முகமூடி (அல்லது) சோடாமூடி (அல்லது) புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கலாமா? – 2012

by Karundhel Rajesh September 1, 2012   Tamil cinema

ப்ளாக்ல எழுதறவங்களுக்கும் ஜோல்னா பைக்காரர்களுக்கும் இப்பவே சொல்லிடுறேன்… இது பேட்மேன், ஸ்பைடர்மேன் மாதிரியான படம் இல்லை. ‘புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கலாமா?’, ‘முகமூடி சோடா மூடி’னு இப்பவே தலைப்பு எல்லாம் எழுதிவெச்சுட்டு ரெடியா இருப்பீங்க. ஆனா, நான் புலியும் இல்லை… பூனையும் இல்லை. எம்.ஜி.ஆர். மாஸ்க் போட்டுக்கிட்டு தெள்ளத்தெளிவா ஒரு படம் எடுத்திருக்கேன். இதை நம்ம சமகாலத் தமிழ்ச் சூழலில் வெச்சுப் பார்க்கணும். எளிமையான சகல மனிதர்களுக்கும் போய்ச் சேரும் முயற்சி இது!”
‘முகமூடி’ பற்றி மிஷ்கின் – April 2012. Vikadan interview


தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ படம். இந்த கேப்ஷனே வசீகரமாக உள்ளது அல்லவா?  ஆனால், எனக்கு ஒரு கேள்வி இருந்தது. தமிழில் எதற்காக ஒரு சூப்பர்ஹீரோ படம் வர வேண்டும்? இந்த வரியைப் படித்த உடனேயே இதுதான் சாக்கு என்று ‘இந்த கருந்தேள் பயலே இப்படித்தான்; தமிழ்ப்பட எதிரி இவன்’ என்றெல்லாம் யோசிக்காமல், மேலே படிக்குமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழில் எதற்காக ஒரு சூப்பர் ஹீரோ படம் வரவேண்டும்? சூப்பர் ஹீரோக்கள் என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டோமேயானால்,ஹாலிவுட்டில் எக்கச்சக்க சூப்பர் ஹீரோ படங்கள் வந்திருக்கின்றன.‘ஹாலிவுட்டில் வந்திருக்கிறதே? அதனால் தமிழிலும் வந்தாக வேண்டும்’ என்ற பதில் இந்தக் கேள்விக்குக் கிடைக்குமானால், அது அபத்தம் என்றே சொல்வேன். காரணம், சூப்பர்ஹீரோக்கள் என்ற விஷயம், கிட்டத்தட்ட 60-70 ஆண்டுகளாக அமெரிக்கர்களின் ரத்தத்தில் ஊறிக்கிடக்கும் ஒரு விஷயம். அமெரிக்காவில் பிரதான சூப்பர்ஹீரோக்களாக – அட்லீஸ்ட் இந்தியர்களான நமக்குத் தெரியவரும் ஹீரோக்கள் அனைவருமே உருவானது திரைப்படங்களில் அல்ல. காமிக்ஸில்தான் இந்த சூப்பர்ஹீரோக்களின் அரங்கேற்றம் நடைபெற்றது. இருபதுகள், முப்பதுகளிலேயே இப்போது உலகமெங்கும் பிரசித்திபெற்று விளங்கும் ஹீரோக்கள் காமிக்ஸ்கள் வாயிலாக உருவாகியாகிவிட்டது. Batman, Superman உட்பட. இதன்பின் ஸ்டான் லீஎன்ற பிதாமகர், மார்வெல் காமிக்ஸின் தலையெழுத்தையே மாற்றி எழுதினார். அதன்பின் பலர் வந்தாகிவிட்டது.

ஆக, ஹாலிவுட்டில் ஒரு சூப்பர்ஹீரோ படம் எடுக்கப்படுகிறது என்றால், அது அந்த சூப்பர்ஹீரோவைப் புதிதாக உருவாக்கி மக்களுக்கு அறிமுகப்படுத்தும் படமாக இருக்கவே இருக்காது (ஓரிரண்டு விதிவிலக்குகள் தவிர்த்து). ஏற்கெனவே காமிக்ஸ்கள் மூலம் சூப்பர்ஹிட்டாக மாறி, பல்லாண்டுகளாக அமெரிக்கர்களின் ரத்தத்திலேயே ஊறிய ஒரு கதாபாத்திரத்தைத் திரைப்படமாக வழங்கும் முயற்சியாகவே அது இருக்கும். அந்த முயற்சி, பெரும்பாலும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்தப் படம் உலகெங்கும் சூப்பர்ஹிட்டாக மாறும்.

இதுதான் ஹாலிவுட்டின் சூப்பர்ஹீரோ திரைப்படங்களின் பின்னணி.

ஆகவே, Batman என்ற ஒரு உதாரண சூப்பர்ஹீரோவை எடுத்துக்கொண்டால், பேட்மேன் திரைப்படம் ஒன்றைப் பார்க்கும் ஒரு சராசரி ஹாலிவுட் ரசிகன், ஏற்கெனவே இந்தக் கதாபாத்திரத்தை குறைந்த பட்சம் பத்திருபது காமிக்ஸ்களிலாவது படித்திருப்பான். அவனுக்கு அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றிய குறைந்தபட்ச அறிவாவது இருக்கும். இதுதான் அத்தனை அமெரிக்க சூப்பர்ஹீரோ படங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு விதி.

இந்தப் பின்னணியில்தான் காமிக்ஸ் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய இந்தியத் திரையுலகின் சூப்பர்ஹீரோ படங்களை நாம் அலசவேண்டும். இப்படி அலசுவதே முறையாக இருக்கும்.

இந்தியாவிலும் காமிக்ஸ் உண்டு. என்றாலும், அந்தக் காமிக்ஸ், மக்களிடம் பெற்றிருக்கும் ரீச் மிகக் குறைவு. இந்த்ரஜால் காமிக்ஸாகட்டும், அல்லது தமிழில் லயன் காமிக்ஸாகட்டும் – மிக மிகக் குறைந்த ஒரு ஜனத்தொகையையே இந்தக் காமிக்ஸ்கள் சென்றடைகின்றன. அதிலும், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு இந்தியாவெங்கும் பரவி புகழடைந்த காமிக்ஸ் கதாபாத்திரங்கள் எத்தனை? அமர் சித்ரக்கதை மட்டுமே. அதிலும் ஒரே கதாபாத்திரம் இல்லை. பல்வேறு கதாபாத்திரங்கள், புராணக்கதைகள் போன்றவையே. டைமண்ட் காமிக்ஸும் அதேபோலத்தான். இந்த்ரஜாலின் பகதூர் கதாபாத்திரத்தை சிறுவயதில் எனக்குத் தெரியும்.

ஆகவே, சூப்பர்ஹீரோக்கள் என்ற கான்ஸெப்டை எடுத்துக்கொண்டால், ஹாலிவுட்டுக்கும் இந்தியாவுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என்பது மிக எளிதில் புரியக்கூடிய ஒரு விதி. இதனாலேயேதான் ஹாலிவுட்டிலிருந்து நேரடியாக தமிழாக்கம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படும் படங்கள் அபார வெற்றி அடைகின்றன. ஆனால் அதேசமயம் இந்தியாவிலேயே எடுக்கப்படும் இந்திய சூப்பர்ஹீரோ படங்கள் தோல்வி அடைகின்றன. ஏனெனில், சராசரி இந்திய ரசிகனுக்கு, ஒரு ஹாலிவுட் ஆக்‌ஷன் படத்தை இந்திய மொழிகளில் ஒன்றில் பார்ப்பதில் பிரச்னை இல்லை. அது ஆங்கிலப்படம் என்பது அவனது மனதிலேயே அழுந்தப் பதிந்த ஒன்று. ஆனால், இந்தியாவில் எடுக்கப்படும் சூப்பர்ஹீரோ ஆக்‌ஷன் படத்தோடு அவனால் ஒன்றவே முடியாது. காரணம், இந்தியாவில் எப்படிப் பார்த்தாலும் ஒரு சூப்பர்ஹீரோ படம் என்பதில் இருக்கக்கூடிய பல சாத்தியமின்மைகளை அவனது மனம் அலசத் துவங்கிவிடும். மைண்ட் யூ – இதற்கும் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. உதாரணம் – Krrish. அந்தப் படம் வெற்றிபெற்றதற்குக் காரணம் அதன் செண்டிமெண்டல் காட்சிகள் மற்றும் இசை. கூடவே ஹ்ரிதிக் ரோஷன். எல்லாக் காம்பினேஷன்களும் மிகச்சரியாக உபயோகப்படுத்தப்பட்ட படம் அது. கூடவே, ஹிந்தி ரசிகர்களை மிக எளிதில்  செண்டிமெண்ட் போட்டு ஏமாற்றிவிட முடியும் (தமிழில் க்ரிஷ் ஏன் ஓடவில்லை என்பதையும் யோசித்துப் பாருங்கள்).

So, தமிழில் எதற்காக ஒரு சூப்பர்ஹீரோ படம் எடுக்கப்படவேண்டும் என்ற கேள்வி எனக்கு இருந்தது. தேவையே இல்லாத முயற்சி அது – சூப்பர்ஹீரோ என்ற கான்ஸெப்டே இந்தியாவில் எடுபடாத ஒன்று என்பதால். ஆனால், அதை எடுப்பது ராம நாராயணன் அல்ல – மிஷ்கின் என்பதால், அந்தப் படத்தின் மீது லேசான எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. ஆனால், அதையும் உடைத்துத் தள்ளிய பெருமை – மிஷ்கினையே சாரும். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் கொடுத்துள்ள மேற்கோள் – மிஷ்கினின் ஆனந்த விகடன் ஏப்ரல் பேட்டியில் ஒரு சிறு துளி. இணையத்தில் எழுதுபவர்கள் பற்றிய மிஷ்கினின் எகத்தாளமான உளறலினால், ‘கொய்யால உன் வாய் தாய்யா உன்னோட எதிரி’ என்ற எண்ணம் எனக்கு எழுந்தது. ஆனால், ஏற்கெனவே உதவி இயக்குநர்களைப் பற்றிய கேவலமான கருத்து ஒன்றை உளறி ரவுண்டு கட்டப்பட்டு அதன்பின் மன்னிப்பு கேட்ட மனிதர் என்பதால், அவரது உளறல்கள் மீது முழு கவனம் செலுத்தவில்லை. மிஷ்கினின் ‘அஞ்சாதே’ மற்றும் ‘யுத்தம் செய்’ ஆகிய படங்கள் எனக்குப் பிடிக்கும். எடுப்பது மசாலா என்பது நன்றாகத் தெரிந்து, அந்த மசாலாவை திரைக்கதையின் உதவியால் தரமானதாக மாற்றும் அவரது முறையும் எனக்கு பிடிக்கும்.

இத்தனை விஷயங்களையும் ‘முகமூடி’ படத்தைப் பற்றிப் பார்க்குமுன்னர் நாம் நினைவில் கொண்டே தீரவேண்டும்.


படம், ப்ரூஸ் லீ என்னும் ஆனந்தின் கதையை நமக்குச் சொல்கிறது. படித்துவிட்டு வெட்டியாக குங்ஃபூ கற்றுக்கொண்டு திரியும் இளைஞன் இந்த லீ. சராசரியாக தனது தந்தையைப் போல் 9-6 வேலை செய்வது பிடிக்காத இளைஞன். ப்ரூஸ்லீயைப் போல் ஆகவேண்டும் என்று நினைக்கும் இளைஞன். அப்போது ஒரு பெண்ணைப் பார்க்கிறான். காதல் வயப்படுகிறான். அந்தப் பெண்ணோ இவனைப் பொறுக்கி என்று நினைக்கும் பெண். ஆகவே, முகத்தைக் காட்டாமல் அவளைக் கவர நினைக்கிறான் லீ. முகமூடியாகிறான். நகரில் கொள்ளைகளை அரங்கேற்றும் ஒரு கொலைகார கும்பல் இவனது காதலில் குறுக்கிடுகிறது. இதன்பின் சூப்பர் ஹீரோவாக (உடையில் மட்டும்) மாறி எப்படி அந்தக் கும்பலை வேரறுத்து காதலியைக் கைப்பிடிக்கிறான் லீ என்பதே கதை.

உண்மையைச் சொல்லப்போனால், இடைவேளை வரை படம் பரவாயில்லை என்றே சொல்லுவேன். ஜாலியாக, ஆக்‌ஷனோடு, நகைச்சுவையாக இப்படத்தின் கதை செல்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகுதான் இந்தத் திரைப்படத்தின் பல ஓட்டைகள் பெரிதுபெரிதாக நம்முன் விரிகின்றன. சரி போனால் போகிறது. தமிழ்ப்படமாயிற்றே என்பதால் அந்த ஓட்டைகளையெல்லாம் மறந்துவிட்டு கதையோடு ஒன்றலாம் என்றாலோ திரைக்கதை என்ற ஒன்றையே காணவில்லை. அப்படியென்றால் என்னதான் செய்வது?

முதலில், இப்படத்தின் ஹாலிவுட் சாயல்களை (மார்வெல் காமிக்ஸின் லோகோவில் இருந்து சுடப்பட்ட டைட்டில், சூப்பர் ஹீரோ பின்னணி, காரணங்கள் இத்யாதி) மறந்துவிடலாம். படத்தின் நாயகன் ஒரு வேலையில்லாத இளைஞன். ப்ரூஸ்லீ போல் ஆகவேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்திருப்பவன். ஆனால், அவன் செய்வது என்ன? ப்ரூஸ்லீ அல்ல – அட்லீஸ்ட் ஒரு கராத்தே தியாகராஜன் (அவன் கற்றுக்கொள்வது குங்ஃபூ என்பதால் குங்ஃபூ தியாகராஜன் என்று வைத்துக்கொள்ளலாம்) போலவாவது ஆக அவன் என்ன செய்கிறான்? ஒன்றுமே இல்லை. தனது மாஸ்டருக்காக ஆள் பிடித்துக் கொடுக்கிறான். அதற்காக மீன் வியாபாரிகளுடன் சண்டையிடுகிறான். அவர்களும் இவனிடம் தோற்று பரிதாபமாக இவனது மாஸ்டரிடம் குங்ஃபூ கற்கிறார்கள் (இந்தக் காட்சிக்குப் பின்னர் அவர்கள் அட்ரஸே இல்லாமல் அப்ஸ்காண்ட் ஆகிவிடுகிறார்கள். பின்னே? மீன்விற்பதை விட்டுவிட்டு குரங்குப்பூ கற்றால் அவர்கள் நிலை என்னவாவது?). அவன் எதுவும் செய்யத் தேவையில்லை – ஏனெனில் அவன் மொட்டை மாடி தாத்தாக்களிடம் ‘எனக்கு வேலை செய்ய பிடிக்கல.. ப்ரூஸ்லீ மாதிரி ஆகணும்’ என்றெல்லாம் டயலாக் விடுகிறானே? அதுவே அவனை ஜஸ்டிஃபை செய்கிறதே என்று மிஷ்கின் ரசிகர்கள் வாதம் செய்யலாம். ஆனால், அதெல்லாமே பின்னர் அவன் சூப்பர் ஹீரோ ஆவதற்கான காரணங்களே என்பது எலோருக்குமே புரிந்துவிடுவதால், அது என்னைப்பொறுத்தவரை எடுபடவில்லை. குங்ஃபூவின் மேல் அவனுக்கு எப்படி அவ்வளவு ஈடுபாடு? ஏன் தனது மாஸ்டரை தெய்வம் போல் மதிக்கிறான்? அப்படியென்றால் அந்த மாஸ்டர் அட்லீஸ்ட் உடலை ஃபிட்டாகவாவது வைத்துக்கொள்ளத் தாவலை? பாவம் செல்வா.

சரி விடய்யா..எதையும் செய்யமாட்டேன். ஆனால் ப்ரூஸ்லீ போல் ஆவேன். ஏனெனில் அவ்வப்போது சரக்கு அடித்துக்கொண்டு டாஸ்மாக்கில் ஒரு குத்து டான்ஸைப் போட்டால் ப்ரூஸ்லீ ஆகிவிடலாம் என்று ஹீரோ நினைக்கலாம். அதில் தப்பில்லை என்று யாராவது சண்டைக்கு வரக்கூடும் என்பதால் – அடுத்த மேட்டர் – இத்தனை நாள் வெட்டியாக திரிந்த ஹீரோ அட்லீஸ்ட் காதல் வயமாவது படுகிறானே – அதுவே ஜாலியாக இருக்கிறதே என்பதால், அந்த ஹீரோயினைப் பார்க்கலாம் என்று நினைத்தால், அதிலும் மண். ஹீரோயின் அறிமுகத்துக்கு எக்கச்சக்க பில்டப்கள் இருந்ததால், இயல்பாகவே ஒரு ஆர்வம் எழுந்தது. அந்த ஆர்வம் படீலென்று வெடித்துச் சிதறியது எப்போதென்றால், அந்த ஹீரோயின் அறிமுகப்படுத்தப்பட்டபோதுதான். இது படத்தின் இரண்டாவது அடி. சுத்தியல் அடி.

ஹீரோயின் ஹீரோவை பொறுக்கி என்று நினைக்கும் க்ளிஷே காட்சிகள். அதனால் ஹீரோ போலீஸில் மாட்டுவது. அதன்பின் மேலே சொன்ன ஹீரோயின் இண்ட்ரோ. மாப்பிள்ளை படத்திலேயே இதெல்லாம் ரஜினி செய்துவிட்டாரே அய்யா? (’என் மூக்கு மேல விரல வெச்சிட்டாய்யா’) அந்தக் காட்சிகள் இக்காட்சிகளை விடவும் நன்றாகவும் இருக்கும்.

சரி. படத்தில் வில்லன் என்று யாராவது இருக்கவேண்டுமே? அதையாவது கவனித்து அலுப்பைப் போக்கிக் கொள்ளலாம் என்றால் – வில்லனாக நரேன். அறுபதுகளில் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் ஜெய்சங்கருடன் பொருதும் மர்ம வில்லன் அமர்வதற்கென்றே ஒரு சிம்மாசனம் இருக்குமே – அப்படி ஒரு சிம்மாசனத்தில், தொங்கிய முகவாயோடு சீரியஸ் பார்வை பார்க்கும் நரேன். அவரும் ஒரு குரங்குப்பூ மாஸ்டர். ஆனால் இவர் காஸ்ட்லி மாஸ்டர் போலிருக்கிறது. காரெல்லாம் இருக்கிறது. பில்டிங், ஜீவாவின் ஓட்டை குங்ஃபூ க்ளாஸ் போலல்லாமல் கொஞ்சம் எல்.ஐ. ஸி பில்டிங்கின் சாயலில் இருக்கிறது. கூலிங் க்ளாஸ் + லெதர் ஜாக்கெட் தான் அணிகிறார். அதிலும் விஜயகாந்தின் பெரிய ஜாக்கெட். சென்னை வெய்யிலில் எப்படி இதெல்லாம்? அன்னாருடன் சில அடிவருடிகள்.

இந்த நரேனைப் பற்றி சொல்ல சில விஷயங்கள் இருக்கிறது. அஞ்சாதேயில் பின்னிய நரேன் இவர். ஆனால் இப்படத்தில் பம்மியிருக்கிறார். ’வில்லனாக நடியுங்கள்’ என்று மிஷ்கின் இவரிடம் சொன்ன நேரத்திலிருந்தே அறுபதுகளின் மர்ம மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களைப் பார்த்து கதாபாத்திர ஒப்பேற்றம் பண்ணியிருப்பார் போல. மனோகரும் அசோகனும் முகத்தை அஷ்டகோணலாக்கி டயலாக் பேசுவார்களே? டிட்டோ அதையே செய்ய முயன்று, முக்கி முக்கி வசனம் பேசி, பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடி வந்த ஒரு முற்றிய கேஸ் போலவே நடந்துகொள்கிறார். ஓரிரு ஸீன்களில் (அதாவது வசனம் பேசாமல் பேய்முழி முழிக்கும் ஸீன்கள் என்று புரிந்துகொள்க) ரியாக்‌ஷன் பரவாயில்லை. ஆனால், நீள நீள வசனங்கள் வரும்போதெல்லாம் டிட்டோ நட்டு கழண்ட கேஸேதான். அவரைப் பார்த்து சிரிப்பு வருவதில் அடங்கியிருக்கிறது இப்படத்தின் செய்தி. அதிலும், க்ளைமாக்ஸில் ஜாக் நிகல்ஸன் அவதாரம் எடுப்பதாக நினைத்துக்கொண்டு லூஸ் மோகன் அவதாரமே எடுத்திருக்கிறார் (லூஸ் மோகன் என்ற நல்ல கலைஞனை இவருடன் ஒப்பிட்டிருக்கக்கூடாதுதான். ஆனால் என்ன செய்வது?)

நீலக்கலர் உடையில் சிவப்பு ஜட்டி போட்டுக்கொண்டு ஜீவா அங்குமிங்கும் ஓடும் சில காட்சிகள் வருகின்றன. ஒருவேளை ஹீரோயினை கவர்ச்சி உடையில் கவர்ந்துவிடலாம் என்று ஐடியா போட்டுவிட்டாரோ என்னமோ? ஆனால் ஜட்டி அந்த அளவு கவர்ச்சியாக இல்லை. பழைய ஜட்டியாகவே இருக்கிறது. அதிலும் அது அவர் ஓடும்போது குலுங்குகிறது வேறு. அடக்கஷ்டகாலமே? இதையெல்லாம் சென்ஸாரில் எப்படி விட்டுவைத்தார்களோ தெரியவில்லையே?

நாசர் பாவம்.

இதெல்லாம் நான் ஜாலியாக செல்கிறது என்று சொல்லிய முதல் பாதி. அப்படியென்றால் இரண்டாம் பாதி? திரைக்கதையே இல்லாமல் இஷ்டத்துக்கு ஸீன்கள் வருவது எப்படி என்பதன் உதாரணமே இந்த இரண்டாம் பாதிதான். சூப்பர் ஹீரோ காஸ்ட்யூம் போட்டுக்கொண்டபின்னர் ஹீரோ ப்ரூஸ்லீ செய்யும் காரியங்கள் எவை? 1. மருத்துவமனையில் புகுந்து, கொலைகார கும்பலை – ஜனகராஜ் சண்டைக்காட்சிகளின் இடையில் அடியாட்களை அடிப்பாரே – அதைப்போல் அடித்துக் காலி செய்வது. 2. ஹீரோயினின் வீட்டில் மொட்டை மாடியில் குதித்து ஏதோ ஒரு டண்டணக்கா ஃபைலை அபேஸ் செய்வது. 3. வில்லனின் பீச் வீட்டை துப்பறியும் சாம்பு வேலை செய்து கண்டுபிடிப்பது 4. அதன்பின் போலீஸுக்கு இன்ஃபார்ம் செய்துவிடுவது 5. சென்னையின் ஒரு பிரம்மாண்ட க்ரேனின் மீது தனது நடுத்தர வயது குங்ஃபூ மாஸ்டருடன் ஏறி, அதில் சலங்கை ஒலி ‘தகிட ததிமி’ பாடலின் ரிஹர்ஸல் போன்ற எதையோ செய்வது 6. க்ளைமாக்ஸில் வில்லன் சுத்தியோடு தன்னை வெறித்தனமாக தாக்கும்போது கண்களை மூடிக்கொண்டு மேட்ரிக்ஸ் பட கிம்மிக்ஸைப் போலவே செய்வது (அடடா… இதுதான் படத்தின் மெஸேஜ் போலும்). அவ்வளவே.

இது மட்டுமல்லாது, படத்தில் மிஷ்கினின் கில்லாடி வள்ளல் வேலைகள் சிலவும் உள்ளன. அவை என்னவென்றால், மொட்டை மாடியில் Know Thyself என்று எழுதிய அறை – இது ஸாக்ரடீஸின் மேற்கோள். அதேபோல் டாஸ்மாக்கின் மாடியில் ஹிட்லர் & சாப்ளின் படங்கள். கூடவே ஹீரோயின் வீட்டு மாடியில் புத்தர் சிலை. மிஷ்கினுக்கு புத்தர் பிடிக்கலாம். தவறில்லை. அதேபோல் மிஷ்கின் ஸாக்ரடீஸைப் பற்றிப் படித்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் ஆடியன்ஸின் தலையில் சுமத்துவதன் காரணம் என்ன? வழக்கமாக கமலின் படங்களில்தான் இந்த கில்லாடி வள்ளல் வேலைகள் நிரவியிருக்கும். கடவுளைப் பற்றிப் பேசுவது, தான் நாத்திகர் என்பதால் அதையே படம் பார்க்கும் மக்களின் மீது திணிப்பது (ஆனால் அய்யங்காராகவே நடிப்பது), ஹீரோ பேசும் ஆங்கிலமோ அல்லது ஃப்ரென்ச்சோ அட்டகாசம் என்று படத்தின் பிற கதாபாத்திரங்கள் (பெரும்பாலும் பெண்கள்) சொல்வது ஆகிய ’ஆடியன்ஸ் தலையில் சுமத்தும்’ டெம்ப்ளேட்கள் இதுவரையில் கமலுக்கு மட்டுமே சொந்தமாக இருந்துவந்தன. இப்போது மிஷ்கினும் தனக்கேயுரிய ஒரு டெம்ப்ளேட் இப்படியாக உருவாக்கிவிட்டார் போலிருக்கிறது.

மிஷ்கினின் பேட்டி ஒன்றை விஜய் டிவியில் சமீபத்தில் பார்த்தேன். அதில், ‘சிறுவயதில் அவர் விரும்பிப் படித்த கதாபாத்திரங்கள் – Phantom என்ற வேதாளர் மற்றும் இரும்புக்கை மாயாவி’ என்று சொல்லியிருந்தார். இதில் இரும்புக்கை மாயாவி என்ற பெயர், சமீப காலத்தில் அத்தனை தமிழ்ப்பட இயக்குநர்களிடமும் மாட்டிக்கொண்டு கொத்துபரோட்டா செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. கே.வி. ஆனந்த் கூட இந்தப் பெயரை சொல்லியிருக்கிறார். அந்த லிஸ்ட்டில் பாவம் வேதாளரும் சேர்ந்துவிட்டார் போல. ஏன்? மிஷ்கின் மற்றும் கே.வி ஆனந்தின் சிறுவயதில் முத்து காமிக்ஸ் ஆல்ரெடி பல இதழ்களை வெளியிட்டாகிவிட்டதே? அதன் மற்ற கதாபாத்திரங்கள் அவர்களுக்கு நினைவு வரவில்லைபோலும். அது முத்து காமிக்ஸின் துரதிர்ஷ்டமேயன்றி இந்தப் பேட்டிகளில் இப்படிப்பட்ட ‘மாயாவி’ பெயர்களைக் கேள்விப்பட்டு எரிச்சல் அடையும் நமது துரதிர்ஷ்டம் அல்லவே அல்ல.

அதேபோல் படத்தில் வரும் இரண்டு தாத்தாக்கள் – அவர்களின் லூட்டிகள் (லீக்கு உதவும் அவர்களின் காமெடி முயற்சிகள்) ஆகியவையெல்லாம் கொஞ்சம் கூட பொருந்தவேயில்லை. பாவம் கிரீஷ் கர்நாட். தள்ளாத வயதில் ஷெர்லக் ஹோம்ஸ் காஸ்ட்யூம்.

இறுதியாக – மிஷ்கினின் திறமை மேல் எனக்கு நம்பிக்கை இன்னமும் குறையவில்லை. அஞ்சாதே & யுத்தம் செய் போன்ற ஒரு படத்தை அவசியம் அவர் அளிப்பார் என்ற பலமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகவே, I will wait for Mysskin. And I hope he would bounce back too.


இந்தத் தளத்தில் இருக்கும் பிற மிஷ்கின் சம்மந்தப்பட்ட கட்டுரைகள்:

1. யுத்தம் செய் – விமர்சனம்
2. நந்தலாலாவை முன்னிட்டு
3. நந்தலாலா – மூலமும் நகலும்

பி.கு – இக்கட்டுரையின் தலைப்பு, பதிவர்களைப் பற்றிய மிஷ்கினின் கருத்திலிருந்தே எடுக்கப்பட்டது. ஆகவே, இந்தத் தலைப்புக்கு முழுமுதற்காரணம் மிஷ்கினே. என்னளவில், எனது கட்டுரைக்கு தலைப்பை வைத்துக்கொடுத்த மிஷ்கினுக்கு நன்றி.

  Comments

71 Comments

  1. உங்களின் பதிவில் ஒரு தடுமாற்றமே தெரிகிறது

    எதையாவது எழுதப் போய் நாளையே ஏதும்
    கிடைக்க இருக்கும் திரைப் படம் சார்ந்த வாய்ப்பு, வருமானத்தை
    எதற்கு இழக்க வேண்டும் என்ற தடுமாற்றம் நன்கு தெரிகிறது

    Reply
  2. அனைத்தையும் அலசி..காயப்போட்டாலும் .. ஒரு சாஃப்ட் கார்னர் தெரியுதே:). இருப்பினும் தமிழ் திரைக்கு சூப்பர் ஹீரோ கான்செப்ட் ஒத்து வராது என்பதை விளக்கிய விதம் துல்லியம் ராஜேஷ். காமிக்ஸ்.. அதன் சூப்பர் ஹீரோக்கள் என்ற கட்டமைப்பு இங்கு நூற்றில் 5 பேருக்கு கூட தெரியாது..என்ற நிலையில்.. ஒரு அரைவேக்காட்டு சூப்பர் ஹீரோவை அளித்து மிஷ்கின் அதிலும் மண்ணை போட்டுவிட்டார்.!

    Reply
  3. @ராம்ஜி – இதுக்கு மேல இந்தப் படத்தை கிழிக்க முடியாது பாஸ். இப்படியெல்லாம் சொல்லி என்னை ஏத்தி விட்டு இன்னும் ஓவரா எழுத வெக்கலாம் என்ற உங்களின் பிளானை நான் கவனித்து விட்டேன் :-)… அடப்போங்க பாஸ்

    Reply
  4. @ ரஃபீக்- ஸாஃப்ட் கார்னர் ஏன்னா, அவரோட அஞ்சாதே இன்னும் எனக்கு ரொம்பவே புடிக்கும். அதேதான் யுத்தம் செய். எனக்குப் பிடிச்ச இயக்குநர்களில் ஒருவர் (வாய் ஓவரா பேசுனாலும்). அதுனாலதான் :-). காமிக்ஸ் பத்தி உங்க கருத்தை நானும் ஒப்புக்கொள்கிறேன்

    Reply
  5. இல்லை ராஜேஷ்
    படம் பிடித்து இருக்கிறது, பிடிக்க வில்லை ,
    படம் வணிக ரீதியாக வெற்றி பெரும் வெற்றி பெறாது,
    படத்திற்கு விருது கிடைக்கும், கிடைக்காது
    என்ற இரு தரப்பில் எதாவது ஒன்றை சார்ந்து எழுதாமல்
    தடுமாறி எழுதி உள்ளதாக எனக்கு ஒரு உணர்வு.

    மேலும் இன்று/ நேற்று காலை தான், வண்ண நிலவன் தமிழில் இன்னமும்
    விமர்சனம் என்ற ஒன்று முழுமையாக உருவாகவே இல்லை என்ற கட்டுரை படித்தேன்
    (ஜ்யோவ்/கவி ராஜன் பகிர்ந்த கட்டுரை)
    அந்தக் கட்டுரை உண்மைதான் என்பதை உறுதி செய்வதாக உங்கள் பதிவு இருக்கிறது

    Reply
  6. அண்ணே, இங்கிலீஸ்காரனை விட தமிழனுக்கு அறிவுல இருந்து எல்லாமே அதிகம்..அதை உங்களுக்குப் புரியவைக்கத்தான் அந்த சிவப்பு ஜட்டி சீன்.

    Reply
  7. entha blogger enakum mikkavum pidithu ullathu.. daily na unga blog ah read panra thanks for publish movies reviews its very use full for me .. am ur great fan rajesh

    Reply
  8. Well said about the evolution of comics to super hero movies. I see Indian movies had evolved from stage performances (of old Ramayan and other stories that praises the hero a lot)… These old presentation generally expresses actions with songs because they cannot show everything on stage… this continued via movie making as well – thus we have songs in movies. Visual communication has advanced and movies are one of the major platform to visually communicate. but our comedians are still talking loud and present everything via speech instead of actions. Some of the directors moved away from that (such as Mysskin’s Anjathey) where a scene delivers more without much of a dialogue. but these directors fall in to the crack between their ideas and hollywood influence and start boring…

    Reply
  9. //இணையத்தில் எழுதுபவர்கள் பற்றிய மிஷ்கினின் எகத்தாளமான உளறலினால், ‘கொய்யால உன் வாய் தாய்யா உன்னோட எதிரி’//

    இந்த வார்த்தை உண்மை…என்னை பொறுத்த வரை.

    வில்லன் சுத்தியலோட அலையிற சீன் கூட Mo country for old man படத்தின் வில்லன் போலவே இருந்தது.

    Reply
  10. //இல்லை ராஜேஷ்
    படம் பிடித்து இருக்கிறது, பிடிக்க வில்லை ,
    படம் வணிக ரீதியாக வெற்றி பெரும் வெற்றி பெறாது,
    படத்திற்கு விருது கிடைக்கும், கிடைக்காது
    என்ற இரு தரப்பில் எதாவது ஒன்றை சார்ந்து எழுதாமல்
    தடுமாறி எழுதி உள்ளதாக எனக்கு ஒரு உணர்வு.

    மேலும் இன்று/ நேற்று காலை தான், வண்ண நிலவன் தமிழில் இன்னமும்
    விமர்சனம் என்ற ஒன்று முழுமையாக உருவாகவே இல்லை என்ற கட்டுரை படித்தேன்
    (ஜ்யோவ்/கவி ராஜன் பகிர்ந்த கட்டுரை)
    அந்தக் கட்டுரை உண்மைதான் என்பதை உறுதி செய்வதாக உங்கள் பதிவு இருக்கிறது//

    ராம்ஜி.. யாரு என்ன கட்டுரை ஷேர் பண்ணாலும் அதைப் படிச்ச்சிட்டு பயாஸ் ஆயிருவீங்கன்னு உங்க பின்னூட்டத்தை பார்த்தா தெரியுது..

    இந்தப் படம் ஓடும், ஒடாது, விருது கிடைக்கும் லொட்டு லொசுக்கு எல்லாம் எழுதினாத்தான் அவன் விமர்சகனா? என்னங்க இது உளறலா இருக்கு? படத்தைப் பத்தின அனாலிஸிஸ் நான் இங்க எழுதுனது. தமிழில் இன்னும் எழுத்தே உருவாகவில்லை – இல்லாட்டி தமிழே இன்னும் உருவாகவில்லை. அதை வண்ணநிலவன் தான் உளறி / ஸாரி உருவாக்கிக் கொண்டிருக்கிறார்னு நானும் நாளைக்கு ஒரு கட்டுரை எழுத முடியும் 🙂 .. நீங்க முதல் கமெண்ட்ல சொன்னதை ஒருவாட்டி படிச்சி பாருங்க.. சினிமால சான்ஸ் புடிக்கிறவன் நான்ன்னு வாந்தி எடுத்து வெச்சிருக்கீங்க.. இன்னொருவாட்டி இப்புடி கேனத்தனமா உளறினீங்கன்னா அப்பால உங்களை கிழிக்கவேண்டியிருக்கும் ராம்ஜி.. இது உங்களுக்கு வார்னிங் !

    Reply
  11. கமல் மீது உங்களுக்கு இருக்குற காண்டு உலகம் அறிஞ்சது. மத்தவங்க எத்தனை அபத்தம் செஞ்சாலும் அடக்கி வாசிப்பீங்க. ஆனா நீங்க இங்க கமல் பத்தி சொல்லி இருக்குற அதே விஷயத்தை தான் உங்க தானை தலைவர் சாருவும் செய்யறாருன்னு உங்களுக்கு தெரியும், ஆனா சொல்லமாட்டீங்க. தான் தான் உலகத்துலேயே அறிவாளி, தான் விரும்புறதை விரும்புறவங்க நல்லவங்க, அப்படி இல்லாதவங்க கேனைங்கண்ணு அவரு எழுதுறதையும் நீங்க சொல்லி இருக்கலாமே. தற்பெருமை பீத்தல் மன்னன் சாருவோட சிஷ்யனான நீங்க, கமல் அவரோட பெருமையை மத்த கதாபாத்திரங்கள் மூலம் படத்துல பீத்துவாருன்னு சொல்றது நியாயமே இல்லை.

    Reply
  12. கோபி. சாரு நீங்க சொல்ற மாதிரி இல்லை. அது அவரோட நெருங்கின நண்பனா இருக்கும் எனக்குத் தெரியும். கமல் வேறு கேஸ். நீங்க கமல் ரசிகரா?

    Reply
  13. @Ramji and 2 Gopi… ungalai podoorukku oru anbaana vendugol. Nanum oru kamal and miskin padangalin rasigarey…. inge ezhudha pattirukkum .. even in any blog’s are the writters own words about the content and the context. Rajeshooda karutha … avrooda vaimozhiyaga mattumay yeduthukka kathukanum… Chumma … yezhundha idikudhu… okkandha kutthudhunnu sollakudadhu… Yengay neenga sonna vanna nilavana … Endhiran pathiyoo… Sivaji Pathiyoo… Even VArapoora viswaroopama pathiyoo … adhila irukira ottaigala pathiyo … yezhudha solunga paakkalam… Vimarsanmagradhu… avaravgalooda yezhutthu… padichittu yeduthukoonga… ungalukku vera innum strong point thonichinna… Neenga oru blog pottu yezhudhi… Miskinnukku anupunga… Yenna boss chinna pullathanam illa…

    @ Rajesh… vidunga nanba… Aananapatta kamarajarayea thokkadichavangadhane …

    Reply
  14. முகமூடி அணிந்த சாதா ஹீரோ.. அவ்வளவு தான்! இதற்கு அவர்கள் கொடுத்த பில்டப் ரொம்ப ஓவர்… படத்தில் வந்த இரு கதாபாத்திரம் எனக்கு உங்களை ஞாபகப்படுத்தியது.

    😀 😀 😀

    Reply
  15. என்ன இப்படி சொல்லிட்டீங்க ??? ரஜினி,விஜய் முதற்கொண்டு பல நடிகர்களின் படங்கள் இங்க சூப்பர்ஹீரோ படங்கள் மாதிரிதான இருக்கு……தனியா வேற எதுக்கு இன்னொன்னு அத கண்டுக்கல போல….

    இந்தியா – காமிக்ஸ்……நிச்சயம் சின்ன வயதில் நாம கேட்ட பல கடவுள்களின் கதைகளே சூப்பர் ஹீரோ டைப் தான….எப்பவும் என் ஆதர்சம் – அனுமார்(என் முகம் வேற கொஞ்சம் அந்த டைப்ல இருக்குறதும் ஒரு காரணம்).கிருஷ்ணர் கத,ராமர்னு பல தளங்களில் வேற வேற வகையான சூப்பர் ஹீரோக்கள நாம கேட்டுதான வளந்திருக்கோம்..ஆனா அத சரிவர யாரும் ஸ்க்ரீன்ல கையாளாதது – இந்த படங்கள் நம்மூர்ல சரியா போகாததுக்கு காரணம்னு தோணுது.

    ஏன் ஹாலிவுட்ட பாத்து எடுக்கணும் ? அதுல பேட்மன் முதுகுல உள்பாவாடய கட்டிக்கினு சுத்துனா, நாமளும் அதேமாதிரி தான் காட்டணுமா ? வேற மாதிரி சொந்தமா யோசிச்சு முயற்சி செஞ்சால் பல சூப்பர் ஹீரோ படங்கள் அட்டகாசமா எடுக்கலாம்னு தோணுது…

    Reply
  16. மிஷ்கின் கறுப்பு கண்ணாடி பிரியர்..உங்க P.Photoல நீங்களும் கறுப்பு கண்ணாடி….அதுனால தான மென்மையான விமர்சனம் எழுதியிருக்கீங்க………

    அவர் தமிழர்….நீங்க கடுமையா எழுதி உங்கள தமிழர் இல்லையினு சொல்லிருவாங்க என்ற ஜாக்கிரதை உணர்வில் தான தடுமாற்றத்துடன் எழுதி இருக்கீங்க….

    Reply
  17. இந்த படம் மேல் கொஞ்சம் எதிர்பார்ப்பவது இருந்தது. இந்த அலசலின் மூலம் அதையும் அடித்து நொறுக்கி விட்டர்கள். என்ன சப்பையான கான்செப்ட் முடியல சாமீ!…

    \நீலக்கலர் உடையில் சிவப்பு ஜட்டி போட்டுக்கொண்டு ஜீவா அங்குமிங்கும் ஓடும் சில காட்சிகள் வருகின்றன. ஒருவேளை ஹீரோயினை கவர்ச்சி உடையில் கவர்ந்துவிடலாம் என்று ஐடியா போட்டுவிட்டாரோ என்னமோ? ஆனால் ஜட்டி அந்த அளவு கவர்ச்சியாக இல்லை. பழைய ஜட்டியாகவே இருக்கிறது. அதிலும் அது அவர் ஓடும்போது குலுங்குகிறது வேறு. அடக்கஷ்டகாலமே? இதையெல்லாம் சென்ஸாரில் எப்படி விட்டுவைத்தார்களோ தெரியவில்லையே?//

    என்ன கொடும கருந்தேள் இது.
    வீட்டுல தான் கொடுமன்னு தியேட்டர்க்கு போனா அங்க மிஸ்கின்னு ஒரு கொடும ஜிங்கு ஜிங்குன்னு ஆடுது…

    Reply
  18. பாஸு, எவ்வளோ நாளா உங்க ப்ளாக் படிச்சாலும் இப்போ என்னை எழுத தூண்டுவது “சாருவின் நெருங்கிய நண்பர் ” என்ற வார்த்தைள்,
    யாரு யார் கூட சேரலாம் சேர கூடாதுன்னு யாருக்கும் சொல்ல உரிமை இல்ல, ஆனா என் கருத்தை பதிவு பண்ணலாம்
    உங்க எழுத்தில் ஒரு ஒழுங்கு , நேர்மை , புத்திசாலித்தனம் எல்லாம் இருக்கும், எப்படி அந்த ஆள் கிட்ட போய் நண்பர் ஆனீங்க ?
    “உங்க இங்கிலீஷ் கொஞ்சம் improve” பண்ணிக்கலாம் ன்னு சொன்ன ஒரு வாசகியை உனக்கு மூளைக்கு பதிலா மலம் தான் இருக்குன்னு வைஞ்ச ஆளு தானே உங்க நண்பரு? அந்த ஆள எதுக்கு புடிக்கலன்னு கேட்டா வண்டி வண்டியா சொல்லலாம், நான் கமல் ரசிகன் கிடையாது, ஆனால் சாரு கமல் பக்கத்துல கூட வர முடியாது

    Reply
  19. மிஸ்கின் பதிவர்களை வேண்டுமென்றால் திட்டலாம்?

    ஆனால்? மக்களை திட்ட முடியுமா? படம் சரி இல்லேன்னா அது எங்க இருந்து சுட்ட என்ன, நீங்க எப்படி sot வச்சா என்ன? அந்த படம் அம்பேல் தான்.

    Reply
  20. நல்ல விரிவான விமர்சனம் . சும்மா அலசி ஆராஞ்சி எழுதி இருக்கீங்க

    சூப்பர் ஹீரோ நமக்கு ஏன் set ஆகா மாட்டாங்கன்னு சொன்ன விளக்கமும் அருமை ராஜேஷ்

    ராம்ஜி யாஹூ க்கு பதில் கொடுத்ததும் அருமை

    நீங்க என்ன அவரது கமிட்டியா இது ஓடும் ஓடாது

    வணிக ரீதியா வெற்றி பெரும் பெராதுன்னு சொல்ல

    அதுக்கு எல்லாம் வேற ப்ளாக் இருக்குனு சொல்லுங்க பிரஜேஷ்

    Reply
  21. ஐயோ கடைசில ஸ்பெல்லிங் mistake ஆயிடிச்சி

    ராஜேஷ் னு இருக்கணும்

    sorry

    Reply
  22. ஆனாலும் மிஸ்கின் குடுத்த title நல்லத்தான் இருக்கு

    அதை டைட்டில் னு சொல்லாம பதிவோட கடைசில பஞ்சா வச்சு இருக்கலாம் நீங்க

    sun tv ல ஒருத்தர் ஒரு காலத்துல விமர்சனம் பண்ணுவாரே அவர் மாதிரி

    முகமூடி= சோடாமூடி னு

    Reply
  23. சரி ரெடி ஆகுங்க மிஸ்கின் இன்னும் 8 பார்ட் எடுக்கிற மாதிரி கதை இருக்குனார்

    ஆனா producer சிக்குவாரனுதான் தெரியலை

    Reply
  24. இதில் ராம்ஜி யாஹுவின் கருத்தூட்டம்தான் எனக்கு விளங்கவில்லை. இவ்வளவு லாஜிக்காக நீங்கள் எழுதிய பின்பும் அவர் ஏன் அவரது உள்ளக் கிடக்கையை உங்கள் மேல் ஏற்றுகிறார்? (நல்லவேளை அவர் எனது விமர்சனத்தை g+இல் வாசிக்கவில்லை.)

    Reply
  25. ///அதுல பேட்மன் முதுகுல உள்பாவாடய கட்டிக்கினு சுத்துனா, நாமளும் அதேமாதிரி தான் காட்டணுமா ?///

    கொழந்த… நம்ம அனுமாரோட காஸ்ட்யூம்கூட அப்படித்தான் இருக்கும்.. கீழ கொஞ்சமா பாவாடை தொங்கும்.. பேட்மேன்ல ரொம்பவே ஜாஸ்தியா இருக்கும்..

    ஆனாலும் முதுகுல உள்பாவாடைங்கற சொற்களை ரொம்பவே ரசிச்சேன்.

    Reply
  26. ராஜேஷ்..

    ராம்ஜியாஹூவுக்கு இப்படி காட்டமாக பதில் சொல்ல வேண்டியதில்லை..! அது என் கருத்து ஸார்ன்னு சொல்லிட்டு எஸ் ஆகிடலாம்..! ஏன் இவ்வளவு கோபம்..? முட்டாள்தனமானது..!

    Reply
  27. நான் ஒரு பதிவன் என்பதைத் தாண்டி உங்கள் நெடுநாள் ரசிகன்… எந்த ஹாலிவூட் படமானாலும் உங்க விமர்சனம் பார்த்துவிட்டு பார்த்தால் ஒரு முழுமை கிடைக்கும்… எனது முதல் சினிமா விமர்சனத்துக்கு நல்ல வரவேற்பு, வரவு கிடைத்தது … ஆனால் ஏன் எழுத்தில் உங்க பாதிப்பு வந்துடக் கூடாதுன்னு நான் பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும்… அந்தளவுக்கு உங்கள் எழுத்து எனக்கு பிடிக்கும். ஆனால் இந்த விமர்சனத்தில் கருந்தேள் தமிழ் படங்களின் எதிரி என்று பெயர் வந்துட கூடாதுன்னு நீங்க எழுதிட்டதா ஒரு ஆதங்கம் தோணுது சார்…..

    Reply
  28. @கொழந்த சொன்ன மாதிரி – இங்க ரஜினி, விஜய் என பெரும்பாலோனோரின் படங்கள் சூப்பர் ஹீரோவின் படங்கள் போலத்தான் உள்ளன. ஹாலிவுட் படங்களில் – சூப்பர் ஹீரோவின் அசாதாரண பலத்திற்கு காரணம் என்ன என்பதை படம் ஆரம்பிக்கும் போதே கூறிவிடுகிறார்கள். ஆனால் இங்கு? ஒரு ஹீரோயின் முட்டினால் கூட அவள் மேல் விழுந்துவிடும் பலஹீனமான ஹீரோ, அடுத்த சீனே பத்து பேரை தனியாளாக புரட்டியெடுக்கிறார்.

    எப்படி ஹனுமனை இங்கு இழுக்கிறீர்கள் எனப் புரியவில்லை. கண்டிப்பாக அவர் சூப்பர் ஹீரோ அல்ல.

    ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் பலரிடமும் நாம் காணக்கூடிய ஒரு மிக முக்கியமான விஷயம் – அவர்களின் கதை.

    1) குங்க்பூ கற்றவனெல்லாம் சூப்பர் ஹீரோ ஆகிவிடலாம்
    2) காதலில் தேர்வதற்கு ஒரு முகமூடியை மாட்டிக் கொள்ளலாம்

    என்பது போன்ற காரணங்கள் படத்தை தூக்கி நிறுத்துமளவுக்கு இல்லை.

    Reply
  29. @கொழந்த, @அருண்பிரசாத் வரிக்குதிரை – “.தீ.” போதுங்கற அளவுக்கு எரிஞ்சுகிட்டுதான் இருக்கு … மென்மேலும் எண்ணைய் வார்க்காதீர்கள் …

    Reply
  30. @ Parthiban
    தீயை வளர்க்கும் நோக்கம் துளியம் இல்லை தோழா… நான் கருந்தேளின் பெரிய ரசிகன்.. நான் சொல்வதை தவறாக புரிய மாட்டார் என்று நினைக்கிறேன்… கருந்தேள் எப்படிப்பட்ட விமர்சகர் என அவரின் அனைத்து பதிவுகளையும் ரசிக்கும் எனக்கு தெரியும் … christoper நோலன் ஐக் கூட தவறு என்றால் வறுத்து விடுவார்… ஊடகங்களில் படத்துக்கு கொடுக்கும் பில்ட் அப் தாங்க முடியல… அதனால் தான் கருந்தேள் ஐயோ பாவம்னு விடுடாரோனு சொன்னேன்… மத்தபடி அவரின் விமர்சன நோக்கில் எனக்கு துளியும் ஐயமில்லை.

    Reply
  31. hi, I would like to know what miskin said about assistant directors…

    Reply
  32. கருந்தேள், சாருவை பற்றி சொன்னதால் நான் கமல் ரசிகனாக தான் இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்கிறீர்கள்? சாருவை பற்றி அருண் செந்தில் சொன்னது ஒரு சோறு பதம். சாருவின், நித்தி, சித்தர், பல்டிகள் சிரிப்பாய் சிரித்தது மறந்து விட்டதா? பணிவாக, நியாயமாக ஒரு கேள்வி கேட்ட வாசகனுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல், ‘சீழ் பிடித்த விபச்சாரியின் யோனியை நக்கப் போ’ என்று ஒரு கேவலமான பதிவிட்டு அதை அப்படியே வைத்திருக்க தைரியம் கூட இல்லாதவர் தான் உங்கள் நெருங்கிய நண்பர் சாரு. மீண்டும் சொல்கிறேன், முரண்பாட்டின் மொத்த உருவமாய் இருக்கும் சாருவின் அதிதீவிர அபிமானியாய், அவர் உளறல்களை ஆதரிப்பவராய், நீங்கள் இருக்கும் வரையில் கமலின் மீதான உங்கள் விமர்சனம் நியாயமில்லாத ஒன்று. சாருவுக்கு கமலை பிடிக்காததால், உங்களுக்கும் கமலை பிடிக்காமல் போனது, உங்கள் பதிவுகளின் தரத்திற்கு முரணாய் இருப்பது எனக்கு பெரும் ஆச்சர்யம்.

    இவ்வளவு சொன்னாலும், உலகப் படங்களை பற்றிய உங்கள் பதிவுகளுக்கு, பார்வைக்கு நான் ஒரு தீவிர ரசிகன்.

    Reply
  33. கோபி – சாருவுக்கு கமலைப் பிடிக்காததால் எனக்கும் பிடிக்கவில்லை என்பது சரியல்ல. காப்பிகளை அடிப்பவர்களை எனக்குப் பிடிக்காது என்பது இந்தத் தளத்தை வாசித்து வருபவர்களுக்குப் புரியும் என்று நினைகிறேன். தமிழ்நாட்டின் திரைப்படங்களில் காப்பிகளை தயக்கமில்லாமல் அடித்தவர்களில் அவரும் தலையாயவர். அதுதான் கமலைப் பிடிக்காததற்கு முதல் காரணம். இது ஒருபுறமிருக்க, கமலின் எண்பதுகளின் மசாலாக்களுக்கு நான் ரசிகன் என்பதும் அத்தனை நண்பர்களுக்கும் தெரிந்த விஷயம்தான்.

    சாருவைப் பற்றிய விமர்சனத்துக்கு எனது பதில் – மிக சிம்பிள். நீங்கள் சாருவைப் பற்றிப் படித்து, அவரைப் பற்றிய ஒரு பிம்பத்துக்கு ஆளாகியிருக்கிறீர்கள். ஆனால் நான் அவருடன் நெருங்கிப் பழகுபவன். அதனால் அவரை அறிந்தவன். எனவே உங்கள் கருத்தை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அவருடன் பழகுங்கள். அதன்பின் ஒரு முடிவுக்கு வரவும். நன்றி

    Reply
  34. Latest from Charu //இன்னமும் தமிழ் சினிமா ரசிகர்கள் கன்னித் தீவு பெண்ணா பாடலை டிவியில் பார்க்கின்ற போது என் விரல்களின் நடிப்பைப் பார்த்து உடனே எனக்கு போன் செய்து பாராட்டுகிறார்கள். //

    ராஜேஷ், சிரிக்காம உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, நான் சாருவை தற்பெருமை பீத்தல் மன்னன்னு சொன்னது சரியா, தவறா?

    Reply
  35. பாஸ்.. அது உண்மைன்னு நான் சொன்னா நீங்க ஒத்துக்க மாட்டீங்க. அதான் மேட்டர். கூடவே அது ஒரு பகடி கட்டுரை என்பதையும் புரிஞ்சிக்குவீங்கன்னு நினைக்கிறேன்

    Reply
  36. அது பகடி கட்டுரையா? ஹி…ஹி… நல்லா சமாளிக்கிறீங்க ராஜேஷ். அப்போ சாருவோட ஏறக்குறைய எல்லா பதிவுகளும் பகடி கட்டுரைகளா தான் எடுத்துக்கணும் போல.

    Reply
  37. யாரு நான் சமாளிக்கிறேனா? நான் எதுக்கு சமாளிக்கணும் கோபி? புரியல. உங்களுக்கு சாருவைப் புடிக்கலன்னா அவரைப் படிக்கிறதை நிறுத்திட்டு ஜாலியா போக வேண்டியதுதானே? இல்லாட்டி அவருக்கே ஒரு மின்னஞ்சல் அனுப்பி இதைப் பத்தி கேளுங்க. உங்களுக்கு அவரு கூட பிரச்னைன்னா அதுக்கு நான் அவரோட ஃப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ணிட்டு போயிரணுமா? என்ன லாஜிக் இது?

    Reply
  38. ராஜேஷ், சாருவோட உங்க நட்பை கட் பண்ணனும்னு நான் எங்கே சொன்னேன்? அதுக்கு எனக்கு உரிமை இருக்கா என்ன?

    கமலை பற்றி நீங்க வைக்கிற விமர்சனத்தின் அளவுகோலை ஏன் சாருவுக்கும் வைக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று தான் கேட்கிறேன். இங்கே நாம் கமலையும், சாருவையும் கம்பேர் செய்வது, நீங்கள், கமல் தன் கருத்தையும், தற்பெருமையையும் தன் படங்களில் திணிப்பார் என்ற உங்கள் கருத்தின் மீது தான். சாருவும் அதை தான் செய்கிறார், ஆனால் அவர் உங்கள் நண்பர் என்பதால் நீங்கள் அதை கண்டுக்கொள்வதில்லை ஆனால் கமல் என்பதால் குற்றம் சுமத்துகிறீர்கள் என்பது தான் என் வாதம்.

    //உங்களுக்கு சாருவைப் புடிக்கலன்னா அவரைப் படிக்கிறதை நிறுத்திட்டு ஜாலியா போக வேண்டியதுதானே?//

    இது கமல் காப்பி அடிக்கிறார் என்று சொல்லும் உங்களுக்கும் பொருந்தும் தானே?

    Reply
  39. //இது கமல் காப்பி அடிக்கிறார் என்று சொல்லும் உங்களுக்கும் பொருந்தும் தானே?//

    ஒகே. இப்போ ஒரு கம்பேரிசன். கமல் காப்பி அடித்த படங்களை நான் ஆல்ரெடி லிஸ்ட் போட்டுருக்கேன். அதோட க்ளிப்பிங்க்ஸ் கூட சில கொடுத்திருக்கேன். அது ஆதாரபூர்வமா நிரூபிக்கப்பட்டது. அதுனாலதான் நான் கமலை விமர்சிக்கிறேன். காப்பி அடிக்கிறவங்களை இக்னோர் பண்ண என்னால் முடியாது. ஏன்னா அது ஒரு க்ரைம். அதை என்னோட ப்லாக்ல அங்கங்க மென்ஷன் பண்ணுறேன். அதுனால என்னால கமல் படங்களை ப்ரீயா உட்டுட்டு போக முடியாது.

    இப்போ அடுத்த பாயின்ட். சாரு தன்னோட கருத்தையும் தற்பெருமையையும் மக்கள் மேல திணிக்கிறார்ன்னு நீங்க சொல்றீங்க. ஆனால் அதை நான் மறுக்கிறேன். இப்போ இங்கே சாரு அளவுக்கு அவரது புத்தகங்களில் பல விஷயங்களை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள் யாரும் இல்லை. கோணல் பக்கங்கள் ஒரே ஒரு வால்யூமை எடுத்துகிட்டா, அதுலேயே நாம கேள்வியே பட்டிருக்காத பல கலைஞர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள் போன்றவை இருக்கு. அதை நான் படிச்சி அவங்களை தேடிப் புடிச்சி படிச்சிருக்கேன். அதுனால என்னால அதை சொல்ல முடியும். கலகம் காதல் இசை – இந்த ஒரு சின்ன புக்லயே அவ்வளவு தகவல்கள் இருக்கு. இதையெல்லாம் அவரு தெரியும்னு சொல்றது – எனக்கு இந்த ஆசிரியர்களைப் பத்தின தகவல்கள் தெரியும் – இது ஒரு சிறந்த நாவல் அல்லது பாடல் அல்லது புத்தகம்னு அவர் சொல்றது – உள்ளதை உள்ளபடி சொல்வதே. அது, போலியான அடக்கத்தை பின்பற்றி வாழும் நமக்கு தற்பெருமையா தெரியலாம். அதேசமயம் சாரு சொல்ற இன்னொரு பாயின்ட் – ‘நான் படிச்ச அளவு இத்தனை புத்தகங்களை ஒரு எருமை மாடு படிச்சிருந்தா அதுக்கும் இந்த knowledge கிடைச்சிருக்கும்’ – இதை மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். ஆனா இதை அப்படியே கமல் கூட கம்பேர் பண்ணுனா, இந்த மாதிரி கமல் எங்க செய்யுறாரு? நான் இந்த கட்டுரைல சொன்னது அதைத்தான். கமல் அவரது படங்கள்ல பண்ணுறது வெறும் பெருமை பீத்தல் மட்டுமே. அவரால உபயோகமா ஒரு தகவல் கூட எனக்கு இதுவரை கிடைச்சதில்ல. காப்பிகள் தவிர. அதைத்தான் நான் சொல்லுறேன்.

    Reply
  40. யாரும் யார் மேலும் கருத்துகளை திணிக்க வேண்டியதில்லை… ஒருவரின் கருத்து, எண்ணங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை… பிடித்தால் ரசிக்கலாம், இல்லை எனில் விட்டுவிடலாம்….
    ஒரு படம் பிடித்தது அல்லது பிடிக்கவில்லை, அவரை பிடிக்கும் அல்லது பிடிக்கவில்லை… இரண்டில் ஒன்று மட்டுமே பதிலாக இருக்கும்…. எப்போதும் எல்லா விசயங்களும் எல்லோருடனும் ஒத்து போக வேண்டும் என்பதில்லை…
    உதாரணத்திற்கு:
    திரு.கருந்தேளுக்கு கொத்துபரோட்டா பிடிக்கும் என்பதற்காக அவர் அதை உங்களுக்கும் பிடித்தாகவேண்டும் என்று சொல்லவில்லையே…. நீங்கள் உங்களுக்கு பிடித்த உணவை தாரளமாக உண்ணலாம்… அதற்கு அவர் தடையாக இருந்தால் மட்டுமே நீங்கள் அவரை கேள்வி கேட்க முடியும் …..

    மேல சொன்னது பொதுவாக சொன்ன கருத்தேயாகும்.. ஏதேனும் தவறாக கூறியிருப்பின் மன்னிக்கவும்…..

    Reply
  41. இதுக்கு என்ன சொல்றீங்க கருந்தேள்…

    சமீபத்திய சாருவின் பதிவுகளில் இருந்து….

    படித்ததில் பிடித்தது August 27th, 2012

    //ஆனந்த விகடனைப் புரட்டியபோது அதில் எஸ். ரா.வின் ஒரு சிறுகதையைப் படிக்க நேர்ந்தது. சர்வதேசத் தரம் வாய்ந்த அற்புதமான கதை. எஸ்.ரா.வை அவ்வப்போது அநாகரிகமாகத் தாக்கும் சிலர் இது போன்ற கதைகள் பற்றி என்ன சொல்வார்கள் என்று எனக்குகே கேட்கத் தோன்றுகிறது. காப்ரியல் மார்க்கேஸ், மரியோ பார்க்ஸ் யோசா போன்ற சர்வதேசப் புகழ் பெற்ற எந்த எழுத்தாளரின் கதைக்கும் நிகரான கதை அது…//

    இப்போ பாருங்க சாருவோட நிஜ முகத்தை …

    கேள்வி பதில் August 29th, 2012

    //த சண்டே இந்தியனில் சமீபத்தில் எஸ்ரா அளித்த பேட்டியில் “தமிழில் இன்றைய எழுத்துச் சூழல் எப்படி இருக்கிறது?” என்ற கேள்வியில் கோணங்கி, ஜெயமோகன், எஸ்.ரா. இவர்கள்தான் தொடர்ந்து எழுதி வருவதாக சொல்கிறார். உங்களைப் புறக்கணிக்க முடியாத சூழல் எப்போதோ வந்துவிட்டது. ஆனாலும், உங்கள் பெயர் தென்படவில்லை.//

    சாரு பதில்…

    //தமிழ் எழுத்தாளனின் முதல் எதிரியே இன்னொரு தமிழ் எழுத்தாளன் தான். ஏனோ தெரியவில்லை, இன்னொருத்தரின் பெயரைச் சொன்னால் தன்னுடைய இடம் காணாமல் போய் விடுமோ என்று அஞ்சுகிறார்கள். ….நேரடியாகப் போட்டுக் கொடுத்தால் சாயம் வெளுத்து விடும் என்பதால் அடுத்தவர் பெயரை இருட்டடிப்பு செய்வார்கள். அதையேதான் நீங்கள் குறிப்பிடும் எழுத்தாளரும் செய்திருக்கிறார். பாவமாக இருக்கிறது; பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருட்டு என்கிறது. என்ன செய்ய? அது கண்ணைத் திறக்கும் போது நான் நியூயார்க்கரில் எழுதிக் கொண்டிருப்பேன். விடுங்கள் செல்வா… இதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் நிறைய படியுங்கள். இது போன்ற மூன்றாம் தரப் பேட்டிகளை அல்ல;//

    அதாவது ஒரு உலகத்தரமான படைப்பை கொடுத்தவராக சாருவால் பாராட்டப்படும் எஸ்ரா, இரண்டு நாள் கழித்து, சாருவின் பெயரை ஒரு பேட்டியில் குறிப்பிடாததால் எப்படி குரூரமாக தாக்கப்படுகிறார் என்று பாருங்கள். இதுல எஸ்ராவை சிலர் அநாகரீகமாக தாக்குகிரார்கள்னு இவரு வருத்தப் படறாராம். எஸ்ரா சொன்னது அவர் சொந்த கருத்து. சாருவை தவறாக ஏதும் சொல்லவில்லையே! சாரு பெயரை குறிப்பிடவில்லை, அவ்வளவுதானே? அது ஒரு ஸ்லிப் ஆக கூட இருந்து இருக்கலாமே? அதனாலேயே அதை மூன்றாம் தர பேட்டி என்று சொல்லும் சாருவின் தரம் என்ன என்று நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள். இவர் பெயரை குறிப்பிட்டு இருந்தால் அதே பேட்டியை தன்னுடைய விளம்பர மைலேஜாக தன்னுடைய அடுத்த பதிவில் சாரு பயன் படுத்திக்கொண்டு இருப்பார்.

    //இந்த மாதிரி கமல் எங்க செய்யுறாரு?…. அவரால உபயோகமா ஒரு தகவல் கூட எனக்கு இதுவரை கிடைச்சதில்ல.//

    கமல் எல்லாம் தமிழ் திரை உலகில் ஒண்ணுமே செய்யலைன்னு நீங்க நினைச்சா, சாருவோட பதில் தான் உங்களுக்கும் பதில் – பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருட்டு என்கிறது. என்ன செய்ய?

    படங்கள்ள ஏதாவது உபயோகமா மத்தவங்க எல்லாரையும் விட கமல் தான் சொல்ல முடியும்னு எதிர்பார்க்கிற உங்க நினைப்பை பாராட்டுறேன். அவர் என்ன அன்பு தான் சிவம்னு சொல்லிட்டாரா, காந்தி ஒரு மகாத்மா தான்னு அழுத்தமா சொன்னாரா, தூக்கு தண்டனை அவசியம் இல்லன்னு தான் சொன்னாரா, மன வளர்ச்சி இல்லாதவனும் மனிதன் தான்னு சொன்னாரா, இல்லை திரைப்பட தொழில் நுட்பத்தில், திரை கதை அமைப்பில் தான் புதுசா ஏதாவது செஞ்சு இருக்காரா?

    ஆனா மத்த படைப்பாளிகள், சூப்பர் ஸ்டார்கள், தளபதிகள், ‘தலை’வலிகள், எல்லாம் இதை விட சிறந்த, உலகத்தரமான விஷயங்களை தான் தங்கள் எல்லா படத்துலயும் சொல்லிக்கிட்டு தான் இருக்காங்க.

    Reply
  42. @ Rajan – your opinion is very valid boss.

    @கோபி. சாரு இந்த கருத்தை பல காலமா சொல்லிக்கிட்டு தான் இருக்காரு. எஸ்.ராவின் சிறுகதையை மட்டுமல்ல. அவருகிட்ட தமிழகத்தின் இலக்கியவாதிகள் பத்தி கேட்டா அதுல எல்லாரையுமேதான் அவரு சொல்வாரு. மத்தவங்களை இருட்டடிப்பு செய்ய மாட்டாரு. ஆனா அப்புடி மத்தவங்க செய்யிறாங்க. அதை அவரு சொல்லுறதுல்ல என்ன தப்பு? சிறுகதையை ஷேர் செஞ்ச சாரு இப்புடிலாம் சொல்லக்கூடாதுன்னு எப்படி சொல்ல முடியும்? என்னங்க இது காமெடியா இருக்கு 🙂 ..நல்ல விஷயத்தை ஷேர் செய்யிராரு. மோசமான விஷயங்களை விமர்சிக்கிறாரு. அவ்வளவுதானே?

    //கமல் எல்லாம் தமிழ் திரை உலகில் ஒண்ணுமே செய்யலைன்னு நீங்க நினைச்சா, சாருவோட பதில் தான் உங்களுக்கும் பதில் – பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருட்டு என்கிறது. என்ன செய்ய?// – 🙂 :_)

    உங்களோட நிலைப்பாடு என்ன? உங்க கருத்து என்ன என்பதை தெளிவாக புரியவைத்தமைக்கு நன்றி. ஆல்ரெடி நீங்க கமல் விசிறியான்னு கேட்டேன். இல்லைன்னு சொன்னீங்க. இப்போ தெளிவா ஆமான்னு சொல்லிருக்கீங்க. கமலின் காப்பிகளைப் பத்தி இதுவரை நீங்க ஒன்னுமே சொல்லல. அது போதும் 🙂

    மத்த ‘படைப்பாளிகள், சூப்பர் ஸ்டார்கள்’ ஆகிய அத்தனை பேரையும்தான் இங்க விமர்சிச்சி எழுதிருக்கேன். கமலை மட்டும் அல்ல. அதை ஏன் புரிஞ்சிக்க மறுக்குறீங்க? கமலை பத்தி ஏதாவது சொல்லிட்டாலே ஏன் இந்த ஆவேசம் பாஸ்?

    Reply
  43. ராஜேஷ் நான் கமல் ரசிகனா இருந்தவன் தான். ஆனா இன்னைக்கு அதையெல்லாம் தாண்டி சிறந்த படைப்புகள் அனைத்திற்கும் நான் ரசிகன், உங்கள் எழுத்திற்கும் சேர்த்து.

    சின்னப்புள்ளைத்தனமா இருக்குன்னு என்னை சொல்ற நீங்க, கமலை ஆதரித்து பதிவிட்டால் அவன் கமல் ரசிகனாக தான் இருக்கவேண்டும் என்கிற உங்க நினைப்பை என்னன்னு சொல்றது.

    //மோசமான விஷயங்களை விமர்சிக்கிறாரு. அவ்வளவுதானே?//

    அதாவது இவரை கண்டிப்பா எல்லாரும் பாராட்டியே தீரனும், தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடனும். (அப்படி செய்யலைன்னு வேற எல்லாரையும் திட்டுவாரு). யாரும் இவரை விமர்சிக்கக் கூட வேணாம், இவரை பத்தி சொல்லாம விட்டாலே அது மோசமான விஷயமா? நல்லா இருக்கு ராஜேஷ். இது தான், சாரு தற்பெருமையை தேடி தேடி போவாரு, அது கிடைக்கலேன்னா கடுப்பாவாருன்றதுக்கு ஒரு சிறந்த உதாரணம். ஆனா கமல் தன்னுடைய பெருமையையும், கருத்துக்களையும் தன் படத்தில் ‘திணிப்பார்’ அப்படீன்னு நீங்க சொல்றீங்க. சபாஷ்| குருவுக்கு ஏத்த சிஷ்யன்.

    சரி விடுங்க பாஸ் சாருவை பத்தி நீங்க சொல்றது விதண்டாவாதமா எனக்கு படுது. சாருவோட முரண்பாடுகள், அலட்டல்கள், விளம்பர / தற்பெருமை தேடல்கள், சாடல்கள் எல்லாத்தையும் தேடி நீங்க வேற எங்கேயும் போக வேண்டியதில்லை. அவருடைய வலை பதிவே போதும்.

    //கமலை பத்தி ஏதாவது சொல்லிட்டாலே ஏன் இந்த ஆவேசம் பாஸ்?//

    அதையே தான் நானும் உங்ககிட்ட திருப்பி கேக்குறேன் ராஜேஷ். கமலை தாக்குறதுல மட்டும் உங்களுக்கு ஏன் இந்த ஆவேசம் பாஸ்? உங்க Popular Post ல பத்து பதிவு இருக்கு. அதுல கமலை வறுத்து எடுக்குறது அஞ்சு. இதுலேயே தெரியலையா உங்க கமல் காண்டு.

    அப்புறம் கமலின் காப்பிகளை பற்றி ஏன் கருத்து. கமல் படங்களின் கதைகள் காப்பிகள் தான், ஆனால் நிச்சயம் making அல்ல. That makes huge difference between the original and the copy. இது சட்டப் பூர்வமான ஒரு விஷயமாகத்தான் பார்க்கப்படவேண்டும் என்பது என் கருத்து. நந்தலாலா, என்திரன், தெய்வத்திருமகள், பத்தி எல்லாம் நீங்க என்ன சொன்னீங்கன்னு நான் படிக்கலை. அவங்களுக்கு எல்லாம் கமலுக்கு அடிச்ச மாதிரி வேப்பிலை அடிச்சீங்களா, இல்லை வலிக்காம குட்டி வச்சீங்களா?

    சரி கமலின் காப்பி பற்றி இவ்வளவு பேசும் நீங்கள், Quentin Tarantino ஆளவந்தானை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி கில் பில் படத்தில் காட்சி வைத்தேன் என்று சொன்னதை பற்றி மூச்சே விடவில்லையே. காண்டு இருந்தா அப்படி தானோ?

    ஹே ராம் எந்த படத்தோட காப்பி ராஜேஷ்?

    Reply
  44. ஒகே. மொதல்ல இந்த பாயின்ட் – //கமலை தாக்குறதுல மட்டும் உங்களுக்கு ஏன் இந்த ஆவேசம் பாஸ்? உங்க Popular Post ல பத்து பதிவு இருக்கு. அதுல கமலை வறுத்து எடுக்குறது அஞ்சு. இதுலேயே தெரியலையா உங்க கமல் காண்டு//

    இதுக்கு என் பதில் ஆல்ரெடி சொல்லிட்டேன். தமிழ்த் திரையுலகில் இஷ்டத்துக்கு காப்பிகளை அடித்துத் தள்ளி, அது சரிதான்னு ஒரு மாயையைக் கிளப்பியவர்களில் கமலுக்கு கண்டிப்பா ஒரு பிரதான இடம் உண்டு. அதுதான் காரணம். இது கண்மூடித்தனமான காண்டு இல்லவே இல்லை பாஸ். அதேபோல், //கமல் படங்களின் கதைகள் காப்பிகள் தான், ஆனால் நிச்சயம் making அல்ல// – இதை நான் மறுக்கிறேன். நான் கமல் காப்பிகள் பத்தி வீடியோ லிங்க் கொடுத்திருக்கேன். அதுல ஸீன் பை ஸீன் அவர் காப்பி அடித்த ஆதாரம் இருக்கு. அதைப் பார்த்தீங்கன்னா புரிஞ்சிக்குவீங்க. அதேபோல், எந்திரன், ராவணன், நந்தலாலா எல்லா போஸ்ட்லயும் அதை கடுமையா தான் விமர்சிச்சிருக்கேன். வலிக்காம குட்டல. இது மட்டுமல்ல. இன்னும் பல காப்பிகள் பத்தியும் நான் எழுதிருக்கேன். அதுல அத்தனை காப்பி முயற்சிகளையும் கடுமையா தான் திட்டிருக்கேன்.

    அடுத்து க்வெண்டின் மேட்டர். என்னோட FBல இதைப்பத்தி எழுதிருந்தேன். இதுல என் கருத்து ரொம்பவே சிம்பிள். க்வெண்டின் ஏதோ ஒரு இந்தியப் படத்துல இருந்து பார்த்து அதை வெச்சி கில்பில்ல அனிமேஷன் போட்டதா அனுராக் கிட்ட சொல்லிருக்காரு. அது ஆளவந்தான் என்பது அனுராக்கின் கருத்து. அதைத்தான் ட்விட்டர்லயும் போட்டுருக்காரு. ஆனா, அப்படி ஒரு சம்பவம் நடந்ததால் கமலின் அத்தனை காப்பிகளும் இல்லைன்னு ஆகிருமா சொல்லுங்க? மூச்சே விடலன்னு நீங்க சொல்றதெல்லாம் ரொம்பவே ஓவர் 😉 .

    ஹேராம் பத்தி – நீங்க கேட்டதால சொல்றேன். ஹேராம்லையும் காப்பி இருக்கு. Barabbas என்று ஒரு படம். ஹேராமின் கண்ணில்லாத பிச்சைக்காரி காட்சி இதிலிருந்து உருவியதே. அதையும் நான் ஆல்ரெடி எழுதியாச்சி பாஸ்.

    இப்போ இதுக்கு வருவோம் – // குருவுக்கு ஏத்த சிஷ்யன்// – நீங்க விடாப்பிடியா இந்த கருத்து வெச்சிருக்கீங்க. அப்புடியே வெச்சிக்கங்க. அதுல எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. ஒரு விஷயத்துல நாம நினைக்கிற மாதிரியே எல்லாரும் நினைக்கணும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்ல. காரணமும் நான் ஆல்ரெடி இங்கயே சொல்லிட்டேன். ஆனா நீங்க முடியாதுன்னு சொல்றீங்க. இருந்துட்டுப் போவுது. உங்க பாயின்ட் ஆஃப் வியூ அது. let it be. I do not have a problem boss.

    Reply
  45. இதுக்கு மேலயும் கமல் மேல எனக்கு காண்டுன்னு நீங்க நினைச்சா – ஏங்க..அவரு என்னாண்ட கைமாத்து வாங்கிட்டு எஸ்கேப் ஆயிட்டாரு பாருங்க. அதான் எனக்கு அவரு மேல காண்டு பாருங்க. அவருக்கும் எனக்கும் என்னங்க சம்மந்தம்? காப்பிகளை நான் எதிர்க்கிறேன். அதுனால கமலையும். காப்பியடிக்கிற எல்லாரையும். என் popular posts ல கமல் பத்தி மூணு இருக்கு. ஏன்? அதை நிறைய பேறு படிச்சதுனால்தான் அது அங்க இருக்கு. மத்த காப்பி போஸ்ட்களையும் நிறைய பேரு படிச்சிருந்தா அதுவும் அங்க வந்திருக்கும். சிம்பிள்.

    Reply
  46. ‘கொய்யால உன் வாய் தாய்யா உன்னோட எதிரி’////உண்மை
    உங்க விமர்சனம் சூடு போட்டுக்கிறவங்கலக்கு விமோசனம் தரும்..நல்லா சொல்லிருகீங்க நண்பா..

    புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கலாமா?மிஸ்கினுக்கு புரிஞ்சா சரி..ஒரு படமாவது உலகப் படத்த பாத்து சூடு போட்டுக்காம எடுங்க…

    Reply
  47. சரி, இது முடியறாப்ல இல்ல ராஜேஷ். இத்தோட இதுக்கு ஒரு புள்ளி வச்சுட்டு பின்னால எப்பவாவது பேசலாம்.

    சமீபத்துல KuroSowa வின் Seven Samurai, மற்றும் Red Beard பார்த்தேன். அடேங்கப்பா என்ன படங்கள்! நீங்க அதை பத்தி எழுதி இருக்கீங்களா? உங்க பார்வையில அந்த படங்களை பற்றி என்ன எழுதி இருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கணும்.

    Reply
  48. அதுவும் சரிதான் கோபி. இன்னொருவாட்டி-முடிஞ்சா நேர்லயே பேசுவோம். பின்னூட்டத்துல கன்னாபின்னான்னு அடிச்சிக்கிறவங்க இதைப் பாருங்கய்யா. . எப்புடி எங்க விவாதம்? 🙂

    கோபி. செந்தாடி இதோ – http://www.karundhel.com/2010/11/red-beard-1965-japanese.html

    செவன் சாமுராய் எழுதல. எல்லாருக்கும் தெரிஞ்ச படம் என்பதால். எழுதட்டா?

    Reply
  49. இப்பதான் Red Beard பற்றிய உங்கள் பதிவை படிச்சேன். அசத்தல்.

    செவன் சமுராய் பத்தி எழுதுங்க ராஜேஷ். என்னை மிகவும் பாதிச்ச படம் அது.

    என்கிட்டே அகிராவோட almost எல்லாப் படங்களும் (Soft copies) இருக்கு. எங்க வீட்டுல இதுக்காகவே ஒரு அருமையான Home Theater எல்லாம் set பண்ணி வச்சி இருக்கேன். ஆனா சில படங்கள் pen drive ல காப்பி செஞ்சு Home Theater ல பார்க்க முடியல. அதுலேயும் குறிப்பா Ran. அந்த படத்தோட Visuals எல்லாம் Laptop ல காட்டிலும் HT யில் பார்த்தா தான் அசத்தலா இருக்கும். DVD எங்க கிடைக்கும்னு சொல்லுங்களேன்.

    Reply
  50. ஆக்சுவலா ரான் படம் ரிலையன்ஸ் பிக் ஃப்ளிக்ஸ்ல வாடகைக்கு எடுத்து பார்த்தேன். ஒரிஜினல் டிவிடி. அட்டகாசமா இருந்தது. அதுவும் என்னை பாதிச்சது. குரஸவா படம் பூரா ரிலையன்ஸ்ல தான் பார்த்தேன். ரெண்ட் பண்ணி. வெகு ஸீக்கிறம் ஏழு ஸாமுராய்கள் போட்டுரலாம் 😉

    Reply
  51. நன்றி ராஜேஷ். உங்க செவன் சாமுராய்க்காக காத்திருக்கிறேன்.

    Reply
  52. Gopi actually this post is for mugamoodi and you switched it to some other area
    .
    please quit your fight and provide some room to speak about this movie
    .

    Reply
  53. Actually rajesh if you watched the movie closely, in climax jeeva was lying down and naren was sitting on top of him and spoke some mokka dialogue, which directly copied from THE DARK KNIGHT climax, one of the amazing scene in the movie and the dialogue which i like the most ( This is what happens when a unstoppable force moves with an immovable object – Joker to batman )
    .
    And another similar scene is when jeeva turned into his so called mask first time when he meets the heroine the child behind her asked who are you, at that time first two words he was speaking in his normal voice and then changed his voice, like CHRISTIAN BALE did in BATMAN BEGINS
    .

    Reply
  54. கமலைப் பற்றி இங்கு தரமின்றி பேசுவது பொருத்தமாக இல்லை நண்பரே. திரைப்படத்தை விமர்சியுங்கள். பிற கலைஞர்கள் மீது வசை மாரி பொழியாதீர்கள்.

    Reply
  55. Updates… நாங்க சண்டை எல்லாம் போட்டுகல. ராஜேஷ், முகமூடி விமர்சனத்துல கமலை இழுக்கப் போய் அது எங்களுக்குள்ள ஒரு விவாதத்தை உண்டாக்கி விட்டுச்சி. முகமூடியை விட்டுட்டு வேற எங்கேயோ போயிட்டோம்னு சொல்றது உண்மை தான். அதுக்கு நான் தான் காரணம். மன்னிச்சுக்குங்க.

    ஆனாலும் ஒரு விதத்துல (ராஜேஷ் சொன்னது போல), இது கீழ்த்தரமான சண்டையா இல்லாம, விவாதமா இருந்தது எனக்கு மகிழ்ச்சி. ஆரோக்கியமான விவாதங்கள் பல பரிமாணங்களை, தெரியாத விஷயங்களை வெளியே கொண்டு வரும். ஆனா வடிவேலு ஸ்டைல்ல சொல்லனும்னா விவாதம் செய்யும் போது ‘லைட்டா’ கொஞ்சம் காரமும், சூடும் இருந்தா தான் சுவாரஸ்யமா இருக்கும், நிறைய விஷயங்கள் வெளிய வரும்.

    முகமூடியை நான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் கருத்து சொல்ல முடியாது. ஆனா எனக்கு தெரிஞ்சு எல்லாரும் அதை கிழிக்கிறாங்க.

    Reply
  56. நீங்கள் இந்த துப்பு துப்புவதைப் பார்த்தால், அது பார்க்கக் கூடிய படமாகத்தான் …… பார்க்கலாம் ….

    Reply
  57. ஹா ஹா ஹா அப்போ முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் வெளியிட மிஷ்கின் ஒத்து வர மாட்டார் போல இருக்கே? ஆனா ஒன்னு நான் படிச்ச ஷீ டோ ரி யூ கராட்டே பள்ளியில் மாஸ்டர் எல்லாம் பயங்கர ஷார்ப். ஸ்பிரிட் உடன் சிக்ஸ் பேக் வைத்து இருந்தார்கள் ஜி!

    Reply
  58. நிஞ்சா சண்டைகள் சுட்டி டிவி ஜாக்கி சான் காட்சிகளை தழுவியே அமைந்து இருக்கின்றன. ஆனாலும் நிஞ்சா பள்ளிகள் தமிழ் நாட்டிலும் உள்ளன என்கிற வரையில் எனக்கு அது மட்டும் ஓகே. அதில் வரும் ஒரு மொக்கை ரோபோவை காட்டி கொலை பன்றாங்கப்பு!

    Reply
  59. நண்பரே ,
    மிஸ்கின் படத்தை மிஸ் பண்ணகூடாது என நினைத்தேன் ,உமது விமர்சனம் காததூரம் ஓடச் செய்கிறது.
    ஏமாற்றமே .

    Reply
  60. thanks gopi – for your lovely apoligies

    Reply
  61. //…ப்ளாக்ல எழுதறவங்களுக்கும் ஜோல்னா பைக்காரர்களுக்கும் இப்பவே சொல்லிடுறேன்… இது பேட்மேன், ஸ்பைடர்மேன் மாதிரியான படம் இல்லை. ‘புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கலாமா?’….’முகமூடி சோடா மூடி’னு இப்பவே தலைப்பு எல்லாம் எழுதிவெச்சுட்டு ரெடியா இருப்பீங்க. ஆனா, நான் புலியும் இல்லை… பூனையும் இல்லை….!//

    அதாவது…’ஐயா, நான் குப்பையா ஒரு படம் எடுத்துருக்கேன்..அத நீங்க பாக்க வேண்டிய , எழுத வேண்டிய அவசியம் இல்லைன்னு…ஒரு ஆளு சொன்னதுக்கு அப்புறம், முதல் நாள் முதல் ஷோ பாத்துட்டு அந்த ஆளு(மிஷ்கின்) சொன்னது போலவே ‘சோடா மூடி’ன்னு தலைப்பு வைத்து எழுதுறது எனக்கு என்னவோ சரியா தெரியல. You all are ‘pathetically predictable’.

    இதுல…தமிழ் சினிமாவுக்கு சூப்பர் ஹீரோ படங்கள் தேவையில்லாத முயற்ச்சின்ற ஒங்க ‘அட்வைஸ்’ ரொம்ப ஓவர். எந்த கேரக்டரை வச்சு எப்படி எடுக்கணும்னு…நீங்க தயாரிப்பாளர் ஆன பிறகு, ஒங்க கிட்ட சான்ஸ் கேட்டு வரவர்றவங்க கிட்ட ‘அட்வைஸ்’ பண்ணுங்க…கருந்தேள் அவர்களே. தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களுக்கு தங்களைப் போன்ற ‘ஹிட்லர்கள்’ தேவையில்லை.

    மிஷ்கினோட எல்லா படங்களுமே ‘குப்பை/காப்பி’ என்பதை முதலிலே உணர்ந்தவர்கள்(என்னைப் போன்ற வெகு சிலர்) அவரை சீரியஸாக எடுப்பதே இல்லை. ஆனா ‘ப்ளாக்ல எழுதறவங்களும் ஜோல்னா பைக்காரர்களும் தான் தேவையில்லாத முக்கியத்துவத்தை மிஷ்கின்னுக்கு கொடுத்து விட்டு, இப்ப குத்துதே..கொடையுதேன்னு புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

    இதுல ‘மிஷ்கின் மேல கருந்தேளுக்கு இன்னும் நம்பிக்கை இருக்குதாம்…அடுத்த முறை அஞ்சாதே, யுத்தம் செய் மாதிரியான நல்ல படங்களை(??!) கொடுப்பார்ன்னு இவர் எதிர்பார்க்குறாராம்??!. மிஷ்கின் இத கேட்டுட்டு…’இன்னுமாடா நம்பள நம்புறாய்ங்கன்னு’ நிச்சயம் பெருமிதம் அடைவார்.

    ஆனா ஒன்னு மட்டும் நிச்சயங்க…’இந்த ப்ளாக்ல எழுதறவங்க, ஜோல்னா பைக்காரங்க மற்றும் மிஷ்கின் இவங்க யாருமே திருந்த மாட்டாய்ங்க…!

    Reply
  62. BLOG ல எழுதுறவங்க எல்லாம் திருந்த மாட்டங்கன்னு சொல்லிட்டு அப்புறம் என்ன Hair – க்கு இங்க வந்து எழுதுற

    Reply
  63. நான் எதையுமே நேருக்கு நேரா பேசி பழகுன பயபுள்ள, அதனால தான் ப்ளாக் எழுதுறவங்கள பத்தி அவங்களோட வலைப்பக்கத்தில் எழுதியிருக்கேன்.

    நெனச்சத சொல்ல பயப்படுகிற ஆளு…நாங்கெடயாது. புலிகுகையா இருந்தாலும் பூனைகுகையா இருந்தாலும் எனக்கு எல்லாமே ஒன்னு தான்.

    உண்மையான பேரை மறைச்சு…பொய்யான பேர்ல, இணையதளத்தில் கருத்து(??!) சொல்லிகிட்டு திரியிற, பொண்டுக பயலுகளுக்கு…இதெல்லாம் புரியாது…Mr. Hairஆண்டி.

    பிகு: ஒரு flowஆ இருக்கட்டுமேன்னு ‘பூனைகுகை’ன்னு எழுதியிருக்கேன். அது புரியாம, பூனை எப்படி குகையில் வாழும்?ன்னு ‘மொன்ன கத்தி'(ஒங்க பாஷையில ‘மொக்கை’) மாதிரி ‘லாஜிக்’ பேசி அறுக்கக் கூடாது…என்ன சரியா, Mr. Hairஆண்டி?

    Reply
  64. நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துது!

    Updates, விஷயத்தை திசை திருப்பி விட்டுட்டேன்னு எனக்கு குட்டு வச்சுட்டு, நீங்க இப்படி சண்டையை கிளப்பி விடலாமா? வேணாங்க. திரும்ப நண்பர் ராஜாராமுக்கு பதில் சொல்றேன்னு எதையாவது ஏடாகூடமா போட்டுடாதீங்க.

    நண்பர் தி வீ ராஜாராம் அவர்களே, நீங்களும் இத்தோட விட்டுடுங்க.

    ராஜேஷ், கொஞ்சம் வெள்ளை கொடியை ஆட்டப்படாதா?

    Reply
  65. அதெல்லாம் இருக்கட்டும்… இந்த கந்தசாமி, வேலாயுதம் படங்கள் கூட தமிழ் சினிமாவில் முதல் சூப்பர் ஹீரோ படம்ன்னு தானே சொன்னாக? அப்புறம் ஏன் இதுக்கும் சொல்றாக? ஒரே கம்ப்யூஷனா இருக்கு!!

    Reply
  66. siva

    thalayva police offciers mothama kenjuvangale atha solama vttutingale ( mukamudi nee tha intha kollakarangala pudikanumnu ) pavam naaser

    Reply
  67. kartthikkumar

    sirichukitte padichen…. thnks for a good article…

    Reply
    • Rajesh Da Scorp

      🙂

      Reply
  68. Ramachandran

    Can we make a movie like sakthi maan it’s possible to create a super hero for Indian movies…

    Reply

Join the conversation