Skyfall (2012) – English
ராவூல் ஸில்வா, ஹெலிகாப்டரில் பாண்டைத் தேடி வருகிறான். அப்போது பாண்ட் சொல்லும் வசனம் – ‘Hmm.. He is always good at entries’. பாண்ட் சொல்லும் இந்த வசனம் மிக உண்மையானது. இந்தப் படத்தில் ராவூல் ஸில்வாவாக வரும் ஹவியே பார்டெம் தோன்றும் முதல் காட்சி – முதல் ஷாட் – அப்படிப்பட்டது. அந்த ஷாட் கிட்டத்தட்ட அரை நிமிட நேரம் வரும் ஒரே ஷாட். எந்த வெட்டும் இல்லாதது. இதுவரை எந்த பாண்ட் வில்லனுக்கும் இல்லாத ஒரு Opening shot இது.
ஹவியே பார்டெமின் அறிமுக ஷாட்டைப் போலவே இந்தப் படத்தில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன.
அவற்றைப் பற்றிப் பார்க்குமுன், நான் கேட்கும் ஒரு கேள்விக்கு உங்களது விடை என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள நினைக்கிறேன்.
இக்கேள்வி, ஜேம்ஸ்பாண்ட் படங்கள் பலவற்றைப் பார்த்துவிட்டிருக்கும் நண்பர்களுக்கு. ஒவ்வொன்றாக இந்தப் படங்களைத் திரையரங்கில் பார்த்து, தற்போது இந்தப் படத்துக்குச் சென்று அமர்ந்து, படம் ஆரம்பிக்கையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? அதிலும், வழக்கமான அதே பாண்ட் ஓபனிங் ஸீக்வென்ஸ் ஒன்று முடிந்தபின்? ‘அடடா.. இதிலும் அதே அரைத்த மாவா?’ என்றுதானே தோன்றும்? பாண்ட் படங்களின் டெம்ப்ளேட் மிக எளிதானது. கிட்டத்தட்ட அத்தனை பாண்ட் படங்களிலும் அது இருக்கும்.
1. ஓபனிங் அஸைன்மெண்ட்–> பாண்ட் அறிமுகம்.
2. வில்லனின் அறிமுகம்.
3. பாண்டுக்குக் கொடுக்கப்படும் புது அஸைன்மெண்ட் – இந்த வில்லனைக் கொல்வது
4. ஹீரோயின் அறிமுகம் (இது, பாயிண்ட் 3க்கு முன் கூட சில படங்களில் இருக்கலாம்).
5. வில்லனைத் தேடி ஒரு அழகிய நாட்டுக்கு பாண்ட் செல்வது (இந்த பாயிண்டிலேயே, ஹீரோயினுடன் கில்மா)
6. பிடிபடுதல் (அல்லது) ஹீரோயினைக் காத்தல்
7. க்ளைமேக்ஸ்
ஆகவே, தெரிந்தோ தெரியாமலோ இந்த பாயிண்ட்கள் பாண்ட் படங்கள் பார்த்துத் தெளிந்தவர்களின் மனதில் தோன்றும். எனக்கும் இப்படம் ஆரம்பிக்கையில் அப்படித்தான் தோன்றியது. வழக்கத்தை விட சற்றே ஆக்ஷன் தொய்வோடு ஓபனிங் ஸீக்வென்ஸ் முடிந்தபோது நாங்களும் (நானும் நண்பன் பாலுவும்) அப்படித்தான் எண்ணினோம். வரிசையாக ஒவ்வொரு திராபை ஸீனாக வந்து உயிரை வாங்கப்போகிறது என்று. இதுவரை பல பாண்ட் படங்களை நாங்கள் இருவருமே ஒன்றாகப் பார்த்திருக்கிறோம்.
மிக ஆச்சரியகரமாக, எங்கள் கணிப்பு பொய்த்தது.
வழக்கமான டமால் டுமீல் ஆக்ஷன், அழகுக் கன்னிகள், மதுக்கோப்பைகள், பாண்ட் உதிர்க்கும் புத்திசாலித்தனமான ஒன் லைனர்கள், எக்கச்சக்க ஆயுதங்கள் நிரம்பிய கார், வாட்ச்சில் இருக்கும் லேசர், பேனாவில் இருக்கும் குண்டு ஆகியவை உங்களுக்குப் பிடிக்குமா? இதை மட்டும் பார்க்கத்தான் SkyFall படத்துக்குப் போகவேண்டும் என்று நினைக்கும் நண்பரா நீங்கள்?
ஆம் எனில், இந்தப் படத்தைத் தவிர்த்துவிடுவதே நல்லது.
ஒரு டிபிகல் பாண்ட் படத்தில் இருக்கவேண்டிய அம்சங்கள் எதுவுமே இந்தப் படத்தில் இருக்காது. ஆனால், அதனாலேயே இந்தப் படம் சுவாரஸ்யமாக இருப்பதும் உண்மை. இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் குறைவு. ஒரே ஒரு காட்சியில் மட்டுமே ஒரு பெண்ணை முத்தமிடுகிறார் பாண்ட். எந்த விதமான gadgetஸும் அவரது உதவிக்கு இப்படத்தில் வருவதில்லை. இன்னும் இதில் பல ‘இல்லைகள்’ உண்டு.
அவற்றைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம்.
இந்தப் படம் ஒரு Sam Mendes படம். அதில் மாற்றுக் கருத்து எங்களுக்கு இல்லை. அதிலும் குறிப்பாக முதல் ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் இறுதிவரை ஸாம் மெண்டெஸின் ஆட்டம்தான். அதிலும் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அதேபோல், இந்தப் படத்தின் திரைக்கதையிலும் ஒரு ஆச்சரியம் இருக்கிறது. வழக்கமாக பாண்ட் படங்களுக்குத் திரைக்கதை எழுதும் ராபர்ட் வேட் மற்றும் நீல் பர்விஸ் ஜோடி (Robert Wade & Neal Purvis) இதிலும் இருக்கிறது. அது ஆச்சரியமில்லை. ஆனால், இவர்களுடன் இணைந்திருக்கும் ஒரு திமிங்கிலம்தான் ஆச்சரியம். அதன் பெயர் ஜான் லோகன் (John Logan). க்ளாடியேட்டர் (co-written by David Franzoni & William Nicholson), Aviator & Hugo. இந்த மூன்று படங்கள் இவரது திரைக்கதைக்கு உதாரணங்கள். கூடவே The Last Samurai (co-written by Edward Zwick & Marshall Herskovitz). Sweeney Todடும் தான். இவரது தொழில் நேர்த்தி, SkyFall படத்தின் திரைக்கதையை நன்கு மெருகேற்றியிருப்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது.
இந்தத் திரைக்கதையை ஸாம் மெண்டெஸ் ஒரு பார்வையாளனின் அணுகுமுறையிலிருந்து அணுகியிருக்கக் கூடும் என்பது எங்கள் அனுமானம். ஏனெனில், எங்களிருவரை உதாரணமாக எடுத்துக்கொண்டால், படம் ஆரம்பிக்குமுன்னரே எந்தெந்த டெம்ப்ளேட் எங்கெங்கு வரப்போகிறது என்பதில் சந்தேகமே இல்லாமல் இருந்தோம். ஆனால், அந்தந்த இடத்தில் எதிர்பார்த்த டெம்ப்ளேட் வராமல் புதிதான fresh காட்சிகள் வந்தபோதுதான் ஸாம் மெண்டெஸின் presence புரிந்தது. அவற்றையெல்லாம் இங்கே சொல்லிவிட ஆசைதான். ஆனால் அது எக்கச்சக்க ஸ்பாய்லர்களை அள்ளித் தெளித்துவிடுமே?
ஓகே. இங்கே இருந்து ஸ்பாய்லர்கள் இடம்பெறக்கூடும். எனவே படம் பார்த்திராத நண்பர்கள் இத்தோடு நிறுத்திக்கொண்டு, கட்டுரையின் இறுதியில் ஸ்பாய்லர்கள் முடிந்தபின் இடம்பெறும் பகுதிக்குச் சென்றுவிடுங்கள்.
படத்தில் வில்லன் ரவூல் ஸில்வாவின் அறிமுகம் ஏற்கெனவே சொல்லிய fresh காட்சி. இதன்பின்னர் வெகுசீக்கிரமே ஸில்வா மாட்டுகிறான். இதன்பின் நடக்கும் காட்சிகள், அவனை chase செய்வது, அதன்பின்னர் க்ளைமாக்ஸ் ஆரம்பிப்பது ஆகியவை எதுவுமே ஒரு டிபிகல் பாண்ட் படத்தில் வரக்கூடிய காட்சிகள் அல்ல. வழக்கமாக இந்தக் காட்சிகள் இடம்பெறக்கூடிய நேரத்தில், பிற பாண்ட் படங்களில், வில்லனின் கூடாரத்தில் அடியாட்களோடு சண்டையிட்டுக்கொண்டிருப்பார் பாண்ட். டெம்ப்ளேட்டின் கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை பாண்ட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வழங்கியிருக்கிறார்கள் இதன் திரைக்கதையாசிரியர்கள்.
மிக முக்கியமாக, இந்தப் படத்தில் வில்லன் ரவூல் ஸில்வாவின் நோக்கம் என்ன? கிட்டத்தட்ட அத்தனை பாண்ட் படங்களிலும் (ஓரிரு படங்கள் நீங்கலாக – உதாரணம் – Licence to Kill – நண்பனைக் கொன்றவனைப் பழிவாங்கும் பாண்டின் கதை), இங்கிலாந்தையும் உலகையும் மிரட்டும் வில்லனைக் கொல்வதே கதையாக இருக்கும். எதாவது பெரிய ஆயுதம் அவனது கைகளில் இருக்கும் (Casino Royale படத்தில் இந்த ஆயுதம் என்பது பணம்). ஆனால் இந்தப் படத்தில், Mமைக் கொல்லவரும் ஒரு வில்லனைத் தடுக்க முயல்வதே பாண்டின் பிரதான அஸைன்மெண்ட். Mமைக் கொல்ல நினைக்கும் ரவூல் ஸில்வா, ஒரு பழைய MI6 ஏஜெண்ட் (Goldeneye படத்தின் ஷான் பீன் – அலெக் ட்ரெவெல்யன் போன்ற கதாபாத்திரம்). சைனாவுக்கு Mமால் தாரை வார்க்கப்பட்டு, சயனைடை விழுங்கி, உயிர் போகாமல் உடலுறுப்புகள் சேதமடைந்து, நடமாடும் பிணமாக மாறி Mமைக் கொன்றே ஆகவேண்டும் என்ற வெறியோடு வாழ்ந்துவரும் மனிதன். அவனால் MI6ன் நெட்வொர்க்கை ஹேக் செய்ய முடிகிறது. அதனால் நேச நாடுகளைச் சேர்ந்த – தீவிரவாதிகளின் படைகளில் சேர்ந்து அரசுகளுக்கு துப்பு கொடுக்கும் ரகசிய உளவாளிகளின் பட்டியலைத் திருடி, ஒவ்வொன்றாக அவர்களின் பெயர்களை வெளியே கசியவிட்டு, அதனால் Mமுக்கு நெருக்கடி கொடுக்கவும் அவனால் முடிகிறது. எனவே, இந்தப் படத்தின் பிரதான தீம் – personal vengeance. இது ஒரு வரவேற்கத்தக்க மாறுதல்.
அடுத்து, இந்தப் படத்தில் தலைவேதனை தரக்கூடிய ஆயுதங்கள் இல்லை. பாண்டின் ஆஸ்டன் மார்ட்டின் கார் இல்லை (கௌரவ வேடம் மட்டுமே. இதைப் பற்றிக் கடைசியில்). அதேபோல் பல்வேறு ரகசிய குண்டுகள் இல்லை. ஒரே ஒரு வழக்கமான வால்த்தர் பிபிகே + ஒரு ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர். இந்த ஆயுதங்களை பாண்டுக்கு அளிக்கும் Q இந்தப் படத்தில் யார் என்று பார்த்தால், ஒரு இளைஞன். அவனுடன் பாண்ட் மேற்கொள்ளும் சிறிய சம்பாஷணை அட்டகாசம். இந்த சம்பாஷணையிலேயே பாண்ட் கதாபாத்திரத்தின் அவசியம் பாண்டாலேயே சொல்லப்படுகிறது. ஆனாலும் அந்த இளைஞனால் கிண்டல் செய்யப்படுகிறான் பாண்ட் (இதனாலேயே படத்தின் இரண்டாம் பாதியில் அந்த இளைஞனின் அறிவை மிஞ்சி பாண்ட் செயல்பட்டு Qவுக்கே பாடம் போதிக்கும் டெம்ப்ளேட் காட்சி ஒன்றும் உண்டு என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்). இந்தப் புதிய Q – அவசியமான welcome change.
அடுத்த மாற்றம், M. Goldeneye வெளிவந்த 1995லிருந்து 17 வருடங்கள் + 7 படங்களில் Mமாகத் தலைகாட்டிய ஜூடி டெஞ்ச் இனி இல்லை. அதற்குப்பதில் இனிமேல் ஒரு கச்சிதமான Mமைப் பார்க்கப்போகிறோம். கச்சிதம் என்று நான் சொல்வதற்குக் காரணம், தற்போதைய பாண்ட் ரசிகர்களுக்கு Dr.No, Gold Finger போன்ற படங்களில் சித்தரிக்கப்படும் M பற்றித் தெரிய வாய்ப்புகள் குறைவு. அக்காலகட்டத்தில் M எப்படி இருந்தாரோ, இனி அதேபோன்ற Mமைப் பார்க்கப்போகிறோம். அதற்கு SkyFall படத்தின் கடைசிக் காட்சி ஒரு சூப்பர் உதாரணம். அந்தக் காட்சியைப் பார்த்து சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தோம். பழைய பாண்ட் படங்களில் பாண்டுக்கு அஸைன்மெண்ட் தரும் Mமின் க்ளிப்பிங்ஸ் பார்த்திருக்கிறீர்களா? அதுதான் காரணம்.
அதேபோல், சமீபத்திய டானியல் க்ரெய்க் படங்களில் MoneyPenny மிஸ்ஸிங். ஆனால் இந்தப் படத்தில் மணிப்பென்னியின் அட்டகாசமான re – entry உண்டு. ஆல்ரெடி Qவையும் பார்த்துவிட்டோம்.
ஆக, இந்தப் படத்தில் இருந்து ஜேம்ஸ் பாண்டின் crew – அவரது டீம் – புத்தம் புதியதாகக் களமிறக்கப்பட்டுள்ளது. முந்தைய டீமை விட இந்தப் புதிய டீம் இன்னும் புத்திசாலித்தனமானது. ஆகவே, இனிவரும் படங்களில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும்.
ஸ்பாய்லர்கள் இங்கே முடிகின்றன
ஜேம்ஸ் பாண்டின் புதிய crewவோடு சேர்த்து, Gold Finger படத்தில் வரும் பழைய Aston Martin காரும் இப்படத்தில் ஒரு சில நிமிடங்கள் கௌரவ வேடம் புரிகிறது. இதுவுமே ஒரு புத்திசாலித்தனமான moveதான். படத்தில் அந்தக் கார் வரும் சிச்சுவேஷன் அப்படிப்பட்டது.
இந்தப் படத்தின் க்ளைமேக்ஸும் பிற பாண்ட் படங்களிலிருந்து வித்தியாசப்பட்டது. பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால், ஜேம்ஸ்பாண்ட் நாவல்களை வாசித்திருக்கிறீர்களா? திரைப்படம் பார்ப்பதற்கும் அதே கதையை நாவலாகப் படிப்பதற்கும் உள்ள வித்தியாசம் தெரியுமல்லவா? இந்தப் படத்தின் இரண்டாம் பாதி, அச்சு அசல் ஒரு Bond நாவலைப் படிப்பது போலவே இருந்தது. க்ளைமேக்ஸும் அப்படிப்பட்டதே. ஸாம் மெண்டெஸின் படங்களில் இந்த நாவல் எஃபக்ட் அவசியம் இருக்கும் என்பதையும் மறந்துவிடவேண்டாம்.
இந்தப் படத்தை தமிழில் பார்த்தால், உங்கள் வாழ்வின் மிக மோசமான அனுபவத்தை அடைவீர்கள். ஆங்கில வசனங்கள் தரும் அருமையான உணர்வைத் தமிழ் வசனங்கள் இந்தப் படத்தில் தர வாய்ப்பே இல்லை. ஆகவே, நல்ல திரையரங்கில் ஆங்கிலத்தில் பார்க்கவும். வசனங்கள் அருமையாக இருக்கின்றன. குறிப்பாக, இதற்கு முந்தைய பாண்ட் படங்களைக் கிண்டலடிக்கும் வசனங்கள் + பாண்டின் பர்ஸனல் பக்கங்களைப் பற்றிய வசனங்கள்.
இந்தப் படத்துக்குச் சென்றதே வேண்டாவெறுப்பாகத்தான். எப்படியும் பாண்டுக்கு Quantum of Solace படத்தில் எழுப்பிய சமாதியை இதில் கட்டி முடித்து மலர்வளையம் வைப்பார்கள்; இனி பாண்டுக்கு ஒரு முழுக்குப் போட்டுவிடுவோம் என்றுதான் இந்தப் படத்துக்குச் சென்றேன். ஆனால், இது ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தின் resurrection. உயிர்த்தெழுதல். இந்தப் படத்தில் வில்லன் ஸில்வா பாண்டிடம், ‘எல்லாருக்கும் ஒரு ஹாபி தேவை; உன்னுடையது என்ன?’ என்று கேட்கும்போது பாண்ட் சொல்வது இதே பதில்தான் – Resurrection. இனிமேல் வரும் பாண்ட் படங்களை அவசியம் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன். எனது தனிப்பட்ட கருத்து – ஸாம் மெண்டெஸிடமே இனி வரும் ஒன்றிரண்டு பாண்ட் படங்களைக் கொடுத்துவிடலாம். அதேபோல் அதன் திரைக்கதையையும் இதே மூவரிடம் அளிக்கலாம். எப்படி நோலனால் Batman கதாபாத்திரம் உயிர்த்தெழுந்ததோ, அப்படி ஸாம் மெண்டெஸினால் James Bond இந்தப் படத்தில் க்ளூகோஸ் ஏற்றப்பட்டிருக்கிறார். நோலனுக்கு முந்தைய பேட்மேன் படங்களின் கலர் கலர் பின்னணிகள், காமெடி காஸ்ட்யூம்கள் ஆகியவை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, பேட்மேனுக்குக் கிடைத்த ஒரு இருண்ட பின்னணி நம்மைக் கவர்ந்ததல்லவா? அப்படி இதில் ஜேம்ஸ்பாண்டுக்கு ஒரு கச்சிதமான பின்னணி கிடைத்திருக்கிறது. ஆனால் இனி? அதை அடுத்த படத்தில் முடிவு செய்துவிடலாம்.
GoldenEye படத்துக்குப் பிறகு, Casino Royale படம் எனக்குப் பிடிக்கும். ஆனால், இனிமேல் SkyFallதான் அந்த லிஸ்டில் முதல். அதில் சந்தேகமே இல்லை. படத்தின் ப்ளூரே டிஸ்க் வந்ததும் வாங்கிவிடுவேன். அதிலும் சந்தேகமில்லை.
Skyfall – Resurrection!
பி.கு –
James Bond பற்றிய நல்ல இரண்டு கட்டுரைகள் இங்கே படிக்கலாம். எழுதியவர் – நம்ம கொழந்த.
A. James Bond and the Guilty Pleasures
B. For your ears only – Bond & his Music
1. வசனங்கள் புரியாமல் போனால், இந்தப் படம் மொக்கையாகத்தான் இருக்கும் என்பது உறுதி. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் குறைவு. ஸாம் மெண்டஸின் ஓரிரண்டு படங்களையாவது பார்க்காமலும் இப்படத்துக்குச் செல்லவேண்டாம். ஸாம் மெண்டஸைப் பற்றித் தெரியாமல் SkyFall பார்ப்பது, நோலனைப் பற்றித் தெரியாமல் Batman Begins பார்த்துவிட்டு வருந்துவது போல. அட்லீஸ்ட் இரண்டு பழைய பாண்ட் (ஷான் கானரி) படங்களையும் அப்படியே பார்த்துவிட்டு செல்லவும். சுருக்கமாக – Bond பற்றி அட்லீஸ்ட் சில தகவல்களாவது தெரிந்துகொண்டு செல்லுங்கள். ஆக்ஷன் படம் என்று மட்டும் போனால் ஒரு மண்ணும் புரியாது.
2. இந்தப் படம், டானியல் க்ரெய்க்கின் Casino Royale படத்துக்குப் பதில் முதல் படமாக வெளிவந்திருந்தால், சூப்பராக இருந்திருக்கும்.
3. இந்தப் படத்தில் டானியல் க்ரெய்க்கின் Bond பாத்திர வெளிப்பாடு கச்சிதம். பொதுவாக நாஸ்டால்ஜியா பிரியர்களால் சிலாகிக்கப்படும் ஷான் கானரியெல்லாம் டானியல் க்ரெய்க்குக்கு முன்னர் ஒன்றுமே இல்லை.
4. இப்படத்திலும் டெம்ப்ளேட் காட்சிகள் இல்லாமல் இல்லை (ஆல்ரெடி மேலே ஒரு உதாரணம் பார்த்துவிட்டோம்). ஆனால், பிற பாண்ட் படங்களுக்கு இது எவ்வளவோ பெட்டர்.
மீ த பர்ஸ்ட்………வடை, பொங்கல் எல்லாம் எனக்குத்தான்…
நான் அனேகமா ஞாயித்துக் கெழமை இந்த படத்துக்கு போவேன். நல்லா இருக்குன்னு வேற சொல்லிட்டீங்க..போயே ஆகணும்.பார்த்துட்டு டவுட் இருந்தா கேட்குறேன்..
சரி. போயிட்டு வாங்க. ஆனா இது ஒரு டிபிகல் பாண்ட் படம் அல்ல.
Nice Review Boss.Its tempting me to go for the Movie.Will go next week.
Sure Boss. Please do see. Thanks
வித்தியாசமான அணுகுமுறை… பார்வையிலும் விமர்சனத்திலும்… இந்த வாரஇறுதிக்கொண்டாட்டத்திற்கு முன் படத்தைப்பாத்திடுவோம்.
Thank you Boss.
sorry ,i didnt like the movie as per Jamesbond standards…the climax is very simple and as expected..if jamesbond is trying to save M,finally the villian is job is done by killing her and himself..so there is no saving at all..and moreover villian is more smarter than jamesbond.. he proved this so many times..james bond is no near to villian at all in this movie..herione role is very minimal in this movie…
main knot of collecting the harddisk is also not collected back and there is no answer on how villian penetrate into MI6 network and what is the impact..if there is nomore MI6 ..i have been watching all Jamesbond movies almost 20 movies..my alltime best is Tomorrow never dies..
Bala – That’s why I mentioned in my article that SkyFall is not a typical Bond film. In this film, Bond fails and it not portrayed as a superhero. He is inferior to the villain. He fails even in the simple medical tests, and is deemed unfit for work. It was only M’s sheer decision to bring him back in, and again at the end, he fails (not by failing to save M, but by deciding on a ‘bait’ attempt to catch the killer). Also, about the villain penetrating the MI6 – That’s not needed for the film Boss. That’s what I think. Nevertheless, everybody have their own opinions about this film, and nothing wrong in you not liking the film boss. Thanks for the detailed comments.
//படத்தின் ப்ளூரே டிஸ்க் வந்ததும் வாங்கிவிடுவேன்//
I saw in a shop in Madurai that the price of a single blue ray disc is rs.1,500.
I would like to know how many blue ray discs you have bought until now. (just for curiosity I’m asking this. Not to kid you or for weighing you)
D – I have at least ten Blu ray original discs so far :-).. The collection keeps growing. Earlier I bought DVDs, and now I’m buying only Blu Rays.
Good …..thala….(ivlo nanla yanga irunthuga thala ,sorry nan thane pakala ungala..) ungaloda “Thiraikathai yazhuthuvathu epadi” kelvipattu neathuthane yanga offcela irunthu yarukum theriyama print yaduthu….;)
Chapter 2 (The Subject) paduchukitu iruken….thanks thala ….seekaramae fulla paduchutu update aidren….
Super Mahesh. PLease read and post your comments.
படம் இன்னும் பாக்கல, எங்க ஊர்ல மொக்க தியேடர்ல தமிழ்ல தான் போட்டிருக்கான்… இங்கிலீஷ் படத்த தமிழ்ல பாக்கறது தமிழ் படத்த மராத்தி மொழி டப்பிங்ல பாக்கிற மாதிரி செம வெறுப்பா இருக்கும்…. என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டிருகேன்…. உங்க review நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்.
தமிழ் டப்பிங் நல்லா இருக்குன்னு ஒரு நண்பர் சொல்லிருந்தாரு சரவணகுமார் … அதுனால போயி பார்க்கலாம்னு தோணுது. பார்த்தாச்சா?
நண்பரோட சேர்ந்து என்ஜாய் செஞ்சு பாத்தீங்கள்ள…….அதுபோதும்..பான்ட் படத்துல அதுதான வேணும்…..
எனக்கும் கொஞ்சம் மொக்கையா இருந்துச்சு…ஏசியும் அதுவுமா சில சமயத்தில் கண் அசந்திருச்சு……
அடடே திண்டுக்கல ஏசி தியேட்டர் லா வந்துருச்சா……….
//ஏசியும் அதுவுமா சில சமயத்தில் கண் அசந்திருச்சு……// – நக்கலு? எங்க ரெண்டு பேருக்கும், அந்தந்த ட்ரிவியா சீன்ஸ் வரும்போதெல்லாம் புல்லரிச்சது. அதாவது, அதை எப்படி கரெக்டா சொல்றதுன்னு தெரியல . பான்ட் பத்தி, Q பத்தி..பாண்டோட தகவல்கள் நிச்சியமா வெளிப்படுத்தப்படுவது, இந்த மாதிரி பல. நாங்க டிஸ்கஸ் பன்னதஹி அத்தனையும் இங்க எழுத முடியல . ஒரு வாட்டி வாங்க. பேசலாம்.
//அடடே திண்டுக்கல ஏசி தியேட்டர் லா வந்துருச்சா……….// – இதை இன்னும் ‘அவரு’ பார்க்கல போல
முனியாண்டி விலாஸ் போனா குடல் குழம்பு கிடைக்கும்கறது என்னோட நம்பிக்கை. என்னதான் நீங்க நெய் ஊத்தி வெண்பொங்கல் போட்டாலும், ஏமாற்றம் தான்.
தப்பே இல்ல பாஸ். எனக்கு படம் புடிச்ச மாதிரி, உங்களுக்கு புடிக்கல. கவலைய உடுங்க. வாங்க பழைய பான்ட் படங்களை பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
I have seen this movie boss..What i felt after this movie is your article..Chance less..Definitely this is not a typical bond movie..You should have mentioned about the chasing sequence of bond and Silva which was the beginning of Climax,Boss..I’m reading your reviews keenly..this is a great review with out exposing the story completely..Really good..You are doing great..Go ahead..
Thank you prakash. Whatever you have mentioned here – I too liked all those. Good to see that you too are on the same page
watched movie.. i dont know what to tell…
I found one review in below link… Pl try to hear it fully..
http://soundcloud.com/balajipatturaj/92-7-big-fms-best-of-take-7
i am telling something,its not like bonds film,k then why,they took bond film to take,because we all know about bond films ,most people want action block ,but there is nnothining,better they choose another charecter, rsome new charecter, all bond films had one unique storyline.thats the problem here,its my openion
I think it’s high time for them to change the trend, as it’s too boring to keep seeing the same Bond template in every movie. I am quite sure this is the way they are gonna film the next Bond movies. I think it’ll take a long time for them to come up with a usual Bond template movie. Let’s see.
//பொதுவாக நாஸ்டால்ஜியா பிரியர்களால் சிலாகிக்கப்படும் ஷான் கானரியெல்லாம் டானியல் க்ரெய்க்குக்கு முன்னர் ஒன்றுமே இல்லை.//
சத்தியமான வார்த்தை தல!
super boss
என்னால டானியல் க்ரெய்க்கை ரசிச்ச அளவு பியர்ஸ் ப்ராஸ்நனையோ ஷான் கான்னரியையோ என்ஜாய் பண்ண முடியல. டானியல் க்ரெய்க்கின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் அப்படி 🙂
Boss. You wont believe my words. I have seen this movie in Tamil. Dialogues amazing. Super Dubbing. Junoon Stlye kind of dubbing ended here.
Great to know that the Tamil Dubbing was good Boss. I didn’t expect it at all. If it’s so, then it’s a fantastic thing !!
Superb review , I thought thz movie is a different bond movie only ( becoz my friends told me mokkai padam ) but I watched in Tamil only but still I liked the movie , for full enjoyment and feel I need to watch the movie in English . Its a different bond movie , but one thing some what missed the action in the movie , in story and screenplay point of view its a best bond movie
Yes. With respect to action, there is very little action in this movie. But that’s the style of Sam Mendes. Yes. I agree with your point Kratos, that it’s a best Bond movie in the story and screenplay
Movie is like reading bond novel it’s totally true
Thank you Largo. Cheers.
thala, naan ungaloda romba naal rasigan… idhuvarai comment pottadhu illa…… enakku Pierce Brosnan thaan romba pudichiruku.. idhu ean.??
சுந்தர் – ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருத்தரை புடிக்கும் தலைவா. பியர்சை புடிக்கிறதுல தப்பே இல்லை. உண்மைல டானியல் க்ரெய்குக்கு முன்னால எனக்கும் அவரைத்தான் புடிக்கும். ஆனா பான்ட் நாவல்கல்ள சித்தரிக்கப்பட்ட பாண்டை தெளிவா காட்டுனவரு க்ரெய்க் . அதாவது பான்ட் ஒரு கொலைகாரன். கல்நெஞ்சன் . இதை இப்போதான் கரெக்டா காட்டுறாங்க. அதுனாலதான்.
Boss I thought you will comment on the easy entry of the antagonist into the public enquiry by just tackling a couple of uniformed cops…Why the gun was not used at all…also was the build up to final assault like making some quick traps fit the rest of the story
Muthu – at the end of the review, I have mentioned that there are a few template scenes in this movie too. The scene you have mentioned belongs there. I agree that there are a few mishaps. But even then, the screenplay and the treatment amazed me 🙂
really nice movie i ever saw the 007 movie. in salem, there was released tamil version only.
In the opening sequence , after taking the bullet shot from the train top, bond during his “dead man living” sequences , leads a perfect vagabond lifestyle in turkey. during that time bond escapes a scorpion bite in his pursuit to have a gulp of a drink…, after your reviews i feel that , bond has escaped a stinging scorpion bite yet another time !…, your review was so good ,
one more conspicuous thing i noticed in skyfall is that – though the movie talks about one person’s personal vengance, lot of geopolitics is discussed at length ( to me “world is not enough” is one hell of a treatise on geopolitik) .., bond even questions ralph ‘s (new M) back ground and his empathy with the IRA.
Like you i feel lot more confident about the upcoming bond release..good job by sam mandes.
//
எப்படியும் பாண்டுக்கு Quantum of Solace படத்தில் எழுப்பிய சமாதியை இதில் கட்டி முடித்து மலர்வளையம் வைப்பார்கள்; இனி பாண்டுக்கு ஒரு முழுக்குப் போட்டுவிடுவோம் என்றுதான் இந்தப் படத்துக்குச் சென்றேன். ஆனால், இது ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தின் resurrection. உயிர்த்தெழுதல்.
//
அருமை… என்னோட வ்யூவும் இதேதான்.. மூணு படங்களில் நடுவுல க்வாண்டம் ஆஃப் சோலாஸ் இல்லாம இருந்திருந்தா இந்த சீரிஸ் ரெண்டு படங்களோட அட்டகாசமா இருந்திருக்கும். அது நடுவுல தேவை இல்லாத ஒரு இடைச்செருகல் 🙂
Good articles…
But nowadays in Hollywood ‘getting caught’ has become part of the villain’s plan
hi
Visiting ur site after a long time New changes ! i am not sure whether u will reply as i am sure u must be bc but i really liked ur analysis of the movies especially the LOTR series. But as for this one SKYFALL…. with too many action oriented movies have come… i miss the Bond BGM even if they went on changing the templates, the BGM shd have been retained
With Warm regards
Sarav
Hi Saravanan.. Here is my reply :-)… Thanx for the kind comments. About Bond, everybody have their own template about bond, and when that gets satisfied, they feel close to that film. May be that ‘s the case with you.
skyfall film patri Ungaludaya Thiravimarsanam Migavum Arputham.