Shamitabh (2015) – Hindi

by Karundhel Rajesh February 9, 2015   Hindi Reviews

இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்த அமிதாப் பச்சனின் திரைவாழ்க்கையின் மிகப்பெரிய ஹிட்களில் ஒன்று ஆக்ரி ராஸ்தா. தமிழில் ‘ஒரு கைதியின் டைரி’ என்று கமல்ஹாஸனை வைத்து வெளிவந்த பிரம்மாண்ட ஹிட் படத்தின் ஹிந்தி ரீமேக். எழுதி இயக்கியவர் பாக்யராஜ். இந்தப் படம் வந்தது 1986. இதன்பின்னர் வந்த கங்கா ஜம்னா சரஸ்வதி, தூஃபான் (சூப்பர்ஹீரோவாக அமிதாப் நடித்த படம்), ஜாதுகர், மெய்(ன்) ஆஸாத் ஹூ(ன்) போன்ற படங்கள் சரியாகப் போகவில்லை. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஹிட்கள் இல்லாமல் அமிதாப் இருந்த காலகட்டம். அப்போதுதான் முகுல் ஆனந்த் இயக்கிய அக்னீபத் படம் 1990ல் வெளியானது. அதில் அவர் நடித்த விஜய் தீனாநாத் சௌஹான் வேடம் இன்றும் பிரபலம். அமிதாபுக்கு நல்ல பெயர் வாங்கித்தந்த படம். அதன்பின்னர் ரஜினிகாந்த் மற்றும் கோவிந்தாவோடு அவர் நடித்த ‘ஹம்’ படம் அதே முகுல் ஆனந்த் இயக்கி 1991ல் வெளியானது (இந்த இரு படங்களுக்கு இடையே ஆஜ் கா அர்ஜுன் என்ற படம் வெளியாகி ஹிட் ஆனது. இது ‘என் தங்கச்சி படிச்சவ’ படத்தின் ஹிந்தி ரீமேக்). அக்னீபத்தும் ஹம்மும்தான் (ஓரளவு ஆஜ் கா அர்ஜுனும்) அமிதாப்பின் ஹீரோ இமேஜைப் பல ஆண்டுகள் கழித்துத் தூக்கி நிறுத்திய படங்கள். இதன்பின் ஒரு சில படங்கள் ஓடாமல் மறுபடி அமிதாப்பின் இமேஜ் சரியத் துவங்கியது. அப்போதுதான் முகுல் ஆனந்த் அமிதாப்போடு இணைந்த மூன்றாவது படம் – ‘ஹுதா கவா’ 1992ல் வெளியானது. தனது ஐம்பதாவது வயதில் அமிதாப் ஹீரோவாக நடித்த படம் அது. அந்தப் படம் வெளியானபோது அமிதாப் ‘இதுதான் என் கடைசிப் படம். சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்திருந்தார். படம் ஹிட் ஆனது. தனது ஏ.பி.சி.எல் நிறுவனத்தில் அமிதாப் தீவிரமாக இறங்கினார்.

ஹுதா கவா படத்துக்குப் பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து 1997ல் ‘ம்ருத்யுதாதா’ வெளியாகித் தோல்வி அடைந்தது. 1997ல் இருந்து 2000 வரை அமிதாப் எட்டு படங்கள் நடித்தார். அவற்றில் ஆறில் அவர் ஹீரோ (மேஜர் ஸாப் படத்தில் குணச்சித்திர வேடம்). இந்த எட்டு படங்களில் அவர் ஹீரோவாக நடித்த அத்தனை படங்களும் தோல்வி அடைந்தன. ‘ஸூர்யவன்ஷம்’ படம் மட்டும் ஓரளவு ஓடியது (தமிழ் சூர்யவம்சத்தின் ரீமேக்). அவரது எட்டாவது படமாக 2000ல் ‘மொஹப்பதேய்ன்’ வெளியாகி பிரம்மாண்ட ஹிட் ஆனது. அதில் அவர் ஹீரோ அல்ல. ஹீரோவான ஷா ருக் கானுக்கு எதிராக உணர்ர்சிபூர்வமான பாத்திரம் ஒன்றைச் செய்திருந்தார்.

அந்தப் படத்தில் இருந்து அமிதாப்பின் திரைவாழ்க்கை முற்றிலுமாக மாறியது. இந்த மாற்றத்துக்கு மேஜர் ஸாப் படத்துக்கும் க்ரெடிட் கொடுக்க முடியும். ஹீரோவாக நடிப்பதை நிறுத்தினார். வயதுக்கு ஏற்ற வேடங்களைச் செய்ய ஆரம்பித்தார். இதனால் இன்று வரை அமிதாபுக்காக மட்டுமே பல கதைகள் எழுதப்படுகின்றன. ஹீரோவாக நடித்தபோது செய்யாத பல வித்தியாசமான பாத்திரங்களை இப்போது அமிதாப்பால் செய்ய முடிகிறது. இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இப்போது அமிதாப் திகழ்கிறார்.

ஹீரோவாக அமிதாப் இருந்தபோது எப்படி முகுல் ஆனந்த் அமிதாப்பின் தோல்விப் படங்களை மாற்றியமைத்தாரோ, அப்படி இப்போது அமிதாபுக்குக் கிடைத்திருக்கும் இயக்குநர்தான் பால்கி. அமிதாப் குணச்சித்திர வேடங்களைச் செய்ய ஆரம்பித்தபின் அவரது நடிப்புத் திறமை பளிச்சிடும் வேடங்கள் என்று கவனித்தால் பால்கி இயக்கிய ‘சீனி கம்’, ‘Paa’ மற்றும் ‘ஷமிதாப்’ ஆகிய படங்களை அவசியம் சொல்லமுடியும். பால்கி அமிதாப்பின் ரசிகர். எனவே, தன்னுடைய ஆதர்சமான நட்சத்திரத்துக்கு அவரால் வித்தியாசமான பாத்திரங்களை எழுத முடிகிறது. ஆனால் – அமிதாப் இன்னும் ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருந்தாரேயானால் – இப்படங்கள் சத்தியமில்லை என்பதையும் நாம் உணரவேண்டும்.

கடந்த சில வருடங்களில் அமிதாப் செய்த சிறந்த பாத்திரங்களில் ஒன்று ‘The Last Lear‘. ரிதுபர்ணோ கோஷ் இயக்கிய படம். அதன்பின் ‘பா’. அதன்பின் இப்போது ஷமிதாப். இப்படத்தில் அனைவருக்குமே அவர்களது நிஜப்பெயர்கள்தான் என்பதால் அப்பெயர்களை உபயோகித்தேதான் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. எனவே குழம்பவேண்டாம்.

ஷமிதாப்பில் அமிதாபுக்கு வாழ்க்கையில் முற்றிலுமாகத் தோல்வியடைந்த மனிதனின் வேடம். சினிமா ஸ்டார் ஆகலாம் என்ற மோகத்தில் அறுபதுகளில் பம்பாய்க்கு வரும் அமிதாப் சின்ஹா என்ற மனிதன், அவனது கனவு பலிக்காமல் வாழ்க்கையை முற்றிலும் தொலைத்துவிட்டு, சுடுகாடு ஒன்றில் வாழ்ந்து வருகிறான். அவன் சினிமாவில் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு அவனது குரலும் ஒரு காரணம். ஆல் இண்டியா ரேடியோவில் அவனது குரலைக் கேட்டுவிட்டு அவனை நிராகரித்து விடுகின்றனர் (இது அமிதாபுக்கு நேர்ந்த நிஜ வாழ்க்கைச் சம்பவம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்)​. இப்படிப்பட்ட நிலையில் அமிதாப் சின்ஹா ஒரு கடுமையான குடிகாரரும் கூட. தெளிவாக இல்லாமல் ப்ளாட்ஃபாரத்தில் நிறைபோதையில் விழுந்து கிடக்கும் அசிங்கமான ஆசாமியாகத்தான் இப்படத்தில் அமிதாப் நமக்கு அறிமுகமாகிறார்.

யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட ஒரு அறிமுகம் சூப்பர்ஸ்டாராக இருந்த – இருந்துகொண்டிருக்கும் – எந்த நடிகரும் யோசிக்கும் அறிமுகம்தானே? தமிழ்நாட்டில் இப்படி ஒரு காட்சியை ரஜினியை வைத்து நம்மால் கற்பனை செய்ய முடியுமா? தியேட்டர்கள் கொளுத்தப்பட்டுவிடாதா? அதுதான் அமிதாப்பின் மெச்சூரிட்டி. பாத்திரத்துக்காக எப்படியும் தன்னை அட்ஜஸ்ட் செய்துகொண்டு நடிக்கும் தேர்ந்த நடிகராக அமிதாப் மாறிப் பல காலம் ஆகிறது.

படத்தின் பிற பிரதான பாத்திரங்களான தனுஷ் மற்றும் அக்ஷரா அகியவர்கள் இப்படிப்பட்ட நிலையில் கிடக்கும் அமிதாப்பை மீட்டெடுக்கின்றனர். அவரால் இந்த இருவருக்கும் ஒரு உதவி ஆகவேண்டி இருக்கிறது. வேறு யாராலுமே முடியாத வேலை அது. வேண்டா வெறுப்பாக அமிதாப் சம்மதிக்கிறார். இதனால் தனுஷ் மற்றும் அமிதாப் கூட்டணி மிகவும் பிரபலம் அடைகிறது. எந்த சினிமா உலகம் தன்னை வெறுத்து விலக்கியதோ அப்படிப்பட்ட சினிமா உலகம் மீண்டும் தன்னை வாரியணைப்பதை அமிதாப் உணர்கிறார். ஆனால் அவருக்கென்றே இருக்கும் ஈகோ அப்போது குறுக்கே வருகிறது. அதேசமயம் தன்னுடைய வெற்றியில் அமிதாப்பின் பெரும்பங்கு இருப்பதை தனுஷும் உணர்கிறார். அவருக்குமே ஒரு ஈகோ உண்டு. ஹிந்தி சினிமா என்பது அவருடைய வாழ்க்கை லட்சியமும் கூட. இதனால் – இந்த இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டால்தான் இருவருக்குமே நன்மை என்ற நிலையில் – இருவரின் ஈகோவும் கடுமையாக மோதிக்கொள்வதால் என்ன நடக்கிறது என்பதுதான் ஷமிதாப்.

படத்தின் சிறந்த நடிப்பு சந்தேகமே இல்லாமல் அமிதாப்பினுடையதே. தீவிரமான ஈகோ பிடித்த ஆசாமியாக இருந்தாலும், ஒரு சில இடங்களில் ஈகோவைத் தளர்த்திக்கொண்டு அவர் செய்யும் சில விஷயங்கள் வெடிச்சிரிப்பை வரவழைக்கின்றன. எப்போதும் குடித்துக்கொண்டு, அதனால் தன்னிலை தவறி அவர் செய்யும் சில விஷயங்கள் அவர் மீது கோபத்தை வரவழைப்பதே இந்தப் பாத்திரத்தின் வெற்றி. ஏற்கெனவே சொன்னதுபோல், அமிதாப்பின் தீவிர ரசிகர் ஒருவரால்தான் இப்படி ஒரு பாத்திரத்தை உருவாக்க முடியும்.

அமிதாபுக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கும் பாத்திரம் தனுஷினுடையது. சிறுவயதில் இருந்தே ஹிந்திப் படங்களின் வெறியர். ஒரு கட்டத்தில் (தாய் இறந்ததும்) தனது லட்சியத்தை நிறைவேற்ற மும்பைக்கு ஓடிவந்துவிடுகிறார். வழக்கப்படி ஸ்டுடியோக்களின் வாசலிலேயே நிராகரிக்கப்படுகிறார். அப்போது உதவி இயக்குநரான அக்ஷரா தனுஷைக் கண்டெடுக்கிறார். அதிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக – காதலர்களாகவும் – மாறுகின்றனர். தனுஷின் கதாபாத்திரம் தான் என்ன செய்கிறோம் என்பதில் மிகத்தெளிவாக இருக்கிறது. தனக்குத் தேவையானதை எப்படியும் அமிதாப்பிடம் இருந்து கறப்பதில் பல இடங்களில் வெற்றியும் அடைகிறது. ஆனால் அப்போதெல்லாம் அமிதாப் அடையும் எரிச்சலின் விளைவாகவே சில இடங்களில் அமிதாப் பாத்திரம் தனுஷையும் எரிச்சல் அடைய வைப்பதில் வெற்றி காண்கிறது.

இந்த இருவருக்கும் இடையே எழும் பிரச்னைகளை எப்போதும் சரிசெய்துகொண்டே இருக்கும் பாத்திரம் அக்ஷராவினுடையது. ஜூனியர் கமல் என்று தாராளமாக அக்ஷராவைக் குறிப்பிடலாம். பல இடங்களில் கமல்ஹாஸனின் உடல்மொழி அப்படியே இவருக்கு வாய்த்திருக்கிறது. நன்றாக நடித்திருக்கிறார். கமலே பல காட்சிகளில் சற்றே வேறு வகையான வேடமிட்டு நிற்கிறாரோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

இந்தப் படத்தில் பல டெம்ப்லேட் க்ளிஷே காட்சிகள் உண்டு. பல படங்களில் பார்த்த அதே காட்சிகள். ஆனாலும் இப்படத்தில் அவை எடுபடுகின்றன. படம் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள்.

அமிதாப் என்ற அட்டகாசமான நடிகருக்காக இந்தப் படத்தை அவசியம் பார்க்கலாம்.

 

பி.கு

1. படத்தின் ஒரே குறை, இளையராஜாவின் பின்னணி இசை. தொண்ணூறுகளில் இருந்து அவர் போட்டுக்கொண்டிருக்கும் அதே இசை. பல காட்சிகளில் ஒன்ற முடியாமல் தடுத்துக்கொண்டே இருந்தது. ஷமிதாப் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது காதலுக்கு மரியாதை பக்கத்திலேயே இன்னொரு திரையில் ஓடிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது. பின்னணி இசையில் தொண்ணூறுகளின் இளையராஜாவை உபயோகித்துக்கொள்வதில் கமல்ஹாஸன் மட்டுமே சாமர்த்தியசாலி. பால்கிக்கு இளையராஜாவிடம் வேலைவாங்கத் தெரியவில்லை (விருமாண்டிக்குப் பின்னர் மும்பை எக்ஸ்ப்ரஸிலெல்லாம் கமலே அதில் தோற்றுவிட்டார். இளையராஜாவை இனிமேலும் இயக்குநர்கள் கஷ்டப்படுத்தவேண்டாம் என்று தோன்றுகிறது. அவர் ஜீனியஸ் என்பதில் யாருக்குமே சந்தேகம் இல்லை. இனி அவருமே அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும், இல்லையல்லவா?). ஆனால் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. குறிப்பாக அமிதாப் பாடிய ‘பிட்லீ ஸி பாதேய்ன்’ பாடல். பின்னி எடுத்திருக்கிறார்கள் அமிதாப்பும் இளையராஜாவும். ஷ்ருதிஹாஸன் பாடிய ‘ஸ்டீரியோஃபோனிக் சன்னாடா’ பாடலும் பிரமாதம். குரலில் அருமையான மாடுலேஷன்கள் காட்டியிருக்கிறார்.

2. படத்தில் டிபிகல் பாலிவுட் ரொமாண்டிக் மொக்கைகளை சாவடி அடித்திருக்கிறார் பால்கி. குறிப்பாக யஷ் சோப்ராவையும் அவரது மகன் ஆதித்ய சோப்ராவையும் கரன் ஜோஹரையும். ஏன் என்பது படம் பார்த்தால் தெரியும். பனி மலைகளில் கதாநாயகியைத் துரத்திக்கொண்டு ஓடி ரொமாண்டிக் பாடல்களை அமிதாப், ஷா ருக் கான் போன்றவர்களைப் பாட வைத்தது இந்த கும்பல்தான்.

3. தனது ஐம்பதாவது வயதில் ஹீரோவாக நடிப்பதை விட்டார் அமிதாப். அதன்பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து அவர் மறுபடி நடிக்க வந்து ஹீரோவாக நடித்த அனைத்துப் படங்களும் மக்களால் நிராகரிக்கப்பட்டன. எனவே குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் துவங்கினார். லிங்கா வெளியாகியிருக்கும் 2014ல் ரஜினியின் வயது 64. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனில் எம்.ஜி.ஆர் நடித்தபோது அவர் வயது 61. எனக்குத் தெரிந்து கன்னடத்தில் ராஜ்குமார்தான் மிக அதிக வயதில் ஹீரோவாக நடித்திருக்கிறார் (65). தமிழில் ரஜினி இனி வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தால் அவசியம் அடுத்த 15 வருடங்களுக்கு அவர்தான் சூப்பர்ஸ்டார். ரஜினிக்காகவே நல்ல கதைகள் எழுதப்படும். மிக வித்தியாசமான நடிகராக ரஜினி வலம்வரக்கூடும். அவர் அப்படிச் செய்யவேண்டும் என்பதே என் ஆசை.

ரஜினி பற்றிய கட்டுரை– இங்கே படிக்கலாம்.

 

  Comments

23 Comments

  1. @tekvijay

    If u disliked this movie’s bgm its ob. But

    1) இளையராஜாவை இனிமேலும் இயக்குநர்கள் கஷ்டப்படுத்தவேண்டாம் என்று தோன்றுகிறது

    2) ஆனால் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. குறிப்பாக அமிதாப் பாடிய ‘பிட்லீ ஸி பாதேய்ன்’ பாடல். பின்னி எடுத்திருக்கிறார்கள் அமிதாப்பும் இளையராஜாவும். ஷ்ருதிஹாஸன் பாடிய ‘ஸ்டீரியோஃபோனிக் சன்னாடா’ பாடலும் பிரமாதம்.

    2 Totally contrasting lines! hehe!!!

    Reply
    • Rajesh Da Scorp

      There is nothing contrasting boss. I didn’t like the BGM. But the songs are good. That’s what I have mentioned 🙂

      Reply
      • @tekvijay

        I understood u didn’t like BGM. Its ok. But i see contrast in ur opinion that you say Raja shud retire and u urself say Songs are superb! (And hope you know that many ppl have liked the songs verymuch and album is mostly a hit!)

        Raja has never and will never reach the status of retiring.

        Reply
  2. Gokulmayan

    spoiler illama oru arumayana katurai.

    Reply
    • Rajesh Da Scorp

      Yes. Didn’t wanted to mention those spoilerrs 🙂

      Reply
      • As I read the above, I’m appearing to be more of an arse than I mean to be. I wish I could rephrase the last sentence. Also, under the section Interest and Expenses: $35,487.00, that should be $48,087.00 as I left out all the non-interest expenses. I’m falling asleep as I’m typing and can’t think clearly, so I won’t add up the difference, but it makes it even worse. In short, add it to the losses minus gains and extend the loan to pay for the 2 year bliss out about another year. – Rate this comment: 0  0

        Reply
  3. Dany

    இது கருந்தேள் விமர்ச்சனம் மாதிரி தெரியலையே… என்னதான் வித்தியாசமான படமாயிருந்தாலும், நாடகத்தன்மை இழையோடும் திரைக்கதையை பற்றி குறிப்பிடுவீர்கள் என்று நினைத்தேன்.. Compromise பன்னிக்கொள்வது விமர்சகர்களுக்கு அழகல்ல…. நன்றி

    Reply
    • Rajesh Da Scorp

      அதைத்தான் க்ளிஷே காட்சிகள் நிறைய இருக்குன்னு சொல்லிருக்கேன் டானி. இருந்தாலும் இதுல அவை எடுபடுது. தனியா மொக்கையா தெரியல. அதுக்கும் காரணம் – அமிதாப் & தனுஷ் டீம்தான் என்பது என் கருத்து. நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்கவே மாட்டேன் பாஸ். Cheers.

      Reply
  4. Very well written review. I am going to watch.

    Good to see that somebody has got guts to criticize Ilayaraja. I am a fan of his many many songs. But now… I liked ‘piddlie’ song too! Amitabh is Amitabh…yes, now! He has become a great actor in his old age than in his young age!

    Reply
    • Rajesh Da Scorp

      That’s cool Sandhya. Great to see you too liked the song. I would say that even the legends have a time to rest and enjoy their life. Ilaiyaraja had proved himself multitudes of times. Let him rest, is what I would suggest. Cheers.

      Reply
  5. As you say, Rajini is capable of acting like Amitabh now. He was not used properly.

    Reply
    • Rajesh Da Scorp

      Yes. But will he? That’s the question. Let’s wait for his next one

      Reply
  6. siva

    சமிதாப்…. அமிதாப்…
    தொடக்கம் முதல் இறுதிவரை ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட உணர்வை தருகிறார் அமிதாப்… தனுஸ்…. மாபெரும் கலைஞன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்… அக்சரா அழகான வரவு… பி.சி.யின் ஒளிஓவியம் படமெங்கும் பரவிக்கிடக்கிறது.
    பின்னனி இசை… பாடல்கள்… என்னவென்று சொல்வதம்மா…
    மதுக்கோப்பை உரசலில் ஆரம்பமாகிறது ராஜாவின் ராஜாங்கம்… சிறுவன் நடித்து காண்பிக்கும் இடம்… அம்மாவின் மகன் பற்றிய பரிதவிப்பு… அக்சராவிடம் தனுஸ் வெடித்து அழும் காட்சியாகட்டும்…. அமிதாப்பின் கிளைமாக்ஸ் காட்சியாகட்டும்…. வாழ்ந்திருக்கிறார் ராஜா… இயக்குனர் பலுமகேந்திரா எப்போதும் சொல்வார்… ராஜா ஒரு போதும் என் மவுனத்தை கலைத்ததில்லை என்று…. இதை மனதில் வைத்து இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் புரியும் … பின்னனி இசை என்பது கதையோடு… காட்சியோடு ஒன்றி தருவதில் ராஜா யார் என்பதற்கு பலநூற்றுகனக்கான படங்களில் சமிதாப் முக்கிய இடத்தை பிடிக்கும்…. தொடர்ந்து3..4… நிமிடங்கள் வசனமில்லாமல் அழகாக படத்தை நகர்த்தி செல்கிறார்… ராஜா… இணையதளம் முதல்… அனைத்து ஊடகங்களும் ராஜாவை கொண்டாடுவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை… வளைப்பதிவர் நண்பர் ராஜேஸ்(கருந்தேள்) ராஜாவின் இசை பற்றி எழுதியிருப்பது தான் ஆச்சர்யத்தை தருகிறது… பின்னனி இசைக்கு அவர் வைத்திருக்கும் அளவுகோள் புரியவில்லை.. காதை பிளக்கும் இசையை விரும்புகிறாறா என்பதும் புரியவில்லை…. கலர் கனவுகளாக… திரையில் ஹீரோயிசத்தை மட்டுமே ரசித்து வந்த என்போன்றோரை பின்னனி இசைவரை ரசிக்க வைத்த ராஜா வின் மீதான இவரின் புரிதல் புரியவில்லை.. பாடரியேன் படிப்பரியேன்…

    Reply
    • Rajesh Da Scorp

      என்னோட அளவுகோல் சிம்பிள் பாஸ். இளையராஜா இன்னுமே அவரது ஆர்க்கெஸ்ட்ரேஷனில் அதே கருவிகள் மூலம் தான் இசையை அமைக்கிறார். கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஹே ராம் மற்றும் விருமாண்டியில் இப்படிப்பட்ட அதே இசை இருக்காது. அவசியம் இந்தப் படங்களில் அட்டகாசமான இசையை அளித்திருப்பார். அப்படியென்றால், அவரால் அது முடியும் என்றுதான் அர்த்தம் இல்லையா? அதை அவர் செய்தால் இன்னும் சிறப்பு என்பது என் கருத்து.

      Reply
      • ஏகன்

        ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பிஜிஎம்மை கேளு மங்குனி அமைச்சரே

        Reply
      • ATY

        That’s a pretty weak scale you have!
        Does not jive well with your (fairly elaborate) analysis on other areas/aspects of the movie.

        Reply
  7. Balaji

    சிலருக்கு சில தகுதிகள் இல்லை… ஆணுக்கு கரு சுமக்கும் திறம் இல்லை.. உனக்கு (கருந்தேள்) ராஜவின் இசை பற்றி விமர்சிக்க அறிவும் இல்லை.

    Reply
    • Rajesh Da Scorp

      உங்கள் மேலான கருத்துக்கு நன்றி அய்யா.. இசையில் என்னை உய்விக்க உங்களின் இன்னும் பல கருத்து முத்துக்களை எதிர்பார்க்கிறேன். இந்த எளியவனை உய்வித்து அருளுங்கள்

      Reply
  8. //தமிழில் ரஜினி இனி வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தால் அவசியம் அடுத்த 15 வருடங்களுக்கு அவர்தான் சூப்பர்ஸ்டார். ரஜினிக்காகவே நல்ல கதைகள் எழுதப்படும். மிக வித்தியாசமான நடிகராக ரஜினி வலம்வரக்கூடும். அவர் அப்படிச் செய்யவேண்டும் என்பதே என் ஆசை.//

    it will never happen. Even dhanush told that he will not act in such kind of experimental roles in Tamil. All of them want to play in safe zone.

    Reply
    • Rajesh Da Scorp

      That case, they will be rejected by the people straight, isn’t it?

      Reply
  9. மாயமான்

    தமிழ்நாட்டில் சரிந்துபோன எனது இமேஜை தூக்கிபிடிக்கும் தேளுத்தம்பிக்கு நன்றி.இங்கே பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது இரைச்சல் அடங்கிய ஆடியோ சிடியை பரிசாக தருகிறேன்.தேளுத்தம்பிக்கு பேமன்ட் வயர் செஞ்சிடுறேன்.

    Reply
  10. oruvan

    படத்துக்கு கதைக்கு ஏற்ற போலதான் மியூசிக் போடலாம்.

    Reply
  11. விமர்சனத்திலும் அமிதாப்’ஏ நிறைந்துள்ளார்… தனுஷ் நன்றாக நடித்திருப்பார் தான்… ஆனால், அதையும் தாண்டி அமிதாப் கலக்கியிருப்பார் போல…

    மும்பையிலும், நண்பர்கள் பலரும் சொன்னது இதுதான்… “அமிதாபுக்காகவே பார்க்கணும்… சூப்பர் ஹீரோ’ன்னா சூப்பர் ஹீரோதான்யா…”

    Reply

Join the conversation