LOTR : The Series – 1– It all began this way

by Karundhel Rajesh May 25, 2011   war of the ring

திரைப்பட ரசிகனாக இருக்கும் ஒவ்வொரு மனிதனும், ரசித்துப் பார்த்திருக்கக்கூடிய படங்கள் பல. ஒவ்வொருவருக்கும் பலவிதமான விருப்பங்கள் இருக்கும். ஒருவருக்குப் பிடிக்கூடிய படம், இன்னொருவருக்குப் பிடிக்காத வாய்ப்புகள் அதிகம். இருந்தபோதிலும், உலகமக்கள் பெரும்பாலானோருக்குப் பிடித்த படங்கள் என்று ஒரு பட்டியல் இட்டால், அதில் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்கள் கட்டாயம் இடம்பெறும். என்னைப்பொறுத்தவரையில், இந்த ஸீரீஸ் பிடிக்காத ஒரு திரைப்பட ரசிகரை இன்னும் நான் சந்தித்திருக்கவில்லை. பலமுறை இப்படங்களைப் பார்த்திருக்கிறேன். இப்போது இதை எழுதக் காரணம், ஹாரி பாட்டர் படத்தைப் பற்றி நான் சில மாதங்களுக்கு முன்னர் எழுதிய போது, ஹாலிவுட் பாலா, முரளி கிருஷ்ணன் போன்ற நண்பர்கள், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களையும் பற்றி எழுதச் சொல்லி, கருத்து வெளியிட்டிருந்தனர். எனக்கும் எழுத விருப்பம் தான். ஆனால் எதை எழுதுவது? லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்கள், ஒரு சமுத்திரம். அந்த வரிசையைப் பற்றி, ஒவ்வொரு படத்தையும் பற்றி ஒரு பதிவு போட்டுவிட்டு, முடித்துக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லாமல் இருந்தது. இந்தக் கதை எழுதப்பட்ட காலத்தில் இருந்து தொடங்கி, கடைசிப்படம் எடுத்து முடிக்கப்பட்ட நாளில் முடிப்பதே சரியானதொரு வழியாக இருக்கும் என்று எண்ணினேன். அப்படி எழுத ஆரம்பிப்பதற்கு, இப்போதுதான் நேரம் கிடைத்துள்ளது. எனவே, வாருங்கள். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களில் மூழ்குவோம். இதைப் படிக்கும் நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்பும் செய்தி என்னவெனில், இப்படி எழுதுவதால், நானொன்றும் இந்தப் படங்களைப் பற்றி அத்தனையும் அறிந்தவனாக ஆகிவிடமாட்டேன் என்பதும், இங்கு நான் எழுதுவதில் இருக்கும் விஷயங்கள் அத்தனையுமே இணையத்தில் பல்வேறு மூலங்களிலிருந்து திரட்டப்பட்டவையே என்பதுமே. ஹாலிவுட் பாலா எழுதவேண்டிய கட்டுரையை நான் எழுதுகிறேன். அவரளவு கட்டாயம் சுவாரஸ்யமாக இருக்காது. இருந்தாலும், பொறுத்தருள வேண்டுகிறேன்.

The Beginning: JRR Tolkien

லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் கதைகளை எழுதியவர், டோல்கீன் என்பது அத்தனைபேருக்கும் தெரியும். இவருக்கு எப்படி இந்த ரீதியில் ஒரு ஃபாண்டஸி எழுதவேண்டுமென்று தோன்றியது? இக்கேள்விக்குப் பதிலைத் தேடினால், அது, டோல்கீனின் இளமைப்பருவத்தில் சென்று நிற்கும். சிறுவயதிலிருந்தே, ‘mythology’ எனப்படும் புராணங்களின்பால் ஈர்க்கப்பட்டவராகவே டோல்கீன் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. குறிப்பாக ஐரோப்பிய தேவதைக்கதைகள். தென்னாப்ரிக்காவில் பிறந்த டோல்கீன், ஆங்கில மொழியிலும், ஆங்கில இலக்கியத்திலும் சுவாரஸ்யம் உடைய நபராகவே இருந்திருக்கிறார். கல்லூரியிலும், இவைகளையே பயின்றும் இருக்கிறார். படித்துமுடித்த பின்னர், உலகப்போரிலும், இங்கிலாந்து சார்பாக வலுக்காட்டாயமாகப் பங்கேற்கவைக்கப்பட்டிருக்கிறார். ‘படைப்பிரிவில், கனவான்கள் என்று சொல்லக்கூடிய மனிதர்கள் ஒருவரும் இல்லை; ஏன்? மனிதர்களே இல்லை’ என்றெல்லாம் அவர் எழுதிய ஒரு கடிதத்தில் இருக்கிறது. கொடுமையான ஒரு காய்ச்சல் காரணமாக, படைப்பிரிவில் இருந்து விலக்கப்பட்டார் டோல்கீன். அவரைப்பொறுத்தவரையில், அது ஒரு பெரும் நிம்மதி. இந்தச் சமயத்தில், கவிதைகளும் எழுத ஆரம்பித்திருந்தார் டோல்கீன். இதன்பின், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் ஒன்றான பெம்ப்ரோக் கல்லூரியில், ஆங்க்லோ – சாக்ஸன் விரிவுரையாளராகப் பணியில் அமர்ந்தார். இந்தச் சமயத்தில் தான், The Hobbit மற்றும் Lord of the Rings நாவல்களை எழுத ஆரம்பித்தார். அவரது எழுத்துப் பங்களிப்பு, இந்தக் காலகட்டத்தில்தான் பெரும்பாலும் நடந்தேறியது என்றும் சொல்லலாம்.

குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம் என்னவெனில், டோல்கீனின் நெருங்கிய நண்பரின் பெயர், சி.ஜே. லூயிஸ். எங்கேயோ கேட்டது போல இருக்கிறதா? Chronicles of Narnia எழுதியவர். லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் எழுதுகையில், டோல்கீனுக்கு முழு ஆதரவு அளித்தவர் லூயிஸ்.

இதற்கு பிறகு, டோல்கீனின் எழுத்துகள் பதிப்பிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஒரு பிரபலமாக மாறிப்போனார் டோல்கீன். மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகியது. எண்ணற்ற தொலைபேசி அழைப்புகளும் வரத்துவங்கின. இதனால் டோல்கீனுக்கு வருத்தமே மேலிட்டது. எனவே, தொலைபேசி டைரக்டரியிலிருந்தே தனது பெயரை எடுத்துவிட்டார் டோல்கீன். இங்கிலாந்து அரசின் இரண்டு முக்கியமான விருதுகளை, இறப்பதற்கு முந்தைய வருடத்தில் பெற்றுக்கொண்ட டோல்கீன், தனது எண்பத்தியோராம் வயதில், என் பிறந்தநாளுக்கு அடுத்த தேதியில், 1973 ல் மரணமடைந்தார். அவரது புத்தகங்களின் விற்பனை மூலம், இன்றும் அவரது வாரிசுகளுக்குப் பெரும்பணம், வருடந்தோறும் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

After the Novels : The Movie attempts

டோல்கீன் எழுதிமுடித்து வெளியிட்ட காலத்திலிருந்தே, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவல்களைப் படமாக எடுக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. முதன்முதலில், இந்நாவல்களைப் படமாக எடுக்கும் முயற்சிக்குப் பிள்ளையார் சுழி போட்டவர், ‘ரால்ஃப் பக்‌ஷி’ என்ற இயக்குநர். இவர், அடிப்படையில் ஒரு அனிமேட்டர். ஐம்பதுகளின் இறுதியில், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவல்களை அனிமேஷன் படங்களாக எடுக்க முடியும் என்று இவர் எண்ணத் துவங்கிய காலத்தில், இந்நாவல்களின் உரிமை, வால்ட் டிஸ்னியிடம் இருந்தது. எனவே, ரால்ஃபால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அறுபத்தெட்டில், யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்துக்கு, பட உரிமை கைமாறியது. அப்போது திரைக்கதை அமைக்க அழைக்கப்பட்டவர்கள், ஸ்டான்லி குப்ரிக்கும், ஜான் பூர்மேன் என்ற இயக்குநரும் (Taylor of Panama நினைவிருக்கிறதா?). இவர்களில், பூர்மேன், எழுநூறு பக்க திரைக்கதை ஒன்றை எழுதிமுடித்திருந்தார். குப்ரிக்குக்கு மற்ற பட வேலைகள் இருந்ததனால், அவரால் மேற்கொண்டு தொடர இயலவில்லை. பூர்மெனின் திரைக்கதையை மையமாக வைத்து, யுனைடட் ஆர்டிஸ்ட் நிறுவனம், இறுதியாக, இரண்டு பாக திரைப்படம் ஒன்றை எடுக்க ஒப்புதல் அளித்தது. ஆனால், சில பிரச்னைகள் காரணமாக, பூர்மேனின் திரைக்கதை, கைவிடப்பட்டது. எனவே, க்ரிஸ் காங்க்ளிங் என்ற திரைக்கதையாசிரியர், புதியதாக ஒரு திரைக்கதை எழுதினார். இதற்குப் பிறகு, பீட்டர் பீகிள் என்ற நாவலாசிரியர் – இவர், ஒரு பாண்டஸி எழுத்தாளர் – கான்க்ளிங்கின் திரைக்கதையை சற்றே திருத்தி, திரைக்கதையின் இறுதி வடிவத்தை எழுதி முடித்தார்.

படப்பிடிப்பு துவங்கியது. ரால்ஃப், படத்தை ஒரு அனிமேஷன் திரைப்படமாகவே எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எழுபதுகளில், அனிமேஷன் என்பது, வெறும் கார்ட்டூன்கள் என்ற நம்பிக்கை நிலவிய காலம். அதாவது, படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், சற்றேனும் கோமாளித்தனமான அசைவுகளைச் செய்தாகவேண்டும். ஆனால், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் அனிமேஷனிலோ, கார்ட்டூன் முறை உதவாது. ஏனெனில், கார்ட்டூனாக எடுக்கப்பட்டால், நகைச்சுவைப் படமாக அது ஆகிவிடும். எனவே, ஒரு புதிய முறையைக் கையாண்டார் ரால்ஃப்.

Rotoscoping : The new animation technique

ரோடோஸ்கோபிங் என்ற இந்தத் தொழில்நுட்பம், மிக எளிதானது. ஒரு காட்சியைப் படமாக்கி, அதன் ஃபில்மை எடுத்து, ட்ரேஸ் செய்து, அந்த ட்ரேஸின் மீது படமாக வரைவது. இதன்மூலம், துல்லியமான, தத்ரூபமான உருவங்களை வரைய இயலும். அப்படி வரைந்த படங்களும், கார்ட்டூனாக, கோமாளித்தனமாக இல்லாமல், நிஜத்தில் இருப்பதுபோலவே அமைந்தும்விடும் (அதேசமயத்தில், ரோடோஸ்கோபிங்கை உபயோகப்படுத்தி, கார்ட்டூன்களும் வரைய இயலும் என்பதனையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கே, கார்ட்டூன்கள் தேவையில்லை என்றது, இயக்குநர் ரால்ஃபின் எண்ணவோட்டத்தை வைத்து சொன்னது).

இந்த ரோடோஸ்கோபிங் தொழில்நுட்பம், முப்பதுகளில் இருந்து, இன்று வரை, ஹாலிவுட்டில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு உதாரணமாக, Forrest Gump படம் பார்த்திருப்பீர்கள். அதில், டாம் ஹேங்க்ஸ், பல்வேறு புகழ்பெற்ற மனிதர்களோடு கைகுலுக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அவையெல்லாம், ரோடோஸ்கோபிங் மூலமே சாத்தியப்பட்டன. A Scanner Darkly என்று ஒரு படம் – நமது Richard Linklater (Before Sunset, After Sunset புகழ்) இயக்கியது. கியானு ரீவ்ஸ் நடித்தது. இந்தப் படம், தத்ரூபமாக இந்த ரோடோஸ்கோபிங் தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தியிருக்கும். இவையெல்லாம் சில உதாரணங்கள்.

இந்தவிதமாக, ரோடோஸ்கோபிங்கை உபயோகப்படுத்தலாம் என்று முடிவுசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, படப்பிடிப்பு ஆரம்பமானது. படப்பிடிப்பு வழக்கப்படி நடந்தாலும், ரோடோஸ்கோபிங்கை உபயோகப்படுத்தத் துவங்கியபோது, ஒரு புதுவித சிக்கலை எதிர்கொண்டார் ரால்ஃப். அதாவது, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதையில், பல்வேறு கதாபாத்திரங்கள் வருகின்றன. ஒரு குறிப்பிட்ட ஷாட்டை எடுத்துக்கொண்டால் கூட, ஒன்று அல்லது இரண்டு கதாபாத்திரங்கள் இடம்பெறுவது, எப்போதாவது மட்டுமே நடக்கும் விஷயம். கதையின் பெரும்பகுதியில், குறைந்தபட்சம் நான்கு கதாபாத்திரங்களாவது ஒரு ஷாட்டில் இடம்பெறுவதே வாடிக்கை. ஆகையால், இப்படத்தின் சில காட்சிகளை – குறிப்பாக போர்க்களக் காட்சிகள் – ரோடோஸ்கோபிங் செய்வது, மிகக் கடினமான பணியாக இருந்தது. திரைச்சுருளின் ஒவ்வொரு ஃபிரேமும் – மைன்ட் யூ – ஒவ்வொரு தனித்தனி ஃபிரேமும் – பிரின்ட் அவுட் எடுக்கப்பட்டு, ஆனிமேஷன் தயார் செய்யப்பட்டது. அதாவது, ஒவ்வொரு ஃபிரேமும் பிரதியெடுக்கப்பட்டு, அதன்மேல் ஆனிமேஷன் வரையப்பட்டது. போர்க்களக் காட்சிகள் மற்றும் பல கதாபாத்திரங்கள் இடம்பெறும் காட்சிகள் ஆகியவை மட்டும், ரோடோஸ்கோபிங்கால் முடியாது என்பதால், ‘போஸ்டரைஸ்’ என்ற உத்தியின் மூலம் வரையப்பட்டன. அதாவது, ஷாட்டின் ஒரு குறிப்பிட்ட மூலையை எடுத்துக்கொண்டு, அங்கே இருக்கும் வண்ணங்கள் மற்றும் பிற விஷயங்களை, ஷாட்டின் இன்னொரு மூலையில் காப்பி செய்வது. அப்படிச் செய்கையிலேயே, இந்த வண்ணக்கலவைகளில் சிறிதான மாற்றத்தையும் செய்துவிட்டால், அந்த ஷாட், வண்ணங்களிலும் சரி, இடம்பெற்றுள்ள விஷயங்களிலும் சரி, ஒரிஜினலை விட, இன்னும் கொஞ்சம் ரிச்சாக அமைந்துவிடும். கிட்டத்தட்ட ஸர்ரியலிஸ ஓவியத்தின் எஃபக்ட் கிடைக்கும். ஆக, ரோடோஸ்கோபிங் மற்றும் போஸ்டரைஸ் ஆகிய இரண்டு உத்திகளைப் பயன்படுத்தி, இப்படத்தின் அனிமேஷன் வேலையை முடிக்க ஆன காலம் – இரண்டு வருடங்கள் !

ஒரு வழியாகப் படப்பிடிப்பும், அனிமேஷனும் முடிந்து, இசைக்கோர்ப்பும் பூர்த்தி செய்யப்பட்டது. படம் வெளியாகும் வேளையில், படத்தின் பெயரான ‘ Lord of the Rings: Part 1’ என்னும் பெயரில், பார்ட் ஒன் என்பதை நீக்க யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. முதல் பாகத்தை மட்டும் பார்க்கப் பலரும் வரமாட்டார்கள் என்பது அவர்களின் எண்ணம் (அக்காலத்தில், LOTR மகிமை அவர்களுக்குத் தெரியவில்லை). இதைக்கேட்ட ரால்ஃப், திகைத்தார். ஏனெனில், இப்படம், முதலிரண்டு புத்தகங்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்டிருந்தது. எனவே, கடைசிப் புத்தகத்தை, அடுத்த பாகமாக எடுக்க வேண்டும் என்பது ரால்ஃபின் எண்ணம். அப்படிக் கடைசி பாகம் வெளிவரவில்லையெனில், இது, முடிவற்ற படமாக மாறிவிடும். பார்ட் ஒன் என்பதைப் படத்தின் பெயரில் இருந்து நீக்கிவிட்டால், இது, மொத்தக் கதையும் அடங்கிய படம் என்ற கருத்து ஏற்பட்டு, அது, படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் விளைவிக்கும் என்று யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்திடம் பலமுறை சொல்லி மன்றாடிய ரால்ஃபுக்குக் கிடைத்தது, தோல்வி மட்டுமே. இறுதியில், இப்படம், ‘Lord of the Rings’ என்ற பெயரிலேயே வெளியிடப்பட்டது.

1978 ல் வெளியிடப்பட்ட இந்தப் படம், வெற்றிகரமாகவே ஓடியது. படத்தின் பட்ஜெட், நான்கு மில்லியன். படம் வசூலித்ததோ, முப்பது மில்லியன்கள். இருப்பினும், இரண்டாம் பாகம், வரவே இல்லை.

பழைய Lord of the Rings (1978) படத்தின் trailer இங்கே காணலாம்.

இந்தப் படத்தை, அச்சமயத்தில் பார்த்தவர்களில், ஒரு பதினேழு வயது இளைஞனும் அடங்குவான். இந்த வயதிலேயே, மிகச்சிறிய படங்கள் சிலவற்றை, தனக்குப் பரிசாகக் கிடைத்திருந்த ஒரு சிறிய Super 8 காமெராவினால் அவன் எடுத்துமுடித்திருந்தான். அதுவரை லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பற்றி அவன் கேள்விப்பட்டதேயில்லை. இந்தப் படத்தைப் பார்த்து, அதிசயமுற்று, அதன்பின் மூன்று புத்தகங்களையும் படித்து முடித்த அந்த இளைஞனின் பெயர் ………

தொடரும் . . . . . . .

  Comments

72 Comments

  1. நல்ல ஆரம்பம் தல,அந்த rotoscope மட்டும் கொஞ்சம் குழப்பியமாதிரி தெரிகிறது……

    Reply
  2. அதாவது எனக்கு குழப்பியமாதிரி தெரிகின்றது,தவறாக எடுத்துக்கொள வேண்டாம்

    Reply
  3. உங்கள் சைட் load ஆக பயங்கர டைம் ஆகுது

    Reply
  4. தல அந்த இளைஞன் பெயர்.. peter jackson… ஐயோ என்னால ஆர்வத்த அடக்கவே முடில.. அடுத்த பதிவு.. எப்போ எப்போ…

    Reply
  5. // உங்கள் சைட் load ஆக பயங்கர டைம் ஆகுது // எனக்கும்தான்….கோளாறு என்டனு பாத்தா…..நெறைய விட்ஜெட் இருக்கு…சிலத தூக்கா முடியாதா…

    Reply
  6. blogல விட்ஜெட்கள் இருக்கும்…இங்க விட்ஜெட்கள்குள்ள ப்ளாக் இருக்கு…..

    விட்ஜெட்–அவுங்கவுங்க விருப்பம்…பட்…உண்மையாகவே 3gல லோட் ஆகவே லேட் ஆகுது…இன்னும் சிக்குனு டிசைன் பண்ணா நல்லாயிருக்கும்…

    //அதாவது எனக்கு குழப்பியமாதிரி தெரிகின்றது,தவறாக எடுத்துக்கொள வேண்டாம்//

    Why this much fear????

    Reply
  7. அபாரமான எழுத்து நடை….உங்க பதிவுகளை படிச்ச பிறகுதான் சில படங்களை பார்ப்பதா இல்லையானு முடிவு செய்வேன்…இந்த படம் ரீலிஸ் ஆயிருச்சா..

    தல….அப்புடியே…அயதுல்ல கோமானியும் பத்து நாள் குளிக்காத பேமானியும் படத்தையும் பாத்திருங்க…..

    Good review :))

    பீட்டர் ஜாக்சனின் Lovely bones இத விட சிறப்பா இருந்ததா எனக்கு தோணுது….

    வாழ்த்துக்கள் ராஜேஷ்…மீண்டும் ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்….

    downloading…..

    சிறப்பான பதிவு….உங்கள் பதிவுகளை கீழே பதியுங்கள்…..

    Reply
  8. அந்த trailer ரை பார்க்கும் போது அது அனிமேஷன் படமாகவே தெரிகின்றது,real charactes வரவில்லை என்றால் அது அனிமேஷன் படமாகவே எடுத்துக்கொள்ளப் படும்,rotoscope என்பது அதில் ஒரு முறையாக வேண்டுமானால் இருக்கலாம்,ஆனால் அது அனிமேஷன் படமாகவே கருதப்படும்,நீங்கள் சொல்லுவது போல அந்த rotoscope தான் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்கி கொண்டுள்ளது,இந்தியா வில் மட்டும் அல்ல உலகமெங்கும்,3d fusion கேமரா வில் எடுக்க தவறியவர்கள்,வசதி இல்லாதவர்கள் தங்கள் படங்களை 3d யாக மாற்ற rotoscope தான் பயன்படுத்தப் படுகின்றது,avatar ,resident evil (கடைசியாக வந்த பாகம் )தவிர அனைத்து 3d படங்களும் rotoscope செய்து 3d யாக மாற்றப்பட்டவையே ,கடைசியாக வெளியான pirate of the caribbean கூட அப்படிதான் மாற்றப்பட்டது,இதனால் தான் avatar பார்க்கும் போது இருந்த 3d depth இந்த படங்களில் வருவது கிடையாது,ஒரு மாதிரியாக டல்லாக இருக்கும்,இந்த முறைக்கு streo scopping என்று பெயர்,ரொம்ப புரியறமாதிரி rotoscope பை சொல்லனும்னா Photoshop pen tool தான் ,நீங்கள் கூட உங்களை அறியாமல் செய்து இருப்பீர்கள்,உங்கள் படத்தை கட் செய்து வேறு ஒருவருடன் இணைத்து இருப்பீர்கள்,அந்த கட் சையும் முறைதான் rotoscope

    Reply
  9. நன்றி தல.. அந்த மிடில் எர்த் பற்றியும், அதற்காக டால்கின் படைத்த மொழியை பற்றியும் அடுத்து வரும் பதிவுகளில் நிறைய எதிர் பார்கிறேன்…

    Reply
  10. நான் இதுவரை rotoscope என்றால் இவைகள் தான் என்று நினைத்து இருந்தேன்,நீங்கள் சொன்னதுபோல் //ஒரு காட்சியைப் படமாக்கி, அதன் ஃபில்மை எடுத்து, ட்ரேஸ் செய்து, அந்த ட்ரேஸின் மீது படமாக வரைவது. இதன்மூலம், துல்லியமான, தத்ரூபமான உருவங்களை வரைய இயலும். அப்படி வரைந்த படங்களும், கார்ட்டூனாக, கோமாளித்தனமாக இல்லாமல், நிஜத்தில் இருப்பதுபோலவே அமைந்தும்விடும்//

    இப்பொழுதுதான் அறிகின்றேன்,அதுதான் குழப்பத்துக்கு காரணம்

    Reply
  11. ஆனால் திரும்பவும் ஒரு முறை படித்து புரிந்து கொண்டேன், மிக்க நன்றி,

    Reply
  12. ///டோல்கீனின் நெருங்கிய நண்பரின் பெயர், சி.ஜே. லூயிஸ். எங்கேயோ கேட்டது போல இருக்கிறதா? Chronicles of Narnia எழுதியவர்///

    Great mind thinks alike… இது தானா.. interesting தல…

    /// உலகமக்கள் பெரும்பாலானோருக்குப் பிடித்த படங்கள் என்று ஒரு பட்டியல் இட்டால், அதில் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்கள் கட்டாயம் இடம்பெறும். என்னைப்பொறுத்தவரையில், இந்த ஸீரீஸ் பிடிக்காத ஒரு திரைப்பட ரசிகரை இன்னும் நான் சந்தித்திருக்கவில்லை.////

    சத்தியமான வார்த்தை…. Lord of the rings, An epic of all..

    கண்டிப்பா இந்த தொடர் பட்டய கிளப்ப போகுது… தேளு at his best….

    Reply
  13. இத இத இதத் தான எதிர்பார்த்தேன். படு சுவராசியமாக செல்கிறது…

    super 8 என்ற படம் நம்ம lost and star trek புகழ் J. J. Abrams இயக்க ஹாலிவுட் விட்டாலச்சார்யா Steven Spielberg தயாரிக்க வெளிவருகிறதே….

    Reply
  14. LOTR எனக்கு மிக பிடித்த படம்,அதுவும் அந்த கடைசி பாகத்தில் இறுதி காட்சியில் நமக்கு திகட்ட திகட்ட graphics -ல் புகுந்து விளையாடி இருப்பார்கள்,நான் animation filed-ல் வர இந்தப் படம் ஒரு முக்கிய காரணம்,பீட்டர் ஜாக்சன் இந்த படத்தை எடுக்க ஆரம்பிக்கும் போது முடியவே முடியாது என்றவர்களை,தன் திறமையீன் மூலம் வாயடைக்க வைத்தார்,இந்த படத்திற்கு CG பண்ணமுடியாது என்று அநேக studio கள் கைவிரித்த நிலையில்,தானே ஆரம்பித்ததுதான் weta digital ,தற்போது உலகின் முன்னணி ஸ்டுடியோக்களில் அதுவும் ஓன்று, james cameron அவதார் ஸ்கிரிப்ட் வைத்துகொண்டு பண்ண முடியுமா என்று யோசித்துக்கொண்டு இருந்த போது அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் வழிவந்த படம் தான் LOTR

    Reply
  15. //டெனிம் said: May 25, 2011 11:31 PM
    நல்ல ஆரம்பம் தல,அந்த rotoscope மட்டும் கொஞ்சம் குழப்பியமாதிரி தெரிகிறது……//

    //டெனிம் said: May 25, 2011 11:56 PM
    ரொம்ப புரியறமாதிரி rotoscope பை சொல்லனும்னா Photoshop pen tool தான் ,நீங்கள் கூட உங்களை அறியாமல் செய்து இருப்பீர்கள்,உங்கள் படத்தை கட் செய்து வேறு ஒருவருடன் இணைத்து இருப்பீர்கள்,அந்த கட் சையும் முறைதான் rotoscope//

    கேள்வியும் கேட்டு பதிலும் நீங்களே கொடுக்குறிங்க இந்த ப்ளாக்க்கு வர எல்லா பசங்களும் அறிவாளியா இருக்காங்கபா!!!.

    Reply
  16. பாலாவுக்கு பிக்ஸார் ஸ்டோரி மாதிரி உங்களுக்கு இது அமையட்டும்….,

    Reply
  17. கொடுமைஸ் ஆப் இந்தியா. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படத்தின் பதிவில் பொன்னர் சங்கர் படம் பற்றி எழுதாமல் விட்ட கருந்தேளை கண்டித்து நான் இங்கிருந்து வெளிநடப்பு செய்கிறேன்.

    கிங் விஸ்வா
    வேதாளரின் (முகமூடி வீரர் மாயாவியின்) புத்தம் புதிய காமிக்ஸ் கதைகள் – யூரோ புக்ஸ்

    தமிழ் சினிமா உலகம் – மைதானம் சினிமா விமர்சனம்

    Reply
  18. அடடே.. ரொம்ப நல்லாயிருக்கே.. இந்த சீரிஸ்ல இன்னும் 6,7 பதிவாவது போடுங்க தல!

    Reply
  19. முதல்ல உங்க சைட் இப்ப கூட லோட் ஆக லேட் ஆகுது….நைட்டும் கமெண்ட் போட முடியல….சரி…..ஆபீஸ்ல டக்குனு ஓபன் ஆகும்னு பாத்தா அப்பவும் கொஞ்சம் லேட் ஆகுது….எதாச்சு பண்ணுங்க…..

    Reply
  20. இந்த தொடர் கண்டிப்பா ஏதாவது பத்திரிக்கைகள் வெளியிடலாம்…….அந்தளவிற்கு gripping ஆக இருக்கு….சுவாரசியமான விஷயத்தை இன்னும் சுவாரசியாம எழுதுறது ரொம்பவே கஷ்டம்….அத நீங்க ரொம்ப சுளுவா செஞ்ச மாதிரி இருக்கு…..

    Rotoscopeகிற பேர கேள்விப்பட்டிருந்தாலும் இவ்வளவு டீடைல்ஸ் இப்பதான் தெரியுது…

    புலி பதுங்குவது பாய்வதற்கே – கமுக்கமா சத்தமே இல்லாம இப்புடி ஒரு தொடர எழுதிகிட்டியிருக்கீங்க…….போறபோக்குல இதெல்லாத்தையும் எழுத முடியாது…குறைந்தபட்சம் இந்த மாதிரி பதிவுகளுக்காவது யாரும் டெம்ப்ளேட்த்தனமான கமெண்ட் போடாம இருக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன்…..

    Reply
  21. //குறைந்தபட்சம் இந்த மாதிரி பதிவுகளுக்காவது யாரும் டெம்ப்ளேட்த்தனமான கமெண்ட் போடாம இருக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன்…..//

    எங்க இப்பவே நிறைய வந்துடுச்சே

    Reply
  22. இந்த படத்த முதல்ல மதுரை மாப்ளை விநாயகர் தியேட்டர்ல பாத்தது….படம் ஆரம்பிச்சு கியா முயா பேசிகிட்டே இருப்பாங்கள்ள…..நம்ம மதுரகாரய்ங்கள் பத்திதான் தெரியுமே…..ஒரே கூச்சல் – லந்து….ஆனா கொஞ்ச நேரங்கழிச்சு சத்தம் குறைய ஆரம்பிச்சிருச்சு….எல்லாரும் என்னமோ வேற ஒரு உலகத்தையே பார்க்குற மாதிரி ஒன்றி போய்ட்டாங்க….நாலாம் அப்புடியே மிதந்துகிட்டிருந்தேன்…..என்னமாறி எடுத்திருக்காங்க…எனக்கு அந்த அனுபவம் மறக்கவே இல்ல….

    Reply
  23. தமிழ்ல இந்த மாதிரி ஃபேண்டசி கதைய படமா எடுக்கலாம்ன்னா நீங்க எதை சொல்லுவீங்க…???

    இது ரெண்டு மூணு வருசங்களுக்கு முன்னாடி எப்பவோ படிச்சது….ப்ரிட்டைன்ல 40-50களில் பெரிய அளவில் புலம் பெயர்தல் இருத்து..வேற நாட்டு மக்கள் நெறய அங்கு குடியேற ஆரம்பிச்சாங்க…அதுவும் கூட சேர்ந்து டோல்கினின் எழுத்துகளில் ஒரு அடிநாதமா ரேசிசமும் இருக்குன்னு அதுல படிச்சேன்…..நா இன்னும் இந்த நாவலை தொட்டது கூட இல்லை.நீங்க கண்டிப்பா படிச்சிருப்பீங்க….உங்களுக்கு அந்த மாதிரி எதுவும் தெரிஞ்சுதா……

    Reply
  24. // கேள்வியும் கேட்டு பதிலும் நீங்களே கொடுக்குறிங்க இந்த ப்ளாக்க்கு வர எல்லா பசங்களும் அறிவாளியா இருக்காங்கபா //

    என்னங்க..நீங்க…..டெனிம் மோகன் ஒரு Special effects வல்லுநர்…எந்திரன்,ஈரம் மாதிரி படங்கள் எல்லாம் அவர் வேலைதான்…..டிவில நீங்க பார்க்குற பல விளம்பரங்களில் வரும் Special effects அவர் வேலைதான்…..யாருக்காவது அனிமேசன் சம்பந்தமா ஏதாவது சந்தேகம் இருந்தா அவரை அணுகவும்….(எந்திரன் நேஷனல் அவார்ட் வாங்கியதில அவருக்கும் பங்கிருக்கு…)

    Reply
  25. v.vinoth
    இந்த படம் திரைப்பட வரலாற்றிலேயே ஒரு மைல்கல்.அற்புதமான கதை மற்றும் தரமான கணிணி வரைகலை இந்த படத்தின் சிறப்பு.இந்த படத்தை உங்கள் நடையில் எழுதுவது இன்னும் சிறப்பு.முடிந்தவரை அதிக காலம் எடுக்காமல் வேகமாக அத்தனை பதிவுகளையும் போட்டால் நன்றாக இருக்கும்.
    அப்புறம் நம்ம ஹாலிவுட் பாலா என்ன பண்றார்?எப்ப பதிவுலகம் பக்கம் வருவார்?

    Reply
  26. //என்னங்க..நீங்க…..டெனிம் மோகன் ஒரு Special effects வல்லுநர்…எந்திரன்,ஈரம் மாதிரி படங்கள் எல்லாம் அவர் வேலைதான்…..டிவில நீங்க பார்க்குற பல விளம்பரங்களில் வரும் Special effects அவர் வேலைதான்…..யாருக்காவது அனிமேசன் சம்பந்தமா ஏதாவது சந்தேகம் இருந்தா அவரை அணுகவும்….(எந்திரன் நேஷனல் அவார்ட் வாங்கியதில அவருக்கும் பங்கிருக்கு…)//

    நேத்து நீங்க சொன்னதுதான் பூக்கடைக்கு எதுக்கு விளம்பரம்

    Reply
  27. //எந்திரன் நேஷனல் அவார்ட் வாங்கியதில அவருக்கும் பங்கிருக்கு…)//

    இதுல ஏதோ உள்குத்து இருக்கிறமாதிரி தெரியுதே

    Reply
  28. தயவுசெஞ்சு இந்த “தல” என்ற வார்த்தையை யாராவது தடை செய்யக்கூடாதா….

    தமிழ்ல என்ன வார்த்தைக்கா பஞ்சம்….ஏற்கனவே சொந்தமா sms கூட அடிக்காம வந்ததையே forward பண்ணி பழகிட்டோம்….இதுல FB,twitter,blog,orkut எங்க பாத்தாலும் நன்றி தல – வாழ்த்துக்கள் தல – சூப்பர் தல – பின்னுங்க தல. அடப்போங்கய்யா….

    Reply
  29. // இதுல ஏதோ உள்குத்து இருக்கிறமாதிரி தெரியுதே//
    ஒரு குத்தும் இல்ல……கொஞ்சமா அதுல ஈடுபட்டிருந்தாலும்,வேல பாத்தீங்களா இல்லையா….

    Reply
  30. யோவ் இப்படியே போனா இப்படி கொஞ்சம் கொஞ்சமா எல்லா வார்த்தைகளையும் தடைபண்ணி இன்னும் கொஞ்ச நாள்ல யாராவது கமெண்ட் போடாம இருங்களே (இல்லைனா ) யாராவது கமெண்ட் போடுங்களே அப்படிங்கற நிலைமை ஆகிடும்

    Reply
  31. @டெனிம் மோகன் – ஆக்சுவலா, ரோடோஸ்கோபிங் பத்தி நான் இன்ஃபோ கேதர் பண்ணும்போது, அது, ஃபில்ம் ஃப்ரேமை ஒரு அனிமேஷன் ஃப்ரேம்ல வெச்சி, ட்ரேஸ் பண்ணி, அதன்மேல் வரையப்படுவதுன்னு தான் போட்ருந்தது. அதாவது, இது, முப்பது வருஷங்களுக்கு முந்தி. அதுக்கப்புறம், அந்த முறை ரொம்பவே அட்வான்ஸ்ட் ஆயிடுச்சி. எனிவே, இப்ப டவுட்டுகள் க்ளியர் ஆனதுனால, இனி இந்த அனிமேஷன் டெக்னிக்ஸ் பத்தி எழுதும்போது, இன்னும் க்ளியரா எழுதிர்ரேன் 🙂

    @ கொழந்த- ஆல்ரெடி ரெண்டு விட்ஜட்டைத் தூக்கிட்டேன். எனக்கு ஃபாஸ்டாத்தான் லோட் ஆகுது. இப்ப செக் பண்ணிப் பாருங்க. தமிழ்மணம் தான் கொஞ்சம் டிலே பண்ணுதுன்னு நினைக்கிறேன். செக் பண்ணிட்டு சொல்லுங்க.

    டோல்கீனின் எழுத்துகள்ல ரேசிசம் இருக்குன்னு நான் ஒத்துக்குறேன். ஏன்னா, இதை எழுதுவத்ற்காக கொஞ்சம் ரிஸர்ச் பண்ணும்போது, இந்த விஷயம் பரவலா இருந்தது. அவரு போன நூற்றாண்டு ஆளு. கன்ஸர்வேடிவ். தவிர, ஆங்கிலேயர் வேற. அதான். புக், நான் படிக்கல. காதலர் படிச்சிட்டாரு. அவரை இங்கே அழைக்கிறேன் 🙂

    தமிழில் இதுபோன்ற ஃபேண்டஸி எடுக்கண்ணும்னா, ஒரே சாய்ஸ் – மஹாபாரதம். அதுல, லார்ட் ஆஃப் த ரிங்ஸை தூக்கி சாப்புடுற அளவு சங்கதிகள் இருக்கு. ஆனா அது இங்கே குறைந்தபட்சம் 20 வருடங்களுக்குச் சாத்தியமாகாது. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் மாதிரி இன்னும் தமிழ்ல யாரும் எழுதல. பொன்னியின் செல்வன் – ஃபாண்டஸியா எடுக்க முடியாது. அது வேற. சிவகாமியின் சபதம் – மூன்றாவது பாக ஆரம்பத்தில் வரும் காஞ்சி முற்றுகை எபிஸோட் மட்டும் பிரம்மாண்டமா இருக்கும். மத்தபடி, தமிழில் எதுவும் லேது.

    //இந்த தொடர் கண்டிப்பா ஏதாவது பத்திரிக்கைகள் வெளியிடலாம்…….அந்தளவிற்கு gripping ஆக இருக்கு….சுவாரசியமான விஷயத்தை இன்னும் சுவாரசியாம எழுதுறது ரொம்பவே கஷ்டம்….அத நீங்க ரொம்ப சுளுவா செஞ்ச மாதிரி இருக்கு…..//

    கண்டமேனிக்கி ஓட்டிடீங்க.. ந்யூயார்க் டைம்ஸுக்கு எழுதலாம்னு இருக்கிறேன் 🙂 .. வெளியிடச்சொல்லி 🙂

    @ முரளி – கட்டாயம் என்னால் ஆன மட்டும் தெளிவா எழுத முயல்கிறேன். மொக்கைய போட்டா சொலுங்க. திருத்திடலாம்.

    @ லக்கி – Super 8 பத்தி நானும் படிச்சேன். அந்தப் படத்தோட தீமும், சூப்பர் 8 கேமரால ஒரு படம் எடுக்கும்போது நடக்கும் சங்கதிகள் தான். மீ வெயிட்டிங் 🙂

    @ Anand, சுப. தமிழினியன் – மிக்க நன்றி. தொடர்ல வீக் பாயிண்ட் எதாவது இருந்தாலும் சொல்லுங்க. திருத்திடலாம்.

    @ விஸ்வா- பொன்னர் சங்கர் பத்தி சொல்லாமயா? ரிடர்ன் ஆஃப் த கிங் படத்தை விட பொன்னர் சங்கர் எந்த விதத்தில் உயர்வாக உள்ளதுனு ஒரு கட்டுரை ஆல்ரெடி ரெடி. தகுந்த நேரத்தில் பதிவிடுவேன் 🙂

    Reply
  32. //கொஞ்சமா அதுல ஈடுபட்டிருந்தாலும்,வேல பாத்தீங்களா இல்லையா….//

    அதுவும் கருந்தேளுவின் கோட்டைகுள்ளே வந்து இப்படி ஒரு கேள்விய கேட்டா நா என்ன சொல்ல

    Reply
  33. ம்ம..இப்ப கொஞ்சம் வேகமா லோட் ஆகுது……..

    //அதுவும் கருந்தேளுவின் கோட்டைகுள்ளே வந்து இப்படி ஒரு கேள்விய கேட்டா நா என்ன சொல்ல//

    பதில சொல்லுங்க……உண்மையா இல்லையா……

    Reply
  34. //ஆக்சுவலா, ரோடோஸ்கோபிங் பத்தி நான் இன்ஃபோ கேதர் பண்ணும்போது, அது, ஃபில்ம் ஃப்ரேமை ஒரு அனிமேஷன் ஃப்ரேம்ல வெச்சி, ட்ரேஸ் பண்ணி, அதன்மேல் வரையப்படுவதுன்னு தான் போட்ருந்தது. அதாவது, இது, முப்பது வருஷங்களுக்கு முந்தி. அதுக்கப்புறம், அந்த முறை ரொம்பவே அட்வான்ஸ்ட் ஆயிடுச்சி. எனிவே, இப்ப டவுட்டுகள் க்ளியர் ஆனதுனால, இனி இந்த அனிமேஷன் டெக்னிக்ஸ் பத்தி எழுதும்போது, இன்னும் க்ளியரா எழுதிர்ரேன் 🙂 //

    கண்டிப்பாக,கொஞ்சம் டெக்னிக்கலா புகுந்து விளையாடுங்க,ஏன் என்றால் இந்தப் படம் வந்த பிறகுதான் CG ஒரு புதிய பரிணாமத்திற்கு வந்தது,

    Reply
  35. @v.vinoth – கட்டாயம் வேகமா பதிவுகள் போட முயல்கிறேன். கவலைப்படாதீங்க. இதை ஒரு கை பார்த்துரலாம் 🙂 ..ஹாலிவுட் பாலா, வொர்க் லோட் ஜாஸ்தியா இருக்குறதுனால, கொஞ்சம் பிஸி. இருந்தாலும், சீக்கிரமே, சனிப்பொணம்னு ஒரு கமெண்டை கவனிங்க 🙂 .. அது அவருதான் 🙂

    @ கொழந்த – //யோவ் இப்படியே போனா இப்படி கொஞ்சம் கொஞ்சமா எல்லா வார்த்தைகளையும் தடைபண்ணி இன்னும் கொஞ்ச நாள்ல யாராவது கமெண்ட் போடாம இருங்களே (இல்லைனா ) யாராவது கமெண்ட் போடுங்களே அப்படிங்கற நிலைமை ஆகிடும்//

    எனக்கும் இப்புடித்தான் தோணிச்சி 🙂 .. புள்ளி. ஸ்பேஸ், கமா இதெல்லாம்தான் இனி கமெண்டா போடமுடியுமோ? 🙂 காமெடியாத்தான் இருக்கும் 🙂

    Reply
  36. // கண்டமேனிக்கி ஓட்டிடீங்க.. ந்யூயார்க் டைம்ஸுக்கு எழுதலாம்னு இருக்கிறேன் 🙂 .. வெளியிடச்சொல்லி//

    உண்மைய சொன்னா ஓட்றதா. …….அப்ப இனி டெம்ப்ளேட் கமெண்ட்கள் தான்…..

    Reply
  37. ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வுட்டுப்போச்சு…..LOTR படங்களின் வெறியர் முரளி கிருஷ்ணன் ப்ளாக் எழுதுறதா இருக்கார்..ஆனா முதல்ல ஒரு தமிழ் புத்தகத்த பத்தி எழுதணும் என்பதற்காக விஷ்ணுபுரத்த வாங்கி வெச்சுகிட்டு விழுந்து விழுந்து படிச்சுகிட்டிருகேன்ன்னு அவரே சொன்னார்…உங்களத்தான் ஆஹா..ஓஹோ..புகழ்ந்தார் (நேத்து வான்டட போன்ல பேசி என்ட மாட்டிகிட்டார்). அதுனால தமிழ் நாவல்களில் உச்சமான விஷ்ணுபுரம் குறித்த தொடரை வெகு விரைவில் மக்கள் எதிர்பாருங்கள்….கருந்தேளுக்கு ஒரு நல்ல போட்டியாளர் கிடைத்துவிட்டார்..

    Reply
  38. @ முரளி – யூ டூ ப்ரூட்டஸ் ;-( . . அவரு மட்டும் அதை எழுதுனா, பக்கத்து சீட்டு பிஹாரி உயிரைப் பலிகுடுத்தாவது தடுப்பேன்

    Reply
  39. கொழந்த இப்படி கமெண்ட் போடலாமா

    Reply
  40. இனி யார் கமெண்ட் போடுவதாக இருந்தாலும் தணிக்கை அதிகாரி கொளந்தை இடம் அனுமதி வாங்கியபிறகு போடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றது

    Reply
  41. இது தேளு பதிவிற்கு புதியதாக இல்லை என்றாலும் எனக்கு புதியது ,50 தாவது கமெண்ட் போடுவதன் மூலம் பெருமை அடைகின்றேன்

    Reply
  42. டெனிம். வாழ்க உமது தொண்டு. இன்றிலிருந்து, நீர் ‘கமெண்ட் கொண்டான்’ என்று அழைக்கப்படுவீர். இது எமது ஆணை.

    Reply
  43. //யோவ் இப்படியே போனா இப்படி கொஞ்சம் கொஞ்சமா எல்லா வார்த்தைகளையும் தடைபண்ணி இன்னும் கொஞ்ச நாள்ல யாராவது கமெண்ட் போடாம இருங்களே (இல்லைனா ) யாராவது கமெண்ட் போடுங்களே அப்படிங்கற நிலைமை ஆகிடும்//

    எனக்கும் இப்புடித்தான் தோணிச்சி 🙂 .. புள்ளி. ஸ்பேஸ், கமா இதெல்லாம்தான் இனி கமெண்டா போடமுடியுமோ? 🙂 காமெடியாத்தான் இருக்கும் :-)///

    இப்பவே எல்லாரும் பயந்து பயந்து வந்துட்டு போறதா ஒரு பேச்சு அடிபட்டதே

    Reply
  44. கொழந்த க்கும் ஏதாவது பட்டம் கொடுங்க அப்புறம் கோவிச்சுக்க போறாரு

    Reply
  45. ஆமால எதாவது யோசிச்சு எழுதிகிட்டு இருக்கும் ? எனக்கு கை நடுங்குது ….. நா வர்ர்ரர்ர்ர் ரே ரர்ர்ர்ரர்ர்ர்ர் ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    Reply
  46. நண்பரே,

    பல தகவல்களை சேகரித்து பிரபலமான படைப்பு குறித்து ஆர்வமாக படிக்ககூடிய ஒரு தொடரை ஆரம்பித்திருக்கிறீர்கள். நான் ஹாபிட்டை படித்திருக்கிறேன் லாஆரி யை இன்னமும் படிக்கவில்லை அது அடுத்த வருடம்தான். கொழந்தையின் அராஜக செயல்களை தடுக்க கண்டால்ஃப்தான் வரவேண்டும் 🙂 அந்த இளைஞனின் பெயர் பீட்டர் ஜாக்சனாக இருக்கக்கூடாது என்பதுதான் என் ஆசை :))

    Reply
  47. அந்த இளைஞன் ஸ்பீல்பெர்க் தானே…..ஏன் என்றால் அவர்தான் சிறு வயதில் தனக்கு பரிசாக கிடைத்த கேமரா வை வைத்துக்கொண்டு,தனது தங்கைகள் துணையுடன் சிறி சிறு படங்கள் எடுத்ததாக கேள்வி பட்டு இருக்கின்றேன்,பீட்டர் ஜாக்சன் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை

    Reply
  48. அந்த இளைஞன் பெயர் – கலைஞர்தானே…ஏன் என்றால் அவர்தான் சிறுவயதில் தன் மொழிப்புலமையால், தனது தம்பிகள் துணையுடன் கதைகள் எழுதியதாக கேள்விப்பட்டு இருக்கின்றேன்.பீட்டர் ஜாக்சன் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை….

    Reply
  49. திரு.மோகன் அவர்களே….

    கருந்தேள் பதிவுக்கென்று ஒரு தொன்ம வரலாறே உள்ளது. அதை உங்களது “எண்” போன்ற பின்னுட்டங்கள் மூலம் சிதைக்காதிருக்க வேண்டுகிறேன்…

    தொன்மங்கள் வரலாற்றுத்தகவல்கள் போல ஒற்றைநோக்கு கொண்ட உறைந்த தரவுகள் அல்ல. அவை விழுமியங்கள் கொண்டவை. அவ்விழுமியங்களை வளர்க்கும்பொருட்டு அந்த தொன்மம் காலப்போக்கில் வளர்த்தெடுக்கப்படும். இதுபோன்ற தொடர்கள் வழியாக பிற்காலத்தில் கருந்தேள் என்ற நாயகனின் சித்திரம் மேலும் மேலும் வளர்த்தெடுக்கப்படும்.அதற்கு நாம் எவ்விதத்திலும் ஊறு விளைவிக்கக்கூடாது..

    Reply
  50. இதை யாராவது தமிழ்ல மொழி பெயர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்

    Reply
  51. இப்படத்தின் மூன்று பாகங்களின் ஷூட்டிங்கும் ஒரே நேரத்தில் பீட்டர் ஜாக்சனால் தொடங்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். நிஜமா நண்பரே?

    Reply
  52. தல இதை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை,inside டை விட martyrs எனக்கு பிடித்து இருந்தது ,// முதல் பத்து நிமிஷத்துக்கு மேல என்னால ஓட்டாம பார்க்க முடியல///
    இதிலிருந்தே நீங்கள் படத்தினை பத்து நிமிடத்திற்கு மேல் பார்க்கவில்லை என்று தெரிகிறது,முதல் பத்து நிமிடம் பார்த்து விட்டு நானும் அப்படித்தான் நினைத்தேன்,ஆனால் போக போக படம் சுவாரியசமாக இருக்கும்,மர்ட்டிர்ஸ் பற்றி கொஞ்சம் நெட்டில் தகவல்களை தேடி பாருங்கள்,முடிந்தால் இந்த review படித்து பாருங்கள்,

    http://www.bloody-disgusting.com/review/2031

    drag me to hell பார்த்து பயந்த உங்களுக்கு இது எப்படி பிடிக்காமல் போனது என்று தெரியவில்லை,பிரெஞ்சு ஹாரர் என்று நெட்டில் அடித்து பாருங்க inside,martyrs,
    Irreversible,hightension இந்த நான்கு படங்கள் வந்து நிற்கும்,இதில் irreversible கண்டிப்பாக பார்த்து இருப்பீர்கள்,மற்ற மூன்றும் உண்மைலேயே மிரட்டலான படங்கள்,எல்லாருக்கும் ஒரே மாதிரியான ரசனைகள் இருக்கு வாய்ப்பு இல்லை தான் ஆனால் //இதுவரை வந்த மொக்கை ஹாரர் படத்துல சிறந்த மொக்கைன்னு வெச்சிக்கலாம் // இந்த வார்த்தையை மட்டும் நான் எந்த காலத்திலும் ஒத்துக்கொள்ள மாட்டேன்,அப்படி என்றால் நீங்கள் இந்தப் படத்தினை பார்க்கவில்லை என்றே நான் எடுத்துக்கொள்வேன்,தயவு செய்து martyrs பக்கத்துல கூட A Serbian Film ,drag me to hell போன்ற படங்கள் நிற்க முடியாது

    பதிவிற்கு சம்பந்தம் இல்லாத கமெண்ட் ,வேண்டும் என்றால் delete செய்து கொள்ளுங்கள்

    Reply
  53. martyrs பார்த்தவர்கள் யாராவது இருந்தால் இங்கே வந்து விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள்

    Reply
  54. ///ஆனா முதல்ல ஒரு தமிழ் புத்தகத்த பத்தி எழுதணும் என்பதற்காக விஷ்ணுபுரத்த வாங்கி வெச்சுகிட்டு விழுந்து விழுந்து படிச்சுகிட்டிருகேன்ன்னு அவரே சொன்னார்////

    யோவ் கொழந்தை… ஆனா உன்ன மட்டும் ஐ நா பொது செயலர் ஆக்குனாங்க, இந்த உலகத்துல மூணாம் உலக போர் வந்து மூணே நாள்ல முழுசா நாசமா போய்டும்…

    ///யூ டூ ப்ரூட்டஸ் ;-( . . அவரு மட்டும் அதை எழுதுனா, பக்கத்து சீட்டு பிஹாரி உயிரைப் பலிகுடுத்தாவது தடுப்பேன்///

    தேளு அவரு தான் சொல்றாருன்னா… நீங்களும்.. ஒரு முறை சாரு ப்ளாக் ல விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் பத்தி போட்டுருந்தார்… அதனால ஆன்லைன்ல PDF ல விஷ்ணுபுரம் முதல் பத்தி படிச்சது தான் தாமதம்… அப்ப படுத்தது, நாலு மணி நேரம் கழிச்சு எழுந்தேன்.. என்ன தூக்கம்…

    Reply
  55. Thala…. athu Peter Jackson….. Intha padam enga friends oda all time favourites.. oru 20 time pathirupom

    Reply
  56. கலக்கல் தல.. LOTR திரைப்படம் வந்த காலத்தில் வாழ்ந்தேன் என்பதையே பெருமையாக நினைக்கிற, என்னை மாதிரியான ரசிகர்களை மனதில் கொண்டு, மிகவும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்…

    இன்னொரு வேண்டுகோள்: தொடரை முடிந்த அளவு வேகமாக பதிவிடவும்.. அதிக நாட்கள் இடைவெளி விட்டுவிடாதீர்கள்.. அப்படியே அடுத்த வருடங்களில் வரப்போகிற ஹாபிட் வரைக்கும் தொடரை கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறேன்.. 🙂

    சமீபத்தில் லாண்ட்மார்க்கில் LOTR Extended Trilogy Box Set பார்த்தேன்.. விலை ரூ.2000..

    Reply
  57. டெனிம் – ப்ரீயா உடுங்க 🙂 . .ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்கி 🙂 . . நான் முழுப்படத்தையும் பார்த்தேன். பட் ஸ்டில், I felt it’s too dragging and boring. anywayz, cheerz !!

    காதலரே – கொளந்தைய தடுக்க இன்னொரு கொழந்த தான் வரணும் 🙂 . .அது அந்தக் கொளந்தைக்கே பொறந்தா தான் உண்டு 🙂 . .அந்த இளைஞனோட பேரு பீட்டர் ஜாக்சனா இல்லையா என்பது இன்று முடிவு செய்யப்படும் 🙂 ஹீ ஹி

    முரளி கிருஷ்ணன் – 🙂 இதுக்காகவே நீங்க ஏன் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சி, கொழந்த மாதிரி ‘ஆதங்க்வாதி’களை எதிர்க்கக்கூடாது? 🙂

    gnans – அது பீட்டர் ஜாக்சன் இல்லை. டி ராஜேந்தர் 🙂 (அப்புடீன்னு சொன்னா, மாட்டை அடிப்பது போல என்னை அடிப்பீர்கள் என்று தெரிவதால், அது ஜாக்சன் என்றே வெச்சிக்கலாம்) . .:-) நன்றி

    MSK – கட்டாயம் இதை சீக்கிரம் போடுவேன். ஹாபிட்ஸ் பத்தி கண்டிப்பா எழுதறேன் தல. . .LOTR extended triology, பிக்ப்ளிக்ஸ்ல இருக்கானு தேடிப்பாக்குறேன். இருந்தால், சந்தோஷம். 🙂

    Reply
  58. //ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்கி இல்லையா? :-)//

    சரி anyway ப்ரீய விடுங்க

    Reply
  59. //சமீபத்தில் லாண்ட்மார்க்கில் LOTR Extended Trilogy Box Set பார்த்தேன்.. விலை ரூ.2000.//

    ரொம்ப கம்மிங்க. நான் வாங்கின காசுல நீங்க மூணு செட் வாங்கியிருக்க முடியும்.

    Reply
  60. //அதனால ஆன்லைன்ல PDF ல விஷ்ணுபுரம் முதல் பத்தி படிச்சது தான் தாமதம்… //

    தல சமீபமா எனக்கு தூக்கம் வராத வியாதி இருக்கு. லிங்க் தர முடியுமா..??

    Reply
  61. // ஹாலிவுட் பாலா எழுதவேண்டிய கட்டுரையை நான் எழுதுகிறேன். அவரளவு கட்டாயம் சுவாரஸ்யமாக இருக்காது.
    //

    வொய் திஸ் உள்குத்து??????

    Reply

Join the conversation