Sherlock (2010) – The TV Series
’when you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth’.
ஹோம்ஸின் மறக்க இயலா வசனம் இது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களிலும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களிலும், இங்கிலாந்தின் முடிசூடா மன்னனாக விளங்கிய ஷெர்லாக் ஹோம்ஸ், இருபத்தோராம் நூற்றாண்டில் நம்மிடையே வாழ்ந்தால் எப்படி இருக்கும்?
ஷெர்லாக் ஹோம்ஸ் பற்றி எந்தவித முன்னுரையும் தேவையில்லை. இதுவரை உருவாக்கப்பட்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும், மிகச்சிறந்த ஒரு கதாபாத்திரம் ஹோம்ஸ் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆர்தர் கானன் டாயலின் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள், அப்படிப்பட்டன. எந்தவொரு ஷெர்லாக் ஹோம்ஸின் கதைகளிலும், நம்மை வியக்கச் செய்கிற அம்சங்கள் இல்லாமலிராது. இவற்றை எழுதிய டாயலின் ஜீனியஸ், கதைகளில் பளிச்சிடும். ஆனால், இதனைப் படிக்கும் சிலருக்கு, கதைகள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் பழையதாக இருக்கிறதே என்ற எண்ணம் எழ வாய்ப்புண்டு. அதிலும் குறிப்பாக இன்றைய fast paced த்ரில்லர்களைப் படித்துவிட்டு, பனிமூட்டம் சூழ்ந்த லண்டனையும், கோச்சுவண்டிகள் நடமாடும் சிறிய தெருக்களையும் பற்றிப் படித்தால், அவ்வாறு தோன்ற சகல காரணங்களும் உண்டு.
இரண்டு வருடங்கள் முன்பு ஒரு ரயில் பயணத்தின்போது, இரண்டு மனிதர்கள் இவ்வாறு விவாதித்துக்கொண்ட நிகழ்ச்சியின் விளைவே, இந்த தொலைக்காட்சி ஸீரீஸ்.
அதற்கு முன், ஷெர்லாக் ஹோம்ஸ் பற்றி ஒரு விரிவான விளக்கம் தேவை என்று கருதும் நண்பர்கள், நான் ஒன்றரை வருடங்கள் முன்பு எழுதிய இந்தக் கட்டுரையைப் படித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஷெர்லாக் ஹோம்ஸ் – ஒரு அறிமுகம்
ஆண்டு 2010. லண்டன் நகரம். தொடர்ச்சியாக மூன்று பேர், ஒரே வகையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதனை விசாரிப்பது, இன்ஸ்பெக்டர் லெஸ்ட்ராட் (ஷெர்லாக் கதைகளில், ரெகுலராக ஹோம்ஸிடம் அல்வா வாங்கும் இன்ஸ்பெக்டர் இவர்). லெஸ்ட்ராடினால், ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாத சூழல். தனக்கு மிஞ்சிய ஒரு சக்தியிடம் செல்ல முடிவுசெய்கிறார் லெஸ்ட்ராட். அதே சமயத்தில், லண்டனுக்கு, ஆஃப்கானிஸ்தானிலிருந்து வந்து இறங்குகிறார் ஒரு மருத்துவர். பெயர்: ஜான் வாட்ஸன். லண்டனில், தங்க இடம் தேடுகிறார். அப்போது, ஒரு நண்பர் மூலமாக, ஒரு வீடு வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால் அதில் ஏற்கெனவே ஒரு மனிதர் குடியிருப்பதாகவும், வாடகை மிகுதியால், தன்னுடன் தங்க ஒரு நண்பரை அவர் தேடிக்கொண்டிருப்பதாகவும் அறிந்து, அந்த மனிதரைச் சந்திக்கச் செல்கிறார் வாட்ஸன். ஒரு மருத்துவமனையின் மார்ச்சுவரியில், பிணம் ஒன்றைப் பிரம்பால் அடித்துக்கொண்டிருக்கும் அந்த மனிதரைப் பார்க்கிறார். அவரது பெயர்: ஷெர்லாக் ஹோம்ஸ்.
வாட்ஸனைக் கண்டவுடன், அவரது ஜாதகத்தையே ஒப்பிக்கிறார் ஹோம்ஸ். வாட்ஸனுக்கு அதிர்ச்சி. பின்னர் இருவரும், அந்தப் புதிய வீட்டுக்குச் செல்கிறார்கள். அந்த வீடுதான், இன்றும் லண்டனில் புகழ்பெற்று விளங்கும் 221B Baker Street.
அங்கே, தன்னைப் பற்றி வாட்ஸனுக்கு விளக்குகிறார் ஹோம்ஸ். தன்னால் எந்த விஷயத்தையும் கூர்மையாகக் கவனித்து, அதனைப்பற்றிய தகவல்களை வெளிப்படுத்தமுடியும் என்று உறுதியுடன் சொல்கிறார். அதேநேரத்தில், கீழே போலீஸ் விளக்குகள் பளிச்சிடுகின்றன. லெஸ்ட்ராட் ஹோம்ஸைச் சந்தித்து, நான்காவது தற்கொலை நடந்துவிட்டதாகக் கூறி, ஒரு சிறிய தடயம் கிடைத்திருப்பதாகவும் அவசர அவசரமாகச் சொல்லி, ஹோம்ஸின் உதவியை நாடுகிறார். உடனே குஷியாகும் ஹோம்ஸ், வாட்ஸனையும் அழைத்துக்கொண்டு, சம்பவம் நடந்த இடத்துக்கு விரைகிறார்.
அங்கே: பிங்க் நிறத்தில் உடையணிந்த ஒரு மாது, இறந்துபோய்விட்டிருக்கிறார். அவரது உடைகளையும், உடலையும் கவனமாகப் பரிசோதிக்கும் ஹோம்ஸ், அந்தப் பெண்மணி எங்கிருந்து வந்தார் என்பதை, அவரது உடை ஈரமாக இருந்ததனால், சரியாகச் சொல்கிறார். அந்தப் பெண், R a c h e என்ற வார்த்தைகளைத் தனது நகங்களை உபயோகித்து, பலம் கொண்டமட்டும், தரையில் கிறுக்கியிருப்பதுதான், இதுவரை கிடைத்துள்ள ஒரே க்ளூ. இதனையும் உற்றுக் கவனிக்கிறார் ஹோம்ஸ். லெஸ்ட்ராடும், அவருடன் இருக்கும் உதவியாளர்களும், rache என்பது, ஜெர்மன் மொழியில் பழிவாங்குதலைக் குறிக்கும் சொல் என்பதால், இதற்கும் ஒரு ஜெர்மானியருக்கும் தொடர்பு உண்டு என்று கணிக்க, அது முற்றிலும் தவறு என்று சொல்லும் ஹோம்ஸ், அது ரேச்சல் என்ற பெயரையே குறிக்கிறது என்று உறுதியாகச் சொல்கிறார். அந்தப் பெண்ணைப் பற்றி மேலும் பல விஷயங்களையும் அந்தப் பெண்மணியின் உடலைக் கவனித்ததனால் ஹோம்ஸ் சொல்லி, இறுதியில், இது ஒரு கொலை என்றும், இதனைச் செய்த கொலையாளியே இதற்கு முந்தைய மூன்று கொலைகளையும் செய்திருப்பதாகச் சொல்லி, அங்கிருந்து ஓடிவிடுகிறார்.
திரும்பிச் செல்லும் வாட்ஸனை, ஒரு கார் வந்து கடத்திச் செல்கிறது. கார் நிற்கும் இடத்தில், கனவானைப் போல் உடையணிந்த மனிதர் ஒருவர் நிற்கிறார். வாட்ஸனிடம், தானே ஷெர்லாக் ஹோம்ஸின் ஆஸ்தான எதிரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டுவிட்டு, ஹோம்ஸின் நடவடிக்கைகளைப் பற்றிய தகவல்களை அவ்வப்போது தனக்கு அளிக்கவேண்டும் என்று வாட்ஸனை வற்புறுத்துகிறார். மறுக்கும் வாட்ஸன், அங்கிருந்து வீடு திரும்புகிறார்.
வீட்டில், ஹோம்ஸ். அவரது மனதில் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் யோசனை ஒன்று உருப்பெற்றுக்கொண்டிருக்கிறது.
இதன்பின் நடந்தவைகளை, திரையில் பாருங்கள்.
ஷெர்லாக் ஹோம்ஸ், உண்மையில் அறிமுகமானது, A study in Scarlet என்ற நாவலில்தான். இந்த நாவலையே எடுத்துக்கொண்டு, அதனை அப்படியே contemporary உலகத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார் இதன் திரைக்கதையை எழுதிய ஸ்டீவன் மொஃப்ஃபாட் (Steven Moffat). Study in Scarlet நாவலை இன்றும் படிப்பவர்கள், அதில் உறைந்திருக்கும் மர்மத்தினால் கட்டாயம் கவரப்படுவார்கள் என்று நினைக்கிறேன். ஷெர்லாக்கின் கதைகள் அத்தனையுமே அப்படித்தான் இருக்கும். மண்டையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும் புதிர்கள். அவைகளை ஒவ்வொன்றாகக் கண்டுபிடிக்கும் ஹோம்ஸ். இறுதியில் அத்தனை புதிர்களையும் சிரித்துக்கொண்டே அவிழ்ப்பது அவரது பாணி.
இந்த வருட இறுதியில், ஷெர்லாக் ஹோம்ஸ் திரைப்படத்தின் இரண்டாவது பாகம், A Game of shadows என்ற பெயரில் வெளிவரவிருப்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அந்தப் படத்தில், ஷெர்லாக் ஹோம்ஸின் அண்ணன் மைக்ராஃப்ட் ஹோம்ஸ் அறிமுகமாகிறார். அதேபோல், முதல் பகுதியில் முகமில்லாமல் வந்துபோன ஷெர்லாக் ஹோம்ஸின் தலையாய வில்லன் ப்ரொஃபஸர் மாரியாரிட்டியும் வருகிறார் என்பதால், அந்தப் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன். இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் இங்கே நினைவுகூர்வதில் ஒரு காரணம் இருக்கிறது. அது, இந்த முதல் எபிஸோடைப் பார்த்தால் தெரியும்.
இந்த ஸீரீஸில் மொத்தம் மூன்றே மூன்று கதைகள் தான். ஒவ்வொன்றும் தொண்ணூறு நிமிடங்கள். வழக்கமாக ஷெர்லாக் ஹோம்ஸ் புதிர்களை அவிழ்ப்பது, இதில் படு ஸ்பெஷலாகக் காட்டப்பட்டிருப்பது, இதன் ப்ளஸ். ஹோம்ஸ் ஒரு குற்றம் நடந்த இடத்தைப் பார்க்கையில், அங்கிருக்கும் தடயங்கள் அவரது மூளையில் பட் பட்டென்று பளிச்சிடும். மின்னல் வேகத்தில் அவைகளை ஒன்றுடன் ஒன்று கோர்த்து, ஒரு முடிவுக்கு வந்துவிடுவார் ஹோம்ஸ். இதை, துல்லியமாக இந்த ஸீரீஸில் காட்டியுள்ளனர். எப்படியென்றால், ஒவ்வொரு தடயமும் ஹோம்ஸால் பார்க்கப்படும்போது, திரையிலேயே அது எப்படி ஹோம்ஸின் மூளையில் பதிகிறது என்று காட்டுகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண், இடதுகைப் பழக்கமுடையவர்: அவரது உடையின் உட்புறம் உலர்ந்தும், வெளியே ஈரமாகவும் உள்ளது ஆகிய விஷயங்கள், இந்தட் ட்ரெய்லரில் எப்படித் தெரிகின்றன என்று கவனியுங்கள்.
போலவே, பழைய கதைகளில் ஹோம்ஸ் துப்பறிவதை, தற்போதைய உலகின் சூழலுக்கு அற்புதமாக sync செய்துள்ளனர். உதாரணமாக, இந்தக் கதையில், வாட்ஸனின் மொபைல் ஃபோனைக் கண்டவுடன், வாட்ஸனின் கதையையே ஹோம்ஸ் சொல்லுவார். அது, பழைய கதைகளில், வாட்ஸனின் கடிகாரமாக இருக்கும். அதேபோல், study in scarlet கதையில், ஒரு மோதிரத்தை வைத்துக் கொலையாளியைக் கண்டுபிடிப்பார் ஹோம்ஸ். இதில், அது மொபைல் ஃபோனாக மாறியிருக்கிறது. On a more personal note, ஹோம்ஸ் நவீன காலத்தின் உபகரணங்களை உபயோகிப்பதைக் காணுவதில், எனக்குப் பெரும் மகிழ்ச்சி.
Sherlock ஸீரீஸின் இரண்டாவது season, சில மாதங்களில் பிபிசியில் வர இருக்கிறது.
ஷெர்லாக் ஹோம்ஸைப் பற்றி விவாதிக்க இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. முடிந்தால் ஒரு கட்டுரை பிறிதொரு நாளில் எழுதுகிறேன்.
நான் இதற்குமுன்னர் பலமுறை சொன்ன விஷயம் இது. மறுபடி சொல்கிறேன். ஹோம்ஸ் கதைகளுக்கு ஒரு சாம்பிள் வேண்டுவோர், இதோ இந்தக் கதையைப் படிக்கலாம் – Adventure of the Speckled Band.
இந்த ஸீரீஸை எனக்குப் பரிந்துரைத்த நண்பர் தமிழ்மசாலா ப்ரேம்ஜிக்கு எனது நன்றி .
Sherlock mudhal எபிஸோடின் Trailer இதோ.
As usual very good article… when you get a chance watch this TV series hope you will enjoy
http://www.imdb.com/title/tt1600199/
gonna download it !!
thanks for the heads up mate !!
இந்த ஸீரீஸை ஒருமுறை டவுன்லோட் செய்து பார்க்காமலே டேலிட் செய்து விட்டேன். நன்றாக இருக்கும் போலவே
இந்த சீரிசை நான் பார்த்து இருந்தாலும்கூட எனக்கு பிடித்த ஷெர்லக் ஹோம்ஸ் பட வரிசை பேசில் ராத்பொன் நடித்தவை தான். அந்த படங்களின் டிவிடி எழுவது வருடங்கள் கழித்தும் இப்போதும் கிடைக்கிறது.
பார்க்க ஆவலாய் இருக்கேனுங்க .. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகல்ன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும். 1954 மற்றும் 1984 TV Series முக்காவாசி பார்த்திருக்கேன். அதிலும் 1984 series எனக்கு ரொம்ப பிடிக்கும், ஜெரேமி பிரெட் செமைய நடிச்சு இருப்பாரு
என்ன ஆச்சரியம்? 🙂
நான் இப்ப 1955 சீரீஸ் பார்த்துகிட்டு இருக்கேன். இத்தனைக்கும் ப்ரேம் கிட்ட கூட இதைப்பத்தி பேசலை. 🙂
டெலிபதி ஒரேடியா இப்படி வேலை செய்யுதே தல….
இந்த பெல் பாட்டாம் மொதலாளி என்ற பேருல கமென்ட் போடுற ஹரி க்ரிஷ் ஒரிஜினல் பேருலயே கமென்ட் போட்டால் நலம்……………..
உங்க பழைய பதிவையும் இதையும் சேர்த்து(கொஞ்ச நேரம்தான் படிக்க முடிஞ்சது) படிச்சாதான் பல விஷயங்கள் புரியுது………உங்கள பழைய பதிவுல நீங்க சொல்லியிருக்குற master of disguise விஷயம் trailerல வருது போலயே.
நைட்டு ஒழுங்கா படிச்சிட்டு வந்து மீதி கமெண்ட்…..
i like this movie blog…
http://specialdoseofsadness.blogspot.com/
I’m reading this in google reader…
this series is better than the movie…i love this one! can hardly wait for the season 2.
i didn’t like Robert John Downey as sherlock at all. Jude Law as Watson perfect choice.
you might like the Game of thrones series, check out that as well! cheers
நண்பரே,
இந்த தொடரின் முதல் அத்தியாயத்தை மட்டும் பார்க்கும் வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக கிடைத்தது… நன்றாகவே கதையை சமகால சூழலிற்கு ஏற்ப உருவாக்கியிருந்தார்கள்…. இறுதித்தருணங்களில் ஹோம்ஸிற்கும் அவனிற்குமான நேரிற்கு நேர் சிறப்பாக இருந்தது.
ஜெரேமி ப்ரெட் நடித்த ஹோல்ஸ் தொடர் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று
இந்த தொடர்லாம் தமிழில் டப்பிங் செஞ்சு போட்டா நல்லாயிருக்கும்!:-)
நேட்டிவிட்டி போய்டும் தலைவா !!
அதும் நம்மாளுங்க டப்பிங் பண்ற இலட்சணத்த பாத்து இருக்கிங்கள ??
அருமையான எழுத்து. பகிர்வுக்கு நன்றி நண்பா.
தல எலிக்குஞ்சு சொன்ன 1955 சீரீஸ் ம் பார்க்கவேண்டும். ரொம்ப நாளா வெயிட்டிங். டைம் கிடைக்கலை நண்பா.
பார்க்கலாம்.
இதே A study in Scarlet கதையை தமிழில் ‘ஒரு மோதிரம் இரு கொலைகள்’என்கிற பெயரில் பத்ரி சேஷாத்ரி அருமையாக மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.
http://thoughtsintamil.blogspot.com/2011/04/blog-post_23.html
இந்த தளத்தில் சென்று அம்மின்நூலை வாசிக்கலாம்.
@ Sha – கண்டிப்பா Franklin & பாஷ்சீக்கிரமே பார்க்க முயல்கிறேன். மிக்க நன்றி
@ பெல்பாட்டம் மொதலாளி – நன்றி 🙂 . . அடுத்த பதிவில் பார்ப்போம் 🙂
@ லக்கி – ஆஹா . . பரவாயில்ல மறுபடி எதையாச்சும் பண்ணி பாருங்க. நல்லாவே இருக்கும்
@ விஸ்வா – என்னால பழை………ய டிவிடிக்களைப் பார்க்க முடிவதில்லை. நான் எல்லா கதைகளையும் படிச்சிட்டேன். அதுனால, அதையே இப்புடி விறுவிறுப்பா எடுத்தது புடிச்சது 🙂
@ மேவி – வெரிகுட் . அந்தப் பழைய சீரீஸ்கள் என்னாண்ட இருக்கு. இருந்தாலும் பார்க்கப் புடிக்கல. மேலே சொல்லிருக்குற காரணம் தான்.
@ பாலா – இதுல என்ன ஆச்சரியம்? நமக்குள்ளாற டெலிபதி பல தடவ வொர்க் அவுட் ஆயிருக்கே 🙂 . . அதான் இப்பவும் இப்புடி 🙂 . . வர்ற ஞாயிறு வந்திருங்க 🙂
@ கொழந்த – முடிஞ்சா பார்க்க முயற்சி பண்ணும்.
@ d – எனக்கும் அந்த ப்ளாக் புடிச்சது. பாலோ பண்ண ஆரம்பிச்சிட்டேன். அறிமுகத்துக்கு நன்றி நைனா
@ கமல் – சத்தியமா எனக்கும் ராபர்ட் டௌனி புடிக்கல. Adrian Brody தான் எனக்கு கரெக்டா இருப்பாருன்னு தோணுது. Game of Thrones காதலர் சொல்லிருக்காரு. புடிக்கிறேன் … நன்றி கமல்
@ காதலரே – நன்றி. மேல பாருங்க Game of Thrones பத்தி கமல் சொல்லிருக்காரு 🙂
@ பூங்குழலி – பல பேருக்கு அது புடிச்சிருக்கு. அப்ப பார்த்துர வேண்டியதுதான் 🙂
@ எஸ். கே – ஹரி சொன்னமேரி , டப்பிங் நம்மூர்ல மொக்கையா பண்ணிருவாங்க. ஹோம்ஸ் பத்தி ஒன்யும் தெரியாம, ‘மாமே.. அங்க பாரு’ ரேஞ்சுல எதையாவது பேசி, கதையையே க்ளோஸ் பண்ணுறதுல நம்மாளுங்க கில்லாடிகளாச்சே 🙂
@ செ. சரவணக்குமார் – மிக்க நன்றி நண்பா.
v .வினோத் – அந்த மொழிபெயர்ப்பை ஆல்ரெடி படித்திருக்கிறேன். இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி .
// Game of Thrones //
I second that!!! கலக்கல்.
உங்களுக்கு வரலாறு சம்பந்தமான சீரீஸ் புடிக்கும்னா, 2009-ல நாம பேசின Spartacus சீரீஸும் பாருங்க. ஹீரோக்கு கேன்சர்ங்கறனால, 2-வது சீசனை ப்ரீக்வலா, அவர் இல்லாமயே மாத்திட்டாங்க. அப்படியும்… முதல் சீசனை விட பெட்டர்.
ஆனா HBO கூட பண்ணாத பல ‘மேட்டர்’ அதில் இருக்கு. 🙂 🙂
தகவல் பிழை. 2010.
http://www.karundhel.com/2010/01/spartacus-1960-english.html
கவுதம் மேனன் திருந்துவதா தெரியலை.இன்குலீசு படத்த காப்பியடிக்களைன்னா தூக்கம வராது போல!!இதை பாருங்க சார்!!
http://tinypic.com/r/mcg32r/7
நேத்து முதல் எபிசொட் பாத்தேன் ,தூள் பறத்திடாரு holmes…
ரியல்லி enjoyed..
நல்லா அறிமுகத்துக்கு நன்றி கருந்தேள்
@ எலிக்குஞ்சு – நீங்க அதைப்பத்தி சொன்னது நல்லா நினைவிருக்கு. கட்டாயம் அதைப் பார்க்கப்போறதா முடிவு பண்ணியாச்சி. (நான் ஒருதடவ முடிவு எடுத்துட்டா, என்னோட முடிவை நானே நினைச்சி நெனைச்சி ஆயிரம் தடவ மாத்துவனே )
@ ஹமீத் – அதைப் பார்த்தேன். கொடும தான். என்ன பண்ணலாம் சொல்லுங்க. எல்லாருக்கும் அனானி பேர்ல ஒரு கடிதம் எழுதிரலாமா
@ தெறச்சி வால் – நன்றி தலைவா.. பாக்கி ரெண்டையும் சீக்கிரம் பாருங்க
என்ன பண்ணலாம் சொல்லுங்க. எல்லாருக்கும் அனானி பேர்ல ஒரு கடிதம் எழுதிரலாமா////////
.
.
என்னை ஏன் கேக்குற?என்னவோ பண்ணி தொலை!!
The Adventure of the Speckled Band இந்த தொடர்லாம் தமிழில் டப்பிங் செஞ்சு போட்டா நல்லாயிருக்கும்!:-)
நான் பார்த்த முதல் ஆங்கில TV SERIES ஷெர்லாக் தான்…என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஆங்கில தொடர் இது…நீங்கள் தான் பார்க்க தூண்டியவர்…நன்றி சகோதரா..!!! 🙂 🙂
Thank you boss. Cheers 🙂