The Notebook ( 2004) – English

by Karundhel Rajesh January 12, 2010   English films

நமக்குப் பிடித்த ஒருவருக்காக, வாழ்வில் எத்தனை தூரம் நம்மால் செல்ல இயலும்?

படம், ஒரு மருத்துவமனையில் தொடங்குகிறது. ஒரு முதியவர், வரிசையில் நின்று மருந்து வாங்கிச் செல்கிறார். ஒரு அறையில், ஒரு பாட்டி அமர்ந்திருக்கிறாள். அவளிடம் இவரை அழைத்துச் செல்லும் ஒரு நர்ஸ். இந்த முதியவர், அந்தப் பாட்டிக்கு ஒரு கதையைப் படிக்க வந்திருப்பதாகச் சொல்கிறாள். அம்முதியவரும், பாட்டியின் அருகில் அமர்ந்து, புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கிறார். பாட்டி, அவரைப் புதிராகப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

வருடம் 1940. ஒரு கண்காட்சி நடக்கிறது. அங்கு, நோவா என்ற இளைஞன், ஆல்லீ என்ற இளம்பெண்ணைப் பார்க்கிறான். பார்த்த முதல் நிமிடமே அவனுக்கு அவள்மேல் காதல் வந்துவிடுகிறது. அவள் அவனைத் தொடர்ந்து நிராகரிக்கிறாள். அவனும், விடாமல் அவளைத் துரத்துகிறான். ஒரு நாள் இரவில், அவர்கள் இருவரும், யாருமற்ற ஒரு சாலையில் சந்திக்கிறார்கள். மனம் விட்டுப் பேசும் அவர்களுக்குள் காதல் முகிழ்க்கிறது.

ஆல்லீயின் தந்தை, ஒரு பணக்காரர். ஏழையான நோவாவுடன் அவள் சுற்றுவது அவருக்கும் ஆல்லீயின் தாயாருக்கும் பிடிப்பதில்லை. அவர்கள், நோவாவைப் பற்றி அவளிடம் தவறான தகவல்களைக் கொருத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாள், இருவரும் ஓர் இரவில் சந்திக்கிறார்கள். இது தெரிந்து, ஆல்லீயின் பெற்றோர்கள் அவளை, நோவாவை இனிமேல் பார்க்கத் தடை விதித்துவிடுகிறார்கள்.

நோவாவுமே ஆல்லீயிடம், இனிமேல் தாங்கள் சந்தித்துக்கொள்ள வேண்டாம் என்று கூறிவிடுகிறான். ஏழையான தான், ஆல்லீயைச் சந்தோஷமாகப் பார்த்துக்கொள்ள முடியாதோ என்ற ஒரு கவலையில் அவளை வேண்டுமென்றே ஒதுக்கிவிடுகிறான். ஆல்லீக்கோ அவன் மேல் கோபம் வருகிறது. இரண்டு பேரும் பிரிகிறார்கள். அன்றே ஆல்லீ, பெற்றோர்களுடன், வேறு ஊருக்குச் சென்றுவிடுகிறாள்.

அவளைப் பிரிந்த துக்கத்தைத் தாங்க முடியாத நோவா, இரண்டாம் உலகப்போருக்காக ராணுவத்தில் சேர்ந்து விடுகிறான். அவளுக்காகத் தினமும் ஒரு கடிதம் எழுதி, தபாலில் அனுப்புகிறான்.

சில வருடங்கள் கழித்து, போரில் காயமுற்ற படைவீரர்களுக்காக, சில நாட்கள் நர்ஸ் வேலை பார்க்கும் ஆல்லீ, காயமுற்ற ஒரு அதிகாரியைப் பார்க்கிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். அவர்களுக்கு, நிச்சயதார்த்தமும் நடக்கிறது. இரு பெற்றோர்களுக்கும் சந்தோஷம்.

போரில் இருந்து ஊருக்குத் திரும்பும் நோவா, அவர்களது வீட்டை அவனது தந்தை விற்றுவிட்டதை அறிகிறான். அந்தப்பணத்தைக் கொண்டு, அவனுக்கு மிகப்பிடித்த ஒரு பழைய கால மாளிகையை அவன் தந்தை வாங்கிவைத்திருக்கிறார். பல வருடங்களுக்கு புன்னர், இதே வீட்டில் தான் அவனும் ஆல்லீயும் ஒரு இரவில் சந்தித்தனர். அந்த பாழடைந்த வீட்டை ஒரு காலத்தில் வாங்கி, ஆல்லீ வாழும் வகையில் புதுப்பிக்க வேண்டும் என்பது நோவாவின் ஆசையாக இருந்தது.

ஒரு நாள், பக்கத்து ஊருக்குச் செல்லும் நோவா, அங்கு ஆல்லீயும் அந்த ராணுவ அதிகாரியும் முத்தமிட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். மனம் வெறுத்துப் போய் ஊருக்குத் திரும்பும் நோவா, வெறிபிடித்தவன் போல் அந்த வீட்டைப் புதுப்பிக்க ஆரம்பிக்கிறான். அவனது மனதில், ஒரு ஓரத்தில், அந்த வீட்டைப் புதுப்பிக்கும் நேரத்தில், அவனுக்காக ஆல்லீ திரும்ப வருவாள் என்ற நம்பிக்கை இருந்துகொண்டே இருக்கிறது.

சிறிது மாதங்கள் கழித்து, ஆல்லீ தற்செயலாக செய்தித்தாளைப் பார்க்கும்போது, நோவா புதுப்பித்த மாளிகையின் படமும், அதைப்பற்றிய செய்தியும் அதில் வெளியாகியிருப்பதைப் பார்க்கிறாள். அடுத்த கணம், அவள் மனம் பழைய நினைவுகளால் தளும்புகிறது. அந்த நினைவுகளின் பாரத்தைத் தாங்க முடியாத ஆல்லீ, நோவாவைப் பார்க்கச் சென்றுவிடுகிறாள். அவளைப் பார்த்து மகிழ்ச்சியடையும் நோவாவிடம், ஆல்லீ தனது திருமணத்தைப் பற்றிச் சொல்கிறாள். அவளை அவன் மறுநாளும் வந்து அவனைப் பார்க்கச் சொல்கிறான்.

படம் இப்போது நிகழ்காலத்துக்குத் திரும்புகிறது. கதையைப் படித்துக்கொண்டிருக்கும் முதியவரைப் பார்க்க அவரது குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் வருகின்றனர். அவரைத் தங்களுடனேயே வீட்டுக்கு வந்துவிடும்படி வற்புறுத்தி அழைக்கின்றனர். அதை ஒரேயடியாக மறுத்துவிடும் அந்த முதியவர், தான் அங்குதான் இருக்கப்போவதாகக் கூறிவிடுகிறார். அப்பொழுதுதான், அந்தப் பாட்டிதான் ஆல்லீ என்று நமக்குத் தெரிகிறது. அந்தத் தாத்தா தான் நோவா. ஆல்லீ, ஒரு கொடுமையான வியாதியினால், அவளது முழு நினைவுகளையும் இழந்து விடுகிறாள். தனது கணவனையும் குழந்தைகளையுமே அவளுக்கு அடையாளம் தெரிவதில்லை. ஒரு அந்நியனைப் பார்ப்பது போல் தான் அவள் நோவாவைப் பார்க்கிறாள். தங்களது இளமைக் கதையினையே அவளுக்கு மீண்டும் மீண்டும் படிக்கும் நோவா, அப்படியாவது அவளுக்கு நினைவு திரும்பிவிடாதா என்று ஆதுரத்துடன் அந்த மருத்துவமனையிலேயே தங்கி விடுகிறார்.

மீண்டும் பழைய நினைவுகளுக்குச் செல்கிறோம். மறுநாள் அங்கு வரும் ஆல்லீயை நோவா ஒரு படகில் அழைத்துச் செல்கிறான். அப்போது மழை பெய்யத் தொடங்குகிறது. கொட்டும் மழையில், ஆல்லீ, நோவா ஏன் தனக்குக் கடிதம் எழுதவே இல்லை என்று கேட்கிறாள். நோவா , ஒரு வருடம் முழுவதும் தினமும் அவளுக்குக் கடிதங்கள் எழுதியதாகச் சொல்கிறான். அவளால் இன்னமும் நோவாவை விட்டுப் பிரியமுடியாமல் இருப்பதாக அழும் ஆல்லீ, அவனை முத்தமிடுகிறாள்.

மறுநாள் நோவாவின் வீட்டுக்கு வரும் ஆல்லீயின் தாய், அவன் இல்லாத சமயத்தில், அவளை வெளியே அழைத்துச் செல்கிறாள். தானும் ஒரு சமயத்தில் ஒரு மனிதனைக் காதலித்ததாகவும், ஆனால் இப்போது ஆல்லீயின் தந்தையிடம் அவள் மிக வசதியாகவும் இருப்பதாகவும் அவள் சொல்கிறாள். ஆல்லீயைத் திரும்ப நோவாவின் வீட்டிலேயே விட்டுவிடும் அவளது தாய், நோவா எழுதிய அத்தனைக் கடிதங்களையும் அவள் கையில் கொடுக்கிறாள். அவளை ஒரு நல்ல முடிவு எடுக்கச்சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விடுகிறாள்.

நோவா அங்கு வருகிறான். அவளது முடிவைப் பற்றிக் கேட்கிறான். அவள் குழம்புகிறாள். கோபமடையும் நோவா, மறுபடியும் இதே நிலைமையில் தாங்கள் விடப்பட்டதாகக் கத்துகிறான். அப்பொழுது அவன் ஒரு அற்புதமான வசனத்தைச் சொல்கிறான். அதனைப் படத்தில் காண்க.

ஆல்லீ அங்கிருந்து சென்றுவிடுகிறாள். போகும் வழியில், ஒரு இடத்தில் காரை நிறுத்தி, ஒவ்வொரு கடிதமாகப் படிக்கத் தொடங்குகிறாள். அங்கிருந்து நேராக அந்த ராணுவ அதிகாரியிடம் சென்று, அனைத்தையும் சொல்லி விடுகிறாள். அவனும் அவளைப் புரிந்து கொள்கிறான்.

இந்த இடத்தில், நிகழ்காலத்தில், அந்தப் பாட்டி, முடியவரிடம், ஆல்லீ அதன்பின் யாருடன் வாழ்ந்தாள் என்று கேட்கிறாள். அந்த நிமிடத்திலேயே, திடீரென்று அவளுக்குத் தான் யாரென்று நினைவு திரும்பிவிடுகிறது. இந்தக் கதையை எழுதியவளே அவள் தான் என்றும் புரிந்து கொள்கிறாள். அவளது நோயின் ஆரம்பக்கட்டத்தில் எழுதப்பட்ட அந்தக் கதையின் இறுதியில், “இந்தக் கதையை எனக்கு நீ படித்தால், நான் உன்னிடம் திரும்ப வருவேன்” என்று எழுதியிருக்கிறாள்.

ஆனால், இது ஒரு தற்காலிக நிவாரணம் தான் என்று அந்த முதியவருக்குத் தெரிகிறது. இருந்தாலும், அந்தப் பாட்டியுடனேயே இருக்கிறார். கொஞ்ச நேரத்திலேயே, மறுபடியும் பாட்டிக்கு நினைவு போய் விடுகிறது. அந்த முதியவரைப் பார்த்து அலறுகிறாள். இதனைத் தாங்கமுடியாத முதியவர், அழத் தொடங்குகிறார்.

இதன்பின் என்ன நடந்தது? பாட்டிக்கு நினைவு திரும்பியதா? இருவரும் தங்கள் குழந்தைகளிடம் சேர்ந்து வாழ்ந்தனரா? படத்தில் காண்க.

காதலைப் பற்றிப் பல படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. ஆனால், காதலுக்காக எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணமாக இருக்கிறது. அந்த முதியவர் தான் நோவா என்று நமக்குத் தெரிந்த பின், நம் மனம் கனமாகிவிடுகிறது. அந்தப் பாட்டி, நோவாவிடம் ஒவ்வொருமுறையும் ஒரு அந்நியரைப் போல் நடத்துவதைப் பார்க்கும்போது, நம்முள் ஏதோ ஒன்று கரைகிறது.

இப்படம் நமக்குத் தரும் உணர்ச்சிகளைப் பற்றி நிறைய எழுத விரும்பவில்லை. இதுவும் ஒரு நாவல் தான். படமாக எடுக்கப்பட்டது. நம் வாழ்வில் காதலை ஒருமுறையேனும் நாம் அனுபவித்திருந்தால், இப்படம் அந்தக் காதலை நம்மை மறுபடி வாழ வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நோட்புக் படத்தின் டிரைலர் இங்கே.

  Comments

26 Comments

  1. This is my most fav movie.. and am glad to read a review on that. Thanks.

    Reply
  2. அப்ப காதல் தெரியாதவங்களுக்கு வேற எதாவது படம் இருக்கா?

    Reply
  3. பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்…
    எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்…
    http://www.radaan.tv

    http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

    Reply
  4. என் நண்பர்கள் குழுவிற்க்கு மிகவும் பிடித்த படத்தில் இதுவும் ஒன்று… அதனாலேயே பலதடவை பார்த்தாச்சு… !
    பின்னிட்டிங்க தேள் அருமையான விமர்சனம்.. .. 🙂

    Reply
  5. இந்த ஊருக்கு வந்த புதுசில்.. தியேட்டரில் பார்த்த ஆரம்ப காலப் படம். அப்பல்லாம் லவ்வு படம் பார்க்க பிரச்சனையில்லை. இப்பதான் பொறுமை தேவைப் படுது! 🙂

    இந்த டீம் மறுபடியும். கூட்டணி சேருராங்க கருந்தேள். படம் ஃபிப்ரவரி 14 ரிலிஸ் ஆகுது.

    Reply
  6. புதிய வலைத்தளத்திற்கு வாழ்த்துக்கள். தனிக் காட்டு ராஜா ஆகிட்டீங்க. அடுத்த கட்டத்துக்கு போய்ட்டீங்க :).

    அற்புதமான படம். முதல் இடுகை. அருமை.

    Reply
  7. விளம்பரம் போடுங்க. நிறைய பேர் பார்க்கிறார்கள் உங்கள் வலைத்தளத்தை.

    Reply
  8. நண்பரே பாராட்டுக்கள், சிறப்பான பதிவு. மேலும் உயரங்கள் தொட மனதார்ந்த வாழ்த்துக்கள்.

    Reply
  9. கருந்தேள் சும்மா பின்னி இருக்காரு. லவ்வு பண்ணி பாத்தா படமா? அதாவது படத்த லவ்வு பண்ணி பாத்ததா?

    Reply
  10. //இந்த ஊருக்கு வந்த புதுசில்.. தியேட்டரில் பார்த்த ஆரம்ப காலப் படம். அப்பல்லாம் லவ்வு படம் பார்க்க பிரச்சனையில்லை. இப்பதான் பொறுமை தேவைப் படுது! //

    பாலா, வயசாயிட்டாலே இதான் பிரச்சினை. நம்மள மாதிரி யூத்தா இருந்தா இந்த மாதிரி பீலிங்க்ஸ் எதுவும் இல்ல.

    Reply
  11. @ ஷ்ரீ – ரொம்ப சந்தோஷம்ங்க . .ஆடிக்கொருதடவ கமெண்ட் போடுறீங்க . . அடிக்கடி எழுதுங்க . . . 🙂

    @ அண்ணாமலையான் – மறுபடியுமா . .நானு ஒரு பச்ச கொழந்த. . அழுதுடுவேன் . . . . . கவலைய உடுங்க தல.. உங்களுக்காகவே ஏதாவது ஒரு துளி கூட காதலே இல்லாத படத்த பத்தி எழுதிடுவோம் . . 🙂

    @ ராடான் – உங்க வலைத்தளத்துல ஏதோ பிரச்சனைங்க . . செர்வர் எரர் வருதுங்க. . கொஞ்சம் கவனிங்க . .

    @ mahee – சூப்பர்.. உங்களுக்குப் புடிச்ச படம்னு தெரிஞ்சதுல ரொம்ப சந்தோஷம் . . 🙂

    @ பாலா – வணக்கம். . ஆஹா.. இந்த மாதிரி படங்கள அங்க பாத்துருந்தா அந்த அனுபவமே தனியாச்சே . .பயங்கர ரொமாண்டிக்கா இருந்துருக்குமே . .

    ஆமா தல… அந்த படத்துக்காக நானும் நம்ம ஆளும் வெயிட்டிங் . . 🙂 . . . உங்க வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி தல.. இதுக்கெல்லாம் காரணமேநீங்கதானே . . 🙂

    @ பின்னோக்கி – மிக்க நன்றி உங்க அன்பு நெஞ்சத்துக்கு . . . விளம்பரம் கொஞ்ச நாளு கழிச்சி பார்த்துக்கலாம் தல. . கொஞ்சம் ஸ்டாண்டர்டா ஓடட்டும்.. போட்டுறலாம் . .

    @ காதலரே – உங்கள் இனிய வாழ்த்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள். . இனியும் தரமான பதிவுகள் போட கண்டிப்பாக முயல்வேன் . .

    Reply
  12. @ விஷ்வா – ஹா ஹா . . அமாங்கோய் . .லவ்வு பண்ணி பார்த்த படமே தான் . . 🙂 ஆனா நீங்க மொதல்ல சொன்னதா இல்ல ரெண்டாவது சொன்னதான்னு சொல்ல மாட்டேனே . . 🙂

    //பாலா, வயசாயிட்டாலே இதான் பிரச்சினை. நம்மள மாதிரி யூத்தா இருந்தா இந்த மாதிரி பீலிங்க்ஸ் எதுவும் இல்ல.//

    அப்புடி போடு அருவாள . .பாலா இதோ வர்றாரு உங்களுக்குப் பதில் சொல்ல 🙂

    Reply
  13. அமெரிக்க முதல்வர் அண்ணன் பாலா வாழ்க, வாழ்க.

    கருந்தேள்,

    நீங்க என்னதான் கோத்து விட்டாலும் கூட அண்ணன் பாலா கோச்சுக்க மாட்டார்.

    Reply
  14. அடப்ப்பாவிகளா . . நானா கோத்து உடுறேன் . .நானு அதேல்லாம் ஒண்ணுமே தெரியாத யூத்துயா . .மழல. . பாப்பா . . : -(

    Reply
  15. ரைட்டு..பார்துடுறோம்..

    தல கைய கொஞ்சம் கீழ இறக்குங்க உங்க முகத்தை கொஞ்சம் சரியா பாத்துகிறோம்..:)

    Reply
  16. @ வினோத் – 🙂 அது ரொம்ப பழைய மூஞ்சி.. கரடுமொரடா இருக்கும் . . நானு ஆர்குட் மற்றும் பேஸ்புக் லிங்க் குடுத்துருக்கேன் பாருங்க நம்ம ப்ளாக்ல. . அதுக்குள்ள வந்து பாருங்க . .அந்த மழலை முகத்த நீங்க பார்ப்பீங்க . . 🙂

    Reply
  17. யாருப்பா.. அது..! எப்பப் பார்த்தாலும்.. யூத்து யூத்துன்னு அழறது??

    கல்யாணம் ஆகதவங்க எல்லாம் யூத்துன்னா.. உ.த. தாங்க உண்மையான யூத்து. போலி யூத்தெல்லாம் ஒழிக!! 🙂

    கருந்தேள்.. வேண்டாங்க. கை அப்படியே இருக்கட்டும். ப்லாகுக்கு வர்றவங்க பயந்துக்கப் போறாங்க! 🙂

    Reply
  18. காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதியிருக்கிறீர்கள். நானும் தான் எழுதுறேன் இப்படி வரமாட்டேங்குதே….புதுவீட்டுக்கு வாழ்த்துக்கள்..

    Reply
  19. @ பாலா – விஷ்வா சீக்கிரமே திரும்பி வருவாரு 🙂

    @ மயில்ராவணன் – னுகள் கருத்துக்கு மிக்க நன்றி. . பின்னே? நானும் ஒரு காதலன் அல்லவா? அதுவும், எங்கள் இருவருக்கும் பிடித்த படமாயிற்றே இது . . 🙂

    Reply
  20. நீங்க எல்லாருமே அருமையா எழுதுறீங்க.. நாங்களும் தான் ட்ரை பண்றோம்.. எப்படியோ வாழ்த்துக்கள். ஆனா கண்ணாயிரம் சார். நீங்க எதுக்கு மூஞ்சி முன்னாடி கை வசிருக்கீங்கன்னு இப்பதான் தெரிஞ்சிது.
    உங்க கமெண்ட் காகவே படம் பார்க்கப் போறேன்…

    Reply
  21. கண்டிப்பா பாருங்க பிரகாஷ். உங்களுக்குப் பிடிக்கும். பார்த்துட்டு உங்க கருத்த பதியுங்க. . . 🙂 இந்தப்பக்கம் அடிக்கடி வாங்க . .நன்றி . .

    Reply
  22. முதன் முதலாக ஒரு ஆங்கில படத்தை தமிழில் பாா்த்த ஒரு சந்தோஷம் தந்தது தங்களது கருத்து

    நன்றி

    ராதிகா

    Reply
  23. எனக்கு பிடித்த காதல் படங்களுள் இதுவும் ஒன்று.

    Reply
  24. Very good romantic movie…
    Awesome acting by Rachel and Ryan….
    1 of my fav, romantic movie…
    If possible see…
    The lars and the real girl movie….

    keep on writing…
    u r doing a great job…

    Nanban
    Prasanna…

    Reply
  25. Vijai

    hey Rajesh..

    super machi.. i just read ‘The Lake House’ review and commented. now i read this review. ‘The Lake houes’ and ‘The Notebook’ are my top 2 love stories, i mean movies…. nowadays you don’t write any reviews for a romantic movie. expecting one soon.. 🙂

    Reply

Join the conversation