ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013) – Tamil

by Karundhel Rajesh September 28, 2013   Tamil cinema

’மிஷ்கினின் திறமை மேல் எனக்கு நம்பிக்கை இன்னமும் குறையவில்லை. அஞ்சாதே & யுத்தம் செய் போன்ற ஒரு படத்தை அவசியம் அவர் அளிப்பார் என்ற பலமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகவே, I will wait for Mysskin. And I hope he would bounce back too’ – ஒரு ’பிரபல’ பதிவர்.[divider]

இன்று ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வரப்போகிறது என்பது எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் தெரியும். உடனடியாக ஆன்லைனில் டிக்கெட் கிடைக்கிறதா என்று தேடியதில், பெங்களூரில் படமே ரிலீஸ் இல்லை என்று தெரிந்தது. சென்ற வருடம் எனது பிறந்தநாளன்று (செப் 1) வெளியான ‘முகமூடி’ படம்கூட இங்கே அதே நாளில் வந்திருந்தது. அதனால்தான் அதை தியேட்டரில் பார்த்து, பயங்கர கடுப்பில் என் பிறந்தநாளை கழித்திருந்தேன். பிற ஊர்களிலும் லிமிடட் ரிலீஸ்தான் என்று தெரிந்தது. இங்கே பெங்களூரில் இன்று காலைவரை முக்கியும் எங்குமே ரிலீஸ் ஆகவில்லை என்றே தெரிந்தது. ஆனால், சக்திவேல் என்ற நண்பர், மொத்தம் நான்கு தியேட்டர்களில் அந்தப்படம் ரிலீஸ் ஆகியிருப்பதை ஃபேஸ்புக்கில் சொல்லியிருந்தார். அவை: Ravi theatre Ejipura, Savitha theatre Malleswaram, Amruth theatre Lingarajapuram, Madeshwara theatre Banashankari 3rd stage. இவற்றில் நான் இன்று பார்த்தது, அம்ருத் தியேட்டர். லிங்கராஜபுரத்தில் உள்ளது (இந்த நான்குமே பழைய தியேட்டர்கள். ஒரு மல்டிப்ளெக்ஸில் கூட இந்தப்படம் வரவில்லை).

இந்த தியேட்டர் காம்பவுண்டில் நுழைந்ததுமே, கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்னர் கோவையில் நான் படம் பார்த்த சில தியேட்டர்களை இது நினைவுபடுத்தியது புரிந்தது (டிலைட், நாஸ், கென்னடி). மாலை ஐந்து மணி ஷோவுக்கு நான் தான் முதல் ஆள். இத்தனைக்கும் நான் உள்ளே சென்றது 4:50. அப்போது நான் எடுத்த ஃபோட்டோ கீழே. இங்கு தம்மடித்துக்கொண்டிருப்பவர், டிக்கெட் கொடுக்கும் ஆசாமி. ’தீ.வே.செ.குமாரு’ படத்துக்கும் இதே அசம்பாவிதம் நடந்திருந்தது நினைவு வந்தது (புஷ்பாஞ்சலி – மொத்த தியேட்டரிலும் 5-6 பேர் மட்டுமே). இருந்தாலும், தியேட்டர் அமைப்பு கொஞ்சம் நாஸ்டால்ஜியாவை கிண்டியது. டிக்கெட் கிழிப்பவர், சாவகாசமாக தம் அடித்து டாய்லெட் போய்விட்டு மறுபடியும் என் பக்கத்தில் வந்து நின்றுகொண்டார். ‘ஷோ இருக்கும்ல?’ என்று கேட்டேன். ‘ம்ம்’ என்று முனகிவிட்டு உள்ளே சென்று குட்டி ஜன்னலை திறந்து, கம்பி வலைக்கு நடுவே கையை விட்டு தட்டி என்னை அழைத்தார். பால்கனி டிக்கெட் வாங்கிக்கொண்டு பால்கனியை முதல் ஆளாக ஓப்பன் செய்தேன்.

Amruth Theater Bangalore

 

இத்தனை பெரிய முன்னுரைக்கு ஒரு காரணம் இருக்கிறது. ஊரில் படமே இல்லை என்ற நிலையில் இருந்து, படம் ஓடுகிறது என்ற தகவல் வந்து, உடனடியாக அடித்துப்பிடித்து தியேட்டர் வந்தவனுக்குதான் அந்த ஜாலி புரியும்.

படம் எப்படி?

படத்தைப்பற்றி மிஷ்கினே இங்கே சொல்கிறார். இந்த வீடியோவை முதலில் பார்த்துவிடுங்கள். அதன்பின் விமர்சனத்துக்குள் செல்லலாம்.

மிஷ்கினுக்கு என்று ஒரு பாணி இருக்கிறது. ஒரு படத்தை ஐந்தே நிமிடங்கள் பார்த்தாலும், அது மிஷ்கின் படம் என்பதை மிகத்தெளிவாக சொல்லிவிடலாம். அவர் படங்களின் முதல் ஷாட்கள் பெரும்பாலும் வித்தியாசமான கோணங்களில் இருப்பதை கவனித்திருக்கலாம். ‘அஞ்சாதே’வில் உடற்பயிற்சி செய்யும் அஜ்மலை காண்பித்துவிட்டு அப்படியே கேமரா ந……..கர்ந்து அவரை தாக்க வருபவர்களை காட்டும். ‘யுத்தம் செய்’யில் டாப் ஆங்கிள் ஷாட்டுடன் படம் தொடங்கும். உடனே மழை. ’முகமூடி’யில் இருட்டுக்குள் இருக்கும் கேமரா, மிகத்தொலைவில் இருந்து வரும் லாரியை காட்டும். அந்த ஷாட், இருளும் ஒளியும் கலந்து, ஒரு Noir ஸ்டைலில் இருக்கும் (Noir = மொத்த படத்திலும் அந்த ஷாட் மட்டும்தான்). அதேபோல் இந்தப் படத்திலும் முதல் ஷாட் ஒரு டாப் ஆங்கிள் ஷாட்தான்.

மிஷ்கினுக்கு என்றே இன்னும் சில ஷாட்கள் உள்ளன. ஒரு ஷாட்டில் வசனங்களை பேசாமல், கதாபாத்திரங்களின் உடல்மொழியாலேயே நடப்பதைப் புரியவைக்கும் விதமான ஷாட்கள். உதாரணம்: அந்த ஷாட்டுக்குள் இருக்கும் கதாபாத்திரம், தலையை மெதுவாக தொங்கப்போட்டுக்கொள்ளும். அல்லது மெதுவாக தலையை உயர்த்தும். இல்லையேல் வலது, இடது பக்கங்களை இதேபோல் மெதுவாக கவனிக்கும். அந்த ஷாட்டும் அந்த செய்கை முடிந்தபின்னரும் ஓரிரு நொடிகள் அப்படியே கட் ஆகாமல் இருக்கும். இந்த ஷாட்களில் நடிக்கும் நடிகர்கள் சொதப்பினால், அந்த ஷாட் நகைச்சுவை ஷாட் ஆகிவிடும். சொதப்புகிறார்கள். அப்படியே ஆகிறது. குறிப்பாக, போலீஸாக நடித்திருக்கும் ஷாஜி. அவரது உடல்மொழி மிகவும் விசித்திரமாக இருக்கிறது. அவரது உடைகள், அவரது வசனம் பேசும் பாணி ஆகியவை சரியாக வரவில்லை. சில காட்சிகளில் நன்றாக நடித்தும், பல காட்சிகளில் மனிதர் கோட்டை விட்டுவிட்டார். முதல் படம் என்பதால் அந்த பதற்றம் தெரிகிறது. ஷாஜி மட்டும் இல்லாமல், படத்தில் வரும் பலரின் உடல்மொழியும் ஆங்காங்கே செயற்கையாகவே இருப்பது படத்தின் ஒரு மைனஸ் பாயிண்ட்.

மிஷ்கினின் இன்னொரு மிகப்பெரிய டெம்ப்ளேட் – வரிசையாக வந்து ஒவ்வொருவராக அடிவாங்கி செல்வது. ஃபேஸ்புக்கில் இது பயங்கர நகைச்சுவை ஆகி, மிஷ்கின் என்றாலே இதைத்தான் எல்லோரும் சொல்வதாக இருக்கிறது. ஆனால் அது இந்தப்படத்தில் இல்லை.

வசனங்கள் இந்தப்படத்தில் மிகவும் குறைவு. முழுப்படமும் இரவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரே இரவில் நடக்கும் ஒரு கதைதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.

படத்தின் கதை ஆரம்பிப்பது, முதல் ஷாட்டிலேயே. அனாவசியமாக எந்த ஷாட்டையும் விரயம் செய்யாமல் எடுத்திருப்பது நல்ல விஷயம். ஆனால், படத்தின் இண்டர்வல் வரை நடக்கும் எந்த சம்பவத்திலும் என்னால் ஒன்ற முடியவில்லை. எமோஷனலாக ஆடியன்ஸை படத்தின் உள்ளிழுக்கும் தன்மை இதன் முதல் பாதியில் இல்லை. ஆனால், முதல்பாதியில்தான் பல சம்பவங்கள் நடக்கின்றன. கண்முன் ஒவ்வொன்றாக சம்பவங்கள் செல்கின்றன. இருந்தாலும் அவற்றில் ஒன்றிப்போய் படத்தின் கதையை ஃபாலோ செய்யமுடியாமல், கதைக்கு வெளியே நின்று வெறுமனே காட்சிகளை கவனிக்க மட்டுமே தோன்றுகிறது. இதுதான் முதல்பாதியின் பெரிய குறை (ஒருவேளை டெலிபரேட்டாகவே அப்படி இருந்திருக்குமோ என்று யோசித்துப்பார்த்தேன். அதற்கு வாய்ப்பில்லை).

இதற்குக் காரணம், படத்தில் நடித்திருக்கும் மிஷ்கினின் கதாபாத்திரத்தின்மீதும் சரி, ஸ்ரீயின் கதாபாத்திரத்தின் மேலும் சரி, முதல் பாதி முடியும்வரை எந்த அட்டாச்மெண்ட்டும் வரவில்லை. படத்தின் துவக்கத்திலேயே மிஷ்கினின் பாத்திரத்தைப்பற்றி போலீஸ் மூலமாக நமக்குத் தெரிந்துவிடுகிறது. கதையில் ஒரு சிறிய துணுக்காக, ஒரு சமூக விரோதிக்கு சிகிச்சை செய்து போலீஸில் மாட்டிக்கொள்ளும் ஸ்ரீயின் கதை இருந்தாலும், அதனால்கூட அவர் பாத்திரத்தின் மேல் எந்தவித உணர்ச்சிகளும் வரவில்லை.

ஸ்ரீயின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் நன்றாக இருந்தது. அவரது reactionகள் நன்றாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இறுதியில் என்ன நடக்கப்போகிறது என்பது முதலிலேயே தெரிந்துவிட்டால்கூட, ஸ்ரீயின் கதாபாத்திரத்தின் justification புரிகிறது.

எப்போது சட்டென்று கதைக்குள் என்னால் நுழைய முடிந்தது என்றால், படத்தில் கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் பார்வையில்லாத பிச்சைக்காரியைப் பார்த்தபோது கூட அல்ல. அந்தப் பெண் பேச ஆரம்பித்தபோதுதான். அவரது குரல்தான் என்னை படத்தினுள் தள்ளியது. அவரது குரல் அத்தனை பொருத்தம். அதில் தெறிக்கும் உணர்ச்சிகள் மனதைப் பிழிகின்றன. அவர் பேசும்போது கவனித்துப் பாருங்கள். அது சொந்தக்குரலா அல்லது பின்னணிக்குரலா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் சரி. அந்தக் குரலில் எதுவோ இருக்கிறது. தனக்கு மிகவும் நெருக்கமான ஒரு மகனையோ அல்லது குழந்தையையோ அழைக்கும் குரல் அது. அந்தக் குழந்தையிடம் ஒரு உதவி கேட்கும்போது அது எப்படி இருக்கும்? செல்லமாக, இறைஞ்சி, கோபமே இல்லாமல் ஒரு வித blissful உணர்ச்சியோடு பேசியிருக்கிறார் அந்தக் குரலுக்கு சொந்தக்காரப்பெண். அந்தக் குரல்தான் இந்தப்படத்தின் தலையாய நடிகர். (ஞாநி ஸ்டைலில்) அந்தக் குரலுக்கு ஒரு பூங்கொத்து. அந்தக் குரலை கேட்கும்போதெல்லாம் அதில் இயல்பாக வெளிவரும் எமோஷன்களை மறக்கவே முடியாது.

அதேபோல், அந்த நடிகை ஒரு குறிப்பிட்ட காட்சியில் தரையில் விழுந்து கும்பிட்டுக் கதறுவதுபோல் வரும். பலமுறை. அந்தக் காட்சியின் இயல்புத்தன்மை எனக்குப் பிடித்தது. அந்தப் பெண்ணும் நன்றாக நடித்திருக்கிறார்.

கூடவே, படத்தில் மிக அருமையான காட்சிகளும் இல்லாமல் போகவில்லை. உதாரணம் – போலீஸ் சுடும்போது ஸ்ரீயின் கதாபாத்திரம் அதை தேமேயென்று பார்த்துக்கொண்டிருப்பது. அதனால் ஏற்படும் சாவு. அதற்கு ஸ்ரீயின் இறுதி reaction. இந்த இடத்தில், ஸ்ரீ அழும்போது, மிஷ்கினின் முகம் டக் டக்கென்று மாறுகிறது. முதலில் கோபம் – பின்னர் கருணை என்ற உணர்ச்சிகளை மிகச்சரியாக பிரதிபலித்திருக்கிறார் மிஷ்கின் என்ற நடிகர். இதைப்போல் மிஷ்கினின் நடிப்பை சொல்ல இன்னும் சில காட்சிகள் உண்டு. அதில் ஒன்று – பிறகு.

இதன்பின் தொடங்கும் இரண்டாவது பாதியும் பல சம்பவங்களால் செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் ஓரளவு ஒன்ற முடிகிறது. குறிப்பாக, படத்தில் வுல்ஃப் கதாபாத்திரம் பேசும் ஒரு வசனம். கிட்டத்தட்ட 3-4 நிமிடங்கள், ஒரே ஷாட்டில் இருக்கும் வசனம் இது. ‘நந்தலாலா’வில் இப்படி ஒரு வசனம் ஸ்னிக்தா பேசுவதாக வரும். அந்த வசனத்தை கேட்கும்போதெல்லாம் எரிச்சல் பிய்த்துக்கொண்டு வரும். இந்தப்படத்தில் அந்த ஒரே ஷாட் வசனம் ஆரம்பித்தபோதே அது அவசியம் அட்லீஸ்ட் 5 நிமிடங்கள் வரும் என்று தெரிந்துவிட்டது. ‘செத்தோம்’ என்று மனதில் நினைத்துக்கொண்டேன். தன்னிச்சையாக இரண்டு கைகளாலும் தலையை அழுந்தப் பிடித்துக்கொண்டேன். ஆனால், அந்த வசனம்தான் இந்தப்படத்தின் moodஐ மாற்றுகிறது. அந்த வசனத்தால்தான் இந்தப் படம் பலருக்கும் பிடிக்கப்போகிறது. படமே அதனால்கூட ஓடலாம். சிலர் தாரைதாரையாக கண்ணீர் விட்டுக் கதறிக்கூட அழ நேரிடலாம். கபர்தார். அந்த முழு வசனமுமே அட்டகாசம் என்று சொல்லமாட்டேன். ஆனால் அந்த வசனத்தில் ஓரிரு இடங்களில், நெஞ்சில் எதுவோ அசைந்தது.

படத்தின் இரண்டாம் பாதி எனக்குப் பிடித்ததற்கு இன்னொரு காரணம் – இளையராஜா. வெகுநாட்கள் கழித்து (வருடங்கள்), அவரது பின்னணி இசை இந்தப் படத்தில் கதையோடு ஒன்றியிருக்கிறது. எண்பதுகளில் மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களில் பின்னணி இசை எப்படி இருந்தது? அந்தப் படங்களை மறந்தாலும், இசையை மறக்கமுடியாது (ஹே ராமையும் சேர்த்துக்கொள்ளலாம். பிதாமகனில் ஓரிரு காட்சிகள்). இந்தப்படத்தின் இரண்டாம் பாதியில் அந்த அனுபவம் கிட்டியது. இளையராஜாவுக்கு இதுபோன்ற படங்கள்தான் தேவை. மிஷ்கின் ராஜாவை பெண்டு நிமிர்த்தியிருக்கிறார் என்பது தெரிகிறது. அப்படிப்பட்ட நபரால்தான் ஒரு இசையமைப்பாளருக்குள் இருக்கும் திறமையை வெளியே பிடுங்கிப்போட முடியும். இந்தப் படத்தின் இசையை படம் பார்க்கையில் காட்சிகளோடு சேர்ந்து கேளுங்கள்.

வழக்கமாக மிஷ்கின் படங்களில் இருக்கும் அதே குறைபாடுகள் அப்படியப்படியே இந்தப்படத்திலும் இருக்கின்றன. அவைகளை மிஷ்கின் மாற்றுவதாகத் தெரியவில்லை. இதற்கு இன்னொரு உதாரணம் – படத்தில் வரும் சொங்கி வில்லன். இந்த வில்லனின் உடல்மொழியை கவனியுங்கள். எத்தனை செயற்கையாக இருக்கிறது என்பது தெரியும். குறிப்பாக அவன் கைகளை ஆட்டி ‘யெஸ்ஸ்ஸ்’ என்று சொல்லும்போது. அதேபோல் அவனது வசனங்கள். ஆஃப்டரால் நம்மாலேயே இது கவனிக்கப்படும்போது, மிஷ்கின் ஏன் இதை கவனிக்கத் தவறுகிறார்? இத்தகைய செயற்கையான ஷாட்களை குறித்து வைத்துக்கொண்டு காண்பிக்கக்கூட முடியும். அவ்வளவு இருக்கின்றன.

இருந்தாலும், ‘முகமூடி’ போன்ற ஒரு படத்தை அளித்த மிஷ்கினிடமிருந்து இது ஒரு வேறுபட்ட படம். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் எந்தத் தமிழ்ப்படத்தை விடவும் இந்தப் படம் நன்றாக ஓடுவதற்குத் தகுதியானது.

மிஷ்கினை நேரில் சந்திக்கும்போது ஒரு கேள்வி இருக்கிறது.

அது ஏங்க எல்லா கேரக்டருமே திடீர்னு பயங்கர ஸ்லோவா ரியாக்ட் செய்யிறாங்க? ஒண்ணு அசையாமல் நிக்கிறது; இல்லாட்டி வானத்தையோ பூமியையோ பார்க்குறது; இல்லாட்டி மெதுவா மூஞ்சியை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திருப்புறது.. இதுனால நீங்க சொல்லவரும் செய்திதான் என்ன? இதன் உபகேள்வி – ‘நீங்க இந்த மாதிரி ஷாட்களை வைக்க நினைக்கும்போது அதன் அடிப்படை காரணம் என்ன? ஒருவேளை தகாஷி கிடானோவின் பாதிப்பா? ஆனா அவரு படங்களில் இந்த ஷாட்கள் செயற்கையா தெரியாதே? ஒருவேளை உங்க படங்களில் சில காட்சிகள் வேணும்னே செயற்கையா தெரியணும்னு நினைச்சே அப்படி வெக்கிறீங்களா?’

இன்னொன்று – ‘நடிக்கவைக்கும்போதே நடிகர்கள் செயற்கையா நடிக்கிறது உங்களுக்கு தெரியாதா? ஆம் எனில் ஏன்?’

பி.குக்கள்

1. இந்தப்படத்தின் தீம் தமிழ்ப்படங்களில் ஏற்கனவே கையாளப்பட்டிருக்கிறது. 1972ல் சிவாஜி நடித்த ‘நீதி’ படம் அப்படிப்பட்டதே (அந்தப்படம் அதே வருட ஆரம்பத்தில் ஹிந்தியில் வெளிவந்த ராஜேஷ் கன்னாவின் ‘துஷ்மன்’ படத்தின் ரீமேக் என்று நினைக்கிறேன். ‘காப்பி’ என்று சொல்லாமல் ரீமேக் என்று சொன்னதன் காரணம், தயாரித்திருப்பவர் பாலாஜி).

2. படத்தின் டைட்டில், மிஷ்கின் அந்த வீடியோ பேட்டியில் சொல்வதுபோல, ஸ்ரீயின் கதாபாத்திரத்தையும் மிஷ்கினின் பாத்திரத்தையும் குறித்தால் கூட, அதைவிட நெருக்கமான காரணம் வேறொன்று உண்டு. அது என்ன என்பதை தியேட்டரில் பாருங்கள்.

3. படத்தைப்பற்றிய வேறு சில விஷயங்களை மிஷ்கினே சொல்லியிருக்கிறார். நான் பார்த்ததிலேயே இதுதான் அவரது சற்றே ‘அடக்கமான’ பேட்டி. ‘சற்றே’ என்று சொல்லியிருப்பதன் காரணம் பேட்டியை பார்த்தால் தெரியும்.

4. மிஷ்கினின் சில பிற படங்களின் விமர்சனங்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

 

  Comments

28 Comments

  1. ramesh

    இங்கே க்ளிக் ithula irukara link la ‘:’ missing. correct pannidunga. lollu sabha varisaila unga blogs padichaa tamil cinemaa urupatrum..
    namma kovai pakkam poneengalaa?

    Reply
    • Rajesh Da Scorp

      //lollu sabha varisaila unga blogs padichaa tamil cinemaa urupatrum// – ஞே (????!!!??)

      Reply
  2. Rajsankat

    அட்டே மிஷ்கின் என்ன செய்தாலும் பாதிப்பாமாம்

    Reply
  3. பட்டத்து யானை படம்லாம் முதல் நாளே இங்க ரிலீஸ் ஆயிருந்துச்சி.. அதலாம் பாக்கலனு யாரு இங்கே அழுதா ??!!
    நல்ல படங்களுக்கு மக்கள்ட்ட மட்டுமில்லாம தியேட்டர்காரர்கள்ட்டயும் வரவேற்பு இல்லங்கறது இன்னொரு தடவை உறுதியாகி இருக்குது.

    நீங்க சொன்ன 4 தியேட்டருமே இதுக்கு முன்னாடி போனது இல்லை. எப்டியாவது தேடிப்பிடிச்சு போயி பாத்துருவோம். மிக்க நன்றிங்க்னோவ்..!!

    Reply
    • Rajesh Da Scorp

      //நல்ல படங்களுக்கு மக்கள்ட்ட மட்டுமில்லாம தியேட்டர்காரர்கள்ட்டயும் வரவேற்பு இல்லங்கறது இன்னொரு தடவை உறுதியாகி இருக்குது.// – யெஸ் . ஆனா அதுக்கு மிஷ்கினின் ட்ராக் ரெகார்டுமே இன்னொரு காரணம். நான் சொன்ன நாலு தியேட்டர்ல போயி பார்த்தீங்கன்னா, பெங்களூரில் படம் பார்க்கும் ஆர்வமே போயிடும் 🙂

      Reply
  4. அந்த முதல் பாராவின் கடைகோடியில் உள்ள “பிரபல” பதிவர் யார்னு கண்டுகினே தல. அவர் ஏற்கனவே எழுதிய முகமூடி-சோடாமூடி பதிவில் கடைசியில் வரும் வரிகளே இவை. ்

    Reply
    • Rajesh Da Scorp

      அந்த வெட்டிமவனே தான் 🙂

      Reply
      • //ஒரு ’பிரபல’ பதிவர்// 🙂
        //அந்த வெட்டிமவனே தான்// 🙂 🙂

        Reply
  5. நல்ல படம் தான் கண்டிப்பா பாக்கணும் மிஸ்கின் காக

    ஆனால் எங்க ஊருல இன்னும் ரிலிஸ் ஆகல .. ராஜா ராணியும், வருத்தபடாத வாலிபர் சங்கமும் தலைவா வும் ஓடுது என்ன கொடும பாத்திங்களா

    Reply
    • Rajesh Da Scorp

      🙂 கரெக்ட் தான். ஆனா அந்தப் படங்களும் ஒடனும்னு நினைச்சிதானே ரிலீஸ் பண்ணுறாங்க 🙂 .. மிஷ்கின் இன்னும் பல தியேட்டர்ல போட்டிருக்கலாம். டிஸ்ட்ரிப்யூட்டர்கள் கிட்ட பேசி,…

      Reply
  6. எனக்கு முதல் பாதி பிடித்து இருந்தது அமைதியா இருந்த அந்த குடும்பத்துக்கு உதவி பண்ணறண்னு சொல்லிட்டு உபத்தரம் கொடுக்கும் கதை தெரிந்தவுடன் படம் பாக்கும் ஆர்வம் கொஞ்சம் குறைந்தவிட்டது மொத்தத்தில் ஒரு நல்ல தமிழ் படம்

    Reply
    • Rajesh Da Scorp

      உபத்திரவம் – யெஸ். ஆனா அதைத்தான் அந்த வுல்ஃப் கதாபாத்திரம் சொல்லுதே? இதான் பிரச்னை. இதுனாலதான் இப்புடிலாம் நடக்குதுன்னு…

      Reply
  7. vincent vinusuthan

    hai there,
    i’m new to your blog, read some world movies & asked a friend to translate! to my knowledge whether it’s good or not – good, least the director tried to make something out of the box from normal indian goofy movies.

    Reply
    • Rajesh Da Scorp

      //Indian Goofy Movies// – Couldn’t agree more 🙂

      Reply
  8. Sue

    I hated the voice of female character u praise. Sounded so artificial and like that of a city college girl in terms of accent and modulation. Did not suit the character.

    Reply
  9. araathu

    படம் இன்னிக்குதான் பாத்தேன்.வந்ததும் உங்க விமர்சனத்தை படித்தேன். படம் போலவே இருந்தது உங்கள் விமர்சனமும். { ) – ஒண்ணுமில்ல குறியீடு 🙂

    Reply
  10. Arasu

    I have seen the movie today…. I think I have issues with my understanding of the movie. Normally I fully go with your views on any movies except this. But this movie I found it totally unnatural, lacks logic. Even dialogues were totally unnatural. Actors were more dramatic. I am of the opinion that the movie lacks logic.

    Anyway I would like to watch one more time if time permits in the near future to understand if I have missed anything.

    Reply
  11. Muthuram

    இளையராஜாவை இவ்வளவு மட்டமா யாரும் விமர்சிக்க முடியாது… சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை புரிந்து படம் எடுத்தவர்களுக்கு ராஜாவை விட யாரும் துணை நின்றது கிடையாது.நல்ல திரைக்கதையும், காட்சியாக்கமும் இருந்தால் அவரிடம் யாரும் வேலை வாங்க வேண்டிய அவசியம் இல்லை.அவரை இம்ப்ரெஸ் செய்யும் ஒரு படத்தை எடுத்து கொடுத்துவிட்டால் அதற்க்கு அவர் கொடுக்கும் இசை உச்சகட்ட மாகத்தான் இருக்கும். மிஷ்கின் ராஜாவை பெண்டு நிமித்தினாரா? ஹ ஹ ஹ ஹ … நல்ல காமடி…

    Reply
    • Arun

      //மிஷ்கின் ராஜாவை பெண்டு நிமித்தினாரா? ஹ ஹ ஹ ஹ … நல்ல காமடி…// I think I have to agree to this statement to some extent. The entire bgm was done in less than a week (5 days to be exact).

      Reply
  12. Jerald

    படத்தைப்பற்றி மிஷ்கினே இங்கே சொல்கிறார். இந்த வீடியோவை முதலில் பார்த்துவிடுங்கள்.

    Reply
  13. Jerald

    படத்தைப்பற்றி மிஷ்கினே இங்கே சொல்கிறார். இந்த வீடியோவை முதலில் பார்த்துவிடுங்கள். In this Mishkin says he doesn’t know anything about Music. It appears, Your statements are complete wrong “மிஷ்கின் ராஜாவை பெண்டு நிமிர்த்தியிருக்கிறார் என்பது தெரிகிறது. அப்படிப்பட்ட நபரால்தான் ஒரு இசையமைப்பாளருக்குள் இருக்கும் திறமையை வெளியே பிடுங்கிப்போட முடியும்”.

    Reply
    • No Jerald. I know about Mysskin. அவரு பயங்கரமா அந்த ஸ்டேட்மெண்ட்ல அடக்கி வாசிக்கிறாரு… உண்மைல அவரு ராஜாவை பெண்டு நிமிர்த்தியது நிஜம்தான்

      Reply
      • ituvarai yarukkum comment pottathilla

        oraralavu tamil blogs padithirukkiren

        pothuva cinema isaiyai pathi ennakku type panna theriyala

        pls contact 9994814058

        Reply
        • ituvarai yarukkum comment pottathilla

          oraralavu tamil blogs padithirukkiren

          pothuva cinema isaiyai pathi

          ennakku type panna theriyala

          pls cont my mail

          Reply
  14. THERE ARE MANY DOUBTS IN THIS MOVIE PLEASE CLARIFY

    1.en avar boss kolala??
    2. evlo plan panravaru en avar boss kola mudiyatha?
    3.family la 3 perum blind erupangala?
    4.wolf en antha edward kolraru?
    5.avar surrender agi erunda antha family uyir uda erundu erukum
    6.antha bike utravura savurapa ena solavaranga(bible ethuku vachu erukaru)
    7.myskin matra kolai panrapalam avar ku athu thapu nu theriliya
    last padathula ena than solavaranga

    Reply
    • Rajesh Da Scorp

      you are right. There are these kind of doubts. Yes. That’s why I have mentioned in the review about the template scenes. Even then, I think it’s far better than it’s contemporary films released now

      Reply
      • Surya Prakash

        http://rozavasanth.blogspot.in/2013/10/blog-post.html
        Subaguna Rajan
        October 4
        மதிப்பிற்குரிய ஆனந்த விகடன் ஆசிரியர் அவர்களுக்கு,

        ஒருநாளில் இப்படி ஒரு நிலைத்தகவல் வழியாக உங்களுடன் உரையாடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. இப்போதும் இது உங்கள் கண்களுக்கு எட்டிவிடும் என்ற நம்பிக்கையுமின்றியே எழுதுகிறேன். வெகுமக்களின் நுகர்வுக்காக உருவாக்கப்படும் வணிக சினிமாவையும் ஆய்வு நோக்கில் அணுகி அதன் இயங்கு தளத்தின் அடிப்படைகளை / கோட்பாடுகளை அவதானிக்க முயல்வதான போக்கில் ஒரு திரைப்பட ஆய்விதழின் ஆசிரியர் என்ற வகையில் விகடனின் மதிப்பெண் தமிழ்த் திரைப்பட உலகில் எவ்வாறாக எதிர்கொள்ளப்படுகிறது என்பதை அறிவேன்.வலுவான மதிப்பெண் பெரும் திரைப்படத்தின் அடுத்த வாரப் போஸ்டரில் அந்த மதிப்பெண் பிரதானமான இடத்தைப் பிடித்திருக்கும். இதில் எங்கள் காலத்து ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் போல 50% க்கு மேல் மதிப்பெண் வழங்குவது அபூர்வமே. வருடத்திற்கு ஒரு படம் அந்த மதிப்பெண் பெருவதே அதிசயமாக நிகழ்வது போய் ஒரு மாதத்திற்குள் இருமுறை 50% தாண்டி விட்டீர்கள். தமிழ் சினிமா இவ்வளவு ஆரோக்கியமாக வளர்ந்துவிட்டிருப்பது மகிழ்ச்சியான ஒன்றே. ஆனால் ‘பிழை’யான பாட்டொன்றிற்கு பரிசலித்துவிட்டதுதான் துரதிருஷ்டமானது. அதுவும் தமிழ் சினிமாவில் அபூர்வமாய் நிகழும் ‘brilliant moments’ ஐ கொண்டிருந்த ‘மூடர் கூடம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கி நடித்திருக்கும் ‘ ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கும் 51 % வழங்கிவிட்டிருக்கிறது விகடன் விமர்சனக்குழு.ஒரு வெகுமக்கள் சினிமாவை ரசிப்பதற்கான காரணிகள் பலவாய் இருக்கலாம்.அது நபர் சார்ந்து , காலம் சார்ந்து ,சுழல் சார்ந்து உருப்பெறலாம். ஆனால் ஆகச் சிறந்தவற்றை தீர்மானிக்கும் போது சில பொது விதிகளையும்,வரையறைகளையும் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிப்பதே முறை. அவை தெளிவாக அடையாளம் காணப்பட்டு பட்டியலிடப்படவேண்டும்.உங்கள் விமர்சனக்குழு கண்டடைந்திருக்கும் கதைகரு இதுதான்.
        “ அடர்ந்த காட்டில் கரடியும்,புலிகளும் துரத்த தன்னால் கொல்லப்பட்ட ஓர் ஆட்டுக்குட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஓநாயின் கதை” யார் சொன்னது இப்படி ஒரு கதையை, கரடியும், புலியும் தேடுவது ஓநாயை மட்டுமே. அந்தப் பார்வையற்றவர்களின் குடும்பம் செய்த தவறெல்லாம் தங்கள் பிள்ளையைக் கொன்றவனை ‘மன்னித்தது’ மட்டுமே. அவர்களுக்கும் கரடிக்கும் என்ன பகை. புலி/போலிஸுக்கும் அவர்களுக்கு என்ன சம்பந்தம்.ஓநாய் அநாவசியமாய் அந்த அப்பாவிகளை ஆபத்தில் தள்ளி சாகவும் வைத்துவிடுகிறது. ஓநாய் அவர்களைக் காக்கச் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களை விட்டு விலகி போலிசிடம் சரண் அடைவதே. அதன் மூலம் அப்பாவி இளைஞனையும் அவனது குடும்பத்தையும்கூட காப்பாற்றலாம். கதையையே உங்கள் வசதிக்குப் புரிந்து கொண்டு ஒரு ஓட்டை திரைக்கதைக்கு “அட்டகாசம் மிஷ்கின்” என்ற ஆர்ப்பரிப்பு வேறு. அதுசரி “தர்ம நியாயத்துக்கு உட்பட்டு ‘கொலைத் தொழில்’செய்யும் நாயகன்” என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள். தனக்கு உதவப்போய் போலிசிடம் மாட்டிக்கொண்டுவிட்ட இளைஞனை சரண் அடைந்து மீட்டெடுத்திருந்தால் அது நியாயம்.அதைவிடுத்து அவனை தேவையின்றி பிணையாக்கி, அவ்வளவு துயரங்களுக்கும் ஆளாக்குவதுதான் தர்மமா? இரண்டு மெழுவர்த்திகளுக்கு நடுவே சொல்லப்படும் ‘பிளாஷ்பேக்’ யாருக்காக? அவர்களில் புதியவன் இளைஞன் மட்டும்தானே? அவனுக்கு கதை சொல்ல அத்தனை உயிர்பலி எதற்கு? அபத்தமான காtட்சியமைப்புக்கு ‘அபாரம்’ போடும் விகடன்குழுவை என்ன சொல்ல. உள்ளபடியே அன்று எட்வர்ட் கார்த்தியின் கல்லறையில் கூட வேண்டியிருப்பின் அது நினைவு நாளாகத்தானே இருக்கவேண்டும்.(கல்லறைத் திருநாள் என்றால் எல்லாக் கல்லறைகளும் ஒளியில் ஜிவாலிக்கும்) அப்படியானால் இளைஞனை அங்கு அழைத்து வருவது எதற்காக? லாஜிக்கள் பிழைகளல்ல பெரும் ஓட்டையான திரைக்கதை விறுவிறுப்பாக அமைந்துவிட்டால் போதுமா? 1) காரிலிருந்து வில்லனை வெளியேற்றும் சாமர்த்தியம்??? அடேங்கப்பா !!!!!! அதைவிட பைக்கில் வரும் வில்லனின் குண்டு எண்ணிக்கையை வைத்து அடிக்கும் சாமர்த்தியம்!!! அட அட ஆனால் இவன் துப்பாக்கியில் எண்ணிக்கையில்லா குண்டுகள் . சென்னையின் அந்த இரவுகளில் குண்டடிபட்டு கிடக்கும் போது கமெண்ட் அடிக்க நாலுபேர் வருவதொடு சரி மற்றபடி ஒரு மனிதன்கூட வருவதில்லை.ரயில் நிலையமும் , ரோடுகளும் ஆளரவமற்று. மத்திய கைலாஷ் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஓடும் ஸ்ரீ ரயில் நிலையத்துக்கு ஓட போலீஸ் பின் தொடர்கிறது ஆனால் அதற்கு முன்னரே கரடி ஆட்கள் ரெடியாக அங்கே நிற்கிறார்கள். ஒரிஜினல் போலிசுக்குத் தெரியாதது ஒட்டுக்கேட்கும் உளவாளிப் போலீசுக்குத் தெரிந்துவிடுகிறது. கரடி அனுப்பும் சக கொலையாளி எப்படி மோப்பம் பிடித்து கல்லறையை வந்தடைகிறான். கடைசி நிமிடத்தில் பார்வையற்றவர்கள் ஆர் சியா? புரட்டஸ்டண்டா? எனக் கேட்டு கல்லறைக்கு விரையும் ஷாஜிக்கு திடீரென எப்படி அது தோன்றுகிறது. அதுவரை வுல்ஃப்க்கும் அவர்களுக்குமான தொடர்பு தெரியாமலா இருந்தது. உங்கள்குழு மூன்று போலிஸ்காரர்கள் விதவிதமான கடவுளர்களையும், கடைசி ஆள் ‘ஐயா’ என்றபடியே சாவதையும் ரசித்துவிட்டு, இன்னொரு போலிஸ்காரர் ‘போட்டுக் கொடுக்கும்’ இன்ஸ்பெக்டரிடம் அந்த வேளையிலும் ‘உங்களுக்கு புரமோஷன் உறுதி. என்னையும் கவனிச்சுக்கங்கய்யா’ என்று குளோசப்பில் சொல்வதை ஏன் விட்டுவிட்டார்கள். இளையராஜாவின் இசைக் கோளம் (???) என்ன சொல்ல. சில காட்சிகளில் இசை ‘முன்னணி…………………………………” இருப்பதே உண்மை. ஆனந்த விகடன் வழ்ங்கும் மதிப்பெண்களுக்கு இவ்வளவு பெறுமதி இருக்கும்போது அதன் பொறுப்பும் அதிகமென்றே தோன்றுகிறது. ஒரு திரைப்படம் சாகசமான

        Reply
        • jockey

          சரியாக நச்சுனு மூக்கை உடைக்கிற மாதிரி சொல்லிடிங்க !!! போங்க பாஸ் …..

          Reply

Join the conversation