Pan’s Labyrinth (2006) – Spanish

by Karundhel Rajesh December 2, 2009   world cinema

சிறுவயதில் நமக்குப் பிடித்தமானவைகளாக இருப்பவை ‘தேவதைக்கதைகள்’ எனப்படும் faity tales. நமது பாட்டியோ அம்மவோ கதைகளைச் சொல்லச்சொல்ல, நாம் அவற்றில் லயித்துப்போய், அதன்பின் பலநாட்கள் அந்த உலகிலேயே சஞ்சரித்துக்கொண்டு இருந்திருப்போம். இந்தக்கதைகளின் பாதிப்பு இன்னமும் நமது நெஞ்சை விட்டு அகன்றிருக்காது. அவ்வப்போது சிறு வயது நினைவுகளில் மூழ்கும்போது, இக்கதைகளைப் பற்றிய பசுமையான நினைவுகள் நம் நெஞ்சத்தில் எழும்பும்.

அப்படி ஒரு கதை, நம் நிஜவாழ்வில் நடந்தால் எப்படி இருக்கும்? அது தான் ‘Pan’s Labyrinth’.

‘Fantasies’ எனப்படும் நிஜவாழ்வும் சி.ஜியும் கலந்த படங்களை எடுப்பதில் பல கில்லாடிகள் உலக சினிமாவில் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர், ‘Guillermo Del Toro’. அவர் எடுத்த ‘Hellboy 1 and 2’ படங்கள் அவருடைய அற்புதமான கற்பனைத்திறனுக்கு சில நல்ல உதாரணங்கள். இவர்தான் இந்தப்படத்துக்கும் இயக்குநர்.

காலம்: 1944. ஓஃபெலியா என்ற சிறுபெண் படுகாயப்பட்டுக் கிடப்பதில் படம் தொடங்குகிறது. பின்னணியில் ஒரு குரல் அவளது கதையை நமக்குச் சொல்ல ஆரம்பிக்கிறது. பாதாள உலகின் இளவரசியான மோவான்னா, வெளியுலகைப் பார்க்க ஆசைப்பட்டு, அரண்மனையை விட்டுத் தப்பித்து, பூமிக்கு வருகிறாள். ஆனால், சூரிய ஒளியினால் குருடாக்கப்பட்டு, பூமியிலேயே இறந்துவிடுகிறாள். அவளது தந்தையான அரசரோ, தன் பெண் தன்னிடம் திரும்பி வருவாள் என்று அவளுக்காகக் காத்திருக்கிறார்.

நிகழ்காலம்: ஸ்பெயின் நாடு. ஸ்பானியப் போர். ஒஃபெலியாவின் வளர்ப்புத்தந்தை ஒரு ராணுவ அதிகாரி. அவருடைய பணி, ஸ்பானிய கெரில்லாக்களை வேட்டையாடிக் கொல்வது. அவருடைய மனைவி, கர்ப்பமாக இருப்பதினால், தான் இருக்கும் இடத்துக்கே அவரை வரவழைத்துக்கொள்கிறார். கூடவே ஒஃபெலியாவும் வருகிறாள்.

அங்கு ஒஃபெலியா ஒரு பூச்சியைப் பார்க்கிறாள். அது அடிக்கடி அவளுக்குத் தட்டுப்படுகிறது. அதனைப் பின் தொடர்ந்து செல்லும் அவள், ஒரு குகைக்குள் நுழைகிறாள். அங்கு ஒரு பூதம், அவள் தான் மொவான்னா என்று சொல்லி, அதனை அவள் நிரூபிக்கவேண்டும் என்றும், அதனால், அவள் மூன்று வேலைகளை வரும் பௌர்ணமிக்குள் செய்ய வேண்டும் என்றும், அப்பொழுது அவள், தனது தந்தையான பாதாள உலகின் அரசரிடம் சென்றுவிடலாம் என்றும் கூறுகிறது. இக்கதைகளில் மிகுந்த நம்பிக்கையுள்ள ஒஃபெலியாவும் ஒத்துக்கொள்கிறாள்.

அவள் இம்மூன்று வேலைகளையும் செய்யச்செய்ய, அவள் வளர்ப்புத்தந்தையான ராணுவ அதிகாரி, கெரில்லாக்களை வேட்டையாடுவதையும் நாம் காண்கிறோம். இடையில் பல அதிசயங்கள் நடக்கின்றன. முடிவில், அவளுக்கு என்ன ஆயிற்று என்பதே இப்படம்.

இப்படத்தின் இசையும் ஒளிப்பதிவும் இரண்டு அற்புதங்கள் என்றே சொல்லலாம். ஒளிப்பதிவு செய்தவர், Guillermo Navarro. பல நல்ல படங்களை ஒளிப்பதிவு செய்திருக்கும் திறமைசாலி. இசையமைத்தவர், Javier Navarrete. இப்படத்துக்கு மூன்று ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன (ஒளிப்பதிவு, ஒப்பனை, கலை). கான் திரைப்பட விழாவில் முதன்முதலில் திரயிடப்பட்டபோது, பல நிமிடங்கள் (22 என்று சொல்லப்படுகிறது) கைத்தட்டலும் standing ovationனும் இப்படத்துக்குக் கிடைத்தது என்பது ஒரு கொசுறுத் தகவல். இப்படத்தை இயக்குவதற்காக, நார்நியா படத்தின் வாய்ப்பை கில்லெர்மோ டெல் டோரோ மறுத்தார்.

அன்பு, சகிப்புத்தன்மை, கருணை ஆகியவற்றுக்கு இத்திரைப்படத்தை உதாரணமாகச் சொல்லலாம். மொத்தத்தில், உலக சினிமா வரிசையில், ஒரு சிறந்த படம்.

எனது ஆங்கில விமர்சனத்தை இங்கே காணலாம்.

இதன் ட்ரைலர் இங்கே.

  Comments

8 Comments

  1. தல… அறிமுகத்திற்கு மிக்க நன்றி. படத்தை கேள்விப் பட்டதே இல்லை! லைப்ரரிக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்து சொல்லுறேன்.

    Reply
  2. ரொம்ப நல்ல படம் பாலா . . உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்னு நினைக்குறேன். உங்க அறிமுகம் கெடைச்சா, இன்னும் நெறைய பேரு இத பார்ப்பாங்க! பார்த்துட்டு, உங்களுக்குப் புடிச்சிருந்தா,அறிமுகப்படுத்துங்க. .

    Reply
  3. பகிர்விற்கு நன்றி தல… டவுன்லோட் செஞ்சுக்கறேன்

    Reply
  4. நண்பரே,

    அருமையான படங்களில் ஒன்று. டெல் தோரோவின் கற்பனையும் கவித்துவமான பார்வையும் அரிதான ஒன்று. ஹெல்பாய் 2ல், வனதேவதையுடன் ரெட் மோதும் காட்சியின் முடிவை மறக்க முடியாது.

    Reply
  5. @ சென்ஷி – பார்த்துட்டு சொல்லுங்க 🙂

    @ காதலரே – நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. அந்த வனதேவதையின் முடிவும், அதன் மூலம் நம் மனதில் எழும் மென்சோகமும், விவரிக்க இயலாதது . . அருமையான கருத்து . .

    Reply

Join the conversation