வ – குவாட்டர் கட்டிங் – ஒரு காவியத்தின் கதை

by Karundhel Rajesh November 5, 2010   Comedy

கடந்த சில நாட்களாகக் கோவையில் இருக்கிறேன். ஒரு எமர்ஜென்ஸி காரணமாக இங்கு வந்ததால், வலைத்தளத்தின் பக்கமே கால் வைக்க முடியவில்லை. நண்பர்களின் வலைப்பூக்களையும் படிக்க இயலாத சூழல். இப்பொழுது, அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டன.

கீழே குறிப்பிடப்பட்டுள்ளது, எனது கனவில் வந்த ஒரு உரையாடல். இது நிஜ வாழ்க்கையில் உள்ள மனிதர்களைக் குறிப்பிடுவது போல் உங்களுக்குத் தெரிந்தால், அது முற்றிலும் தற்செயலான ஒரு நிகழ்வே.

குஷ்பர் : (திடீரென தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்கிறார்) – ஆஆஆஆ.. அவ்வ்வ்வ்வ்வ் !! அது !! மல்லாக்கப் படுத்தா பசுமாடு; மௌண்ட் ரோட்ல மழபெஞ்சா சுடுகாடு ! ஒழிஞ்சான் தமிழன் ! புடிச்சிட்டேன் ஒரு ஒன்லைன் !

பேயத்ரி : டார்லிங்.. என்ன ஆச்சு? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? மூட்டப்பூச்சி கடிச்சிருச்சா?

குஷ்பர் : இல்ல.. கொண்டுவரோம் ஸ்க்ரீன்ல கதை ஒண்ணு… என்னோட சொந்த வாழ்க்கைல நடந்த ஒரு சோகக்கதைல, கொஞ்சம் காமெடி மசாலாப்பொடி தூவி, தமிழ் மக்களுக்கு வழங்கப்போறேன் ! படத்துக்குப் பேரே வெக்கமாட்டேனே .. அதைப் பாக்குற ஒவ்வொருத்தனும், என்ன பேரு, என்ன பேருன்னு சும்மா சாகணும்.. (ஓஹோ புரொடக்‌ஷன்ஸ் நாகேஷ் போலப் பேசுகிறார்)..

பேயத்ரி: ஹைய்யா… ரொம்ப நாளா ரெண்டுபேரும் சேர்ந்து மெகா சீரியல் பார்த்துப் பார்த்து போரடிச்சிருச்சி அத்தான் .. வாங்க படமெடுக்க ஆரம்பிப்போம்..

குஷ்பர் : படுக்கையிலிருந்து எழுந்து, ஜன்னலில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு, சிவாஜி குரலில்) – நான் விஸ்காம் படிச்சப்ப… அது இருக்கும் ஒரு பத்து வருஷம் – ஒரு நாள், நானு, பான் குஜய் எல்லாம் சேர்ந்து, ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணோமா? அப்ப நடந்த ஒரு கண்ணீர்க் கதை இது.. ஹக்.. ஹக்.. (கேவுகிறார்)..

அந்தப் பார்ட்டி, நானு ஒருவழியா விஸ்காம் கம்ப்ளீட் பண்ணதுக்கு நானே வெச்சிக்கிட்ட பார்ட்டி.. அதுல அடிக்க சரக்கு தேடி நாயா பேயா அலைஞ்சமேஏஏஏஏ.. அந்தக் கதையை இப்ப படமா எடுக்கப்போறேன்..

பேயத்ரி: ஆஹா… உங்கள் கதை, படம் எடுக்கத் தூண்டுகிறது.. .

குஷ்பர்: இந்த ஒலகக் கதைக்கு, மொதல்ல புரட்யூசர் தேடுவோம்.. வகையா யாரு மாட்டுறாய்ங்கன்னு பார்ப்போம்.. அவங்க தலைல மொளகா அரைச்சிர வேண்டியதுதான்.. அப்புடி ஒரு தயாரிப்பாளர்… நாம என்ன சொன்னாலும் ஆர்வமா தலையாட்டக்கூடிய ஒரு ஆள் வேணுமே… என்ன செய்யலாம்? ஆங் (சீரியஸாக யோசித்துக்கொண்டே தொலைக்காட்சியைப் பார்க்கிறார்.. அதில், பழகிரி, குலைஞர், போர்க்காட்டார் பங்குபெறும் ஒரு கவியரங்கம் ஓடிக்கொண்டிருக்கிறது)..

ஆ… கண்டேன் புரொட்யூசரை ! நம்ம கஞ்சா நெஞ்சன்… ச்சீ.. அஞ்சா நெஞ்சன் பெற்ற இளவல் – வருங்கால அஞ்சா நெஞ்சன் – இன்றைய தயாரிப்புத் திலகம் – தமிழ்ப்படம் தயாரித்த தயாளன் – நாளைய செய்தி – பயாநிதி பழகிரி இருக்கிறாரே . . அவருக்கு ஃபோன் போடு..

(ஃபோனில் பயாநிதி பழகிரி): அலாவ்வ்வ் ….

குஷ்பர் : வணக்கண்ணா… நானு குஷ்பர் பேசுறேன்..

பயாநிதி: (அவசரத்தில் பெயரைத் தப்பாகப் புரிந்து கொண்டு) – அடடே ஆண்ட்டி நீங்களா? அப்பாட்ட பேசுங்க. நாளைக்கு மதுரைக் கூட்டம் இருக்குல.. அதுல நீங்க திட்ட வேண்டிய லிஸ்ட், அவராண்ட இருக்கு… (ரகசியமாக ) ’அப்புடியே அவருக்கு இந்த ‘ஏக் காவ்மே ஏக் கிசான் ரகுதாத்தா’ மாதிரி ரெண்டு மூணு ஹிந்தி வார்த்தை கத்துக்குடுத்துருங்க.. இண்ணிக்கி சாயந்திரமே அவரு அவசரமா டெல்லி போயாகணும்.. டிக்கட் புக் பண்ணுங்க…. (உரக்க) – அது, யாரோ தன்ராஜாம்.. எம்மெல்லேவாலயே முடியாதத என்னச் சாதிக்கச் சொல்றான்யா… அட இது பரவாயில்லையே… டைவர்ஸ் கேசெல்லாம் எண்ட்ட வருதுப்பா… நான் என்ன கோர்ட்டா வக்கீலா? ஒரே குஷ்டமப்பா…

குஷ்பர்: (பயந்து) – அண்ணே…. நானு டைரக்டரு குஷ்பர் பேசுறேண்ணே… இந்த ‘தூரம்போ’ படத்த பார்த்துருப்பீங்களே.. அதுல, ரெண்டுல ஒரு இயக்குநரு நாந்தாண்ணே….

பயாநிதி : அடடே… நம்ம பய. சொல்லுப்பா.. என்ன விசயம்?

குஷ்பர்: ஒரு அட்டகாசமான ஒன்லைன் சொல்றேண்ணே… இது மட்டும் உங்க தயாரிப்புல வந்தா, படம் ஆஸ்கர் வரை போக வாய்ப்பிருக்குண்ணே… உங்க புகழ், யூஎஸ் வரை போயிருண்ணே…

பயாநிதி: (தனக்குத்தானே பேசிக்கொள்கிறார்) – என்ன யூஎஸ் அது இதுன்றான்? என்னிய வைதானா? யூக்கேல பசுமாடு என்னன்னு கத்துது?

(சத்தமாக) – சரி சரி.. உங்க திறமைல எனக்கு நம்பிக்கையிருக்குப்பா.. இன்னோரு ரெண்டு மூணு பேத்த ரெடி பண்ணு… படம் ஆரம்பிச்சிரலாம்..

குஷ்பர் (பேயத்ரியிடம்): சக்ஸஸ் !! சக்ஸஸ்

அடுத்து, குஷ்பர் கதை எழுத அரம்பிக்கிறார்….

குஷ்பர்: ஹீரோ, சரக்கடிக்க டாஸ்மாக் போறான்… நேத்து போனான்… இண்ணிக்கி போறான்.. நாளையும் போவான்.. அதாவது, போறான்.. போய்க்கிட்டு இருக்கான்.. இன்னும் போவான்… சுபம்..

பேயத்ரி: இவ்வளவுதானா? இது தான் பின்நவீனத்துவ கதையா?

குஷ்பர்: அட இதைப் பாக்குறதுக்குத் தான் இளிச்சவாய் தமிழன் இருக்கானே? நாம என்ன எடுத்தாலும், தமிழன் பார்ப்பான்.. அது அவனோட தலையெழுத்து… நீ வேற ரொம்ப நாளா ஸ்விஸ் போணும்னு வேற சொல்லிக்கினு இருக்கியே? அதையெல்லாம், இப்புடி படம் எடுத்தா தான் நாம பார்க்கமுடியும்..

இதற்கு மேல் என் கனவு கலைந்து விட்டது..

என்னாது.. நான் குவார்ட்டர் கட்டிங் பார்த்தாயிற்றா என்றா கேட்டீர்கள்? சரியாய்ப் போயிற்று… அந்தக் காவியத்தை, தமிழில் வரைந்த ஓவியத்தை, நடிப்பில் கலக்கும் உணர்ச்சிப் பிரவாகத்தை, தெள்ளு தமிழிலே குவார்ட்டர் தேடி அலையும் அந்தத் துன்பியல் சம்பவத்தை என்னால் பார்க்காமல் இருக்க முடியுமா? அதைப் பார்க்காமல் இருந்தால், குஷ்பரின் சாபம் என்னை சும்மா விடுமா? அது எப்படி ஐயா என்னைப் பார்த்து இந்தக் கேள்வியை உங்களால் கேட்க முடிகிறது?

படம், தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு மைல்கல் என்று சொன்னால், படத்தின் அழகியல் நிர்ப்பந்தத்துக்கு நான் நீதியுரைத்தவனாக இருக்க மாட்டேன். எனவே, அது ஒரு கிலோமீட்டர் கல் என்று சொல்வதோடு நிறுத்திக் கொண்டு விடுகிறேன். படத்தில் நடித்திருக்கும் புர்ச்சி புவா என்ற அந்த நடிகர், அன்றாடம் நடந்தேறும் ஏழைத் தமிழனின் உளவியல் சித்ரவதையை நம் கண்ணாமுழியின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் என்று என்னால் எந்த இடத்திலும் கதறக்கதற உரையாற்ற முடியும். அதிலும், குவார்ட்டர் பாட்டிலைக் கண்டவுடன், அவர்தம் கண்களிலே தெரிந்திட்ட ஒளியை, ஸ்பெக்ட்ரம் என்று சொன்னவுடன் அமைச்சர் போசாவின் கண்களிலே மின்னிடும் ஒளியுடன் ஒப்பிட்டுவிட்டால், தமிழ்த்தாய் என்னைச் சும்மா விட்டுவிடுவாளா என்று கேட்கிறேன்..

அதேபோல், அவருடன் உணர்ச்சிப் பிரவாகத்திலே போட்டி போட்டு நடித்திருக்கும் புஸ்.பி.பி. பரண் என்ற நடிகர், தனது தொந்தியைத் தள்ளிக்கொண்டு போடும் ஒரு சண்டை இருக்கிறதே…. தமிழ்ப்படம் பேசத்துவங்கிய காலகட்டத்தில், களம்கண்ட புறப்போர் அகவெறியன் என்ற நடிகர், தனது பாட்டியின் வாழ்க்கையைச் சிதைத்திட்ட அயோக்கிய சிகாமணி ஆந்தைக்கண்ணனுடன் இடும் ஒரு சண்டையை அது நினைவுறுத்தியது.. அதுபோலவே, இப்படத்தின் நாயகி பாடும் மழலை வளம் ததும்பும் பாடல் ஒன்று, துலாபாரம் என்ற சோக காவியத்தின் பக்கங்களில் கிளிசரினால் தெளித்து எழுதப்பட்ட, அண்டா அண்டாவான அழுகையொலிகளை மணித்துளி தோறும் நினைவுறுத்திய வண்ணமே இருந்தது.. அந்தோ பரிதாபம்…

படத்தின் முக்கிய உயர விளக்கானது (ஹைலைட்), படத்தின் வில்லனாக நடித்திருக்கும் பான் குஜய் என்ற உண்மையை நான் போட்டு உடைத்துவிட்டால், இப்படத்தின் இரவுக்காட்சியை இருநூறு முறைகள் பார்க்க வேண்டிய அபாக்கிய நிலைக்கு ஆளாகிவிடுவேனோ என்ற, மண்டையின் ஒவ்வொரு மயிரையும் வீறிட்டு அலறியபடி சிலிர்த்தெழ வைக்கும் மர்மமான எண்ணம், எனது மனத்தின் சுவர்களைத் தட்டிய வண்ணம் இருக்கிறது. அதிலும், எம்மார் ராதாவின் குரலை மிமிக்கிரி செய்து, அவர் பேசும் மொக்கையின் சிகர வசனங்களைக் கேட்கும் பேறு பெற்றவர்கள், இனி இந்தப் பூவுலகில் மறுபடி பிறக்கும் பாவத்தை அடைய மாட்டார்கள் என்ற உறுதிமொழி, வேதத்திலேயே எழுதிவைக்கப்பட்டு விட்ட உண்மையும், எனக்கு மட்டுமே தெரியும் என்ற ரகசியத்தை எப்பாடு பட்டாகிலும் காக்கும் திண்மையை, பழகிரி வணங்கும் குருணாநிதி அருளவேண்டும் என்று அன்னாரைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

ஆக மொத்தம், குவார்ட்டர் கட்டிங்கி என்ற இந்தப் படம், ஒரு படம் மட்டும் அல்ல; அறியாமையின் இருளை மக்களின் மனதில் இருந்து போக்க வந்துள்ள இடிதாங்கி.. சுமைதாங்கி.. தண்ணிடாங்கி தண்ணிடாங்கி தண்ணிடாங்கி…….

இதுவரை வந்துள்ள அனைத்துத் தமிழ்ப்படங்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையில், இப்படத்தை இயக்கியுள்ள குஷ்பர் – பேயத்ரி ஜோடி, இதே போல் பல படங்களை எடுத்து, தமிழனை, அண்டார்ட்டிக்கா வரை விரட்டும் நற்செயலைத் தொடர்ந்து செய்ய வேண்டுமாய், அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்…

பி.கு – ஒரு அஞ்சு நிமிஷம், இந்த மொக்கையைப் படிக்க முடிலல்ல? என்ன கருமாந்திரப் பதிவுய்யா இதுன்னு தோணுதா? இந்தப் படம், இதே போன்ற கொலைவெறியை, தொடர்ந்து இரண்டரை மணிநேரம் தர வல்லது… எஞ்சாய் !

பி.கு 2 – களம் கண்ட புறப்போர் அகவெறியன் – விகடனில் தொண்ணூறுகளின் முற்பகுதியில் வந்த, மெரீனா எழுதிய, ‘விஜி’ நகைச்சுவைத் தொடர்கதை – இதன் சிறப்பு, இயக்குநர் சரண், விகடனில் வேளை செய்துவந்த காலத்தில், வாரம் தோறும் கார்ட்டூன்கள் இத்தொடருக்கு வரைவார்.

  Comments

40 Comments

  1. GOLMAAL 3 பார்த்து விட்டு வந்து தலை சுற்றி வந்தால் உமக்கும் அதே கதை தானா? great escape!!!!

    Reply
  2. oru rendu naal wait panni, review parthuttu porathu? inna avasaram mamey? padam badaa mokkai nu oorae pesuthey 🙁

    Reply
    • This design is steller! You undoubtedly know how to keep a reader entertained. Between your wit and your videos, I was almost moved to start my own blog (well, al¦ÃÂto¢â‚¬smHaHa!) Great job. I truly enjoyed what you had to say, and much more than that, how you presented it. Too cool!

      Reply
    • It’s a pleasure to find someone who can identify the issues so clearly

      Reply
  3. டிக்கட் முன்பதிவு பண்ணியாச்சே…. 🙁

    Reply
  4. //படத்தின் முக்கிய உயர விளக்கானது (ஹைலைட்)/

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்… தமிழ் தறிநெய்ஞ்சு விளையாடிக்கிட்டு இருக்குது. :)))

    //விகடனில் வேளை செய்துவந்த காலத்தில்,//

    வேலை செய்துவந்த காலத்தில்,?!

    Reply
  5. நண்பா,

    நீங்க தமிழ்பட விமர்சனமே போடறதுல்லன்னு நிறைய பேர் கலாய்ச்சதுக்காக இதுபோன்ற படத்தைப் பார்க்கும் விபரீதத்துக்கெல்லாம் துணிஞ்சுட்டீங்களா?

    பார்த்து நண்பரே…

    Reply
  6. விதி வலியது 😉

    Reply
  7. மொழி வளம் பிரமாதமாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள்….

    Reply
  8. விமர்சனமே தலை சுத்துதே!!!

    Reply
  9. உங்க விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது 🙂

    Reply
  10. பருனாநதி கருந்தேளுக்கு வரையும் மடல்

    பரசொலியில் எழுதிட ஆசை தான் ஆனாலும்
    உன் விமர்சனம் கண்டு தனி கடிதம் எழுத விளைந்தேன்.
    திராவிடம் படைதத தனி தமிழ் நாட்டின்
    அண்ணா வழியில் என் கொள்கை கண்ட என் உடன் பிறப்பே
    நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் என் உடன் பிறப்பே-நீ
    என் உடன் இருக்கையில்-டாஸமாக் இருக்கையில்.
    காப்பியமோ ஐந்து, தமிழ்நாட்டின் கடனோ குறைந்தது ஐம்பது ஆயிரம் கோடி
    ஏர் பூட்டும் உழ்வன் சிரிக்க, வயிரு ஒட்டும் பாட்டாளி மகிழ்ச்சி பெற
    அண்ணா வழியில் ஏழை எளியொரை இன்புற வைக்க ,
    இலவச நலதிட்டங்க்ளால் ஒடுக்கபட்ட மக்களின் குரல் ஓங்க
    டாஸ்மாக் அவசியம், குவாட்டர் கட்டிங்க் அவசியம்.
    என் தோழனே, என் உடன் பிறப்பே, வ கட்டிங்க்கை
    டாஸ்மாக் கட்டிங்க 500 மில்லி போட்டு 20 முறை பார்த்திடுவாய்.
    முரசு கொட்டி எட்டு திக்கும் எடுத்தியியம்பிடுவாய்…

    Reply
  11. அய்யகோ ஒரு குவார்ட்டர் தாருங்கள், இப்படி ஒரு கொடுமையை தாங்கி சுமந்த சுமைதாங்கி, பெரும் இடிதாங்கி, சும்மா போன குண்டை தன்மேல் பாய்ந்து ஏந்திய வெடிதாங்கி நண்பர், வீரர், சூரர்,தீரர் கருந்தேள் அவர்களின் அனுபவம் என்னை பிழிகிறதே…. :))

    Reply
  12. குவாட்டர் அடிச்சிட்டு விமர்சனம் எழுதினிங்களோனு தோணுது .. ஹிஹிஹி.. 🙂

    Reply
  13. இப்பயே கண்ணக் கட்டுதே! 😉

    Reply
  14. ஒரு அஞ்சு நிமிஷம், இந்த மொக்கையைப் படிக்க முடிலல்ல? என்ன கருமாந்திரப் பதிவுய்யா இதுன்னு தோணுதா? இந்தப் படம், இதே போன்ற கொலைவெறியை, தொடர்ந்து இரண்டரை மணிநேரம் தர வல்லது… எஞ்சாய் !///
    .
    .
    @கருந்தேள்
    நீர் ரொம்பதான் அதீத பொறுமைசாலி!!!!
    ஏற்கெனவே இந்த புஷ்கர் பேயத்ரி இயக்கிய ஆட்டோ(அதான் வரிவிலக்கு ஏமாத்துவதற்காக ஓரம்போ என பெயர் மாற்றம் செய்து வெளியிட்டார்கள்!) அந்த படம் முன்னோட்டம் (Trailer) பார்த்த போதே எனக்கு தலை சுற்றியது.படம் பார்க்கும் தைரியம் எனக்கில்லை!அதே மொக்க கூட்டணி (புருஷன் பொஞ்சாதி) இயக்கிய “வ” குவாட்டர் கட்டிங்(நம்ம தலிவரின் பேரன்கள் செய்யும் தமிழ் சேவை புல்லரிக்குது கருந்தேள்.பின்ன ரெட் ஜெயன்ட் Cloud Nine அப்புறம் இந்த படம்.”வ” இன்னு சின்னதா தமிழ் தலைப்பு அப்பால “குவாட்டர் கட்டிங் 40% v/v” (இந்த Volumetric proportion எல்லாம் தமிழா?அய்யகோ!) அப்படின்னு பெரிய்ய ஆங்கில பிந்தலைப்பு.இந்த படத்திற்கும் தமிழில் (அட நம்புக்கப்ப) தலைப்பு வைத்ததற்காக வரிவிலக்கு.அடங்கப்பா!!மக்கள் வரிப்பணம் நாசமாய் போனால் யாருக்கென்ன?வாழ்க சன நாயகம்!

    Reply
  15. தப்புபண்ணீட்டீங்க தேளு…குவார்ட்டர் அடிச்சுட்டு பார்க்கவேண்டிய படத்தை…நார்மலா போய் பார்த்தா புரியாது

    Reply
  16. 8 மாசத்திற்கு அப்பறம் தியேட்டர் போய் இந்தப் படத்தை பார்த்தேன். முதல்ல ஸ்க்ரீனுக்கு கண் அட்ஜஸ்ட் ஆகவே சிரமமா போயிருச்சு.

    Guy Ritchie மாதிரி ஆகணும்னு முயற்சி பண்ணி 3rd rated படம் மாதிரி ஆயிருச்சு.

    Reply
  17. //இந்த ஒலகக் கதைக்கு, மொதல்ல புரட்யூசர் தேடுவோம்.. வகையா யாரு மாட்டுறாய்ங்கன்னு பார்ப்போம்.. அவங்க தலைல மொளகா அரைச்சிர வேண்டியதுதான்//

    தல…இவுங்க குடும்ப பேனரின் எந்தப் படமும் flop ஆனா ரொம்ப நல்லது.
    ரக்த சரித்திரா…ஹிந்தி trailer கவனிச்சீங்களா…..Hindi படத்திற்கும் Synergy & Cloud Nine productionனு வருதே…

    Reply
  18. //(அவசரத்தில் பெயரைத் தப்பாகப் புரிந்து கொண்டு) – அடடே ஆண்ட்டி நீங்களா? அப்பாட்ட பேசுங்க. நாளைக்கு மதுரைக் கூட்டம் இருக்குல.. அதுல நீங்க திட்ட வேண்டிய லிஸ்ட், அவராண்ட இருக்கு… (ரகசியமாக ) ’அப்புடியே அவருக்கு இந்த ‘ஏக் காவ்மே ஏக் கிசான் ரகுதாத்தா’ மாதிரி ரெண்டு மூணு ஹிந்தி வார்த்தை கத்துக்குடுத்துருங்க.. இண்ணிக்கி சாயந்திரமே அவரு அவசரமா டெல்லி போயாகணும்.. டிக்கட் புக் பண்ணுங்க…. (உரக்க) – அது, யாரோ தன்ராஜாம்.. எம்மெல்லேவாலயே முடியாதத என்னச் சாதிக்கச் சொல்றான்யா//

    செம flow….எங்க வீட்டில கூட சொல்லி சொல்லி சிரிச்சுகிட்டு இருந்தோம்.இருந்தாலும் இவ்வளவு..இவ்வளவு… குசும்பு ஆகாது.

    Reply
  19. @ karuna – ஆஹா…. மாட்னீங்களா? சரி உடுங்க.. இந்த தீபாவளி, நம்ம ரெண்டு பேருக்குமே மொக்கைத்தனமா ஆனதுக்கு, சேம் பின்ச் 🙂

    @ மயிலு -ஆசை யாரை விட்டது? 🙂 படம் நல்லா இருக்கும்னு நம்பித்தான் போனேன் 🙁 இனி இவங்க படம் வந்தா, கட்டாயம் புறக்கணிப்புதேன் 🙂

    @ philosophy Prabakaran – அய்யய்யோ ..பொசுக்குனு இப்புடி சொல்லிபுட்டியளே …. அனேகமா இப்ப படம் பார்த்து முடிச்சிருப்பீங்க… ஆழ்ந்த அனுதாபங்கள் தலைவா …

    @ சென்ஷி – கரெக்டா அந்த எழுத்துப்பிழைய பாயிண்ட் பண்ணிட்டீங்களே 🙂 உங்க தமிழுணர்வுக்கு பாராட்டுகளைப் பிடிங்க 🙂 .. அப்புடியே, போயி இளைஞன் படத்தையும் பார்த்துருங்க ரிலீஸான கையோட 🙂

    @ சு.மோகன் – ஹாஹ்ஹா…. நான் தமிழ்ப்பட விமர்சனம் போடுறதில்லைன்னு மக்கள் சொன்னதுக்காக இந்தப் படம் பார்க்கல.. எனக்கு ஓரம்போ படத்துல சில காட்சிகள் புடிச்சிருந்தது… அதான், ஒருவேளை நல்ல படமா இருந்தா மிஸ் பண்ணக்கூடாதேன்னு தான் இதைப் போயி பார்த்தோம்… 🙁

    @ சிவா – ம்க்கும்.. தப்பிச்ச மெதப்புல ஆடாதீங்க… 🙂

    @ raja – மொழி வளமா? படம் பார்த்த கடுப்புல அடிச்ச பதிவு இது தலைவா 🙂 இந்த ரீதில நான் ரெண்டு பதிவு போட்டா போதும்… அப்புறம், நம்ம வலைப்பூ வெளங்கிரும் 🙂

    @ எஸ்.கே – அப்ப படத்தைப் பார்த்தீங்கன்னா என்ன சொல்லுவீங்களோ? கொய்யால வந்த கடுப்புல…… நிறைய பாப்கார்ன் வாங்கி தின்னுபுட்டேன் 🙂

    @ உண்மைத்தமிழன் – 🙂 ஓரம்போல எனக்கு சில சீன்கள் புடிச்சது 🙁 … அதை நம்பித்தான் இதுக்கும் போனேன் 🙁 … எல்லாம் என் நேரம்

    @ மொக்கராசா – அய்யகோ…. உங்க கமெண்டு, நெசம்மாவே ‘அவரு’ எழுதற மடல் மாதிரியே கீதே… உண்மைய சொல்லுங்க… நீங்க ‘அவர்’ தானே? தலைவா… நானு உங்க கட்சிக்கும் உங்க குடும்பத்துக்கும் வாழ்க்க பூரா ஒழைக்க தயாரு… என்னிய செயில்ல போட்ராதீங்கோ 🙂

    @ காதலரே – ஏன் சொல்ல மாட்டீர்? ஃப்ரான்ஸில் இப்படம் வெளிவராத காரணத்தால், தப்பி விட்டீர் 🙂 எனக்கும் இதே பின்னூட்டம் எழுதும் காலம் விரைவில் வர, புரட்சி தேவன் ரஃபீக்கை வேண்டுகிறேன் 🙂

    @ ibza – குவார்ட்டர் மட்டும் அடிச்சிட்டு இத நானு எழுதிருந்தேன்…. மக்கா கன்னாபின்னான்னு கெட்ட வார்த்தையா எழுதித் தள்ளிருப்பேன்.. 🙂 ஜஸ்ட்டு மிஸ்ஸு 🙂

    @ இலுமி – இப்படத்தை உங்களைப் பார்க்க வேண்டுகிறேன் 🙂

    @ viki – ஹாஹ்ஹாஹ்ஹா 🙂 உங்க பின்னூட்டம் பார்த்து கண்டபடி சிரிச்சேன்… நீங்க சொல்லிருக்குறது எல்லாமே ரைட்டு தான் 🙂 .. இவனுங்க திருந்துவானுங்கன்றீங்க… ம்ஹூம்.. நோ சான்ஸ் 🙂

    @ உலக சினிமா ரசிகரே – அங்க தான் தப்பு பண்ணிட்டேன்… குவார்ட்டர் மட்டும் அடிச்சிட்டு இதைப் பார்த்திருந்தா, அங்கியே கண்டபடி வாந்தியா எடுத்துருக்கலாம் 🙂

    @ கொழந்த – என்னோட இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. நம்ம மணி, சுஹாஸினி கபிள் போல, இந்த கபிளும் தமிழனை இளிச்ச்வாயன்ன்னு நினைச்சித்தான் இதை எடுத்திருக்கானுங்க 🙂 நீங்க பார்த்த சோகக்கதையையும் எழுத வேண்டுகிறேன் 🙂

    ரக்த சரித்ரா ட்ரெய்லர் கவனிச்சேன்… இவங்க பேரு அதுல புரொட்யூஸர்ஸ் லிஸ்ட்ல கீது.. என்னோட கருத்தும் அதே தான்… இவங்க படம் ஃப்ளாப் ஆனா சந்தோசம்.. ஆனா, ரக்த சரித்ரா மட்டும் ஓடிரட்டுமே.. நம்ம ராம் கோபால் வர்மாக்காக 🙂

    அப்புறம், நான் எழுதினது, பொய் இல்லை.. என கனவுல வர்ரதெல்லாம் நிசம்மா நடக்குமாக்கும் 🙂 கட்டாயம் அவங்க இப்புடித்தான் பேசிருப்பாங்க 🙂

    Reply
  20. trailer -ஐ பார்த்துட்டு, ஒரு புதிய முயற்சின்னு நினைச்சேன் ….

    இப்படி கலாய்ச்சிட்டுங்களே … உதவிக்கு நன்றி …. அப்புறம் நம்ப ஆள் கிம் கி டுக் – பத்தி — ரொம்ப நாள் ஆச்சி போலிருக்குதே …..

    Reply
  21. This comment has been removed by the author.

    Reply
  22. ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸை சீரியஸை டிங்கரிங் பண்ணி முதல் படம் எடுத்தங்க. ’ஒரம்போ’ பாக்குற மாதிரி தான் இருந்தது.

    இருந்தாலும் ”உங்களின் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது”

    Reply
  23. நாசமாப்போறவனுங்க
    எனக்கு இந்த பேரை இப்படி வைக்கும் போது,என்னவோ மகா பின்னவீனத்துவ திரைப்படமாக்கும்னு நினைச்சேன். இப்புடி ஒரு கார்பேஜா?என்ன கருமம் நண்பா இது?.
    நம்மை எவ்வளவு பெரிய இளிச்சவாயனா நினைச்சிருக்கனும் இந்த நாரவாயனுங்க?போஸ்டர்,ப்ரொமோஷன்&ட்ரெய்லர் பார்த்து ஒரு படத்துக்கு போறதை நிப்பாட்டனும்

    செம காமெடியான விமர்சனம் நண்பா,சிரிப்புசிரிப்பா வருது

    Reply
  24. //சத்திய சோனை!//

    ஹாஹாஹா ;)))))))

    Reply
  25. yappa sami unga lolle thanga mudiyala padtha vera poi papoma????

    Reply
  26. அட உங்க பதிவோட தலைப்ப பார்த்ததுமே சிரித்துவிட்டேன்.அப்புறம் நம்ம கவுண்டர் டயலாகுகளை ஆங்காங்கு பயன்படுத்திய விதம் அருமை.சிரித்து வயிறு புண்ணானது 😉
    *
    *
    *
    இவனுங்க திருந்துவானுங்கன்றீங்க… ம்ஹூம்.. நோ சான்ஸ் ///
    .
    அது ஆயிரம் சே குவேரா வந்தாலும் நடக்காது போல 😐
    .
    நன்றி

    Reply
  27. ச்சீ…. கேவலம் 🙂

    Reply
  28. //பயாநிதி: (அவசரத்தில் பெயரைத் தப்பாகப் புரிந்து கொண்டு) – அடடே ஆண்ட்டி நீங்களா? அப்பாட்ட பேசுங்க.//

    செம…

    Reply
  29. @ shivam – அட டிரெய்லரைப் பார்த்துபுட்டு தான் நாங்க உடனே போயி பார்த்ததே… ட்ரெயிலரெல்லாம் நல்லா வக்கணையாத்தேன் எடுத்துருக்கானுவ.. படம் தான் மரண மொக்கையா பூடுச்சி 🙁

    @ Prasanna Rajan – ஓரம்போ எங்களுக்கும் புடிச்சதே 🙁 அதை நம்பித்தான் இதுக்குப் போனோம் 🙁 .. சரி பார்த்தே தீருவேன்றீங்க.. பார்த்துபுட்டு சொல்லுங்க 🙂

    @ கீதப்ரியன் – நண்பா.. இது நிசம்மாவே கார்பேஜ் தான்.. தாங்க முடில 🙁 .. மகா பிளேடு நண்பா.. ஒரு நிமிஷம் கூட உக்காரவே முடியல.. வந்த கோபத்துக்கு, மவனுங்களா… அய்யோ போஸ்டர் & புரமோஷன் பார்த்துத்தானே நாசமா போனேன் 🙁

    @ பன்னிக்குட்டி ராம்சாமி – அது ! 🙂 ஹாஹ்ஹா… இதான் சரியான பஞ்ச்..

    @ swam – அய்யோ பார்த்துராதீங்க 🙂

    @ viki – காமெடியெல்லாம், இடுக்கண் வருங்கால் நகுகன்னு நம்ம தாத்தா சொன்னதுனாலதான் 🙂 இவனுங்க எப்புடி திருந்துவானுங்க 🙂

    @ Shree – கோ – அரசன்.. தீ – நெருப்பு.. இந்த ரீதில, ச்சீ – கேவலம்.. 🙂 அதான் இந்தப்படம் 🙂

    @ பிரியமுடன் ரமேஷ் – 🙂 ஹீஹ்ஹீ… 🙂 இந்தப்படத்துக்கு இப்புடித்தான் 🙂

    @ கேபிள் – என்னாச்சு… படம் புடிக்கலையா இல்ல விமர்சனம் புடிக்கலையா? ஏன் இந்த சோக ஸ்மைலி?

    Reply
  30. பி.கு 2 – களம் கண்ட புறப்போர் அகவெறியன் – விகடனில் தொண்ணூறுகளின் முற்பகுதியில் வந்த, மெரீனா எழுதிய, ‘விஜி’ நகைச்சுவைத் தொடர்கதை – இதன் சிறப்பு, இயக்குநர் சரண், விகடனில் வேளை செய்துவந்த காலத்தில், வாரம் தோறும் கார்ட்டூன்கள் இத்தொடருக்கு வரைவார்.
    ////

    சிறு திருத்தம் “விஜி ” எழுதியது ரா.கி . ரங்கராஜன்..

    Reply
  31. இபப்பபடிபி எபெல்லபாம் எபுழுபுதபக்குபுடபாதுபு. [ இப்படி எல்லாம் எழுதக்கூடாது. ] ”வ கட்டிங்” தமிழ் என்று நினைப்பது “CLOUD NINE” மேல் கனவு போல் இருக்கு. விளக்கம் இருக்கா?

    Reply
  32. அதென்ன தமிழ் சினிமாவின் மேல் அப்படி ஒரு வெறுப்பு. மொக்க படமான Macheteஐ பாராட்டுகிறீர்கள். இது ஒரு டைம் பாஸ் படம். ஓகே. அதே மாதிரி நாங்கள் சீரியஸாக எடுக்கத் தேவையில்லாத வ 1/4 கட்டிங்கை ஏதோ தமிழ் சினிமாவின் இழுக்கு என்ற ரேஞ்சுக்கு பேசுகிறீர்கள்…

    Reply
  33. KUDIKARANUNGA THAAN INTHA MATHIRI PADATHA NAALA IRUKKUNU SOLLUVANGA!

    AVANGALE VERUTHU POI PAATHA PADAM ITHU….

    Reply
  34. jeyakanth

    This movie pure copy of harold and kumar go to white castle movie

    Reply

Join the conversation