திரைப்படம் எடுப்பது எப்படி? Shot by Shot – a book by Steven D Katz

by Karundhel Rajesh April 23, 2013   Cinema articles

ஒரு திரைப்படத்தை எடுப்பது எப்படி?

நாமெல்லாம் பல திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்க்கிறோம். சிலமுறை திரைப்படங்கள் நமக்கு பிடிப்பதில்லை. ‘என்னடா இது செம்ம மொக்கையா இருக்கு?’ என்று எரிச்சல் அடைகிறோம். அதன்பின் அந்தப் படத்தைப் பற்றி எழுதி, அந்த இயக்குநர் அல்லது நடிகரின் ரசிகர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொள்கிறோம். அப்போது பின்னூட்டமிடும் அவர்கள், ‘டாய்ய்ய்ய்ய்… முடிஞ்சா ஒரு படம் எடுத்துப் பாருடா. சொம்மா பேசிக்கினு’ என்று ‘அன்புடன்’ நம்மிடம் பேசுவார்கள்.

சீரியஸாகப் பேசுவோம். ஏதோ குன்ஸாக நம்மிடம் ஒரு ஒன்லைன் இருக்கிறது. எண்பதுகளில் இருந்ததுபோல் ‘சத்யா மூவீஸ் கதை இலாகா’ என்று நம்மிடம் எதுவும் இலாகா இல்லாததால், நாமேதான் அதனை டெவலப் செய்யவேண்டும். கதையை திரைக்கதையாக்கி, திரைக்கதையை பலமுறை அடித்துத் திருத்தி, ஒருவழியாக இறுதி ட்ராஃப்ட் தயாரானதும் தயாரிப்பாளரை சந்தித்து, கதையை சொல்லி கன்வின்ஸ் செய்து பட்ஜெட்டை தயார் செய்துகொண்டு, ஆள் அம்பு சேனை எல்லாம் ரெடி செய்துகொண்டு, படப்பிடிப்புத் தளத்துக்கு சென்று இறங்கியாயிற்று. ‘டைரக்டர் வர்ராரு’ என்று அங்கிருக்கும் எல்லாரும் நமக்கு வணக்கம் வைப்பதை பெருமையாக உணர்ந்துகொண்டு, கெத்தாக குறுக்கும் நெடுக்கும் பலமுறை நடந்தாயிற்று.

அதன்பின்?

கையில் இருக்கும் திரைக்கதையை எப்படி படமாக மாற்றுவது? நமது மனதில் நாம் கற்பனை செய்துவைத்திருக்கும் கதையை எப்படி கேமரா மூலம் அதேபோல் படமாக்குவது? திரைப்படத்தை படமாக்கும்போது நமக்குத் தேவையானது என்ன? எந்தெந்த வழிமுறைகளைக் கையாண்டால் நமது மனதில் இருக்கும் கதை, அதே வடிவத்தில் தத்ரூபமாக திரையில் வெளிவரும்?

ஷாட் பை ஷாட்டாக ஒரு திரைப்படத்தை எப்படி எடுப்பது என்று விளக்குவதே Shot by Shot என்ற புத்தகம்.

Visualization என்ற, நமது கதையை மனதில் நினைத்துப் பார்த்து செதுக்குவதில் ஆரம்பித்து, விஷுவலைஸ் செய்வதற்கான வழிமுறைகள், இதன் தொடர்ச்சியாக ப்ரொடக்‌ஷன் டிஸைன் என்பது பற்றிய விரிவான விளக்கங்கள், ஸ்டோரிபோர்ட்கள் எப்படி செய்துவைத்துக் கொள்வது என்ற அருமையான வழிமுறை, பின்னர் எடிட்டிங், ஷாட்களை வரிசையாக, அவற்றின் கண்டின்யூட்டி மாறாமல் எடுப்பது, வசனங்களை எப்படி இயல்பாக கேமராமுன்னர் பேசவைத்து எடுப்பது, கேமராவின் ஃப்ரேமின் நுணுக்கங்கள், கேமரா ஆங்கிள்கள் எப்படி வைப்பது, கேமராவை அட்டகாசமாக எப்படி கையாள்வது, ஷாட்களின் வெவ்வேறு வடிவங்கள் போன்ற அத்தனை விபரங்களையும் ஸ்டீவன் D காட்ஸ் என்பவர் இந்தப் புத்தகத்தில் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்திருக்கிறார். அத்தனையும் மிக அற்புதமான தகவல்கள். இந்தப் புத்தகமும் மிகவும் பிரபலமான புத்தகம்.

இந்தப் புத்தகத்தின் அத்தியாயங்களை, தமிழ்ஸ்டுடியோ அருண் நடத்திவரும் ’பேசாமொழி’ என்ற இணையதள பத்திரிக்கையில் மொழிபெயர்த்து வருகிறேன். தொடரின் பெயர் – ‘திரைமொழி’. பேசாமொழி என்பது மாற்று சினிமாவுக்கான ஒரு இணைய இதழ். பாலு மஹேந்திராவின் ‘வீடு’ திரைப்படம் பற்றி ஏற்கெனவே ஒரு கட்டுரையை நான் அதில் எழுதியிருந்தேன். நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். அப்போதே இந்தத் தொடரையும் எழுத ஆரம்பித்திருந்தாலும், ஒரு சில கட்டுரைகள் எழுதியபின்னர் இணைப்பை வழங்கலாம் என்றே இத்தனை நாள் அதைப்பற்றி சொல்லவில்லை. இப்போது நான்கு கட்டுரைகள் இந்த நான்கு மாதங்களில் வெளிவந்திருப்பதால், இங்கே அவற்றின் இணைப்பை அளித்திருக்கிறேன். தவறாமல் படித்துப்பாருங்கள். ஸிட் ஃபீல்டின் திரைக்கதைத் தொடரைப்போலவே இதுவும் ஒரு மிக முக்கியமான தொடர்.

இந்த பேசாமொழி இணைய இதழ், மிகவும் வித்தியாசமான, informative இணைய மாத இதழ்.  வெங்கட் சாமிநாதன்,  ட்ராட்ஸ்கி மருது, ராஜன் குறை, அம்ஷன் குமார், தியடோர் பாஸ்கரன் போன்றவர்கள் இந்த இணைய இதழில் அவ்வப்போது எழுதி வருபவர்கள்.  பல நல்ல கட்டுரைகளும் நேர்காணல்களும் இன்னும் பல விஷயங்களும் இந்த இணைய இதழை மிகவும் பயனுள்ளதாக ஆக்குகின்றன. நண்பர்கள் இந்த இதழை புக்மார்க் செய்துவைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு மாதமும் இந்தத் தொடரின் அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பு வெளிவரும்போது இனிமேல் அதுவரை வந்துள்ள அத்தனை அத்தியாயங்களின் இணைப்போடு அதனை நமது தளத்தில் வெளியிடலாம் என்று இருக்கிறேன். நண்பர்கள் அந்தத் தொடரை தவறாமல் படிக்க அது வழிவகுக்கும் என்பதால். நன்றி.[divider]

1. Shot by Shot – அறிமுகக் கட்டுரை
2. முதல் பாகம் – Visualization: The Process
அத்தியாயம் 1 – Visualization
3. அத்தியாயம் 2 – Production Design
4. அத்தியாயம் 2 – Production Design (தொடர்ச்சி)

இவையே இதுவரை வந்திருக்கும் அத்தியாயங்களின் மொழிபெயர்ப்புகள்.  படித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிருங்கள் friends. See you.

பி.கு – அடுத்த கட்டுரையில் ‘மொத்தக் கதைகள் 36’ தொடர்கிறது.

  Comments

6 Comments

  1. viruchigam

    visualization கட்டுரைதான் தற்போது வாசித்தேன்,

    இயக்குனர்கள் முதலிலையே முழுவதையும் visualize செய்கிறர்களா என்ற சந்தேகம் இன்றோடு தீர்ந்த்தது.

    நாவல்கள் ஏன் ஒரு இயகுனன் வாசிக்க வேண்டும் என்று யோசித்தேன்-நாவல்கள் நாம் நம்மை அறியாமலே தன்பாட்டில் visualsஐ உருவாக்க சிறந்த வழி.ஒரு பக்கத்தை வாசித்து விட்டு தோன்றிய visualஐ அசைபோட்டுப் பாருங்கள்.

    இப்படி analytical approch மட்டும் ஒரு இயக்குனரை உருவாக்கும் என்று தோன்றவில்லை,the ability to get inspiredதான் முக்கியம்-ஏனன்றால் “when the creation is here the creator is not ,when the creator is here the creataion is not”

    அப்புறம் ஒரு நடிகன் எப்படி copy அடிக்க முடியும்,copy அடிப்பதுதானே நடிப்பே-roadஇல் போறவரை பார்த்து செய்தால் என்ன Al Pacinoவைப் பார்த்து செய்தால் என்ன? (கமல் ஹாசன் Al Pacinoவை copy அடிக்கிறார் என்ற பெரும் குற்றச்சாட்டு உண்டு-இவர்களையே உதாரணம் வைத்து விளக்கி ஒரு கட்டுரை எழுத முடிந்தால் எழுதுங்கள்)

    Reply
  2. Balaji R

    I bought this book last year from Flipkart and just completed around 20 pages….For some reason i am not able to continue reading it (Lazy bugger), i felt the book is very intense and contains lot of dense information (requires concentration), thanks for the posts though, let me start reading the book again…

    I am very sure your posts will help to understand the book better, thanks Rajesh!!

    By the way, have you read the entire book?

    Reply
  3. நண்பரே, தங்களின் நான்கு திரைமொழி பகுதிகளையும் ஆர்வத்துடன் படித்தேன். ஐந்தாவது பகுதியை இன்னும் வியப்புடன் எதிர்நோக்குகிறேன்.
    நன்றி.

    Reply
  4. நன்றி … இந்தமாதிரி ஒரு பொக்கிசத்தைத்தான் எதிர்பார்த்து இருந்தேன்.
    ஏன்னும் எழுதுங்கள் காத்து இருக்கிறோம் .

    Reply
    • Rajesh Da Scorp

      நன்றி பாஸ்

      Reply
  5. arasukarthick

    சினிமா மொழி பற்றிய பல செய்திகளை தமிழில் எழுதுவது மிகச்சிறப்பான பணி. தொழில்நுட்பம் தொடர்பான பலவும் ஆங்கிலத்தில மிகவும் எளிதாக கிடைக்கிற தருணத்தில் மெல்ல தமிழில் அதை ரசிக்கிற தீவிரமாக நேசிக்கிற தங்களைப் போன்ற சிலரால்தான் சினிமா எளிய சாமானியர்களுக்கும் சென்று சேர்கிறது. தினகரனில் எழுதிய தொடர் முக்கியமானதாக எனக்கு இருந்தது. நன்றி. அரசுகார்த்திக்

    Reply

Join the conversation