LOTR: The Series–8–Casting !

by Karundhel Rajesh June 13, 2011   war of the ring

படத்தின் pre-production முற்றிலும் ரெடி. அடுத்துச் செய்யவேண்டியது, நடிகர்களைத் தேர்வு செய்தல்.

மற்ற படங்களைப் போல், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களுக்கு நடிகர்களைத் தேர்வு செய்வது, அவ்வளவு சுலபமில்லை என்பது ஜாக்ஸனுக்குத் தெரியும். ஏனெனில், இக்கதைகளை, ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கெனவே படித்திருந்தது ஒரு தவிர்க்கமுடியாத காரணம். இப்படி ஒரு cult க்ளாஸிக்காக விளங்கும் ஒரு நாவலை, டக்கென்று சிலபேரை நடிகர்களாகத் தேர்வு செய்து படமாக்கி விடுவது நடக்க இயலாத விஷயம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது (இந்த இடத்தில், பொன்னியின் செல்வனின் நினைவு தவிர்க்க முடியாமல் எழுகிறது. பொன்னியின் செல்வனை சமீபத்தில் படமாக்க இயக்குநர் மணிரத்னம் முயன்றதும், அந்தப் படத்தில் நடிக்கத் தேர்வுசெய்யப்பட்ட ‘தளபதி’ நடிகர் செய்த பாலிடிக்ஸால் படம் கைவிடப்பட்டதும், மீடியாவில் கசிந்த செய்திகள். என் கருத்து என்னவெனில், பொன்னியின் செல்வனைப் போன்ற ஒரு நாவலைப் படமாக்குகையில், முற்றிலும் புதுமுக நடிகர்களைப் போட்டு எடுப்பது நல்லது என்பதேயாகும். இயக்குநருக்கு ஏற்கனவே ஒரு பிரம்மாண்டமான ஸ்டார் வேல்யூ உண்டு. ஆகவே, கதாபாத்திரங்களுக்குப் பொருந்தும் வகையில் உள்ள புதுமுகங்களைத் தேர்வு செய்வது அவ்வளவு கடினமான வேலை அல்ல. இதைத்தான் பீட்டர் ஜாக்ஸன் கச்சிதமாகச் செய்தார். அதைவிட்டுவிட்டு, இந்த நாவலுக்கே சற்றும் சம்மந்தமில்லாத ஒரு நடிகரைப் போட்டால், இப்படித்தான் பிரச்னைகள் எழும். இந்த நடிகர், 3 – இடியட்ஸின் தமிழ் ரீ மேக்கில் நடிப்பதும், எனக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், அமீர்கானின் ரோலுக்குச் சற்றும் பொருத்தமில்லாமல் நடிக்கக் கூடியவர்களில், அன்னாருக்கே முதலிடம். குறிப்பாக, படு எமோஷனலான காட்சியையும், ஞமஞம என்று வாயையே திறக்காமல் முணுமுணுக்கும் இவரது ‘நடிப்பைப்’ பார்த்து பயங்கரமாகக் கடுப்பாகியிருக்கிறேன். எந்தவிதத் திறமையும் இல்லாமல், தமிழ்த் திரையுலகைக் கெடுத்துக் கொண்டிருக்கும் இவரைப் போன்ற கதாநாயகர்கள் இருப்பது, தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனையேயன்றி வேறில்லை).

Frodo Baggins – ரைட். லார்ட் ஆஃப் த ரிங்ஸுக்கு வருவோம். ஃப்ரோடோவை மறக்க முடியுமா? ஃப்ரோடோ இல்லையென்றால் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் இல்லை. சொந்த விறுப்புவெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல், மோதிரத்தை அழித்தே தீர வேண்டும் என்று லட்சியத்தில் பின் வாங்காத நல்ல மனிதன். அன்பான உள்ளம் படைத்தவன். படத்தில், தலையாய கதாபாத்திரமாகிய ஃப்ரோடோவாக நடிப்பதற்கு, ஜாக்ஸன் மேக்கப் டெஸ்ட் செய்த மொத்த நடிகர்கள், 150 . இருந்தாலும், அவருக்கு ஒரு சரியான ஆள் கிடைத்திருக்கவில்லை. அந்த நேரத்தில் தான், இலைட்ஸா வுட், ஃப்ரோடோவுக்கான காஸ்ட்யூம்கள் போட்டுக்கொண்டு, ஒரு மலை மீது நின்று கொண்டு, நாவலில் இருந்து சில வரிகளைப் படித்து, அந்த ஆடிஷன் டேப்பை பீட்டர் ஜாக்ஸனுக்கு அனுப்பியிருந்தார். அசுவாரஸ்யமாக அந்த டேப்பை ஓடவிட்ட ஜாக்ஸனுக்கு ஆச்சரியம் ! அவர் மனதில் நினைத்து வைத்திருந்த ஃப்ரோடோ, அந்த டேப்பில் இருந்தான். படு குஷியாக, படத்தின் முதல் கதாபாத்திரமாக, இலைட்ஸா வுட் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இலைட்ஸா வுட் ஏன் அப்படி செய்யவேண்டும்? அவருக்கு அந்தக் கதாபாத்திரத்தின் மீது இருந்த ஈர்ப்பே காரணம்.

Gandalf – படத்தின் பீஷ்ம பிதாமகர். படம் நெடுகிலும், மோதிரத்தைக் கொண்டுசெல்லும் ஃபெலோஷிப் நண்பர்களுடன் பிரயாணித்து, அவர்களுக்குத் தேவையான இடத்தில், தனது சக்திகளைக் கொண்டு உதவுபவர். லார்ட் ஆஃப் த ரிங்ஸின் மிடில் எர்த்தில் வாழ்ந்த மந்திரவாதிகளில், இவருக்கு இரண்டாமிடம் (முதலிடம், சாருமானுக்கு). படத்தின் முதலிரண்டு பகுதிகளில், காண்டால்ஃப் த க்ரே என்ற பெயரில் சாதாரண மந்திரவாதியாகவும், மூன்றாவது பகுதியில், காண்டால்ஃப் த வைட்டாகவும், பட்டையைக் கிளப்புபவர். இந்தக் கதாபாத்திரத்துக்கு, பழுத்த நடிகர் ஒருவர் வேண்டும் என்பது ஜாக்ஸனின் எண்ணம். ஹாலிவுட்டைப் பொறுத்தவரை, ‘பழுத்த’ என்ற வார்த்தை மூளையில் உதித்துவிட்டாலே, இயக்குநர்கள் சிந்திப்பது இருவரை மட்டுமே. ஒருவர், கிளின்ட் ஈஸ்ட்வுட். மற்றொருவர், ஷான் கானரி. கிளின்ட் ஈஸ்ட்வுட்டிடம் போய், ‘காண்டால்ஃபாக நடிக்கிறீர்களா?’ என்று கேட்டால், மனிதர் சுட்டுத்தள்ளி விடுவார் என்பதால், ஷான் கானரியிடம் கேட்க முடிவு செய்தார் ஜாக்ஸன். கேட்கவும் செய்தார். ஆனால், கானரியோ, முழுக்கதையையும் கேட்டுவிட்டு, ‘என்னய்யா இது ஒன்றுமே புரியவில்லையே?’ . . காண்டால்ஃப் என்றால் யார்? என்று ஜாக்ஸனிடம் கேட்டதால், ஜாக்ஸன் அவரை ரிஜக்ட் செய்துவிட்டு, நமது எக்ஸ் மென் புகழ் பாட்ரிக் ஸ்டீவர்ட்டிடம் சென்றார். ஆனால் ஸ்டீவர்ட்டோ, திரைக்கதை சரியில்லை என்று அந்த ரோலை நிராகரித்துவிட்டார். ஆகவே, இந்தப் பழுத்த நடிகர்கள் இல்லை என்றாகிவிட்டபின், வேறு யாரைப் போடுவது என்று ஜாக்ஸன் சிந்தித்தபோதுதான், இயான் மெக்கெல்லன் நினைவு வந்தார். பாட்ரிக் ஸ்டீவர்ட் நடித்த அதே எக்ஸ் மென்னில், வில்லன் மெக்னீடோவாகப் பின்னியவர். ஆனால், மெக்கெல்லன், அதே எக்ஸ் மென்னால், இன்னொரு சிக்கலில் இருந்தார். அந்தப் படமே அப்போதுதான் ஆரம்பிக்கப்படப் போவதாக இருந்தது. ஆகையால், அந்த ஷூட்டிங் நேரத்தில், எப்படி இதில் நடிப்பது? இந்தச் சிக்கல், நமது ராபர்ட் ஷேவுக்குத் தெரிந்தது (நினைவிருக்கிறதா? ந்யூலைன் உரிமையாளர். ஜாக்ஸனிடம், ‘இரண்டு படங்கள் எதற்கு’ என்று கேட்டு பீதியைக் கிளப்பியவர்). உடனடியாக மெக்கெல்லனைச் சந்தித்த ஷே, தனக்கேயுரிய ஸ்டைலில், ‘என்னிடம் அதை விட்டுவிடுங்கள்’ என்று மணிரத்னம் பாணியில் உறுமினார் (அவர் நிஜமாகவே உறுமியதாக, மெக்கெல்லன் சொல்கிறார்). இரண்டே நாட்களில், மாயமந்திரம் நடந்ததைப் போல, ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம், மெக்கெல்லன் லார்ட் ஆஃப் த ரிங்ஸில் நடிக்கலாம் என்று அனுமதி வழங்கி விட்டது. பின் என்ன? காண்டால்ஃபாக நடித்து, நமது உள்ளத்தைக் கொள்ளை கொண்டார் மெக்கெல்லன்.

Aragorn – இஸில்டோரின் வாரிசு. தன்னந்தனியாகச் சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞன். ஃபெலோஷிப்புக்காகத் தன் உயிரையும் கொடுப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்தவன். அழகிய தேவதை ஆர்வெனின் மனதைத் திருடிய காதலன். எதற்கும் பயப்படாத வீரன். இத்தகைய கதாபாத்திரத்துக்கு, முதலில் அழைக்கப்பட்டவர், நிகலஸ் கேஜ். ஆனால், ஏதோ காரணங்களைச் சொல்லி, விலகிக்கொண்டார் (நல்லவேளை). அதன்பின், ட்ரிபிள் எக்ஸ் நாயகன் வின் டீசல். மூன்றாவதாக இந்தக் கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்யப்பட்டு, இறுதியில் நடிக்கவும் அழைக்கப்பட்ட நபர், ஸ்டூவர்ட் டௌன்சென்ட் (Stuart Townsend). ஆனால், படப்பிடிப்பில் இருந்த அத்தனை நபர்களாலும், கதாபாத்திரத்துக்குப் பொருந்தாத, மிக இளைய மனிதராக இருக்கிறார் என்று சொல்லப்பட்டு, அதனால் இப்படத்திலிருந்து தூக்கப்பட்டார் டௌன்சென்ட். இதன்பின், இந்தப் பாத்திரத்துக்குப் பேசப்பட்டது, ரஸல் க்ரோ. ஆனால், தான் ஏற்கனவே இதுபோன்ற ஒரு பாத்திரத்தில் நடித்திருந்ததைக் காரணம் காட்டி (கிளாடியேட்டர்), இப்படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டார். இந்தச் சூழ்நிலையில், தயாரிப்பாளர் ஆர்டெஸ்கியின் சிபாரிசின் பேரில், விக்கோ மார்ட்டென்ஸன் என்ற நடிகர், ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது மகன், இந்த நாவல்களின் விசிறி. ஆகவே, அவன் அளித்த புத்தகங்களை, ந்யூஸிலாந்து வரும் வழியில், விமானத்தில் படிக்க ஆரம்பித்தார் இந்த நடிகர். உண்மையில், ‘என்னால் நடிக்க இயலாது என்று சொல்ல பயந்துதான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்’ என்று அவர் பிந்நாட்களில் சொல்லியுள்ளார். நடிக்க வந்த சில நாட்களிலேயே, கதாபாத்திரத்துடன் ஒன்றி, மெதட் ஆக்டிங் செய்ய ஆரம்பித்தார் மார்டென்ஸன். அதாவது, செல்லும் இடங்களுக்கெல்லாம், தனது கத்தியைத் தூக்கிக்கொண்டு அலைய ஆரம்பித்தார்.

Boromir – காண்டோர் நகரத்து அமைச்சரின் மகன். இஸில்டோரின் வழிவந்த மன்னர்களில், மினார்டில் என்ற மன்னரின் மரணத்துக்குப் பிறகு, காண்டோர் நகரம், அமைச்சர்களாலேயே ஆளப்பட்டு வருகிறது. அந்த அரச பரம்பரையின் வாரிசுகள், காண்டோர் நகருக்கு வருவதில்லை. இந்த போரோமிர், அப்படி காண்டோரைத் தற்போது ஆண்டுவரும் அமைச்சரின் மகன். போரோமிரின் கோபம் என்னவென்றால், வில்லன் சாரோனின் மார்டோர் என்ற இருப்பிடத்துக்கு மிக அருகில் இருப்பது இந்த காண்டோர் நகரம். எனவே, சாரோன் தனது படைகளுடன் வெளிவந்தால், முதலில் தாக்கப்படப்போவது காண்டோர் தான். ஆகவே, காண்டோர் நகரின் வீரர்களின் தியாகத்தினால் தான் மற்ற நாடுகள் உயிர்வாழ்கின்றன. இந்த சூழ்நிலையில், எப்படியாவது தங்கள் நாட்டின் சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பது போரோமிரின் எண்ணம். இதனால்தான், முதல் பாகத்தில், மோதிரத்தின் மீது ஆசை கொண்டவனாகவே இருக்கிறான். தனது இந்த எண்ணத்தை வெளிப்படையாக ஃப்ரோடோவிடம் சொல்லவும் செய்கிறான். இறுதியில், அரகார்னின் நண்பனாக மாறி, இறந்தும் போகிறான். இந்தக் கதாபாத்திரத்துக்கு, லயாம் நீசனின் பெயர் அடிபட்டது. ஆனானப்பட்ட ப்ரூஸ் வில்லிஸ் ஆசைப்பட்டும், இறுதியில், இந்தக் கதாபாத்திரம், கோல்டன் ஐ வில்லன் ஷான் பீனுக்குச் சென்றது (வாயே திறக்காத வில்லன் என்று ஷான் பீனுக்கு ஒரு பெயர் உண்டு என்பது துணுக்குச் செய்தி).

Legolas – வில்வித்தையில் தேர்ந்த வீரன். தனது அம்புகளைக் கொண்டு, தொலைதூரத்தில் இருக்கும் ஒரு சிறிய ஈயைக்கூட தெளிவாக அடிக்கும் தேவன். த்ரான்டுய்ல் என்ற மன்னனின் மகன். மிர்க்வுட் என்ற பிரதேசத்தின் இளவரசன். ஃபெலோஷிப்புடன் பாதுகாவலாகச் செல்லும் நபர்களில் ஒருவன். கிம்லியின் பிரதான விரோதியாக இருந்து, பின் மெதுவே கிம்லியின் ஆத்ம நண்பனாக மாறுபவன். இந்த வேடத்துக்கு, ஆர்லாண்டோ ப்ளூம் என்ற புதிய நடிகர் தேர்வு செய்யப்பட்டார்.

Gimli – ட்வார்ஃப்ஸ் என்று அழைக்கப்படும் சிறிய மனிதர்களின் பிரதிநிதியாக இந்நாவல்களில் வரும் கதாபாத்திரம். எல்ஃப்களை பரம்பரை விரோதியாகக் கருதுவது கிம்லியின் வழக்கம். குறிப்பாக, லெகோலாஸை அறவே பிடிக்காத நபர் கிம்லி. லெகோலாஸின் தந்தை த்ரான்டுய்லுக்கும், கிம்லியின் தந்தை க்லோய்னுக்கும் இருந்த விரோதமே காரணம். அதிலும், த்ரான்டுய்ல், க்லோய்னை ஒருமுறை சிறையில் தள்ளியிருக்கிறார். ஆகவே, இயல்பாகவே லெகோலாஸின் மீது கோபமுள்ளவர் கிம்லி. இருந்தாலும், முதல் பாக மத்தியில், தேவதை காலாட்ரியேல் என்னும் அரசியைச் சந்தித்ததும், அவளது அழகில் மெய்மறந்து, எல்ஃப்களின் மீது உள்ள விரோதம் மாறி, லெகோலாஸுடன் சிநேகம் பாராட்டும் கதாபாத்திரம். இதனை ஏற்றவர், ஜான் ரைஸ் டேவீஸ். இக்கதாபாத்திரத்துக்காக, தினமும் நான்கரை மணி நேரம் இவருக்கு மேக் அப் செய்யப்பட்டது. இதனால், பட முடிவில், இவரது கண்களைச் சுற்றியுள்ள தோல் உரிந்து, அவஸ்தைப்பட்டார் (ஆனால், நம்மூர் ஹீரோக்கள் போல், ‘ஆ . .ரெண்டு மணி நேரம் மேக்கப் போட்டுகிட்டேன். என் சொந்த வீட்ல இருக்குறவங்களுக்கே என்னை அடையாளம் தெரியலை. இந்த மாதிரி மேக்கப் இந்தியாலயே போட்ட முதல் ஆள் நான் தான்றதை நான் சொல்லல.. வேஸ்ட்மோரே ச்சீ . .வெஸ்ட்மோரே சொல்லிருக்காரு. இது தமிழனுக்கே பெருமை.. ஆ’ என்றெல்லாம் ஓலமிடாமல், அமைதியாக நடித்திருப்பார் இவர்).

Saruman – காண்டால்ஃபின் இனமான இஸ்தாரி (இஸ்திரி, இச்சாதாரி ஆகிய தமிழ்ப்பட வார்த்தைகள் நினைவு வந்தால் நான் பொறுப்பல்ல) என்று அழைக்கப்படும் மந்திரவாதிகளின் தலைவர். லார்ட் ஆஃப் த ரிங்ஸில் மொத்தம் ஐந்து மந்திரவாதிகளின் வர்ணனை வருகிறது. அவர்களில் இருவரே சாருமானும் காண்டால்ஃபும். இந்த ஐவரில் , சாருமானே தலைவர். அவரே, அனைத்தும் அறிந்தவர். ஐஸன்கார்ட் என்ற பலமான கோட்டையே இவரது இருப்பிடம். இவரது சின்னம், தூய வெள்ளைக் கை. சிறுகச்சிறுக சாரோனால் மூளைச்சலவை செய்யப்பட்டு, வில்லனாக மாறி, உருக் – க்ஹாய் என்ற, ஸ்பெஷல் பூதங்களை உருவாக்கியவர். ‘சாருமான் த ஒயிட்’ என்ற பெயரில் உலா வருபவர். இவரது கதாபாத்திரம், பிறவி டிராகுலா க்றிஸ்டோஃபர் லீயிடம் தரப்பட்டது. லீ, இந்த லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவல்களை, வருடம் ஒரு முறை படிக்கும் சாங்கியத்தைத் தவறாமல் செய்து வந்ததும் ஒரு காரணம். காண்டால்ஃபாக நடிக்கத்தான் இவரை முதலில் அணுகினர். ஆனால், மனிதர் படு வயதான ஆளாக இருந்ததால், சாருமானாக மாறினார்.

Lady Galadriel – மிடில் எர்த்தில் வாழ்ந்துவந்த எல்ஃப்களிலேயே மிகுந்த பலம் வாய்ந்தவரும், மிகுந்த அழகுடையவருமான இந்தத் தேவதை, பன்னெடுங்காலமாக வாழ்ந்துவருவதாகச் சரித்திரம். எல்ராண்ட் மன்னனின் மாமியார் இவர். இவரது மகளே ஆர்வெனின் தாய். படத்தில், இந்தக் கதாபாத்திரம், கேட் ப்ளாஞ்செட் நடிப்பில் மிளிர்ந்தது. இந்த கலாட்ரியேலைப் பார்த்து மெய்மறந்துதான், கிம்லி, இவரது நீண்ட தங்க முடியில் ஒரு முடியைக் கேட்க, அவருக்கு மூன்று முடிகள் கிடைத்ததாக கிம்லியே சொல்லும் நிகழ்ச்சி, ஃபெலோஷிப் ஆஃப் த ரிங் படத்தில் உண்டு. இந்த நிகழ்ச்சிக்குப் பின் தான் கிம்லிக்கும் லெகோலாஸுக்கும் நட்பு மலர்கிறது.

Arwen – எல்ராண்ட் எனப்படும் எல்ஃப் மன்னனின் மகள். இந்த எல்ராண்ட், பல்லாயிரம் வருடங்கள் முன்னர் நடந்த யுத்தத்தில், இஸில்டோர், சாரோனின் மோதிரம் அடங்கிய விரலைக் கொய்தபோது, இஸில்டோரின் படைக்கு உதவியவர். தற்போது, மனிதர்களிடமே மிடில் எர்த்தின் முழுப்பொறுப்பையும் கொடுத்துவிட்டு, தங்களுடைய உலகுக்குச் செல்லக் காத்திருப்பவர். மேட்ரிக்ஸ் படத்து வில்லன் ஹ்யூகோ வீவிங் ஏற்ற கதாபாத்திரம் இது. இந்தக் கதாபாத்திரத்தின் மகளே ஆர்வென். வீரன் வேலுத்தம்பியின்.. ச்சீ.. ஒரு ரைமிங்கில் வந்துவிட்டது . .வீரன் அரகார்னின் காதலி. அரகார்னுக்கும் ஆர்வெனுக்கும், ஜஸ்ட் 2680 வருடங்களே வித்தியாசம். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவல்களில் கொஞ்சமே கொஞ்சமாகவும், படங்களில் நெடுகவும் வரும் கதாபாத்திரம். இந்த ரோலுக்கு, லிவ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டதும், அதுவரை சும்மாயிருந்த நாவல் ரசிகர்கள் பொங்கியெழுந்தனர். லிவ் டைலரின் அரைகுறை நடிப்பில் திருப்தியில்லாமல், அவரை நீக்கச்சொல்லி அனைவரும் குரல் கொடுத்ததாக அறிகிறோம். இருந்தாலும், ஜாக்ஸன், அவர்களைத் திருப்திப்படுத்தினார்.

இந்தக் கதாபாத்திரங்களே படத்தின் பிரதான பாத்திரங்கள். இவர்கள் கூட, பெரிகிரின் டுக், மெர்ரி ப்ராண்டிபக், ஃப்ரோடோவின் கூடவே வரும் ஸாம் கெம்ஜீ, பில்போ பேகின்ஸ் போன்ற மற்ற கதாபாத்திரங்களையும் தேர்வு செய்தார் ஜாக்ஸன்.

ஆக, ஒரு பட்டாளமே தயார். கூடவே, ஜாக்ஸனுக்குத் தேவையான ஆயிரக்கணக்கான உடைகள், ஆயுதங்கள், ஆட்கள் ஆகிய அத்தனையும் தயார். அடுத்தது என்ன? ஷூட்டிங் தான் !

பி.கு – ஃப்ளிப்கார்ட் வெப்ஸைட்டில், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கலெக்டர்’ஸ் எடிஷன் விற்பனைக்குக் கிடைக்கிறது. வெளியே இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்கும் இந்த செட், இந்த சைட்டில், ஆயிரத்துக்கே கிடைக்கிறது. இதில், மொத்தம் பன்னிரண்டு சூப்பர் டிவிடிக்கள் உள்ளன. ஒவ்வொரு பாகத்தின் எக்ஸ்டெண்டட் வெர்ஷன்கள், பிஹைன்ட் த ஸீன்ஸ் ஆகியவை அத்தனையும் இதில் உள்ளன. ஒவ்வொரு பாகத்துக்கும் நான்கு டிவிடிக்கள். Behind the scenes மட்டுமே ஆறு மணி நேரத்துக்கும் மேல் (ஒவ்வொரு பாகத்துக்கும்). இது போக, துல்லியமான எக்ஸ்டெண்டட் வெர்ஷன்கள். முதல் பாகத்தில் முப்பது எக்ஸ்ட்ரா நிமிடங்கள், இரண்டாவது பாகத்தில் 45 நிமிடங்கள், கடைசி பாகத்தில் 50 எக்ஸ்ட்ரா நிமிடங்கள் இவற்றில் உண்டு. ஆர்டர் செய்து இரண்டரையாவது நாளில் எங்களுக்குக் கிடைத்துவிட்டது. தரம், படு பிரமாதம். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பற்றி அ விலிருந்து ஃ வரை அத்தனையும் இதில் உண்டு. இந்த செட், இதற்கு மேல் சீப்பாகக் கிடைக்காது என்று தோன்றுகிறது. வாங்க விரும்புபவர்கள், இங்கே க்ளிக்கலாம்.

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் விசிறிகள், தவற விட்டுவிடாதீர்கள் !!!

தொடரும் . . .

  Comments

12 Comments

  1. i’m the first..
    inda vaati vadai enakku ..!!!

    awesome !!!

    Reply
  2. அடுத்த போஸ்ட் எப்பப்பா?
    படத்த விட postings சூப்பர் அப்பு…

    Reply
  3. Neenga nalla paduveengalame ? Enga , vadaya vaila vechikitte oru nalla paatu paadunga parkalam …

    Reply
  4. //(ஆனால், நம்மூர் ஹீரோக்கள் போல், ‘ஆ . .ரெண்டு மணி நேரம் மேக்கப் போட்டுகிட்டேன். என் சொந்த வீட்ல இருக்குறவங்களுக்கே என்னை அடையாளம் தெரியலை. இந்த மாதிரி மேக்கப் இந்தியாலயே போட்ட முதல் ஆள் நான் தான்றதை நான் சொல்லல.. வேஸ்ட்மோரே ச்சீ . .வெஸ்ட்மோரே சொல்லிருக்காரு. இது தமிழனுக்கே பெருமை.. ஆ’ என்றெல்லாம் ஓலமிடாமல், அமைதியாக நடித்திருப்பார் இவர்)//
    ஆஹா…திரும்ப தேளு ரூட் பிடிச்சிருச்சு…
    இத..இத..இதத்தான் எதிர்பார்த்தேன்.
    கமலை காயடிப்பேன்னு யாருக்காவது வரம் கொடுத்திருக்கீங்களா…
    நல்லாத்தான் நக்கலடிக்கிறிங்க…
    இந்த டீலிங்கும் நல்லாத்தான் இருக்கு

    Reply
  5. இந்த ஃப்ளிப்கார்ட் பாக்ஸ் செட், நார்மல் ட்ரைலாஜியா அல்லது special extended ட்ரைலாஜியா?

    Reply
  6. நண்பா,
    மிக அருமை,ஒரு வழியாக வேலை தேடும் படலம் முடிந்ததும் இது தான் ,இதைப்படிப்பது தான் எனக்கு வேலை.படத்தை கையோடு பார்ப்பேன்.வெல்டன்,இதற்கு தனியாக மோதிர லேபிள் வைத்ததும் அழகு.ஆரண்யகாண்டம் விமர்சனம் எழுதுங்களேன்.

    Reply
  7. இதுக்கு என்ன கமென்ட் போடுறதுன்னே தெரியல.

    ஒரு விஷயம் பகிர்ந்துக்கணும். தலைவரின் பதிவுகள் எப்புடி தாறுமாறா பலரை பலவிதங்களிலும் தூண்டுது (???) என்பதற்கு இது சாட்சி..இணைய நண்பர் கூட – UAE – சேட் பண்ணிக்கிட்டு இருந்தேன். அவர் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி 3 பாகத்தையும் வுட்டு வுட்டு பாத்திருக்கார். இப்ப…..இந்த தொடர படிச்சிட்டு போன வாரம் தொடர்ந்து 3 பாகத்தையும், இந்த வாரமும் தொடர்ச்சியா பாத்திருக்கார். ஏய்யா கமென்ட் போடலைனா……வார்த்தைகள் சிக்க மாட்டேங்குதுன்னு சொல்றார்..
    ஆக அந்தளவிற்கு காந்தாரமா எழுதுறார் கருந்தேள்

    Reply
  8. @கீதப்பிரியன்
    //ஒரு வழியாக வேலை தேடும் படலம் முடிந்ததும் இது தான் ,இதைப்படிப்பது தான் எனக்கு வேலை.படத்தை கையோடு பார்ப்பேன்//
    நண்பரே…மிக..மிக…மிக நல்ல வேலை கிடைக்க உங்கள் பரந்தாமனிடமும்,என் தாய் மூகாம்பியிடமும் வேண்டுவேன்

    Reply
  9. தல back in form…இதுல நம்ம ஆல் டைம் பாவரைட் காண்டல்ப் தி வைட்…. அடுத்த பதிவு எப்போ எப்போ…

    Reply
  10. @ கொழந்த – நன்றி கொழந்த உள்ளார இழுத்துவிட்டதுக்கு…,

    @ கருந்தேள் – ஸ்மீகோல் பத்தி [Gollum] சொல்லுவிங்கனு எதிர் பார்த்தேன், நிமிடத்திற்கு நிமிடம் மனதை மாற்றி கொள்ளும் ஸ்மீகோல் கதாபாத்திரம் அனிமேஷன் கதாபாத்திரமானு ஒரு சந்தேகம் ரொம்ப வருசமா உண்டு,

    Reply
  11. @ rushanth – thanx bro 🙂

    @ sampath – இதோ அடுத்த ரெண்டு பாகங்கள் போட்டாச்சு. . இனி அடிக்கடி வரும்ல 🙂

    @ boyindahood – ஏன் இந்த ரத்த வெறி?
    @ உலக சினிமா ரசிகரே – கமலைக் காயடிக்கிறது என் வேலை இல்லை. . ஆனா, இந்த மாதிரி உலகத்தரமான படங்களில் நடக்கும் விஷயங்களைப் படிக்கும்போது, கமல் இங்க பண்ணுற அழிச்சாட்டியங்கள் நினைவு வந்து தொலைக்குதே தலைவா .. என்ன பண்ணுறது

    @ MSK – இது பயங்கர extended trilogy தலீவா

    @ கீதப்ரியன் – ஆ. காண்டம் எழுதியாச்சி. இத ஈ புக்கா போட்டதும், கட்டாயம் படிச்சிக்கினு எபுடிக்கீதுன்னு சொல்லுங்க நைனா

    @ கொழந்த – காந்தாரமா எழுதுறதுன்னா என்ன? கண்ணைக் கட்டிக்கினே எழுதுறதா? உங்க நண்பர், மோதல்லஎல்லாம் இங்க அடிக்கடி வருவாரு.. இப்போ ஆள் அப்ஸ்கான்ட் ஆயிட்டாரு பாஸு 🙂

    @ keanu – வெல்கம் பேக் 🙂 .. ஸ்மீகோல் பத்தி சீக்கிரமே எழுதுவேன்.. இன்னும் கொஞ்ச எபிசொட் தாண்டி (என்னாது இன்னும் பல எபிசொட் இருக்கா.. அவ்வ்வ்வவ்)

    Reply
  12. praveen

    boss nanban padathula nadipa pathingala vijay’ah vitta ajith’ya nadika vaika mudiyum unga mela iruntha mariyathaye pochu etho 4 review eluthunathukaga neenga periya aal ayida mudiyathu neen mothala ipadi nadigalai thituratha vittutu olunga irunga tevaye ilama asinga padathginga inthamathiri manaketta site’ku inimer nan vara maten

    Reply

Join the conversation