[REC] – Spanish (2007)
Blair Witch Project திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் கல்லூரியில் படிக்கும்போது பார்த்த படங்களில் குறிப்பிடத்தகுந்த படம் இது. படம் முழுக்கவே ஹேண்டிகேமை வைத்தே எடுக்கப்பட்டதுபோன்ற எஃபக்டைக் கொடுக்கும். இந்தப் படத்தின் தீம், குறிப்பிட்ட சிலர் ஒரு பகுதியில் பலகாலமாக பேசப்பட்டுவரும் சூனியக்காரி ஒருத்தியைப் பற்றிய வீடியோ படமெடுக்க ஒரு காட்டுக்குள் நுழைந்து, அங்கே சந்திக்கும் அனுபவங்களைப் பற்றியது. இவர்களது மரணத்துக்குப் பிறகு கேமரா கண்டெடுக்கப்பட்டு, அதிலிருக்கும் படம் ஓடுவதுபோன்ற முறையில் எடுக்கப்பட்டது. மிகவும் பிரபலமான படம்.
இதுபோன்ற ஹேண்டிகேம் வகைப் படங்களை ’found footage‘ படங்கள் என்று வகைப்படுத்துவார்கள். படம் துவங்கும்போதே ஹேண்டிகேம் அல்லது வீடியோ கேமராவின் வழியாகவே ஆடியன்ஸுக்கு முழுக்கதையோ அல்லது கதையின் குறிப்பிட்ட பகுதிகளோ காட்டப்படும். அதிலும், ஏற்கெனவே படம் எடுக்கப்பட்டு, கேமரா தொலைந்துபோய் கிடைத்தபின்னர் அந்த வீடியோவை நாம் பார்ப்பது போன்ற படங்கள் முற்றிலும் இந்த found footage ஜானரில் அடங்கும். மேலேயே க்ளிக் செய்து இந்த ஜானரில் வந்திருக்கும் படங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
இதுபோன்ற ஒரு found footage படம் தான் இந்த REC. இந்தப் படத்தின் வெற்றியால், ஆங்கிலத்தில் Quarantine என்ற ரீமேக் 2008ல் எடுக்கப்பட்டது. முதல் பாகத்தைத் தொடர்ந்து ஸ்பானிஷில் மேலும் இரண்டு பாகங்கள் எடுக்கப்பட்டு, இப்போது நான்காவது பாகமும் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றும் படித்தேன்.
பிற found footage படங்களின் அதே டெம்ப்ளேட்டில்தான் இந்தப் படமும் ஆரம்பிக்கிறது. அதாவது, சந்தோஷமான, இயல்புநிலை வாழ்க்கையைப் பற்றிய ஒரு விவரிப்புடன், படத்தின் கதாபாத்திரங்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். படம் ஆரம்பிப்பது ஒரு தீயணைப்பு நிலையத்தில். படத்தின் கதாநாயகியின் பெயர், டெஸிஸ் படத்து நாயகியின் அதே பெயர். அங்ஹெலா. அவள் ஒரு காம்பியர். அவளது நிகழ்ச்சியில் இந்த முறை தீயணைப்பு வீரர்களைப் பற்றிய கவரேஜ் இருப்பதால் அவர்களது இரவுவாழ்க்கையைப் படம்பிடிக்க, தனது ஒளிப்பதிவாளன் பாப்லோவுடன் அங்கு வந்திருக்கிறாள். தீயணைப்பு நிலையத்தின் அன்றாட அலுவல்களைப் படம் எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்கு ஒரு தொலைபேசி வருகிறது. ஒரு அபார்ட்மெண்ட்டில் வயதான பெண் ஒருவர் மாட்டிக்கொண்டிருப்பதாக. உடனடியாக தீயணைப்புக் குழுவினருடன் அங்கே விரையும் அங்ஹெலா, எல்லாவற்றையும் படமெடுக்கும்படி பாப்லோவிடம் சொல்கிறாள். ஒவ்வொன்றாக நம்முன் காட்சிகள் விரிகின்றன.
மாட்டிக்கொண்டிருக்கும் வயதான மாதுவைக் காப்பாற்றப் போகும்போது அங்கே பேரதிர்ச்சி காத்திருக்கிறது. தீயணைப்பு வீரர்களுக்கு மட்டுமல்ல. நமக்கும்தான். அதிலிருந்து ஒவ்வொரு நிகழ்ச்சியாக விறுவிறுப்புடன் (கொஞ்சம் பயத்துடனும்) நடக்க ஆரம்பிக்கின்றன.
இந்தப் படம் ஒரு சிறிய படம். மொத்தம் 80 நிமிடங்கள் என்று நினைக்கிறேன். ஆகவே வேகமாகவே செல்கிறது. படத்தின் plot நமக்கு ஏற்கெனவே வேறு சில படங்கள் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், hand held cameraவினால் இப்படம் எடுக்கப்பட்டிருப்பது படத்தின் விறுவிறுப்புக்கு வலு சேர்க்கிறது. இந்த முறையினால் படத்தில் தத்ரூபமாக ஒப்பனை இத்யாதி விஷயங்களெல்லாம் காட்டத் தேவையில்லை. திடுக்கென்று நம்மை பயமுறுத்தவும் இந்த கேமரா டெக்னிக் உதவுகிறது.
வித்தியாசமான முயற்சி. ஹாரரில் இந்த வகையைச் சேர்ந்த found footage படங்கள் பெரும்பாலும் சோடை போனதில்லை. எப்படியும் ஆடியன்ஸை திருக்கிட வைக்கும் சில காட்சிகளாவது இவ்வகைப் படங்களில் இல்லாமல் போகாது. அதேபோல்தான் இப்படமும்.
REC படத்தின் ட்ரய்லர் இங்கே.
படத்தை விட உங்கள் விமர்சனம் மிகவும. சினனதாக உள்ளது…அதே நேரத்தில் அதே அளவு பரபரப்பாகவும் இருந்த்து.
இதுக்கு மேல எழுதினா இன்ட்ரஸ்ட் போயிரும்னுதான். இனிமேல எல்லாம் ரெண்டு வரில விமர்சனம் எழுத யோசனை உள்ளது
ராஜேஷ், சம்பந்தமே இல்லாம கேள்வி கேக்கறேன்னு நினைச்சுகாதீங்க…. மன்மதன் அம்பு படத்துல, “நீள வானம்” பாட்டு எப்படி எடுத்தாங்க? Song Reverse’ல இருக்கு, but lip movement மட்டும் எப்படி கரெக்டா இருக்கு???? இது எனக்கு ரொம்ப நாள் doubt….
இந்த டெக்னிக் பேரு ‘reverse narrative’ நரேந்திரன். இதைப் படமெடுப்பது ரொம்பக் கஷ்டம். அதாவது, நடிக்கும்போதே அதில் நடிக்கும் நடிகர் பாடல் வரிகளை ரிவர்ஸில் பாடவேண்டும். அப்போதுதான் படத்தில் காட்சிகளை ரிவர்சில் காட்டும்போது வாயசைப்பு நேராக இருக்கும். Coldplayவின் Scientist என்ற பாடல் இப்படி எடுக்கப்பட்டதுதான். இந்தப் பாட்டுக்கு ரிவர்ஸில் வாயசைத்து ரிஹர்ஸ் செய்ய அப்பாடலுக்கு வாயசைத்த மார்ட்டினுக்கு ஒரு மாதம் ஆனதாம். இதுபோலவே இன்னும் சில பாடல்களும் ஆங்கிலத்தில் riverse narrative டெக்னிக் மூலம் எடுக்கப்பட்டிருக்கின்றன.
thanks rajesh…
Hi ராஜேஷ், found footage movies எனக்கு கொஞ்சம் ஒத்துவராது. ஆனாலும் அதிலும் horror படங்கள்தான் பெஸ்டா இருக்கும்னு தோணுது footage ஐயே ஒரு plot ஆக வைத்து கதைய கொண்டு போகலாம் any way your introduction of Spanish Movies are simply superb. El Orfanato மூலம் சமீப நாட்களாக நிறைய (3) பார்த்து படுது.
ஐயையோ ‘சமீப நாட்களாக நிறைய (மூன்றே மூன்று தான்) ஸ்பானிஷ் படங்கள் பார்த்து படுது’ ன்னு சொல்ல வந்தேன். இந்த யுனிகோட் டைபிங் நமக்கு சனி.
Dear Mr. Rajesh,
I am viewing your website since its been started… your writings are very nice. I don’t like Harry Potter movies.. also the movies that has similar concept. Because of that I didn’t watch LOTR for long time. And In fact I started to watch LOTR after reading your reviews..
Now I want to tell you that; since two weeks I am trying to watch your post (through some thirdparty websites – in the office) but your web page gets hanged. Now I post this comment through google chrome. Kindly look to this matter…
சிறந்த த்ர்லர்…