மதராசபட்டினம் (2010) – விமர்சனம்

by Karundhel Rajesh July 13, 2010   Copies

படத்தைப் பற்றி எழுதுமுன், ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய, ‘யாமம்’ கதையைப் படித்தவர்களெல்லாம் கையைத் தூக்குங்கள் பார்ப்போம். இந்நாவல், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த சென்னையைப் பற்றிய அருமையான நாவலாகும். இக்கதையினை இரவில் படித்தால், கண் முன் பண்டைய கால சென்னை விரிவது திண்ணம். அவ்வளவு நல்ல வருணனைகளோடு கூடிய ஒரு நல்ல நாவல் இது.

அப்படியே, சுஜாதா எழுதிய, ‘ரத்தம் ஒரே நிறம்’ நாவலையும் படித்துவிட்டீர்களா? சிப்பாய்க்கலகம் நேர்ந்த சூழலில் எழுதப்பட்ட ஒரு அட்டகாசமான நாவல் இது. இக்கதையை, எண்பதுகளில் குமுதத்தில் எழுதத்தொடங்கிய இரண்டாவது வாரம், பல கொலை மிரட்டல்கள் வந்ததாகவும், அதனால் சட்டென்று நிறுத்திவிட்டதாகவும், பின்னர் புத்தகமாக வெளிவந்தது எனவும் சுஜாதாவே இந்த நாவலின் முன்னுரையில் சொல்லியிருப்பார்.

ரைட்டு. இப்போது, படம்.

நிகழ்காலம். ஆமி வில்கின்ஸன் என்ற, லண்டனில் வாழும் வயதான பெண்மணிக்கு, நாள் குறித்தாயிற்று. அவளுக்கு உள்ள நோயால், சீக்கிரமே இறந்துவிடுவாள் என்று மருத்துவர்கள் சொல்லி விடுகிறார்கள். அந்த நேரத்தில், அவள், தான் இந்தியா செல்ல வேண்டும் என்று தீர்மானமாகச் சொல்லி விட, அவளது பேத்தி, ஆமியை இந்தியா அழைத்துச்செல்ல முன்வருகிறாள்.

கட். இப்போது, ‘டெல்லி – 6’ படத்தின் ஆரம்பக் காட்சி. ஆமிக்குப் பதில் ஷர்மிளா தாகூர். பேத்திக்குப் பதில் அபிஷேக் பச்சன். அதே காண்டெக்ஸ்ட். அதே வசனங்கள்.

சரி. இந்தியா வரும் ஆமி, கையில் ஒரு புகைப்படத்துடன், ஒரு ஆளைத் தேடத் துவங்குகிறாள். அவள் தேடும் ஆளின் பெயர், இளம்பரிதி. அவனது புகைப்படம் – 60 வருடங்களுக்கு முன்னர் எடுத்தது – அவள் கையில் இருக்கிறது. அப்புகைப்படத்தை வைத்து, சென்னையெங்கும் அந்த மனிதனைத் துழாவுகிறார்கள். இடையிடையே, 1947 காலத்திய சென்னை. அங்கு அவர்கள் இருவரும் வாழ்ந்த நாட்கள்.

அவர்களால் இளம்பரிதியைக் கண்டுபிடிக்க முடிந்ததா? இதுதான் படத்தின் கதை.

இப்படத்தைச் சென்ற ஞாயிறு அன்று, பெங்களூரில் பார்த்தேன். படத்தின் டைட்டில்கள், மிக நல்ல, க்ரியேட்டிவான முயற்சி. அதே போல், படத்தின் இன்னொரு மிக அட்டகாசமான ப்ளஸ் பாயிண்ட் – ஃப்ளாஷ்பேக்கும் நிகழ்காலமும் சந்திக்கும் அந்த ஷாட்கள் ! மிகவும் ரசித்தோம். ஃப்ளாஷ்பேக்கில் ஒரு கதவு திறக்கிறது. திறந்தவுடன், அது நிகழ்காலத்தில் திறக்கும் ஒரு கதவாக இருக்கிறது. மிக அருமையாக இரண்டையும் லின்க் செய்திருக்கிறார்கள்.

படத்தின் அடுத்த ப்ளஸ் – 1947 சென்னையை – ச்சீ – மதராசப்பட்டிணத்தை, நமது கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள். சென்ட்ரல் ஆகட்டும், பீச்சாகட்டும், கூவம் ஆகட்டும்… அவ்வளவு இடங்களையும் அழகான க்ராஃபிக்ஸினால் நமது மனங்களில் பதித்துவிடுகிறார்கள். மிகச்சில காட்சிகளில் தெரியும் பின்புறப் பிசிறடித்தலையும் நமது மனம் மறந்துவிடுகிறது – இந்த அருமையான க்ராஃபிக்ஸ் காட்சிகளினால். பிடியுங்கள் பாராட்டை.

படத்தின் இன்னொரு ரசிக்கும்படியான அம்சம் – ஆர்யா மற்றும் அவரது தோழர்கள், ஆங்கிலம் கற்றுக்கொள்ள முயலும் காட்சிகள் மற்றும் அதைப்போன்ற இயல்பான நகைச்சுவைக் காட்சிகள். படத்தின் மிகச்சிறு விஷயங்களிலும் நல்ல ரசனையோடு உழைத்திருக்கும் விஜய்க்கு இன்னொரு பாராட்டு.

ஆனால் ……… ?

நான் சொல்வதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 1947. இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னை. சுதந்திரத்தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கும் காலம். இந்திய அரசியலின் மிகப்பரபரப்பான நிமிடங்கள். The Most Happening situation. இப்படி ஒரு சூப்பரான பின்புலத்தை வைத்துக்கொண்டு, ஒரு சாதாரணக் காதல் கதையை எடுத்து, எங்களை ஏமாற்றிவிட்டீர்களே விஜய் !

படத்தில் ஆர்யாவுக்கும் ஆமி ஜாக்ஸனுக்கும் நிகழும் சந்திப்பு, அது பின்னர் காதலாக மாறுவது, ஆகிய எதுவுமே நமது மனதில் ஒட்ட மறுக்கிறது. ஒரு கெமிஸ்ட்ரியே இருவருக்கும் இடையே இல்லை. ஏதோ ஆர்யா வருகிறார். ஆமியைப் பார்க்கிறார். காதல். பின் பிரச்னைகள்.. இப்படித்தான் கதை ஓடுகிறது. அதாவது, முதல் பாதியில் கதை சுத்தமாக நகரவே இல்லை. இரண்டாம் பாதியிலும், பரபரப்பாகக் கதையைக் கொண்டு செல்ல முயன்றிருந்தாலும், சலிப்பையே தருகிறது கதை.

அதிலும், டைட்டானிக்கின் பாதிப்பு, பல காட்சிகளில் தெரிகிறது. அது டைட்டானிக் என்பது, அத்தனை ரசிகர்களுக்கும் புரிந்தும் விடுகிறது. பின் எப்படி சுவாரஸ்யமாகப் படத்தைப் பார்க்க இயலும்?

கிட்டத்தட்ட இதே கதையமைப்பு உடைய ‘ரத்தம் ஒரே நிறம்’ கதையை எடுத்துக் கொள்வோம். அதிலும் ஒரு வெள்ளைக்காரப் பெண் வருகிறாள். அவளுக்கும் காதல் வருகிறது. ஆனால், அக்காதல் ஒரு சக வெள்ளைக்காரன் மீதுதான் வருகிறது. இக்கதையிலும் அவளை மணந்துகொள்ளத் துடிக்கும் வில்லன் – வெள்ளைக்காரக் கமாண்டர் – இருக்கிறான். அவளைப் பல வகைகளில் துன்பத்துக்கு உள்ளாக்குகிறான். ஆனால், அந்தப் பெண், கதையின் ஹீரோவான தமிழ்நாட்டு இளைஞனை விரும்புவதில்லை. சக அதிகாரியான ஒரு வெள்ளைக்காரனையே விரும்புகிறாள். அதுதான் இயற்கை.

ஆனால், இப்படத்தில், வயதான ஆமி, ஆர்யாவின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு சென்னையில் வந்து இறங்கியவுடனேயே, கதை எப்படி முடியும் என்று தெரிந்து விடுகிறது. காரணம் – இதைப்போலவே இருக்கும் படங்களை நாம் பார்த்து விட்டோமே ! ஒரு காட்சி முடிந்தவுடனேயே அடுத்த காட்சியை நம்மால் ஊகித்துவிட முடிகிறது. அதேபோல், க்ளைமாக்ஸையும்.

இப்படத்தில், கதைக்குப் பின் உள்ள மற்றொரு பலவீனம், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை. காதில் ரத்தம் வந்ததுதான் மிச்சம். ஒவ்வொரு பாடலும், ஒரு இண்டர்வெல்லாக அமைந்து, கதையின் மேலுள்ள ஆர்வத்தைக் கண்டபடி குறைத்துவிட்டது. அத்தனை பாடல்களும் மொக்கை. ஒரே ஒரு பாடலைத் தவிர. அது, ரூப் குமார் ரதோட், ஹரிணி பாடிய – ‘பூக்கள் பூக்கும்’ என்ற பாடல். நல்ல மெலடி இது. ஆனால் இதிலும், சில இடங்களில் தேவையில்லாத அம்சங்கள் சில இருந்தன.

படத்தில், கதை, இசை ஆகிய இரு விஷயங்களைத் தவிர மற்ற அத்தனை அம்சங்களும் அருமை..

அதேபோல், என்னால், சில காட்சிகள் வரும்போது, சில படங்களைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. எனக்கு நினைவு வந்த படங்களாவன – Delhi – 6, Titanic,, Bridges of Madison County மற்றும் Apocalypto. எந்தக் காட்சிகள் என்று சொல்ல விருப்பமில்லை. அலுப்பு தான் காரணம்.

ஆகமொத்தம், அருமையான பின்புலம். நல்ல உழைப்பு. ஒரு வித்தியாசமான உருவாக்கம் – ஆகிய இவையனைத்துமே, வீணாகிப் போய் விட்டதே என்று நினைக்கையில் சற்று வருத்தமாக இருக்கிறது.

  Comments

93 Comments

  1. அட் லாஸ்ட்,

    மீ தி பர்ஸ்ட்.

    Reply
  2. முதல் போணி நான் தான் .. இருங்க படிச்சிட்டு வரேன்

    Reply
  3. தல,நீங்க என்ன சொன்னாலும்,இது ஒரு வித்தியாசமான முயற்சி.ஹீரோ worship ஆல் நாசமாகிக் கொண்டு இருக்கும் தமிழ் சினிமாவுக்கு இப்போது இம்மாதிரி படங்கள் அவசியமே.

    Reply
  4. வீணாகிப் போய் விட்டதே என்று நினைக்கையில் சற்று வருத்தமாக இருக்கிறது.

    எது வீணாகி போச்சு பாஸ் .. போத்தம் பொதுவா சொல்லி இருக்கீங்களே ..

    Reply
  5. மதராச பட்டினம் – a poor man’s titanic ஆக இருக்கலாம்.ஆனால் ஒரு period film செய்ய நினைத்த துணிச்சலும்,நல்ல நடிப்பும்,அருமையான செட்டிங்க்ஸும் இருப்பதால் படத்தை மன்னிக்கலாம் என்பது என் கருத்து.அதுவும் போக,நண்பர்களிடம் கேள்விப்பட்ட வரை,படம் நன்றாக இருப்பதாகவே சொல்கிறார்கள்.நான் இன்னும் பார்க்கவில்லை.கூட்டம் குறைந்த பின் நிதானமாக பார்ப்பது என் வழக்கம்.ஆக,ஹீரோயிச தமிழ்ப் படங்களுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை.

    Reply
  6. //இப்படத்தில், வயதான ஆமி, ஆர்யாவின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு சென்னையில் வந்து இறங்கியவுடனேயே//

    இதே மாதிரி ஒரு கதை தான் ஸ்பெயின் நாட்டிலும் நடந்துகொண்டு இருக்கிறது. அங்கு பல ஆண்ட்டிகள் நம்ம ஹாலிவுட் பாலா போட்டோவ கையில் வச்சுகிட்டு தேடுறாங்க.

    Reply
  7. @ விஸ்வா – ஆஹா.. சிங்கம் மறுபடி ஃபார்முக்கு வந்திருச்சே . . இது எதுல போயி முடியுமே ??? 😉

    @ இலுமி – கண்டிப்பா.. இந்த மாதிரிப் படங்கள், தமிழ்நாட்டுக்கு அவசியம் தான்.. அதுல மாற்றுக்கருத்தே இல்லை.. ஆனா, சுவாரஸ்யமே இல்லை.. ரொம்ப சப்பையா இருக்குன்றதுதான் என்னோட வாதம்..

    @ ரோமியோ – ஆஹா… படத்தின் அத்தனை ப்ளஸ் பாயிண்ட்டும் வீணாயிருச்சேன்னு தான் சொல்லிருக்கேன் தல.. கடைசி வரில…

    Reply
  8. அருமையான மாற்றுப்பார்வைவிமர்சனம்-பிடியுங்கள் பாராட்டை

    ஜிவி பிரகாஷ்குமாருக்கு தகுதிக்கு மீறிய அதிர்ஷ்டம் உண்டு
    உதாரணம் குசேலன்,ஆயிரத்தில் ஒருவன் இபோ இது,முதல்ல இவர் கதையை புரிஞ்சு இசையமைக்கனும், இவரை முதல்ல அப்ரெண்டிஸ்ஸா இவர் மாமாகிட்டயே அனுப்பனும்,
    //ஆனா அந்த பூக்கள் பூக்கும் பாடல் எனக்குப் புடிச்சது//

    பாட்டு ஓக்கே என்றாலும் இவரின் பிஜிஎம் காமெடியாய் இருக்கும்,ஒட்டவே ஒட்டாது. இதுபோல வெயிட்டான ஸ்க்ரிப்டுக்கு குழந்தைபசங்க கிட்டயா போறது,கடவுளே!!!
    விஜய்யின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள்!!!

    Reply
  9. //இதே மாதிரி ஒரு கதை தான் ஸ்பெயின் நாட்டிலும் நடந்துகொண்டு இருக்கிறது. அங்கு பல ஆண்ட்டிகள் நம்ம ஹாலிவுட் பாலா போட்டோவ கையில் வச்சுகிட்டு தேடுறாங்க//

    அடடே… இது நல்லாருக்கே . . 😉 அப்ப ஹாலிவுட் பட்டணம்னு ஒரு காவியத்த எடுத்துரலாமா? 😉 பாலா ரெடின்னா நாங்களும் ரெடி 😉

    Reply
  10. //அடடே… இது நல்லாருக்கே . . 😉 அப்ப ஹாலிவுட் பட்டணம்னு ஒரு காவியத்த எடுத்துரலாமா? 😉 பாலா ரெடின்னா நாங்களும் ரெடி //

    நாந்தான் மீசிக்கு (Music), ஓக்கேவா?

    Reply
  11. @ கார்த்திகேயன் – //இவரை முதல்ல அப்ரெண்டிஸ்ஸா இவர் மாமாகிட்டயே அனுப்பனும்,//

    இந்த வரிகளை நானும் பயங்கரமா வழிமொழியறேன் 😉 ரொம்ப கரிகிட்டு 😉 ..

    //பாட்டு ஓக்கே என்றாலும் இவரின் பிஜிஎம் காமெடியாய் இருக்கும்,ஒட்டவே ஒட்டாது//

    இதுவும் மிக உண்மை.. காது சத்தியமா சில சீன்கள்ல வலிச்சிது ;-(

    Reply
  12. மற்ற அனைவரது பார்வையிலிருந்தும் விலகி வித்தியாசமாண கோணத்தை நோக்கி பார்த்திருக்கிறீர்கள். எனக்கும் டெல்லி 6 பாதிப்பு தெரிந்தது. என் நண்பர்களிடம் சொன்னேன். யாரும் ஒப்புக் கொள்ளவில்லை, ஆஹோ, ஒஹோ என்று சொல்ல முடியவில்லை என்றாலும், இந்த குழுவினரின் உழைப்பிற்காகவாவது நிச்சயம் பார்க்கலாம்.

    Reply
  13. //நாந்தான் மீசிக்கு (Music), ஓக்கேவா?//

    டபிள் ரைட்டு !! ஆனா நீங்க ஸ்பெயின் பாட்டுல்லாம் வைப்பீங்களா? அப்பதான் பாலா நடிப்பேன்னு கண்டிஷன் போடுவாரே 😉

    Reply
  14. @ கவிதை காதலன் – //மற்ற அனைவரது பார்வையிலிருந்தும் விலகி வித்தியாசமாண கோணத்தை நோக்கி பார்த்திருக்கிறீர்கள். எனக்கும் டெல்லி 6 பாதிப்பு தெரிந்தது. என் நண்பர்களிடம் சொன்னேன். யாரும் ஒப்புக் கொள்ளவில்லை, ஆஹோ, ஒஹோ என்று சொல்ல முடியவில்லை என்றாலும், இந்த குழுவினரின் உழைப்பிற்காகவாவது நிச்சயம் பார்க்கலாம்//

    கண்டிப்பா.. முழுமையா ஒத்துக்குறேன்.. இந்தக் குழுவின் உழைப்புக்காகவாவது கண்டிப்பா ஒருமுறை பார்க்கலாம்..

    Reply
  15. //ஆனா, சுவாரஸ்யமே இல்லை.. ரொம்ப சப்பையா இருக்குன்றதுதான் என்னோட வாதம்.. //

    இதுக்கு நான் படத்த பார்த்துட்டு தான் பதில் சொல்ல முடியும்.கொஞ்சம் வெயிட் செய்யண்டி பாபு… 🙂

    Reply
  16. //இதுக்கு நான் படத்த பார்த்துட்டு தான் பதில் சொல்ல முடியும்.கொஞ்சம் வெயிட் செய்யண்டி பாபு… :)//

    ரைட்டு . . கண்டிப்பா 😉

    Reply
  17. ஆனால் ஒரு விஷயம்.அலும்பு பண்ணுற ஹீரோக்களுக்கு நடுவுல ஆர்யா ஒரு நல்ல வித்தியாசம். 🙂

    Reply
  18. அடாடா என்ன நடக்குது இங்கே

    இப்புடி வரிசையா போட்டு தாக்கினா எப்புடி இத்தனையும் பாக்குறது 🙂

    Reply
  19. // அட் லாஸ்ட்,

    மீ தி பர்ஸ்ட். //

    சிங்கம் களம் இறங்கிடுச்ச்சே 🙂

    .

    Reply
  20. தல Delhi 6 ல.. ஷர்மிளா தாகூர் இல்ல..வஹிதா ரஹ்மான் அவங்க பேரு…அப்பறம் அவங்களும் திரும்பி வருவாங்க ஆனா கரணம் வேற தானே…அப்படி பார்த்தா இது வரைக்கும் வந்த படங்கள் பாதிப்பு இல்லாமல் படமே எடுக்க முடியாது….
    1947 ன கதைகள்னா வெச்சுகிட்டு ஒரு காதல் கதை குடுத்ததுதான் வெயிட்டு என்ன பொறுத்தவரைக்கும் …யங்கள் அனைத்து கருத்தில் இருந்து நான் முற்றிலும் வேறுபடுகிறேன்…இப்போ இன்னொருவாட்டி பாக்க போறேன்..பொறவு வரேன் .

    Reply
  21. படத்தைப் பார்க்கையில் அதே அலுப்பு தான் எனக்கும் ஏற்பட்டது. அரைவேக்காட்டு கதை/திரைக்கதையை வைத்துக் கொண்டு வித்தியாசமான முயற்சி என்ற பெயரில் நம்மை வெறுப்பேற்றுவதை தமிழ்த் திரை இயக்குனர்கள் நிறுத்த வேண்டும்.

    Reply
  22. nala padathukana vemarsanam ithu vall isai yanaku nandragavea irunthathu analum ithu pondarapadangaluku raghman than yan kan munal thondrugerar

    Reply
  23. இல்ல தல எனக்கு எந்த எதிப்பார்ப்பும் இல்லாம போன படம் நல்லாத்தான் இருந்துச்சு. இரண்டாவது பாதில வரக்கூடிய முதல் பாடல் ஒட்டவேயில்ல அதே மாதிரி கிளைமேக்ஸ் முன்னாடு வரக்கூடிய பாடலும் ரொம்ப நீளம். எனக்கு டைடானிக் படத்தோட பாதிப்பு மட்டுமே தெரிஞ்சது. இசை நீங்க சொல்லுர மாதிரி இரைச்சலா தொனுல. மொத்தமா பாக்குறப்போ தமிழ் பட வரிசைல நிறைவாதான் இருக்கு.

    Reply
  24. மிக அழகான,நேர்த்தியான அலசல்.நேர்மையான விமர்சனம்.நல்லா இருக்கு நண்பரே.

    Reply
  25. // 1947. இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னை. சுதந்திரத்தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கும் காலம். இந்திய அரசியலின் மிகப்பரபரப்பான நிமிடங்கள். The Most Happening situation. இப்படி ஒரு சூப்பரான பின்புலத்தை வைத்துக்கொண்டு, ஒரு சாதாரணக் காதல் கதையை எடுத்து, எங்களை ஏமாற்றிவிட்டீர்களே விஜய் ! //

    1942 அத விட சுதந்திரத்தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கும் காலம்
    அப்பவே 1942 A Love Story ன்னு ஒரு படம் வந்துச்சு அத ஒத்துகிட்டீங்க
    ஆனா 1947 அதாவது அதுக்கு 5 வருஷம் அப்புறம் ஒரு காதல் கதை வந்தா ஒத்துக்க மாட்டீங்களா

    என்ன கொடும சார் இது ?

    லவ்வுக்கு 1947 என்ன 2010 என்ன But

    அது எப்ப வரும் எப்புடி வரும் அப்புடீன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வரும் 🙂

    ஹி ஹி ஹி
    .

    Reply
  26. இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை, ட்ரைலர் மட்டும் தான் பார்த்தேன், ஆர்யாவை ஓடவிட்டு காலுக்கு கீழே சுட சொல்லும் சீன் வந்தது பார்த்ததும் Apocalypto நினைவுதான் வந்துச்சு:))) நீங்கள் சொல்வது அந்த சீனாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    Reply
  27. ஒரு டவுட்டுங்க!!!

    1947-ல் எல்லாருமே இந்த மாதிரி லகான் டைப், தெலுங்கு பேண்ட் & கை வைக்காத பனியனும்தான் போட்டிருந்தாங்களா??

    =====

    மீ ஸோ பிஸிங்கறனால, இப்போதைக்கு கால்ஷீட் இல்லை. கீதப்ப்ரியனை கேட்டுப் பாருங்களேன். அவுரு ஃப்ரீயாதான் இருக்கறாராம். நான் வேணும்னா கௌரவ வேடத்தில் ஒரு பாட்டுக்கு நடிச்சிக் கொடுக்கறேன்.

    Reply
  28. கேபிள் சொன்னதுக்கும், உங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

    இருந்தாலும்.. திருட்டு டிவிடிதானே!!! காசா பணமா…, ரிலீஸ் ஆகும்போது பார்த்துடலாம்.

    Reply
  29. ஏன் உங்களுக்கு சுறா, வேட்டைக்காரன் மாதிரி சூப்பர் கிட் படமா வேணும்…. பேய் பு….. புதுசா ஏதாவது யோசியிங்கடா…
    ஒரு புது முயற்சியா வாழ்த்தா விட்டாலும் பரவயில்லை இப்படி கே.பு மாதிரி விமர்சனம் எழுதாத… மச்சி .

    Reply
  30. padatha paakalama? vendama? athan sollunga

    Reply
  31. Anonymous

    யோவ், எல்லாரும் சொல்லறதுக்கு எதிராக சொல்லணும் என்பதற்காகவே எழுதறயா? லூசு மவனே

    Reply
  32. Anonymous

    போய் எங்காது சுறா படம் ஓடுனா பாத்து செத்து போ…

    Reply
  33. @ இலுமி – //ஆனால் ஒரு விஷயம்.அலும்பு பண்ணுற ஹீரோக்களுக்கு நடுவுல ஆர்யா ஒரு நல்ல வித்தியாசம். :)//

    ஆமா ஆமா ஆமா 😉 ரைட்டா 😉

    @ சிபி – அதெல்லாம் ஒரு ஃபார்ம்ல தானா வர்ரது 😉 டவுன்லோட் பண்ணி ஜாலியா ஒண்ணொண்ணா பாருங்கோள் 😉

    @ கமல் – ஆமாங்க.. இந்த மறதி இருக்கே மறதி.. அது கொஞ்சம் மிஸ்டீக்கா பேரு எளுத வெச்சிருச்சி 😉 . . மறுபடி பார்த்துட்டு வாங்க.. எப்புடின்னு சொல்லுங்கோ . . . 😉

    @ பென் – நம்ம ஊர்ல இப்பத்தான் திரைக்கதை முக்கியம்னு ஒரு விழிப்புணர்ச்சி வர ஆரம்பிச்சிருக்கு… ஸோ, கொஞ்ச நாள்ல திரைக்கதைல நம்ம மக்கள் பிஸ்த்தாயிருவாங்கன்னு நினைக்குறேன்.. என்ன சொல்றீங்க?

    @ லிவிங்ஸ்டன் பாபா – ரஹ்மான் இதுல மீசிக்கி போட்டுருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்.. ஆனா பட்ஜட் எகிறியிருக்கும்னு தான் அவர அப்ரோச் பண்ணிருக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன்..

    @ ஜீவன்பென்னி – ரைட்டு 😉 இதுல என்னங்க இருக்கு? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்கி . .ரைட்டா?

    @ காமராஜ் – நன்றி நண்பா.. அடிக்கடி வாங்க

    @ சிபி – //942 அத விட சுதந்திரத்தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கும் காலம்
    அப்பவே 1942 A Love Story ன்னு ஒரு படம் வந்துச்சு அத ஒத்துகிட்டீங்க
    ஆனா 1947 அதாவது அதுக்கு 5 வருஷம் அப்புறம் ஒரு காதல் கதை வந்தா ஒத்துக்க மாட்டீங்களா

    என்ன கொடும சார் இது ?

    லவ்வுக்கு 1947 என்ன 2010 என்ன But

    அது எப்ப வரும் எப்புடி வரும் அப்புடீன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வரும் 🙂

    ஹி ஹி ஹி//

    தலைவா… எப்புடி இதெல்லாம்? தெய்வமே… எங்கியோ போயிட்டீங்க . . உங்க காலு எங்க இருக்கு? ஒரு ஃபோட்டோ புடிச்சி அனுப்புங்க… 😉 பின்றீங்க . .

    # குசும்பன் – //ஆர்யாவை ஓடவிட்டு காலுக்கு கீழே சுட சொல்லும் சீன் வந்தது பார்த்ததும் Apocalypto நினைவுதான் வந்துச்சு:))) நீங்கள் சொல்வது அந்த சீனாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.//

    பாயிண்ட்ட புடிச்சீங்க !! அதே சீன்கள் தான் தல.. 😉 சூப்பர் !

    @ பாலா – //ஒரு டவுட்டுங்க!!!

    1947-ல் எல்லாருமே இந்த மாதிரி லகான் டைப், தெலுங்கு பேண்ட் & கை வைக்காத பனியனும்தான் போட்டிருந்தாங்களா??//

    அதே டவுட்டுதான் எனக்கும் !!! 😉

    //ஒரு டவுட்டுங்க!!!

    1947-ல் எல்லாருமே இந்த மாதிரி லகான் டைப், தெலுங்கு பேண்ட் & கை வைக்காத பனியனும்தான் போட்டிருந்தாங்களா??//

    அது வேற ஒண்ணுமில்ல தல.. ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்கி . . 😉 அதான் இப்புடி.. பர்த்துபுட்டு சொல்லுங்கோள் . . எப்புடிக்கீதுன்னு..

    @ தமிழ்ப்பறவை – அட ! 😉 விடுங்க பாஸ்… உண்மை சுடும் ! 😉 போகப்போக உங்கள் கருத்து நம்பப்படும் 😉

    @ ShaggyLad – படத்தை ஒரு தடவ பார்க்கலாம்.. ஆனா எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போங்க.. 😉

    Reply
  34. @ visha – //ஏன் உங்களுக்கு சுறா, வேட்டைக்காரன் மாதிரி சூப்பர் கிட் படமா வேணும்…. பேய் பு….. புதுசா ஏதாவது யோசியிங்கடா…
    ஒரு புது முயற்சியா வாழ்த்தா விட்டாலும் பரவயில்லை இப்படி கே.பு மாதிரி விமர்சனம் எழுதாத… மச்சி//

    டேய் கே.கூ… மொதல்ல உன்னோட ஒரிஜினல் ப்ரொஃபைல்ல வந்து இதே கமெண்ட்டு போடு.. அப்புறம் வெச்சிக்கலாம் கச்சேரி.. உன்ன மாதிரி பம்பிப்பதுங்குற நாய்ங்களுக்கு பதில் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல………….. மச்சி. வந்துட்டானுங்க ஆட்டிக்கிட்டு.. 😉

    Reply
  35. @ அனானி – //யோவ், எல்லாரும் சொல்லறதுக்கு எதிராக சொல்லணும் என்பதற்காகவே எழுதறயா? லூசு மவனே//

    அட இங்க பாருய்யா… அறிஞர் வந்துட்டாரு… அய்யா அனானி.. மேலே விஷான்னு ஒரு பேமானிக்கு சொன்னது தான் உனக்கும்.. முடிஞ்சா வந்து ஒரிஜினல் ஐடில கருத்து சொல்லு.. இல்லேன்னா, மூடிக்கிட்டு ஓடு.. அத உட்டுட்டு, கேனத்தனமா ஒளறாதே.. இந்த மாதிரி லூசுத்தனமா ஒளர்ரவனுங்கள ட்ராக் பண்ணிக்கிக்கினே கீறேண்டா வெண்ணை… இன்னும் உங்க கிட்டருந்து நிறைய எதிர்பாக்குறேன்.. அப்பத்தான் சைபர் போலீஸ்ல போய் பேச வசதியா இருக்கும்.. எங்க.. கமான்.. பேசு.. 😉

    Reply
  36. Anonymous

    உன்ன யாருடா பதில் சொல்ல சொன்னா பொறம்போக்கு…. நீதான்டா கே கூ….மயிராண்டி…போய் சாகுடா

    Reply
  37. @ அனானி – அடடே… 😉 பதில் சொன்னா உனக்குக் கோவம் வருதாக்கும் 😉 இங்க பாருய்யா.. அப்ப நீ ஒரிஜினல் ஐடில வரமாட்ட.. பம்பிக்கினு, பயந்துபோயி, இப்புடி வந்து வாந்தியெடுத்துட்டுப் பொற சொறிநாய்க்கு பதில் சொல்லி டைம் வேஸ்ட் பண்ணத் தேவையில்ல எனக்கு 😉 நீ கத்து நைனா.. எவ்ளோ வேணாலும் கத்தி, வாந்தியெடு இங்க.. ஒருபய சீந்த மாட்டான்.. 😉 ஆனா எவ்ளவு திட்டினாலும் பொறுமையா வந்து அடி வாங்கிட்டுப் போற பார்த்தியா… அங்கதாய்யா நீ நிக்குற.. ச்சூ..ச்சூ.. போ போ.. ச்சூ.. பிஸ்கட் வேணுமா ? 😉

    Reply
  38. Anonymous

    I just want to tell you one thing …if just send this blog to not cyber crime…but to anti Pirated DVD dept chennai..see hollywood Bala’s comment…its written statement that he is using those things…

    Reply
  39. //I just want to tell you one thing …if just send this blog to not cyber crime…but to anti Pirated DVD dept chennai..see hollywood Bala’s comment…its written statement that he is using those things..//

    இது, அப்பவே வந்த அனானியா இல்லே யாராவது புது அனானியா? உங்க சொந்த ஐடில கமெண்டு போடுங்க.. அப்பறம் பேசலாம்.. ஏன் இப்புடி ஒளிஞ்சிக்கினு கமெண்டு போடுறீங்க.. இதே கமெண்ட்ட உங்க சொந்த ஐடில போட்ருந்தீங்கன்னா, நல்லா வெளையடியிருக்கலாம்.. 😉 வட போச்சே

    Reply
  40. //…its written statement that he is using those things… //

    பிராதுல எங்கயாவது கையெழுத்து போடனுங்களா???

    Reply
  41. தல,இது யாரோ உங்கள பத்தி தெரியாத அனானின்னு மட்டும் தெரியுது,ஆமா தல அமேரிக்கால இருக்கற ஒருத்தர் மேல ஆக்‌ஷன் எடுக்க அமஞ்சிக்கரைலேந்து சட்டம் பாயுமாஆஆஆஆஆஆஆஆஆஆஅ?:))))))

    Reply
  42. //இது யாரோ உங்கள பத்தி தெரியாத அனானின்னு மட்டும் தெரியுது,//

    எனக்கென்னமோ.. தெரிஞ்ச ‘அனானி’ மாதிரிதான் தோணுது!.. ஹா. ஹா. ஹா..!! 🙂

    Reply
  43. அவரை கிண்டலா பேசறதா நினைச்சி.. அவர் ஆங்கிலத்தை கிண்டல் பண்ணிட்டேன். ரொம்ப தப்பு.

    மன்னிச்சிகங்க அனானி.

    (கூச்சப்படாம… எந்த டிபார்ட்மெண்டுக்கு வேணும்னாலும் அனுப்புங்க தல)

    Reply
  44. தல,
    அனானிகிட்ட கூட இப்புடி பாசத்த காட்ட உங்களால தாங்க தல முடியும்,ஐயா அனானி நீங்க நல்லவரா?இல்ல கெட்டவரா?:)))

    Reply
  45. //அனானிகிட்ட கூட இப்புடி பாசத்த காட்ட உங்களால தாங்க தல முடியும்,
    ///

    பிஜிஎம்மோட… ‘வாழ்க.. வாழ்க’-ன்னு சவுண்ட் ஒன்னுதான் மிஸ்ஸிங். இதுக்கு அனானி அடிச்ச ஜோக்கே தேவலாம் போலயிருக்கு.

    நீங்க வேற..!! 🙂 🙂 🙂

    Reply
  46. மன்னிச்சிகங்க அனானி.

    (கூச்சப்படாம… எந்த டிபார்ட்மெண்டுக்கு வேணும்னாலும் அனுப்புங்க தல)

    =========
    ஏ பாட்ஷா பாரு பாட்ஷா பாரு[சோக பாட்டு]
    பீஸு பீஸா கிழிக்கும் போதும் பச்சகுழந்த சிரிப்ப பாருடாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    இவம்பேருக்குள்ளே காந்தமுண்டு உண்மைதானடாஆஆஆஆஆ
    :(((
    =========

    Reply
  47. //அனானிகிட்ட கூட இப்புடி பாசத்த காட்ட உங்களால தாங்க தல முடியும்,///

    எதுக்கும்.. இந்த டயலாகை.. காப்பிரைட் வாங்கி வச்சிக்கங்க. அடுத்த விஜய் படத்துல இதை யூஸ் பண்ணினாலும் பண்ணிடுவாங்க.

    Reply
  48. //பீஸு பீஸா கிழிக்கும் போதும் பச்சகுழந்த சிரிப்ப பாருடாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ//

    பெரிய பொருட்குற்றம் உள்ளது இந்த வரிகளில்!!

    அது…

    பீஸு பீஸா கிழிக்கும் போதும், ஏசு போல பொறுமை பாரடா – என்பதே சரியான வரிகள்.

    (இந்து பாஸிஸ ஜோதிஜியோடு கூட்டு வைத்த, பாஸிஸ கார்த்திக்கேயன் ஒழிக)

    Reply
  49. //அனானிகிட்ட கூட இப்புடி பாசத்த காட்ட உங்களால தாங்க தல முடியும்,///

    எதுக்கும்.. இந்த டயலாகை.. காப்பிரைட் வாங்கி வச்சிக்கங்க. அடுத்த விஜய் படத்துல இதை யூஸ் பண்ணினாலும் பண்ணிடுவாங்க.//
    ஐயோ தல சத்தம்போட்டு சிரிச்சதில் பக்கத்து ரூமிலிருந்து கதவை தட்டிட்டு போறாய்ங்க!!!!

    Reply
  50. //பீஸு பீஸா கிழிக்கும் போதும், ஏசு போல பொறுமை பாரடா – என்பதே சரியான வரிகள்.//
    தல பொருட்குற்றத்துக்கு மன்னிக்கவும்,எனக்கு தெரிந்து ரஜினி[யாராவது சண்டைக்கு வந்துடபோறாங்க]ரொம்ப அழகா ரத்தம் வழிய சிரிப்பார்.
    அப்போ நான் சொன்ன வரியும் வரும் என்பதே என் தா.கருத்து!!!!

    Reply
  51. //(இந்து பாஸிஸ ஜோதிஜியோடு கூட்டு வைத்த, பாஸிஸ கார்த்திக்கேயன் ஒழிக)//

    அய்யய்யோ இப்பிடியும் குடுப்பீங்களா?டீட்டெய்லு!!!!!!!!எஸ்கேப்

    Reply
  52. //ரொம்ப அழகா ரத்தம் வழிய சிரிப்பார்.//

    அது

    பச்சை ரத்தம் வழியும் போதும்
    பச்சக் குழந்தை சிரிப்பு பாரு-ன்னு வரும். தலைவருக்கு ப்ளூவா கூட ரத்தம் வரும். என்னா படம்!! இன்னொரு தடவை பார்க்கணும்னு ஆசை வந்துடுச்சி இப்ப!!

    திருட்டு டிவிடி எங்க கிடைக்குதுன்னு பார்க்கறேன்.

    Reply
  53. நண்பரே,

    வழமைபோலவே உங்கள் மனதில் உணர்ந்ததை சாட்டை அடிபோல் வழங்காது கனிவுடன் எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். நான் இன்னமும் இப்படத்தினை பார்க்கவில்லை ஆனாலும் ஒரு ரசிகன் என்றவகையில் உங்கள் பார்வையில் உள்ள புரிதலையும் நான் என் மனதில் இருத்திக் கொள்வேன்.

    யாமம், ரத்தம் ஒரே நிறம் ஆகிய இரு நாவல்களையும் படித்திருக்கிறேன். ரத்தம் ஒரே நிறத்திற்கு மணியம் செல்வன் ஒரு ஓவியம் வரைந்தார். ஒரு யானை ஒரு மனிதனின் தலையை தன் காலால் நசுக்கி சிதறடிப்பதான ஒரு காட்சி. அச்சித்திரம் இன்றும் எனக்கு மறக்கவில்லை.

    யாமம் ஆரம்பத்தில் அட்டகாசமாக இருந்து பின் என்னளவில் ஏமாற்றத்துடன் நிறைவு பெற்றது. இங்கிலாந்து சம்பந்தப்பட்ட கதையின் பகுதி சிறப்பாக இருக்கும். பண்டாரத்தையும் நாயையும் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

    ரத்தம் ஒரே நிறம் சிறப்பான நாவல். மீண்டும் படிக்க வேண்டும். இருப்பினும் யாமத்தைவிட இந்நாவல் எனக்குப் பிடிக்கும். அதில் ஒரு வாக்கியம் வரும்… சாம்பெய்ன் கிண்ணங்களா என்று :))

    தங்கள் கருத்துக்களை வெளியிடும் அன்பர்கள் அதனை கண்ணியமாக எடுத்துரைப்பதினால் என்ன குறைந்து விடப்போகிறது. அந்த பண்பைக்கூட அறியாதவர்கள் பாஸிஸ்ட்டுக்களை விட மோசமானவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

    மீண்டும் மீண்டும் உங்கள் கருத்துக்களை தயங்காது துணிவுடன் எடுத்து வைக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என் கருத்துக்கள் உங்கள் கருத்தில் இருந்து வேறுபட்டாலும்கூட உங்கள் பார்வையை நான் வரவேற்கிறேன். இதுவே ஒரு நல்ல உரையாடலிற்கு நம்மை இட்டுச் செல்லும் என்றும் நான் நம்புகிறேன். கண்ணியம் தெரியாதவர்களிற்காக நீங்கள் உங்கள் கண்ணியத்திலிருந்து இறங்கிவிடாதீர்கள் 🙂

    ரேப் சீனில் அழகான சிட்டுக்களை அள்ளி மேயும் காட்சிகளில் இலவசமாக நடிக்க நான் தயார். இதற்கு மொழி ஒரு பிரச்சினையாக இருக்காது என்று நம்புகிறேன் :))

    சிறப்பான பார்வை நண்பரே.

    Reply
  54. படம் ரசிக்கும்படியாக இருந்தது..

    //படத்தின் இன்னொரு மிக அட்டகாசமான ப்ளஸ் பாயிண்ட் – ஃப்ளாஷ்பேக்கும் நிகழ்காலமும் சந்திக்கும் அந்த ஷாட்கள்//

    இந்த உத்தியை Rang De Basanti படத்திலும் அருமையா பயன்படுத்தி இருப்பார்கள்..

    Reply
  55. அய்யா தமிழ் பட டிரக்டருங்களே. இங்க ஒரு பத்து பேரு(கரக்டா தேளு) இருக்காங்க. ஒங்களுக்கு முன்னாடி இருக்கற உலக படத்த எல்லாம் பார்த்துடறாங்க. கொஞ்சம் பார்த்து காப்பி அடிங்கய்யா. இல்லேன்னா குமுற குமுற அடி விழும் :).

    Reply
  56. தல …எனக்கு இந்த படம் கொஞ்சம் பிடிச்சு இருந்துச்சு.

    ஆனா ஒன்னு ஆர்யா மற்றும் ஏமி இரண்டு பேருடைய உடைகளும் சொல்ல பட்ட காலத்துடன் ஒட்டவே இல்லை… அதுவும் ஆர்யா டிரஸ் 1880 ல தான் வழக்க்கதுல இருந்துச்சு.

    எனக்கு தெரிந்து பொன்னியின் செல்வனிலும் , பல சாண்டில்யன் நாவல்களிலும் இதே மாதிரி போராட்டங்களிடைய வருகிற காதலை பத்தி இருக்கும்.

    இசை எனக்கு பிடிச்சு இருந்துச்சு, ஆனால் சத்யமா BGM யை கவனிக்கவில்லை ….

    நீங்க சொன்ன இரண்டு நாவல்களையும் வாங்கி வைத்ததோட சரி ..இனிமேல் தான் படிக்கணும் …

    தல முக்கியமா கமலோட ஹே ராம் படத்தை மறந்துடீன்களே …. ஹே ராமுக்கும் இந்த படத்திற்கும் editing ல ஒரு வித தொடர்பு இருக்குல

    Reply
  57. //அனானிகிட்ட கூட இப்புடி பாசத்த காட்ட உங்களால தாங்க தல முடியும்,///

    SA ராஜ்குமார் மியூசிக் ல வரும் “ல ல லா லா லா” உடன் இத்தனை வாசிக்குமாறு எல்லோரும் கேட்டுக்கொள்ள படுகிறார்கள்

    Reply
  58. “கனவுகளின் காதலன் said…
    நண்பரே,

    வழமைபோலவே உங்கள் மனதில் உணர்ந்ததை சாட்டை அடிபோல் வழங்காது கனிவுடன் எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். நான் இன்னமும் இப்படத்தினை பார்க்கவில்லை ஆனாலும் ஒரு ரசிகன் என்றவகையில் உங்கள் பார்வையில் உள்ள புரிதலையும் நான் என் மனதில் இருத்திக் கொள்வேன்.

    யாமம், ரத்தம் ஒரே நிறம் ஆகிய இரு நாவல்களையும் படித்திருக்கிறேன். ரத்தம் ஒரே நிறத்திற்கு மணியம் செல்வன் ஒரு ஓவியம் வரைந்தார். ஒரு யானை ஒரு மனிதனின் தலையை தன் காலால் நசுக்கி சிதறடிப்பதான ஒரு காட்சி. அச்சித்திரம் இன்றும் எனக்கு மறக்கவில்லை.

    யாமம் ஆரம்பத்தில் அட்டகாசமாக இருந்து பின் என்னளவில் ஏமாற்றத்துடன் நிறைவு பெற்றது. இங்கிலாந்து சம்பந்தப்பட்ட கதையின் பகுதி சிறப்பாக இருக்கும். பண்டாரத்தையும் நாயையும் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

    ரத்தம் ஒரே நிறம் சிறப்பான நாவல். மீண்டும் படிக்க வேண்டும். இருப்பினும் யாமத்தைவிட இந்நாவல் எனக்குப் பிடிக்கும். அதில் ஒரு வாக்கியம் வரும்… சாம்பெய்ன் கிண்ணங்களா என்று :))

    தங்கள் கருத்துக்களை வெளியிடும் அன்பர்கள் அதனை கண்ணியமாக எடுத்துரைப்பதினால் என்ன குறைந்து விடப்போகிறது. அந்த பண்பைக்கூட அறியாதவர்கள் பாஸிஸ்ட்டுக்களை விட மோசமானவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

    மீண்டும் மீண்டும் உங்கள் கருத்துக்களை தயங்காது துணிவுடன் எடுத்து வைக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என் கருத்துக்கள் உங்கள் கருத்தில் இருந்து வேறுபட்டாலும்கூட உங்கள் பார்வையை நான் வரவேற்கிறேன். இதுவே ஒரு நல்ல உரையாடலிற்கு நம்மை இட்டுச் செல்லும் என்றும் நான் நம்புகிறேன். கண்ணியம் தெரியாதவர்களிற்காக நீங்கள் உங்கள் கண்ணியத்திலிருந்து இறங்கிவிடாதீர்கள் 🙂

    ரேப் சீனில் அழகான சிட்டுக்களை அள்ளி மேயும் காட்சிகளில் இலவசமாக நடிக்க நான் தயார். இதற்கு மொழி ஒரு பிரச்சினையாக இருக்காது என்று நம்புகிறேன் :))

    சிறப்பான பார்வை நண்பரே.”

    இவரு ரொம்ப நல்லவரா இருப்பார் போல

    Reply
  59. “1942 அத விட சுதந்திரத்தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கும் காலம்
    அப்பவே 1942 A Love Story ன்னு ஒரு படம் வந்துச்சு”

    எனது கலவர பூமில கிளுகிளுப்பா ???

    (அண்ணே அந்த படம் சுகந்திர தீ போது வரலண்ணே…. 1994 ல தான் வந்துச்சு ..நாதாரீதனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும் ண்ணே)

    Reply
  60. “மேலே வந்து வாந்தியெடுத்த அனானியின் IP – 218.248.84.93 “

    வாந்தி எடுக்கிறதுக்கெல்லாம் IP நம்பர் தரங்களா ???? science has developed that muchaa …..

    (ஒத்துக்கிறேன் நீங்கோறு அறிவாளின்னு)

    Reply
  61. “கருத்து மழைகள இங்க பொழியுங்க மச்சி . .”

    மாதமொருமுறை மொள்ளமாரி தனமா தான் பொழிவோம் ….அடிக்கடில்லை

    Reply
  62. //@ பாலா – அனானி ஆப்ஷன் வைக்கறதுல இதுதான் பிரச்சனை. நான் எடுத்ததுக்கு ரீஸன் இது//

    ரைட்டு.. நானு ஏன் வெச்சேன்னா, இவனுங்க கூட விளையாடுறது நல்லா இருக்குமேன்னு தான்.. ஆனா நீங்க சொன்னது

    சரி. ஸோ, இனிமே நோ அனானி ஆப்ஷன் 😉 இப்ப பாக்கலாம். . 🙂

    /திருட்டு டிவிடி எங்க கிடைக்குதுன்னு பார்க்கறேன்//

    இதோ வந்துட்டாரு அனானி… என்கௌண்ட்டர் பண்ணப்போறாரு உங்கள.. 😉 ஹ ஹா ஹா ஹா… 😉

    @ காதலரே – //ரத்தம் ஒரே நிறத்திற்கு மணியம் செல்வன் ஒரு ஓவியம் வரைந்தார். ஒரு யானை ஒரு மனிதனின்

    தலையை தன் காலால் நசுக்கி சிதறடிப்பதான ஒரு காட்சி. அச்சித்திரம் இன்றும் எனக்கு மறக்கவில்லை//

    சூப்பர் ! எனக்கும் அது நினைவுள்ளது… அட்டகாசம் !!

    //யாமம் ஆரம்பத்தில் அட்டகாசமாக இருந்து பின் என்னளவில் ஏமாற்றத்துடன் நிறைவு பெற்றது//

    அப்படியெ ஒத்துக் கொள்கிறேன்.. எனக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது.. ஆனாலும், பண்டைய சென்னை என்றவுடனேயே யாமம் நினைவு வந்ததால், அதனைப் பற்றி எழுதினேன்..

    //சாம்பெய்ன் கிண்ணங்களா என்று :))//

    ஆஹா… ரிப்பீட்டு !!

    //ரேப் சீனில் அழகான சிட்டுக்களை அள்ளி மேயும் காட்சிகளில் இலவசமாக நடிக்க நான் தயார். இதற்கு மொழி ஒரு பிரச்சினையாக இருக்காது என்று நம்புகிறேன் :))//

    அப்ப நானு ???? நானும் நடிப்பேன் நானும் நடிப்பேன் 😉

    //தங்கள் கருத்துக்களை வெளியிடும் அன்பர்கள் அதனை கண்ணியமாக எடுத்துரைப்பதினால் என்ன குறைந்து விடப்போகிறது. அந்த பண்பைக்கூட அறியாதவர்கள் பாஸிஸ்ட்டுக்களை விட மோசமானவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து//

    மிகச்சரி காதலரே.. ஆனாலும், இதெல்லாம் ஒரு பப்ளிக் கக்கூஸில் வந்து கன்னாபின்னாவென்று கிறுக்கிவிட்டுப் போவதுபோல் தான். அடையாளம் தெரியாது என்று நினைத்துக்கொண்டு இந்த நாதாரிகள் இப்படி செய்கிறார்கள். ஆனால்,

    இவர்களது ஐபி மற்றும் ஐஎஸ்பி, ஊர் இன்னும் வேறு சில டெக்னிகல் டீட்டெயில்கள் அருமையாகப் பதிவு செய்துகொள்ளப்படுகின்றன என்பதை அறியாத ஆடுகள் இவர்கள் 😉 . .

    @ பிரசன்னா – //இந்த உத்தியை Rang De Basanti படத்திலும் அருமையா பயன்படுத்தி இருப்பார்கள்..//

    யெஸ்.. அதிலும் மிகவும் நன்றாகக் காட்சிகள் இணையும்.. சூப்பராக இருக்கும்..

    @ இராமசாமி கண்ணன் – \அய்யா தமிழ் பட டிரக்டருங்களே. இங்க ஒரு பத்து பேரு(கரக்டா தேளு) இருக்காங்க. ஒங்களுக்கு முன்னாடி இருக்கற உலக படத்த எல்லாம் பார்த்துடறாங்க. கொஞ்சம் பார்த்து காப்பி அடிங்கய்யா. இல்லேன்னா

    குமுற குமுற அடி விழும் :)//

    ஆஹா… கண்டபடி புடிச்சி ஓட்டிப்புட்டீங்க 😉 ஹாஹ்ஹா… செம காமெடி தல..;-)

    @ டம்பீ மேவி – //ஆனா ஒன்னு ஆர்யா மற்றும் ஏமி இரண்டு பேருடைய உடைகளும் சொல்ல பட்ட காலத்துடன் ஒட்டவே இல்லை… அதுவும் ஆர்யா டிரஸ் 1880 ல தான் வழக்க்கதுல இருந்துச்சு//

    ஆமா.. சரிதான்.. இதெல்லாம் அரதப்பழைய ஐடியால்ல.. 😉 லகான் தான் இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கும் 😉

    /எனக்கு தெரிந்து பொன்னியின் செல்வனிலும் , பல சாண்டில்யன் நாவல்களிலும் இதே மாதிரி போராட்டங்களிடைய வருகிற காதலை பத்தி இருக்கும்//

    சாண்டில்யன் நாவல்கள் சரி.. ஆனா, கல்கியோட நாவல்கள்ல, ஃபாரினர் மேல லவ்வு வராது.. அது லோக்கல் ஆளு மேல மட்டும் தான் வரும் 😉

    அவரோட அலையோசை படிங்க தல.. ச்சும்மா பின்னியெடுக்கும்… அதுல ஒரு அட்டகாசமான லவ்வு உண்டு.. 😉

    //தல முக்கியமா கமலோட ஹே ராம் படத்தை மறந்துடீன்களே …. ஹே ராமுக்கும் இந்த படத்திற்கும் editing ல ஒரு வித தொடர்பு இருக்குல//

    ஆமா.. கரெக்ட். ரெண்டு படங்களின் எடிட்டிங்கும் ஒரே போலத்தான்.. நானு, உண்மைய சொல்லணும்னா, படத்துல எதாவது ஒரு காட்சில ராமும் அப்யங்கரும் பேக்ரௌண்டுல பேசிக்கினே நடந்து போற காட்சி இருக்கு

    Reply
  63. //ரேப் சீனில் அழகான சிட்டுக்களை அள்ளி மேயும் காட்சிகளில் இலவசமாக நடிக்க நான் தயார். இதற்கு மொழி ஒரு பிரச்சினையாக இருக்காது என்று நம்புகிறேன் :))//
    நானும் நானும்
    நாயக் கல்நாயக்

    Reply
  64. நண்பா,
    அந்த ஐபி நம்பரை அடிச்சா,
    அவர் எந்த பேங்க் க்ரெடிட் கார்டு வச்சிருக்கார்,எந்த டிடிஎஹ் பாக்குறார்ங்கறது வரை வருது,என்ன கொடும சார்,அனானிகள் சுதந்திரமா கருத்து கூட சொல்லவிடமாட்டேங்கிது இந்த கூகிள்,
    அட நடுத்தெரு நாராயணாஆஆஆஆ

    Reply
  65. //@ டம்பீ மேவி – //ஆனா ஒன்னு ஆர்யா மற்றும் ஏமி இரண்டு பேருடைய உடைகளும் சொல்ல பட்ட காலத்துடன் ஒட்டவே இல்லை… அதுவும் ஆர்யா டிரஸ் 1880 ல தான் வழக்க்கதுல இருந்துச்சு//

    இந்த ஆய்வை நீங்க மேலே பதிவுலயும் குடுங்க,
    உண்மை 50 வருஷத்துல எத்துனை மாற்றம்,
    காந்தி பாரிஸ்டர் படிக்கபோறப்பயே[1890] கோட்சூட்டோட தான் போனார்,அதை எல்லாம் தீஸிஸ் பண்ணாம,இப்புடி வெஸ்ட்கோட்டோடயா காட்டுறது?

    Reply
  66. ஆமா ..நானும் அலை ஓசை படிச்சு இருக்கேன் …அதுல தாரணி love propose பண்ணுற இடம் செமைய இருக்கும் …. கடைசில சௌந்தர ராகவனுக்கு அவங்களை கல்யாணம் கட்டி வைச்சு சப்புன்னு ஆகிருப்பாரு…. அது செம engaging நாவல் ல

    @ கீதப்பிரியன் : எங்க அப்பாவோட தாத்தா ஆர்யா போட்டு இருக்கிற டிரஸ் ஓட தான் ஒரு போட்டோ ல இருக்குறாரு…அதை வைச்சு தான் நான் சொன்னேன் …இதுன்னு பெரிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணல……

    Reply
  67. பேசமா ஏமி குட்டியை ஒரு குத்தாட்டம் போடா விட்டு இருந்த இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் வந்து இருக்காது ….. அப்படியே ஒரு ரேப் சீன்ன்னு ம்ம்ம்ம் 1980 களில் வாழ்ந்த இளைஞர்கள் குடுத்து வைத்தவர்கள் , நிறைய ரேப் சீன் பார்த்து இருப்பார்கள்

    Reply
  68. The review is like “En Purusanum kacherikku poran”. u show grow to write reviews.

    Reply
  69. ungal ella vimarsanamum padithu varugirane.. thelivaagavum, Nerthiyaagavum ulladhu..vaalthukkal…

    Reply
  70. அண்ணே ஏரியா ரொம்ப சூடா இருக்கற மாதிரி தெரியுது

    .

    Reply
  71. This comment has been removed by the author.

    Reply
  72. The Sleeping Dictionary என்ற படம் தான் ஞாபகத்திற்கு வருகிறது . நம்ம Jessica Alba ‘தெறம’ காட்டியிருப்பார். வெள்ளைக்கார ஹீரோ துரை இந்தோனேசிய பழங்குடிப் பெண்ணிடம் காதலில் விழுவது தான் கதை. நல்ல ஒரு imperial காதல் கதை பார்த்த திருப்தி கிடைக்கும். இந்தப் படத்தை எப்படி தமிழில் காப்பி அடிக்காமல் விட்டார்கள் எனத் தெரியவில்லை..

    Reply
  73. //(இந்து பாஸிஸ கூட்டு வைத்த, பாஸிஸ கார்த்திக்கேயன் ஒழிக)//

    வழிமொழிகிறேன்

    Reply
  74. //ஒரு கெமிஸ்ட்ரியே இருவருக்கும் இடையே இல்லை. ஏதோ ஆர்யா வருகிறார். ஆமியைப் பார்க்கிறார். காதல். பின் பிரச்னைகள்.. இப்படித்தான் கதை ஓடுகிறது.//

    எதுக்கு சினிமாவில் கெமிஸ்ட்ரி,பிசிக்ஸ் எல்லாம் பாக்குறீங்க? எங்க மாதிரி ‘B’,’C’ செண்டர் ஆளுங்களுக்கான படம் சார் இது. நாங்களெல்லாம் ரொம்ப ரசிச்சு தான் பாத்தோம்.படத்த சரியா வெளங்கிகிட்டோம்.

    Reply
  75. //ஆனால், அந்தப் பெண், கதையின் ஹீரோவான தமிழ்நாட்டு இளைஞனை விரும்புவதில்லை. சக அதிகாரியான ஒரு வெள்ளைக்காரனையே விரும்புகிறாள். அதுதான் இயற்கை. //

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? வெள்ளைக்காரிங்க நம்மள காதலிக்ககூடாதுன்னா? இல்லை நாம அதுக்கு worth இல்லையா?
    இயற்கைக்கு மாறா எதுவுமே சிந்திக்ககூடாதா? படமாக்ககூடாதா?

    Reply
  76. //என்னால், சில காட்சிகள் வரும்போது, சில படங்களைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை //

    எப்ப பாரு எதுனா ஒலகப்படம் பாத்துகினே இருந்தா இதுதான் நடக்கும். எங்களுக்கெல்லாம் எந்த அடையாளமே தெரியலை. முதலில் இம்மாதிரியான ஒரு முயற்சி செய்த விஜய்க்கும், தயாரிப்பாளர்க்கும் ராயல் சல்யூட்!!!!

    Reply
  77. வரும் 23,24 நானும் இப்பட இயக்குனர் விஜய்யும் பெங்களூர் வாரோம்.vat 69
    டன் விவாதிப்போம். நன்றி. தேளுன்னா இப்படியா கொட்டுறது?!!!! நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

    Reply
  78. //வரும் 23,24 நானும் இப்பட இயக்குனர் விஜய்யும் பெங்களூர் வாரோம்.vat 69
    டன் விவாதிப்போம். நன்றி. தேளுன்னா இப்படியா கொட்டுறது?!!!! நெக்ஸ்ட் மீட் பண்றேன்.//

    இது விஜய்க்கு தெரியுமா?

    Reply
  79. //இம்மாதிரியான ஒரு முயற்சி செய்த விஜய்க்கும், தயாரிப்பாளர்க்கும் ராயல் சல்யூட்!!!!//

    அப்புடினா என்ன சரக்கா?குடு குடு

    Reply
  80. //நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? வெள்ளைக்காரிங்க நம்மள காதலிக்ககூடாதுன்னா? இல்லை நாம அதுக்கு worth இல்லையா?
    இயற்கைக்கு மாறா எதுவுமே சிந்திக்ககூடாதா? படமாக்ககூடாதா?//

    மச்சி நாம் இப்போ வருத்தப்பட்டு என்ன ஆகுறது?புள்ளக்குட்டிக்காரய்ங்க!!!!!!

    Reply
  81. ////(இந்து பாஸிஸ கூட்டு வைத்த, பாஸிஸ கார்த்திக்கேயன் ஒழிக)//

    வழிமொழிகிறேன்//

    யோவ் யாராவது கோஷம் போட்டா,முழுசா கேக்காமலே வாழ்க ஒழிக சொல்லுவீங்களே!!!!ஹஹாஹா

    Reply
  82. @ கார்த்திகேயன் – //நண்பா,அந்த ஐபி நம்பரை அடிச்சா,அவர் எந்த பேங்க் க்ரெடிட் கார்டு வச்சிருக்கார்,எந்த டிடிஎஹ் பாக்குறார்ங்கறது வரை வருது,என்ன கொடும சார்,அனானிகள் சுதந்திரமா கருத்து கூட சொல்லவிடமாட்டேங்கிது இந்த கூகிள்,அட நடுத்தெரு நாராயணாஆஆஆஆ//

    ஹாஹ்ஹா… இது பாயிண்ட்டு !!! 😉 இதுக்கு நீங்க பேரே சொல்லிருக்கலாமே 😉

    காந்தி பாரிஸ்டர் படிக்கபோறப்பயே[1890] கோட்சூட்டோட தான் போனார்,அதை எல்லாம் தீஸிஸ் பண்ணாம,இப்புடி ஸ்ட்கோட்டோடயா காட்டுறது?//

    நாங்க லகான் பார்த்துட்டோம்.. அதுனால, பண்டைய காலம்னு தீம் வெச்சாலே இப்புடித்தான் காட்டுவோம் !! 😉 ஹீ ஹீ

    @ டம்பீ மேவி – //எங்க அப்பாவோட தாத்தா ஆர்யா போட்டு இருக்கிற டிரஸ் ஓட தான் ஒரு போட்டோ ல இருக்குறாரு…அதை வைச்சு தான் நான் சொன்னேன் …இதுன்னு பெரிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணல……//

    இதுவே ஒரு பெரிய ஆராய்ச்சி தாங்க 😉 அப்பாவோட தாத்தான்னா, தோராயமா ஒரு நூறு வருஷம் கேப்பு வருதா? அப்ப கார்த்திகேயன் சொன்ன – காந்தி பாயிண்ட்டு – பொருந்தி வருது 😉

    //பேசமா ஏமி குட்டியை ஒரு குத்தாட்டம் போடா விட்டு இருந்த இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் வந்து இருக்காது ….. அப்படியே ஒரு ரேப் சீன்ன்னு ம்ம்ம்ம் 1980 களில் வாழ்ந்த இளைஞர்கள் குடுத்து வைத்தவர்கள் , நிறைய ரேப் சீன் பார்த்து இருப்பார்கள்//

    ஆஹா.. என்னா ஒரு வில்லத்தனம் !! அந்த காலத்துல வந்ததெல்லாம் ரேப்பே இல்ல.. ஒண்ணுமே பாக்க முடியாது பாஸ்.. வில்லன், பொண்ணு மேல கை வெச்சவுடனே, ஒரு மல்லிகைப்பூ கசங்குறத காட்டுவாங்க.. அத்தோட

    கட்டாயிரும் 😉

    @ சதீஷ் – வாங்கண்னா.. வாங்க.. வந்து, ரிவ்யூ எழுதுவது எப்புடின்னு சொல்லிக்குடுங்க.. அப்புடியே, அந்தக் கருத்துகள தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல எழுதிவெச்சிக்கினு, பக்கத்துலயே நீங்களும் உக்காந்துக்குங்க.. வருங்காலத்துல

    வர்ர சந்ததிகள், அதப் பார்த்து படிச்சி புரிஞ்சி நடந்துக்குவாங்க 😉 என்னா காமெடி 😉

    @ கதிர் – மிக்க நன்றி நண்பா… அடிக்கடி இந்தப்பக்கம் வந்து, குட்டிட்டுப் போங்க..

    @ சிபி – ஹாஹ்ஹா.. இப்போ சூடு எல்லாம் ஆறி, கூல் ஆயிருச்சி 😉

    @ பென் – ஸ்லீப்பிங் டிக்‌ஷனரி படம் பார்த்ததில்ல.. கட்டாயம் பார்க்குறேன்.. இதுபத்தி நிறைய பேருக்குத் தெரியல போல.. தெரிஞ்சிருந்துச்சி… மக்கா கட்டாயம் காப்பி தான் 😉

    @ மயிலு – என்ன காலைலயே மப்பா? ஆபீசுக்குப் போலயா?

    //வரும் 23,24 நானும் இப்பட இயக்குனர் விஜய்யும் பெங்களூர் வாரோம்.vat 69டன் விவாதிப்போம். நன்றி. தேளுன்னா இப்படியா கொட்டுறது?!!!! நெக்ஸ்ட் மீட் பண்றேன்.//

    பால் போல உள்ளம் படைச்ச என்னைக் கெடுக்க முயற்சி பண்ணும் உங்க அராஜகத்தை நான் மறுதளிக்கிறேன்.,.. மீறிக் கெடுக்க நினைச்சா, அப்புறம் ‘என்கௌண்ட்டர் ‘ பண்ணப்படும் 😉

    //நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? வெள்ளைக்காரிங்க நம்மள காதலிக்ககூடாதுன்னா? இல்லை நாம அதுக்கு worth இல்லையா?இயற்கைக்கு மாறா எதுவுமே சிந்திக்ககூடாதா? படமாக்ககூடாதா?//

    இப்புடி இப்ப ஆவேசமா கத்தி என்ன பிரயோஜனம்? அதான் ஆன்சைட் போகும்போதே யாராவது ஒரு வெள்ள ஃபிகர மடக்கணும்றது . . 😉

    ////(இந்து பாஸிஸ கூட்டு வைத்த, பாஸிஸ கார்த்திக்கேயன் ஒழிக)//

    வழிமொழிகிறேன்//

    யோவ் யாராவது கோஷம் போட்டா,முழுசா கேக்காமலே வாழ்க ஒழிக சொல்லுவீங்களே!!!!ஹஹாஹா

    அதானே??? முழுசா என்ன… துளிக்கூட மயிலு கேக்கல.. அதான் கோஷத்த அதுவும் எழுப்புது.. கண்டிப்பா ‘என்கௌண்ட்டர்’ ட்ட சொல்லிர வேண்டியதுதான் 😉

    Reply
  83. என்னடா மனுஷன் டெல்லி 6 , சுஜாதா நாவல்ன்னு எங்கோ போறாரே நமக்கு Titanic படம் மாதிரில இருந்துச்சு. ஆனா Titanicக்கு வந்திடிங்க. எனக்கு பூக்கள் பூக்கும் பாடல் பிடிச்சிருக்கு. டெல்லி 6 , Bridges of Madison county படங்கல்ளெல்லாம் எனக்கு பரிச்சயம் இல்ல. ஆனா Apocalypto பார்த்திருக்கேன். நீங்க சொல்ல வரும் சீன் (Apocalypto) இத விட ரேணிகுண்டல அப்பட்டமா இருக்கும்.

    Reply
  84. மன்னிக்கணும் அது ரேணிகுண்ட இல்ல…போர்க்களம்

    Reply
  85. சரவணன் பிள்ளை

    எனக்கும் titanic படத்தை தமிழில் பார்ப்பது போல் இருந்தது . ஆனால் என் நண்பர்கள் என்னை கிண்டலடித்தனர் . நான் கூட என்னை சந்தேகித்தேன் ஒரு வேலை ரசனை தவறோ என்று. மிக்க நன்றி. அருமையான பதிவு.

    Reply

Join the conversation