My screenplay session at Mindscreen film institute – Chennai

by Karundhel Rajesh October 20, 2013   Cinema articles

ராஜீவ் மேனனின் மைண்ட்ஸ்க்ரீன் திரைப்பட கல்லூரியில், ‘ஸிட் ஃபீல்டின் திரைக்கதை நுணுக்கங்கள்’ என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் மாணவர்களுக்கு உரையாற்ற இயலுமா என்று கேட்டு அதன் முதல்வர் திரு. ராகவ் ஸ்ரீதரன் அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வந்தது. தேதிகளாக, அக்டோபர் 11 & 12 ஆகியவை முடிவுசெய்யப்பட்டன.

உண்மையில் ஸிட் ஃபீல்டின் புத்தகம் அட்டகாசமானது என்பது அதைப் படித்திருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் தெரியும். அவரது விதிகளின்படிதான் உலகில் எடுக்கப்படும் எந்தக் கமர்ஷியல் படமும் தெரிந்தோ தெரியாமலோ இருக்கும். ஆகவே, திரைக்கதை பற்றிப் படிக்கும் மாணவர்களுக்கு அது மிகவும் உதவியாக இருக்கும் என்பது முதல்வர் ஸ்ரீதரன் மற்றும் கல்லூரியின் டீன் திரு. ஞானசேகரன் ஆகியவர்களின் கருத்தாக இருந்தது. (ஞானசேகரன்தான் ‘அவள் அப்படித்தான்’ படத்துக்காக விருது வாங்கிய ஒளிப்பதிவாளர் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கலாம்).

எனவே, தேதிகளை ஒப்புக்கொண்டதன் பிறகு, பவர்பாயிண்ட்டில் ஸ்லைட்களை தயாரிக்கும் பணியை துவக்கினேன். அந்தப் பணி முடிவடைய ஒரு மாதம் ஆனது. மொத்த ஸ்லைட்களின் எண்ணிக்கை – 100. புத்தகம் எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டதால், ஸிட் ஃபீல்டின் புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் பல ஸ்லைட்களாகப் பிரித்துக்கொண்டு, ஒவ்வொன்றிலும் பக்கம் பக்கமாக எழுதாமல் முக்கியமான பாயிண்ட்களை மட்டும் தயாரித்துக்கொண்டேன். ஆனாலும் அதற்கு வெகு காலம் பிடித்தது.

அதன்பின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஸிட் ஃபீல்ட் பரிந்துரைக்கும் சில திரைப்படங்களிலிருந்து க்ளிப்பிங்ஸ் சேர்த்துக்கொண்டேன். வீடியோவைப் பார்த்துவிட்டு, அதனைப் பற்றி விவாதிப்பதே நோக்கம். அப்படி பல வீடியோக்கள் சேர்க்கப்பட்டன.

இந்த செஷனில் எனது நோக்கம் என்னவாக இருந்தது? திரைக்கதை பற்றிய முக்கியமான தகவல்கள்+அதை எழுதும்போது நாம் சந்திக்கும் பிரச்னைகள்+திரைக்கதையின் முக்கியத்துவம் ஆகியவைகளைப் பற்றி முடிந்தவரை விபரமாக பேசுவது.

இதன்பின்னர் ஸ்லைட்களை ஒழுங்கான ஃபார்மேட்டில் நேர் செய்து, முழுக்கத் தயாரித்து முடிக்க கொஞ்ச காலம் ஆனது. 100 ஸ்லைட்களாயிற்றே? பின்னர் சென்னை சென்று, 11ம் தேதி காலை 9.30க்கு செஷனை துவங்கினேன். மறுநாள் 12ம் தேதி மாலை ஐந்து மணிக்குதான் அது முடிந்தது. English was the medium of presentation.

முதலில், ஸிட் ஃபீல்டின் 3 ஆக்ட் ஸ்ட்ரக்சர் எங்கு உருவானது என்று பார்த்தோம் (அரிஸ்டாட்டில்). அதன்பின்னர் ஸிட் ஃபீல்ட் பற்றிய அறிமுகம். அங்கேயே, ஸிட் ஃபீல்டின் கருத்துகள் பிடிக்காமலும் பலர் இருப்பதைப் பற்றியும், அது ஏன் என்றும் பேசினேன். கூடவே, பிற திரைக்கதை வல்லுனர்களையும் பற்றிச் சொன்னேன். அதன்பின் முதல் அத்தியாயமான ‘திரைக்கதை என்றால் என்ன?’ என்பதைப் பற்றி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் செஷன் ஓடியது. நான் ஒரு செஷன் எடுக்கையில், அதில் பங்கேற்பாளர்களையும் பேச வைத்து, அவர்கள் கருத்தை வெளிப்படுத்தவைப்பதே எனக்குப் பிடித்தமானது என்பதால், கிட்டத்தட்ட அனைவரின் கருத்தையும் பல விஷயங்களில் கேட்டேன். அவர்களும் அட்டகாசமான முறையில் பதிலளித்தனர். செம்ம ஜாலியாக சென்ற செஷனில், இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை (செஷனில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை – 24).

இரண்டு நாட்கள் ஓடிய இந்த செஷன் எப்படி இருந்தது? அதில் நாங்கள் விவாதித்தவை என்ன?

பல உருப்படியான விஷயங்களைப் பேச முடிந்தது. இன்சைட்டிங் இன்சிடெண்ட், கீ இன்சிடெண்ட், இரண்டு பிளாட் பாயிண்ட்கள், முடிவு, ஆரம்பம், திரைக்கதை வடிவம், கதைக்கேற்ற கதாபாத்திரங்களை எப்படி வடிவமைப்பது?, அவற்றை எப்படி வலுப்படுத்துவது, ஷாட்கள், ஸீன்கள், சீக்வென்ஸ்கள், திரைக்கதை எழுதும் வகைகள், புத்தகங்களிலிருந்தும் நாடகங்களிலிருந்தும் திரைக்கதைகளை எழுதுவது எப்படி? (Adaptations), எழுதி முடித்த பிறகு என்ன செய்வது, Collaborations போன்ற பல முக்கியமான விஷயங்களை இந்தத் திரைக்கதை செஷனில் விரிவாகப் பேச முடிந்தது. அவற்றுக்கு உதாரணமான காட்சிகளும் காண்பித்தேன். கூடவே மாணவர்களின் ரெஸ்பான்ஸ் பட்டையை கிளப்பியதால் ஜாலியாக செஷனை எடுக்க முடிந்தது.

நான் கண்ட நல்ல விஷயம் – மாணவர்களுக்கு டார்காவ்ஸ்கி முதல் டாரண்டினோ வரை அனைவரையும் தெரிந்திருந்ததே… உலக அரங்கில் மிக முக்கியமான பல படங்களையும் அவர்கள் பார்த்திருந்தனர். எனவே, அவ்வப்போது டாரண்டினோ பற்றி, ஸ்கார்ஸேஸி பற்றி, நமது பாக்யராஜ் பற்றி (டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தின் க்ளைமேக்ஸை ஒரு மாணவர் நினைவு கூர்ந்தது ஆச்சரியம்), மணிரத்னம் பற்றி, கை ரிட்சி, பீட்டர் ஜாக்ஸன், நோலன், குப்ரிக் போன்ற இயக்குநர்களைப் பற்றியெல்லாம் விரிவாகவே விவாதிக்க முடிந்தது.

Adaptations பற்றி ஒரு தனி அத்தியாயமே இருக்கிறது என்பதால், அந்த அத்தியாயம் தொடங்கும் முன்னர் பிரபல புத்தகங்களைப் பற்றியும், அவற்றை எப்படி திரைக்கதையாக மாற்றலாம் என்பதுபற்றியும் நிறையப் பேசினோம். பல திரைக்கதை ஆசிரியர்கள் எப்படியெல்லாம் adopt செய்தனர் என்பதையும் ஸ்லைட்களில் காண்பித்தேன். இதன் உப பிரிவாக, இன்ஸ்பிரேஷன்களையும் ஈயடிச்சாங்காப்பிகளையும் விரிவாகப் பேசினோம்.

மொத்தத்தில், மாணவர்கள் அவரவர்களின் தாய்மொழிப்படங்கள் பலவற்றையும் பார்த்திருந்தாலும், இங்லீஷ் படங்களின் உதாரணங்கள் அனைவருக்கும் தெரிந்து, பிடித்தும் இருந்தது. இரண்டு நாட்கள், செஷனில் நேரம் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. மிக விபரமான செஷனாக அது அமைந்தது. மைண்ட்ஸ்க்ரீன் மாணவர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் என் வாழ்த்துகள்.

பி.கு – சென்னையின் இன்னொரு புகழ்பெற்ற திரைப்படக் கல்லூரியிலும் என்னை அழைத்திருக்கிறார்கள். விரைவில் அங்கும் வருவேன்.

  Comments

7 Comments

  1. Karuppaih Raj

    தல பதிவு ரொம்ப அருமையாக இருந்தது. சிட் பீல்டு கருத்துகள் பிடிக்காமல் போன மாணவர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள்?

    அப்புறம் இது போன்ற session களில் கலந்துகொள்ள எங்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    Reply
  2. sundar g

    congrats rajesh for the awakening on young directors. would like to attend the 2nd presentation (if possible ??) whatever it may be pl make some time to stay and enjoy in chennai. this time we will meet. you are welcome (with your family too!!!). affectionate kisses for the kid at home. thanks.
    anbudan
    sundar g chennai (rasanai)

    Reply
  3. Arun

    Super Thala.. all the best… I know there are more heights to reach … Kalakkungal

    Reply
  4. சிட் பீல்டின் கருந்துகளை எதிர்பவர்களை பற்றி உங்கள் கருத்தை எதிர் பார்கிறேன். சமிப காலமாக வரும் ஹாலிவுட் படங்களின் டேம்ப்லடே தன்மை எரிச்சல் ஊட்டுகிறது. சிட் பீல்து பின் பற்ற பட்டாலும் ச்ரியடிவிட்டி இல்லாததால்
    suspense of disbelife என்பது இல்லாமல் பொய் விடுகிறது.
    மலையாளத்தில் charecter ஈஸ்டப்ளிஷ்மேண்டுக்கே 30 நிமிடம்கள் எடுத்து கொள்கிறார்கள் ஆனாலும் தரமாக இருக்கின்றன.
    சிட் பீல்டை எந்த அளவு உபயோகபடுத்துவது ?

    Reply
  5. Singaravelan

    Congrates

    Reply
  6. KANAGASABAI.J

    DEAR SIR,
    SUPER! WHEN WILL RELEASE YOUR SCREENWRITING (TAMIL) BOOK

    Reply
  7. கடுமையான உழைப்பு .உங்களை பயன்படுத்ஹ்டி கொள்ள நிறைய பேர் வருவர் .வரவேண்டும் .

    Reply

Join the conversation