Sherlock (2012): The TV Series – Season 2

by Karundhel Rajesh February 5, 2012   Personalities

Every fairy tale needs a good old fashioned villain. You need me or you’re nothing -because we’re just alike, you and I. Except you’re boring. U’re on the side of the “angels.”

ஹோம்ஸும் அவரது பிறவி எதிரி மோரியார்ட்டியும், ஸெய்ண்ட் பார்த்தலோமியோ ஹாஸ்பிடலின் மாடியில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அங்கே, இருவருக்கிமிடையில் சூடான விவாதம் நடைபெறுகிறது. விறுவிறுப்பான செஸ் விளையாட்டின் மூவ்கள். கரணம் தவறினால் மரணம். இருவரின் மூளைக்குள்ளும் மற்றொருவர் புகுந்துகொண்டு, அடுத்தவர்களின் மூவ்களை யோசித்து, கௌண்ட்டர் செய்யும் ஆபத்தான விளையாட்டு அது.

முடிவில்?

ஷெர்லக் ஹோம்ஸ் ஸ்பெஷல் ஒன்று போடும் அளவுக்கு நமது தளத்தில் எக்கச்சக்கமான ஹோம்ஸ் பற்றிய கட்டுரைகள் மலிந்து கிடக்கின்றன. காரணம், இந்த இரண்டு வருடங்களில், ஹோம்ஸ் பற்றிய பல படைப்புகள் வெளிவந்துவிட்டதுதான். திரைப்படங்களில் ஷெர்லக் ஹோம்ஸ் இரண்டு பாகங்களும், தொலைக்காட்சியிலும் ஷெர்லக் ஸீரீஸின் இரண்டு சீஸன்களும் இந்த இரண்டு வருடங்களில் வந்துவிட்டன. இவையெல்லாவற்றையும் நாம் விரிவாகப் பார்த்துவருவதால், இதோ ஷெர்லக் டிவி தொடரின் இரண்டாவது சீஸனை இப்போது அலசுவோம்.

சென்ற வருடம் ஒளிபரப்பப்பட்ட முதல் சீரீஸின் (க்ளிக்கிப் படிக்கலாம்) பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து இம்முறை, இரண்டாவது சீரீஸில் பிரபலமான மூன்று ஹோம்ஸ் கதைகளைப் படமாக்க முடிவு செய்யப்பட்டது. அப்படி உருவான இரண்டாவது சீரீஸின் மூன்று கதைகளாவன: A Scandal in Belgravia, The Hounds of Baskerville மற்றும் The Reichenbach Fall. இந்த மூன்று எபிஸோட்களின் மூலக்கதைகள்: A Scandal in Bohemia, The Hound of the Baskervilles மற்றும் The Final Problem (கதைகளைக் க்ளிக்கிப் படிக்கலாம்).

ஆர்தர் கானன் டாயலின் ஒரிஜினல் கதைகளைத் தற்காலத்துக்கு ஏற்ப மாற்றி அற்புதம் செய்திருக்கிறார்கள் இதன் க்ரியேட்டர்கள். பொதுவாக இப்படி மாற்றும்போது கண்டபடி சொதப்பி ஆடியன்ஸ் எழுந்து ஓடுவதில்தான் அது முடியும்.ஆனால், இந்த சீரீஸ் அதில் வெற்றிகரமாகக் கொடி நாட்டியிருக்கிறது.

’ஐரீன் அட்லர்’ என்ற பெண்மணியை ஷெர்லக் ஹோம்ஸ் ரசிகர்கள் மறந்துவிடமுடியாது. ஹோம்ஸ் தோல்வியைத் தழுவிய ஒரே கேஸில், அவரை வென்ற பெண். ஷெர்லக் ஹோம்ஸ் திரைப்படங்களிலும் முதல் பாகத்தில் விரிவாகவும் இரண்டாம் பாகத்தில் கௌரவ வேடத்திலும் நடித்த கதாபாத்திரம். திரைப்படங்களில் அவ்வளவு சரியாக இக்கதாபாத்திரம் காட்டப்படவில்லை. இத்தொலைக்காட்சி சீரீஸில், கதைகளில் வரும் அளவு தத்ரூபமாகக் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

ஒரிஜினல் கதைப்படி, பொஹீமிய இளவரசர் ஒருவரின் திருமணத்தின்போது, அவரது முன்னாள் காதலியான ஐரீன் அட்லர் என்ற பெண், இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் ஒரு புகைப்படத்தைக் காட்டி இந்த இளவரசரை ப்ளாக்மெய்ல் செய்ய, அந்தப் பெண்ணிடம் இருக்கும் அந்தப் புகைப்படத்தை மீட்க ஹோம்ஸ் செய்யும் முயற்சிகளே மீதிச் சிறுகதை. கதையின் இறுதியில், அப்பெண் வெற்றிகரமாக ஹோம்ஸிடம் இருந்து தப்பித்துச் சென்றுவிடுவாள். புகைப்படத்தோடு. இக்கதையைக் கொஞ்சம் மாற்றி, இங்லாண்ட் அரசுக்குப் பிரச்னை விளைவிக்கக்கூடிய சில ரகசியங்கள் ஐரீன் அட்லர் என்ற பெண்ணின் செல்ஃபோனில் மாட்டிக்கொள்ள, அவற்றை மீட்க ஹோம்ஸ் செய்யும் சாகஸங்களே இரண்டாம் சீரீஸின் முதல் எபிஸோட்.

இதைத்தவிர வேறு எதுவும் நான் சொல்லப்போவதில்லை. ஆனால், இந்த எபிஸோடில் எண்ணற்ற திருப்பங்களும் சம்பவங்களும் உள்ளன. ஒரு நிமிடம் கூட அலுக்காமல் படுவேகமாகச் செல்லும் கதை இது. கதையின் க்ளைமேக்ஸ் மட்டும் எனக்கு மிகச்சிறிய அளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதற்கு ஒரே காரணம், ஒரிஜினல் கதையையும் இக்கதையும் ஒப்பிட நான் முயற்சி செய்ததே.

இரண்டாவது எபிஸோடில்தான் இதுவரை சாகாவரம் பெற்ற ஹோம்ஸின் அட்டகாசமான தலையாய சாகஸமான ‘ஹௌண்ட் ஆஃப் பாஸ்கர்வில்’ கதையின் சற்றே மாறுபட்ட வடிவம் வருகிறது. மூலக்கதையை இத்துடன் ஒப்பிட முடியாது. இரண்டுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும், இக்கதையும் விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்லாமல் செல்கிறது.

மூன்றாவதும், இந்த இரண்டாம் சீரிஸின் கடைசி எபிஸோடும் ஆன ’The Reichenbach Fall’ என்ற கதையே இந்த மூன்றிலும் எனக்கு மிகப்பிடித்த கதை. பொதுவாக, ஒரு கதை என்றால், கதாநாயகனுக்கு ஏற்ற வில்லன் ஒருவன் வருவான். அப்படி ஹோம்ஸின் வில்லனின் பெயர் மாரியார்ட்டி என்பது இந்தத் தளத்தில் ஹோம்ஸ் கட்டுரை படித்துவரும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். ஹோம்ஸுக்கு இணையான மதிநுட்பம் வாய்ந்த ஒரு கதாபாத்திரம். இந்த இரண்டு ஈடிணையற்ற ஜீனியஸ்களும் பொருதிக்கொள்வதே இக்கதை.

ஒரிஜினலாக, ஆர்தர் கானன் டாயல் எழுதிய ‘The Final Problem’ என்ற கதையில், ஹோம்ஸ் கதைகளை எழுதி எழுதி அலுப்படைந்திருந்த டாயல், ஹோம்ஸை மாரியார்ட்டியோடு சேர்த்துக் கொன்றுவிட்டார். இருவரும் ஒரு அருவியில் பாய்வதோடு அக்கதை முடிவடைந்திருக்கும். அதன்பின் எண்ணற்ற ஹோம்ஸ் ரசிகர்களின் கடிதங்களுக்குப் பிறகு, ஹோம்ஸை உயிர்ப்பித்தார் டாயல். ஷெர்லக் ஹோம்ஸ்: கேம் ஆஃப் ஷேடோஸ் திரைப்படத்திலும் இதனை வைத்தே எழுதப்பட்ட க்ளைமேக்ஸ் இடம்பெற்றிருக்கும். அதேபோல், ஆனால் க்ளைமேக்ஸில் ஒரு திடுக்கிடும் திருப்பத்தோடு முடிவடையும் கதையே இந்த ’The Reichenbach Fall’.

இந்தக் கதையில் மாரியார்ட்டி ஹோம்ஸுக்கு அடிக்கும் ஆப்புகள் அட்டகாசம்! ஒவ்வொரு ஆப்பிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு வெளிவரும் ஹோம்ஸின் முன்னால், எடுத்துச் சொருகிக்கொள்ள அடுத்த ஆப்பு தயாராக இருக்கிறது. அதனை விட்டுவிட்டுச் செல்லவும் முடியாது. ஆகவே, அந்தப் பிரச்னையில் ஹோம்ஸ் மாட்டிக்கொண்டே தீரவேண்டும் என்ற முறையில் மாரியார்ட்டி செக் வைக்கிறார். அது தெரிந்து, ஹோம்ஸ் அதனை எதிர்கொள்கிறார். இதன்பின் என்ன ஆகிறது என்பதே கதை. ஒவ்வொரு நிமிடமும் சீட் நுனியில் என்னை ஆழவைத்த எபிஸொட் இது. ஒரு வசனத்தைக்கூடத் தவறவிட வேண்டாம்.

இந்த மூன்று எபிஸோட்களிலும், ஆர்தர் கானன் டாயலின் கதைகளின் பல்வேறு தலைப்புகள் வந்துசெல்கின்றன. சற்றே மாறுபட்ட முறையில். கதைகளைப் படித்தவன் என்ற முறையில், அவை எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன. அதேபோல், ஹோம்ஸுக்கும் வாட்ஸனுக்கும் இடையில் உள்ள உறவுமுறை, இந்த இரண்டாம் சீரிஸில் இன்னும் சற்று ஆழமாக ஆராயப்பட்டிருக்கிறது. முதல் சீரீஸில் இது இல்லை. கூடவே, மோல்லிக்கு ஹோம்ஸின் மேல் உள்ள காதல். அத்துடன், ஒரு arrogant asshole ஆக இருக்கும் ஹோம்ஸுக்கு, மற்றவர்கள் தன்னைப்பற்றி நினைப்பதில் முதன்முறையாகக் கவனம் பிறக்கிறது.

ஷெர்லக் ஹோம்ஸ் திரைப்படங்களைப்போல் அதிரடி ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் இல்லாமல், மூளையை உபயோகிக்கும் ஹோம்ஸின் உண்மையான genreல் அமைந்திருக்கிறது இந்த சீரீஸ். அந்த வகையில், இதுவரை எவ்வகையான மீடியாவிலும் வெளிவந்த ஹோம்ஸ் சித்தரிப்புகளில், தலைசிறந்ததாக அமைந்திருக்கிறது இந்த சீரீஸ். தவறவே விட்டுவிடக்கூடாத ஒரு தொகுப்பு இது. இதனைப் பார்க்காமல் விட்டால், வாழ்வில் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை இழந்துவிட்டீர்கள் என்று பொருள்.

ஷெர்லக் இரண்டாம் சீஸனின் சில காட்சிகள் இங்கே காணலாம். ஷெர்லாக்கின் தத்ரூபமான கதாபாத்திர உருவாக்கத்துக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

ஷெர்லக் ஹோம்ஸ் பற்றிய எனது பதிவுகள்:

Sherlock Holmes – எச்சரிக்கை – இது திரைப்பட விமர்சனம் அல்ல
Sherlock Holmes (2009) – English
Sherlock (2010) – The TV Series
Sherlock Holmes 2: A Game of Shadows (2011) – Part 1
Sherlock Holmes 2: A Game of Shadows (2011) – Part 2

  Comments

15 Comments

  1. ஐரீன் அட்லர் – கடைசி காட்சி ஹாலிவூட்தனமா இருந்திச்சு. கடுப்பாயிருச்சு…

    வேற என்னத்த கமென்ட் போட….சஸ்பென்ஸ்ச சொல்லாம என்னால கமென்ட் போட முடியாது. எதுக்கு பாக்குறவங்கள ஏமாத்திட்டு…அதுனால இத்துடன் முடிச்சிக்குறேன்…

    ஆனா, இந்த சீரிஸ்ச இந்த அளவுக்கு நீங்க அழுத்தி சொள்ளலைனா, நிச்சயம் நான் – ஏன் பல பேரும் – பாத்திருப்போமா என்பது சந்தேகமே. நன்றிகள் பல…

    இருந்தாலும், மோரியாட்டி துப்பாக்கிய எடுத்து……

    Reply
  2. இப்பொழுது தான் முதல் சீசன் இரண்டாவது எபிசோட் பார்த்து முடித்தேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது சீசனிற்கு வந்துவிடுவேன்.

    Reply
  3. உங்கள் பதிவுகளை படித்தபின்பு முதல் சீரிஸ் டவுன்லோட் செய்து பார்த்தாச்சு……..அதில்
    A Study in Pink மிக அருமை……. மொபைல் போனை வைத்தே அவர் சொல்லும் விஷயங்கள் அட்டகாசம்….இந்த சீரிஸ் பார்த்த பின்புதான்
    Sherlock Holmes: A Game of Shadows வில் holmes பாத்திரத்தை நீங்கள் சொல்லுவது போல காமெடியன் போல சித்தரித்திருந்தது புரிந்தது,….. holmes முன் ஜேம்ஸ் பான்ட்
    பாத்திரம் கூட அபத்தமாக தோன்றுகிறது………..கொளந்தை சொல்லுவது போல நீங்கள் இவ்வளவு அழுத்தமாக சொல்லவில்லை என்றால் நான் பார்த்திருக்கவே வாய்ப்பில்லை……

    Reply
  4. தேளாரே,
    நானும் இரண்டாம் சீசன் பார்த்து விட்டேன். ஷெர்லக் , ஐரீன் அட்லரின் அறிமுக அருமையாக இருந்தது. அனைவரையும் பார்த்தவுடன் எடை போட்டு விடும் ஷெர்லக் ஐரீன் அட்லரிடம் திணறும் காட்சி.

    ஷெர்லகின் மொபைல் மெசேஜ் டோன்,இரண்டாவது எபிசோடில் ஷெர்லகே அந்த ஓநாய் தோற்றத்தை பார்த்து பயந்து விடுவது என பல ரசிக்கும் விடயங்கள் இருந்தன.

    அப்புறம் மூன்றாவது எபிசொட் ஆரம்பம் முதல் இறுதிவரை அட்டகாசம். எதையும் அதிகமாகவே நீ ஆராய்வாய் என மாரியார்ட்டி ஷெர்லாகிடம் அது தான் உன் பலவீனம் என கூறுவது என கிளைமாக்ஸ் அருமை.

    Reply
  5. மிக அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்!

    Reply
  6. @ ஹாலிவுட் ரசிகன் – சந்தோஷம். இதைப் பிடிக்கலன்னு சொன்ன யாரையும் இன்னும் நான் சந்திக்கல 🙂

    @ டெனிம் – உங்க பாணிலயே சொல்லனும்னா, முதல் சீசனைப் பார்க்க சொல்லி எனக்கு இந்த சீரீஸை அறிமுகப்படுத்திய தமிழ் மசாலா பிரேம்ஜிக்கு என்னோட நன்றிகள் 🙂

    @ லக்கி – சூப்பர். நல்லா கவனிச்சி பார்த்துருக்கீங்கனு தெரியுது 🙂 . .

    @ brando – நன்றி

    Reply
  7. இது வரைக்கும் எந்த சீரிஸும் பாத்தது கிடையாது., நீங்க கொழந்த எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லுறிங்க .., Sherlock – லேந்து ஸ்டார்ட் பண்ண வேண்டியது தான்…

    Reply
  8. @ ஹாலிவுட் ரசிகன் – சந்தோஷம். இதைப் பிடிக்கலன்னு சொன்ன யாரையும் இன்னும் நான் சந்திக்கல 🙂

    @ டெனிம் – உங்க பாணிலயே சொல்லனும்னா, முதல் சீசனைப் பார்க்க சொல்லி எனக்கு இந்த சீரீஸை அறிமுகப்படுத்திய தமிழ் மசாலா பிரேம்ஜிக்கு என்னோட நன்றிகள் 🙂

    @ லக்கி – சூப்பர். நல்லா கவனிச்சி பார்த்துருக்கீங்கனு தெரியுது 🙂 . .

    @ brando – நன்றி

    Reply
  9. thalai ithu ellam enga pakka mudiyuthu entha channella katranga ? illa download pannanuma ? appadinna link thayavu seithu kodungo! plz

    Reply
  10. thanks for the post

    Reply
  11. watched the second series episodes the next day after telecast. More satisfying than ‘A Game of shadows’. Movie version was more of a James Bond movie than Dedution type sherlock movie. It pisses me off to have to wait till next Jan to know the suspense of this season. Man, 10 months t go.

    Reply
  12. Saravanan

    Hi Rajesh , did you watched Elementary ? what is your opinion I was expecting!

    Sarav

    Reply
  13. Accust Here

    இரண்டையும் பார்த்து விட்டேன் அருமை. இதை பற்றி எனக்கு தெரியவே தெரியாது அறிமுகபடுத்தியதிற்கு நன்றி. அடுத்த சீசன் வந்துவிட்டதா வந்தால் அதற்கும் ஒரு பதிவு போடுங்கள். இதே போல் True Detectiveவையும் சீக்கிரம் பார்க்க இருக்கிறேன்

    Reply
    • Rajesh Da Scorp

      அடுத்த சீஸன் வந்திருச்சு. ஆனா மூணாவது கொஞ்சம் டல்தான். ட்ரூ டிடெக்டிவ் பார்த்துட்டு வாங்க..

      Reply

Join the conversation