Rumor has it (2005) – English

by Karundhel Rajesh October 21, 2010   English films

வாழ்க்கையில் அதிருஷ்டம் என்பது மட்டுமே வாய்க்கும் மனிதர்கள் இந்தப் பூவுலகில் வெகு சில பேர்கள் உண்டு. அவர்களைப் பார்த்துப் பொறமைப்பட்டுக்கொண்டே இருப்பதைத் தவிர நம்மால் ஏதுமே செய்ய இயலாது. சமயத்தில், இவர்கள் உடம்பு முழுவதுமே ஒரு கிங் சைஸ் மச்சமாகவே மாறிவிடுகிறதோ என்று எண்ணத்தோன்றும் அப்படிப்பட்ட பலே கில்லாடி ஒருவனின் கதையே இந்த ரூமர் ஹேஸ் இட்.

நீங்கள், ‘The Graduate’ படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? டஸ்டின் ஹாஃப்மேனின் நடிப்பில், 1967ல் வந்த ஆங்கிலப் படம். படத்தின் கதை, மிகவும் சிம்பிள். கதாநாயகியின் தாயாரால் மேட்டர் செய்யப்பட்டுவிடும் கதாநாயகன், அந்தத் தாயாரின் மகளைக் காதலிக்கிறான். இதுதான் சுருக்கம். இந்தக் கதையை மையமாக வைத்துத்தான் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜெனிஃபர் ஆனிஸ்டன் – கிழவியாக ஆனபின்னும் இவரைப் பார்த்தால், அழகாகவே இருக்கும் (ஹீ ஹீ).. இவரது பெயர், ஸாரா. ந்யூ யார்க்கிலிருந்து, பேஸடீனாவில் இருக்கும் தனது தங்கையின் திருமணத்துக்குச் செல்கிறார். அதுதான் ஸாராவின் சொந்த ஊரும் கூட. ஸாராவுடன், அவளது காதலன் ஜெஃப்ஃபும் செல்கிறான். ஸாராவின் தந்தை, ஒரு பழமையான நபர். அங்கேயே இருக்கும் ஸாராவின் பாட்டியோ (ஷிர்லி மெக்லேன்), பயங்கர ஜாலி பேர்வழி. ஸாராவின் தாயார் உயிரோடு இல்லை.

அங்கே நடக்கும் ஒரு விருந்தில், தனது தாயார், திருமணத்துக்கு ஒரு வாரம் முன்னால், தனது பள்ளித்தோழன் ப்யூ பர்ரோஸைப் பார்க்க வீட்டை விட்டு மூன்று நாட்கள் ஓடிவிட்டாள் என்று தெரிந்துகொள்கிறாள் ஸாரா. ஓடிவிட்ட அவள், மீண்டும் திருமணத்தன்று வந்து சேர்ந்துவிடுவதால், திருமணம் நடக்கிறது. ஸாராவும் பிறக்கிறாள். ஆனால், ஸாராவின் பிறப்பில் இன்னொரு மர்மம் இருக்கிறது. திருமணத்துக்கு எட்டே மாதங்கள் கழித்து ஸாரா பிறந்துவிடுகிறாள். அப்படியென்றால், ஸாரா, ப்யூ பர்ரோஸுக்கும் அவளது தாயாருக்கும் பிறந்தவளா?

இந்தக் கவலை அவளது மனதை அரிக்கிறது. அதே நேரத்தில், பேஸடீனாவில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைப் பற்றி உலவும் வதந்தியும் அவளது நினைவுக்கு வருகிறது. க்ராஜுவேட் படமே, இந்தக் குடும்பத்தின் கதைதான் என்ற வதந்தி தான் அது. உடனேயே, தனது பாட்டியிடம் செல்லும் ஸாரா, ப்யூ பர்ரோஸ் என்ற பெயரை நினைவு இருக்கிறதா என்று கேட்கிறாள். அந்தப் பெயரைக் கேட்டவுடன், அதிர்ச்சியுறும் பாட்டி, மழுப்பவே, ஸாராவின் சந்தேகம் உறுதி ஆகிறது.

இந்தப் ப்யூ பர்ரோஸ் என்பவன் தான், முதலில் ஸாராவின் பாட்டியுடனும், பின் ஸாராவின் தாயாருடனும் மேட்டர் செய்தவன் என்ற உண்மை ஸாராவுக்குப் புரிகிறது.

பயங்கரக் கடுப்பில், தனது தந்தையாக இருக்கக்கூடிய வாய்ப்புடைய ப்யூ பர்ரோஸைத் தேடி, ஸான் ஃப்ரான்ஸிஸ்கோ செல்கிறாள் ஸாரா. ப்யூ பர்ரோஸையும் (கெவின் காஸ்ட்னர்) கண்டுபிடிக்கிறாள். பெரும் பணக்காரரான பர்ரோஸ், ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருக்கிறார். உரை முடிந்ததும், தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஸாரா, தனது தாயாருடன் ப்யூ பர்ரோஸ் படுக்கையைப் பகிர்ந்தது உண்மையா என்று கேட்க, பர்ரோஸ் ஒத்துக்கொள்கிறார். ஆனால், ஸாராவின் தந்தை, அவர் இல்லை என்றும் மறுத்துவிடுகிறார். காரணம்? பள்ளியில் படிக்கையில், யாரோ ஒருவன் உதைத்த கால்பந்து, இவரது விரைகளைப் பதம் பார்த்ததேயாகும். அன்றிலிருந்து இன்றுவரை, தான் ஆண்மையற்று இருப்பதாக ஸாராவிடம் சொல்கிறார்.

ஸாராவுடன் அந்த மாலையைச் செலவிடும் பர்ரோஸ், அவளை ஒரு பாருக்கு அழைத்துச் செல்ல, அங்கே முட்டமுட்டக் குடிக்கும் இருவரும், பல கதைகளைப் பேசியவாறே, ப்யூ பர்ரோஸின் வீட்டுக்குச் செல்கின்றனர். அன்று இரவு, ப்யூ பர்ரோஸ், ஸாராவையும் மேட்டர் செய்து விடுகிறார். மறுநாள் காலையில் இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஸாராவுக்குத் தலை சுற்றுகிறது. ஒருவேளை, ப்யூ பர்ரோஸ் தனது தந்தையாக இருந்தால், தனது தந்தையாலேயே மேட்டர் செய்யப்பட்ட (incest) அவப்பெயர் அவளுக்குக் கிடைக்கும். இதையெண்ணி மிகவும் வருத்தப்படுகிறாள்.

அன்று இரவு நடக்கும் ஒரு விருந்தில், ஸாராவைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார் ப்யூ பர்ரோஸ். அங்கு வரும் ஒரு இளைஞன், தானே ப்யூ பர்ரோஸின் மகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ள, மண்டை காய்ந்து போகிறாள் ஸாரா. ஆண்மையில்லை என்று ப்யூ பர்ரோஸ் சொன்னது பொய்யோ? அங்கேயே, ஸாராவின் காதலன் இவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்க்கும் காமெடியும் நடக்கிறது. ஸாரா ப்யூ பர்ரோஸுடன் படுத்ததைத் தெரிந்து கொள்ளும் காதலன், அங்கேயே அவளை விட்டுப் பிரிகிறான்.

எல்லா விதத்திலும் டார்ச்சராகும் ஸாரா, ப்யூவை விட்டுவிட்டுத் தனது ஊரான பேஸடீனாவுக்கே செல்கிறாள். அங்கே, தனது பாட்டியிடம் நடந்ததை அவள் சொல்ல, கடுப்பின் உச்சத்துக்கே செல்லும் பாட்டி, தனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகள் அத்தனையிலும் ப்யூ பர்ரோஸைத் திட்ட ஆரம்பிகிறாள். பின்னே? முதலில் தன்னுடன்.. பின் தனது மகளுடன்.. அதன்பின் தனது பேத்தியுடன்.. இப்படி, மூன்று தலைமுறைப் பெண்களுடனும் ஒரு ஆள் மேட்டர் செய்தால், என்னதான் செய்வது?

அப்போது, ஸாராவைத் தேடி, ப்யூ பர்ரோஸே அங்கு வரும் கொடுமையும் நடக்கிறது. நாற்பது வருடங்கள் முன் சந்தித்துக்கொண்ட ஸாராவின் பாட்டியும் ப்யூ பர்ரோஸும், மீண்டும் சந்தித்துக்கொள்கின்றனர்.

இதன்பிறகு என்ன நடந்தது? ஸாராவின் தந்தை யார்?

விடை காண, படத்தைப் பாருங்கள்.

படத்தின் இயக்குநர், நமக்கெல்லாம் தெரிந்த ராப் ரெய்னர் (when harry met sally, a few good men, Sleepless in Seattle, The american president).

இப்படம், ஒரு உலகப் படம் எல்லாம் இல்லை. ஜாலியாக ஒரு வார இறுதியில் தொலைக்காட்சியில் பார்ப்போமே, அந்த ரகம். கெவின் காஸ்ட்னர் சும்மா பிய்த்து உதறியிருக்கிறார். படம் முழுக்க ஜாலி காமெடி வசனங்கள். குறிப்பாக, ப்யூ பர்ரோஸும், ஸாராவின் பாட்டியும் சந்தித்துக் கொள்ளும் இடத்தில் வரும் பின்னணி இசையைக் கவனியுங்கள். தமிழில் ஒரு படத்தில் கவுண்டமணியும் செந்திலும் சந்தித்துக்கொள்ளும்போது, இதே இசை பயன்படுத்தப்பட்டதைப் பார்த்திருக்கிறேன்.

ஒருமுறை, இப்படத்தைப் பார்க்கலாம். ஜாலியாக. டைம்பாஸ்.

Rumor has it படத்தின் டிரெய்லர் இங்கே.

  Comments

15 Comments

  1. நண்பா
    அட செம வேகமா ஒரு விமர்சனம்
    பதிவை மாலை படிச்சிடுறேன்,அட்வான்சா இந்த கமெண்ட்.
    ஜாலிபடங்களுக்கு விமர்சனம் எழுதுவதே ஒரு கலைதான்,வெல்டன்.

    Reply
  2. சுந்தர்.C said…..

    வாடாஆஆஆ…….

    Reply
  3. //ஜெனிஃபர் ஆனிஸ்டன் – கிழவியாக ஆனபின்னும் இவரைப் பார்த்தால், அழகாகவே இருக்கும்//

    சொல்லவேயில்ல…அப்படியே சோபியா லாரென், எலிசபெத் டைலர் இவுன்களைப் பத்தியும் எழுதுனா என்னைய மாதிரி இன்றைய தலைமுறைக்கு உபயோகமாயிருக்கும்..முடிஞ்சா Elizabeth taylorஇன் கிளியோபாட்ரா படத்தை first day – first show பார்த்த பத்தி ஒரு பதிவு போடுங்க

    Reply
  4. தல..நீங்க சொன்னீங்கன்னு எந்திரன் பதிவ படிச்சேன்..இத்தனை நாட்களுக்கப்பறமும் கமெண்ட்களா….இவுங்களுக்கு என்ன பிரச்சனைனு தெரியலயே…ஏன் இவ்வளோ தரம்தாழ்ந்து போறாங்களோ

    ஒரு சின்ன வேண்டுகோள்..எதுக்கு அந்த கம்மென்ட்களை பெரிசா எடுத்துகிட்டு பதில் போட்டீங்க…அதுனால தான் ரொம்ப ஓவரா போயிருக்காங்க..இதுபோன்ற விசயங்களில் உங்க நேரம் விரயமாகிறாது எங்களுக்குத்தான் நஷ்டம்…உங்களுக்கும் கூட. அந்த நேரத்தில ஒரு பதிவ போட்டிங்கன்னா எவ்வளோ நல்லாயிருக்கும்…

    Reply
  5. உங்களுக்கு பிடித்த தமிழ் படத்தை(அப்படி ஏதாவது இருக்கா) பற்றி எழுதுங்களேன்.

    எப்புடீ மடக்கிபுட்டோம்ல!!!

    Reply
  6. // Elizabeth taylor இன் கிளியோபாட்ரா படத்தை first day – first show பார்த்த பத்தி ஒரு பதிவு போடுங்க

    தேளு, குழந்தை அழ போகுது சீக்கரம் Elizabeth taylor பத்தி ஒரு பதிவு இல்ல ஒரு படத்தையாவது போடு

    Reply
  7. //கதாநாயகியின் தாயாரால் மேட்டர் செய்யப்பட்டுவிடும் கதாநாயகன்//

    அட செம்ம மேட்டார் தல இந்தமாதிரி நம்ம தமிழ் பட மண்டயனுகளுக்கு படம் எடுக்க தெரியமாடண்ணுது…

    Reply
  8. வதந்தி வதந்தி எல்லாம் வதந்தி………..

    Reply
  9. @ கீதப்ரியன் – ரைட்.. 🙂 இது சும்மா யதேச்சையா பார்க்க நேர்ந்தது… காமெடியா போச்சு படம் 🙂

    @ கொழந்த – என்னாது //முடிஞ்சா Elizabeth taylorஇன் கிளியோபாட்ரா படத்தை first day – first show பார்த்த பத்தி ஒரு பதிவு போடுங்க// .. அடப்பாவி.. அவங்க யாருன்னே எனக்குத் தெரியாதே 🙂 எங்க பக்கத்து வீட்ல இருந்த வெஸ்டெண்ட் டெய்லர் தான் எனக்குத் தெரியும்.. ஆனா அவருக்கும் வயசாச்சி.. அவரோட ஃபோட்டோ போட்டா நல்லாருக்காது 🙂

    அப்புறம், எந்திரன் பதிவுல வந்து வாந்தியெடுக்குறவனுங்களைப் பத்தி சீரியஸா எடுத்துக்காதீங்க.. ஆர்க்குட்ல ரஜினி வெறியர்கள் பேரவை ஒண்ணு இருக்கு.. அதுல ஒரு பயல் அந்தப் போஸ்ட் லின்க்க்கைக் குடுத்துருக்கான். ‘ஏந்தான் தலைவரை மதிக்க மாட்டானுங்கறானுங்களோ’ அப்புடீன்னு ஒரு அங்கலாய்ப்போட.. அதுல இருக்குற லூஸுங்க சில பேருதான் இப்புடி கிளம்பிருக்கானுங்க.. 🙂 இதையெல்லாம் நாம பொருட்படுத்தவே தேவையில்ல.. இதெல்லாம் கக்கூஸ்ல எழுதி சிலிர்ப்படையுற கேசுங்க 🙂

    @ மொக்கராசா – தலைவா… எப்புடி பாயிண்ட புடிச்சீங்க? எழுதத்தான் போறேன்.. சீக்கிரமே சரமாரியா தமிழ்ப்பட விமரிசனங்கள் வரும்ல ! உங்களுக்கு எதாவது ஞானதிருஷ்டி கீதா? 🙂

    @ ராஜகோபால் – ஹாஹ்ஹாஹ்ஹா.. 🙂 இப்புடித்தான் ஒரு படம் வந்துக்குதே.. பேரு சிந்து சமவெளியாம்ல 🙂

    @ எஸ்.கே – ஆமாம் .. 🙂 வதந்தி தான் இப்படத்தின் முக்கிய அம்சம் 🙂 பார்த்தாச்சா 🙂

    Reply
  10. சரியான மேட்டர் படமாயிருக்கே!!!!!!!!!!!!இருந்தாலும் குழந்தை உலவும் பகுதியாக இருப்பதால் அடக்கி வாசிக்கவும்.

    Reply
  11. நண்பரே,

    மனிதனிற்கு மச்சம் இல்லை அவனே ஒரு முழு மச்சம். என்ன ஒரு வாய்ப்பு, என்ன ஒரு அனுபவம். இந்தப் பதிவு என் பொறாமையை பெட்ரல் ஊற்றி கொளுத்தி வேடிக்கை பார்க்கிறது. பிறந்தால் பர்ரோஸாக பிறக்கவேண்டும். நண்பர் இலுமினாட்டி குறிப்பெடுத்துக் கொள்ளவும் :))

    Reply
  12. என்னய மாதிரி பச்சிளம் பாலகர்கள் படிக்க கூடாத பதிவு இது.. இருந்தாலும் உங்கள் விமர்சனமும் மேல போட்டிருக்க கூடிய அந்த புகைப்படமும் இந்த படத்தை இக்கணமே பார்க்க தூண்டுகிறது 🙂 நன்னி….

    Reply
  13. http://www.karundhel.com : ஒரு இன்பியல் சம்பவம் .. 🙂

    என்னாண்ணே ஒரு 18+ கேட்டா இதுக்கு 2,3 18+ ஆ இருக்கும்போல இருக்கே 🙂

    Reply
  14. Enthiranukkum enthirikum enbathae endhiranin kathai..

    Reply

Join the conversation