Machete (2010) – English
நான், சிறு வயதிலிருந்தே காமிக்ஸ் ரசிகன். காமிக்ஸ்களில் பல வகைகள் உண்டு. சாத்வீகமான, மிதவாத காமிக்ஸ்கள், சற்றே வன்முறை கலந்த காமிக்ஸ்கள், வன்முறை பீறித் தெறிக்கும் காமிக்ஸ்கள் இப்படிப் பல வகைகள். முதலாவது வகைக்கு, டிண்டின், ஆஸ்டெரிக்ஸ் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இரண்டாவது வகைக்கு, XIII, ரிக் ஹோசெட்(ரிப்போர்ட்டர் ஜானி), ஸ்பைடர், பேட்மேன் ஆகியவை உதாரணங்கள். மூன்றாவது வகையான ஹார்ட்கோர் ரத்தப் பீறிடல் காமிக்ஸ்களுக்கு, ஸின்ஸிடி காமிக்ஸ் வரிசை ஒரு சிறந்த உதாரணம்.
படத்தைப் பற்றிப் பேச வேண்டிய இடத்தில் காமிக்ஸ் பற்றிப் பேசும் காரணம்? இருக்கிறது. சிறுவயதிலிருந்தே இந்தக் காமிக்ஸ் படிக்கும் பழக்கத்தால், அடிதடிப் படங்கள் பார்ப்பது ஒரு வழக்கமாகிவிட்டது. அப்படிப் பார்த்த படங்களில், ராபர்ட் ரோட்ரிகஸ் என்று ஒரு இயக்குநரின் படங்கள் பிடித்திருந்தன. அவரது புத்திசாலித்தனமான திரைக்கதை உருவாக்கம் மற்றும் ஸ்டைலிஷ் மேக்கிங், அவரது எல்லாப் படங்களையும் பார்க்கத் தூண்டியது. அவரது படங்களில் இருந்து, க்வெண்டின் டேரண்டினோ படங்களுக்கு வந்து சேர்ந்தேன்.
யாருய்யா இந்த ராபர்ட் ரோட்ரிகஸ் என்றால்.. மிகச்சிறு வயதிலேயே – அதாவது, தனது ஏழாவது வயதில் – தனது தந்தை பரிசளித்த விடியோ கேமராவை வைத்து விளையாட ஆரம்பித்த ஒரு நபர்.. தனது பள்ளி நாட்களில், இவரது விடியோ திறமை காரணமாக, பள்ளியில் நடந்த ஒரு கால்பந்துப் போட்டியை இவரை ஒளிப்பதிவு செய்யச் சொல்ல, இவர் செய்த காரியத்தைப் பார்த்து அவர்கள் கடுப்பானது தான் மிச்சம். கால்பந்தையும், ஆடுபவர்களையும் விடியோ எடுக்காமல், பந்து உயரத்தில் பறப்பதையும், பார்வையாளர்கள் கத்துவதையும் விடியோ எடுத்து, எடிட் செய்து ஒரு விடியோவைத் தயாரித்துக் கொடுத்தால், கத்தாமல் என்ன செய்வார்கள் பள்ளி நிர்வாகிகள்?
சிறுவன் ராபர்ட் ரோட்ரிகஸின் திறமை, இவ்வாறு வெளிப்பட்டது.
அதன் பின், டெக்ஸாஸின் காலேஜ் ஆஃப் கம்யூனிகேஷனில் திரைப்படம் படிக்க இவர் விண்ணப்பித்த போது, மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால், அட்மிஷன் கிடைக்கவில்லை. எனவே, கல்லூரி நிர்வாகிகளைக் கவர ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தார் ராபர்ட். ‘லாஸ் ஹூலிகன்ஸ்’ (Los Hooligans) என்ற ஒரு காமிக்ஸ் தொடரைக் கண்டுபிடித்து, கல்லூரிப் பத்திரிக்கையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வெளியிட்டார். அத்தனை பேருக்கும் மிகவும் பிடித்துப் போன ஒரு தொடராக மாறியது அது. எனவே, அட்மிஷனும் உடனே கிடைத்தது. அந்தப் பெயர், அவரது திரைப்பட கம்பெனியின் பெயராகவும் மாறியது.
இப்படித் தொடங்கிய ராபர்ட் ரோட்ரிகஸின் கதை, ‘எல் மாரியாச்சி’ (El Mariachi) என்ற பெயரில் ஒரு லோ பட்ஜட் வீடியோ படத்தை எடுத்ததில் சூடுபிடித்து, அப்படம் அமெரிக்காவில் திரைப்படமாக வெளியிடப்பட்டு ஹிட்டானதில் பிரபலமாகி, அதன் பின் ‘தெஸ்பராதோ’ (Desperado) என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வெளியிட்டதில் உச்சத்தை அடைந்தது. அப்படம், ராபர்ட் ரோட்ரிகஸின் இன்றைய முத்திரைக் காட்சிகள் பலவற்றுக்கு முன்னோடி.
அதன்பின், ராபர்ட் ரோட்ரிகஸ், பல படங்கள் எடுத்து வெளியிட்டாயிற்று. இன்று ஹாலிவுட்டின் முன்னணி ஆக்ஷன் இயக்குநர்களில் இவரும் ஒருவர். அதிலும், எந்தக் குழுவும் இல்லாமல், தனியொருவனாக ஒரு ஆள், ஒரு படத்தை எடுத்து வெளியிட முடியும் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம். இவரது படங்கள் பலவற்றுக்கும் இவரே கதை, திரைக்கதை, இயக்கம், இசை, ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் ஆகிய பல வேலைகளையும் திறம்படச் செய்வார்.
இவரைப் பற்றிய மேலும் பல தகவல்களுக்கும் இவரது படங்களைப் பற்றிய அலசலுக்கும், இதோ எனது ஆங்கிலப் பதிவு.
இந்த ராபர்ட் ரோட்ரிகஸே, இந்த மச்சாட்டே படத்துக்கும் இயக்குநர்.
ராபர்ட் ரோட்ரிகஸும், அவரது நண்பர் க்வெண்டின் டாரண்டினோவும் சேர்ந்து, நாஸ்டால்ஜியாவுக்குப் புது அர்த்தங்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நம்ம ஊரில், எண்பதுகளில் வந்த அதே ஸ்டைலில் ஒரு ஆக்ஷன் படத்தை ரஜினியையோ அல்லது கமலையோ வைத்து இப்போது இயக்கினால் எப்படி இருக்கும்? அதுபோல், அங்கு, எண்பதுகளில் வந்த அதிரடித் திரைப்படங்களை மையமாக வைத்து இருவரும் படங்கள் எடுத்து வெளியிடுவதுண்டு (இந்தக் கூட்டணியின் ‘GrindHouse’ படம் ஒரு சிறந்த உதாரணம்). அந்த வரிசையில் சமீபத்தில் வந்திருக்கும் படமே இந்த மச்சாட்டே. இவர்களின் க்ரைண்ட்ஹௌஸ் படத்தில் வரும் ஒரு போலி ட்ரெய்லரே இது. அதன்பின், உண்மையாகவே இப்படத்தை எடுக்கத் தீர்மானித்தார் ரோட்ரிகஸ்.
தெஸ்பராதோ பார்த்தவர்கள். அதில் ஆண்டோனியோ பெண்டரஸைத் துரத்தும் நெடிதுயர்ந்த, முடிவளர்த்த ஒரு ஆளை மறந்திருக்க முடியாது. இடுப்பெங்கும் கத்திகளைச் சொருகிக்கொண்டு, வில்லனின் அடியாட்களின் கார் மேல் ஏறி, கூரை வழியாகக் கத்திகளை வீசி அவர்களைக் கொல்லும் டேன்னி ட்ரெஹோவை யாரால் மறக்க முடியும்? அதன்பின் பல படங்களில் ரோட்ரிகஸோடு பணிபுரிந்தவர் இவர். ஸ்பை கிட்ஸிலும், ஒரு தமாஷான ரோலில் வருவார்.
கிட்டத்தட்ட தனது அறுபத்தியாறாம் வயதில் கதாநாயகனாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.
படத்தைப் பற்றிப் பார்க்குமுன், உங்களிடம் ஒரு கேள்வி: ஒரே வெட்டில் துண்டாகிச் சிதறும் தலையிலிருந்து பீய்ச்சியடிக்கும் ரத்தம் உங்களுக்குப் பிடிக்குமா? உடலில் கத்தியைக் குத்திய பின்னர், அறையெங்கும் சிதறும் ரத்தத்தைப் பார்த்து சந்தோஷப்படுவீர்களா? குடலைக் கிழித்து, உருவியெடுத்து, அதனை ஒரு கட்டிடத்தில் இருந்து வீசி, அதில் இறங்கித் தப்பிக்கும் காட்சியைப் பார்த்தால் உங்களுக்குச் சிரிப்பு வருமா?
அப்படியென்றால், இப்படத்தைப் பார்க்கலாம் ?
கதை = ஒரு தபால்தலையின் பின்புறம் எழுதிவிடலாம். அவ்வளவு சிறிய கதை. மச்சாட்டே என்பவன், மெஹிகோவின் (மெக்ஸிகோவை ஸ்பானிஷில் மெஹிகோ என்றுதான் சொல்கிறார்கள். பல படங்களில் அவதானித்திருக்கிறேன். இதிலும்) ஃபெடரல் போலீஸ் படையைச் சேர்ந்தவன். ஒரு பெண்ணைக் காப்பாற்றப் போய், கடத்தல் தாதா டாரஸ்ஸினால் பிடிக்கப்படுகிறான். டாரஸ், இவனது மனைவியையும் மகளையும் கொன்றுவிட்டு, மச்சாட்டேயை மட்டும் உயிருடன் விட்டுவிடுகிறான். அதன்பின், அங்கிருந்து தப்பிக்கும் மச்சாட்டே, அமெரிக்கா வந்து, கூலியாளாக மாறி, அதன்பின் ஒரு செனட்டரைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டு, பலிகடாவாக மாறி, போலீஸிடமிருந்து தப்பிக்கும்போது, ஒரு பெண் இமிக்ரேஷன் ஏஜெண்டினால் கண்காணிக்கப்பட்டு, அந்த ஏஜெண்ட் இவன் மேல் கவரப்பட்டு, அதன்பின், மெஹிகோவில் இருந்து எல்லையைத் தாண்டும் மக்களின் பாதுகாவலாளியாக விளங்கும் ‘ஷி’ என்ற பெண்ணைச் சந்தித்து, அவளுடன் பழகி, பின்னர் வில்லனை எப்படி வீழ்த்துகிறான் என்பதே கதை.
கதையில் எந்த விசேஷமும் இல்லை. படம் எடுத்திருக்கும் வகையில் தான் விசேஷம்.. ‘ஷி’யாக, மிஷேல் ரோட்ரிகஸ். ஏஜெண்ட் யுவெட்டாவாக, ஜெஸிகா அல்பா, செனட்டர் ஜான் மெக்லாலின்னாக நம்ம ராபர்ட் டி நீரோ, வில்லனின் மகள் ஜூனாக லிண்ட்ஸே லோஹன் நடித்திருக்கிறார்கள். இதையெல்லாம் விட, மெகா வில்லன் டாரஸ்ஸாக, அதிரடி மன்னன் ஸ்டீவன் ஸெகால். பல படங்களில், மான்கொம்பு சண்டை போடுபவர். Never Say Never Again படத்தில் ஷான் கானரியின் சுண்டுவிரலை உடைத்தவர். மார்ஷியல் ஆர்ட்ஸ் எக்ஸ்பர்ட். இவரது ப்டங்களில் வரும் சண்டைக்காட்சிகள், புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்டிருக்கும். வேகமாகக் கையை வீசி எதிராளியை வீழ்த்துவார்.
படத்தில், இன்னொரு ராபர்ட் ரோட்ரிகஸ் படையைச் சேர்ந்த நடிகரும் உண்டு. சீச் மரீன். From Dusk Till Dawn படத்தில் இருந்து, இவர் ஒரு ராபர்ட் ரோட்ரிகஸ் ரெகுலர். தெஸ்பராதோவில், பார்டெண்டராக வந்து, க்வெண்டின் சொல்லும் யூரின் ஜோக்கைக் கேட்டு அவரது முகத்தில் காறித்துப்புவார். இவரும் டேன்னி ட்ரெஹோவும், பல ரோட்டிகஸ் படங்களில் நடித்தவர்கள். இதில், டேன்னியின் சகோதரர் பாதிரியாராக வந்து காமெடி செய்கிறார்.
இந்தப் படத்தின் முக்கியக் குறைபாடு, படத்தின் நீளம். எழுபது நிமிடங்களில் சுருக்கியிருக்கக்கூடிய படத்தை, நீட்டி நீவி, போரடிக்கும்படி எடுத்துவிட்டனர். விளைவாக, பல காட்சிகளில் கொட்டாவி வருவதைத் தடுக்க முடியவில்லை. என்னதான் நாஸ்டால்ஜியா படமாக இருந்தாலும். அதே போல், ராபர்ட் ரோட்ரிகஸின் ஸ்லீக்கான எடிட்டிங், காமெரா கோணங்கள், துள்ள வைக்கும் இசை ஆகியன இதில் மிஸ்ஸிங். ஆனால், படத்தில் சில கில்மா காட்சிகள் உண்டு. அவை மட்டும், பழைய படங்களின் ஃபீலிங்கைக் கொடுக்கின்றன. சில ஜாலியான, சிரிக்க வைக்கும் காட்சிகளும் உண்டு.
பழைய ஆக்ஷன் பட விரும்பிகள், நாஸ்டால்ஜியாவுக்காக ஒரு முறை பார்க்கலாம். எனக்குப் பிடித்தது.
க்ரைண்ட்ஹௌஸ் படத்துடன் வெளிவந்த மச்சாட்டே fake ட்ரைலர் இங்கே.
Machete படத்தின் ஒரிஜினல் (Uncensored) ட்ரைலர் இங்கே. (ஜாக்கிரதையாகப் பார்க்கவும்).
படத்தைப் பற்றிப் பார்க்குமுன், உங்களிடம் ஒரு கேள்வி: ஒரே வெட்டில் துண்டாகிச் சிதறும் தலையிலிருந்து பீய்ச்சியடிக்கும் ரத்தம் உங்களுக்குப் பிடிக்குமா? உடலில் கத்தியைக் குத்திய பின்னர், அறையெங்கும் சிதறும் ரத்தத்தைப் பார்த்து சந்தோஷப்படுவீர்களா? குடலைக் கிழித்து, உருவியெடுத்து, அதனை ஒரு கட்டிடத்தில் இருந்து வீசி, அதில் இறங்கித் தப்பிக்கும் காட்சியைப் பார்த்தால் உங்களுக்குச் சிரிப்பு வருமா?
—
இப்படியெல்லா பண்ணிணா அதுக்கு இன்னா பேரு நைனா 🙂
பாத்திடீங்களா….. படிசுட்டு வரேன்
குடலை மாலையாக போட்டுவேன் னு ஒரு பேச்சுக்கு சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன்,ஆனா இந்த படத்துல உண்மையாகவே அதை காட்டி இருக்கிறார்கள்,இருப்பினும் எனக்கு இந்தப் படம் பிடிக்கவில்லை, அதிலும் கிளைமாக்ஸ் ரொம்ப மொக்கை,உங்களின் முன்னுரை மிகவும் நன்றாக இருந்தது,
உங்கள் பதிவு கொலை செய்ய தூண்டுகிறது….
உங்கள் பதிவு கொலை செய்ய தூண்டுகிறது.. னு கொளந்தை கமெண்ட் போடுவார்னு நினைக்குறேன்( அப்பா நா escape )
@ இராமசாமி கண்ணன் – அப்புடியெல்லாம் பண்ணுனா, அதுக்குப் பேரு, ரசனை உணர்ச்சி 🙂 ஹீ ஹீ
@ டெனிம் மோகன் – கொடலை மாலையா போடுறது எனக்குப் புடிச்சது.. நமக்குள்ளயெல்லாம் இருக்குறது ஒரு ஆதிவாசி தானே 🙂 கொழந்த இப்புடியெல்லாம் போடாது.. அதை உக்காரவெச்சி, இந்தப் படத்த ஒரு பத்து தடவ காட்டலாமா 🙂
டேன்னி ட்ரெஹோவை பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் பார்த்திருக்கிறேன். இத்தனை நாளுக்கப்புறம் ஹீரோ!!!
உங்கள் விவரிப்பு விமர்சனம் மிக நன்றாக உள்ளது. எனிவே இந்த படம் ரிஜக்டட்!
கண்டிப்பா…. கண்ண மூடாம இருக்க ரெண்டு கண்ணுலையும் குண்டுசி வச்சுடலாம்…….. (எப்படி கொழந்த நம்ம terror idea)
//கொடலை மாலையா போடுறது எனக்குப் புடிச்சது//
எனக்கும் புடிச்சதே ……..
Sk-வையும் list-ல் சேர்த்துடுங்க
// Sk-வையும் list-ல் சேர்த்துடுங்க//
டெனிம் ஏன் இந்த கொலைவெறி?
ஹாரர் படம் பார்க்க ஆசையா இருந்து பார்த்தாலும் பயங்கரமான சீன்ல கண்ல முடிக்கிற ஆளு நான்!
பேசாம குண்டூசி எடுத்து நானே கண்ணை குத்திக்கிறேனே!
அய்ய்ய்ய்… நானும் ஹாரர் படம் பார்த்தா கண்ணை மூடிக்கிற கேஸ் தான்.. 🙂 பயம் எல்லாம் இல்லை… சும்மா கண்ணுல தூசி விழுந்திரும் 🙂 ஹீ ஹீ
மீ த ஸ்லீப்பிங் 🙂 சிங்கம் ரெஸ்ட் எடுக்கப்போவுது
//ஒரே வெட்டில் துண்டாகிச் சிதறும் தலையிலிருந்து பீய்ச்சியடிக்கும் ரத்தம் உங்களுக்குப் பிடிக்குமா? உடலில் கத்தியைக் குத்திய பின்னர், அறையெங்கும் சிதறும் ரத்தத்தைப் பார்த்து சந்தோஷப்படுவீர்களா//
நண்பா,
என்னை மாதிரி ஆளுங்களுக்கு கவித்துவமா ஏதாவது ப்டம் பத்தி எழுதக்கூடாதா?
@denim,
//எனக்கு இந்தப் படம் பிடிக்கவில்லை//
நிஜமாவா?
@மோகன்
//நிஜமாவா?//
எதுக்கு இவ்வளவு பெரிய நிஜமாவா?
நண்பரே,
ஜெசிக்கா ஆல்பா, மிஸ்சேல் ராட்ரிகஸ், லிண்ட்சே லாகன் போன்ற அழகுப் புயல்களிற்காகவும், கில்மா ஸீன்களிற்காகவும் ஜாலியாகப் போய் இருந்து கொட்டாவி விட்டவாறு பார்க்கவேண்டியதுதான்.
நிச்சயம் என்னால் இது போன்ற படங்களை பார்க்கமுடியாது.நான் உலகசினிமா பார்ப்பதற்க்கு முன்பே இது போன்ற வன்முறை தெறிக்கும் படங்களை வெறுத்தே வந்திருக்கிறேன்.உ.ம் மேட் மேக்ஸ்.உங்கள் பதிவை படிக்கும்போதே ரத்தவாடை நெருடுகிறது.
//இவர்களின் க்ரைண்ட்ஹௌஸ் படத்தில் வரும் ஒரு போலி ட்ரெய்லரே இது. அதன்பின், உண்மையாகவே இப்படத்தை எடுக்கத் தீர்மானித்தார் ரோட்ரிகஸ்.//
அவ்வ்வ்வ்வ்வ்… ரொம்ப நாளா ரிலீஸ் செய்ய மறந்து இந்த வருசம்தான் ரிலீஸ் செஞ்சாங்கன்னு நான் நினைச்சேன் :)))
மத்தபடி எனக்கு படம் பிடிச்சிருந்தது. நீங்க சொன்ன கமல், ரஜினி மசாலா சரியான உதாரணம். திரைக்கதையில அதிரடி திருப்பம், சஸ்பென்ஸ் இப்படி ஹாலிவுட் பட கன்றாவி(!?) எதுவுமே இல்லாம பார்க்க வைச்சது. படத்துல இருக்கற ஒரே ஒரு டபுள்கேம் சஸ்பென்ஸையும் டிரெய்லர்லயே காட்டி கதையை முடிச்சிடறாய்ங்க :))
hardly any story in this movie…also seeing Danny Trejo’s beautiful face itself is more than enough torture…only saving grace is the swimming pool sequence 🙂 they made a joker out of Robert De Niro.
இந்த படம் கொஞ்சம் ஜவ்வு போல இழுத்திருக்கானுங்க. எதுக்காக கொல்லாம விடுரானுன்கனே தெரில
ராபர்ட் ரோத்ரிகோ (இது தான் பாஸ் சரியான உச்சரிப்பு) டச் ‘சின் சிட்டி’யோட போச்சுன்னு சொல்லலாம். இந்த படம் ட்ரைலர் பார்த்தப்புறம் படம் பார்த்தா செம மொக்கை. ஆக்ஷன் படங்களுக்கு ஒரு ட்ரிப்யூட் மாதிரி இருந்தாலும் படத்துக்கு நடுவுல தூங்கிட்டேன்…
Average movie…
but Action movie fans ll love this movie…
and Rodriquez fans too…
keep on writing….
write about…
Inglourious Basterds
and
Reservoir dogs
Nelson Paiva • 2 de Fevereiro de 2010 às 000©1TambÃ:m não apareço na lista.Já nem quero o prémio o meu objectivo para o próximo mês é aparecer na lista