Source Code (2011) – English

by Karundhel Rajesh August 27, 2011   English films

சிகாகோ நகரை நோக்கி விரைந்துகொண்டிருக்கும் ட்ரெய்ன். ஜன்னலில் தலைசாய்த்துக் கண்களை மூடிக்கொண்டிருக்கும் கால்டர் ஸ்டீவன்ஸ், திடும்மென்று கண்விழிக்கிறான். அவனுக்கு எதிரே, அடையாளம் தெரியாத ஒரு பெண். ”நீங்கள் சொன்ன யோசனையைப் பின்பற்றினேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்” என்று இவனிடம் பேசத்தொடங்குகிறாள் அந்தப்பெண். அருகில் நடந்துசெல்லும் பெண்ணின் கையில் இருக்கும் கோக்கில் இருந்து சில துளிகள் இவனது ஷூவில் சொட்டுகின்றன. பக்கத்தில் இருக்கும் நபர், குளிர்பான டின்னைத் திறக்கிறான். அவனைச்சுற்றிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் எதுவும் அவனது மூளையில் பதிவாவதில்லை. அந்த இடமே, அந்நியமாக இருக்கிறது. ஜன்னலின் கண்ணாடியில், யதேச்சையாக வெளியே பார்க்கும் ஸ்டீவன்ஸ், அதில் தெரியும் அவனது முகத்தைக் கண்டு, அதிர்ந்து போகிறான். அங்கு பிரதிபலிப்பது, அவனது முகம் அல்ல. அதிர்ச்சியில், மெதுவே எழுந்து நடக்க ஆரம்பிக்கிறான். ட்ரெய்னின் டாய்லெட்டில் உள்ள கண்ணாடியில், முற்றிலும் வேறான ஒரு உருவம் தெரிவதைக் கண்டு குழம்புகிறான். வெளியே வந்து, அந்தப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கையில் . .

டமால் !

ட்ரெய்ன் வெடித்துச் சிதறுகிறது.

வண்டியில் இருக்கும் அனைவரும் பூண்டோடு எரிந்துபோகிறார்கள்.

’கேப்டன் கால்டர் ஸ்டீவன்ஸ் . . கேப்டன் கால்டர் ஸ்டீவன்ஸ் . . இது பெலேகுவர்ட் காஸில்’ . . .

‘கேப்டன் ஸ்டீவன்ஸ்… நான் பேசுவது கேட்கிறதா?. . . . .’

’நான்… யெஸ்.. கேட்கிறது. யாருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்?’

“என்ன நடந்தது என்று சொல்லுங்கள் ஸ்டீவன்ஸ் . . இந்த நேரத்தில் உங்களால் ரிபோர்ட் செய்ய முடியுமா?’

“வாட்? ஒன்றுமே புரியவில்லை. நான் எங்கிருக்கிறேன்?’

”என்னுடன் பேசுவதற்கு முன்பு நீங்கள் எங்கிருந்தீர்கள்? சொல்ல முடியுமா?’

”…………..ஒரு பெரிய வெடிவிபத்து நிகழ்ந்தது………”

“எங்கே?”

”………………………”

“இந்த நிலையில் சிறிது குழப்பம் அடைய நேர்வது , மிகவும் நார்மல் தான் கேப்டன்”

”உங்கள் முன் இருக்கும் டிவியில் என் உருவம் தெரிகிறதா கேப்டன்?”

“யெஸ்.”

“நான் யார் என்று சொல்லுங்கள்”

“ …….குட்வின்”

“யெஸ். பர்ஃபெக்ட். ட்ரெய்னில் பாம் வைத்தது யார் என்று சொல்லுங்கள் கேப்டன்”

“எனக்கு…… எனக்கு எப்படித் தெரியும்?”

“அப்படியானால், மறுபடி அங்கே சென்று, இன்னொருமுறை முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு அளிக்கப்படுவது, முன்புபோலவே, அதே எட்டு நிமிடங்கள்”

“ஏய்.. பொறு.. நிறுத்து”

“………………………………………………..”

வூஊஊஊஊஊஊஷ்.

அதே ட்ரெய்ன். ஜன்னலில் தலைசாய்த்துக் கண்களை மூடிக்கொண்டிருக்கும் கால்டர் ஸ்டீவன்ஸ், திடும்மென்று கண்விழிக்கிறான். அவனுக்கு எதிரே, அடையாளம் தெரியாத அதே பெண்.

”நீங்கள் சொன்ன யோசனையைப் பின்பற்றினேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்”

கடிகாரத்தைப் பார்க்கிறான். அதில், எட்டு நிமிடங்கள் ஓடும் கௌண்ட்டர், ஓட ஆரம்பித்திருக்கிறது.

அருகில் நடந்துசெல்லும் பெண்ணின் கையில் இருக்கும் கோக்கில் இருந்து சில துளிகள் இவனது ஷூவில் சொட்டுகின்றன. பக்கத்தில் இருக்கும் நபர், குளிர்பான டின்னைத் திறக்கிறான்.

“நம்பவே முடியவில்லையே. அதே விபரங்கள்”

எழுகிறான் ஸ்டீவன்ஸ்.

“குண்டு எங்கே வைக்கப்பட்டிருக்கிறது? எப்படியாவது அதனைக் கண்டுபிடிக்கவேண்டும். எட்டு நிமிடங்களுக்குள்….”

ஒவ்வொரு இடமாகப் பார்த்துக்கொண்டே டாய்லெட்டினுள் நுழைகிறான். அங்கே, இவனது தலைக்கு மேல் இருக்கும் ஏர் கண்டிஷன் டக்ட்டினுள் இருக்கிறது குண்டு. பரபரப்பாக வெளியே வருகிறான் ஸ்டீவன்ஸ்.

“எல்லோரும், உங்களது கைகளில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்களை சற்றே அணைத்துவிடும்படிக் கேட்டுக்கொள்கிறேன். செக்யூரிடி செக் இது. அனைவரும் ஒத்துழையுங்கள்.”

ஒரு பிரயாணி ஆட்சேபம் தெரிவிக்க, அவனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே…..

டமால் !

ட்ரெய்ன் வெடித்துச் சிதறுகிறது.

“கேப்டன் ஸ்டீவன்ஸ். நான் பேசுவது கேட்கிறதா?”

“கேட்கிறது.”

“குண்டைக் கண்டுபிடிக்க முடிந்ததா கேப்டன்”

“டாய்லெட்டின் மேல் இருக்கும் ஏஸி டக்டினுள் இருக்கிறது குண்டு. செல்ஃபோனினால் வெடிக்கவைக்கக்கூடிய டெட்டனேட்டர் அதில் பொருத்தப்பட்டிருக்கிறது”

“வெரிகுட் கேப்டன். குண்டை வைத்தவன் யார்?”

“அது எப்படி எனக்குத் தெரியும்?”

“ஓகே. அதனை இந்த முறை கண்டுபிடியுங்கள். இது ஒரு வாழ்வா சாவா பிரச்னை கேப்டன். தயவுசெய்து கண்டுபிடியுங்கள்”

“ஹேய்… ஹேய்..”

வூஊஊஊஊஊஊஊஊஷ்.

அதே ட்ரெய்ன். ஜன்னலில் தலைசாய்த்துக் கண்களை மூடிக்கொண்டிருக்கும் கால்டர் ஸ்டீவன்ஸ், திடும்மென்று கண்விழிக்கிறான். அவனுக்கு எதிரே, அடையாளம் தெரியாத அதே பெண்.

”நீங்கள் சொன்ன யோசனையைப் பின்பற்றினேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்”

இதுதான் Source Code.

படத்தின் நிகழ்ச்சிகள் எப்படி நடக்கின்றனவோ, அப்படியே மேலே எழுத முயற்சித்திருக்கிறேன். திரைக்கதை பாணியில். எதாவது புரிந்ததா? புரிந்தது என்றால் சந்தோஷம். புரியவில்லை என்றால், மறுபடியும் முதலில் இருந்து படிக்கவும்.

ஒரு ட்ரெய்னில் இருக்கும் குண்டையும், குண்டுவைத்தவனையும் கண்டுபிடிக்கவேண்டும். அப்படிக் கண்டுபிடித்தால், மறுபடி அது நடக்காமல் தவிர்க்கலாம். இதுதான் படத்தின் கதை. ஆனால், அதனை எக்ஸிக்யூட் செய்த விதத்தில், இது ஒரு வித்தியாசமான முயற்சி.

ஒரே விஷயங்கள் தான் படம் முழுமையும் வருகின்றன. ஆனால், அதனைப் பார்க்கையில், போர் அடிப்பதில்லை. மாறாக, ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்கப்போகிறது என்று சஸ்பென்ஸ் டக்கராக மெய்ண்டெய்ன் ஆகிறது.

இதற்குமேல் படத்தில் என்ன நடக்கிறது என்று படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

Source Code படத்தின் ட்ரெய்லர் இங்கே .

படத்தைப் பரிந்துரைத்தது, (வேறுயார்?) தமிழ்மசாலா ப்ரேம்ஜி.

பி.கு – படத்தின் மிகப் ‘பிரம்மாண்டமான’ ஆரம்ப இரண்டு நிமிடங்களை மிஸ் செய்துவிடவேண்டாம்.

  Comments

31 Comments

  1. So its like DEJAVU and FINAL DESTINATION like tat i guess…
    சரியா????

    Reply
  2. இந்த பதிவு மாதிரியே நான் கூட படத்தின் திரைக்கதை வடிவத்துல ஒண்ணு எழுதியிருந்தேன்………………..எல்லாம் ஒரு விளம்பரம் தான்…………..

    http://saravanaganesh18.blogspot.com/2010/09/snatch.html

    Reply
  3. இது வந்து ஒரு non linear வகைப் பதிவு. நடுவால – பின்னாடி – சைடுல – எப்புடி இருந்து படிச்சாலும்,ஒவ்வொரு பதிவு வரும்…அபாரம்……………..வாழத்துக்கள்

    ஞாயாயிற்றுக்கிழமை ஒரு கெடு வெச்சிருக்கீங்க…..மறக்க வேண்டாம்

    Reply
  4. // சூர்யா விஜய்க்கு செய்தது சரியா //

    இந்த சூர்யானா சரவணா ஸ்டோர் விளம்பரத்துக்கு வருவாரே…அவருங்களா…………….

    விசய்………………….அவரகூட ஒரு நகைக்கடை விளம்பர போர்ட்ல பாத்துருக்கேன்…………

    அவுங்களுக்குள்ள இவ்வளவு கசப்பு இருப்பதே மேல இருக்கும் லிங்க்க படிச்சுதான் தெரிஞ்சுது……….என்ன சொல்ல………..கலி முத்திருச்சு

    Reply
  5. வொடனே பார்க்கும்படி தூண்டிட்டீர்…. டொரண்டே நமஹா 🙂

    Reply
  6. பார்க்க ஆவலைத் தூண்டும் விமர்சனம்தான் நண்பரே!

    Reply
  7. Intha padathoda climax paati onnumea eluthileiya boss..antha computer operator ku hero anupura mail paati onnumea kanum

    Reply
  8. RUN LOLA RUN போன்ற திரைக்கதை யுக்தியென்று நினைக்கிறேன்.

    Reply
  9. superb movie.

    Reply
  10. //நல்ல சப் டைட்டில் உள்ள பிரிண்டுக்காக காத்திருக்கேன்.//
    br rip subtitle koda torrents la irukku

    Reply
  11. kickasstorrent.com – my fav

    Reply
  12. Goog One my friend. Kalakiteenga. I recently came to know abt you and you wont beleive, i like ur concept and studied most of ur interesting writings. Like you i also hate the copying of world films. I will better tell them to see with tamil subtitles, instead of copying. Recently i was horrified by the crappy show of the film DeivaTirumagal(we can call as manithathirutumagal). Appadiye dabba copy from I am Sam. Atha pathi u have written and i like the writing. Pattasu kelapunga vathiyarey, naanum unga katchi than

    Reply
  13. நண்பரே! உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம் பெற செய்யலாமே? மேலும் விவரங்களுக்கு இந்த பிளாக்கினை பார்வையிடவும் http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html

    Reply
  14. @ கோபிராஜ் – இப்புடிக்கூட யோசிச்சி யாராவது ப்ளாக் எழுதமுடியுமா? 🙂

    @ Saji – டேஜாவூ – யெஸ். டேஜாவூ படத்தையே நாலஞ்சு வாட்டி தொடர்ந்து பாக்குரமாதிரி இருந்தது படம் 🙂

    @ கொழந்த – சண்டே கெடு, சாட்டர்டேயே முடிஞ்சிருச்சி. படம் பார்த்தாச்சு. படத்தோட பாதில, ஒரு முப்பது நிமிஷம், ரொம்ப ஸ்லோவா இருந்தது. other than that , இது ஒரு நல்ல படம் தான். ம்யூசிக் – ரொம்ப நல்லா இருந்தது. எழுதட்டா?

    @ “என் ராஜபாட்டை” ராஜா – மிக்க நன்றி 🙂

    @ D.R.Ashok – 🙂 பாரும் பாரும் 🙂

    @ ஷீ – நிசி – மிக்க நன்றி நண்பரே 🙂

    @ padma hari nandan – ஆக்சுவலா, படத்தைப் பத்தி இங்க சொன்னது கூட தேவையில்லன்னு தான் முதல்ல நினைச்சேன். ஏன்னா, படத்தைப் பார்க்குரவங்களோட இன்ட்ரஸ்ட் ஸ்பாயில் ஆயிரும். அதுனாலதான், அந்த மெயில் பதியும், க்ளைமேக்ஸ் பத்தியும் சொல்லல. இனிமே, மிகக்குறைந்தபட்ச டீட்டெயில் மட்டுமே கொடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன் 🙂

    @ mymoviesonline – ஓ இதுகூடவா? 🙂

    @ ஐத்ரூஸ் – யெஸ். ரன் லோலா ரன் போன்ற அதே திரைக்கதை உத்தி தான்.

    @ உலக சினிமா ரசிகரே – ரைட்டு 🙂 . . அங்க கூட இன்னும் நல்ல சப் டைட்டிலோட பிரின்ட் வரலியா? ஆச்சரியம் 🙂

    @ Subash – 🙂 . . . kat .ph எனக்கும் புடிக்கும் 🙂

    @ CoolBreeze – உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்க கருத்தை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை ஆமோதிக்கிறேன். என்ன நடக்குதுன்னு பார்ப்போம். ஏதாவது நடந்தா நல்லா இருக்கும்.

    Reply
  15. @ sheik – நண்பரே. விளம்பரங்களைப் பத்தி இன்னும் யோசிக்கல. அதுக்கு, ‘பிரபல பதிவரா’ ஆகணுமாமே? முதல்ல பிர்ர்ர்ரபல பதிவர் ஆகுறேன். அதுக்கப்புறம் விளம்பரம் போடலாம். மிக்க நன்றி 🙂

    Reply
  16. சூர்யா விஜய்க்கு செய்தது சரியா ?
    ///
    .
    .
    யாரு அந்த குள்ளனும் அந்த கரப்பான்பூச்சி மீச காரனுமா?அவுக எக்கேடு கெட்ட நமக்கென்ன?
    *******************************************************
    நாங்கெல்லாம் இன்செப்ஷனையே இம்புட்டு யோசிக்காம பாத்தவுக!!உடுன்கப்பு பாத்துடுவோம்!!

    Reply
  17. Yes this is a very good movie i saw recently. Can you mention some movies of this kind? -Mohan

    Reply
  18. please tell me ….best extreme thriller movie list(twist oriented)

    Reply
  19. These are some of the films similar to SOURCE CODE.

    Vantage Point
    The Time Traveler’s Wife
    The Time Machine
    Deja vu
    Groundhog day
    Lola Rennt

    You can google it for more…

    Reply
  20. Some of the twist ending films

    The Sixth Sense
    The Departed
    The Others
    Basic
    The Illusionist (Most of the people prefer the movie THE PRESTIGE, but I prefer THE ILLUSIONIST over THE PRESTIGE)

    Reply
  21. கருந்தேள், கிட்டத்தட்ட படத்தோட கால்வாசிய இங்க சொல்லிட்டீங்க-னு தோணுது… இந்த மாதிரி படங்களுக்கு கதை தெரியாம இருந்தாந்தானே பார்க்கும் போது விருவிருப்ப இருக்கும் (அப்பறம் எப்படிதான் விமர்சனம் பண்றதுங்க்றீங்களா?) அதுவும் சரிதான்…

    Reply
  22. please review jim carrey’s trueman show

    Reply

Join the conversation