LOTR : The Series– 3 – WETA, and how Jackson ‘chose’ the Rings

by Karundhel Rajesh May 29, 2011   war of the ring

பீட்டர் ஜாக்ஸன், Heavenly Creatures என்று ஒரு படம் எடுத்திருந்ததை, சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். பொதுவாகவே, விஷுவல் எஃபக்ட்ஸில் கவனம் அதிகம் உள்ளவர் அவர். அவரது முதல் படமான Bad Taste படத்திலிருந்தே, காட்சியமைப்புகளுக்கும், மேக்-அப், தந்திரக் காட்சிகள் போன்ற ‘ஸ்பெஷல்’ விஷயங்களுக்கும் அதிகம் மெனக்கெட்டவர் ஜாக்ஸன். எனவே, அவரது பாணியிலிருந்து விலகி, ஒரு ஸீரியஸ் படமான Heavenly Creatures எடுக்கையில், அந்தப் படத்துக்குத் தேவைப்பட்ட ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் காட்சிகளுக்கென, சொந்தமாகவே ஒரு நிறுவனம் தொடங்கினால் என்ன என்று அவருக்கு ஒரு எண்ணம் உதித்தது. கல்கியின் பொன்னியின் செல்வனில், முதல் பாகத்தில், வந்தியத்தேவன் கடம்பூருக்குச் செல்லும் இடத்தில், கடம்பூர் கோட்டை வாசலில் காவலாளிகளால் தடுத்து நிறுத்தப்படும் வேளையில், கல்கி ஒரு வாக்கியத்தைப் போட்டிருப்பார். ‘வல்லவரையனைப் பொறுத்தவரையில்,ஒன்றை நினைப்பதும், அதைக் காரியத்தில் செயல்படுத்துவதும் ஒன்றுதான்’ என்று. ஆகவே, வந்தியத்தேவன், குதிரையை அந்தக் காவலாளிகள் மீது செலுத்தி, அந்தப் பரபரப்பில் உள்ளே நுழைவது போன்று கதை செல்லும். அதேபோன்று, பீட்டர் ஜாக்ஸனும், நினைத்ததைச் செயலில் காட்டும் வரையில் ஓய்வதில்லை என்ற ஒரு கொள்கையோடு செயல்படும் ஆள். சும்மா சொல்லவில்லை. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படப்பிடிப்பில், ந்யூ லைன் ஸ்டுடியோவின் நிர்வாக அதிகாரிகளிடம், தனக்கு வேண்டிய விஷயங்களை சமரசம் இன்றிக் கண்டிப்பாகப் பெற்றுவிடுவதில், அவர் ஒரு வேட்டை நாய் போன்றவர் என்று, படப்பிடிப்பில் பங்கேற்ற ஒரு பிரபலம் சொல்லியிருக்கிறார். அந்தப் பிரபலம்? நேரம் வரும்போது தெரிந்துகொள்வீர்கள். ஆக, தனக்கே சொந்தமாக ஒரு விஷுவல் எஃபக்ட்ஸ் நிறுவனம் இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று எண்ணி, 1994ல் ஜாக்ஸன் தொடங்கிய நிறுவனமே, WETA Digital.

WETA என்பது, ‘Well Established Technical Assets’ போன்ற எதாவது கடினமான பெயரின் சுருக்கம் அல்ல. WETA என்பது, ந்யூஸிலாந்தில் அதிகம் காணப்படக்கூடிய ஒரு பூச்சி ! நம்மூர் கரப்பான்பூச்சியும் சுவர்க்கோழியும் கலந்த கலவை போல் இருக்கும் இந்தப் பூச்சியின் பெயரை ஜாக்ஸன் தனது நிறுவனத்துக்கு வைத்த காரணம் – well, அவருக்கு இருக்கும் sick taste என்பது ஒரு வதந்தி. எதுவாக இருந்தாலும், அன்று அவர் தொடங்கிய அந்த நிறுவனம், இன்று சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. WETAவின் ஹிட்லிஸ்டில் சில படங்கள்: Avatar, The A- Team, The day the earth stood still, Chronicles of Narnia: Prince Caspian, Fantastic Four: Rise of the Silver surfer, I Robot, Van Helsing, Eragon, X Men: The last Stand, King Kong மற்றும் பல. இதுவரை, ஐந்து விஷுவல் எஃபக்ட்ஸ் ஆஸ்கர்கள் வாங்கியிருக்கிறது இந்நிறுவனம். மட்டுமல்லாமல், பல அட்டகாசமான ஸாஃப்ட்வேர்கள் தயாரித்த பெருமையும் இதற்கு உண்டு. MASSIVE என்ற பெயரில் ஒரு அப்ளிகேஷன்: இது, ஒரு பெரிய கும்பல் திரைப்படங்களில் காட்டப்படும்போது, அதிலிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக செயல்படுவதைத் தத்ரூபமாகக் காட்டக்கூடியது. இந்த MASSIVE ஸாஃப்ட்வேரைத்தான், கொஞ்சம் மாற்றி, AVATAR படத்துக்காக உபயோகித்து, ஆஸ்கர் வாங்கியது இந்நிறுவனம். CityBot என்று இன்னொரு அப்ளிகேஷன். இது, ஒரு பெரிய நகரத்தை, பார்ட் பை பார்ட்டாக உருவாக்கக்கூடிய திறன் படைத்தது. King Kong படத்தின் ந்யூயார்க், CityBotடின் படைப்பே. அதற்காக, இன்னொரு ஆஸ்கர். கூடவே, கிங்காங்கின் உடலில் இருக்கும் முடி – அதன் fur. இந்த முடியை எப்படி WETA உருவாக்கியது என்பது ஒரு பெரிய கதை. இதைப் பற்றிய இரண்டு சுவையான கட்டுரைகள் இங்கே. Interview with Chris white on King Kong மற்றும் Bigger and Badder. அவசியம் படித்துப் பாருங்கள். இந்த விஷயங்களைப் பற்றி எழுத ஆசைதான். ஆனால், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கட்டுரை தடம் மாறி விடும் என்பதால், அவற்றின் லின்க்குகளைக் கொடுத்திருக்கிறேன். LOTR படங்களைப் பற்றிப் பேசுகையில், க்ராஃபிக்ஸ் விஷயங்களை முடிந்தவரை விரிவாகப் பார்க்கலாம்.

ஆக, ஜாக்ஸனின் சொந்த விஷுவல் எஃபக்ட்ஸ் நிறுவனம் ரெடி. இந்நிறுவனம், முதன்முதலில் வேலைசெய்த படம், ஜாக்ஸனின் ‘Heavenly Creatures’. இந்தப் படம் வெளியான ஆண்டு, 1994. முன்னதாக, 1993ல் வெளியாகியிருந்த ஒரு படம், ஜாக்ஸனுக்கு மிகுந்த நம்பிக்கையளித்திருந்தது. இனிமேல், திரைப்படங்களின் எதிர்காலம், விஷுவல் எஃபக்ட்ஸை நம்பித்தான் இருக்கப்போகிறது என்ற நம்பிக்கை. அந்தப் படம் – Jurassic Park. ஹெவன்லி க்ரீச்சர்ஸ் படத்திற்கு அடுத்து, ஜாக்ஸனின் டாக்குமெண்ட்ரியான Forgotten Silver மற்றும் அடுத்த படமான ‘The Frighteners’ ஆகிய படங்களில், குறிப்பிடத்தக்க ஸிஜி வேலையைச் செய்திருந்தது WETA. ஜாக்ஸனுக்கும் இதில் சந்தோஷம். ஏனெனில், 1994ல், ஒரு கம்ப்யூட்டரை வைத்து ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம், இரண்டே வருடங்களில், ஐம்பது கம்ப்யூட்டர்களை வைத்து வேலை செய்யும் நிறுவனமாக வளர்ந்திருந்தது. கூடவே, Frighteners படத்துக்கு WETA செய்து கொடுத்திருந்த விஷுவல் எஃபக்ட் ஷாட்கள், மொத்தம் 570 (ஜுராஸிக் பார்க்கில், மொத்தமே 50 விஷுவல் எஃபக்ட் ஷாட்கள் தான்).

Frighteners படத்தின் விஷுவல் எஃபக்ட்கள் அருமையாக வந்திருந்தன. படத்தின் post production நடந்துகொண்டிருந்த நேரம். இப்படத்தின் டெக்னிகல் நேர்த்தி பற்றிக் கேள்விப்பட்டிருந்த பிற விஷுவல் எஃபக்ட்ஸ் நிறுவன முதலாளிகள், WETAவின் வல்லுநர்களைத் தங்கள் நிறுவனத்தில் நேருமாறு ரகசிய அழைப்புகள் விட ஆரம்பித்திருந்தனர். தனது நிறுவன வல்லுநர்களைத் தன்னுடன் வைத்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஜாக்ஸனுக்கு. அவர்களுக்கு ஒரு புதிய படத்தைத் தந்தாக வேண்டும். ஆகவே, Frighteners படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் நடந்துகொண்டிருந்த நேரத்தில், தனது ஏஜெண்ட்டான கென் காமின்ஸை (Ken Kamins) அழைத்தார் ஜாக்ஸன். காமின்ஸுக்கு ஜாக்ஸன் போட்ட உத்தரவு – ‘என்ன செய்வீர்களோ தெரியாது. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவல்களின் திரைப்பட உரிமை இப்போது யாரிடம் உள்ளது என்பதன் மொத்த விபரங்களும் உடனடியாக எனக்கு வேண்டும்’. ஜாக்ஸன் சுலபமாகக் கேள்வியைக் கேட்டுவிட்டார். ஆனால், இதன்பின்தான் தொடங்கப்போகிறது ஒரு இடியாப்பச் சிக்கல் என்பதனை அவர் அறிந்திருக்கவில்லை. லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஜாக்ஸனின் புதிய கனவாக மாறிவிட்டிருந்தது.

உடனே மின்னலைப் போல செயல்பட்ட காமின்ஸ், ஜாக்ஸனுக்குத் தேவையான தகவல்களைக் கொட்டினார். அந்தக் காலகட்டத்தில் – அதாவது தொண்ணூறுகளில், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவல்களின் மொத்த உரிமையும், ஸால் ஸாண்ட்ஸ் (Saul Zaentz) என்ற தயாரிப்பாளரிடம் இருந்தது. Zaentz என்ற பெயரை, திரைப்பட ரசிகர்கள் அறிந்திருக்கலாம். நாம் இத்தளத்தில் ஏற்கெனவே பார்த்திருக்கும் One Flew over the Kuckoo’s Nest மற்றும் Amadeus ஆகிய இரண்டு படங்களுடன், The English Patient படத்துக்குமாக, மூன்று முறை, சிறந்த திரைப்பட ஆஸ்கர் பெற்றவர். இந்த மூன்று படங்களுமே, அந்தந்த வருடங்களில், ஆஸ்கர்களைக் கொத்துக் கொத்தாகக் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளராக ஆவதற்கு முன்னர், Fantasy Records என்ற அமெரிக்காவின் புகழ்பெற்ற ரெகார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் இவர். அதுதான் அவரது திரைப்பட நிறுவனத்தின் பெயரும் கூட. 1976ல், யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்தாரிடமிருந்து, லார்ட் ஆஃப் த ரிங்ஸின் திரைப்பட உரிமையை, ஸாண்ட்ஸ் வாங்கியிருந்தார். அந்த ஒப்பந்தம், இந்நாவல்களில் வரும் கதைகள், பெயர்கள், சம்பவங்கள் ஆகிய அத்தனை விஷயங்களுக்கும் , ஸாண்ட்ஸையே உரிமையாளராக்கியிருந்தது. அடுத்த இரண்டு வருடங்களில், அதாவது 1978ல், Tolkien Enterprises என்ற நிறுவனத்தை ஸாண்ட்ஸ் தொடங்கினார். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதைகளின்படி உருவாக்கப்பட்ட பொம்மைகள், நாடகங்கள், பாடல்கள் போன்ற எந்த விஷயத்தையும், இந்நிறுவனத்தின் ஒப்புதல் பெற்றே செய்ய வேண்டும் என்ற காப்புரிமையும் வாங்கினார். இதனைத் தொடர்ந்து, இயக்குநர் Ralph Bakshiயின் Lord of the Rings’ படத்தையும் தயாரித்தார்.

ஸாண்ட்ஸிடம் ரிங்ஸ் படங்களின் உரிமை உள்ளது என்று தெரிந்தவுடன், ஜாக்ஸன் தொடர்புகொண்ட மனிதர் – ஹார்வி வெய்ன்ஸ்டீன் (Harvey Weinstein). மணி ஒலிக்கிறதா? Miramax நிறுவனத்தின் தலைவர் இவர். ஜாக்ஸன் குறிப்பாக இவரிடம் ஏன் செல்லவேண்டும்? ஒரு காலத்தில், Heavenly Creatures படம் இயக்கியபோது, அப்படத்தை அமெரிக்காவில் விநியோகம் செய்தது, Miramax. படம் லாபம்தான் என்றாலும், எதிர்பார்த்திருந்த அளவு விற்றிருக்கவில்லையாதலால், ஜாக்ஸனுடன் போட்டிருந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்ததாக ஜாக்ஸன் இயக்கப்போகும் படத்தை, Miramax நிறுவனமே தயாரிக்கும் (அல்லது) விநியோகிக்கும் என்ற விஷயம் இருந்ததால், ஜாக்ஸன் ஹார்வி வெய்ன்ஸ்டீனிடம் சென்றார் (Heavenly Creatures படத்துக்குப் பின் வந்த Frighteners படத்தை Miramax கணக்கில் எடுக்கவில்லை).

ஜாக்ஸனின் முதல் எண்ணம், Hobbits என்ற டோல்கீனின் நாவலை ஒரு திரைப்படமாக எடுத்துவிட்டு, அதன்பின், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவல்களை, இரண்டு பாகங்களில் முடித்துவிடலாம் என்பதாக இருந்தது (அதிலும், Hobbits நன்றாக ஓடினால் மட்டுமே ரிங்ஸ் படங்களில் கைவைப்பது என்பது அவரது சிந்தனை). ஸாண்ட்ஸ் பெயரைக் கேட்ட ஹார்வி, துள்ளிக்குதித்தார். ஏனெனில், ஸாண்ட்ஸின் லேட்டஸ்ட் படமான ‘The English Patient’, பட்ஜட் பற்றாக்குறையால், எடுக்கப்படுவதற்கு முன்னரே நிறுத்தப்படும் நிலையில் இருந்தபோது, Miramax நிறுவனம்தான் அப்படத்துக்கு ஃபைனான்ஸ் செய்து, படம் வெளிவருவதற்கு உதவியிருந்தது. அப்படி வெளிவந்த படம்தான், ஆறு ஆஸ்கர்களை வேறு வாங்கி, 228 மில்லியன் டாலர்கள் உலகெங்கிலும் வசூலித்திருந்தது. எனவே, Miramax நிறுவனத்தாருக்கு ஸாண்ட்ஸ் கடமைப்பட்டிருந்தார். ஆக, ஹாபிட்ஸ் மற்றும் ரிங்ஸ் உரிமைகளை எளிதில் ஸாண்ட்ஸிடமிருந்து வாங்கி, படமாக எடுத்துவிடலாம் என்பது ஹார்வியின் எண்ணம். அவருக்குமே, ஜாக்ஸனின் யோசனை பிடித்திருந்ததும் ஒரு காரணம்.

ஆனால், ஸாண்ட்ஸிடமிருந்து வந்தது ஒரு கூக்ளி. என்னவெனில், Hobbits படத்துக்குத் தயாரிப்பு உரிமை மட்டுமே சாண்ட்ஸிடம் இருந்தது. அதன் விநியோக உரிமை, யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்தாரிடமே இருந்தது. சரி, ஹாபிட்ஸின் விநியோக உரிமையையும் சேர்த்து இப்போது வாங்கிவிடலாம் என்றால், அந்த வருடமான 1995ல் தான் யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம், MGM நிறுவனத்துடன் சேர்ந்து, MGM / UA என்று ஆகியிருந்தது. எனவே, முயற்சியில் சற்றும் மனம்தளராத ஹார்வி வெய்ன்ஸ்டீன், MGM / UA நிறுவனத்தின் கதவைத் தட்டினார். ஆனால், அங்கே இருந்தவர்கள் போட்டதோ, ஹார்வியின் தலையைப் பதம்பார்க்கும் பௌன்ஸர் ! MGM / UA நிறுவனமே இப்போது விற்பனை செய்யப்படப்போகிறது என்றும், ஆகவே, தங்களது சொத்துக்கள் எதையும் விற்க இயலாது என்றும் சொல்லி, ஹார்வியிடம் கைவிரித்துவிட்டனர் அவர்கள். முடிவில் ஜாக்ஸனை அழைத்த ஹார்வி, Hobbits படத்தின் மேல் கையே வைக்க இயலாது என்றும், ரிங்ஸ் படங்களின் முதல் பாகத்தைத் தொடங்குமாறும் கேட்டுக்கொண்டார் (இதற்கே ஒரு வருடம் ஆகிவிட்டிருந்தது). ஆனால், ஹார்வி வெய்ன்ஸ்டீனைக் கடுப்பாக்கும் விஷயம் ஒன்று அந்த நேரத்தில் நடந்தது. கோபத்தின் உச்சிக்கே சென்றார் ஹார்வி. காரணம்? நமது நாயகன் பீட்டர் ஜாக்ஸனே தான்.

ஹார்வி மட்டும் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால், பீட்டர் ஜாக்ஸனின் வீட்டுக்கு எக்கச்சக்க ஆட்டோக்களை அனுப்பியிருப்பார். ஹார்வியைக் கடுப்பேற்றும் அளவு என்ன செய்தார் ஜாக்ஸன்?

தொடரும் . . . .

  Comments

32 Comments

  1. அரைகுறையா படிச்சிட்டு கடனுக்கே கமெண்ட் போடுறத விட…பொறுமையா நாளிக்கு படிச்சிட்டு போடுறேன்…..

    இருந்தாலும் இந்த உசிப்போன வடய வுட மாட்டீங்கறாங்களே….

    Reply
  2. that means “dingu dongu dingu dongu ding dong ding”

    Reply
  3. ஒரு சீரிய தொடருக்கு உரிய நேர்த்தியுடன் செல்கிறது உங்களின் நடை. தற்பொழுது ஒரு முழு நேர எழுத்தாளராகும் எண்ணம் உள்ளதோ?

    கிங் விஸ்வா
    கிளாசிக் நாவல்கள் இனிமேல் காமிக்ஸ் வடிவில் – இன்டியா காமிக்ஸ்

    Reply
  4. அநியாயத்துக்கு தகவல்கள், ஆனாலும் திகட்டாமல் செல்கிறது உங்கள் எழுத்து நடையால்… டெக்னிகல் மேட்டர் எல்லாம் சூப்பர் ராஜேஷ்.. jurassic park ல 50 விஷுவல் எபெக்ட்ஸ் தானா.?? நம்பவே முடில..

    Reply
  5. என்னாது MASSIVE, CityBot, பட்டய கெளப்புறீங்க….. இந்த வார்த்தைகள் இந்த பீல்ட் ல இருக்கிற வங்களுக்கு மட்டுமே தெரிந்த வார்த்தைகள், ரொம்ப in depth தா எழுதறீங்க,ரொம்ப மெனகெட்டு படிச்சாதான் இந்த விசயங்களை எழுத முடியும்,என்னால இன்னும் அந்த அதிர்ச்சில இருந்து வர முடியல,நீங்க இங்க எழுதி இருக்கிற விசயங்களின் மதிப்பு மற்றவர்களுக்கு கண்டிப்பாக தெரிய வாய்ப்பில்லை தல,Massive ரொம்ப பெரிய வார்த்தை,

    நான் அதைப் பற்றி கொஞ்சம் சொல்லிகிறேன்(உங்கள் அனுமதியுடன்)

    Massive crowd multiplication காக உருவாக்கப்பட்டது,சாப்ட்வேர் என்னமோ சின்னதுதான் ஆனா இன்றைய நிலையில் விலை அதிகமான சாப்ட்வேர்களில் இதுவும் ஓன்று,இதை lord of the ring க்கு அப்புறம் கமர்சியல் பயன் பாட்டிற்காக வெளியே விட்டார்கள்,இதை பயன்படுத்த தெரிந்தவர்கள் உலகில் மிகக் குறைவு(அதில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்),இதன் வேலை என்னவென்றால் ஒரு பெரிய ஸ்டேடியம் இருக்குன்னு வச்சுக்கோங்க,அந்த ஸ்டேடியம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரப்ப வேண்டும்,அதற்கு ஒரே ஒரு கேரக்டர் மட்டும் உட்கார்ந்து கைகளை தட்டுவது போல அனிமேட் செய்தால் போதும்,இந்த சாப்ட்வேர் ஸ்டேடியம் முழுவதும் ஆட்களை நிரப்பிவிடும்,நிரப்புவது மட்டும் அல்லாமல் ஒவொருவருக்கும் ஒவொரு போஸ்,சட்டை நிறம்,உயரம்,உடல் நிறம்,உடல் பருமன் ஆகியவற்றை கொடுத்து அனைவரும் ஓன்று போல் அல்லாமல் மாற்றிவிடும்,இதேதான் போர் காட்சிகளுக்கும்,இதற்கு lord of the ring,narnia போன்றபடங்களின் இறுதி காட்சிகள் உதாரணம்,

    இதை இந்தியாவில் ஒரு படத்தில் பயன் படுத்தி உளார்கள்,படம் இனி வெளியாகவில்லை

    Reply
  6. அற்புதமா போகுது ஒவ்வொரு பாகமும். WETA பற்றிய தகவல்கள் நான் கேள்விபட்டதில்லை… அருமை.

    ஜுராசிக் பார்க் விஷுவல் எபக்ட்ஸில் ஒரு மைல்கல் தான். தொடருங்கள் அண்ணா..:)

    Reply
  7. உண்மையா இன்னும் சிஜி உள்ளயே நுழையவில்லை அதற்குள் இந்தளவிற்கு தகவல் என்றால் இனி எப்படி இருக்கும்?மிகுந்த ஆவலுடன் உங்கள் பதிவை எதிர்பார்கின்றேன்

    Reply
  8. பதிவுலக பவர்ஸ்டாரே!புதிய தொடரில் புதிய பரிணாமம் பெற்று உள்ளீர்கள்.அரிய தகவல்களுடன் அற்புதமாக உள்ளது.

    Reply
  9. இங்கன கமெண்ட் போட வரும் ஹாலி பாலிக்காக இந்த பின்னூட்டம்.. அப்படி அவர் வராட்டி, நீங்க இத அவர்கிட்ட சொல்லும்..

    யோவ், ஹாலி பாலி (எ) புள்ளி ராஜா, வந்து எழுதம்யா..
    உம்ம எழுத்த ரொம்ப மிஸ் பண்றோம்.. 🙁

    Reply
  10. Dei..u r writing something “BIG”!!,really BIG..romba varushathku munnadi bagya bookla Jurassic park pathi oru article vandhuchu about spielberg and about JP making,idhu adha vida superaa iruku..its worth coming in a magazine as a weekly article..thodarndhu eludhu idhee maadidri yaarume yosikadha oru mattera catch panni (aana andha vishyam ellathum pidikara oru vishyama irukum)adhe correcta follow panra…idhu oru nalla point naanum neeyum discuss pannum podhu nerya vishyangal namma veliyA SOLLAMA vechrundhom adhe maadiri neryaa peru adha expose pannama irupaanga adhe nee correct pudikara (pointa pudicha gemini!!) indha methoda follow pana unakku kandippa nee enna eludhunalum success thann..will mail u some other matters

    Reply
  11. உண்மைய சொல்லனும்னா இந்தப் பதிவ பார்த்து மிரண்டுதான் போனேன்,ரொம்ப அருமை,தல எதிர்பார்ப்பு கூடி உள்ளாதால் இன்னும் பட்டய கிளப்புங்கள்

    Reply
  12. சீரியஸ்ஸா…….நேசனல் அவார்ட் வாங்கிய டெனிம் மோகனே இந்த அளவுக்கு மிரண்டு போயிருக்கார்னா…….எந்த அளவுக்கு எழுதியிருக்கீங்கன்னு பாருங்க…..

    யாரு இப்பலாம் இப்புடி வேல மெனக்கெட்டு எழுதுறா……நெஜமா..இந்த வயதிலும் ( இங்க வயது என்பது – என்னயிருந்தாலும் கல்யாணம் ஆயிருச்சு….குடும்பம் அது இதுன்னு நெறய கமிட்மென்ட்ஸ் இருக்கும். அந்த அர்த்தத்தில் எழுதியது)முக்கி முக்கி படிச்சு எழுதுறீங்க.நா எழுதும் போது இன்னும் அதிகமான இன்வால்மேன்டுடன் எழுத உங்கள் பதிவு தூண்டுகிறது…இதுல எந்த சர்காசிசமும் இல்ல…..

    Reply
  13. i think serious films are not his forte……A lovely bones நல்ல ஒரு உதாரணம்…ஒருவேள ஃபான்டசி உலகத்தில இருந்து அவரால மீண்டு வர முடியளையான்னு தெரியல……

    Reply
  14. நீங்க சொன்ன “அந்த” பாலு இவரா……

    @பாலு…
    என்ன செஞ்சா நீங்க எழுத வருவீங்க…….எங்களின் கலைத் தாகத்தை தணிக்க ஓடோடி வர வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்……

    @டெனிம்…

    // balu = hollywood bala //

    என் பதிவுல கருந்தேள் ஒரு கமெண்ட் போட்டிருந்தாரே..அதெல்லாத்தியும் படிக்கிறதே இல்லையா…என் பதிவுகளத்தான் படிக்கிறது இல்லைன்னா..கமெண்ட்கள கூடவா….

    // நான் அதைப் பற்றி கொஞ்சம் சொல்லிகிறேன்(உங்கள் அனுமதியுடன்) //

    அவர் அனுமதி குடுக்காமையே போட்டு தீட்டீட்டீங்க…எல்லாம் ஓகே..ஒரே ஒரு தப்பு நடந்து போச்சு…..நீங்க தயார் பண்ணி வெச்சுருந்த முழு பதிவையும் தவறுதலா இங்க கமெண்ட்டா போட்டுட்டீங்க……

    Reply
  15. @Kolandha
    Hi Kolandha..Naa unga bloga padikrathu illa nu neenga nenaika venam..(I’am regularlly following some blog’s and ur’s is one of it..)ungaloda bruce lee’s pathivum romba nallarunchu,BTW naa endha pathivum specialaa ready pannave illa Mr.Karundhel insisted me to put my comment here 🙂

    Reply
  16. பாலா நீங்க பாட்டுக்கு சொலிட்டு போய்டுவீங்க…. இனி கொளந்தைய கைல புடிக்க முடியாதே………..நா ஒரு நாலு நாளைக்கு தலைமறைவாவே இருகேன்

    Reply
  17. ஓகே எனக்கு புரியுது……சும்மா சும்மா தொல்லை பண்ணுதுன்னுதானே இப்படி சொனீங்க….

    Reply
  18. @balu…

    பாஸ்….நீங்க என் பதிவுகள படிங்க….படிக்காம போங்க….அது எங்க மேட்டர் இல்ல…..நீங்க ப்ளாக் எழுதியே ஆகணும்……உங்கள மாதிரி தவப்புதல்வர்கள் இல்லாம கலைத்தாய் தவிச்சு போயிருக்காங்க…….நீங்க எழுதுறீங்களா….இல்ல……அல்லாரும் பாய்ஸ்…முன்னா மாதிரி உங்க வீட்ட சுத்தி ரிங்கா ரிங்கா ரோசஸ்சுன்னு ஓடுவோம்…..(டிரஸ்யோட)…….

    சும்மா இருந்தவன கருந்தேள் தான் சொறிஞ்சு வுட்டுட்டார்…ஒரு பதிவாவது எழுதுங்க…அப்பறம் மத்தத பாக்கலாம்…..

    @டெனிம்….
    யோவ்….இது ஹா.பாலா இல்லைய்யா…..என் பதிவுல உள்ள கமெண்டை தயவு செஞ்சு படிங்க…….ஏன் இப்புடி……உங்களுக்கு ஏன் ஹா.பாலா மேல இப்புடி ஒரு வெறி…அவர இந்தியா வந்தா ஜாக்கிரதையா இருக்க சொல்லணும்….

    Reply
  19. / Mr.Karundhel insisted me to put my comment here / – என்ன நடக்குது இங்க…?????

    Reply
  20. @ boyindahood – 🙂 என்ன கொடும இது 🙂

    @ கொழந்த – //இந்த வயதிலும் // – நடத்துங்க நடத்துங்க 🙂 . . நான் எழுதுவதற்கு ஷ்ரீ ஒரு asset . .ஸோ எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல 🙂 . . அப்புறம், அதே பாலு தான் இவர். என்னை விடவும் நிறைய விஷயம் தெரிஞ்ச ஆள்.

    @ விஸ்வா – எழுத்தாளரா? தப்பு தப்பு. இலக்கியவாதி 🙂 . . அதாம்லே லட்சியம் 🙂 . . ஹீ ஹீ 🙂

    @ முரளி – மிக்க நன்றி. ஜுராசிக் பார்க் விஷயம், எனக்கே ஆச்சரியமா இருந்தது. அப்புறம் வெரிபை பண்ணேன்.

    @ டெனிம் – உங்களோட அடிஷனல் தகவல்கள், இந்தக் கட்டுரையை இன்னும் மெருகேற்றுகின்றன. நான் மேலே ரெண்டு லிங்க் கொடுத்தனே, முடிஞ்சா அதையும் படிங்க. உங்களுக்கு ரொம்பப் புடிக்கலாம்.

    @ கனகு – மிக்க நன்றி. தொடர்ந்து உங்க கருத்துக்களை (நல்லதாவோ கெட்டதாகவோ ) எழுதிக்கினே இருக்கவும்.

    @ உலக சினிமா ரசிகரே – எங்க ஆளே காணோம்னு நினைச்சிக்கினு இருந்தேன். என்னாது பவர் ஸ்டாரா? அகில உலக சூப்பர் ஸ்டார் – மூத்த தளபதி – இப்புடியெல்லாம் சொல்ல மாட்டீங்களா 🙂

    @ MSK – அவரே வந்து இதைப் பார்ப்பாரு 🙂 அப்ப உங்களுக்குப் பதில் போடுவாரு 🙂

    @ பாலு — டேய் . பாகால வந்த தொடர் . .அது எனக்கு நல்லா நினைவிருக்கு. ஜுராசிக் பார்க்ல ஆரம்பிச்சி, அப்புடியே ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்டும் அதுல வரும். எழுதுனது – யாத்ரீகன். ஆனா அதுல வந்த ஜுராசிக் பார்க் தகவல்கள் பல தப்பு. ஏன்னா, அதை நான் பைண்டு செஞ்சி வெச்சிருந்தேன் . . அதை பின்னால படிக்கும்போதுதான் அது தெரிஞ்சுது. இருந்தாலும், அந்த சமயத்தில் (1993 ), இன்டர்நெட் எல்லாம் பெருசா இந்தியாவில் வராத காலத்தில், யாத்ரீகன் இதை எழுதுனதே பெரிய விஷயம். அடிக்கடி வந்து உன் கருத்தை, கமெண்டா போடு. அப்புடியே, நீ எழுத ஆரம்பிக்கணும்னு ஆல்ரெடி கொழந்த கொரல் கொடுக்க ஆரம்பிச்சிட்டுது பார்த்தியா . . 🙂 நீயும் வந்தேன்னா, செம்ம ஜாலியா இருக்கும்ல 🙂

    Reply
  21. ஒ அதுதானே பார்த்தேன் ஹாலி பாலாவாவது கொழந்த ப்ளாக்க படிக்கரதாவது

    Reply
  22. @ kolandha – அது வேற ஒண்ணுமில்ல. இவன் எதுவுமே இங்க வந்து சொல்லாம, எனக்கு போன்ல சொல்லிக்கினு இருந்தானா.. அதுனால, நான் தான் அவனை வந்து, எதுவா இருந்தாலும் ஒழுங்க கமெண்டு போடுறான்னு சொன்னேன். அதுல இருக்குற இன்ஃபோ, எல்லாருக்கும் பயன்படுமுல்ல . அதான்.

    Reply
  23. / ஹாலி பாலாவாவது கொழந்த ப்ளாக்க படிக்கரதாவது /

    என்ன ஒரு obsession அவுரு மேல…..ஏன்யா…..ஏன்…..

    Reply
  24. மைக்கல் ஜாக்சனுக்கு அப்பறம் ஹாலிவூட் பாலாவுக்குத்தான் நெறய ரசிகர்கள் இங்க இருக்காங்க…அதுலயும் டெனிம் மோகன் மாதிரி வெறியர்களும் அடங்குவார்கள்…….இதெல்லாதையும் கருத்தில் கொண்டு எதாச்சும் பண்ணுங்க…..

    Reply
  25. நண்பரே,

    தேடித்தேடி ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை சுருக்கமாக சுவையாக தருகிறீர்கள். தொடர் சூடு பிடித்து விட்டது.

    Reply
  26. எங்கூருக்கு வந்தீங்களா? அடுத்த முறை வரும்போது சொல்லுங்க.

    WETA பற்றி எழுனதுக்கு மகிழ்ச்சி.

    Reply

Join the conversation