நந்தலாலா – மூலமும் நகலும்

by Karundhel Rajesh December 2, 2010   Copies

பொதுவாகவே, வேற்றுமொழிப் படம் ஒன்றைத் தமிழில் உருமாற்றம் செய்யும்போது, அந்த உருமாற்றம், சகிக்க முடியாமல்தான் இருக்கும். இதனாலேயே, அந்த மூலப்படத்தின் மீது மரியாதை இன்னமும் அதிகம் ஆகும். காரணம் மிக எளிது. தமிழ்த் திரைப்படங்களின் டெம்ப்ளேட் அமைப்புக்கு உள்ளாகும்போது, எந்தப் படமுமே அதன் அசல் தன்மையை இழந்துவிடும். பாட்டு, சண்டை, காமெடி ஆகிய மசாலா ஐட்டங்களின் சேர்க்கையால், சொல்லவந்த கதை எங்கோ மறைந்துவிட, ஒரு அந்நியமான கதையே கடைசியில் பார்வையாளனுக்குக் கிடைக்கும். இதற்கு, அயன் படத்தை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். Maria Full of Grace படத்தின் பல காட்சிகள் இப்படத்தில் சுடப்பட்டு, கதை அந்தரத்தில் தொங்குவதைக் காணமுடியும்.

தமிழ்ப்படம் என்றால், அது மசாலாவாக – எல்லாம் கலந்த கலவையாக இருந்தால் மட்டுமே கல்லா கட்ட முடியும் என்ற ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் விளைந்த அனர்த்தங்கள் பல. இவையெல்லாவற்றையும் மீறி, அவ்வப்போது அங்காடித்தெரு போன்ற படங்களும் வரத்தான் செய்கின்றன.

பழம் தின்று கொட்டை போட்ட நபர்கள் தமிழ்த்திரையுலகில் உண்டு. ஆனால், அவர்களும், அரைத்த மாவையே அரைப்பதை சகித்துக் கொண்டே நாம் இதுவரை திரைப்படங்களைப் பார்த்து வந்துள்ளோம். இந்நிலையில், புதிய இயக்குநர்கள் யாரேனும் வந்து, இந்தச் சாபத்திலிருந்து நம்மை விடுவிப்பார்களா என்று நல்ல திரைப்படங்களின் ரசிகர்கள் நினைப்பதும் உண்டல்லவா.

உலகத் திரைப்பட அரங்கில், தமிழ்ப்படம் ஒன்று சிறந்து விளங்குவது எப்போது நடக்கும் என்று என்னைக் கேட்டால், அப்படி ஒரு படத்தை எடுக்க, ரசனைமிக்க ஒரு இயக்குநரால் மட்டுமே முடியும் என்று சொல்வேன். ரசனை என்பது, நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையை அவதானிப்பதில் மட்டுமன்றி, தரமான இலக்கிய நாட்டம், உலக சினிமாக்களின் கவனிப்பு ஆகிய பல விஷயங்களில் அடங்கியிருக்கிறது. முக்கியமாக, புதிய விஷயங்களைத் தேடித்தேடிப் படிக்கும் தாகம் உடைய ஒரு இயக்குநராலேயே அது நடக்கும்.

இவ்வளவு பெரிய பீடிகை இல்லாமல், நந்தலாலாவைப் பற்றி எழுத இயலாது.

நந்தலாலாவில் நாம் பார்க்கும் விஷயங்கள் பல. ஒரு மனநோய் விடுதி, அவற்றில் அடைத்துவைக்கப்பட்டுள்ள பரிதாபத்திற்குறிய ஜீவன்கள், தனிமை உணர்வில் தாயைத் தேடும் ஒரு சிறுவன், அந்த விடுதியில் இருந்தே தப்பித்து, தனது தாயைக் கோபத்துடன் தேடும் ஒரு ஆள், ஒரு பாலியல் தொழிலாளி, மனதில் ஈரம் மிகுந்த சில மனிதர்கள் ஆகிய பலவற்றையும் ஒரு கலவையாக நாம் பார்க்க நேர்கிறது. இவர்களைக் கதைக்களனாகக் கொண்டு, படம் நகர்கிறது.

படத்தில் சொல்லப்படும் Allegorical விஷயங்கள் பல. மலைப்பாம்பு, கூழாங்கற்கள், பூச்சிகள், மலர்கள், ஆகாயம், கால்கள் இன்னபிற விஷயங்கள் நிறைய உண்டு. சில தரமான உலகப்படங்களில் இவைபோன்ற உவமைகளைப் பார்த்திருக்கிறேன். முக்கியமாக, கிம் கி டுக்கின் படங்களில். அதுபோலவே, படத்தின் சில காட்சிகளும், உலகப் படங்களின் தரத்தை மையமாக வைத்துக்கொண்டே இப்படத்திலும் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது.

மனநோய் விடுதியில் பல வருடங்களைக் கழிக்க நேரும் ஒரு மனிதன், முதன்முறையாக வெளியுலகத்தை அனுபவிக்கையில், அவனது எதிர்வினை எப்படி இருக்கும்? பார்க்கும் விஷயங்களிலெல்லாம் ஒரு ஜாக்கிரதையான அணுகுமுறை; புதிய மனிதர்களிடம் ஒரு ஒதுக்கமும் பயமும்; அதே சமயம், தனது மனதில் இருக்கும் விஷயத்தை அடைவதில் இருக்கும் பிடிவாதம்; ஒரு மனிதனை நம்பிவிட்டால், அவனது அருகாமை தரும் பாதுகாப்பு உணர்வினை அனுபவித்தல், நினைத்ததை எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்யும் குழந்தைத்தனம் இத்யாதி.. இவைகளை பாஸ்கர் மணி என்ற அந்த மனிதனைக் கவனிப்பதில் நாம் புரிந்துகொள்கிறோம். அந்தவகையில், அந்தக் கதாபாத்திரம் எங்களைக் கவர்ந்தது.

ஒரு சிறுவன், தனது வீட்டை விட்டு வெளியே வந்து, நெடும்பயணம் மேற்கொள்கையில், உலக அனுபவம் என்பதைத் தொலைக்காட்சியில் மட்டுமே அதுவரை பார்க்க நேர்ந்த அவனது எதிர்வினை எப்படி இருக்கும்? துடுக்குத்தனம், புதிய மனிதர்களிடம் முதலில் பயம், தனது மனதிற்குள் இருக்கும் பிடிவாதத்தை, நயமாக வெளிப்படுத்தி, மற்றவர்களைத் தனக்கு உதவுமாறு செய்யும் சாமர்த்தியம், தனக்குப் பிடித்த மனிதர்களிடம் தனக்குக் கிடைக்கும் பாதுகாப்பு உணர்வு இன்னபிற. இவைகளை அந்தச் சிறுவன் அகியிடம் காண முடிந்தது. அந்தச் சிறுவனும் சரி, அந்த மனிதனும் சரி.. கிட்டத்தட்ட ஒரே விதமான குணங்களின் கலவைகளாக இருப்பதையும் கண்டோம். இதனாலேயே, இருவருக்குமே ஒருவரையொருவர் பிடித்துப் போகிறது.

தங்களது தாய்களைத் தேடி இருவரும் மேற்கொள்ளும் பயணத்தில், இவர்களுக்கு நேரும் அனுபவங்கள், அழகாக சொல்லப்படுகின்றன. இவர்களுடன் கதையின் போக்கில் சேர்ந்துகொள்ளும் கதாபாத்திரங்களுமே, இயல்பாகவே உள்ளன.

தங்களுக்கு உதவிசெய்த பெண்ணுக்கு, இந்த பாஸ்கர்மணி தரும் பரிசு – அவசர அவசரமாகப் பக்கத்தில் இருக்கும் ஆற்றுக்கு ஓடி, அங்கேயிருந்து பொறுக்கிக் கொண்டுவந்த கூழாங்கற்கள். அவனது மனதில், உதவியவர்கள் மேல் எழும் பரிவு உணர்வினை, செயல்முறையில் காட்டும் அவனது இயல்பு இது. அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு நன்றி கூறுவது அவனுக்குத் தெரியாத செயல். ஆனால், அதே பாஸ்கர்மணி, படத்தின் இறுதியில், தனக்குக் கெடுதல் செய்ததாக அவன் நினைக்கும் ஒரு கதாபாத்திரத்துக்குக் கோபத்துடன் தர நினைக்கும் தண்டனை – கல்லால் அடிப்பது. இதற்குமே, அவன் ஆற்றங்கரையில் பொறுக்கிய அதே வேகத்தோடு கற்களைப் பொறுக்கிக் கையில் வைத்துக் கொள்கிறான்.

அதேபோல், சிறுவன் அகிலேஷ் என்ற அகி, முதலில் பாஸ்கர்மணியைக் கண்டவுடன், தப்பிக்கவே முயல்கிறான். அவனுடன் சிறுகச்சிறுகப் பழக நேர்ந்தபின்னரே, பாஸ்கர்மணியுடன் நெருக்கம் கொள்கிறான். பல சந்தர்ப்பங்களில் பாஸ்கர்மணிக்கு உதவவும் தலைப்படுகிறான். இவைகளும், நல்லமுறையில் காட்டப்படுகின்றன.

படத்தில் வரும் பாலியல் தொழிலாளி, வழக்கப்படி செண்டிமெண்டல் அழுகையோடு நம்மைச் சோதிப்பது போலன்றி, மிக இயல்பாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். தனது வாழ்க்கையைப் பற்றி அவள் பேசும் வசனங்கள், அதில் வரும் சில உவமைகளைத் தவிர்த்து (ஒட்டடை, நாத்தம் புடிச்ச பொம்பளைங்க), மிக இயல்பாக இருந்தன. ஏன் ‘சில வார்த்தைகளைத் தவிர்த்து’ என்று கூறினேன் என்றால், உணர்ச்சி வேகத்தில் பேசும் பாலியல் தொழிலாளி, அழகியல் வார்த்தைகளை இப்படியெல்லாம் புனைந்துகொண்டிருக்க மாட்டாளல்லவா? ஒரு வேகத்தில் பேசும் அவளது துடிப்பை, இந்த வார்த்தைகள் சற்றே மட்டுப்படுத்தியது போல் எங்களுக்குப் பட்டது. மற்றபடி, அந்தக் கதாபாத்திரம், படு இயல்பான சித்தரிப்பு.

இவர்களைத் தவிர, படத்தில் நமது மனதைத் தொடும் பல கதாபாத்திரங்கள் உண்டு. மிகச்சில நிமிடங்களே வந்து போனாலும், அவர்களை நினைக்கத்தூண்டும் வகையில் அவர்களது பாத்திரங்கள் உள்ளன. இளநீர்க்காரத் தாத்தா, பாலியல் தொழிலாளியை அடிக்கும் கிழவன் (இவனைப் பற்றிய சித்தரிப்பை, அந்தத் தொழிலாளி சொல்வதில் ஒரு சிறுகதை உண்டு), லாரி ஓட்டும் ஆள், அகியின் பாட்டி, இவர்களைப் பாதுகாப்பான வழியில் அழைத்துச் செல்லும் நபர், அந்த நபருக்கு வைத்தியம் செய்யும் பெண் மருத்துவர் ஆகிய பல மறக்கவியலாத கதாபாத்திரங்கள் படத்தில் உண்டு. இவர்கள் ஒவ்வொருவரும் வரும் காட்சிகள், எங்களுக்குப் பிடித்திருந்தது. குறிப்பாக, அந்த லாரி ஓட்டுநர், செய்த தவறுக்கு வருந்தும் காட்சிகள், சற்றே உணர்ச்சிவசப்பட வைத்தன.

இப்படத்தில், குறைகளும் உண்டு. முதல் குறை, படத்தின் வைட் ஆங்கிள் ஷாட்கள். தேவைக்கு மீறிய பல ஷாட்கள் வைக்கப்பட்டிருப்பதால், அவை வரும்போதெல்லாம், ‘ஆரம்ப்பிச்சிட்டாங்கய்யா’ என்றே நினைக்கத் தோன்றியது. பின், படத்தில் வரும் சில தேவையற்ற சித்தரிப்புகள். உதாரணத்துக்கு, காரில் வரும் குடிகார இளைஞர்கள். இது, தேவையே இல்லாத திணிப்பு. அதேபோல், நாசரின் கதாபாத்திரமும், இடைச்சொருகலாகவே இருப்பதால், நமதில் ஒட்ட மறுக்கிறது.

இன்னொரு குறை, இசை. படத்தின் இறுதியில், பாஸ்கர்மணி தனது தாயைப் பார்க்கும் தருணங்களிலெல்லாம் அருமையாக அமைக்கப்பட்டிருக்கும் இசை, இடையில், பாஸ்கர்மணியும் அகியும் மேற்கொள்ளும் பயணத்தில், காதலுக்கு மரியாதை படத்தின் பின்னணி இசையைக் கேட்டதுபோலவே தோன்றியது. அவ்வப்போது, சில சிதறல்களில் மனதைத் தொடும் இசை, இந்தக் ‘காதலுக்கு மரியாதை’ இசையைக் கேட்டவுடன், மனதில் இருந்து அகன்றுவிடுகிறது.

மொத்தத்தில், நான் பார்த்த தமிழ்ப்படங்களில், நல்ல படம் என்று யாரேனும் கேட்டால், தயங்காமல் நந்தலாலாவைச் சுட்டிக் காட்டுவேன். அதில் சந்தேகமேயில்லை.

ஆனால்…..

நல்ல படமாக நந்தலாலா இருப்பதனாலேயே, அதில் உள்ள பெரும் குற்றம் மறைந்துவிடாது அல்லவா?

கிகுஜிரோவையும் சில நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். அதில் இருந்து அப்படியப்படியே சுடப்பட்டுள்ள காட்சிகள் நந்தலாலாவில் நிறைய உள்ளன. மிஷ்கின் சொந்தமாக அமைத்துள்ள காட்சிகளைப் பார்த்து ஆனந்தப்படும்போதெல்லாம், கிகுஜிரோவின் சுடப்பட்ட காட்சிகள் திரையில் வந்து, அந்த ஆனந்தத்தை முற்றிலும் அகற்றிவிடுகின்றன. இப்படத்தின் மேல் எழும் ரம்மியமான உணர்வு, படம் முடிகையில் முற்றிலும் அழிந்துபோய்விடுவதற்குப் பெரும் காரணம் இதுதான்.

சென்ற பதிவில் பார்த்ததுபோல, என்னதான் ‘இன்ஸ்பிரேஷன்’, ‘கவரப்பட்டேன்’ என்றெல்லாம் மிஷ்கின் சொன்னாலும், அவர் செய்திருப்பது, கண்டிப்பாகத் தவறுதான். நந்தலாலாவைப் பாராட்டும் அதே சமயத்தில், மிஷ்கினின் இந்தத் திருட்டையும் நாம் கண்டித்தே ஆகவேண்டும்.

கிகுஜிரோவில் இருந்து சுடப்பட்டுள்ள காட்சிகளில், சில காட்சிகள் அப்படியே வருவதால், படத்தின் வேகத்தை மட்டுப்படுத்தும் காரணிகளாகவும் அவை இருக்கின்றன. இதற்கு உதாரணம், புல்லட்டில் வரும் அந்த இரண்டு நபர்கள். கிகுஜிரோவில், அந்த புல்லட் ஆசாமிகளுக்குத் தகுந்த காரணம் இருக்கிறது. அவர்கள் வந்தபின்னர், கதையை நகர்த்தும் பொறுப்பிலும் அவர்கள் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், நந்தலாலாவில் இது ஏதும் இல்லை. அவர்கள் , வெறுமனே வருகிறார்கள். அவ்வளவே.

சில காட்சிகள், தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணம், பாட்டியுடன் அகி கழிக்கும் அந்த ஆரம்ப நிமிடங்கள், அகியின் பணத்தைத் திருடும் திருடன் (கிகுஜிரோவில், சிறுவனிடம் பாலியல் பலாத்காரம் செய்யும் பாத்திரம் வரும்), அகியின் தாயாரை பாஸ்கர் மணி சந்திக்கும் காட்சிகள், தனது தாயாரை பாஸ்கர்மணி சந்திக்கும் காட்சி, நரிப்பல் காட்சி (இது கிகுஜிரோவில், ஏஞ்சல் பெல்லாக வருகிறது), லாரி டிரைவரிடம் ஹார்ன் திருடும் காட்சி (கிகுஜிரோவில், கல்லால் லாரிக்கண்ணாடியை உடைப்பான் கிகுஜிரோ), பாஸ்கர் மணியின் பெயர் நமக்கு முதன்முதலில் அறிமுகமாகும் இறுதி நிமிடங்கள் (கிகுஜிரோவிலும், அவனது பெயர், இறுதிக்காட்சியில் தான் நமக்குத் தெரியவரும்) ஆகிய சில உதாரணங்களைச் சொல்லலாம். பார்த்த உடனே சுடப்பட்டது புரிந்துவிடுவதால், மிஷ்கினையும், நம் மனம் உடனடியாக மணிரத்னம், கமல்ஹாஸன் ஆகிய நபர்களோடு ஒப்பிட ஆரம்பிக்கிறது (காப்பியடிப்பதில் இந்த இருவருக்கும் உள்ள திறமை நமக்குத் தெரிந்ததே).

திருடப்படாத, மிஷ்கினே சொந்தமாக வைத்துள்ள காட்சிகளே அருமையாக இருக்கையில், அவர் ஏன் இப்படிச் சுட வேண்டும்? சுடாமலேயே நல்ல படம் ஒன்றை நமக்குத் தந்திருக்க முடியும் இல்லையா?

அதேபோல், கிகுஜிரோவில் இருந்த தெளிந்த நீர் போன்ற அமைதியும் அறியாமையும் (innocence) நந்தலாலாவில் இல்லை. உதாரணம்: கிகுஜிரோவின் தாயாரை, மனநோய் விடுதியில் சென்று சந்திக்கும் காட்சி. ஒரே ஒரு நிமிடம் மட்டுமே அக்காட்சி படத்தில் இருக்கிறது. தாயாரைத் தூரத்தில் இருந்து பார்க்கும் கிகுஜிரோ, உடனேயே வெளியே வந்துவிடுகிறான். ஆர்ப்பாட்டமே இல்லாமல் – ஆனால் அதே சமயம் நமது நெஞ்சைத் தொடும் காட்சி இது. நந்தலாலாவிலோ, அழுது ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் ,இக்காட்சியின் ‘தமிழ்ப்படுத்தப்பட்ட’ வடிவம் நமக்குக் கிடைக்கிறது. ஒருவேளை ஒரு ஒரிஜினல் காட்சியாக இருக்கும்பட்சத்தில், நமக்கு இது பிடிக்கக்கூடும். ஆனால், கிகுஜிரோ ஏற்கெனவே நம் கண்ணுக்குத் தெரிவதால், இக்காட்சி படத்தில் சரியாக அமையவில்லை என்று தெரிகிறது.

கிகுஜிரோவில், தாயை வைத்துக்கொண்டு கிகுஜிரோ அல்லல்படுவதில்லை. தன்னுடன் வந்திருக்கும் சிறுவனை எப்படி சந்தோஷமாக வைத்துக்கொள்வது என்பதிலேயே அவனது சிந்தனை செல்கிறது. அது, படத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் தருகிறது. ஏனெனில், இப்படம், கிகுஜிரோவின் தாயைப் பற்றிய படமே அல்ல. இது முழுக்க முழுக்க அந்தச் சிறுவனின் உள்ளத்தில் நிகழும் மாற்றங்களையும் அவனது மென்சோகத்தையும் நமக்கு உணர்த்தும் படம். இவை நிகழ்வதாலேயே, அந்தச் சிறுவனும் தனது நிலையில்தான் இருக்கிறான் என்ற உணர்ச்சி, கிகுஜிரோவின் உள்ளத்தில் ஆணியடித்ததைப் போல் பதிந்துவிடுகிறது. இதுதான் அவன் அந்தச் சிறுவனைப் புரிந்துகொள்வதற்கும் முதல்படியாக இருக்கிறது. ஆனால் நந்தலாலா, பாஸ்கர்மணியின் தாயாரை மையப்படுத்தியே இரண்டாம் பாதியில் செல்வதால், கதை சற்றே தனது நேர்க்கோட்டில் இருந்து பிறழ்ந்துவிடுகிறது. நந்தலாலாவில், ‘ஓ.. நீயும் என்னப்போலதான் அம்மாவைத் தேடிப்போறியா’ என்று பாஸ்கர்மணி வெளிப்படையாகக் கேட்டு, இருவருக்கும் உள்ள ஒற்றுமையைப் பறைசாற்ற வேண்டியிருக்கிறது. இப்படி இருக்கவேண்டும் என்பதற்காகவே, பாஸ்கர் மணியும் தனது தாயாரைத் தேடிப் பயணிப்பது போன்ற ஒரு ஜோடனையை மிஷ்கின் செய்யவேண்டியிருந்திருக்கிறது. இது, கதையின் போக்கைச் சற்றே அசைத்துப்பார்க்கிறது.

ஒருவேளை, கிகுஜிரோவின் இரண்டாம் பாதியைப் போல் நந்தலாலாவை எடுத்திருந்தால், மக்கள் அலுப்படைந்துவிடுவார்களோ என்பதுகூட மிஷ்கினின் கவலையாக இருந்திருக்கலாம். இதுதான் மூலப்படத்தில் இருந்து சுடும்போது நேரும் அவலம். சொந்தமாகப் படமெடுப்பதன் மூலம், இதுபோன்ற சிக்கல்கள் தவிர்க்கப்படுகின்றன.

மிஷ்கின் செய்த இந்தக் கலைத்திருட்டை என்னால் ஒருபோதும் ஒப்புக்கொள்ளவோ ஆதரிக்கவோ இயலாது. ஆனால், வருங்காலத்தில், நல்ல பல படங்கள் மிஷ்கின் எடுக்கக்கூடும் என்பது நந்தலாலாவில் தெரிகிறது.

  Comments

34 Comments

  1. naina intha padam epadi irukuna .. ippa nan tamila english la adichitu irukene antha mathiri….

    Reply
  2. I think you understood few things in a different angle.

    – He gives the pebbles to his friends. This is to show that he is in his own house. He never says about throwing stones at his mother.

    – Ottadai, naatham pudicha pombalainga.. They come in the actual climax whch was not included in this picture.

    – The old man actually runs a big time prostitution in that town – again deleted climax. The walking stick and the red tempo symbolises evil.

    – The Nasser character is again a depiction. A human being can do something good even when he is sleeping – because of him the old man misses Snigdha.

    Mysskin has done good films [ watchable with entire family ! ] and he is continuing the same. Wait for Yuththam sei which is set to release in Jan. You’ll see the stylish thriller [ in fact without Ilayaraja !! ].

    I would like to present my review here. Thanks.

    http://www.pixmonk.com/2010/11/29/nandalala-the-road-not-taken/

    -Toto
    http://www.pixmonk.com

    Reply
  3. மிஷ்கின் செய்த இந்தக் கலைத்திருட்டை என்னால் ஒருபோதும் ஒப்புக்கொள்ளவோ ஆதரிக்கவோ இயலாது. ஆனால், வருங்காலத்தில், நல்ல பல படங்கள் மிஷ்கின் எடுக்கக்கூடும் என்பது நந்தலாலாவில் தெரிகிறது.

    ஒப்புக்கொள்கிறேன் ! ஆதரிக்கிறேன் ! — உங்கள் கருத்தை !!!

    உண்மையாக சொல்ல போனால், உங்கள் இந்த பதிவை ஒரு தயக்கத்துடனேயே மேய்ந்தேன்…. அதிலும் ஆனால் … என்ற இடைசொருகளில் ஒரு கணம் நின்றேன் – தொடரலாமா வேண்டாமா என்று ?

    ஓங்கி தலையில் ஒரு குட்டு குட்டாமல், முதுகில் ஒரு செல்ல தட்டல் தட்டி, படவா அடுத்து ஒழுங்காக செய்டா என்ற ரீதியிலான உங்கள் மனப்போக்கு மிக சரியானதே !

    Reply
  4. இரண்டையும் சொல்லியிருக்கிறீர்கள்!
    மிக நல்ல விமர்சனம்! தெளிவு!

    Reply
  5. it is very easy for the director to take a new picture.when he is bringing a film from another language, there are so many things to think,change,compromise etc.Tamil cinema has seen so many turning points,1960-sithralaya SRIDAR,1970-KAVITHAALAYA-Balachndar,K,1980-BARATHIRAJA,BAKKIARAJ,PANDIARAJAN,PAARTHIBAN,etc.after that so many new moviews have come,but 2010-a turningpoint-director-defenitely MISHKIN.He has got very good skill,the way of presenting the scenes simply fantastic.as on today no-match.I know the leading the so-called writers are downloading from internet and vamitting in the net,periodicals.without internet there survival is zero.they are not creators.But MISHKIN is a creator.good creator.

    Reply
  6. நண்பா,
    அட்டகாசமான ஒப்பிடீடுகள்.
    மொத்தத்தில் குகுஜீரோவை மிஞ்சியது நந்தலாலா என்று தெரிகிறது.கிகுஜிரோவை 10 முறை பார்க்க முடியுமா?அத்தனை தரம் இருக்கிறதா?நிறைய பேர் அதை திரும்ப திரும்ப பார்த்தேன் என்கிறார்கள்.அது அத்தனை அரிய படைப்பா?அதையும் சொல்லுங்க நண்பா!!

    Reply
  7. நேர்மையான அணுகல்.

    நான் அந்த ஜப்பானியப்படம் பார்த்ததில்லை. நீங்கள் சொல்வதில் இருந்து, அப்படத்தில், எதிர்காலத்தின் மீதுள்ள (சிறுவனின் நலத்தில்) அக்கறையும், ‘நந்தலாலா’வில், மரபு நாடி (தாயைத் தேடி) தோற்கிற ஏதிலிகள் தம்மைத் தாம் சார்ந்து செல்ல வேண்டியதும் காட்டப்படுவதாகப் புரிந்துகொண்டேன். நன்றி!

    Reply
  8. முன்னாடி எல்லாம் காப்பி அடிச்சா யாருக்கும் பரவலாய் தெரியாது இப்ப நிலைமை அப்படி இல்லை.எனினும் ஏன் இப்படி காப்பி அடிக்கிறார்கள் நம் டைரக்டர்கள்.ஜப்பானிய படம் utv-யில் நான் பார்த்ேன். இப்படி சாதாரணமானவர்களும் உலகப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் இப்ப ஈசியாய் இருக்கும் போது ஏன் டைரக்டர்கள் காப்பி அடிச்சு மாட்றாங்க..

    Reply
  9. நல்ல படம் எடுக்கக் கூடிய திறமை இருந்தும்,சில நல்ல இயக்குனர்கள்,இப்போது தாங்களும் இந்த காப்பி கலாசாரத்தில் செல்வது கேவலமானது.உதாரணம்,அமீர் மற்றும் மிஷ்கின்.
    என்னதான் படம் அருமையாக இருந்தாலும்,அந்தப்படம் இயக்குனரின் சொந்த சரக்கு இல்லை என்று தெரிய வந்தால்,நமது மனம் அந்த படைப்பிற்கும் அந்த படைப்பாளிக்கும் அங்கீகாரம் தராது.அவரின் பின்னைய படங்கள் நன்றாக இருந்தாலும் கூட, ‘இது எங்கே இருந்து திருடப்பட்டதோ?’ என்று தான் எண்ணம் வருமே ஒழிய,அவருக்கு மதிப்பு கிடைக்காது.இனி அமீர்,மிஷ்கின் இதை சந்தித்தே தீர வேண்டும்.

    கழிசடை இயக்குனர்கள்,வேறு வழி இல்லாதவர்கள்,யோசிக்க தெரியாதவர்கள் இது போன்று காப்பி அடிக்கலாம்.ஆனால்,நல்ல இயக்குனர்களும் இது போல ஆரம்பித்தால், uniqueness இல்லாதே போய் விடும்.

    படம் பற்றி நான் கருத்து கூற இயலாது.படத்தை பார்த்துவிட்டு படம் பற்றி கூறுகிறேன்.

    Reply
  10. //அயன் படத்தை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். Maria Full of Grace படத்தின் பல காட்சிகள் இப்படத்தில் சுடப்பட்டு, கதை அந்தரத்தில் தொங்குவதைக் காணமுடியும்.//

    அப்புறம் எதுக்கு பெரிய்ய்ய்ய ….. போல அயன் படத்தில், இங்கிலீஸ் டிவிடி கேட்டு தமிழ் நடிகர் காரில் வந்து கேட்பது போல கருணாஸ் என்னும் கதாபாத்திரம்? கே.வி.ஆனந்தை தான் கேட்கவேண்டும். இல்ல, சுட்டாலும் ஒழுங்கா சுடுங்கடா என்கிறாரா?

    Reply
  11. //ஓங்கி தலையில் ஒரு குட்டு குட்டாமல், முதுகில் ஒரு செல்ல தட்டல் தட்டி, படவா அடுத்து ஒழுங்காக செய்டா என்ற ரீதியிலான உங்கள் மனப்போக்கு மிக சரியானதே //

    பெரிய ரிப்பீட்டே…. பாஸ்கர்சக்தி இந்தப்படத்தைப்பற்றி சொல்லுவதுபோல் சிறந்த படைப்பாக இருந்தாலும் நம்மண்ணில் ஊன்றாமல் அந்தரத்தில் தொங்கிகொண்டிருக்கிறது என்பது கவலைக்குறிய விசயம்.

    ஆனாலும் ஒரு நல்லப்படம் கிடைத்ததில் மகிழ்ச்சி
    (அடிக்க வராதீங்கோ…) :)))

    Reply
  12. நல்ல ஒப்பீடு ….

    ஆனால் நந்தலாலாவை தனி entity ஆக நீங்கள் பார்த்திருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது…

    என்னுடைய தனிப்பட்ட கருத்துகள்…

    ***//இதற்கு உதாரணம், புல்லட்டில் வரும் அந்த இரண்டு நபர்கள். கிகுஜிரோவில், அந்த புல்லட் ஆசாமிகளுக்குத் தகுந்த காரணம் இருக்கிறது. அவர்கள் வந்தபின்னர், கதையை நகர்த்தும் பொறுப்பிலும் அவர்கள் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், நந்தலாலாவில் இது ஏதும் இல்லை. அவர்கள் , வெறுமனே வருகிறார்கள். அவ்வளவே. //***

    அவர்கள் தான் பாஸ்கரையும், விபச்சாரியையும் அந்த கிழவன் கும்பலிடம் இருந்து காப்பாற்றுவது போல் காட்சி அமைந்து இருக்கும். அவர்கள் வராவிட்டால், கதை நகர்ந்து இருக்காது, படமும் கிளைமாக்ஸை நோக்கி சென்றிருக்காது. நாசர் வராவிட்டால் may be அந்த கிழவன் கும்பல் மீண்டும் வந்து இருக்கலாம், கதை வேறு மாதிரி சென்றும் இருக்கலாம்.

    ***//கிகுஜிரோவில், தாயை வைத்துக்கொண்டு கிகுஜிரோ அல்லல்படுவதில்லை. தன்னுடன் வந்திருக்கும் சிறுவனை எப்படி சந்தோஷமாக வைத்துக்கொள்வது என்பதிலேயே அவனது சிந்தனை செல்கிறது. அது, படத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் தருகிறது. ஏனெனில், இப்படம், கிகுஜிரோவின் தாயைப் பற்றிய படமே அல்ல.//***

    கிகுஜிரோவைப் பொறுத்த வரை இது உண்மை தான். ஆனால் நந்தலாலா தாயை தேடி இருவர் செல்லும் பயணம் தான் படமே. இயக்குனர் சொன்னது போல் கிகுஜிரோ பிளாட் பயன்பட்டு இருக்கிறது.

    என்னைப் பொறுத்தவரை நாம் எல்லோருமே காப்பிகாட்கள் தான். உதாரணத்திற்கு இங்கே உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து தமிழ் வார்த்தையுமே யாரோ ஒருவர் கண்டுபிடித்தது தான். இந்நேரம் கண்டுபிடித்தவர் இருந்து காப்பிரைட்ஸ் எல்லாம் கேட்டு இருந்தால்……. அவ்வளவு தான்… 🙂

    Reply
  13. ஆமா அந்த சாறு புழிஞ்சிதா உயிர்மையில் விமர்சனம் எழுதுனதுக்கு அப்புறம் அதுக்கு தகுந்தா மாதிரி நீ எழுதி இருக்க.சாருவின் கைதடி என்பதை மற்றொரு முறை நிரூபித்துளாய்.அப்புறம் அந்த சாரு இளையராஜாவின் இசையை குறை கூறியுள்ளார்.ஆமாம் அவருக்கு பிடித்த பாடல்கள் இதோ : டிஷ்யூம் படத்தில் வரும் “கிட்ட நெருங்கி வாடா கர்லாகட்ட ஒடம்புகாரா” மற்றும் சிங்கம் படத்தில் “காதல் வந்தாலே” அடங்கப்பா..இவுரு இசை ரசனை புல்லரிக்கிது.அதே ரசனைதான் உனக்கும்.ரகுமான் அடி வயித்துல புன்னு வந்தா மாதிரி கத்துவான் .அதை ஆஹ ஓஹோ என்று புகழ்வீர்கள் ஏனென்றால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆஸ்கார் விருது வாங்கிட்டாராம்.இவனுக்கு ஆஸ்கார் குடுத்ததே கேலிக்கூத்து.The Reader ,Curious case of Benjamin button படைத்தஎல்லாம் விட slumdog படத்தின் இசை எந்த விடத்தில் சிறந்தது என தெரியவில்லை(படமும் கூட).The Dark knight படத்திற்கு பதில் slumdog படத்திற்கு சிறந்த சவுண்ட் விருது குட்த்ததும் நகைச்சுவையின் உச்சம்.திருந்துன்கப்பு .நீங்களெல்லாம் போற்றுவதேலாம் ரகுமான் சிறந்த இசையமைப்பாளர் என்றாகிவிடாது(இப்போது இவனுக்கு ஒரு தமிழ் படமும் கையில் இல்லை.ஆமா ஒரே எரச்சலா போட்ட எவன் சான்சு குடுப்பான்?) Delhi 6 இக்கு அப்புறம் இவனுக்கு பியூஸ் போய்டுச்சி(சமீபத்தில் காமன்வெல்த் பாட்டு சரியில்லை என காரி துப்பினர் மக்கள்).அதே போல் நீயும் சாறு புழிந்தாவும் இகழ்வதால் இளையராஜா இசைஞானி இல்லையென்றாகிவிடாது.சூரியன் பாத்து எதுவோ கொலைக்குது.அம்புட்டுதேன்

    Reply
  14. cinema is not for one’s own self satisfaction., if it is so then it should be made as a documentary and send to useless juries around the world for winning medals..

    Cinema is primarily for masses who want their 2.5 hrs of time to be passed in a gripping entertaining way. not to waste heir time in a dull pyscho-path realistic documentaries…

    You better understand the difference b/w Documentary movies and entertaining movies before criticising the people who like to watch useful entertainers…

    Good luck….

    Reply
  15. விமர்சனம் முழுக்க உள் குத்து. மிஸ்கினுக்கு வலிக்க கூடாது என்பதைவிட.. சாரு நிவேதாவுக்கு வலிக்க கூடாது என்ற அக்கரை புல்லரிக்க வைக்கிறது.

    Reply
  16. “இந்திய அளவில் தமிழின் சமகால இலக்கியம்தான் உச்சத்தில் இருப்பது என்று வாதிட்டேன். ஆனால், நம்முடைய பிரச்னை, இதற்கெல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லை. அப்படி இருந்தாலும் சரியாக இல்லை.”

    என்ன தல சாரு உங்களை இப்படி கவுத்திட்டாரு !!!

    Reply
  17. @ lucky Limat – அப்பாடி.. எவ்ளோ நாளு கழிச்சி வர்ரீரு… அதுசரி.. நீங்கதான் என்ன பண்ணுவீங்க.. ஆக்‌ஷன் படம் போடுய்யா போடுய்யான்னு நீங்களும் ரொம்ப நாளு சொல்லிப்பார்த்தீங்க.. 🙂 .. எனிவே, இனி கட்டாயம் அப்புடி ஒண்ணை போடப் பாக்குறேன்..

    @ இராமசாமி கண்ணன் – உதாரணம் சும்மா பிச்சி ஒதறுது 🙂

    @ Toto – //He never says about throwing stones at his mother//
    இல்லைங்க.. கடைசில, அவனோட அம்மாவைப் பார்க்கும் முன், பரபரப்பா கற்களைத் தேடி, தன்னோட கைல தயாரா வெச்சிக்குவான்.. அந்த செக்ஸ் வொர்க்கர் கைலயும் குடுப்பான். அடிக்க..

    //The old man actually runs a big time prostitution in that town – again deleted climax. The walking stick and the red tempo symbolises evil//

    ஓ டிலீட்டட் சீனா? அதானே.. ஒரு தொடர்புமே இல்லாம அவங்க கேரக்டர் இருந்தது. ஆனா இப்ப புரியுது..

    நாசர் கேரக்டர் பத்தி… வெல்.. உங்க பாயிண்ட் சரிதான். ஆனால் எனக்கு அது கொஞ்சம் odd ஆ இருக்குறமாதிரி பட்டது..

    உங்க சட்ல எதோ எரர். டேடாபேஸ் மிஸ்டேக்னு வருது 🙁 .. ஓப்பன் ஆகல. உங்க விளக்கமான கருத்துகளுக்கு நன்றி. நண்பர்களுக்கும் இது உதவியா இருக்கும்.

    @ karuna – அது ஏன்னா, மிஷ்கின் இப்பதானே இன்னிங்ஸ் ஆரம்பிச்சிருக்காரு… அடுத்த படமும் காப்பியா இருந்தா, பின்னிரலாம் .. யுத்தம் செய் வரட்டும். 🙂

    @ எஸ்.கே – மிக்க நன்றி

    @ சு. மோகன் – ஏங்க? உங்களுக்குப் புடிச்சதா இல்லையா?

    @ thamizan – உங்க கருத்து பலிச்சா தமிழ் சினிமாவுக்கு நல்லதுதானே.. பொறுத்துப் பார்க்கலாம் நண்பா.. நன்றி..

    @ கீதப்ரியன் – நண்பா.. சொல்லவும் வேண்டுமா? கிகுஜிரோ, ஒரு அட்டகாசம்னெல்லாம் சொல்ல மாட்டேன். அதை ஒரு தடவை ரசிச்சிப் பார்க்கலாம். ஆனா அது இந்த நந்தலாலா ஹைப்ல மாட்டிக்கினு ரொம்பப் பேசப்படுதுன்றது என் கருத்து. It’s not a bad film, but also not an excellent film.

    @ rajasundarrajan – உங்க இந்தப் பார்வை புதுசா இருக்கே.. நல்ல கருத்து இது .. நன்றி

    @ அமுதா கிருஷ்ணா – அதுதானே தெரியலை. எனக்கும் இந்த சந்தேகம் உண்டு. இப்பல்லாம், காப்பி அடிக்குறது ரொம்ப சுலபமா வெளில தெரிஞ்சிருது. அப்படி இருக்கும்போது, இந்த டைரக்டருங்க ஏன் இப்புடி முட்டாள்தனமா ஈ.காப்பி அடிக்குறாங்க? ஒண்ணுமே புரியலை 🙂 .. நன்றி.

    @ இலுமி – உங்க கருத்தை முற்றிலும் வழிமொழிகிறேன்… 🙂

    @ சீனு – ஹாஹ்ஹா… அது நிஜம்மாவே காமெடிதான் 🙂 .. அயனே ஒரு காப்பி. அதுல, டைரக்டர் காப்பியடிக்குறமாதிரி ஒரு தேவையில்லாத சீன்.. 🙂 மெகா காமெடிங்க அது 🙂

    @ நாஞ்சில் பிரதாப் – 🙂 அடிகக் வரலை. நீங்க பார்த்தாச்சா? உங்க ஃபேஸ்புக் கமெண்ட் (பேரரசு, வெங்கடேஷ் பத்தி) செமயா இருந்தது 🙂

    @ காதலரே – வரட்டும் பார்க்கலாம் 🙂

    @ சாரு புழிஞ்சதா & sai – உங்க ரெண்டுபேரு கமெண்ட்டைப் படிச்சதும், கவுண்டமணியோட தஞ்சாவூர் கல்வெட்டு காமெடிதான் நினைவு வந்தது 🙂 .. எப்புடி இதெல்லாம்? ரூம்போட்டு யோசிப்பீங்களோ? 🙂

    @ normalnn – எனக்கு டாக்குமெண்ட்ரிகும் நல்ல படத்துக்கும் வித்யாசம் நல்லாவே தெரியும். ஆனா, நல்ல படங்களை டாக்குமெண்ட்ரின்னு நீங்க சொல்றதை ஒத்துக்க மாட்டேன். தரமான எண்டர்டெயினர்கள் இருக்கு. அதே சமயம், எந்திரன் மாதிரி காமெடிபீஸ் படங்களும் வந்துட்டு தான் இருக்கு.

    @ sangiah – என்ன பாஸ் 🙂 நான் சாருவோட நாவல் அல்லது புத்தகம் எதையும் மொழிபெயர்க்கவில்லையே? ஸோ, அவரு சொன்னது நமக்குப் பொருந்தாது 🙂

    Reply
  18. @ access – பாஸ்.. உங்க கமெண்ட்டையெல்லாம் அழிச்சிடேன். கதைகதையா மத்த ப்ளாக்குங்கள்ல இருந்து காப்பி பேஸ்ட் பண்ணாம, சொந்தக் கருத்தை இனி அடிச்சீங்கன்னா போடுவேன்.. ரைட்டா? நன்றி..

    Reply
  19. @ செந்தில் குமார் – என்ன தல 🙂 .. இப்புடி சொல்லிப்புட்டீரு.. 🙂 நந்தலாலா என்னதான் நல்லா இருந்தாலும், மூலப்படத்தோட நினைவு வந்து தொலையுதே பல சீன்ல 🙂 .. அதான் பிரச்னை..

    எனிவே, உங்க விளக்கமான கருத்துகளுக்கு நன்றி.. கட்டாயம் அது மத்தவங்களுக்கும் உபயோகப்படும்

    @ பிரசாத் – அப்புடின்னா சொல்றீங்க? 🙂 ரைட்டு.. ஃப்ரீயா உட்ரலாம் பாஸ் 🙂

    Reply
  20. நந்தலாலா பார்க்க வேண்டும் … பார்க்க தூண்டியதற்கு நன்றி …

    Reply
  21. சாருவுக்கு ஜால்ரா மிஸ்கினுக்கு குத்து

    Reply
  22. சாறு புழிஞ்சிதாவிற்கு ஒரு நல்ல அடிமை சிக்கியிருக்கிறான் அவன் பெயர் கருந்தேள்.துலுக்கனுக்கு சொம்படிக்கும் கூட்டத்தை சேர்ந்த லூசு நீ.Osama 2003 படத்த பாரு.அப்புறம் நீ இசுலாமுக்கு சொம்படிப்பியான்னு.பெண்களை அடிமையாக்கும் அந்த மதத்தின் கைக்கூலி நீ.குரான வாங்கி சொம்படி.பெண்களை அடிமைபடுத்து.நாசமா போ.

    Reply
  23. thanks a lot though i almost tortured u
    your people management skill is very good
    keep it up.

    mark my words

    intelligence or knowledge or talent is of no use
    when u dont have the team worker sorry people
    management skills,in this network age
    i wish u all the best for all of your ventures

    i am very busy updating my friend’s film

    that has no official website

    http://kothefilm.blogspot.com/

    and also for kamal

    http://kamal-access.blogspot.com/

    mother of all copycat movie is enthiran
    sorry i dont have video evidence like u

    Its a shame that India’s most expensive
    and highest grosser film is a all
    time big copycat. Cant Indian directors make
    an original film? Even thought
    if the film is 150 crores, it’s quality
    is not even equal to 45 crore
    skyline movie of hollywood.

    but still oru paanai soru

    search youtube

    Endhiran Copycat Work

    http://www.youtube.com/watch?v=2paFdzmqqiY&playnext=1&list=PLCA6677E0F294F23C&index=89

    Endhiran Copycat

    http://www.youtube.com/watch?v=8NGh9MewnyY

    here is the first report i have ever heard

    of manmadan ambu review

    by film maker naveen varadharajan
    on twitter

    the remake of something about mary
    or minsara kanavu or pavalakodi(sun anchor vijayasarathy)

    Exclusive: First Report of #ManMadanAmbu / #ManMadaBaanam is out. Its a very Interesting film with lots of twists and Turns. Excellent Screenplay. Kamal Haasan plays a matured subdued performance similar to Rajni in Chandramukhi and scores big time. Madhavan takes center-stage and Trisha is good. A Must Watch film. It will Please the A-Centers for sure and it will be a new experience, sometimes may be too much, for a B or a C Center. Dont Expect Comedy here like Panchatantram or Tenali. Yet #KamalHAASAN hits Bulls Eye with this #ManMadanAMBU / #ManMadaBaanam. Overall its a 3.75/5 Film. A treat for a film goer!

    Reply
  24. எது சிறந்த படைப்பு

    மனிதனை உசிப்பி விடுவது
    மன்மதனை உசிப்பி விடுவது
    அரக்கனை அல்லது
    மிருகத்தை உசிப்பி விடுவது

    நந்தலாலா படத்தில்
    மனிதனை மற்றும் மெண்டல் அரக்கனை உசிப்பி விட்டது
    மன்மதனை உசிப்பி விடாமல் எடுத்தது தவறு
    தான் அது பாக்ஸ் ஆபீஸ் செல்லு படி ஆகாது

    அரக்கன் மனிதன் மற்றும் மன்மதன் மூனும்
    கெட்டா படைப்பு
    எந்திரன்

    அதற்க்கு பன்னி கூட்டம் போல மக்கள் படையெடுப்பு
    சாட்சி
    டவுன்லோட் பண்ணிய எந்திரன் படம் பார்க்க நேரம்
    இல்லை ஆயிரம் ருபாய் செலவு செய்து படம் பாக்க
    காசும் இருக்கு நேரமும் இருக்கு
    ஆயிரம் விளம்பரங்களுடன் தொலைக்காட்சி பாக்க
    நேரம் இருக்கு

    கமல் ஆளவந்தான் மிருகம் மற்றும் அரக்கன் காப்பதால
    அன்பே சிவம் மனிதம் பழக சொன்னால் காப்பதால
    இப்போ மூன்றாம் முறை லக்கி?
    மன்மதனை மட்டும் உசிப்பி விட்டு
    மன்மதன் அம்பு

    நீங்க நல்லவரா கெட்டவரா
    நீங்க மனிதனா அரக்கனா
    நீங்க எந்திரனா மனிதனா
    அல்லது மன்மதனா
    இரக்கம் இல்லா மனிதன் அரக்கன் அல்லது எந்திரன்
    அல்லது மன்மதன்

    எந்திரனுக்கே மனிதம் கற்பிக்க வேண்டிய மனிதன்
    மனிதனுக்கே மனிதம் கற்பிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்

    இல்லா விட்டால் நீங்க மனிதன் உருவில் இருக்கும்
    மன்மதன் அல்லது மிருகம் அல்லது அரக்கன் அல்லது ரோபோட்

    Reply
  25. // கடைசில, அவனோட அம்மாவைப் பார்க்கும் முன், பரபரப்பா கற்களைத் தேடி, தன்னோட கைல தயாரா வெச்சிக்குவான் //

    என‌க்கு தெரிஞ்ச‌ வ‌ரைக்கும் அவ‌ன் சேர்த்து வைத்த‌ க‌ற்க‌ளை அகிக்கு ம‌ட்டும் தான் தர்றான் [ அவ‌ளுக்கு இல்லை ] .. அவ‌ன் அடிக்க‌ணும்னு சொல்வானே த‌விர‌ ந‌ம்ம‌ எல்லாரும் அடிக்க‌லாம்னு சொல்ல‌மாட்டான்..

    என‌து 2வ‌து ப‌திவு ப‌ட‌த்தை ப‌ற்றி ..
    http://www.pixmonk.com/2010/12/24/nandalala-road-travelled-further/

    -Toto.

    Reply
  26. //உங்க சட்ல எதோ எரர். டேடாபேஸ் மிஸ்டேக்னு வருது:( //

    இப்ப‌ ச‌ரி ப‌ண்ணிட்டேன்.. ப‌டித்த‌த‌ற்கு ரொம்ப‌ ந‌ன்றி.

    -Toto

    Reply
  27. மிஸ்கின் உங்ககிட்ட உங்க சுயசிந்தனையைதான் எதிற்பர்க்கிரோம் ,நீங்க சாரு புத்தக வெளியிட்டு விழாவில் உங்க உழைப்பை ,வேதனையை சொன்னிங்க ,. மிஸ்கின் உங்களது கலை ஆர்வத்தை பாராட்டுறோம்.ஆனாலும் உங்களது தனிதன்மையைதான் நாங்க எதிர்பார்க்கிறோம் .இந்த விமர்சனம் ஒரு உண்மையான கலைங்கனை பாதை மாற்றி விட கூடாது என்ற ஆர்வத்தில்தான் .எழுதப்பட்டது .வாழ்த்துக்கள் .

    Reply

Join the conversation