Soul Kitchen (2009) – German & கலகலப்பு

by Karundhel Rajesh June 25, 2012   Copies

உலகப்படங்களிலிருந்து நமது தமிழ்ப்படங்கள் ரகவாரியாகத் திருடப்படுவதைப் பற்றி நமது நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். சிலபேர் (கே.வி. ஆனந்த் & Co) பயங்கர வெளிப்படையாக, படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு எதுவுமே தெரியாது என்ற எண்ணத்தில் ஆனந்தின் ‘அயன்’ படத்தில் டிவிடி கடையில் வந்து இயக்குநர்களின் ஜூனியர்கள் விசாரிப்பதைப்போல், ’Maria Full of Grace’ (அயன்), ’State of Play’, ‘Inside Man’, ‘Mission Impossible 2’, ‘No Man’s Land’ (இந்த நான்கு படங்களும் சேர்ந்த காப்பிக்கலவையே ‘கோ’) போன்ற படங்களை அப்படியப்படியே உல்டா அடித்து படமெடுப்பார்கள். இன்னமும் சிலர் (கமல் & Co), உலகப்படங்களிலிருந்து அப்படியே உருவாமல், அதை நம்மூருக்கு ஏற்றபடி புத்திசாலித்தனமாக மாற்றி எடுப்பார்கள். இந்த இரண்டாவது கேடகரியில் அமைந்துள்ள படங்களை எவரும் கேள்வியே பட்டிருக்க முடியாது. அந்த அளவு ரிமோட்டான படங்களைப் பிடித்து, அதிலிருந்து டப்பா அடித்து வெளிவரும் தமிழ்ப் படங்களை நாமும் ஒரிஜினல் என்று நம்பி, வாயைப் பிளந்துகொண்டு பார்த்துக்கொண்டிருப்போம்.


அந்த ரகத்தில், ஜெர்மன் மொழியில் 2009ல் வெளிவந்த ஒரு படமே Soul Kitchen. அதாவது, இதுதான் ஒரிஜினல்.

ஸீனோஸ் என்பவன், Soul Kitchen என்ற, ஹாம்பர்க் நகரில் அமைந்துள்ள ரெஸ்டாரண்ட்டின் உரிமையாளன். இந்த ரெஸ்டாரண்ட், ஒரு பழைய உணவு விடுதி. இங்கு உணவு உண்ண வருபவர்களும், கீழ் நடுத்தர சமுதாய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். உணவு விடுதி, நஷ்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது. வியாபாரம் பயங்கர டல்.

இந்த சூழ்நிலையில், ஸீனோஸுக்கு ஒரு சகோதரன். அவனது பெயர் இலியாஸ். இலியாஸுக்கு சூதாட்டத்தின் மீது ஒரு கண் (இந்தப் பாயிண்டை மறந்துவிடாதீர்கள். ஏன் என்று பின்னால் தெரியும்). ஜெயிலிலிருந்து தற்காலிகமாக வெளியே வரும் இலியாஸ், அவனுக்கு வேறு இடம் இல்லாததால், தனது சகோதரன் ஸீனோஸின் உணவு விடுதிக்கு வருகிறான். அங்கே சிறிதுநாட்கள் தங்கிக்கொள்ள அனுமதியும் பெறுகிறான்.

உணவு விடுதியில் வேலை செய்துகொண்டிருப்பவர்களில், ஒரு பெண்ணும் அடக்கம். அவளது பெயர் – லூஸியா. இந்தப் பெண்ணுக்கு, இலியாஸைப் பிடித்துப்போகிறது. இலியாஸ் ஜெயிலிருந்து வந்தவன் என்பது அவளுக்குத் தெரியாது. யாரிடமும் இந்தத் தகவலை சொல்லிவிடக்கூடாது என்று ஸீனோஸிடம் சொல்லிவைத்திருக்கிறான் இலியாஸ்.

ஸீனோஸ், தனது உணவு விடுதிக்கு வரி கட்டுவதில்லை. பணமில்லை என்பதால். இந்த நிலையில், அரசாங்க டாக்ஸ் இன்ஸ்பெக்டர் (இது ஒரு பெண்) இவனது உணவு விடுதிக்கு வருகிறாள். வரி கட்டச்சொல்லி ஸீனோஸை மிரட்டுகிறாள். ஆனால் ஸீனோஸிடம் பணமில்லாததால், அவனது ஆடியோ சிஸ்டத்தை எடுத்துச்சென்றுவிடுகிறாள். விரைவில் திரும்பி வருவதாகவும், அப்போது வரியைக் கட்டியே தீரவேண்டும் என்றும் அவனை மிரட்டிவிட்டுச் செல்கிறாள்.

இப்போது, ஸீனோஸ், அவனது சமையலறையில் ஒரு கனமான டிஷ்வாஷரை நகர்த்தும்போது அவனது முதுகு சுளுக்கிக்கொண்டுவிடுகிறது (இந்த முதுகுப்பிடிப்பு, படம் முழுக்க வருகிறது. அது குணமாவது, படத்தின் க்ளைமாக்ஸில்தான். இந்தப் பாயிண்ட்டையும் மறந்துவிடாதீர்கள்). முதுகுவலியால் மிகவும் கஷ்டப்படுகிறான் ஸீனோஸ்.

ஆக, கையில் பணமில்லை. முதுகு வலி. கூடவே, ஜெயிலிலிருந்து வந்திருக்கும் தம்பி. எப்போதும் வரி கட்டச்சொல்லி நிர்ப்பந்தித்துக்கொண்டிருக்கும் பெண் அதிகாரி. ஹோட்டலில் வியாபாரமே இல்லை. இத்தனை கஷ்டங்களும் ஸீனோஸின் மண்டையை உடைக்கின்றன.

என்ன செய்தால் இந்தக் கஷ்டங்கள் அகலும்?

அப்போதுதான், தனது காதலி சைனாவுக்கு வேலை நிமித்தமாகச் செல்வது ஸீனோஸுக்குத் தெரிகிறது. அவளிடம் சண்டையிடுகிறான். ஆனால் அவள், போயே தீரவேண்டும் என்று சொல்லிவிடுகிறாள். அப்போது அந்த இடத்தில் இருந்து வேலையை விட்டுத் துரத்தப்படும் செஃப் ஒருவரை ஸீனோஸ் பார்க்கிறான். அவரை இவனது ரெஸ்டாரண்ட்டில் வேலைக்கு அமர்த்துகிறான். அவரோ மிகவும் நளினமான, நாகரிகமான செஃப். ஆகவே, அவரது இஷ்டத்துக்குத்தான் சமைக்க முடியும் என்று நிர்ப்பந்தமாக ஸீனோஸிடம் சொல்லிவிடுகிறார். அவர் சமைக்கும் உணவு, வழக்கமான கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஸீனோஸின் கஸ்டமர்களுக்குப் பிடிப்பதில்லை. ஆகவே, இதுவரை இருந்துவந்த வியாபாரமும் காலி.

இந்த நிலையில், அடிக்கடி ஸீனோஸின் காலி உணவு விடுதிக்கு வந்து, இசைப்பயிற்சி மேற்கொள்ளும் ஒரு கும்பலை ஸீனோஸ் பயன்படுத்திக்கொள்கிறான். அவர்களின் இசையைக் கேட்க கும்பல் சேர்ந்து, அவர்கள் உணவு ஆர்டர் செய்ய, புதிய செஃப்ஃபின் உணவு அட்டகாசமாக விற்கிறது. ஹோட்டல் வியாபாரம் உயர்கிறது. ஸீனோஸின் திருட்டு சகோதரனுக்கும், அதே உணவு விடுதியில் வேலை செய்யும் லூஸியாவுக்கும் காதல் மலர்கிறது.

லூஸியாவுக்கு இசை பிடிக்கும் என்று தெரிந்துகொள்கிறான் திருட்டு இலியாஸ். உணவு விடுதியில் எந்த ஆடியோ சிஸ்டமும் இல்லையே? அரசாங்க டாக்ஸ் இன்ஸ்பெக்டரான அந்தப் பெண் அதிகாரி அதனைத் தூக்கிச் சென்றுவிட்டாளே? ஆகவே, தனது திருட்டு நண்பர்களைக் கூட்டு சேர்த்துக்கொண்டு, ஒரு இடத்தில் இந்த ஆடியோ சிஸ்டத்தைத் திருடி, உணவு விடுதியில் வைக்கிறான் இலியாஸ். இதனைப் பார்க்கும் லூஸியா சந்தோஷப்படுகிறாள் (இது அடுத்த பாயிண்ட். மறக்காதீர்கள்).

புதுப்பிக்கப்பட்ட உணவு விடுதி, கோலாகலமாக திறக்கப்படுகிறது.

அப்போது, ஸீனோஸ், அவனை அறியாமல், அவனது உணவு விடுதியில் வேலை செய்யும் லூஸியாவிடம், அவனது சகோதரன் இலியாஸ் ஜெயிலிலிருந்து வந்திருப்பதை சொல்லிவிடுகிறான். இதனை லூஸியா கிண்டலாக இலியாஸிடம் கேட்க, ஸீனோஸ் மேல் ஆத்திரம் கொண்டு அவனுடன் சண்டையிடுகிறான் இலியாஸ். ஆனால் லூஸியா, அதனைத் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அவனிடமே சொல்ல, சமாதானமாகிறான்.

இப்போது, அந்த நகரத்தின் தாதா ஒருவன். ஸீனோஸின் நண்பன். அவனுக்கு இந்த உணவு விடுதியின் மேல் இரண்டு கண். ஆகவே ஸீனோஸை விற்கச்சொல்லி கட்டாயப்படுத்திக்கொண்டே இருக்கிறான். ஆனால் இப்போது உணவு விடுதி சூப்பராக ஆகிவிட்டதால், வேறு வழியே இன்றி கப்சிப்பென்று இருக்கிறான்.

இந்த நிலையில், ஸீனோஸின் காதலி சைனா சென்றுவிடுகிறாள். அவளைப் பார்த்தே ஆகவேண்டும் என்று ஸீனோஸும் சைனா கிளம்புகிறான். அவன் இல்லாதபோது, சகோதரனை உணவு விடுதியைப் பார்த்துக்கொள்ளச்சொல்லிவிட்டு. அந்த நேரத்தில், தாதா எண்ட்ரி. இலியாஸுக்கு முன், தனது சகாக்களுடன் அமர்ந்து சீட்டு ஆடுகிறான். ஏற்கெனவே சீட்டாட்டத்தில் பயங்கர வீக்நெஸ் கொண்ட இலியாஸ், இதனால் தூண்டப்பட்டு ஆட்டத்தில் கலந்துகொள்கிறான். ஆனால் பயங்கரமான தோல்வியை சந்திக்கிறான். ஆகவே, தாதாவினால் மிரட்டப்பட்டு, உணவு விடுதியை அவனுகே எழுதிக்கொடுத்துவிடுகிறான்.
காதலியை சைனாவில் பார்க்க ஏர்போர்ட் செல்லும் ஸீனோஸுக்கு அதிர்ச்சி. ஏனெனில், அவள் ஃப்ளைட்டிலிருந்து இறங்கி, ஹாம்பர்க் வருகிறாள். காரணம், அவளது பாட்டி இறந்துவிட்டதே. அவளுடன் இன்னொரு ஆண். அவளது நண்பன். உடனேயே டிக்கெட்டைக் கான்ஸல் செய்துவிட்டு உணவு விடுதிக்கே வரும் ஸீனோஸை, தாதாவின் ஆட்கள் அடித்துப்போட்டுவிடுகிறார்கள்.

தன்னுடைய உணவு விடுதியை எப்படி ஸீனோஸ் மீட்கிறான்? அவனது சகோதரனுக்கும், உணவு விடுதியில் வேலை செய்துவரும் லூஸியாவுக்கும் உண்டான காதல் என்ன ஆனது? ஸீனோஸின் காதல் ஜெயித்ததா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை, மீதிப்படத்தில்.


ரைட். இப்போது, மேலே உள்ள கதையில், ஸீனோஸுக்குப் பதில் விமல். இலியாஸுக்கு பதில் சிவா. லூஸீயாவுக்கு பதில் ஓவியா. டாக்ஸ் இன்ஸ்பெக்டருக்குப் பதில் அஞ்சலி. உணவு விடுதியிலேயே வாழும் வயதான நபர் ஒருவருக்குப் பதில் வி.எஸ் ராகவன். மசாலா கஃபே தயார் !

இப்படத்தின் பல காட்சிகள் அப்படியப்படியே உருவப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, ஸீனோஸின் (விமலின்) பழைய ஹோட்டல் புதுப்பிக்கப்பட்டு, திறக்கப்படும்போது, சமையலறையில் புதிய செஃப், பாத்திரம் நிறைய மாவை பாத்திரத்தோடு சுழற்றுவார். பக்கத்திலேயே நிற்கும் ஸீனோஸும் (விமலும்) அதே போல் பாத்திரத்தை சுற்ற, மாவு கீழே கொட்டிவிடும். அதேபோல் உணவு விடுதியை இலியாஸ் (சிவா) சூதாட்டத்தில் தோற்றதால் தாதாவிடம் எழுதிக்கொடுப்பது, லூஸீயாவுக்கு (ஓவியாவுக்கு) இசை பிடிக்கும் என்பதால் ஆடியோ சிஸ்டத்தை இலியாஸ் (சிவா) திருடுவது, டாக்ஸ் இன்ஸ்பெக்டர், ஸீனோஸிடம் (விமலிடம்) வரியைக் கேட்டு மிரட்டுவது, அந்த டாக்ஸ் இன்ஸ்பெக்டரும் ஒரு பெண்ணாகவே இருப்பது, ஹீரோவின் சகோதரன் ஜெயிலிலிருந்து வருவது, அவன் ஜெயிலிலிருந்து வந்தது லூஸியாவுக்கு (ஓவியாவுக்கு) ஸீனோஸ் (விமல்) மூலம் தெரிவது, அதனால் ஸீனோஸூடன் (விமலுடன்) இலியாஸ் (சிவா) சண்டையிடுவது – இது தவிர, நான் மேலே எழுதியிருக்கும் கதையில் இந்தத் தமிழ் நடிக நடிகையரின் பெயரை மட்டும் இதே ரீதியில் மாற்றிப்போட்டீர்கள் என்றால் சுடச்சுட காப்பியடிக்கப்பட்ட ’கலகலப்பு’ ரெடி.

உண்மையைச் சொல்லப்போனால், Soul Kitchen ஒரு அருமையான, ஜாலியான, இசை நிறைந்த படம். அதனை கிறுக்குத்தனமாகத் திருடியதால், கலகலப்பு ஒரு அரத மொக்கைப் படமாக ஆகிவிட்டதுதான் நிஜம்.

’கலகலப்பு’ படத்துக்குப்போய் இத்தனை பெரிய கட்டுரை தேவையா என்று நண்பர்கள் நினைக்கக்கூடும். ஆனால், ஒரு நல்ல படத்தை இப்படி மொக்கையாக சுட்டு ஒரு படம் வந்திருக்கிறது என்பது நண்பர்களுக்குத் தெரிய வேண்டும் என்று நான் நினைத்ததாலேயே இந்தக் கட்டுரை.

Soul Kitchen படத்தின் ட்ரெய்லர் இங்கே.

பி.கு – ’கலகலப்பு’ படத்திற்கு வசன உதவி நமது கேபிள் சங்கர். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டீர்களா என்று கேட்டேன். பார்த்துவிட்டேன் என்று ஃபேஸ்புக்கில் சொன்னார்.

  Comments

28 Comments

  1. அய்யய்யோ.. என்ன மேட்டர்ன்னு தெரியாம ஃபேஸ்புக்கில் ஷேர் பண்ணிட்டனே? எப்படி அன் ஷேர் பண்ணுறது?

    Reply
  2. அட ஒரு கமெண்ட் போடுறதுக்குள்ள பி.கு மாறிடுச்சே? கேபிள்… எனக்கும் கருந்தேளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    Reply
  3. அட பாவிகளா, ஒரு உலக படத்த கூட விட்டு வைக்க மாட்டாங்களா… இத போய் தியேட்டர்ல நல்ல படம்னு நினச்சு பார்த்தேனே… என்ன ஜோட்டாவில் அடிக்கனும்.

    தேளு எப்படியா, ஜெர்மன் படத்த கூட விடாம பார்த்துபுடுற… நீர் சகல மொழி வித்தகனைய்யா 😉

    Reply
  4. ஒன்னு மட்டும் நல்லா தெரியுது பாஸ்!! இவங்க எங்கிருந்து சுட்டானுகளோ அந்த படம் நிட்சயமா நல்லா இருக்கும்னு!! சில வருடங்களுக்கு முன் டீ வீ யில் ” A Fish called Wanda”” பார்த்தேன் அந்த படத்த எவ்ளோ கேவலமா எடுக்க முடியுமோ அவ்வளவு கேவலமா “லண்டன்” படத்த எடுத்திருக்கார் சுந்தர் சி

    Reply
  5. அப்கோர்ஸ் டமில் மக்களுக்காக எவ்ளோ மாற்றம் செய்திருக்கார் தெரியுங்களா!!

    Reply
  6. andha padathula santhanam comedy irukka… Aana namma padathula iruku…

    Reply
  7. yeah …thalaiva …i knw kalappu is copy from soul kitchen i read it
    in wikipedia…

    Reply
  8. பாஸ்..இந்த படம் Soul Kitchen படத்தோட காப்பிதானு கேள்விப்பட்டேன்..இங்க வந்து உங்க விமர்சனம் படிக்க நம்ப வேண்டியதாயிருச்சி..
    எப்படி சொன்னாலும் சில சினிமாக்காரவங்க திருந்த மாட்டாங்க..நல்ல விமர்சனம்..படம் பார்க்க ஆவலா இருக்கேன்..விமர்சனத்திற்கு நன்றி.

    Reply
  9. அதுல வர நாய்,டைமண்ட் மேட்டர் snatch படம். எல்லா ஆங்கில படங்களும் தமிழ்ல வரது இல்லையே அப்பிடி தமிழ்மக்கள் காணாமல் விட்டுவிட்ட படத்தை தமிழில் கொண்டுவரும் எளிய முயற்சினு வெச்சுக்கவேண்டியதுதான். வேறென்ன பண்ணபடம் ஹிட் ஆயிடுச்சு “சண்டைல கிழியாத சட்டை எங்கிருக்கு”னு அவர்தான் சொல்லீருக்கார்ல

    Reply
  10. ஜெயமோகனின் பனிமனிதன் கதையிலிருந்துதான் அவதாரை சுட்டிருக்கிறார்கள்; என்ன செய்யமுடியும்?

    தானிக்கு தீனி சரியாப் போச்சு :)))

    Reply
  11. அதானே பார்த்தேன் நல்ல ஜாலியா படம் போனதே தெரியலை இப்ப தானே தெரியது இது அட்ட காப்பி என்று உங்கள தான் பாராட்டனும் எப்படி தான் எல்லாத்தையும் கண்டுபுடிகிரின்களோ யோ சுந்தர்.சி மிஸ்கின் பெரிய ஆளுங்க…

    Reply
  12. படு அசத்தலான பதிவு…. வழக்கம் போலவே…. இவனுங்களுக்கு புத்தி ஏன் இப்படி போகுது? இவனுங்கள எல்லாம் 100 கருந்தேள் வந்தாலும் திருத்த முடியாது……..

    Reply
  13. //’கலகலப்பு’ படத்திற்கு வசன உதவி நமது கேபிள் சங்கர்//

    படத்தில எங்கயுமே அவருக்கு க்ரெடிட்ஸ் குடுக்கல அப்புறம் என்ன உதவி?

    Reply
  14. http://www.cablesankaronline.com/2012/05/man-on-ledge.html

    //விரைவில் இப்படத்தை தமிழில் சிற்சில மாறுதல்களுடன் பார்க்ககூடும். நானே கூட அதில் இருக்கக்கூடும். கம்பெனிக்கு மெயில் போடுகிறவர்கள் உடன் வேலையை ஆரம்பிக்கலாம்:))//

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 🙂

    Reply
  15. //சாம் ஒர்த்திங்டென்னின் நடிப்பு பற்றி பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. பல இடங்களில் அவரின் உணர்விலலாத முகம் கதைக்கு பலமென்றாலும், வெளிப்படுத்த வேண்டிய இடங்களிலும் கல்லுளிமங்கனாய் இறுகிப் போன முகமாய் இருப்பது கொடுமை// அண்ணர் பக்கத்து வீட்டுபய்யன் பத்தி எழுதுறமாதிரி விக்கிபீடியா பாத்து எழுதுவாரு 🙂

    இதுக்கு நம்ம ஜாட்லி சாகர் பரவால்ல போல # அமேரிக்க பாக்ஸ் ஆஃபீசை கலக்கும் பாகிஸ்தான் பாடாம்

    Reply
  16. கருத்து மழைகள இங்க பொழியுங்க மச்சி . .//

    கம்மண்ட் பாக்ஸ் பாப் அப்புல வச்சா இன்னும் நல்லா பொழியுவோம் 😛

    Reply
  17. அதுசரி.. மொத்த படத்தையுமே காப்பியடிச்சிருக்காய்ங்களா? வெளங்கீருவாய்ங்க.

    இதைத் தவிர, பூல ரங்குடு தெலுங்கு படத்துல இருந்தும் சில காமெடி காட்சிகளை சுட்ருக்காங்க நண்பா.

    Reply
  18. //பூல ரங்குடு//

    திரு. செ. சரவணக்குமார்.. நீங்கள் ஏன் என் கதை ஒன்றை எழுதக்கூடாது?

    Reply
  19. //திரு. செ. சரவணக்குமார்.. நீங்கள் ஏன் என் கதை ஒன்றை எழுதக்கூடாது?//

    அவ்வ்வ்.. தல, வொய் திஸ் மர்டர் வெறி. :))

    Reply
  20. @ ரஃபீக் – ஹி ஹி … ஒரு படத்தையும் விடுறதில்லைன்னுதானே நாம அடிக்கடி அப்சர்வ் பண்ணிக்கினு இருக்கோம்? இனிமே எந்தப் படம் வந்தாலும் கொஞ்ச நாளு பொறுத்துட்டு அப்பால போயி பாரும் 🙂

    @ தேவாரம் – A Fish called Wanda= லண்டன் மேட்டர் எனக்கு தெரியாது. ஆக்சுவலா அது ஒரு மலையாளப் படம்னு நான் நினைச்சிக்கினு இருந்தேன். காக்க குயில்ன்னு ஒரு படம். ஆனா அந்த காக்க குயிலையே அந்த ஆங்கில படத்துல இருந்துதான் சுட்டுருக்காய்ங்கன்னு இப்போ தெரிஞ்சிக்கிட்டேன் 🙂

    @ சூர்யகுமார் – ஹா ஹா ஹா 🙂 .. சந்தானம் காமெடி ஜெர்மன் மக்களுக்கு புரியாதே தலைவா . அதான் வெக்கலையோ?

    @ குமரன் – இந்தப் படம் பாருங்க. கட்டாயம் புடிக்கும்.

    @ கோவை நேரம் – தமிழன் பலே கில்லாடி. ‘பலே’யை உட்டுட்டீங்க

    @ Ravikumar Thirupur – Snatch பத்தியும் எழுதனும்னுதான் நினைச்சேன். அப்பால இந்த சோல் கிட்சன் மேட்டர் மறைஞ்சிரும்னுதான் எழுதல.

    //தமிழ்மக்கள் காணாமல் விட்டுவிட்ட படத்தை தமிழில் கொண்டுவரும் எளிய முயற்சினு வெச்சுக்கவேண்டியதுதான்// – ஓ வெச்சிக்கலாமே. ஆனா என்ன…நாளைப்பின்ன ஒரிஜினல் ப்ரொட்யூஸர் கேஸ் போடும்போது இந்த வாதம் பேசுனா வாயிலயே அடிப்பாங்களே…பரவால்லையா 🙂

    @ ஷங்கர் – //ஜெயமோகனின் பனிமனிதன் கதையிலிருந்துதான் அவதாரை சுட்டிருக்கிறார்கள்; என்ன செய்யமுடியும்?// – அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

    @ சின்ன மலை – இப்பலாம் காப்பியடிச்சா அடுத்த செகண்டே தெரிஞ்சிருது தலைவா..ஆனா இன்னமும் படம் பார்க்கும் மக்கள் முட்டாளுகன்னு நினைச்சிக்கினே படம் எடுத்தா எப்புடி?

    @ சாம் ஆண்டர்சன் – பட டைட்டில்ல கேபிளின் பேரு வருது. நீங்க சரியா பார்க்கலன்னு நினைக்கிறேன். கமென்ட் பாக்ஸ் பாபப் வைக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது 🙂

    @ செ. சரவணக்குமார் – //பூல ரங்குடு// – இங்கல்லாம் வந்து கெட்ட வார்த்தை பேசப்படாது. இது ஜெட்லி ப்லாக் இல்ல 🙂

    Reply
  21. Looks like Maatran is also lifted from Matt Damon’s ‘ Stuck on You’. Request you to take a look at the posters of both films. Expecting your view on this

    Reply
  22. Looks like Maatran is also lifted from Matt Damon’s ‘ Stuck on You’. Request you to take a look at the posters of both films. Expecting your view on this

    Reply
  23. Soul Kitched கம்பேனிக்கு மெயில் போட்டாச்சா? 🙂

    Reply

Join the conversation