Raanjhanaa hua mein tera . . . . . .

by Karundhel Rajesh July 31, 2013   Hindi Reviews

ஹிந்திப்பாடல்களைப் பொறுத்தவரையில், கும்பலாக சேர்ந்து மிகவும் கலர்ஃபுல்லாக ஆடும் வகையிலான பாடல்கள் அங்கே மிகவும் பிரபலம். எனக்குத் தெரிந்து, தற்கால ஹிந்தி சினிமாவில் இப்பாடல்கள் பிரபலம் ஆனது ஜதின் – லலித் ஜோடியினர் அமைத்த பாடல்களில்தான். அதற்கு முன்பே ‘ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்’ போன்ற படங்களில் ராஜ்கமல் (Correction – Ram-Lakshman இரட்டையர்கள் ) இப்படிப்பட்ட பாடல்களை இசையமைத்திருந்தாலும், இவ்வகையான பாடல்களில் ஒரு standard மெய்ண்டெயின் செய்யப்பட்டது ஜதின் – லலித்தின் இசையில்தான்.

ஜதின் – லலித்துக்குப் பின், ஷங்கர் – எஹஸான் – லாய் ஜோடியினரையும் இந்த வகைப் பாடல்களில் குறிப்பிட்டு சொல்ல முடியும்.

ஆனால் ரஹ்மானின் முன்னர் இவர்களின் பாடல்கள் எல்லாமே தூசு.

இவர்களையெல்லாம் விட திறமை வாய்ந்த ரஹ்மான் இதுவரை இப்படிப்பட்ட ஒரு துள்ளல் பாடலுக்கு இசையமைத்ததே இல்லை. அவரது பாணி வேறு மாதிரியானது. வார்த்தைகளே தேவையில்லாத காதலின் அழகு அற்புதமாக வெளிப்படும் பாடல்கள் அவருடையது.

உதாரணம் இந்தப்பாடல்.

அது ஒரு திருமணம். அந்தத் திருமணம் நமக்குக் காட்டப்படும் அதே ஷாட்டில், பின்னணியில் ஹார்மோனிகாவின் மெல்லிய சிணுங்கல் துவங்குகிறது. அந்த சிணுங்கலின் ஊடாகவே தப்லா பயணித்து, ஹார்மோனிகாவை compliment செய்கிறது. ஆனால் இது முழுவீச்சிலான டோலக்+தப்லா இசை அல்ல. தபலா மட்டுமே. எப்படி ஹார்மோனிகா சற்றே அடக்கப்பட்டு ஆரம்பிக்கிறதோ அப்படி இந்தத் தப்லாவும் அமுங்கியே துவங்குகிறது. இதன்பின்னர் பேஸ் கிதாரும் டோலக்கும் சேர்ந்துகொள்ள, இசை முழுவடிவம் பெறுகிறது.

மெல்லிய ரஹ்மானின் குரலில் ஹம்மிங் துவங்குகிறது.

dam dara dam dara, chashm chashme nam dam dara dam dara, chashm chashme nam
sun mere hum dum hamesha ishq mein hi jeena
கேள் என் காதலே…எப்போதும் காதலிலேயே வாழு..

படத்தில் காண்பிக்கப்படும் திருமணம், இந்த இசையால் முழுவீச்சு அடைகிறது. படம் பார்க்கும் நமது மனதில் மழை பெய்கிறது. அத்தனை பேரும் எழுந்து நிற்க, குருகாந்த்துக்குப் பக்கத்தில் நிற்கும் பூஜாரி அவரது கைகளில் உள்ள மாலையை குருவிடம் அளிக்க, பெரிய கண்களோடு க்ளோஸப்பில் சுஜாதா குருவுக்கு மாலையிடுகிறாள். அந்த நேரத்தில் பின்னால் நின்றுகொண்டிருக்கும் அவளது தந்தை, மெல்லியதொரு ஆசியை அவரது சைகைகளில் வெளிப்படுத்துகிறார். அந்தச் சமயத்தில் உள்வரும் காமெரா, அழகிய அந்த ஆற்றங்கரையில் நிற்கும் அந்தக் கோவிலின் முழு அழகையும் ஒரு சில நொடிகள் நமக்குக் காட்டி, அந்தக் காட்சியை dissolve செய்கிறது (ரஹ்மானின் பாடல்களை அட்டகாசமாக திரையில் வெளிப்படுத்தியவர்கள் மணிரத்னமும் அஸுதோஷ் கொவாரிகரும். அதில் வேறு கருத்துக்கே இடமில்லை).

ay hairathe aashiqui jagaa math; pairon se zameen zameen lagaa math.
என் அற்புதமான காதலே, (இந்தக் கனவிலிருந்து) ஒருபோதும் எழாதே. . உனது பாதங்கள் தரையைத் தொட்டுவிட அனுமதிக்காதே.

குருகாந்த் ஊருக்குச் செல்ல ரயிலில் ஏறப்போகிறான். புதிதாகத் திருமணம் செய்துகொண்ட காதல் மனைவியை உடன் அழைத்துச் செல்லமுடியாத சூழல். அவளிடம் விடைபெரப்போகும் அந்த அயனான சந்தர்ப்பத்தில் ‘போகாதே’ என்கிறாள் சுஜாதா.

‘என்ன சொல்கிறாய்!!’. . .

‘என்னையும் அழைத்துப் போ’. .

’உனக்கு உடைகள் எடுத்துவரவில்லையே’. .

‘ஏன்? உன்னால் நான்கைந்து புடவைகள் எனக்காக வாங்கித்தரமுடியாதா?’. . .

‘உனக்கு டிக்கெட்டும் இல்லையே?’. . .

‘உன் மடியில் அமர்ந்துவருவதற்கு டிக்கெட் எதற்கு?’. . .

இந்த நேரத்தில் சுஜாதாவின் காதலை உணர்ந்துகொள்கிறான் குருகாந்த். உடனே அவளையும் அழைத்துக்கொண்டு ஓடும் ரயிலில் ஏறிவிடுகிறான். அடுத்த ஷாட்டில் மறுபடி இந்தப் பாடல் துவங்குகிறது. ரயிலின் உள்ளே அமர்ந்திருக்கும் குருகாந்த்தும் சுஜாதாவும் பேசிக்கொள்வதில்லை. அவர்களிடையேயான பேச்சை, இந்தப் பாடல் பூர்த்தி செய்கிறது.

கேள் என் காதலே…எப்போதும் காதலிலேயே வாழு..(இந்தக் கனவிலிருந்து) ஒருபோதும் எழாதே. . உனது பாதங்கள் தரையைத் தொட்டுவிட அனுமதிக்காதே.

திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், கைமா செய்யப்பட்டு அங்கொன்றும் இங்கொன்றும் வரிகள் நுழைக்கப்பட்டு, முழுப்பாடலின் இனிமை படம் பார்ப்பவர்களுக்குத் தெரியாதவண்ணம் அப்படியே அமுங்கி அழிந்துவிட்டது. ஆனால், ரசிகர் ஒருவர் படத்தின் காட்சிகளை எடிட் செய்து முழுப்பாடலையும் அவரது பார்வையில் இங்கே அளித்திருக்கிறார். இந்தக் காட்சிகளைப் பாருங்கள். பின்னணியில் பாடலும் அழகாக ஒலிக்கிறது.

இதோ இதைப்போன்ற இன்னொரு உதாரணம். பாடலைப் பார்க்கும்போது, கீழே உள்ள ஆப்ஷனில் 720p செலக்ட் செய்து, HDயில் பார்க்கவும்.

ரஹ்மானின் காதல் பாடல்கள் சோடை போனதே இல்லை. அந்த வகையில் ரஹ்மானை மிஞ்ச வேறு யாரும் இதுவரை இல்லை. ஏற்கெனவே அதைப்பற்றி நமது தளத்தில் ஒரு போஸ்ட் பார்த்திருக்கிறோம். இதோ இங்கே. இந்த போஸ்ட்டில் அவரது தமிழ்ப்பாடல்கள் மட்டும் இருக்கும். ஆனால் அவைகளை ஜாலியாக தாண்டிச்செல்லும் வகையில் பல அற்புதமான பாடல்களை ஹிந்தியில் இசையமைத்திருக்கிறார் ரஹ்மான். காதலின் அழகை அடிமனதில் இருந்து உருவியெடுக்கும் இசை அவருடையது.

இருந்தாலும், இதே உணர்வை வெளிப்படுத்தக்கூடிய அடி பிரிக்கும் பாடல் ஒன்று இதுவரை அவர் வெளியிட்டதே இல்லை.

அந்த வருத்தம் ராஞ்ஜனாவோடு தீர்ந்தது. பொதுவாக இப்படிப்பட்ட (பிற இசையமைப்பாளர்களின்) பாடல்களில் பாடல் வரிகள் அட்டகாசமாகவெல்லாம் இருக்காது. ஆனால் இது ரஹ்மான் அல்லவா?

ஆடல், பாடல், இசை, நடிகர்கள் ஆகிய எல்லா வகையிலும் பிரமாதமான ஒரு ஜாலியான பாடல் இந்தப்படத்தில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வண்ணமயம். தனுஷும் இந்தப் பாடலின் முக்கியத்துவம் அறிந்து பின்னியிருக்கிறார். ரஹ்மானின் இசையில் இப்படிப்பட்ட ஒரு துள்ளல் அடியை ஹிந்தியில் முதன்முறையாகக் கேட்கிறேன். ஏற்கெனவே Meenaxi படத்தின் ‘Ye rishta kya kehlaya hai’ பாடலில் ஓரளவு இந்த துள்ளல் இருக்கும். இருந்தாலும், இதோ இந்தப் பாடல்தான் அதில் பெஸ்ட்.

பிரம்மாண்டமான திரையில், பிரமாதமான ஒலியமைப்பில், திரையெங்கும் வண்ணமயமாக இந்தப் பாடலைக் கேட்கும்போது, எனது மனதிலும் இந்த சிச்சுவேஷனின் உற்சாகம் தொற்றிக்கொண்டது. அதேசமயம், வெறும் உற்சாகம் மட்டும் இல்லாமல், அழகான காதலும் இந்த வரிகளில் இருக்கிறது. காதலியை நினைத்து உற்சாகம் கொள்ளும் இளைஞனின் இயல்பான சந்தோஷத்துடன், அதற்கேற்ற அட்டகாசமான இசை மற்றும் நடிப்பில், என்னால் மறக்கவே இயலாத ஒரு ரஹ்மானின் பாடல் இது. இசையுடன் கலந்த பாடல் வரிகள் வருகையில், அர்த்தமே புரியாவிட்டாலும், பாடலுடன் வார்த்தைகள் கலக்கும் அற்புதம் எப்போதாவது நாம் எதாவது ஒரு பாடலில் கவனித்திருப்போம். அப்படிப்பட்ட ஒரு வரி இதில் இருக்கிறது.

Aaana baatein pyaar ki laana….Aana thoda pyaar jataana
(காதலின் அழகிய மொழிகளுடன் வா…உனது காதலை துளியேனும் வெளிப்படுத்து)

வீடியோவின் 2:14ல் அது வருகிறது.

வீடியோவில் தனுஷின் பாடி லேங்வேஜை கவனியுங்கள். மிக வேகமான பாடலில், எந்த இடத்திலும் இசை தொய்யாமல் இருப்பது இதன் சிறப்பு. பாடலை எழுதியிருப்பவர், தற்போது பிரபலமாகிக்கொண்டிருக்கும் கவிஞர் இர்ஷாத் கமில். வழக்கமாக நமது காதல் பாடல்களின் கொள்கைப்படி, உங்களுக்குப் பிடித்த பெண்(களை)ணை நினைத்துப்பாருங்கள்.  அப்படிப்பட்ட பெண் எதிரே வருகையில், நமது மனம் என்ன நினைக்கும்? அதுதான் இந்தப் பாடல். இந்த மாதிரி சிச்சுவேஷனெல்லாம் ரஹ்மானுக்கு லட்டு போன்றது.

Raanjhanaa hua mein tera….. kon tere bin mera . . . . . .

இந்தப் பாடல் மனதில் கிளப்பும் உற்சாகத்தை எழுதிப் புரியவைப்பது கஷ்டம்.

மேலே உள்ள வீடியோவில் ஆங்காங்கே ஃபோட்டோக்களும் வரும். அது இல்லாமல், வெறும் வீடியோவை மட்டும் பார்க்க, இந்த வீடியோ.

பி.கு – பாடலை பார்க்கும்போது, எந்த தொந்திரவும் இல்லாமல் வீடியோக்களை HD செட்டிங்கில் திரையை பெரிதாக்கிப் பாருங்கள் என்று சொல்லவே தேவையில்லை.

  Comments

7 Comments

  1. சம்பத்து

    சகல சம்பத்தும் உண்டாகட்டும்

    Reply
  2. Parthipan

    “Ditto”. When I heard this track first time, the real cheer-full mood of the song immediately related/reminded me one excellent same kind of song from guruji. That indeed in its top notch composition of celebrating a particular north indian celebration. even though I never celebrated that function, every single time when I listen to the song It will bring the joyness of as I am really in the occasion and celebrating it. IMHO that one is more close to this raanjhana joyfull track.(that song…?… suspense!….can U guess)

    Reply
    • Rajesh Da Scorp

      I guessed Parthiban. Let me see if my guess is right. It’s this song right?
      http://www.youtube.com/watch?v=b_OLlEO_cVQ

      If it’s not this one, it should be ‘Rang De Basanti’ song from that moviee 🙂 ..

      Am I right?

      Reply
  3. அண்ணாத்த உங்க மரியான் பதிவு ஓபன் ஆவுள ன்னா பிராபுலம்

    Reply
    • Rajesh Da Scorp

      ஒப்பன் ஆகுதே அண்ணாத்த…. இப்போதானே செக் பண்ணேன் ?

      Reply
  4. ஆல்ரெடி “இசை இளவரசன்” பட்டத்த ஒரு ஆளுக்கு(வெளில தன் பேர கொழந்தனு சொல்லிக்குவாரு) கொடுத்துட்டனே.. உங்களுக்கு என்னா பட்டம் கொடுக்கலாம்..?? உங்க ஜாங்கோ விமர்சனம் படிச்சதுலருந்து யோசிச்சுகினு இருக்கேன்.. ஒன்னியும் மாட்ட மாட்டிங்குது..!! 🙂

    Reply
  5. Imayavan

    //ரஹ்மானின் பாடல்களை அட்டகாசமாக திரையில் வெளிப்படுத்தியவர்கள் மணிரத்னமும் அஸுதோஷ் கொவாரிகரும். அதில் வேறு கருத்துக்கே இடமில்லை// 200% correct…. I always thought that the richness in A.R.R’s songs make it tough to the directors to visualize it… only Maniratnam is succeeding it continuously.

    Reply

Join the conversation