நான் மகான் அல்ல – ஒரு விவாதம்

by Karundhel Rajesh January 21, 2011   Tamil cinema

சில நாட்களுக்கு முன், ரஞ்சித் என்ற நண்பர், எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். சென்ற பதிவில், நான் மகான் அல்ல எனக்குப் பிடித்திருந்தது என்று நான் எழுதியதைப் பார்த்து, அவர் இயக்குநர் சுசீந்திரனுக்கு எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் இருந்த கோபம் என்னைப் பாதித்தது. அவரது அனுமதியோடு அக்கடிதத்தை இங்கே அளித்திருக்கிறேன். உங்களது கருத்தை எழுதுங்கள். இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இதோ கடிதம்.

இயக்குனர் சுசீந்திரன் அவர்களுக்கு வணக்கம்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ‘நான் மகான் அல்ல” என்ற திரைப்படத்தைப் பற்றி உங்களிடம் எனது கருத்தை ஒட்டு மொத்த தலித் மக்களின் சார்பாக பேச விழைகிறேன்.

அதற்கு முன்பாக..வெண்ணிலா கபடி குழு பற்றி..

குறைந்த முதலீட்டில் மிக அற்புதமான கதை அம்சத்துடன் எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் ஆதி தமிழ் குடிகளின் விளையாட்டை கலையாக்கி அதை தமிழ் மக்களின் முன்பாக வர்த்தக ரீதியில் வெற்றி பெற செய்து , திரை ப்படத்துறையில் கலையை முன்னிறுத்தி அதை வர்த்தக ரீதியில் மக்களிடம் கொண்டுசேர்க்கக் காத்திருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு நிச்சயமாக இத்திரைப்படம் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது எனலாம். குறைந்த முதலீட்டில் வெற்றி பெறுகிற மற்ற படங்களைப் போல அல்ல வெண்ணிலா கபடி குழு.. காலம் காலமாக திரைப்பட ஊடக வரலாற்றில், கீழ் நிலை மக்களை நாகரீகமற்றவர்களாக..நிறம், பேச்சு, மொழி, பழக்க வழக்கங்கள், கலாச்சார ரீதியிலான எதற்கும் லாயக்கற்றவர்களாக எப்போதும் ஓரங்கட்டப் பட்டு வெற்றுடம்புடன், கேவலமாக இருப்பவர்களாகத்தான் காட்டிக்கொண்டிருக்கின்றனர்.

முதலாளிவர்க்கத்திற்கும், சாதி வர்க்கத்திற்கும் முன் கூனிக் குறுகி காலங்காலமாய் அவனுக்காக உழைத்து ஓடாய்த் தேய்ந்து போன சமூகத்தை திரைப்படத்தில் இன்னமும் இழிவாக காட்டிக் கொண்டிருக்கின்றனர். திரைப்படத்தில் மட்டும் வரும் கதாநாயகர்கள் இம்மக்களை அணைத்துக் கொள்ளுவதும், அவர்களில் உணவை வாங்கி சாப்பிடுவதும், அவர்களுக்காக போராடுவது என்றும் எத்தனையோ நாயகர்களை தொடர்ந்து காட்டி கொண்டிருக்கும் இந்த உலக சினிமாவில் தான் வெண்ணிலா கபடி குழுவும் பூத்தது. அதை கண்டு எல்லையில்லா பேரானந்தம் அடைந்தோம்..
சிறுவயதில் பண்ணை அடிமை முறையில் தன் பால்ய காலத்தை தொலைத்த நாயகன், கபடி ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படாமல் வெளியில் உட்கார்ந்து ஆட்டக்காரர்களுக்கு வேண்டிய வேலைகளை செய்து கொண்டிருக்கும் அதே நாயகனை, எவருக்கும் வாய்ப்பு கொடுத்தால் வெற்றியென்பது எல்லோருக்கும் பொதுவானது என்ற சமத்துவத்தை நிறுவி, முக்கியமாக தலித் சமுதாயத்தை சேர்ந்த இளைஞனை அந்த அணிக்கே தலைவனாக்கி, அவனால் அந்த அணி வெற்றியும் பெறுகிறது. தலித்தால் கிடைத்த வெற்றியை எல்லோரும் ஏற்று கொள்ளும் வகையில், வர்த்தகரீதியிலும் வெற்றி பெறச் செய்தது இச்சாதிய உலகில் நிச்சயமாக ஒரு சாதனை தான் என்று சொல்லத் தோன்றுகிறது.

பொதுவாக ரவுடி என்றாலே, மிகவும் கருப்பாக இருக்க, அவர்களின் பெயர்கள் மைக்கேல் பீட்டர், குமார், முனியாண்டி, மாயாண்டி என்பது போன்ற பெயர்களும், அவர்கள் சேரிப் பகுதியில் வசிப்பது போன்றே எம்,ஜீ,ஆர் காலத்திலிருந்து இன்று வரை நம் கலைத்தாயின் தோழர்கள், தமிழ் தேசிய வாதிகள் என அறிவித்துக் கொள்பவர்கள் உட்பட அத்தனைபேரும் பதிவு செய்தபடி இருக்கின்றனர். அதேபோல், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களாகவோ, சிறுபான்மையினர்களாகவோ சேரிப் பகுதியில் பிறந்து வாழ்ந்து அந்த மக்களுக்காக போராடும் நம் திரைப்பட கதாநாயகர்கள், கடைசியில் அவர்களின் பிறப்பு பற்றி வரும் பின் நகர்வு காட்சியில் அவர்களுக்கான பிறப்பின் இரகசியம் சொல்லப்படும்போது அவர்கள் ஏதோவொரு உயர் சாதி வகுப்பில் பிறந்து இருப்பார்கள் – அல்லது உயர் சமுகத்தைச் சேர்ந்த இரத்தமாக இருப்பார்கள். ஏன்? தலித் சமுத்தில் பிறந்தால் அவர்களால் போராடவும் மக்களுக்கு அறியாமை இருளில் இருந்து வெளிகொணரவும் சக்தி இல்லாமல் போய்விடுமா?

இந்நிலை இப்படியென்றால், நமது தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு இணையாக கொண்டு செல்லத் துடித்துக் கொண்டிருக்கும் கலைத்தாயின் தவப்புதல்வர்களான பாலா (பிதாமகன் படத்தில், சுடுகாட்டில் பிண எரிப்பு வேலை செய்பவரிடம் வளர்ந்த ஒரே காரணத்தினால், பேச்சு, நடை, உடை, பழக்கவழக்கங்கள் எல்லாவற்றிலும், மனிதத்தன்மை அற்ற ஒரு பிறவியாக அல்லவா அக் கதாபாத்திரத்தைப் படைத்திருப்பார்), மணிரத்னம்(ஆய்த எழுத்தில் ரவுடி கதாபாத்திரம் சேரி பகுதியில் வாழும் இளைஞனுக்கு அமைத்து இருப்பார்), சேரன், அமீர் என இன்று முன்னணியில் இருக்கும் அனைத்து கலைத்தாக இயக்குனர்கள் அனைவருமே வெளிப்படையாக தலித் இனத்தையும் சிறு பான்மையினரையும் தாழ்த்தி தங்களின் படங்களில் மோசமாக கதாபாத்திரங்களை அமைத்து வருகின்றனர். மேற் சொன்ன இந்நிலை முற்றிலுமாக தகர்க்கப்பட்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் தலித் சமுகத்தை சேர்ந்த நாயகனை வெற்றிக்கான காரண கர்த்தாவாக அமைத்து – முக்கியமாக வெகுசன மக்கள் இதை ஏற்று கொண்டாடும் வகையில் அமைத்தது, அது தலித்துக்களுக்கான சினிமா தான் என்று சொல்லத் தோன்றுகிறது. தலித்தை ஏற்று கொள்ளும் சினிமாவாகத் தான் இதை பார்க்கத் தோன்றுகிறது.

சமீபத்தில் இயக்குனர் சற்குணம் அவர்களின் இயக்கத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படத்தில் வரும் தலித் கதாபாத்திரம் மாடு மேய்க்கும் கருப்பையாவை (வயது-50க்கும்மேல்), நாயகன் ’டேய் கருப்பையா.’ என்றும், நாயகி, நாயகியின் அப்பா என எல்லோருமே அவரை ஒருமையில் அழைத்து அதை எல்லோரும் இரசிக்கும்படியாக (உள்ளதைத்தானே எடுத்து இருப்பார் என்று கேட்டால், ஏன் இதை மட்டும் தான் அவரால் ரியலிஸமாக காட்டமுடியுமா? கீழ் சாதி மக்களை மரியாதையாக கூப்பிடுவது மாதிரி பொய்யாக கூட இவர்களால் காட்ட முடியாதா? அப்படிக் கூப்பிட்டால் அதை பார்த்து சிலராவது திருந்தட்டுமே?) கேவலமான மேல் சாதித் திமிரில் எடுத்து இருப்பார். தத்தமது இயக்குனர்கள் தத்தமது பணியை செவ்வனே செய்து கொண்டிருக்க, வெண்ணிலா கபடி குழு கொடுத்த அன்பர் நீங்களும் கொடுத்து விட்டீர்கள் வெற்றி படைப்பான நான் மகான் அல்ல என்ற சூப்பர் டூப்பர் திரைப்படத்தை.

நான் மகான் அல்ல..திரைப்படத்தில் நாயகன், பெரும் பேரன்பு கொண்டவன். நண்பர்களுக்கு உதவுவதற்காக எப்போதும் பைக்கின் பேப்பர்களை பைக்கிலேயே வைத்துக் கொண்டு திரிபவன். நல்ல அப்பா அம்மா தங்கை தோழி காதலி, நண்பர்கள் என தன்னைச் சுற்றிலும் ஒரே நல்லவர்களாய்க் கொண்ட நடுத்தர வர்க்கத்து வாழ்க்கை வாழ்பவன். மேலும் தவறு செய்பர்களை நடுரோட்டில் வைத்துக் கொல்லத் தனக்கு அதிகாரம் கோருபவன் என தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த நாயக பிம்பத்தின் பிரதிபலிப்பாய் அவனுடைய கதாபாத்திரம் இருக்க..அவனுக்கு எதிராக அமைத்திருக்கும் கொலைகார இளைஞர்கள் . . .

1:அரசுக் கல்லூரியில் படிப்பவர்கள்

தற்போது அரசுக் கல்லூரியில் படிக்கும் 75 சதவீதத்திற்கும் மேலான மாணவர்கள் தலித்துகள். மற்றவர்கள் வசதியில்லாத பிற்படுத்தப் பட்டவர்கள் (சிறுபான்மைப் பிரிவினர்) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர். இப்போதெல்லாம் உயர் வகுப்பினர் எவரும் கலை அறிவியல் கல்லூரியில் படிப்பது இல்லை. அவர்களின் வசதிக்கேற்ப மருத்துவம் தொழிற்படிப்புகள் அல்லது எதாவது தனியார் கல்லூரிகளில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்த்து விடுகின்றனர். வசதியில்லாததால் குறைந்த அளவு ஏதேனும் இளங்கலைப் படிப்பாவது முடிக்க வேண்டும் என்ற நிலையில் நிறைய பேர் அதுவும் அதிகப் படியான தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்கள் மட்டுமே அரசுக் கலைகல்லூரிகளில் சேர்ந்து படிக்கின்றனர். இதனால் தான் அரசு கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஏதாவது ஒரு குற்ற வழக்குகளில் மாட்டினால் மாணவர்கள் என்று கூடப் பாராமல் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரியில் படிக்கின்ற பணக்கார மாணவர்கள், கல்லூரியில் புதிய மாணவர்களை சேர்த்து விட்டால் அதில் கிடைக்கும் பணத்திற்காக மோதிக்கொண்டதற்குப் போலீஸார் அவர்களை அழைத்து வழக்கு எதுவும் தொடுக்காமல் எச்சரித்து அனுப்பியது நாளேடுகளிலும் செய்தியாக ஆனது. அதுவே அரசு கல்லுரியில் படிக்கும் மாணவர்கள் என்றால் மட்டும் அடி உதை வழக்கு. இதையொட்டியே நீங்களும் உங்களது திரைப்படத்தில் குற்றமிழைப்பவர்கள் அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்று காட்டுகிறீர்கள். மேலும் அவர்கள் விடுதி மாணவர்களாகவும் காட்டியிருக்கிறீர்கள் (பொதுவாக விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் பெரும்பான்மையினோர் வசதியில்லாத தலித்துகளே). போதாக்குறைக்கு இந்த மீனவ சமுதாய மக்கள் சினிமா துறையினருக்கு என்ன தான் தீங்கு இழைத்தார்களோ? அவர்களை எப்பொழுதுமே கொலைகாரர்களாகத்தான் காட்டுகிறார்கள். இதில் நாயகன் மீனவரிடம் பேசும் போது அவரை ஏமாற்றிய, மக்களை ஏமாற்றிய நபர்களைக் கொலை செய்ததற்காகத்தான் தனக்கு அவரைப் பிடித்துள்ளதாகக் காட்டி நாயகத் தன்மையை நல்லவனாகவே காட்டி விடுகிறீர்கள். இன்னொன்றை சொல்லியே ஆக வேண்டும். நம் திரைப்படத்துறையினர் தொடர்ந்து தலித் மக்களை தென் மாவட்ட கதைகள் என்றால் அடிமைகளாகவும், தம் கீழ் வேலை செய்பவர்களாகவும் அவர்களுக்கென்று எந்த வித நாகரீக கலாச்சாரமும் அற்ற மக்களாகவும், அதுவே சென்னைக் கதைகள் என்றால் அவர்கள் திருடர்களாகவும், கொலைகாரர்களாகவும், பொறுக்கிகளாகவும் தான் காட்டி வருகின்றனர்.

2: கருப்பு நிறத் தோல் உடையவர்கள்

கருப்பு நிறம் கொண்ட ஒரே காரணத்தினாலேயே பல ஆண்டு காலமாய் வெள்ளை நிறத்தவனிடம் அடிமைப்பட்டுக்கிடந்த நம் ஆப்பிரிக்க சகோதரர்கள் அந்த கருப்பு நிறத்தினையே தம் கலக நிறமாக மாற்றி அந்த மண்ணையே ஆண்டு வருகின்றனர். அவர்களுடைய பேச்சு, நாகரீகம், உடை, நடனம், பாடல், இசை என அவர்களின் ஒட்டு மொத்த நிகழ்வுகளுமே இன்று உலகத்து மக்கள் எல்லோராலும் பின் பற்றப்பட்டுக் கொண்டிருக்கும்படியான அரசியலைத் தங்களின் கருப்பு நிறத்தை முன் வைத்து பெருமளவில் வெற்றியீட்டி வருகின்றனர் என்ற நிலையிருக்க, நம் திராவிட நிறமாகிய கருப்பு நிறத்தை, உழைக்கும் மக்களின் நிறமாகிய கருப்பு நிறத்தை, அழகில்லாத நிறமாக, அசிங்கமான நிறமாக, வேடிக்கை நிறமாக, நாயகிகளை பயமுறுத்தும் கொடும் கொள்ளைக்காரர்களின் நிறமாக, கீழ்த்தட்டு மக்களின் நிறமாகத் தொடர்ந்து காட்டி வருகின்றனர். உலக நாயகன் கமல்ஹாசனுக்கு தசாவதாரத்தில் தலித்தை அழகில்லாமல் கோணல் முகத்தோடு கருப்பாய்க் காட்டுவதற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஷங்கரும் பழகிக் குலவ, சங்க காலத்துத் தமிழ் பெயர்களான அங்கவை சங்கவை என பெயர்வைத்துப் பெண்களின் முகத்தில் கருப்பு பூசி நம் சகோதரிகளை அசிங்கப்படுத்துவதற்கும் கருப்பு நிறம் தேவைப்படுகிறது. திரை அரங்குகளில் நம் கருப்பு நிறத்தினைத்தான் கிண்டல் செய்கிறார்கள் என்று கூடப் புரியாமல், நம்மையே கை தட்டி சிரிக்க வைத்து கொண்டிருக்கிற நயவஞ்சகர்களின் கூட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அது போலத்தான் தங்களின் படத்திலும் வில்லன் கதாபாத்திரம் கொண்ட இளைஞனை எப்போதும் முகம் கூடக் கழுவ விடாமல் முடியை சிலுப்பி விட்டு, கருப்பாகத் தெரியவேண்டும் என்று வேண்டுமென்றே காட்டியிருக்கிறீர்கள். திரைப்படத்தில் நாயகனின் அப்பா, போலீஸ்காரரிடம் அந்த இளைஞனைப் பற்றி அடையாளம் சொல்லும் போது, ’நல்லா கருகருன்னு நீக்ரோ மாதிரியே இருந்தான்’ என்று சொல்லும் போதே கருப்பு நிறத்தின் மேல் உள்ள வெறுப்போடு, வெள்ளை நிறத்தோலினை உடைய இனவெறி பிடித்தவர் சொல்வது போன்று தான் தோன்றுகிறது. இந்த வசனத்திற்காகவே அந்த இளைஞனை எப்போதும் கருகருவென்று உலவ விட்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்ல ஆசைப்படுகிறேன். அமெரிக்காவில் பன்னெடுங்காலமாய் வெள்ளையருக்கு அடிமையாகக் கிடந்த ஆப்பிரிக்க சகோதரர்களை நிறத்தின் அடிப்படையில் அசிங்கப்படுத்தும் வசைச்சொல்லாக “நீக்ரோ” என்ற சொல்லை வெள்ளையர்கள் நெடுங்காலமாய் பயன்படுத்தி வந்தனர். அவ்வார்த்தையை இனி ஒருவனும் உதிர்க்கக் கூடாது என்று எண்ணற்ற ஆப்பிரிக்கக் கருப்பு சகோதரர்கள் போராடி கடைசியில் மால்கம் எக்ஸ் தலைமையிலான போராட்டத்தின் முடிவில் நீக்ரோ என்ற சொல் ஆங்கில சொல் அகராதியிலிருந்தே நீக்கப்பட்டு அன்று முதல் அவர்கள் ஆப்ரோ அமெரிக்கர்கள் என அழைக்கப்படலாயினர் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். நீக்ரோ என்று அழைப்பவர் குற்றமிழைத்தவர் ஆவார். எனவே நீங்களும் அப்படியே ஆவீர். இதில் முரண் என்னவென்றால், நீங்களும் கருப்பர் என்பதை மறந்துவிட்டீர்கள் போல (இதில் வருத்தம் என்னவென்றால் இந்த வார்த்தைகளெல்லாம் எப்படித்தான் தணிக்கை அதிகாரிகள் அனுமதிக்கின்றனரோ..?..எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்).

3:முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள்

முஸ்லிம் மதத்தை சார்ந்தவரைக் கண்டாலே நம்மில் நிறைய பேருக்கு அவர்கள் தீவிரவாதியாக இருந்தாலும் இருப்பர் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்து விடுகிறது. அம்மாதிரியான எண்ணங்களை நமக்கு ஏற்படுத்துபவைகள், இந்த நாசமாய்ப்போன ஊடகங்கள் தான். எதற்கெடுத்தாலும் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று கொட்டை எழுத்தில் போட்டு, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தினரையே கேள்விக்குள்ளாக்கி, படிக்கும் மக்களை மிகச் சாதாரணமாகவே நம் சகோதரர்களை நோக்கி அது மாதிரியான பார்வைக்கு ஊடகங்கள் அழைத்துச் செல்கின்றன. அது போல் நீங்களும் தங்களது படைப்பில் முஸ்லிம் இளைஞனையும் விட்டு வைக்கவில்லை.

4:நடை உடை பேச்சு

வில்லன் கதாபாத்திரங்களைக் கொண்டவர்கள் பேசுகிற மொழி சென்னை மொழி !எனக்கு சிரிப்பு தான் வருகிறது. ஏன் என்றால், இந்த கலையுலக ஜாம்பவான்கள் இந்தச் சென்னை மொழியைப் பேசி நடிக்கிறேன் பேர்வழி என்றும், தம் கதாபாத்திரங்களை அப்படிப் பேசவைக்கிறேன் என்றும் சென்னை மொழியைக் கடித்துக் குதறிக்கொண்டிருக்கின்றனர் (கடைசியாக வந்த பாணா காத்தாடி உட்பட). அதேபோல் இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் கடித்துக் குதறாவிட்டாலும், குற்றமிழைக்கிறவர்கள் பேசுகிற மொழியாக இயக்குனர் இதைப் பயன்படுத்தி உள்ளார். நாயகனும் அவருடைய நண்பர்களும் பேசுகிற மொழி, ஏதோ வேறு மாவட்டங்களில் இருந்து – குறிப்பாகத் தென் மாவட்டங்களில் இருந்து இங்கு வசித்துக் கொண்டிருக்கும் மக்களின் மொழியை – கையாண்டுள்ளார்.(எ-கா நண்பர்கள் பேசிக் கொள்ளும்போது லந்து, மாப்பிள்ளை என்று பேசிக் கொள்வர். இங்கு மாப்பிள்ளை என்று அழைக்கும் பழக்கம் இல்லை. மாமா..மச்சான்..மச்சி என்றுதான் நண்பர்கள் வட்டாரத்தில் அழைத்துக்கொள்வர்). மேலும் எதிரிகளின் உடை நாகரிகம் நாயகனை விடக் கீழானதாகவே அமைத்து இருப்பார். மேலும் கருப்பு இளைஞனும் கொலைகாரன்; அவனின் தாய்மாமனும் கொலைகாரன்; ஏன் அவன் குடும்பமே கொலைகாரக் குடும்பம்தான் என்று காட்டுகிறீர்கள். ஆனால் நாயகன்தான் எத்தனை நல்லவன் ! அதுவும், பணம் வசூலிக்கச் செல்லும்போது தலி,த் சமூகத்திடம் காட்டும் கரிசனம் தான் என்ன வென்று சொல்வது? இதனால் அவன் வேலை பறி போனாலும் பரவாயில்லை !தியாகியின் மறு உருவமாய் அல்லவா காட்டுகிறீர்கள்? ஆனால் எதிர்தரப்பு இளைஞர்கள், தங்களை நம்பி வந்த நண்பனையும் நண்பனின் காதலியையும்……ம் உங்களின் கொடூர புத்திக்கு அளவே இல்லை !

பன்னெடுங்காலமாய் சாதி என்ற வெறும் ஒற்றைச் சொல் வார்த்தையால் தலித் சமுகத்தைத் தாழ்த்திய உயர் சாதி குடிகள், சாதிக்கட்டமைப்பு தகர்ந்திராதபடிக்கு மதம், கலாச்சாரம், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் என எல்லாவற்றிலும் தலித் சமுகத்தின் மேல் போட்ட முட்டு கட்டைகளை, பெரும்பாடுபட்டுத்தான் தலித் சமுகத்தினர் உடைத்தெறிந்துகொண்டு எல்லோருக்கும் போட்டியாக இன்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் சாதி இன்னும் ஒழிந்த பாடு இல்லை. புதுப்புது வடிவங்களில் தன் கோர முகத்தை காட்டிக்கொண்டே தான் இருக்கிறது. அதற்குப் பெரிதும் துணை போவது எழுத்து, ஓவியம், பத்திரிக்கை , தொலைக்காட்சிகள் – முக்கியமாக சினிமாத்துறை போன்ற ஊடகங்கள் தான். தலித்துகள் கருப்பர்கள், கொடூரமானவர்கள், கொள்ளைக்காரர்கள், நாகரிகமற்றவாகள், அவர்கள் பேசும் மொழி கொச்சையானது என்ற பொய்யான தோற்றத்தினை, தொடர்ந்து கலையுல சாதியாளர்கள் வெளிப்படுத்திக்கொண்டே வருகின்றனர். இதனால் இதை பார்க்கும் பார்வையாளனுக்கு வெளிப்படையாக எதுவும் தோன்றாமல் இருக்கலாம். இது ஒரு படம் மட்டும் தான் என்று பார்த்துவிட்டுச்சென்றாலும் கூட, உளவியல்ரீதியாக பாதிப்பிற்குள்ளாகி, இம்மக்களைப் பற்றி அல்லது இம்மக்களைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தின் போது அவனுக்குத் திரைப்படங்களில் காட்சிப்படுத்தும் பிம்பங்களாகவோ அல்லது அதன் உண்மைப்பிரதிகளாவோ தான் நிச்சயம் தோன்றும். அப்படித்தான் தோன்றியும் கொண்டிருக்கிறது. நீங்கள் படைத்த திரைப்படத்தில் சாதியாளர்களின் வழித்தோன்றல்களின் தொற்றுவாயாக தலித்களின் மேல் சுமத்தப்பட்டு இருக்கும் பொய்யான பிம்பங்களை உங்களின் சுய லாபத்திற்காக அடுத்த நகர்விற்க்கு அழைத்து சென்று இருக்கிறீர்கள். இல்லாதையா காட்டி விட்டேன் என்று நீங்கள் சொன்னால்…….ஏன்? சமுகத்தில் – அதுவும் திரைபடங்களுக்கான கதைகளில் தலித்துகளை விட்டால் கெட்டவர்கள் யாரும் இல்லையா?

நீங்கள் சொல்லலாம் நான் தவறு செய்பவர்கள் தலித்துகள் என்று காட்டவில்லையென்று. அப்படியானால் அவர்கள் யார்? மேலும் தயவு செய்து பெரும்பான்மை சமூகத்தினரிடம் சென்று பேசிப்பாருங்கள். அவர்கள் தலித் சமூத்தினரை எப்படி நினைத்திருக்கிறார்கள் என்று. தலித்களின் மீதான மதிப்பீடு பெரும்பாண்மை மக்களிடம் என்னவாக இருக்கிறது என்று? சரி. கருப்பு நிறம் உடையவர்கள் எல்லா சாதியிலும் தான் இருக்கின்றனர் என்று நீங்கள் சொல்லலாம் மக்களிடம் சென்று கேட்டு பாருங்கள் அந்த கருப்பு நிற இளைஞன் என்ன சமுகத்தவனாய் இருப்பான் என்று. முன்பெல்லாம் பிராமணர் – பிராமணர் அல்லாதவர் என்று இருந்த நிலை மாறி, இன்று தலித் – தலித்தல்லாதவர்கள் என்று ஆகிவிட்டது.
வெண்ணிலா கபடி குழுவில் தலித் சமுகத்தினைச் சார்ந்தவனை நாயகனாக்கி அழகு பார்த்த நீங்கள், படம் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, எதிரிகளை, பார்த்தாலே மோசமானவர்களாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக, பெரும்பான்மை சமுகத்தினர் எவரை குற்றவாளிகளாக நினைத்து கொண்டிருக்கிறார்களோ, அந்த தலித் மக்களை பற்றிய காலம்காலமான தவறான மதிப்பீட்டை சரி என்று ஏற்று கொள்வது போல, சாதிமார்களின் தொடர்வினைக்குள் குதித்துள்ள உங்களை கண்டு பெரும் கோபம் தான் வருகிறது. இதன் மூலம் நீங்கள் தலித்துக்களுக்கு எதிராக பெரும் சாதிமானாக நிற்கிறீர்கள். முன்பு பிராமணர் – பிராமணர் அல்லாதவர். அதுவே இன்று தலித் – தலித் அல்லாதவர் என்ற நிலை உருவாகி விட்டிருக்கிறது. என்ன செய்வது ? தன் முன் கூனிக்குறுகி நின்ற சமூகம், இன்று சாதிமார்களின் முன்பு வேட்டியை மடித்துக்கொண்டு கம்பீரமாக நின்றால் அவர்களுக்குக் கோபம் வரத்தானே செய்யும்?

கடைசியாக உங்களிடத்தில் ஒரு விஷயம். நீங்கள் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தைத் தராவிட்டால், உங்களிடம் பேசுவதற்கான எந்த முகாந்திரமும் எழுந்திருக்காது. படத்தைப் பார்த்துத் திட்டி விட்டு என் வேலையை பார்க்கச் சென்றுவிட்டிருப்பேன். தலித்துக்கு ஆதரவான படம் எடுத்த நீங்கள் , அடுத்த படத்திலேயே முற்றிலும் தலித்துக்கு எதிரான நிலை எடுத்திருப்பதுதான் மனதிற்குப் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. நீங்கள் சொல்லாம், இது எந்த வித உள்நோக்கமும் இல்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படம் என்று. அப்படிச்சொன்னால் எந்த வித சமுதாய அக்கறையுமில்லாமல் அரசியல் பிரக்ஞையற்று, அதை மக்களுக்குக் காட்சிப்படுத்தும் நீங்கள், படைப்பாளி என்று சொல்லிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பாம்பு பால் குடிக்கும் என்ற பொய்யான நம்பிக்கையை, பாம்பு பால் குடிக்குமா? குடிக்காதா? என்று எவ்வித ஆராச்சியும் செய்யாமல் பாம்பு பால் குடிக்கும் என்று தொடர்ந்து இன்று வரை மக்களுக்கு காட்டி வருபவர்கள் இருக்கும் வரை சினிமாவில் பாம்பு பால் தான் குடிக்கும். இதை மக்களுக்கு உங்களை போன்றோர் காட்டிப் பணம் பார்த்துக்கொண்டு தான் இருப்பீர்கள். சாதியினாலும், பெரும்பான்மை சமுகத்தினாலும் பாதிக்கப்படுபவன், சாதி பார்க்காதீர்கள் எங்களைத் தாழ்வாய் நினைக்காதீர்கள் என்று சொல்லி எந்த நன்மையும் விளையப்போவதில்லை. சாதியாளர்கள்தான் சாதியைத் துறக்க வேண்டும். இனி வரும் படைப்புகளில் மேற்கண்ட செய்திகளைப் பரிசீலனை செய்து உங்கள் படைப்புகளில் அதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதுவே எனது ஆசை. இந்தக் கடிதத்தின் சாரத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். உங்களின் அடுத்த படைப்பான அழகர் சாமியின் குதிரை பெரும் வெற்றி பெற வாழ்த்துகள். நன்றி.

நண்பர் ரஞ்சித்தின் மின்னஞ்சல் – paranjith.beema@gmail.com.

  Comments

34 Comments

  1. இப்படிதான் தாழ்த்த வேண்டும் என்று பொதுவாக யாரும் செய்வதில்லை ஒரு படைப்பாளிக்கு படைப்பு சுதந்திரம் வேண்டும். தற்செயலாக வைத்தே காட்சிகள் யாரையோ புண்படுத்தும் மாதிரி ஆகி விட்டது என்று நினைக்கிறேன்.

    Reply
  2. சிந்திக்க வைக்கும் கருத்து நண்பா !! நன்றி ரஞ்சித்

    Reply
  3. இந்த கடித்தத்தை பற்றி என்னச்சொல்ல…
    கவுண்டமணி, மற்றும் சில நகைச்சுவை நடிகர்கள் ஊனமுற்றவர்களையும், பெண்களையும் நகைச்சுவை என்ற பெயரில் இழிவுப்படுத்தி பேசிய படங்கள் வந்தபோது அவர்களுக்காக யாரும் கவலைப்படவில்லை.

    தமிழ்நாட்டில் இருக்கும் 6 கோடிபேரில் 90 சதவீதம் மக்கள் கருப்பு நிறம்தான். மாடுமேய்க்கவும், அடியாளாகவும் நடிக்க நல்லபளபளன்னு வெள்ளையாக இருக்கும் ஒருவர் முதலில் கிடைக்கவேண்டும். இதற்காக யாரும மெனக்கெடப்போவதில்லை.

    எந்த இயக்குனரும் வேண்டுமென்றே தலித்துகளை இழிவுப்படுத்தும் காட்சிகளையும், வசனங்களையும் வைப்பதாக தோன்றுவதில்லை. இழிவுப்படுத்த வேண்டுமென்றே திணிக்கப்படும் காட்சிகள் கண்டிக்கதக்கவை. மேற்சொன்ன படங்களில் அப்படி எதுவும் தோன்றுவதில்லை.

    இப்படியெல்லாம் குற்றம் பார்க்க ஆரம்பித்தால் அப்புறம் படங்களே வெளிவராது..

    Reply
  4. சுசீந்திரன் ஒரு டைரக்டர், அவரிடம் ஒரு template உள்ளது. அனைத்து டைரக்டர்களிடமும் ஒரு template இருக்குமே அதைப் போல (இப்படித் தான் வில்லன் இருக்க வேண்டும், இப்படித் தான் நடக்க வேண்டும், பேச வேண்டும், etc) ஆகையால் அவர் தெரிந்து தான் இந்தக் காட்சிகளை படத்தில் வைத்தார் என்று அறுதி இட்டுக் கூற முடியாது.

    சம்பந்தமே இல்லாமல் பல சமூகங்களை இங்கே இழுத்து இருக்கிறார் ரஞ்சித்.

    Reply
  5. ithu oru kurippitta samuthaayaththin kural. unmai irukkirathu.anaal inraiya soozalil thaan padam edukka mudiyum.ovvoru saathiyinarum ippadi pongi ezhunthaal vittalaachaarya,rama.naarayanan ponravarkalthaan padam edukka mudiyum.

    Reply
  6. ராஜ்,

    ரஞ்சித் என்ற தனிப்பட்ட நபரின் உணர்வுகளை என்னால் க்ரஹித்து கொள்ள முடிகின்றது. ரஞ்சித் என்ற தனி மனிதனின், உறைவிடம்,வாழ்வில் எதிர்கொண்ட மனிதர்கள், நிகழ்வுகள், அதன் மூலம் அவர் உலகையும் வாழ்வை பற்றியும் கொண்டுள்ள கண்ணோட்டத்தின் வெளிப்பாடுகளே இவை எனவும் அறிகிறேன்.

    பெங்களுரின் cosmoploitan lifestyle ல் கலந்தவராகவும், உலகப்படங்களின் ஊடே ஓரளவு பரந்து விரிந்த இவ்வுலகை பற்றி தெளிந்த பார்வை உள்ளவராகவும் உங்களை நான் கணித்தது என்னுடைய தவறோ எனும் கேள்வி என்னுள் எழ தான் செய்கிறது.

    ஒரு தனிப்பட்ட மனிதரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தர விழையுமுன் , கொஞ்சம் யோசித்திருக்கலாமே !

    Tamilnadu is one of the most urbanized states as of now- Urbanized societies generally dont find time to intervene in the individual preferences, priority on its individual.

    நாம் பார்க்கும் பார்வையில் உலகமும் வாழ்வும் மாறுபடுகிறது.

    As Einstein suggested DARKNESS IS THE MERE ABSENCE OF LIGHT.

    தற்போதைய காலகட்டத்தில் ( நான் கடந்த காலங்களை அசை போட விரும்பவில்லை) தனி மனித சுதந்திரம் அவ்வளவு மோசமாக உள்ளதாக நான் உணரவில்லை.( பெண்கள் இன்னும் சுதந்திரமாக உலவ முடியவில்லை தான் – விதிவிலக்கு, இது அனைதுலகுக்கும் பொருந்தும் )

    நாம் பார்க்கும் பார்வையிலே நம் உலகை காண்கிறோம்.

    plz dont give importance 2 crap thingz, I expect ( respect) your individual wishes, beliefs and posts in your blog.

    Reply
  7. I think that Ranjith is just paranoid. He is the one who is able to see all such unseen or even unthought things in the movie. He is the one who is able to see caste in vikram’s character in pithamagan. Only he can think that the villains in Nan Mahan alla are dalits, as he is so caste biased. And I blame all the dominant castes of our region for having driven him to such thinking.

    I am dark, grew up by studying in a Govt college and staying in a Govt hostel in Chennai. We never thought about such differences or discriminations – like Ranjit that only dalits will get their education from govt colleges. While this may still be true in the caste dominated places of tamilnadu, this does not apply at all in the city of Chennai.

    I think the movie was about some not so well cared (by their parents) youths who take life in their own way and get spoiled by drugs and violence.

    Reply
  8. thalaivarae ennatha ithu? did you find any racial discrimination anywhere in this movie?

    Ippadi ellama yosippanga? I was really surprised to read that someone is having such a thinking.. Pity him!

    Reply
  9. இது எல்லாவற்றையுமே மாற்றுசிந்தனையுடன் பார்க்கும் காலம்,இனி ஒரு சாரார் யாரையுமே நேரடியாகவோ,தெரிந்தோ தெரியாமலோ நோகடிக்கமுடியாது,இது போல தவறுகள் எதிர்காலத்தில் இயக்குனர்களால் களையப்படவேண்டும்,கறுப்பு தான் அழகு,திராவிடர் நிறம்,அதை தமிழர்கள் ஏனைய பேரே பரிகசிப்பது விந்தை,

    களவாணி கருப்பையா மிக உண்மையான உதாரணம்.ஐம்பது வயது கருப்பையாவை 30 வய்துகூட ஆகாத நாயகன் டேய் கருப்பையா என்பதும்,அண்ணன்கிட்ட நீ மறைக்கிறடா என்பதும் மிக உறுத்தலாக இருந்தது.

    Reply
  10. நான் மகான் அல்ல” திரைப்படத்தினை பற்றிய என்னது கருத்தை தங்களது வலைதளத்தில் வெளியிட்டமைக்கு நன்றி ராஜேஷ்.

    இப்படியெல்லாம் யோசிப்பாங்களா? ஏற்கனவே இருப்பதால் அதை அப்படியே பின்பரியிருக்கிறார் இயக்குனர்? ஒரு குறிப்பிட சமுதாயத்தின் குரல் ?இப்படியெல்லாம் கேட்டால் அப்புறம் எப்படித்தான் படம் எடுப்பது ?
    உங்களின் கேள்விகளின் நியாயம்(?) எனக்கு புரிகிறது ?

    இது எந்த வித உள்நோக்கமும் இல்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படம் . அப்படிச்சொன்னால் எந்த வித சமுதாய அக்கறையுமில்லாமல் அரசியல் பிரக்ஞையற்று, அதை மக்களுக்குக் காட்சிப்படுத்தும் நீங்கள், படைப்பாளி என்று சொல்லிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
    யாருக்கு வலிக்குதோ அவர் தான் வலிக்கு நிவாரணம் தேடுவார்.
    படம் யாருக்கு எடுக்கிறாய் ? உன் படம் யாருக்கு என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்? நம் சமுகத்தில் சினிமா நம் மக்களோடு ஏற்படுதிகொண்டிருக்கும் உறவு? கொஞ்சம் யோசிங்க தலைவா
    redwithanger said:
    நானும் தான் கருப்பு
    ..சத்தியமா சொல்லுங்க நான் மகன் அல்ல படத்தில் ஒரு காட்சியில் ..கார்த்திக் தன் தோழியின் திருமணத்தில் புகைப்படம் எடுக்கும் போது கருப்பான தன் நண்பனை தன் அருகில் வரவைத்து நின்று புகைப்படம் எடுப்பார். .. தியேட்டரே சிரிச்சது..நீங்க ?
    படம் சென்னை பற்றிய படம் தலைவா..அவர் காட்டுவது அரசு (நந்தனம்) கலை கல்லுரியைதான் ..கொஞ்சம் பேசிப்பாருங்க பசங்ககிட்ட ?
    அங்க யாரு அதிகமா படிக்கறதுன்னு?


    p.ranjith

    Reply
  11. கருப்பாக இருப்பவர்களை கிண்டல் செய்வதை தவறு என்று கூறிய கருத்தை தவிர உங்களின் மற்ற கருத்துக்களை என்னால் ஏற்க முடியாது. நாயகனை நல்லவனாக காட்டினால் உங்களுக்கு பிடிக்கவில்லை. பணம் வசூலிக்கச் செல்லும்போது தலித் சமூகத்திடம் காட்டும் கரிசனம் கண்டு கொதிக்கிறீர்கள். வில்லன் கொலை, கற்பழிப்பு செய்தாலும் அதுவும் உங்களுக்கு பிடிக்கவில்லை. நாயகன் நல்லவனாக இருக்க கூடாது. வில்லன் கெட்டவனாக இருக்க கூடாது என்றல் என்னதான் செய்வது. நீங்களே எப்படி ‘நான் மகான் அல்ல’ நாயகன் பிற்படுத்த பட்டோர் பிரிவை சேர்த்தவன் இல்லை, உயர் சாதி குடியில் பிறந்தவன் என முடிவு செய்யலாம். கருப்பாக இருபவர்களை காட்டினால் தலித் மக்களை தான் குறிக்கிறார்கள் என்ற எண்ணத்தை நீங்கள் விட வேண்டும். எத்தனையோ திரைபடத்தில் வில்லன்களை மாநிறத்திலும், கலராகவும், மாட மாளிகையில் வாழ்பவர் போலவும் காட்டி இருகிறார்கள். சேரி யை காட்டும் போது மட்டும் கோபம் ஏன். நீங்கள் கூறிய ‘நீக்ரோ’ வார்த்தை பற்றிய கருத்து மிக மிக சரி. அதற்கு எனது ஆயிரம் பாராட்டுக்கள். “சாதியையும் மதமும் மனிதனுக்கு சுமை. அதை இறக்கி வைத்தால் தான் வேகமாக நடக்க முடியும்” என்று வசனம் வைத்த சுசீந்திரன் நிச்சயம் சமுக அக்கறை உள்ளவர் தான்.

    Reply
  12. //.சத்தியமா சொல்லுங்க நான் மகன் அல்ல படத்தில் ஒரு காட்சியில் ..கார்த்திக் தன் தோழியின் திருமணத்தில் புகைப்படம் எடுக்கும் போது கருப்பான தன் நண்பனை தன் அருகில் வரவைத்து நின்று புகைப்படம் எடுப்பார். .. தியேட்டரே சிரிச்சது..நீங்க ?
    படம் சென்னை பற்றிய படம் தலைவா..அவர் காட்டுவது அரசு (நந்தனம்) கலை கல்லுரியைதான் ..கொஞ்சம் பேசிப்பாருங்க பசங்ககிட்ட ?
    அங்க யாரு அதிகமா படிக்கறதுன்னு?//

    எனக்கு அந்தக் காட்சி நினைவு வரல. இதுக்கு எதுக்கு சத்தியம்? அப்படி சிரிச்சுட்டு உங்ககிட்ட வந்து பொய் சொல்லிடுவோம்னா?

    ஆனா, அங்கவ சங்கவன்னு சிவாஜில செய்த கிண்டல் உறுத்தலா தான் இருந்தது. அவங்களையும் தலித்துன்னு தான் சொல்லுவீங்களா? கருப்பா இருந்தா தலித்துன்னு என்ன கருத்து இது? வெயில் நாட்டுல வெளியில சுத்தித் திரியற எவனுமே கருப்பாத் தான் இருப்பான்.

    நந்தனம் கலைக் கல்லூரியில நான் படிக்கல. என் கல்லூரி நண்பர்கள் கூட்டத்துல ஆதிக்க சாதி அடக்கப்பட்ட சாதி ரெண்டும் உண்டு. என்ன, நாங்க யாரையும் யாரு என்னன்னு பிரிச்சுப் பாத்ததில்ல.

    சாதிவடு ஆழமா பதிஞ்சு இருக்கு உங்க மனசுல. அதான் பார்க்கறவங்க எல்லாரையும் பிரிச்சுப் பார்க்கத் தோணுது. அந்த வடு ஏற்படக் காரணம், சமூகத்துல இருக்கற சாதீய ஏற்றதாழ்வுகளே.

    Reply
  13. ரஞ்சித் கருத்தை முழுமையாக அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.கருப்பாக இருப்பது இழிவு என்று காலகாலமாக ஒரு பொதுபுத்தியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் வெள்ளையர்கள்.சாதியையே இன்னும் ஒழிக்க முடியவில்லை.அதற்க்குப்பின்தான் இது மாதிரி பொதுபுத்திகள் ஒழியும்.நந்தனம் கலைக்கல்லூரியில் படித்த உரிமையில் சொல்கிறேன் பிராமணர்களும் படிக்கிறார்கள்.

    Reply
  14. எதிலும் ஒரு பிழை காணும் மனநிலைதான் இந்தக் கட்டுறையில் தெரிகிறது. உதாரணம்,
    //உலக நாயகன் கமல்ஹாசனுக்கு தசாவதாரத்தில் தலித்தை அழகில்லாமல் கோணல் முகத்தோடு கருப்பாய்க் காட்டுவதற்கும்//
    உங்களையும் என்னையும் ஒரு வெள்ளைக்காரனைப்போல படத்தில் காட்டினால் உங்களுக்கு சிரிப்பு வராது? பூவராகனின் அருமையான பாத்திரப் படைப்பை பாராமல், அவரை கருப்பாக காட்டிவிட்டதை பற்றி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தால், உங்கள் கேள்விகளுக்கு பதிலே இல்லை.
    தலித் என்பது பற்றிய தாழ்வு மனப்பான்மை(பட்லர் ஆங்கில/டை கட்டிய மேதாவிகளைப் பார்த்து நமக்கு வருவதைப்போல்) நம்மிடமிருந்து விலகாதவரை, ஒரு தலித்தை கடவுளாக படத்தில் காட்டினாலும் ”அந்தக் கடவுளுக்கு அலங்காரம் குறைவாக இருப்பதற்கு காரணம் அவர் தலித் கடவுள்” என்று சொல்லிக்கொண்டிருப்போம்.

    Reply
  15. ரஞ்சித மிக தெளிவாக, ஆணித்தரமான கருத்துகளை சொல்லி இருக்கிறீர்கள்.வாழ்த்துகள். மேலும் எனது விரிவான பின்னூட்டத்தை நாளை இடுகிறேன்.

    Reply
  16. i don’t find any justice behind the letter. I think he is taking things too complicated for himself.

    Reply
  17. //முஸ்லிம் மதத்தை சார்ந்தவரைக் கண்டாலே நம்மில் நிறைய பேருக்கு அவர்கள் தீவிரவாதியாக இருந்தாலும் இருப்பர் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்து விடுகிறது. அம்மாதிரியான எண்ணங்களை நமக்கு ஏற்படுத்துபவைகள், இந்த நாசமாய்ப்போன ஊடகங்கள் தான். எதற்கெடுத்தாலும் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று கொட்டை எழுத்தில் போட்டு, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தினரையே கேள்விக்குள்ளாக்கி, படிக்கும் மக்களை மிகச் சாதாரணமாகவே நம் சகோதரர்களை நோக்கி அது மாதிரியான பார்வைக்கு ஊடகங்கள் அழைத்துச் செல்கின்றன. அது போல் நீங்களும் தங்களது படைப்பில் முஸ்லிம் இளைஞனையும் விட்டு வைக்கவில்லை.

    ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் தீவிரவாதிகளாக சித்தரித்த ஊடகத்தின் போலி முகத்திரை,கயவாளித்தனதை பற்றி சரியாக சொன்னீர்கள்.

    Reply
  18. Nothing to comment, just his opinion only. Every Individual has their own opinion not subject to any discussion.
    Ex. Zulfi talking about his? part only everybody like that only.

    Reply
  19. nanbarin karuthu … azhnthu yosikka vendiathu…

    Reply
  20. சாதிவடு ஆழமா பதிஞ்சு இருக்கு உங்க மனசுல. அதான் பார்க்கறவங்க எல்லாரையும் பிரிச்சுப் பார்க்கத் தோணுது. அந்த வடு ஏற்படக் காரணம், சமூகத்துல இருக்கற சாதீய ஏற்றதாழ்வுகளே.இப்படியெல்லாம் குற்றம் பார்க்க ஆரம்பித்தால் அப்புறம் படங்களே வெளிவராது..

    Reply
  21. ரஞ்சித் உங்க வேதனையில் உண்மை இருக்கிறது .மாற்று சிந்தனை அவசியம்

    Reply
  22. பேஸ்புக் அக்கௌன்ட் இல்லாத நாங்கெல்லாம் என்ன தல பண்றது.. 🙂

    Reply
  23. காப்பி யடிப்பதை நிறுத்தமுடியாத கமல்

    இதுவே மன்மதன் அம்புவின் மூலம் நண்பா

    அதில் கணவன் ,இதில் வருங்கால கணவன் மாதவன் கேரக்டர்
    http://www.imdb.com/title/tt0040745/
    http://en.wikipedia.org/wiki/Romance_on_the_High_Seas

    Reply
  24. Perception differs நான் சில நேரங்கள்ல சொல்வதுண்டு ஆனா இப்படியெல்லாம் பார்பாங்கலன்னு நானே என்னை கேட்டுகிறேன். எப்படிங்க…
    நிறம், ஜாதி இதுல்லாம் நேத்து மழைல இன்னைக்கு முளைச்ச காளான் இல்லைங்க. உங்க கடிதத்தில் இருந்த கோவம் மொத்தமும் இயக்குனர்கள் மேல தான் இருக்கு… உங்களோட கோவம் இந்த சமுதாயுத்து மேல இருக்கனுங்க . தவற எடுத்துக்க வேணாம். ஒருவேளை நீங்க பார்த்தது, அனுபவபட்டது அல்லது உங்க அறிவுக்கு எட்டினது எனக்கு எட்டல. தவற இருந்தா மன்னிக்கணும்

    Reply
  25. இந்தக் கடிதம், ஒரு நண்பரால் எனக்கு அனுப்பப்பட்டது. அவரோட கருத்தைத்தான் இதுல எழுதிருக்காரு. அது நியாயம்னு எனக்கும் பட்டது. அதான். அட நீங்க எந்தக் கருத்தா இருந்தாலும் இங்க போடலாம் பாஸ். இது ஒரு விவாதம் தானே

    Reply
  26. விவாதம்னு ஆரம்பிச்சு அப்பறம் அது வாதம் ஆயிட கூடாது பாருங்க. நம்ப பாட்டுக்கு கறுத்த பரிமாரோம்னு யாரையும் காய படுதிடக்குடாது பாருங்க…

    Reply
  27. எனக்கு ரொம்ப நாளா director ஆகனும்னு ஆசை… இவங்க சொல்றது, விமர்சிக்கிறதுலா பாத்தா… எந்த மாறி கதை பண்ரது னு கொழப்பமும் பயமும் வந்துடுச்சு…

    Reply
  28. பெருபான்மையான ரௌடிஸ் எல்லாம் தலித் தான்.. குற்றம் சொல்லும் முன் நண்பர் தலித் மக்களை ரவுடி தொழிலில் இருந்து விடுவிக்க முடியுமா.. இல்லை அவர்கள் செய்யவில்லை என்று நிருபிக்க முடியுமா.. பெருபான்மையான ரௌடிகள் தலித்கள் தான்… உள்ளதை தான் படம் எடுத்து உள்ளார்… இதை ஜாதி வெறியில் சொல்லவில்லை உண்மை கண்ணில் காண்பதை சொல்லுகிறேன்…

    Reply
  29. LMGR

    most of director dont think about low class and high class , I requested to Ranjith y your mind thinking about all low class people living in only slum places. No in the living another caste people in slum ????.kindly thinking about how convey next generation without caste. After digital world again started caste issue one of reason few directors forgot issues again remembering to this world.i know your taking good responsibility and helping society from getting money from this film industry . i am not interested to use any caste name , here only two people .if you have money your big man no money ——–?

    Reply

Join the conversation