LOTR: The Series – 6 – Middle earth and the sets
லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களின் படப்பிடிப்பு, அக்டோபர் 11 – 1999 ல் தொடங்கியது. இனிவரும் கட்டுரைகளில், ஒவ்வொரு பாகத்தையும் பற்றிய விரிவான தகவல்களை முடிந்தவரை பார்க்கலாம். அதற்கு முன், படப்பிடிப்புக்கு முந்தைய pre – production வேலைகளைப் பற்றிப் பார்த்துவிடலாம்.
லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களின் பட்ஜெட் ஒதுக்கப்பட்டு, படப்பிடிப்புத் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர், ஜாக்ஸன் செய்த முதல் வேலை, படங்களின் storyboarding வேலைகள் எப்படிப் போய்க்கொண்டிருக்கின்றன என்று கண்காணித்ததே. 1997 ஆகஸ்டில், கிறிஸ்டியன் ரிவர்ஸ் (Christian Rivers) என்ற ந்யூஸிலாந்தைச் சேர்ந்த விஷுவல் எஃபக்ட்ஸ் வல்லுனரைத் தனது படத்தில் வேலை செய்ய அழைத்தார் ஜாக்ஸன். இந்த ரிவர்ஸ் தான், ஜாக்ஸனின் இதற்கு முந்தைய பல படங்களில் விஷுவல் எஃபக்ட்ஸ் வேலைகளைச் செய்தவர். இவருடன் சேர்ந்து, படத்தின் storyboarding வேலையை, ஜாக்ஸன் செய்ய ஆரம்பித்தார். கூடவே, WETA , படத்தின் ஸிஜி வேலையையையும் செய்ய ஆரம்பித்திருந்தது. இந்த pre – production வேலைகளின் மொத்த இலக்கும் ஒரே ஒரு விஷயம்தான்.
The Middle Earth .
இதனைச் சுற்றியே மற்ற விஷயங்கள் அமைந்தன. எனவே, இந்த மிடில் எர்த்தை வடிவமைப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார் ஜாக்ஸன். மிடில் எர்த் என்பது ஏதோ ஒரு மாயாஜால உலகமாக அமைந்துவிடாமல், முடிந்தவரை நிஜவாழ்வில் நாமெல்லோரும் காணக்கூடிய ஒரு விஷயமாக அமைய வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. இந்த மொத்தப் படத்தையுமே, கூடியமட்டும் உண்மையாக, நாவல்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை மாற்றாமல் எடுக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆகவே, நாவல்களில் விவரித்துள்ளபடியே, மிடில் எர்த், மெதுவே உருப்பெறத் துவங்கியது.
Creating the Middle Earth : The contents
மிடில் எர்த் என்பது என்ன?
டால்கீன் எழுதிய நாவல்கள் அனைத்திலும் இடம்பெறும் கதைகள் நிகழும் ஒரு வெளியே இந்த மிடில் எர்த். தற்போதைய காலத்திலிருந்து கிட்டத்தட்ட ஆறாயிரம் வருடங்கள் முன்னர் இருந்ததொரு வெளி இது என்று டால்கீன் பலமுறை சொல்லியிருக்கிறார். மிடில் எர்த் என்பது ஒரு பரந்துவிரிந்ததொரு நிலப்பரப்பு. அந்தப் பரப்பில், டால்கீன் எழுதிய சம்பவங்கள் நடப்பது, ஒரு சிறிய பகுதியில். அந்த உலகத்தின் பிற பாகங்களைப் பற்றி அவர் அதிகம் எழுதவில்லை.
டால்கீனின் விவரிப்பின்படி, ‘ஆர்டா’ (Arda) என்பது, அக்காலத்திய உலகின் பெயர். இந்த உலகில், மிடில் எர்த் என்பது, ஒரு கண்டம். இந்த மிடில் எர்த்தின் ஒரு புறம், தேவதைகளும், அவர்களது நண்பர்களான மனிதர்களும் வாழ்ந்துவருகின்றனர். மிடில் எர்த்தின் மறுபுறத்தில், கொடும் பூதங்கள் வாழ்கின்றன. இந்த பூதங்களின் அரசனது பெயர், மார்கோத். பல காலமாகவே, இந்த மார்கோத், மனிதர்களையும் தேவதைகளையும் வென்று, மிடில் எர்த்தையும் இந்தப் பூமியையும் வெல்ல வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். பூதங்களுக்கும், மனிதர் மற்றும் தேவதைகளின் கூட்டணிக்கும் இடையில் ஒரு மாபெரும் யுத்தம், இந்த வகையில் நடந்தது. அந்த யுத்தத்தின் முடிவில், மார்கோத் தோற்கடிக்கப்பட்டு, பூமியை விட்டே துரத்தப்பட்டு, வெளியே வரமுடியாததொரு பாழ்வெளியில் சிறைப்பிடித்துவைக்கப்பட்டுவிடுகிறான். அதிலிருந்து அவனுக்கு விடுதலையே கிடையாது. அதிலேயே இருந்து, பல வருட காலம் கழித்து வரப்போகும் பேரழிவான பிரளயத்தில் சிக்கி இறப்பதே அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை.
இந்த மார்கோத்தின் பிரதான தளபதியாக இருந்தவனே சாரோன் (Sauron). மார்கோத் இறந்தபின், எஞ்சியிருந்த அவனது படைகளுக்குப் பொறுப்பேற்று, மறுபடியும் உலகை வெல்லப்போவதாகச் சபதமேற்றான்.
இதுவரை சொல்லப்பட்ட கதை, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் காலத்துக்கு வெகு காலம் முன்னரே நடந்த கதை. டால்கீனின் ‘The Silmarillion ‘ நாவலில் வருவது. இதன்பின்னர் நடந்த விஷயங்களே, ஹாபிட் மற்றும் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவல்களில் விளக்கப்பட்டுள்ளன.
சரி. இப்போது, மிடில் எர்த்தின் வரைபடத்தைப் பார்ப்போம்.
Arda என்பதே டால்கீனின் கதைகளில் வரும் பூமி என்று முதலிலேயே பார்த்தோம். இந்த ஆர்டா, அமன்( Aman) மற்றும் மிடில் எர்த் ஆகிய இரண்டு கண்டங்களால் ஆனது. இந்த இரண்டு கண்டங்களும், Belegaer என்ற சமுத்திரத்தால் பிரிக்கப்பட்டுள்ளன. மிடில் எர்த் என்ற கண்டமே, பல சிறிய நாடுகளால் ஆனது. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நடக்கும் காலத்தில், மிடில் எர்த் எப்படி இருந்தது என்றால்: மிடில் எர்த்தின் மேற்குப் பகுதி, எரியாடோர் (Eriador), காண்டோர் (Gondor), Misty Mountains எனப்பட்ட பனி மலைத் தொடர் ஆகிய பகுதிகளால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் பனிமலைத் தொடரின் உட்புறத்தில்தான், சிறிய மனிதர்களான ட்வார்ஃப்ஸ் எனப்பட்ட மனிதர்களின் இடமான மோரியா (Moria) அல்லது ஹஸாட் டூம் (Khazad – Dum ) என்பது இருந்தது. ஐஸன்கார்ட் என்ற இடம், மிடில் எர்த்தின் தெற்குப் பகுதியில் இருந்தது. இந்தப் பனிமலைகளின் கிழக்கில், ஆண்டூய்ன் (Anduin) என்ற ஆறு. இந்த ஆற்றுக்கும், பனிமலைத் தொடரின் மேற்குப் பக்கத்துக்கும் நடுவே, எல்வ்ஸ் (Elves) எனப்படும் தேவதைகளின் நாடான லோத்லோரியன் (Lothlorien) இருந்தது. நாம் ஏற்கெனவே பார்த்த எரியோடோர் நாட்டில்தான், ஷையர் (The Shire ) என்று அழைக்கப்படும் ஹாபிட்களின் ஊர் இருந்தது. காண்டோர் நாட்டின் கிழக்கில், பெரிய மலைத்தொடர்களின் மத்தியில், மோர்டோர் (Mordor) இருந்தது. இந்த மோர்டோர் தான் , சாரோனின் இருப்பிடம்.
இப்படியாக, மிடில் எர்த் என்பது, ஒரு பெரிய கண்டமாக, டால்கீனால் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இத்தகையதொரு பிரம்மாண்டமான நிலப்பரப்பை, தத்ரூபமாக உருவாக்குவதே ஜாக்ஸனின் முன் இருந்த சவால். இதை ஜாக்ஸன் எப்படி வெற்றிகரமாக எதிர்கொண்டார்?
இதற்காகத்தான் ஸ்டோரி போர்டிங் முறையை அவர் கையாண்டார். டால்கீன் விவரித்துள்ளபடி மிடில் எர்த்தை முடிந்தவரை இயல்பாகவும் நம்பத் தகுந்ததாகவும் ஸ்டோரி போர்டிங்கில் வரைந்துவைத்துக்கொண்டு, இதன்பின் WETA உதவியோடு அந்த மிடில் எர்த்தை திரைப்படத்தில் ஸிஜி மூலமாக எப்படிக் கொணர்வது என்று ஆராய்வதிலேயே ஜாக்ஸனின் பெருமளவு நேரம் கழிந்தது. ஜாக்ஸனுக்கு இதில் பெருமளவு உதவிய விஷயம் – லிப்ஸ்டிக் காமெரா என்று அழைக்கப்பட்ட மிகச்சிறிய அளவு கேமரா. படப்பிடிப்பு நடந்த 400 நாட்களிலுமே, மினியேச்சர் செட்டுகளில் இந்த காமெராவை வைத்து, மிகச்சிறிய அளவு விஷயங்களைக்கூட திறம்படப் படமெடுத்தார் ஜாக்ஸன். இது, பின்னர் அந்தக் காட்சியை ஒரிஜினலாகப் படமாக்கும்போது இன்னமும் இம்ப்ரவைஸ் செய்து எடுக்க வழிவகுத்தது. இந்த நோக்கத்துக்காகவே, மொத்தம் நாற்பதாயிரம் பொம்மை வீரர்களை அவர் வாங்கினார்.
இந்த வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போதே, அலன் லீ ( Alan Lee) மற்றும் ஜான் ஹோ (John Howe) என்ற இருவரை, ஜாக்ஸன் தனது உதவிக்காக அமர்த்தினார். இவர்கள் இருவரும் சாதாரண ஆட்களல்லர். இதுவரை வெளிவந்திருந்த லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதைகளுக்குப் படம் வரைந்துகொண்டிருந்தவர்கள் இவர்கள். இவர்களை உள்ளே இழுத்த நோக்கம், டால்கீன் மனதில் எண்ணியிருந்த மிடில் எர்த்தையும் கதாபாத்திரங்களின் வடிவத்தையும் அப்படியே படத்தில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கமே. அதேபோல், படத்தின் பல புகழ்பெற்ற காட்சிகள் (உதா: பில்போ பேக்கின்ஸின் வீடு, சாருமானின் பெரிய கறுப்புக் கோபுரம், ஹெல்ம்’ஸ் டீப் பள்ளத்தாக்கு, கண்டால்ஃப் தாத்தா மற்றும் கண்டால்ஃப் சண்டையிடப்போகும் நெருப்புப் பூதமான பால்ரோக் (Balrog) ஆகிய அத்தனை விஷயங்களும்), இந்த இரண்டு ஓவியர்களின் முந்தைய சித்தரிப்பே.
லீ மற்றும் ஹோ, படத்தின் டிசைன்களைத் தங்களுக்குள் பிரித்துக்கொண்டனர். மினாஸ் திரித், மோரியா, எடோராஸ் மலை, ஹெல்ம்’ஸ் டீப் பள்ளத்தாக்கு (இவற்றைப் பற்றி விரிவாகப் பின்னால் பார்க்கப்போகிறோம்) ஆகியவைகளை இம்ப்ரவைஸ் செய்யும் பொறுப்பு , லீயிடம் வழங்கப்பட்டது. கூடவே, படத்தில் காண்பிக்கப்படும் ரிவண்டெல் நகரத்தின் பெயின்டிங்குகளையும் லீ வரைந்துகொடுத்தார் (இஸில்டோர், சாரோனின் விரலை வெட்டும் பெயிண்டிங் அந்த நகரில் இருக்கும். நண்பர்கள் பார்த்திருக்கலாம்) ஹோ, படத்தின் ஆயுதங்களையும், கவசங்களையும் பெருமளவில் டிசைன் செய்தார். கூடவே, படத்தின் இன்னபிற இடங்களையும் டிசைன் செய்வதில் உதவினார்.
இந்த டிசைன்களை சிறிய மாடல்களாக்கும் வேலை, பின்பு தொடங்கியது. இதைச் செய்தவர், க்ரான்ட் மேஜர் (Grant Major). அதன்பின், நிஜமான செட் நிர்மாணிக்கும் பணி துவங்கியது. படத்தின் கலை, டான் ஹென்னாவிடம் (Dan Hennah) ஒப்படைக்கப்பட்டது. செட்கள் நிர்மாணிக்கும் பணியில் பீட்டர் ஜாக்ஸனுக்குப் பெரிதும் உதவியது, ந்யூஸிலாந்து ராணுவம். ஆம். படத்தின் ஆரம்பத்தில் வரும் ஹாபிட்கள் வாழும் பகுதியான ஷையரை முற்றாக நிர்மாணித்தது, இந்த ராணுவம் தான். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு ஒரு வருடம் முன்னர், இந்த செட் நிர்மாணிக்கப்பட்டது. ஏனெனில், அந்த இடத்தில் இருக்கும் செடி கொடிகள் நிஜமாகவே வளர்ந்தால் படத்துக்கு ஒரு இயல்பான லுக் கிடைக்கும் என்ற சிந்தனையே காரணம்.
இவை, படத்தின் கலை சம்மந்தப்பட்ட விஷயங்கள். இதே நேரத்தில், WETA வில் என்ன நடந்தது?
தொடரும் . . . .
Note:- LOTR Map courtesy – http://www.douglas.eckhart.btinternet.co.uk/maps.html
என்ன மாதிரி பாலகர்கள் உங்களுக்கு கமெண்ட் போடவே கூச்சமா இருக்கு……….
This comment has been removed by the author.
// இனிவரும் கட்டுரைகளில், ஒவ்வொரு பாகத்தையும் பற்றிய விரிவான தகவல்களை முடிந்தவரை பார்க்கலாம் //
இப்போதைக்கு இந்த தொடர் முடியாது போல….
போன கமென்ட்க்கு முன்னால அய்யா…..ஜாலி….விட்டுப்போச்சு…..
காலயில ஒழுங்கா படிச்சிட்டு வரேன்……GD
வந்தோம்ல செகண்ட்..
தங்களது எழுத்து நடை மிகவும் நன்றாக உள்ளது. விறுவிறுப்பாக கொண்டு செல்கிறீர்கள். எப்போது தொடரும் போட வேண்டும் என்பதருக்கு ஒரு தனி கலை. அது தங்களுக்கு கை வந்ததாகவே நினைக்கிறேன். நான் உங்கள் ப்ளாக் கடந்த 5 வருடங்களாக படித்தாலும் இது தான் முதன் முறை கமெண்ட் போடுவது. தொடர்ந்து எழுதுங்கள்.
பிரம்மிக்க வைக்குரிங்க ராஜேஷ்… குறிப்பா The Silmarillion நாவலோட சுருக்கம் அட்டகாசம்.. இந்த தொடர் ல நான் ரொம்ப எதிர் பார்த்த எபிசோடு இது… Middle earth டால்க்கினால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதம்… என்ன தல Gondor க்கு வடக்கே இருக்கும் rohans பற்றி சொல்லாம விட்டுட்டிங்களே.. middle earth இல் எனக்கு மிக பிடித்த கலாசாரம் ரோகன்களுடயது…
@ கொழந்த – ஷ்யூர். நாளை பார்ப்போம் 🙂 .. கண்டிப்பா இது இப்போதைக்கி முடியாது. இன்னும் மெயின் மேட்டருக்குள்ளாரயே போவலையே 🙂
@ லக்கி – இந்த ‘வந்தோம்ல’ மெஸேஜ் உங்க பஞ்ச் டயலாக்கா 🙂
@ முத்து குமரன் – நீங்க இங்க வந்ததில் சந்தோஷம். எல்லாம் உங்களைப் போன்ற நண்பர்கள் கொடுக்கும் ஆதரவுதான். வீட்டில் அனைவரையும் கேட்டதாக சொல்லவும். சென்னை வரும்போது கட்டாயம் சந்திக்கலாம் ..:-)
@ முரளி – ரோஹான்ஸ் பத்தி சொல்ல மறந்துட்டேன் 🙂 .. அதுனால என்ன? இனி வரும் எபிஸோட்ல, காஸ்டிங் பத்தி சொல்லும்போது, இதுல வர்ர ஒவ்வொரு வகையான கதாபாத்திரங்கள் பத்தி சொல்லும்போது, ரோஹான்ஸ் பத்தி பார்த்திரலாம் 🙂
🙂 :)…கண்டிப்பா … ரோஹான்ஸ் பத்தி நிறைய எதிர் பாக்குறேன்.. அப்புறம் Elves பத்தியும் நிறைய… இந்த படத்தில் Gondor அருமையாக மிகுந்த கலை நயத்துடன் உருவாக்க பட்டிருக்கும்… இந்த படத்தில் Gondor வரும் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து…
செமயா போது.. இத எப்போ புக்கா போட போறிங்க….
அப்புறம் நீங்க 5 வருஷமாவா எழுதுரீங்க…
evvalavu than blogs padichaalum comments podurathe illa nan..ennayéé comments poda vachudinka neenka killadithan ponkaaa!
//இனி வரும் எபிஸோட்ல, காஸ்டிங் பத்தி சொல்லும்போது, இதுல வர்ர ஒவ்வொரு வகையான கதாபாத்திரங்கள் பத்தி சொல்லும்போது,//
நான் இதை எழுதுங்கன்னு கேக்க நெனைச்சேன்… பீட்டர் ஜாக்சன் படத்துல சும்மா வந்து எங்கியாச்சும் தலைய காட்டிட்டு போயிருக்காரா? டவுட்டு…
Anand – என்னோட ஆங்கில ப்ளாக், மூணு வருஷம். அப்பால தமிழ் ப்ளாக், ரெண்டு வருஷம். ஸோ, டோட்டலா அஞ்சு வருஷம்… 🙂 . . முத்து குமரன், மொதல்லருந்து என் ப்ளாக்ஸ் படிக்கிறாரு . . அதான் அப்புடி போட்ருக்காரு 🙂 .
புக்கா போடணுமா? ஆஹா… போட்ருவோம் ஈ புக்கு 🙂
@ அதீஸ் – படையப்பால ரம்யா கிருஷ்ணன் சொல்ற மாதிரியே இருக்கு உங்க கமெண்டு ( நீ ரொம்ப லக்கி. ஏன்னா, எனக்கே உன்ன புடிச்சிருக்கே ) . . ஹீ ஹீ
@ தமிழினியன் – யெஸ். மூணு பார்ட்லயும் ஜாக்ஸன் தலையைக் காட்டியிருக்காரு. அதைப் பத்தியும் பின்னால விவரமா பார்க்கப்போறோம் 🙂
Passion -இந்த ஒருவார்த்த தான் தோணுது….ஜாக்சனின் உழைப்பை பார்க்கும் போது….
ஏன் நம்மாளுனங்களால மட்டும் இதே passionனோட பொன்னியின் செல்வனையோ வேற கதைகளையோ எடுக்க முடியலன்னு தெரியல……பொருளாதார காரணங்களா ??
பொன்னியின் செல்வன் படம் குறித்து சுஜாதா ஒரு தடவ எழுதியிருந்தார்…..மூணு தலைமுறையும் தாண்டி எல்லோராலும் ரசிக்கப்பட்ட நாவலை திரைப்படமாக எடுத்து அனைவரையும் திருப்திபடுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமில்லன்னு……
எனக்கு அப்புடி தோணல……நீங்க என்ன சொல்றீங்க……
ஓ …நா உங்க ஆங்கில ப்ளாக்க பாலோ பண்ண ஆரபிச்சு நாலு நாளுலயே இழுத்து மூடிடிங்க …, அத அவ்ளோ நாளா எழுதிறிங்கன்னு தெரியாது .., 🙂
@கொழந்த சமகால இயக்குனர்கள் யாராலும் எடுக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.
@ கொழந்த & ஆனந்த் – பொன்னியின் செல்வனை, கட்டாயம் எடுக்க முடியும்னு எனக்குத் தோணுது. ஆனால், யார் அதைச் செய்வது? இன்னொரு காரணம், லார்ட் ஆப த ரிங்ஸ் நல்லா ஒடுனதுக்குக் காரணம், அதோட விஷுவல் எபெக்ட்ஸ். பொன்னியின் செல்வனில், முக்கி முக்கி யோசித்தாலும், இரண்டாம் பகுதியின் கடைசியில் வரும் கடல் சுழலில் மட்டும்தான் விஷுவல் எபெக்ட்ஸ் பின்ன முடியும். மற்றபடி, அது ஒரு அரசியல் நாவல் மட்டுமே. அதை, இருவர் பட ரேஞ்சில் எடுத்தால் நன்றாக இருக்கும். ஆகவே தான் நான் சொல்கிறேன். தமிழில் இந்த அளவு ரசிகர்களைக் கட்டிப்போடும் நாவல் எதுவுமே இதுவரை இல்லை. வேண்டுமென்றால், லார்ட் ஆப த ரிங்ஸ் படத்தைத் தூக்கிச் சாப்பிடும் அளவு மகாபாரதத்தை எடுக்க முடியும். ஜாக்சன் போன்ற பேஷனோடு ஒரு இயக்குனர் துணிந்தால். ஆனாலும், இந்தியாவில் பல்வேறு constraints இருக்கின்றன. உதா: டூயட், காமெடி இத்யாதி. ஆகவே, இந்தியாவில் இப்படி ஒரு படம் வரவே வராது என்பது என் எண்ணம்.
// இந்தியாவில் இப்படி ஒரு படம் வரவே வராது என்பது என் எண்ணம் //
ஏய்ய்ய்ய்ய்ய்யி………
// அப்புறம் நீங்க 5 வருஷமாவா எழுதுரீங்க //
யோவ்…ஆனந்து………..இந்த நூற்றாண்டின் சிறந்த பதிவர் விருது வாங்குனவற பாத்து என்ன கேள்வி கேக்குறீங்க ????? என்ன இறுமாப்பு உங்களுக்கு ?
விக்கிரமாதித்தன் கதைகள் – அட்டகாசமா எடுக்கலாம்னு நெனைக்கிறேன்….
முன்னாடி தூர்தர்சன்ல வேதாள கதைகள் போடுவாங்க…ஞாபகம் இருக்கா…
விக்ரமாதித்யன் கதைகள் எடுக்கலாம் தான். தூர்தர்ஷன் நினைவிருக்கு. ஆனால், அவை, சிறிய கதைகளாச்சே. மே பி பட்டி & விக்ரமாதித்யன் வாழ்க்கையை, சுவாரஸ்யமா எடுக்க முடியும். ஆனா, மகாபாரதம், ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஒரே கதை. விறுவிறுப்பா எடுக்க முடியும். அதுல பல கிளைக்கதைகள் உண்டு. எல்லாமே மாயாஜாலம் கலந்த கதைகள்ன்றதுனால, போர்க்களங்கள் இத்யாதி விஷயங்கள் சூப்பரா இருக்கும். எஸ்பெஷலி, க்ளைமேக்ஸ் குருக்ஷேத்திர யுத்தம்.
Excellent Begining.
Thx for this series
ஷங்கர்:ஸ்டோரி போர்டா… அப்படின்னா என்னா??????????
பாலா:ஸ்டோரி போர்டா…கருந்தேள் ஏதோ புதுசா சொல்றானே…டேய்…புரடக்சன் மானேஜர்ட்ட சொல்லி அடுத்த படத்துக்கு 500 ரோல் பிலிம் ரெடி பண்ண சொல்லு.
கவுதம் மேனன்:நான் கதையே பாதி மட்டும் ரெடி பண்ணிகிட்டு சூட்டிங் போற ஆளு…இது நமக்கு உதவாது.
கமல்:நான் இயக்குற படத்துக்கு ஸ்டோரி போர்டு தயாரிப்பதை வேடிக்கையாக அல்ல…வாடிக்கையாக கொண்டிருப்பவன் என்று சொல்வதில் தற்பெருமை பொதிந்திருக்கிறது என்றால் கூட உண்மையை ஒத்துக்கொள்ளும் பரம[க்குடி] யோக்கியன் நான்.
@ உலக சினிமா ரசிகன்
அப்படியே மணிரத்னம் பாஸூ
@உலக சினிமா ரசிகன்
கே எஸ் ரவிக்குமார்
@தேளு
lotrக்கு நடுவில் வேற வேற படங்களையும் கொஞ்சம் அறிமுகப்படுத்தலாமே :)))
இந்த மாதிரி மொக்க மடசாம்பராணி கேவலமான படங்களை பற்றி எழுதுவதை விட்டு “Another Year” போன்ற படங்களை பற்றி விமர்சனம் செய்யலாமே?!
@ சாரு புழிஞ்சதா – இந்த மாதிரி மொக்க மடசாம்பிராணித்தனமா கேவலமா பயந்து கமென்ட் போடுரதுக்குப் பதில், உண்மையான ஐடில தில்லா கமென்ட் போடலாமே ? டப்பியை சாத்திக்கினு ஓடிரு 🙂