LOTR : The Series – 2 – A man named Peter Jackson
டி. ராஜேந்தர்.
சென்ற அத்தியாயத்தில், திரையரங்கில், தனது பதினேழாம் வயதில், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தைப் பார்த்த இளைஞனின் பெயர் ! (இப்படி இரண்டாம் அத்தியாயத்தை ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன். ஒகே folks.. ரிலாக்ஸ். இனி சீரியஸாகவே இரண்டாம் அத்தியாயத்தை ஆரம்பிப்போம் ).
பீட்டர் ஜாக்ஸன்.
பீட்டர் ஜாக்ஸனைப் பொறுத்தவரையில், அவரது பள்ளிப்பருவம், அவருக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு சிறிய super 8 காமெராவினால் படங்கள் எடுப்பதில் கழிந்தது. அவரது குடும்பத்தில், திரைத்துறையில் அனுபவம் பெற்ற நபர்கள் எவருமிலர். இருந்தாலும், சிறுவன் ஜாக்ஸனுக்கு எப்படியோ கேமராவின் மேல் ஒரு மோகம் வந்துவிட்டிருந்தது. இங்கிலாந்தில் இருந்து ந்யூஸிலாந்துக்குப் புலம் பெயர்ந்துவிட்டிருந்த பெற்றோர்களுக்குப் பிறந்திருந்த ஜாக்ஸன், சிறுவயதிலிருந்தே திரைப்படங்கள் மேல் மோகம் கொண்டிருந்ததாகவே அவரது வாழ்க்கைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பள்ளிப்பருவத்தில், ஜாக்ஸனுக்கு மிகப்பிடித்தமான படமாக, கிங்காங் இருந்தது. தனிடம் இருந்த சிறிய காமெராவில் அவ்வப்போது எதையாவது எடுப்பது, சிறுவன் ஜாக்ஸனின் பொழுதுபோக்கு. தனது பன்னிரண்டாவது வயதில், வீட்டின் தோட்டத்தில், நண்பர்களோடு சேர்ந்து குழிகள் அமைத்து, இரண்டாம் உலகப்போரின் எஃபக்ட்சைக் கொண்டுவந்து, அதனைத் திரைப்படமாக எடுப்பது, ஜாக்ஸனுக்குக் கைவந்த கலையாக இருந்தது. பில்ம் சுருளிலேயே சிறிய ஓட்டைகள் போட்டு, துப்பாக்கிக் குண்டுகளின் பாதிப்பை ஏற்படுத்தினான் சிறுவன் ஜாக்ஸன் என்று அவரது வாழ்க்கைக் குறிப்பு தெரிவிக்கிறது.
சிறுவனாக இருந்த ஜாக்ஸன், வளர்ந்தான் (சைக்கிள் பெடலைச் சுற்றாமலேயே)
The Evening Post என்பது, ந்யூஸிலாந்தின் தினசரி பத்திரிகை. இந்தப் பத்திரிகையில், ஜாக்ஸனுக்கு, புகைப்படத்துறையில் வேலை கிடைத்தது. வெளியே அலையாமல், அலுவலகத்திலிருந்துகொண்டே புகைப்படங்களை என்க்ரேவ் (அதாவது, இப்போதைய போட்டோஷாப் வேலை) செய்யும் வேலை. இந்த வேலையில் கிடைத்த சம்பளத்தை வைத்து, இன்னொரு சிறிய படத்தை எடுக்க ஆரம்பித்திருந்தார் ஜாக்ஸன். படத்தின் தீம்: ‘பூமிக்கு வந்த வானமண்டல மனிதர்கள்’ (விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் மன்னிக்கவும். இது, அவருடைய புத்தகத்தின் பெயர்). ஆனால், இப்படத்தை எடுக்க, அவருக்குத் தேவையாக இருந்தது ஒரு professional காமெரா. எனவே, Bolex 16MM கேமரா ஒன்றை வாங்கினார். வாங்கிய கையோடு, தனது நண்பர்களை அழைத்த ஜாக்ஸன், ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரம் அளிக்க, ‘Roast of the Day’ என்ற பெயரில், ஒரு பத்து நிமிடப் படம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. படத்தின் காட்சிகள், வார இறுதிகளில் எடுக்கப்பட்டன. படத்தின் மொத்த பட்ஜெட்டும், அவரது சம்பளத்தில் இருந்து ஒதுக்கப்பட்டது. இப்படம் ஆரம்பிக்கப்பட்ட வருடம் – 1983. ஜாக்ஸனின் இருபத்தி இரண்டாம் வயதில். மெல்ல மெல்லப் படம் வளரத் துவங்கிய நேரத்தில், ஜாக்ஸனுக்கு ஒரு ஐடியா உதித்தது. ‘பத்து நிமிடங்களாக இல்லாமல், ஒரு முழுநீளத் திரைப்படமாக இதை எடுத்தால் என்ன?’. ஆனால், பணத்துக்கு எங்கே செல்வது? இன்னொரு ஐடியா. New Zealand Film Commission (NZFC) என்ற ந்யூஸிலாந்தின் திரைப்பட வளர்ச்சிக் குழுமத்துக்கு ஒரு கடிதம் எழுதினார்.
இந்த இடத்தில் ஒரு வார்த்தை. நமது ஊரில் NFDC என்று ஒரு அமைப்பு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். யாராவது பீட்டர் ஜாக்ஸனைப்போல் வளரும் இயக்குநர், தான் எடுக்கும் முதல் படத்துக்காக NFDC க்கு ஒரு கடிதம் எழுதினால், அவர்களின் பதில் என்னவாக இருக்கும்? ஒருவேளை அவர்களது அனுமதி கிடைத்தே விடுகிறது என்றும் வைத்துக்கொள்வோம். அவர்களிடமிருந்து பணம் sanction செய்யப்பட்டு, நமக்குக் கிடைப்பதற்குள், சில வருடங்களே கடந்துவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த நிலை மாறி, NFDC கொஞ்சம் வேகம் பிடித்தால் நல்லது என்பது என் தனிப்பட்ட எண்ணம்.
Back to the article, ஜாக்ஸனின் கடிதத்தைப் படித்த ஜிம் பூத் (Jim Booth) என்ற NZFC யின் சேர்மன், ஜாக்ஸன் எடுத்துக்கொண்டிருக்கும் படத்தின்பால் கவரப்பட்டார். எனவே, பணத்துக்கு ஒப்புதலும் வழங்கினார். மற்ற போர்ட் மெம்பர்களின் எதிர்ப்பை அவர் பொருட்படுத்தவில்லை. ஜாக்ஸனிடம் ஏதோ ஒரு திறமை இருக்கிறது என்பதை ஜாக்ஸன் படமெடுக்குமுன்பே ஊகித்த பெருமை இவருக்கு உண்டு.
நான்கு வருடங்கள் ஓடின.
1987 ல், ‘Roast of the Day’ படம், முடிக்கப்பட்டது. படத்திற்கு, ‘Bad Taste’ என்று புதிய பெயர் சூட்டினார் ஜாக்ஸன். படத்தை கான் திரைப்பட விழாவில் திரையிட்டது NZDC. படத்திற்கு திரைப்பட ரசிகர்களின் எதிர்வினை? சொல்ல வேண்டுமா? ஏகோபித்த ஆதரவு! இதைத்தொடர்ந்து, பல நாடுகளிலும் இப்படம் விற்கப்பட, பிரமாதமான வெற்றி கிடைத்தது. இதன்பின்னர் நடந்த விஷயம்தான் கவனிக்கத்தக்கது. ஜிம் பூத், NZFC இலிருந்து விலகி, ஜாக்ஸனின் தயாரிப்பு அலுவலகத்தில், ஒரு தயாரிப்பாளராகப் பொறுப்பெடுத்துக்கொண்டார் .
‘Bad Taste’ படத்தின் trailer இங்கே.
இதன்பின்னர், ஜாக்ஸன், திரைப்பட உலகில் பிரபலமடைய ஆரம்பித்தார் (பிரபல பதிவர் போல, பிரபல இயக்குநர்). அடுத்த படமாக, மற்றொரு த்ரில்லர். அதில், zombie க்களை வைத்து ஒரு திரைக்கதை அமையவேண்டும் என்பது அவருடைய விருப்பம். ஆனால், வழக்கப்படி, கைவசம், பணம் இல்லை. இருக்கும் பணத்தை வைத்து, அவருடைய லட்சியப்படமான அந்த zombie படத்தை எடுக்க முடியாது. என்ன செய்யலாம்? ஐடியா! புதிதாக இன்னொரு படத்தை, கையில் இருக்கும் பணத்தை வைத்து எடுக்கலாம். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து, இந்த zombie படத்தை எடுக்கலாம். இப்படியாக, அவரது அடுத்த படமான ‘Meet the Feebles‘ எடுத்து முடிக்கப்பட்டது. வருடம் 1989 . பப்பெட் எனப்படும் பொம்மைகளை வைத்தும், பொம்மைகளைப் போன்ற உடைகளை உடுத்திய நடிகர்களை வைத்தும் எடுக்கப்பட்ட இப்படம், ஜாக்ஸனின் அந்தக்கால ஃபார்முலாவான ‘எதிர்மறை கதைசொல்லல்’ பாணியில் எடுக்கப்பட்டிருந்தது (அதாவது, மெய்ன்ஸ்ட்ரீம் திரைப்படங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளுக்கு எதிராகக் கதை அமைப்பது. உதாரணம்: அதுநாள்வரை, மற்ற பப்பெட் ஷோக்களில் வரும் பப்பெட்கள், நல்ல கதாபாத்திரங்களாகவே காட்டப்பட்டிருக்கும். ஆனால், இப்படத்தில் இடம்பெறும் பப்பெட்கள், திருட்டு, தீமைகள் ஆகியவற்றின்பால் ஆசை கொண்டிருக்கும். இவரது இந்த முறைமைக்கு, அடுத்த படமான ‘braindead’ ஒரு நல்ல உதாரணம்). இப்படமும் ஒரு ஹிட்டாக அமைந்ததால், ஜாக்ஸனுக்கு, அவரது லட்சிய zombie படம் எடுப்பதற்கான அடித்தளம், பலமாக அமைந்தது.
‘Meet the Feebles’ படத்தின் trailer இங்கே.
இதற்குப் பின், தனது லட்சியப்படத்துக்கான முயற்சிகளில் இறங்கினார் ஜாக்ஸன். தனக்கு ஏக்கெனவே பழக்கமான திரைக்கதையாசிரியர்கள் ஸ்டீவன் ஸிங்க்லேர் மற்றும் ஃப்ரான்க் வால்ஷ் ஆகியவர்களை அழைத்து, இந்த மூவரும் சேர்ந்து ஒரு திரைக்கதை அமைத்தனர். அதுதான் ‘Braindead’. Braindead பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் ஹெச்பிஓ வந்த புதிதில் (ஆண்டு 2000 ), அடிக்கடி திரையிடப்பட்டு வந்தது இப்படம். நான் இதைப் பார்த்தது அப்போதுதான். கொடூர எலி ஒன்றால் கடிக்கப்பட்டு, zombie க்களாக மாறிவிடும் மனிதர்களைப் பற்றிய ஒரு படம் இது. அந்தச் சமயத்தில் வந்த gory படங்களில், தலையாய ஒன்று என்று இது அழைக்கப்பட்டது. இன்றும் நாஸ்டால்ஜியா ரசிகர்கள் பலரது ஃபேவரைட் படம் இது (இப்படம் அமெரிக்காவில், ‘Dead – Alive’ என்று அழைக்கப்பட்டது).
Braindead படத்தின் trailer இங்கே.
‘பிரைன்டெட்’ படம் பிய்த்துக்கொண்டு ஓடியதால், ஜாக்ஸன், எல்லோருக்கும் தெரிந்த முகமாக ஆகிப்போனார் (அதாவது, பிரபல பதிவராக இருக்கும் ஒருவர், ஒரு புத்தகம் எழுதி, அது பட்டையைக்கிளப்பிக்கொண்டு விற்றால் எப்படி இருக்குமோ அப்படி). அவரது புகழின் காரணமாக, New Line Cinema என்ற ஹாலிவுட் பட நிறுவனம் ஒன்று, ஜாக்ஸனுக்கு அழைப்பு அனுப்பியது. (New Line Cinema என்றவுடன், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் என்று எண்ணிவிடாதீர்கள். அதற்கு இன்னும் டைம் உள்ளது). அவர்கள் தயாரிப்பில் புகழ்பெற்றிருந்த ‘Nightmare on the Elm street’ சீரீஸின் ஆறாவது பாகத்தை எழுதுவதற்கான அழைப்பே அது. ஜாக்ஸனும், கர்மசிரத்தையாக, தனக்குக் கிடைத்துள்ள முதல் ஹாலிவுட் வாய்ப்பை சரியாக உபயோகித்துக்கொண்டுவிட வேண்டும் என்று நினைத்து, புதிய திரைக்கதையை செதுக்க ஆரம்பித்தார். ஆனால், இவர் எழுதிமுடித்து அனுப்பிய திரைக்கதை, திரும்பிவந்துவிட்டது. காரணம், இதற்குள், வேறொரு திரைக்கதை அவர்களுக்குக் கிடைத்திருந்ததே. ‘Freddy’s Dead’ என்ற அந்தப் படத்தைத் தவறவிட்டார் ஜாக்ஸன். இது, அவரை சற்று பாதித்தது எனலாம்.
இதற்குப் பின், தனது நண்பரான ‘Bad Taste’ பட திரைக்கதையாசிரியரான ஃப்ரான்க் வால்ஷுடன் சேர்ந்து ஜாக்ஸன் எழுதிய மற்றொரு திரைப்படமே, ‘Heavenly Creatures’. இப்படம், ந்யூஸிலாந்தின் பிரபல கொலைவழக்கு ஒன்றினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின்னர், இந்தக் கொலைவழக்கில் சம்மந்தப்பட்டிருந்த ஜூலியட் ஹூல்ம் என்ற பெண்மணியை ந்யூஸிலாந்தின் மீடியா துரத்திக்கொண்டிருந்த நேரத்தில், படமும் வெளியானதால், படத்துக்கு எக்கச்சக்க பப்ளிஸிடி கிடைத்தது. மட்டுமல்லாமல், படமும் நன்றாக எடுக்கப்பட்டிருந்ததால், இதுவும் ஒரு வெற்றிப்படமாக ஆகிப்போனது. இரண்டு இளம்பெண்கள், காதலர்களாக மாறி, அவர்களில் ஒரு பெண்ணின் தாயைக் கொலை செய்வதும், இவர்களுக்குள் நிலவும் காதலுமே படத்தின் கதை. இப்படம், 1994 ம் ஆண்டுக்கான ஆஸ்கர்களில், சிறந்த திரைக்கதைப் பிரிவில், நாமினேட் செய்யப்பட்டது. ஆனால், இப்படத்தை வென்று அந்த ஆண்டுக்கான சிறந்த திரைக்கதை விருதை வென்ற படம் – can you guess? yes. Pulp Fiction. க்வெண்டின் என்ற பிதாமகனுடன் பீட்டர் ஜாக்ஸன் என்ற புதிய இயக்குநர் போட்டியிட்ட வருடம் அது. மட்டுமல்லாமல், அந்த ஆண்டு வரை துண்டு துக்கடா வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த இப்படத்தின் கதாநாயகி, இப்படம் வெளிவந்தவுடன் பிரபலமாக மாறி, பல சிறந்த படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அவரது பெயர்: கேட் வின்ஸ்லெட் !
அடுத்து, 1995 ல், ந்யூஸிலாந்து தொலைக்காட்சியில், பீட்டர் ஜாக்ஸன் இயக்கிய ஒரு டாக்குமென்ட்ரி காட்டப்பட்டது. பெயர்: ‘Forgotten Silver‘. ந்யூஸிலாந்தில் பிறந்த பல கண்டுபிடிப்பாளர்கள், எப்படிப் பிற உலகத்தினரால் மறக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு ஆவணப் படம் இது. இப்படம், காலின் மெக்கின்ஸீ (Colin McKensie) என்ற கண்டுபிடிப்பாளரின் வாழ்க்கையை உலகுக்கு அறிவித்தது. ரைட் சகோதரர்கள் ஆகாயவிமானத்தைக் கண்டுபிடிக்கும்முன்னரே இவர் அதைக் கண்டுபிடித்த வரலாறும், அமெரிக்காவில் திரைப்பட சுருள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே, காலின் அவற்றைக் கண்டுபிடித்துவிட்ட விஷயமும், அப்போதுதான் ந்யூஸிலாந்து மக்களுக்குத் தெரிந்தன. தங்களது நாட்டில், இப்படிப்பட்ட ஒரு பிதாமகர் இருந்ததைக் கண்டுபிடித்து அவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை எடுத்த ஜாக்ஸனைப் பலரும் பாராட்டித் தள்ளினர். தங்களில் எவருக்கும் தெரியாத இந்த காலின் மெக்கின்ஸீயைப் பற்றிப் பலரும் தோண்டித் துருவியபின்தான், அப்படி ஒரு மனிதர் இருந்ததே இல்லை என்றும், இது ஜாக்ஸனின் லொள்ளு என்றும் மக்களுக்குத் தெரிந்தது. இவ்வாறாக, ந்யூஸிலாந்து வாசிகள் எக்கச்சக்கமான பேரை முட்டாளாக்கினார் ஜாக்ஸன்.
‘Forgotten Silver’ கிளிப்பிங்குகளை, இங்கே காணலாம்.
http://www.youtube.com/results?search_query=forgotten+silver
இதன்பின், ‘The Frighteners‘ என்ற ஹாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பு ஜாக்ஸனுக்குக் கிடைத்தது. Back to the Future படங்களில் நடித்துப் புகழ்பெற்றிருந்த மைக்கேல் ஜே ஃபாக்ஸ் நடித்திருந்த இப்படம், கமர்ஷியலாக, ஒரு தோல்வி. இப்படமும் ஹெச்பீஓவில் பலமுறை திரையிடப்பட்டிருக்கிறது. நண்பர்கள் பலரும் இதைப் பார்த்திருக்கலாம். இப்படத்தின் தோல்விக்குக் காரணம், அட்லாண்டாவில் சம்மர் ஒலிம்பிக்ஸ் ஆரம்பித்த அதே நாளில் இப்படம் வெளியிடப்பட்டதே என்று ஜாக்ஸன் சொல்லியிருக்கிறார். மட்டுமில்லாமல், இப்படத்தை மார்க்கெட்டிங் செய்வதில், யுனிவர்சல் நிறுவனம் மெத்தனம் காட்டியதும் ஒரு காரணம் என்றும் அவர் பேசியிருக்கிறார்.
இதேநேரத்தில், ‘கிங்காங்’ படத்தின் ரீமேக்கை எழுதச்சொல்லி, ஜாக்ஸனுக்கு ஒப்புதல் அளித்தது யுனிவர்சல் நிறுவனம். இந்தத் திரைக்கதையை எழுதிக்கொண்டிருந்த நேரத்தில், ‘Freddy Vs Jason’ படத்தை எழுதி இயக்கச்சொல்லித் தனக்கு வந்த வாய்ப்பை, கிங்காங்கைக் காட்டி நிராகரித்தார் ஜாக்ஸன். ஆனால், திரைக்கதையை இவர் முடித்த நேரத்தில், காட்ஸில்லா படமும், ‘Mighty Joe Young’ படமும் தயாரிக்கப்பட்டிருந்த காரணத்தினால், கிங்காங் படத்தையே டிராப் செய்தது யுனிவர்சல். இதனால், கிடைத்த வாய்ப்பையும் உபயோகப்படுத்திக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜாக்ஸன். இந்தக் காலகட்டத்தில், தனக்குப் பெருமளவில் உதவிய NZFC க்கும் தனக்கும் இருந்த சிறிய உரசல்களை, ஜாக்ஸன், ஒரு பத்திரிகையில் எழுதப்போக, ஜாக்ஸனுக்கும் NZFC க்கும் விரிசல்கள் நேர்ந்தன. மொத்தத்தில், அது அவருக்கு சோதனையான காலகட்டமாக நகர்ந்தது.
அப்பொழுதுதான், பின்நாட்களில் ஜாக்ஸனின் வாழ்க்கையையே மாற்றியமைத்த ஒரு எண்ணம் அவரது மனதில் உதித்தது. அவரது சிறிய வயது நாஸ்டால்ஜியா அவரது உதவிக்கு வந்தது. தோல்விகளால் துவண்டிருந்த ஜாக்ஸன், நிமிர்ந்து அமர்ந்தார்.
அது என்ன?
தொடரும் . . . .
மீ தி பர்ஸ்ட்… இருங்க படிச்சுட்டு வரேன்…
நண்பரே,
ப்ரைட்னெர்ஸை நேற்று இங்கு ஒளிபரப்பினார்கள். ஒலிம்பிக்கையும், யுனிவெர்சலையும் மட்டுமே அதன் தோல்விக்கு காரணமாக கொள்ளவியலாது என நான் நினைக்கிறேன். விறுவிறுப்பாக பதிவு நகர்கிறது.
ராஜேஷ்.. படு விறு விறுப்பா போகுது தொடர்…பீட்டர் ஜாக்சன் பத்தி மட்டுமில்லாம ஏக பட்ட விஷயத்த தெரிஞ்சுக்க முடியுது.. இத படிக்கும்போது.. எனக்கு ஆனந்த விகடன் ல கட்டுரை படிக்குற மாறி இருக்கு… ஏன்னா, பக்கா professional ல இருக்கு எழுத்து நடை… அங்கங்க ட்விஸ்ட் & டர்ன் கரெக்டா வச்சுருக்கீங்க… ஒரு complete feel கிடைக்குது.. informative one…
Missed tha vadai …..
அடுத்தப் பதிவு எப்ப்ப்ப்போபோபோ 🙂
சிறு வயதில் braindead படம் பார்த்து சாப்பிடும் போது நினைத்து பார்த்து வாந்தி எடுத்ததை மறக்க முடியமா…
சரியா கொண்டுபோறீங்க தோழா… கதை பேசவேண்டிய விஷயத்தை விட்டு கொஞ்சம் வெளியே போகும்போதெல்லாம் சரியான அளவுல அதை முடிச்சு உள்ள கொண்டு வர்ரீங்க…
நான் இது வரைக்கும் பீட்டர் ஜாக்சனோட 3 படம் தான் பாத்திருக்கேன். மத்த எல்லாம் தேடி இனிமேதான் பாக்கனும்.
எங்கள் தானைத்தலைவரை பதிவின் முதலிலேயே கொண்டு வந்த சொம்பு ரசிகர் கருந்தேள் வாழ்க.
கிங் விஸ்வா
காமிக்ஸ் படிக்கும் தமிழ் ஹீரோயின்
தமிழ் சினிமா உலகம் – மைதானம் சினிமா விமர்சனம்
பீட்டர் ஜாக்ஸனைப் பற்றி அவ்வளவாக தெரியாது,இப்பொழுது நிறைய அறிந்து கொண்டேன்,
The Frighteners மட்டும் பார்த்துள்ளேன்,மற்ற எதையும் பார்த்தது கிடையாது,அந்த ‘Forgotten Silver விஷயம் செம காமடியாக உள்ளது,ஒரு நாட்டு மக்களையே செமையாக ஏமாற்றி உள்ளார்,
நீங்கள் வேற ஏதாவது ஆளப்பத்தி சொல்றீங்களா. ?
இந்த பீட்டர் ஜாக்சன் தானானு ஒரு தடவ conform பண்ணிக்கோங்க,
http://www.imdb.com/peter jackson
உங்கள பாராட்டி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பாராட்டு கடிதங்கள நீங்களும் வெளியிடப் போவதில்ல…எங்கூட பழகிப் பழகி உங்களுக்குன் விளம்பரங்களே பிடிக்காம போயிருச்சு……..சரி……அத எழுதுறவங்க இங்க எழுதுனா என்ன……
பீட்டர் ஜாக்சன், ஸ்பீல்பெர்க் எல்லாருமே சிறுவயதிலே சினிமா மேல இவ்வளவு ஈடுபாடு – குறிப்பா ஃபாண்டசி கதைகளில் – இருக்கப் போய்தான் இந்த அளவிற்கு அவுங்களால படங்கள் எடுக்க முடியுது…இதிலிருந்து தெரிய வரும் நீதி யாதெனில்….
//க்வெண்டின் என்ற பிதாமகனுடன் பீட்டர் ஜாக்ஸன் என்ற புதிய இயக்குநர் போட்டியிட்ட வருடம் அது.//
மன்னிக்கனும். பீட்டரை க்வெண்டினோடு ஒப்பிட்டதை ஏற்க முடியாது. அதுவும் பிதாமகன்/புதிய இயக்குனர் என்ற வார்த்தையை.
க்வெண்டினுக்கு அது இரண்டாவது இயக்கம் + 3 வது திரைக்கதை. முதல் படம் தியேட்டரில் ஓடினதே யாருக்கும் தெரியாது. ஆனால் பீட்டர் ஏற்கனவே 3 வெற்றிப்படத்தை கொடுத்தவர்.
அந்த வருடத்தின் வெற்றி நிச்சயம் பல்ப் பிச்ஷனின் திரைக்கதைக்கே தவிர அனுபவத்திற்கு இல்லைன்னு நினைக்கிறேன்.
திரும்ப எழுத வரணும்னா அதுக்கு இரண்டு காரணம்தான் இருந்திருக்க முடியும்.
1 செர்பியன் பிலிம்
2 LOTR
இந்த ரெண்டையும் நீங்களே பார்த்துகிட்டனால கமென்ட் போடுற வேலையை மட்டுமாவது செய்ய முடியுமான்னு பார்க்கறேன் தல.
@ Murali – நன்றி. எதாவது நெகட்டிவ் பாயிண்ட் இருந்தால் சொல்லவும். திருத்திரலாம்
@ காதலரே – அது, பீட்டர் சொன்னது 🙂 … அது அப்படித்தான் 🙂
@ MSK – அடுத்த பதிவு, ஞாயிறு நைட்டு 🙂
@ லக்கி – ப்ரைண்டெட் பார்த்து வாந்தி – ஹீஹீ 🙂 .. அதானே அந்தப் படத்தோட ஸ்பெஷாலிட்டி 🙂
@ தமிழினியன் – நன்றி. நெகட்டிவ் ஃபீட்பேக் ப்ளீஸ் 🙂
@ விஸ்வா – தானைத்தலைவர் ராஜேந்தரை மறந்துட்டு தமிழ்ப்படத்தப் பத்தி பதிவு எழுத முடியுமா? 🙂
@ டெனிம் – அந்தாளோட sick டேஸ்ட் அப்புடி 🙂 .. plz c braindead 🙂
@ கொழந்த- பீட்டர் ஜாக்ஸன், ஸ்பீல்பெர்க் மட்டுமில்லை. ராபர்ட் ரோட்ரிகஸும் அப்படியே.. இவர்களின் சிறுவயது, டிட்டோ ஒரே போன்று இருக்கும் 🙂
@ புள்ளிராஜா (எ) ஹாலிவுட் பாலா – தல… க்வெண்டின் மேட்டர்.. ஒரு ஃப்ளோல எழுதிட்டேன் 🙂 .. நீங்க சொல்வதை ஒப்புக்கொள்கிறேன் 🙂 .. அந்த ஆஸ்கர், அனுபவத்துக்கு இல்லை. கட்டாயம் திறமைக்குத்தான் 🙂
அதேமாதிரி, செர்பியன் ஃபில்ம், நீங்க சொல்லாம நான் பார்த்திருக்க முடியாது. அது எனக்கு ரொம்பப் புடிச்சது 🙂 .. உங்க ஃபீட்பேக் கட்டாயம் இதேபோல் கொடுங்க.. இன்னும் இம்ப்ரவைஸ் பண்ணலாம்
புள்ளி ராஜா ஏன் கருந்தேள் பதிவுகளுக்கு மட்டும் வரார்….வேற தளங்களுக்கு போற மாதிரி தெரிலயே….அப்புடி என்ன கருந்தேள் மேல மட்டும் பாசம்….
காலையில இருந்து இந்த கமெண்ட் பாக்ஸ் காத்தாடி போயிருந்துச்சு….புள்ளி ராஜா கமெண்ட்ட பாத்தவுடன் உடனே ரீப்ளே……என்ன கொடுமா சார்…….இதான் உலகம் மக்களே…..(ஆனா கமெண்ட் நல்லா போட்டிருக்குறது தமிழினியனும் புள்ளியும்(ஒரு கமெண்ட்) தான் என்பதை கவனிக்க)
இதையே கூகிள்ல அடிச்சி தமிழ்ல பார்க்கறதுக்கு நாக்கு தள்ளுது. எத்தனை ஏரியாவுக்கு போய் எப்படி அடிச்சி..???
உமக்கு ஏன் பொறாமை??? 🙂 🙂 🙂
தமிழ்ல பார்க்கறதுக்கு நாக்கு தள்ளுது – ஒருகாலத்துல கும்மி கும்மி அடிச்சு பதிவுலகத்தையே கலங்கடிச்ச சில பேர்கள் இருந்தாங்க….என்ன பண்ண……வயசு கூட கூட கமெண்ட்கள் போடவே நாக்கு வெளிய தள்ளுது…..
பொறாமை, மீ ???? – லைட்டா……..
🙂 புள்ளி வர்ரதே ஸ்பெஷல்தாம்யா 🙂 அவரு வந்ததும், அப்புடியே மத்த கமெண்டுக்கு பதில் போட்டுட்டு அவருக்கும் பதில் போடணும்னுதான் 🙂 . .
//இதையே கூகிள்ல அடிச்சி தமிழ்ல பார்க்கறதுக்கு நாக்கு தள்ளுது. எத்தனை ஏரியாவுக்கு போய் எப்படி அடிச்சி..???//
எங்க இன்னொரு வாட்டி சொல்லுங்க? பாவம் அந்த சாமியார்.. அந்தாளைப் போட்டு வாட்டி எடுத்த பாவம் உங்களை சும்மா உடாது 🙂 .. அதெல்லாம் மறந்தமாதிடி டப்புன்னு டயலாக் சொல்லிட்டீங்களே தல.. எங்கே கீதப்ரியன்?
அடடா,நானும் இங்கே ஆஜர்
என் இணைய வேகம் சுத்த மோசம் இன்று
ஆஹா.. கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். ‘அவரைக்’ காணோம்
நண்பா அட்டகாசமான தொடரை ஆரம்பித்தமைக்கு நன்றி
பீட்டர் ஜாக்சன் யாருன்னு தெரியாமலேயே,ஹெவன்லி க்ரியேச்சர்ஸ் பாத்திருக்கேன்.மற்ற எதுவும் பார்க்கவில்லை,படிக்க நன்றாக உள்ளது,எழுதுங்க,என்றைக்காவது ஒரே சிட்டிங்கில் படிப்பேன்
ரொம்பவே லேட்டா வந்துட்டேன்,சாப்பிட்டு வந்து பார்த்தா தான் தளமே திறந்தது,அத்தனை லேட்
இந்திய தேசத்தைக் காக்கின்ற வீரர்கள் எல்லையில் நிறைந்திருப்பார்..
நாட்டினைக் காசுக்குக் காட்டியே கொடுப்பவர் ஊருக்குள் ஒளிந்திருப்பார்..
அஹிம்சையைப் போதித்த தேசத்தில் ரத்தத்தின் ஆறுகள் ஓடுதடா ..
ஏழையின் கூரையில் ஏற்றிய தீக்கனல் வான்வரை ஏறுதடா..
விடுதலை வாங்க அன்று நாம் தந்த விலைகள் தான் கொஞ்சமா ..
வேலியே இன்று பயிரை மேய்கின்ற நிலைமைதான் மாறுமா !
நண்பா இது சூப்பர் கார்னர் பீஸி
இது யாரையும் கலாய்ச்சு போடலையே?
எதும் நவின சர்காசிசம் இல்லையே?;)))
நண்பா… அந்த வரிகள், எனக்குப் புடிச்ச ‘நான் சிகபு மனிதன்’ படத்தோட ‘காந்தி தேசமே’ பாடல்வரிகள். இதுதான் இப்ப நிதர்சனம். அதான். நோ ஸர்காஸ்ம். பாலா பிஸியாகியிருக்கலாம். மீ gonna watch a film… நீங்களும் போயி தூங்குங்க
plz c braindead 🙂 //
கண்டிப்பா பாத்துடுறேன்
யோவ், ஹாலி பாலி (எ) புள்ளி ராஜா, வந்து எழுதம்யா..
உம்ம எழுத்த ரொம்ப மிஸ் பண்றோம்.. 🙁