி உழைப்பதற்குத் தமிழிலும் ஆள் உண்டு; திறமையும் உண்டு என்று காண்கையில் உவகை உணர்ச்சிவசப் படுகிறேன்! பங்களிப்பார் அனைவரும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்!

    Reply

Join the conversation