Naked Gun 33 1/3: The final Insult (1994) – English

by Karundhel Rajesh December 11, 2009   Comedy

நம்ம ஊரில், பயங்கரக் கஷ்டப்பட்டு ஒரு நல்ல படம் எடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதுவும் நன்றாக ஓடிவிட்டது. திடீரென்று, அடுத்த வருடமே, டமாலென்று ஒரு மொக்கப் படத்தை எடுத்து, இந்த நல்ல படத்தை அதில் பயங்கரமாகக் கிண்டலடித்து, அந்தப் படமும் சூப்பராக ஓடினால், எப்படி இருக்கும்?

ஹாலிவுட்டில் இப்படி ‘ஹிட்’ படங்களைக் கிண்டலடிப்பது ரொம்ப ஜாஸ்தி. ஸ்காரி மூவி ஸீரீஸ் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், அதெற்கெல்லாம் முந்தியே, இந்த மாதிரி காமெடிப்படங்களை எடுப்பது என்றால், அதில் தவறாமல் இடம்பெறும் ஒரு நடிகர் உண்டு. அவர் முழியாங்கண்ணைத் திரையில் பார்த்தாலேயே, விழுந்து புரண்டு சிரிப்பு வந்துவிடும். அவரை வைத்து, பல படங்களைக் கிண்டல் அடித்திருக்கிறார்கள். அவருக்கும், அது மிகப்பிடித்த ஒரு விஷயம். ஹாலிவுட்டின் கிண்டல் மன்னன் என்றே இவருக்கு ஒரு பட்டப்பெயர் வைக்கலாம்.

அவர்தான் ‘லெஸ்லி நீல்ஸன்’.

பல வருடங்களாக, இவருக்கு இது தான் வேலையே. ஜேம்ஸ் பாண்ட் படங்களைக் கிண்டல் செய்து, ‘Spy Hard’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். டிராகுலா படத்தைக் கிண்டல் செய்து, ‘Dracula: Dead and loving it’ (இயக்கம்: மெல் ப்ரூக்ஸ்) படத்தில் நடித்திருக்கிறார். இத்தனைக்கும், மனிதர் அப்படங்களில் நடிக்கும்போது, அவருக்கு வயது எழுபது!

1988 இல், ‘Naked Gun: From the files of Police Squad’ என்ற படத்தில் ஆரம்பித்த இந்த நக்கல் மழை, அதன் இரண்டாம் பாகமான ‘Naked Gun 2 1/2: The Smell of Fear’ படத்தில் தொடர்ந்து, உச்சகட்டமாக, ‘Naked Gun 33 1/3: The Final Insult’ என்ற மூன்றாம் பாகத்தில் முடிந்தது. இந்த மூன்றாம் பாகத்தைப் பற்றித்தான் இந்த விமர்சனம்.

இப்படங்களின் கதை என்னவென்றால், லெஃப்டினண்ட் ஃப்ராங்க் ட்ரெபின் – நம்ம லெஸ்லி நீல்ஸன் – ஒரு பயங்கரத் துடிப்பான, கடமைதவறாத, கண்ணியமிக்க ஒரு போலிஸ் அதிகாரி. அவர் செய்யும் சாகசங்கள் எப்படிப்பட்டன என்பதுதான். அவருடன் அவரது மேலதிகாரி, அவரது போலிஸ் நண்பர், அவர் மனைவி, ஒரு வில்லன் ஆகியவர்கள் வருவார்கள். இந்தக்கூட்டணி செய்யும் அதிரடி (??!) சாகசங்களே இப்படங்கள்.

இந்த மூன்றாம் பாகத்தில், நம்ம ஹீரோ ட்ரெபின், கல்யாணம் பண்ணிக்கொண்டு, ரிடயர் ஆகிவிடுகிறார். ஆனால், ஒரு அதிபயங்கர வில்லன், ஊருக்குள் எங்கோ குண்டு வைக்கப்போவதாக ஒரு தகவல் போலீசுக்குக் கிடைக்கிறது. உடனே, ரிடயர் ஆகி வாழ்க்கையை எஞ்சாய் பண்ணிக்கொண்டு இருக்கும் டிரெபினை, அரும்பாடுபட்டு மீண்டும் வேலைக்கு அழைத்து வருகிறார்கள். அவர் எத்தகைய சேஷ்டைகளை எல்லாம் செய்து அந்த முயற்சியைத் தடுக்கிறார் என்பதே இப்படம்.

உண்மையைச் சொல்கிறேன்: இந்தப்படத்தைப் பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்ததைப் போல், மற்ற படங்களைப் பார்த்து சிரித்தது கம்மி என்று தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு காட்சியிலும் விலா நோக வைக்கும் காமெடி. அதிலும், சூப்பர் ஹிட்டுகளான ‘தெல்மா அண்ட் லூயி’, ‘ஷஷாங்க் ரிடம்ப்ஷன்’, ‘த கிரேட் எஸ்கேப்’ ஆகிய படங்களை, ஓட்டு ஓட்டென்று ஓட்டியிருப்பார்கள் (முதல் காட்சியிலேயே, அண்டச்சபிள்ஸ் படத்தை, மகா நக்கல் அடித்திருப்பார்கள்). இவர் திருதிருவென்று முழித்துக்கொண்டு, பண்ணும் விஷயங்கள், நம்மை உண்டு இல்லை என்று ஆக்கிவிடும்.

வில்லன் குண்டுவைக்க முடிவு செய்வது, அந்த வருட ஆஸ்கார் விழாவில். எப்படியோ உள்ளே சென்றுவிடும் ட்ரெபின், அந்த விழாவை ஒரு கலக்கு கலக்குவது, கடைசி அரைமணி நேரத்துக்கு நம் வயிறுகளைப் பதம் பார்த்து விடும். ஒவ்வொரு முறை விருதுகளை அறிவிக்க யாராவது வந்து, கவரைக் கையில் எடுக்கும்போது, எப்படியோ பாய்ந்து வந்து அதைப் பிடுங்கி, திறக்கவிடாமல் (ஏதோ ஒரு கவரில் தான் பாம் இருக்கிறது) அவர் செய்வது ஒரு சாம்பிள். கன்னாபின்னாவென்று ஸ்டெப் வைத்து சண்டை வேறு போடுவார் இந்த நீல்ஸன். ஒரு சிறிய சாம்பிள் காட்சி இங்கே.

இப்படம், இந்தியாவில் HBO வந்த புதிதில், பலமுறை திரையிடப்பட்டது பல பேருக்கு நினைவிருக்கலாம் (நானும் அப்போ தான் மொதல்ல பார்த்தெனுங்க்ணா).

மொத்தத்தில், லாஜிக்கே இல்லாமல், நன்றாக சிரிக்கவேண்டும் என்று விரும்பினால், இந்த மூன்று படங்களையும் பார்க்கலாம்.

இதோ: இப்படத்தின் ட்ரைலர் இங்கே.

  Comments

14 Comments

  1. ஹா.. ஹா.. ஹா..! 🙂 🙂

    ட்ராஃப்ட் போய்.. இப்ப போனுக்கு வந்துடுச்சா..?? 🙂

    நேத்து நானும்.. ‘தமிழ் மசாலா’ பிரேம்ஜியும்… லெஸ்லி பத்தியும்… ஸ்பூஃப் படங்கள் பத்தியும்…, SPY HARD பத்தியும்..எல்லாம். ஒரு 10 நிமிஷம் பேசிகிட்டு இருந்தோம்.

    நீங்க இன்னைக்கு பதிவே போட்டுட்டீங்க!!!!! நம்ம ரெண்டு பேருக்கும் ‘சிம்பதி வேப்’ வொர்க் ஆகுதுன்னு நினைக்கிறேன்.

    போன பின்னூட்டத்தை.. ஜோக்கா தானே சொல்லியிருந்தேன்? சீரியஸா எடுத்துகிட்டீங்களா?

    Reply
  2. தேளும் பாலும்(பாலா) சேந்து பதிவு போட போட வலை உலகிற்கு மகிழ்ச்சியே.

    Reply
  3. //டிராகுலா படத்தைக் கிண்டல் செய்து, ‘Dracula: Dead and loving it’ (இயக்கம்: மெல் ப்ரூக்ஸ்) படத்தில் நடித்திருக்கிறார்.//

    இந்த மெல் ப்ரூக்ஸ்-ங்கறவரு கிண்டல் படங்கள் எடுப்பதில் லெஸ்லி நில்ஸனுக்கெல்லாம் தாத்தா! அவர் STAR WARS-ஐ கிண்டலடித்து எடுத்த படமான SPACEBALLS-க்கு STAR WARS-ஐ உருவாக்கிய ஜார்ஜ் லூகஸும் ஒரு பெரிய ரசிகர்!

    அவரது SILENT MOVIE கிண்டல் படங்களில் ஒரு காவியம்! பழைய ஊமைப் படங்களை நக்கலடித்து எடுக்கப்பட்ட படம்! அதிலும் ஆரம்ப 5 நிமிடங்கள் படம் உண்மையிலேயே சைலண்டாக பிண்ணனி இசை கூட இல்லாமல் இருப்பது அற்புதம்!

    மேலும் ஹிட்ச்காக்கை கிண்டலடித்த HIGH ANXIETY, கெள-பாய் படங்களை கிண்டலடித்்த BLAZING SADDLES, சரித்திர படங்களைக் கிண்டலடித்த HISTORY OF THE WORLD – PART I, ஷேக்ஸ்பியரை கிண்டலடித்த TO BE OR NOT TO BE என இவர் இயக்கிய அற்புத கிண்டல் படங்களின் பட்டியல் ஏராளம்!

    அதிலும் பல படங்களில் இவரே நடித்திருப்பதும் சிறப்பு! வாய்ப்பு கிடைத்தால் இவரது படங்களையும் பார்த்து அதையும் விமர்சிக்கவும்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    Reply
  4. Mel Brooks – ஸ்பூஃப் படங்களின் காமெடி உச்ச பிதாமகன். History of the World எப்பவும் என் ஃபேவரைட். பாலாகிட்ட சொல்லியிருந்தேன். ஸ்பூஃப் படங்களைப் பத்தி எழுதுங்கன்னு நீங்க ஆரம்பிச்சு வச்சுட்டீங்க..

    Robin Hood – Men in tights பாத்தாச்சா தல.. 🙂

    Reply
  5. முதலிரண்டு பாகங்களுடன் ஒப்பிடும்போது மூன்றாம் பாகத்தில் இறுதிக்காட்சியைத் தவிர அடித்துப்பிடித்து சிரிப்பை வரவழைத்த காட்சி ஏதும் எனக்கு இல்லை.

    முதல் காட்சியில் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் திருடன் திருடிக்கொண்டு போவதை பணியாள் பார்த்தீர்களா என்று கேட்க, லெஸ்லி கேசுவலாக விலை குறைந்து விட்ட போஸ்டரை பார்த்து விட்டு ஓ.. தேங்க்ஸ் சொல்லி பெருமூச்சு விடும் காட்சி.. உண்மையில் முட்டைக்கண்ணன் முட்டைக்கண்ணன் தான் 🙂

    Reply
  6. கடைசி படம் அருமை.. நான் போட்டோவ சொன்னேன்…

    Reply
  7. க க அவர்களுக்கு

    shesi கூறியது போல மூன்றாவது பாகும்
    சற்றே டொங்கள் போல் இருக்கு…..

    மற்ற படி இந்த நய்யாண்டி / கேலி வகை
    திரைப்படங்களை ச்பூப்- spoofs என்பர்கல்தானே
    நீங்கள் scary movie series என்று குரிபிடிருப்பது
    சரியா என்று புரமண்டையில் உரைக்க சொல்லுங்கள்

    Reply
  8. பின்னூட்டம் போட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி – சென்னைக்கு, நம்ம சாரு புத்தக வெளியீட்டு விழாக்கு போனதுனால, இன்னிக்கி தான் பதில் குடுக்க முடிஞ்சுது.. தாமதத்துக்கு மன்னிக்கவும்.

    @ உதயன் – இந்த மூன்று படங்களுமே காமெடிக்குப் ப ஞ்சம் இல்லாத படங்கள் தான் 🙂

    @ பாலா – 🙂 🙂 இது கண்டிப்பா ஒரு ‘லப் டப்’ பதி தான் . . 🙂 இது ரொம்ப நல்லா இருக்கே ! 🙂 அப்பறம், போன பின்னூட்டத்த நான் ரொம்ப சீரியஸா எடுத்துக்கல.. ஆனா, இவரு எழுதப்போரத நாம எழுதிட்டமேனு கொஞ்சம் வருத்தமா இருந்துச்சி . .:)

    @ நன்றி அண்ணாமலை . . 🙂

    @ டாக்டர் செவன் – வணக்கண்ணா – நீங்க சொன்ன லிஸ்ட்ல நெறைய படம் இன்னும் பாக்காம இருக்கு . .கண்டிப்பா பாத்துரலாங்ண்ணா . .மேல் ப்ரூக்ஸ் படம் கொஞ்சம் கம்மியா தான் பாத்துருக்கேன் . . உங்க தகவலுக்கு மிக்க நன்றி . .

    @ சென்ஷி – ராபின் ஹூட் – மென் இன் டைட்ஸ் – பார்த்தாச்சு . .:) படு நக்கலான படம் . . 🙂 எனக்கு எப்புடின்னா, முதல் இரண்டு படத்த விட, இந்த படம் தான் ரொம்ப காமெடியா இருந்தமாதிரி இருந்திச்சி 🙂 . . அதுக்கு காரணம் என்னன்னா, சமீபத்துல இத மறுபடி பார்த்தப்ப, பல ரவுண்டு சரக்கு உள்ளே இருந்திச்சி 🙂 . . ஒருவேளை அந்த பாதிப்பா கூட இருக்கலாம். . 🙂

    @ இல்யுமிநாட்டி – கண்டிப்பா உங்க லிங்க பார்க்கறேன் . . நன்றி . .

    @ ஸ்ரீநி – அது spoof தான் . . ஆனா, ஒரு உதாரணத்துக்கு தான் scary movie series னு சொன்னேன். . . 🙂

    Reply
  9. KA KA..

    Nandri . .
    PAA pathi naan oru post pottu irukkaen
    Unga comments yennannu sollunga ( thirai vimarsanam illai ,, idhu oru vishyamaana alasal ) nanae sollika vendidhaan

    Reply
  10. This comment has been removed by the author.

    Reply

Join the conversation