அடுத்த திரைக்கதைத் தொடர்

by Karundhel Rajesh April 22, 2014   Announcements

ஸிட் ஃபீல்டின் திரைக்கதை அமைப்பைப் பற்றி நமது கருந்தேளில் பொழுதுபோகாமல் எழுதிக்கொண்டிருந்தேன். அதனை நமது சிவராமன் படித்துவிட்டு தினகரன் வெள்ளிமலரில் எழுதச்சொன்னார். அப்படி எழுதும்போது, தமிழ் சினிமாவில் எப்படி சிட் ஃபீல்டின் (Syd Field) கோட்பாடுகள் பொருந்துகின்றன என்று எழுதினால் என்ன என்று தோன்றியது. அதனால்தான் தினகரன் வெள்ளிமலரில் சிட் ஃபீல்டின் புத்தகத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு தற்போது தமிழ்ப்படங்களைப் பற்றி ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ தொடரில் விரிவாக எழுதிவருகிறேன். அந்தத் தொடர் அவசியம் வெகு விரைவில் புத்தகமாக வரும்.

அந்த வகையில் சிட் ஃபீல்டைத் தமிழ் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தியதில் மிகவும் மகிழ்ச்சி. தற்போது ஸிட் ஃபீல்டின் பெயர், அனைத்துத் திரை ரசிகர்களுக்கும் நன்றாகத் தெரிந்த ஒரு household பெயராகி இருக்கிறது என்றால், அதற்குத் தமிழ் சினிமா ரசிகர்களின் திரைப்பட ஆர்வமே காரணம்.

சரி. எதுக்குடா இத்தா பெரிய பீடிகை? மேட்டருக்கு வாடா.

காரணம் இருக்கு நைனா. சிட் ஃபீல்ட் ஆரம்பித்து வைத்த ஹாலிவுட் திரைக்கதை சரித்திரத்தை அவருக்கு அடுத்ததாக வந்த திரைக்கதை gurus பலரும் கம்பீரமாக இன்னும் உயரத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி – அவர்கள் என்னென்ன திரைக்கதை கோட்பாடுகளை எழுதினார்கள் என்பதையெல்லாம் விரிவாக எழுதப்போகிறேன். மிக விரைவில், நமது கருந்தேளில் இந்த திரைக்கதைப் பயணம் தொடரும். முடிந்தவரை எளிமையாக, படிப்பவர்கள் அனைவருக்கும் புரியும் விதத்தில் எழுதலாம் என்பது உத்தேசம். இந்தத் தொடர் பாதியிலோ கால்வாசியிலோ முடியப்போவதில்லை. முழுமையாக முடித்துவிட்டுத்தான் மறுவேலை.

சிட் ஃபீல்டின் கோட்பாடுகளுக்கு முற்றிலும் வேறாக இருக்கும் சில கோட்பாடுகள், சிட் ஃபீல்டை விடவும் இன்னும் எளிமையான சில கோட்பாடுகள், பல ஹாலிவுட் இயக்குநர்களுக்கு இன்றும் பாடமாக இருக்கும் பல கோட்பாடுகள், இவற்றையெல்லாம் உருவாக்கிய திரைக்கதைப் பிரம்மாக்கள் என்று மிகவும் சுவாரஸ்யமாக இருக்கப்போகும் தொடர் இது. இவர்களின் புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட்டதால், அவற்றைப் பற்றி எழுதுவது இன்னும் எளிது. வழக்கப்படியே ஆங்காங்கே தமிழ் ஹாலிவுட், உலக சினிமா உதாரணங்கள் என்று பல clipகளைப் பிடித்து, செம்ம ஜாலியாக இந்தத் தொடரைத் தொடருவோம்.

ஒருங்காக டைம்டேபிள் போட்டு வாரம் ஒரு எபிஸோட் எழுதலாம் என்பது எண்ணம். நீங்கள் நினைப்பதைவிட மிகவும் விரைவில் மறுபடியும் இந்தத் தொடர் துவங்கும்.

இதுக்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?

நான் ஸிட் ஃபீல்டைப் பற்றிக் கருந்தேளில் + வெள்ளிமலரில் எழுதும்போது நண்பர்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவு, நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் அதைப் படித்துப் புரிந்துகொள்வோம் என்ற உண்மையை விளங்க வைத்தது. அது ஒன்றேதான் காரணம்.

அப்போ… (மறுபடியும்) ஆரம்பிச்சிரலாமா?

  Comments

11 Comments

  1. கண்டிப்பாக அறிந்து கொள்ள காத்து இருக்கின்றோம் … அந்த சாங் செம்மையா ஒற்று போகுது ப்ரோ 😉

    Reply
  2. Ganesan

    வாழ்த்துக்கள்.மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    Reply
    • Rajesh Da Scorp

      எப்புடி வருதுன்னு பார்ப்போம் கணேசன் 🙂

      Reply
  3. Arun Selvaraj

    Super thala… vaathukkal… and welcome back …

    Reply
    • Rajesh Da Scorp

      தாங்க்யூ அருண்.

      Reply
  4. raymond

    super thala…. welcome….!

    Reply
    • Rajesh Da Scorp

      சியர்ஸ் பாஸ் 🙂

      Reply
  5. Sujith

    இதற்க்கு பெயர்தான் “மாஸ் காட்டுதல்” ..!

    Reply
    • Rajesh Da Scorp

      Ha ha ha …Actually yes 😛

      Reply
  6. Mathialagan

    எப்போ ஆரம்பிக்க போறீங்க பாஸ் …………..? நானும் திருட்டு தனமாக நகல் எடுத்து என் facebook-இல் போட்டுகலாம்ன்னு இருக்கேன் …. ஓ கே வா ……….

    Reply
  7. ramachandran

    cinema is like a magic show..i want to tell something.. cinema secretes should be hide like a magic tricks .. if you disclose the trick no audience you will get..

    Reply

Join the conversation