Pizza (2012) – Tamil
எச்சரிக்கை – ஸ்பாய்லர் அலர்ட் (என்னாது பாய்லர் அலர்ட்டா). . படம் பார்த்திராதவர்கள், இக்கட்டுரையில் ஒன்றிரண்டு ஸ்பாய்லர்கள் வருவதால், நின்று நிதானித்து படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெங்களூரில் இப்போது தான் பீட்ஸா வெளிவந்திருப்பதால், இன்று மதியம் இரண்டு மணி ஷோ. ஒன்றரைக்கு தியேட்டரில் நுழையும்போது (முகுந்தா) மொத்தமே பத்து பேர் இருந்திருந்தால் அதிகம். ஆகவே சாப்பிட பக்கத்து உணவகத்துக்கு சென்றுவிட்டு 1:50க்கு வந்தால், பெரிய வரிசை ஒன்று உருவாகியிருந்தது. கொளுத்தும் வெய்யிலில் அதில் நின்றேன். என் பின்னால் நின்றுகொண்டிருந்தவர் ஒரு தெலுங்கர். இன்னொரு தெலுங்கு நண்பரிடம், பீட்ஸாவைப் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார். எனக்கு முன்னால் இருந்தவர்கள் மூவர் தீவிர கன்னடிகர்கள். டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே பால்கனியில் சென்று அமர்ந்தபோதும், கன்னட – தெலுங்கு கோஷங்களே அதிகம் கேட்டவாறு இருந்தது.
படத்தின் முதல் இருபது நிமிடங்கள் – வெளிப்படையாக சொல்வதென்றால், அலுப்பாகவே இருந்தன. ஹீரோ-ஹீரோயின் காதலில் ஒரு உயிர்ப்பே இல்லை. அவர்கள் ஏன் சேர்ந்து வாழ்கிறார்கள்? அவர்களுக்கிடையே இருக்கும் காதலின் ஆழம் என்ன? குச் நஹி. ஆகவே, நான் நெளிய ஆரம்பித்தபோதுதான் – கதாநாயகன் ஏதோ ஒரு வீட்டுக்கு பீட்ஸா கொடுக்கச் சென்றான். உடனே நிமிர்ந்து அமர்ந்தேன். ஆனால் அதிலும் விழுந்தது லாரி மண். அந்த வீட்டுக்குள் கதாநாயகன் சென்றபின்னர் நடந்த சம்பவங்கள், படத்தின் முதல் இருபது நிமிடங்களே எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்க வைத்தன. அந்த வீட்டுக்குள் நிகழும் சம்பவங்கள் அத்தனை செயற்கை. அதிலும் emotional quotient சிறிதும் இல்லாததால், ‘அடப்பாவிகளா.. இந்தப் படத்தையா எல்லாரும் பாராட்டுறாங்க?’ என்ற உணர்வு எழுந்தது (ஆனால் இதுவரை இந்தப் படத்தின் கதையோ விமர்சனமோ ஒன்று கூடப் படிக்காமல் இருந்தேன். ஆகவே படத்துக்குள் நுழையும் வரை படத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. அதேபோல் படத்தைப் பற்றி ஒரு மில்லிக்ராம் கூட எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல்தான் சென்றேன்). படத்தின் இடைவேளையில், இந்தப் படம் நன்றாக இருக்கிறது என்று சொன்ன நண்பன் பாலுவிடம் ஃபோனில் புலம்பினேன் (’பழிவாங்கிட்டாண்டா’).
சரி. ஏன் முதல்பாதி எரிச்சலாக இருந்தது?
அந்த வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களே காரணம். அவற்றில் ஒன்றில்கூட ஒரு ஈடுபாடே வரவில்லை. மொந்தையாக ‘தேமே’ என்று அமர்ந்து, ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். பொதுவில் ஒரு ஹாரர் படம் என்றால், அந்தச் சம்பவங்களுக்கும் அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்கும் நல்ல தொடர்பு – உறவுமுறை அல்ல – படம் பார்க்கும் ஆடியன்ஸை டக்கென்று கதையோடு பிணைக்கும் சம்மந்தம் – இருக்கவேண்டும் (The Shining – ஒரு சிறந்த உதாரணம்). இந்த முதல்பாதியிலோ கதாநாயகன் – கதாநாயகிக்கு இடையில் காட்டப்பட்டுள்ள காதலே (உண்மையில் அவர்களுக்குள் காதலே இப்படத்தில் காட்டப்படவில்லை என்றே சொல்வேன்) ஏனோ தானோ என்று அலுப்பாக இருந்ததால், அதேபோன்ற சித்தரிப்பே இந்த முதல் பாதி முழுமையிலும் நீடித்தது. இதற்கும் பிரதான காரணம் – கதாநாயகன் மூச்சுவாங்கிக்கொண்டே அங்குமிங்கும் திரும்பிப்பார்த்துக்கொண்டே ஓடி, மீண்டும் திரும்ப வந்த இடத்துக்கே (முகத்தில் எந்தப் பரபரப்புமின்றி ஜாலியாக) வந்து நின்றதே.
ஆகவே, இடைவேளை வரை, இந்தப் படம் செம மொக்கை என்பதே என் கருத்து. இடைவேளைக்குப்பிறகு இது இன்னமும் போர் அடிக்கும்; ஆகவே கொஞ்ச நேரம் கழித்து வெளியேறிவிடலாம் என்று நினைத்தேன்.
இடைவேளைக்குப்பிறகும் கதாநாயகன் அந்த வீட்டை விட்டு வெளியேறி, சகாக்களுடன் சேர்ந்து, அதன்பின்னர் தனது வீட்டின் சாமான்களை எடுத்துக்கொண்டு வெளியேறும்வரை அந்த அலுப்பு நீடித்தது. இந்த இடத்தில், வழக்கமான தமிழ் டெம்ப்ளேட் – கதாநாயகன் ஒரு ஸ்ப்ளிட் பெர்ஸனாலிடி – என்பதுதான் வரப்போகிறது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமே இருக்கவில்லை. காதலில் விழுந்தேன் படம் போல, கதாநாயகி என்பவள் தன்னுடனேயே இருப்பதாக கற்பனை செய்துகொண்டிருக்கும் கதாபாத்திரம் இது என்று யூகித்தேன். காரணம், அப்படித்தான் அதுவரை திரைக்கதை கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
ஆனால், எனது மண்டையில் டகாலென்ற அடி விழுந்தது எப்போதென்றால், ஹீரோ தனது நெற்றியைத் துடைக்கும் காட்சியில்தான். அதை நான் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் கூட.
பொதுவாக திரைக்கதை மரபு என்னவென்றால் (ரூல் அல்ல. அதனால்தான் மரபு என்று சொல்லியிருக்கிறேன்), இடைவேளைக்குப்பிறகு படம் முடியும் நேரத்தில் திடீரென்று எதாவது ‘ராபணா’ என்று புதிதாகக் காண்பித்து ஆடியன்ஸைக் குழப்பக்கூடாது. அப்படிக் காண்பிக்கும் விஷயத்தை அட்லீஸ்ட் இதற்குமுன்னர் ஒரே ஒரு ஷாட்டிலாவது காட்டியிருக்க வேண்டும். அப்போதுதான் அது நம்பும்படியாக இருக்கும். அத்தனை ஆங்கிலப்படங்களிலும், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டின்போது, ‘அடடே . . இதான் நாம படம் ஆரம்பிக்கும்போதே பார்த்தோமே’ என்ற எண்ணமே மேலிடும். ஆனால் இப்படத்தில் அந்த ட்விஸ்ட் – it has been executed in a very clever manner. எனக்கு அது மிகவும் பிடித்தது. அதன்பின்னர் தானாகவே புன்னகைக்க ஆரம்பித்தேன். அந்தப் புன்னகை, வெளியே வரும்வரை நீடித்தது. இந்தப் படம், என்னைப்பொறுத்தவரையில், இறுதி 20 நிமிடங்களில் சிக்ஸர் அடிக்கிறது. அதுவே கட்டாயம் போதும்.
இடைவேளைக்கு முன்னர் செல்ஃபோனில் வரவேண்டிய அழைப்புகள் அத்தனையும் ஒயர் பிய்ந்து தொங்கிக்கொண்டிருக்கும் தொலைபேசியில் வரத்துவங்கியபோது, அந்தக் காட்சிகளில் இருந்த அபத்தம்- வலிந்து புகுத்தப்பட்ட ஒன்று – எனக்குத் தெரிந்தது. ஆனால், அதன் காரணம் புரியவே இல்லை. இந்தக் காட்சியை க்ளைமாக்ஸில் எப்படி ஜஸ்டிஃபை செய்திருப்பார்கள் என்ற கேள்வியும் மீதமிருந்தது. அதேபோல், போலீஸ்காரர்கள் ஹீரோவிடம் அந்த வீட்டில் இறந்துபோன நான்காவது பெண்ணைப்பற்றிச் சொல்லும்போதும், இந்த time – space parallax எப்படி இந்தக் கதையின் க்ளைமாக்ஸில் கையாளப்படப்போகிறது என்ற கேள்வி எழுந்தது.
இந்த இரண்டு கேள்விகளும் அழகான முறையில் பதிலளிக்கப்பட்டிருக்கின்றன. இப்படத்தைப் பார்த்த நண்பர்கள் கண்டுபிடித்திருப்பார்களோ என்னமோ? என்னால் அது முடியவில்லை. ஆகவே க்ளைமாக்ஸைப் பார்த்து சந்தோஷப்பட்டேன்.
அதேபோல், இப்படத்தின் இறுதிக் காட்சி – டிபிகல் ஹாலிவுட் டச். அந்நியன் படத்தின் இறுதிக்காட்சியைப் போல. மிக எளிதில் இந்த இரண்டு படங்களின் காட்சிகளும் இப்படித்தான் இருக்கப்போகின்றன என்பது அப்படங்களைப் பார்க்கும்போதே புரிந்துவிட்டது.
படத்தின் பலம் – சந்தேகமில்லாமல் படத்தின் இறுதி 20 நிமிடங்கள். படத்தின் பலவீனம் – அதற்கு முந்தைய அத்தனை காட்சிகளும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பதையும் மேலேயே சொல்லிவிட்டேன். கதாபாத்திரங்கள் சும்மா வந்து போவது போன்றே தோன்றியது (குறிப்பாக ஹீரோ விஜய் சேதுபதி, இன்னும் கடினமாக உழைக்கவேண்டும். ஜாலியாக நடிப்பதுபோன்ற மாயை – சசிகுமார் பாணி expressionless நடமாட்டம் உதவாது). படத்திலேயே மிகவும் இயல்பாக நடித்திருப்பவர், பீட்ஸா போடும் cheஃபாக வரும் நடிகர். ‘முதுகுல ரத்தம் வருதா பாருங்க’ என்று சேதுபதி சொல்லும் காட்சியில், ‘நெஜம்மாவே வரலடா’ என்று சொல்லும் அவரது வாஞ்சையான நடிப்பு பிடித்தது. படம் முழுக்கவே அவர் இப்படித்தான் நடித்திருக்கிறார்.
படத்துக்கு இசையும் ஒரு லேசான let down. ஆனால், குறைந்த பட்ஜெட்டில் மிகவும் சுதந்திரம் எடுத்துக்கொள்ள முடியாது என்பதால், அது பெரிய பிரச்னையில்லை.
க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில், அதற்கான ஒரு சிறிய premise அமைத்திருக்கலாமோ? அதாவது, கதாநாயகனின் முதலாளியின் இரண்டாம் பிஸினஸ் –அதன் பின்னணி ஆகியவற்றைக் குறிக்கும் ஓரிரு ஸீன்களாவது? படத்தின் முதலில் அல்ல. கடைசியிலேயே, அவர் கதாநாயகனிடம் வீட்டுக்குப் போய் அந்தப் பார்ஸலைக் கொடுக்கச்சொல்கையில், அதற்கு முன்பாக ஓரிரு ஸீன்களில் அதைப்பற்றி எதாவது? இப்போது இருப்பது ஓகேதான். ஆனால், இன்னும் கொஞ்சம் அழுத்தமாக அந்த premise எஸ்டாப்ளிஷ் செய்யப்பட்டிருந்தால் படம் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்குமோ? ஏனெனில், திடீரென முதலாளியின் பிஸினஸை வேறு மாதிரி பார்த்தாலும், அவரது மேல் இதுவரை ஆடியன்ஸுக்கு இருந்த இமேஜ் மாறவில்லை. ஒரு உதாரணத்துக்கு, சேதுபதி பிடிபட்டிருந்தால், சிரித்துக்கொண்டே மன்னித்திருப்பார் என்பதுதான் அந்த முதலாளியின் இமேஜ். அது அப்படியே மெய்ண்டெய்ன் ஆகிறது. கூடவே, அந்த பார்ஸலுக்கான backstory வந்திருந்தால் என்னைப்பொறுத்தவரை ரசித்துப் பார்த்திருப்பேன். ஆனால், பொதுவான ஆடியன்ஸை இந்தப் படம் ஏமாற்றவில்லை என்பது நன்றாகப் புரிந்தது. இந்தப் பத்தியில் நான் சொன்னது எனது தனிப்பட்ட கருத்தே.
ஆகவே, பீட்ஸா – எனக்குப் பிடித்தது, அதன் கடைசி 20 நிமிடங்களால்தான். ஆனால் இந்தப் படத்தையே தூக்கி நிறுத்த அது போதும். சமீபத்திய தமிழ்ப்பட எரிச்சல்களுக்கு இடையில், இது கட்டாயம் ஒரு நல்ல முயற்சிதான். கார்த்திக் சுப்பராஜ் – ஆங்கிலப் படங்களின் சுவாரஸ்யமான ஃப்ளேவரில் இப்படத்தைத் தர முயன்றிருக்கிறார். He is still learning – which is good. அவரது முதல் முயற்சியைவிட, இரண்டாம் – மூன்றாம் முயற்சிகள் அவசியம் அட்டகாசமாக இருக்கும் என்று நம்ப ஆரம்பித்து விட்டேன். அந்த நம்பிக்கையைப் பொய்க்கவைத்து விடாதீர்கள் கார்த்திக்.
மீ தி பர்ஸ்ட்..
good review!! 🙂 though not aligned with you 🙂
அது பரவால்ல பாஸ்… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்கி ஆச்சே 🙂
உங்களுக்கு ஓரளவு இந்தப் படம் பிடித்திருப்பதே படம் மற்ற எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும் என்பதற்கு க்யாரண்டி … 🙂
ஸ்பாயிலர் அலர்ட் இருக்கிறதுன்னு சொன்னதால் பதிவை முழுசா வாசிக்கல தல… சீக்கிரம் படம் பார்த்ததும் வந்து ஃபுல்லா வாசித்துக் கொள்கிறேன். 🙂
நாவொரு சிசு பாஸ்.
கருந்தேள் … நீங்கள் சொல்வது போலவே படத்தின் ஆரம்ப காட்சிகள் எனக்கு செயற்கையாகவே தோன்றியது!! ஆனால் அதன் பின் வரும் காட்சிகளை அப்படி கொள்ள முடியவில்லை!! நீங்கள் சொல்வது போலவே எடுத்து கொண்டாலும் அந்த ட்விஸ்டும் எனக்கு செயற்கையாகவே தோன்றியிருக்கும் என்பது என் வாதம்!!
அதுனாலதான் புகழேந்தி நான் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்துன்னு சொன்னேன். அந்த ட்விஸ்ட் – அது அப்புடி வரப்போகுதுன்னு ஒரு சின்ன க்ளூ கூட இல்ல படத்துல. அதுக்கு ஆடியன்ஸுக்கு லேசா ஆரம்பத்துல ஒரு ஷாட் மூலமா இது வந்தப்புறம் அதைப் பத்தி ஒரு க்ளூ கொடுத்துருக்கலாமோன்னு எனக்கு தோணிச்சு
Same appeal na !!
நிறைய பேர் படம் பார்த்துட்டு நல்லாருக்கிறதா சொன்னாங்க பாஸ்..உங்க விமர்சனம் அத நிரூபித்துவிட்டது…மேல ஸ்பாய்லர் போட்டிருந்தும் பதிவ முழுசா வாசித்துட்டேன்.அருமை.நன்றி.படம் இந்த வாரம் பார்த்துருவேன்.
ரைட். அவசியம் இது பார்க்கவேண்டிய படம்தான். அதுல சந்தேகமே இல்ல
from the beginning, as film moves from hero’s view, his boss second business can’t be projected to audience separately, as hero logically ignorant about his boss second business…
And you’re very right bout first 20 min of movie… Particularly the hero inn part.. I can’t even judge, whether they loving sincerely or not.
But after then, film framed good, i think. Because they travelled right. They made their journey as like as usual horror movies, at one point i strongly came to conclusion, these guys going to take the movie like as “shutter island/a beautiful mind” and at the climax they entirely flipped the movie to an unique grade. Because whichever scene they constructed from the beginning of the movie, is to cheat our audience as this was an ordinary movie like other and finally they cheated us and brought smile in our faces.
Yes Surya. I do understand that since the film moves in the hero’s perspective, the business couldn’t be projected to the audience separately. But what I felt is: எந்த முன்னரிவிப்புமே இல்லாம திடுதிப்னு வந்த ட்விஸ்ட் – அது எனக்குப் புடிச்சிருந்தாலும் – மிக லேசாக ஆடியன்ஸை ஆரம்பத்துல லைட்டா தயார்படுத்திட்டு – ஆனா இந்த ட்விஸ்ட் பார்த்தப்புறம்தான் ‘ஆஹா… முதல்லயே இது வந்திச்சி’ ன்னு புரிஞ்சிக்குற மாதிரி இருந்திருக்கலாம்னு. ஆரம்பத்துலயே ஒண்ணு ரெண்டு க்ளூ வந்திருந்தாலும், இந்த ட்விஸ்ட் முடிஞ்சப்புறம்தான் அது ஆடியன்சுக்கு புரியணும். அதே போல, ஹீலோ பார்வைல கதை நகர்ந்தாலும், மத்தவங்க என்ன பண்றாங்கன்னு ஆடியன்சுக்கு சொல்றது ஹிட்ச்காக் பாணி. அதுல இன்னும் திகிலை அதிகப்படுத்த முடியும் (ஏன்னா ஆடியன்சுக்கு தெரியும் – வில்லன் கதாபாத்திரம் பத்தி. ஆனா அது தெரியாத ஹீரோ வில்லன் கிட்டயே வேலை செய்யும்போது என்ன நடக்கப்போகுதோன்னு ஆடியன்ஸை பதைபதைக்க வெக்கலாம்).
எனிவே, இப்புடி பன்னிருக்கலாமோ அப்புடி பன்னிருக்கலாமோன்னு நாம எத்தனை யோசிச்சாலும், படம் நல்லா இருப்பதால் தான் அதையெல்லாம் சிந்திக்கிறோம் என்பதால், இந்தப் பட இயக்குனருக்கு அது வெற்றியே 🙂
நான் எப்படியும் இந்த படத்தைப் பார்க்க முடியாது. பேய்ப் படம் வேற! திருட்டு வி.சி.டி.இல பார்த்தா நல்லா இருக்காது. விமர்சனத்துல நீங்க சொன்னது முக்காவாசி புரியல…அட போங்க பாஸ்…பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் (நான் எனக்கு சொன்னேன்)
படத்தை பார்த்தீங்கன்னாதான் இங்க சொன்னதெல்லாம் நல்லா புரியும். இல்லாட்டி ஒன்யுமே புரியாது பாஸ். சீக்கிரம் பாரும்
உங்கள் கருத்துக்களுடன் முழுவதும் ஒத்துப்போகிறேன் தல……படத்தில் கதாப்பாதிரங்களிடம் ஒட்டுதலே இல்லாத மாதிரி ஒரு பீலிங்….அதுவும் நீங்கள் குறிப்பிட்டுள்ள மாதிரி முதல் பத்து நிமிடங்கள் ரொம்ப நெளிய வைத்தது,நீங்கள் எதிர்ப் பார்க்காமல் போனீர்கள் நான் ரொம்ப எதிர் பார்த்து போனேன்,அந்த பொம்மை காட்சிகளை எங்கோ பார்த்த மாதிரி பீலிங்,ஆனா லாஜிக் பார்க்க விடாமல் திரைக்கதை அமைத்திருப்பது அருமை,
ஆமா மோகன். நல்லா பண்ணிருக்காங்க.
t6tttttttttttttttttttttttthanks for save my money and time…
அடப்பாவி. நான் எப்போ இப்புடி சொன்னேன்? படத்தை பாருங்கன்னு தானே சொல்லிருக்கேன்
நல்ல விமர்சனம்.:-))
ஆம், நான் கதாநாயகன் நெற்றி வியர்வை துடைத்தவுடன் என் மனைவியிடம் கூறிய வார்த்தை…ஏமாத்திப்புடாங்க…. 🙂
haa haa haa … 🙂
Boss cloud atlas nu onnu vandhrukku paathuttu satyama onnum puriala edhachum purinjadha nu paathu solradhu
Boss. I am seeing Cloud Atlas this weekend . Will write once I have seen it
நான் படம் பார்க்கும்போது எப்ப ஹீரோ கதை சொல்ல ஆரம்பிச்சு அதுக்கு அப்புறம் அந்த வீட்டு சீன் வந்த உடனே எப்படியும் ஹீரோ சாக போறது இல்ல..அப்பறம் வேற என்ன பெரிய சஸ்பென்ஸ் இருக்க போகுது அப்படின்னு..
அங்கதான் நம்மளை சாய்ச்சிபுட்டாங்க பாஸ் 🙂
தாண்டவமும்,மாற்றானும் பார்த்த கடுப்பில் இருந்தேன்..பிட்சாவின் சுவை மிகவும் பிடித்தது.. ஆனாலும் உங்கள் கருத்தே(ள்) என் கருத்தும் ..
GOOD RAJESH GOOD.ur websit also
rajesh anna indha padathin cinematography nd editing pathi neenga onnume sollalaye…padathoda 1st half la herovoda owner ponnuku peyi pudichirukum…aval pazhivaanga nenaikiradhu herova than…andha story padi paarkum bodhu andha veetla nadandha incidents kum herokum edho oru chinna connection irukura maadhiri than therinjudhu…but climax la ellame oru imagination nu therinjadhuku appuram d muvi was even gud…
ராஜேஷ் படத்தில் அந்த பிஸா கடை முதலாளி ஹீரோ உள்ளே வரும் போதே போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பார் (பண்ற தொழில் என்று ஒரு உரையாடல்).அந்த உரையாடலை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் ஒரு வேலை நீங்கள் கேட்ட க்ளு கிடைத்திருக்கலாம்.ஆனால் நானும் கவனிக்க வில்லை.படத்தின் இறுதியில் அவர் அந்த போன் உரையாடலை மீண்டும் காட்டும்போது முன்பே க்ளு இருக்கிறதே என்று எனக்கு தோன்றியது.மேலும் அந்த ஆவி ஓட்டும் தாடிக்காரர் ஹீரோவை விசாரித்து அவன் பொய் சொல்லவில்லை என்று சொல்கிறாரே ? அது பற்றி முழு விளக்கம் படத்தில் இல்லை.ஆனால் இப்போது வந்து கொண்டிருக்கும் திராபைகளுக்கு படம் எவ்வளவோ தேவலை.
பீட்சா ஒனர் கடையில் ரெய்டு வந்து போனதாக, பின்னணியில் shuttle ஆக காண்பித்திருந்தால் ..பின்னாடி நாம புன்னகைக்கும் போது இன்னும் கொஞ்சம் அதிகமா புன்னகை செய்திருப்போம். அது போல அந்த ஆவி ஓட்டும் ஆசாமி “எனக்கென்னவோ அந்த பையன் பொய் சொல்றானோன்னு கொஞ்சம் டவுட்டா இருக்குன்னு “ சொல்லி இருந்தாலும் .. அந்த இடத்தில் இன்னும் கரெக்டாக இருந்திருக்கும்னு தோணுச்சு.
படம் ஓகே… படத்தில் மிகப்பெரிய ஒரு லாஜீக் ஒட்டை இருக்கிறது. அதை நிறைய பேர் கவனிக்க தவறவிட்டதே படத்தின் க்ளைமாக்ஸ்தான். என்னனு அப்புறம் சொல்றேன்:)
மத்தபடி பெரிய லாஜீக் சொதப்பல்கள் வேற ஒண்ணும் இல்லை.
படத்தின் முதல்பாதி கொஞ்சம் இழுவைதான். நிஜமாவே ரத்தம் வரலடா என்று செஃப் சொல்லும் அநதகாட்சியை நானும் ரசித்தேன். படுயதார்த்தம்….
ஒரு குறும்படத்தில் இந்தக்கதையை படமாக்கியிருக்க முடியும். சினிமாவாக்கும் முயற்சியில்தான் முதல் பாதியில் கொஞ்சம் இழுவை ஏற்பபட்டது… இது என்னுடைய பீலிங்கி மட்டுமே…
ரெம்பா நாளைக்கு அப்புறம் நம்ம ஊர் தியட்டேர்ல இந்த படத்தை செகண்ட் ஷோ பார்த்தேன்… இந்த படமும், படம் பார்க்க வந்த நம்ம ஊரு ரசிகர்கள் அடிச்சா கமெண்ட்ஸ் ரெண்டுமே சூப்பர் ….
மால்ல படம் பார்க்குறத விட ஆர்பாட்டமான ரசிகர்கள் மத்தியிலே படம் பார்க்குற சுகமே தனி
Oops…. உங்க விமர்சனம் பத்தி கமெண்ட் போடலையே… எப்போதும் போல சூப்பர்
Have you read the articles by Kamal and V. Srinivasan on Hindu about Nayakan movie?
http://www.thehindu.com/arts/magazine/living-in-past-glory/article4034360.ece
http://www.thehindu.com/arts/cinema/of-course-velu-nayakan-doesnt-dance/article4008896.ece
நேத்து தான் இந்த படம் பாத்தேன் . ஒட்டுதல் இல்லாத ஆரம்ப காட்சிகள் பெரிய சுவாரஸ்யமில்லை , ஆனால் இடைவேளைக்கு முந்தைய அரைமணி நேரம் ஹீரோவையும் ,வெறும் டார்ச் லைட்டையும் மட்டுமே வைத்துக்கொண்டு தியேட்டரில் இருந்த அனைவரையும் ஜுரமடிக்க பண்ணி விட்டார்கள் . அந்த பிஞ்சு போன வயர் , பசயில்லாத காதல் காட்சிகள் , இதெல்லாம் எப்படி கடைசியில் முடிக்க போகிறார்கள் என்ற நமது கேள்விக்கு ,கடைசியில் நல்ல ட்விஸ்ட் கொடுத்தார் கார்த்திக் . ஹீரோ ஹீரோயினின் ஆரம்ப கட்ட காதல் காட்சிகளில் இருந்த “ஏனோ தானோ ” விஷயங்கள் , ரசிகர்களை ஹீரோயின் கூட அந்த ஹீரோவின் கற்பனை என்று நினைக்க வைக்க இயக்குனர் செய்த யுக்தி என்றே படுகிறது . அந்த காட்சிகளில் உயிரோட்டம் இருந்திருந்தால் ரசிகர்களுக்கு ஹீரோயின் உண்மையில் இருப்பதாகவே நம்ம்பி இருப்பார்கள் , ஒட்டுதல் இலாத அந்த காட்சிகளால் தான் , நிறைய பேர் (நானும் தான் ) ஹீரோயின் கற்பனையா அல்லது பேயா என்றே இறுதிக்காட்சி வரை சஸ்பென்ஸ் உடைபட காத்திருக்க வேண்டியதாயிற்று . தமிழில் இப்படி ஒரு ஹாரர் + திரில்லர் பார்த்து ரெம்ப நாளாச்சு …( உங்க பாணில சொல்லணும் னா காப்பியடிக்காத படம் பாத்தே ரெம்ப நாளாச்சு 😉 )
அப்புறம் .. தளத்தின் இந்த புதிய வடிவமைப்பு ரெம்ப நல்லாருக்கு பாஸ் . கீப் ராக்கிங்
மற்றவர்கள் விமர்சனம் மாறி இல்லாமல், குறை & நிறை இரண்டும் பதிவு இட்டது நன்றி. சாதரணமா விமர்சனம் பண்றவங்க ஒன்னு ஓவரா பாராட்டு இல்லன ஓவரா திட்டு. // He is still learning – which is good. அவரது முதல் முயற்சியைவிட, இரண்டாம் – மூன்றாம் முயற்சிகள் அவசியம் அட்டகாசமாக இருக்கும் என்று நம்ப ஆரம்பித்து விட்டேன். அந்த நம்பிக்கையைப் பொய்க்கவைத்து விடாதீர்கள் கார்த்திக்.// ஒரு வளர்த்து வரும் டைரக்டர்ன்ற முறையில் அவர்மல் உங்க நம்பிக்கை வெள் டன்.
Nice review !!
மாற்றான் போன்ற கடுப்பேத்தும் படங்களுக்கிடையில்,…ஒரு நல்ல டைம் பாஸ்,
Inspired by : the usual suspects (1995)
அந்த பீட்சாவை ஆர்டர் கொடுத்தது யாரு பாஸ்..? கண்டிப்பா அந்த பங்களா-விலேருந்து கெடயாது. அப்புறம் ஏன் ஹீரோ சம்பந்தம் இல்லாம அந்த அட்ரஸ் க்கு டெலிவரி பண்ணப்போனான்னு owner க்கு தோணலையா?. (ஒருவேளை நான்தான் சரியாய் பார்க்கலையோ..?)
antha pizza owner kitta hero solrathu,pizza kuduka ponna veedu devil house nu,athu,billing apave,teriyatha,r bill podamele,hero pizza deliver panna poitara,antha vedu enge irukunu staffs search panranga ,why?
The Woman in Black (2012) இந்த படத்தின் பெரும்பான்மையான காட்சியின் தழுவலே பிட்சா என தோன்றுகிறது……………..
supper
ராஜேஷ்…. நானும் படம் பார்த்தேன்… எனக்கும் மிகவும் பிடித்திருந்தது….
அடுத்து உங்க தல நடிச்ச “விஸ்வரூபம்” பட ரிலீஸுக்காக வெயிட்டிங்பா….. என்னன்னவோ கலக்கி இருக்காராமாம் படத்துல….
the “ring on the land line phone ” matter is used to give some shock to the pizza shop owner bcoz.. he has some fear on those suspicious
things..
அந்த வீட்டில் நடந்த சம்பவங்களை நாயகன் சொல்லுவது மாதிரி காட்ட தொடங்கியதுமே எனக்கு மைல்ட்டா சந்தேகம் வந்துச்சு, எனக்கு இன்னொரு பெரிய சந்தேகம் என்னான, பீஸா ஆர்டர் வந்துச்சு நாயகன் அதை டெலிவரி பண்ண போனான், அவன் போனதா சொன்னது பேய் வீடு என்று எல்லாறோலும் நம்பபடுகிற ஒரு வீடு, ஆனா உண்மையில பீஸா டெலிவரி பண்ண சொல்லி எங்க இருந்து ஃபோன் வந்தது? அந்த வீடு அட்ரஸ் ஆர்டர் புக் பண்ணவருக்கு தெரியும் இல்லையா?
nice review boss and ur website also i am big fan of ur website
pizzza is super maa
படத்தோட கிளைமாக்ஸ ல முதல pizza டெலிவரி போனப்ப நடந்த மாதிரியே ரெண்டாவது தடவையும் நடக்குது அப்போ எனக்கு ஒண்ணு தோனுச்சு ,ஒரு வேல இதுவும் ஹீரோ சொல்ல போற பொய்யா (முதல் தடவ சொன்ன மாதிரி ) so that he can quit the job and ran with his lover… how is my guess pls reply me bro….
1. எனக்கும் அந்த குழப்பம் இப்போ வரைக்கும் இருக்கு. பிட்சா டெலிவரி செய்ய வேண்டிய முகவரிக்கு போகாமல் ஏன் அந்த பேய் பங்களாவுக்கு ஹிரோ போனான் என்று கடை முதலாளி ஏன் கேட்கவே இல்லை.
2. இழுவையாக இருந்த முதல் 20 நிமிடத்தில் ஒரு சீன் வரும். கடை முதலாளி ஹிரோவை கூப்பிட்டு, ஓரு ஃப்பைலை நீட்டி வீட்டில் கொண்டு போய் கொடுக்க சொல்வார். அப்போ போனில் யருடனோ படு அட்டாக்கா பேசிக் கொண்டிருப்பார். ‘ நீ எவ்வளோ தூரம் கிழே இறங்கி போறாயோ, அந்த அளவுக்கு என்னாலும் இறங்கி வர முடியும். பிரச்சனை பண்ணாமல் பொருளை அனுப்பு’ என்பார். அந்த சீனில் எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது. நம்ம முதலாளி ஏதோ கோல்மால் பண்ணுகிறார் என்று.
3. பேய், பிசாசு, அனுமாஷ்யம், மாந்தீகம் என்று எல்லாம் கதைக்குள்ளாகவே வருகிறது. கொன்றான், ’காண்டு’வம், மாடா மக்கி, இத்துபோன கைபேசி, ஓட்ட துப்பாக்கிக்கு மத்தியில் பிட்சா …… காய்ந்து போன வெங்காய அப்பம் கிடையாது…… ஃபுல் மீல் …. நல்ல சாப்பாடு …………
Even i have the same doubt 1. எனக்கும் அந்த குழப்பம் இப்போ வரைக்கும் இருக்கு. பிட்சா டெலிவரி செய்ய வேண்டிய முகவரிக்கு போகாமல் ஏன் அந்த பேய் பங்களாவுக்கு ஹிரோ போனான் என்று கடை முதலாளி ஏன் கேட்கவே இல்லை.