Spartacus (1960) – English

by Karundhel Rajesh January 22, 2010   English films

ஒரு மிகப்பரந்த பள்ளத்தாக்கு. அதன் ஒருபுறத்தில், பல்லாயிரக்கணக்கான மனிதர்கள், சாதாரண உடையணிந்துகொண்டு, கையில் ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்களில் பெண்களும் வயதானவர்களும்கூட அடக்கம். அனைவரின் முகத்திலும், ஒரு உறுதி தெரிகிறது. அவர்களுக்கு முன், ஒரு குதிரையில், ஸ்பார்ட்டகஸ் நின்றுகொண்டிருக்கிறான்.

அவர்களுக்கு எதிரில், மிகத்தொலைவில், ஒரு பெரும்படை மெதுவே அவர்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் அத்தனை பேரும் முறையான பயிற்சி பெற்ற ரோம நாட்டின் படைவீரர்கள். அவர்களுக்குத் தலைமைதாங்குவது, அந்த நாட்டின் பிரதம தளபதியான க்ராஸ்ஸஸ். ரோமப்படை, அடுக்கி வைக்கப்பட்ட சதுரங்களாக, வியூகம் வகுத்து, மிக மெதுவாக ஸ்பார்ட்டகஸ்ஸின் படையை நோக்கி முன்னேறுகிறது.

அந்தப்போர் ஒரு மிக முக்கியமான போர் என்பது இரு படைகளுக்கும் தெரிகிறது. அப்போரில் ஸ்பார்ட்டகஸ் வென்றால், ரோம் கைப்பற்றப்படும். அதுமட்டுமல்லாது, ரோமில் உள்ள அத்தனை அடிமைகளும் விடுதலை செய்யப்படுவர். அடிமைகள் ஒன்றுசேர்ந்து உருவானதுதான் ஸ்பார்ட்டகஸ்ஸின் பெரும்படை. அதுவே, ரோமப் படைகள் வென்றால், ஸ்பார்ட்டகஸ்ஸின் படையில் உள்ள அத்தனைபேரும் கொல்லப்படுவர். அடக்குமுறைக்கு உள்ளான அடிமைகளின் எழுச்சி, முளையிலேயே கிள்ளி எறியப்படும்.

எனவே, இரு தரப்பினருமே வென்றாக வேண்டிய நிலையில், போர் தொடங்குகிறது. . . . . . . . .

நமக்கு நன்கு தெரிந்த ஸ்டான்லி குப்ரிக், 1960ல் எடுத்த படம் தான் இந்த ‘ஸ்பார்ட்டகஸ்’. இப்படம், ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அதை, இந்த விமரிசனத்தின் போக்கில் பார்ப்போம்.

பொதுவாகவே, குப்ரிக்கின் படங்களைப் பார்ப்பது ஒரு தனி அனுபவம். ஒவ்வொரு காட்சியையும் மனிதர் அனுபவித்து எடுத்திருப்பார். அவரது படங்கள், துளிக்கூட அலுக்காது. ஒரு அருமையான பாதாம்கீரை ரசித்து ரசித்துக் குடிப்பது போல, அவரது படங்களைப் பார்க்கலாம். அதற்கு மிகச்சிறந்த உதாரணங்களில் ஒரு படம் இது. 1960ல், இப்பொழுதுபோன்ற தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலகட்டத்திலேயே, இப்படத்தின் பிரம்மாண்டம் நம்மை அசர வைத்து விடுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் நிஜமாகவே ஆயிரக்கணக்கான மனிதர்கள். சாரிசாரியாக, புற்றீசல் போன்று வந்துகொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, காட்சியமைப்பின் நேர்த்தி, அருமை. ஒரு காட்சியில், ரோமைக் காட்டுகிறார்கள். க்ளாடியேட்டர் படத்தில், கிராஃபிக்ஸ் உதவியுடன் காட்டுவார்களே, அச்சு அசல் அதைப்போன்று இதிலும் ஒரு காட்சி வருகிறது. குப்ரிக்கின் செய்நேர்த்தி அப்படிப்பட்டது. ஒவ்வொரு காட்சியையும் குறைந்தபட்சம் நாற்பதுமுறை எடுப்பது அவர் வழக்கம். நம் ரஹ்மான் எப்படி பாடலின் ஒவ்வொரு வரியையும் தனித்தனியே பதிவு செய்து, கடைசியில் இழத்து இழைத்து முழுப்பாடலையும் உருவாக்குகிறாரோ, அதையே போன்று குப்ரிக் தனது திரைப்படங்களின் ஒவ்வொரு காட்சியையும் நாற்பது ஐம்பது தடவைகள் எடுத்து, அதில் சிறந்த காட்சியைப் படத்தில் வைப்பார்.

படத்துவக்கத்தில், லிபியாவின் ஒரு மலை. பல அடிமைகள் அங்கு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை ரோம் நாட்டு வீரர்கள் அடிக்கின்றனர். அப்பொழுது ஒரு வீரனை, ஸ்பார்ட்டகஸ் (கிர்க் டக்ளஸ்) பாய்ந்துவந்து பதிலுக்கு அடிக்கிறான். அவனது குதிகாலைக் கடித்துப் பிய்த்தெறிந்து விடுகிறான். அதனால் சிறைப்படுத்தப்படுகிறான். அவனுக்கு மரணதண்டனை அளிக்கும் தருவாயில், அடிமைகளை வாங்கி விற்கும் படையாடஸ் என்ற ஒருவனால் வாங்கப்படுகிறான். அவனது இடத்தில், கிளாடியேட்டர்களைப் பயிற்சியளித்து, அவர்களை மோத வைத்து, அதில் சம்பாதிப்பது இவனது தொழில் (எங்கோ கேட்ட கதை போல இருக்கிறது அல்லவா? ஆம். கிளாடியேட்டரின் பல இடங்கள் இப்படத்தை வைத்து உருவாக்கப்பட்டவை தான்). அங்கு, ஸ்பார்ட்டகஸுக்கும் பயிற்சியளிக்கப்படுகிறது.

அங்கு, மற்றொரு அடிமையான வரீனியா என்ற பெண்ணைச் சந்திக்கிறான். இருவருக்குள்ளும் காதல். அப்போது, அங்கு ரோம நாட்டின் பிரதான தளபதியும், முதல் குடிமகனுமான க்ராஸ்ஸஸ் (லாரன்ஸ் ஒலிவியே – ஒலிவியர் இல்லையாம். ஒலிவியே என்று தான் டி வி டியிலேயே சொல்கிறார்கள்) அங்கு வருகிறான். அங்கிருக்கும் சில கிளாடியேட்டர்கள், இறக்கும்வரை மோத வேண்டும் என்று ஆணையிடுகிறான். நான்கு கிளாடியேட்டர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் ஸ்பார்ட்டகஸ்ஸும் ஒருவன். அவனது நண்பனான ட்ராபா என்ற கறுப்பின மனிதனோடு போரிட வேண்டிய நிர்ப்பந்தம். போரில் ட்ராபா வென்றாலும், ஸ்பார்ட்டகஸ்ஸைக் கொல்லாமல், பாய்ந்துவந்து க்ராஸ்ஸஸைக் கொல்ல முயல்கிறான். கொல்லப்படுகிறான்.

மறுநாள், ஸ்பார்ட்டகஸ் அங்கு ஒரு புரட்சியை அரங்கேற்றுகிறான். அதன்மூலம் அந்த முகாம் தவிடுபொடியாக்கப்பட்டு, அங்கு அடைத்து வைக்கப்பட்ட அத்தனை அடிமை கிளாடியேட்டர்களும் விடுதலை பெறுகிறார்கள். ஸ்பார்ட்டகஸ்ஸின் கீழ் ஒன்று திரள்கிறார்கள். அவர்களது லட்சியம், கடல் கடந்து, தங்களது சொந்த நாட்டுக்குப் போய் நிம்மதியான வாழ்வு வாழ்வது.

ஆனால், அவர்கள் இருக்குமிடத்திலிருந்து கடற்கரை ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளியிருக்கிறது. வழியில் பல ரோம சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த ஊர்கள். அத்தனையையும் ஸ்பார்ட்டகஸ்ஸின் படை வெல்கிறது.

செய்தி ரோமுக்குப் பறக்கிறது. ரோம், மக்களாட்சி அமையப்பெற்ற ஒரு நாடு. எனவே, நாட்டின் முதல் குடிமகனான க்ராஸ்ஸஸ், சுயேச்சையாக எந்த முடிவும் எடுக்க இயலாது. நாட்டின் செனட் அமைப்பின் ஒப்புதல் பெற்ற பிறகே எந்த முடிவும் சட்டமாக மாறும். செனட்டின் தலைவரான க்ராக்கஸும் க்ராஸ்ஸஸும் எதிரிகள். எனவே, ஸ்பார்ட்டகஸ்ஸின் படையுடன் மோத, க்ராஸ்ஸஸின் நண்பனான க்ளாப்ரஸை, க்ராஸ்ஸஸ் இல்லாத நேரத்தில் படைத்தலைவனாக ஆக்கி அனுப்பி விடுகிறார் க்ராக்கஸ். வேறு வழியில்லாமல் இதனை க்ராஸ்ஸஸும் ஒப்புக்கொள்ள வேண்டிய சூழல். போரில் க்ளாப்ரஸ் படுதோல்வி அடைந்து, ரோமுக்கு வருகிறான். எனவே, முதல் குடிமகனாக இருப்பதால், தனது நண்பனின் தோல்விக்குப் பொறுப்பேற்று, க்ராஸ்ஸஸ் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை. அப்படியே நடக்கிறது. க்ராக்கஸுக்கு வெற்றி.

அங்கோ, ஸ்பார்ட்டகஸ்ஸின் படை, தங்குதடை இல்லாமல், ஒவ்வொரு ஊராக வெற்றி பெற்று, கடற்கறையையும் அடைந்து விடுகிறது. ஆனால், அவர்கள் தாயகம் செல்ல ஏற்பாடு செய்த கப்பல்கள் ஒன்றுகூட அங்கு இல்லை. அக்கப்பல்களுக்கெல்லாம் க்ராஸ்ஸஸ் பணம் கொடுத்து, அனுப்பிவிடுகிறான். ஸ்பார்ட்டகஸ் தாயகம் சென்று விட்டால், அவனுடன் போரிட முடியாது என்ற எண்ணமே இதற்குக் காரணம்.

பின்னாலேயே துரத்தி வரும் பாம்ப்பேயின் படை; கப்பல்களும் இல்லை; வேறு வழியே இல்லாமல் ரோமை நோக்கிப் படையைத் திருப்ப வேண்டிய சூழல் ஸ்பார்ட்டகஸ்ஸுக்கு. க்ராஸ்ஸஸ் எதிர்பார்ப்பதும் இதையே தான். ரோமில் படைகளுடன் தயாராக இருக்கிறான் க்ராஸ்ஸஸ்.

அப்பொழுது நடக்கும் யுத்தம் தான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நீங்கள் படித்தது. போரில் என்ன ஆனது? ஸ்பார்ட்டகஸ்ஸால் தாயகம் திரும்ப முடிந்ததா? க்ராஸ்ஸஸ் என்ன ஆனான்? விடை, படத்தில்.

ஸ்பார்ட்டகஸ்ஸாக, நம்ம மைக்கேல் டக்ளஸின் அப்பா கிர்க் (கிறுக்கு அல்ல) டக்ளஸ். அவரது தாடை, உலகப்பிரசித்தம். கட்டுமஸ்தான உடல்; உருக்கிய வெள்ளி போன்ற நிறம்; நெடிதுயர்ந்த ஒரு உயரம்; உலக்கை போன்ற கைகள் – இவரைத் தவிர, ஸ்பார்ட்டகஸ்ஸின் கதாபாத்திரத்துக்குப் பொருத்தம், அந்நாட்களில் யாருமில்லை. ஆனால் ஒரு குறை – படத்தில் அனைவருமே ரோம நாட்டு சுருள்முடி வைத்திருக்கும்போது, தலைவர் மட்டும் சூப்பராகக் கட்டிங் செய்ய்யப்பட்ட ஹேர்ஸ்டைல் வைத்திருக்கிறார் (சூப்பர்ஸ்டாருன்னா அப்புடித்தான் போல). வில்லன் க்ராஸ்ஸஸ் – லாரன்ஸ் ஒலிவியே. மிகப்பிரமாதமான ஒரு நடிகர். நம்ம நாசரும் பிரகாஷ்ராஜும் ரகுவரனும் ஒன்றாகச் சேர்ந்ததுபோன்ற ஒரு வில்லத்தனம் இதில் காட்டியிருக்கிறார்.

இப்படத்தில் தான் குப்ரிக் – ஸ்காட்மேன் க்ரோதர்ஸ் கூட்டணி தொடங்கியது என்று நினைக்கிறேன். ஷைனிங்கிலும் இதே கூட்டணி. இப்படத்தில், இறந்து போன ‘ட்ராபா’ என்ற பாத்திரத்தில் நடித்திருப்பார்.

இப்படத்தின் எந்த அம்சத்தையும் குறையே சொல்ல முடியாது (மிகச்சில ‘க்ளிஷே’ வசனங்கள் வருவதை மன்னித்து விடலாம்). குப்ரிக்கின் மேதமைக்கு ஒரு சான்று இப்படம். நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளியது.

இப்படத்திலிருந்து கமல் சுட்ட காட்சிகள் பல. விருமாண்டியில் ஜெயில் கைதிகள், கையில் கம்பிக்கதவோடு ஆக்ரோஷமாக ஓடி வருவது, இதில் கிளாடியேட்டர்கள் தப்பிக்கும் காட்சியின் அப்பட்டமான காப்பி. அதே போல், நாயகன் படத்தில், “நாந்தன் கொன்னேன்.. நாந்தான் கொன்னேன்’ என்று ஆரம்பத்தில் எல்லோருமே முன்வரும் காட்சி, இதிலிருந்து எடுக்கப்பட்டதுதான். எனிவே, இப்பொழுதுதான் ஒரு புது ட்ரெண்ட் வந்துவிட்டதே.. “இன்ஸ்பிரேஷன்’. . ?

ஸ்பார்ட்டகஸ் – குப்ரிக்குக்கு ஒரு சல்யூட் !

ஸ்பார்ட்டகஸ் படத்தின் டிரய்லர் இங்கே.

  Comments

23 Comments

  1. குப்ரிக்கின் மீதிப் படங்களையும்… நீங்களே எழுதிடுங்க கருந்தேள்! 🙂 🙂 நான் போற ஸ்பீடுக்கு, இதையெல்லாம் எழுதி முடிக்கிறது நடக்காத காரியம்.

    அடுத்த வாரம் இன்னொரு ப்ராஜட் ஆரம்பிக்கிறோம். மீ ஸோ பிஸி ஆகப்போறேன்.

    படத்தின்.. ஆக்‌ஷனை விட, இதன் கேமரா விளையாட்டுதான் இன்னும் புரியலை. இதெல்லாம் எப்படி, குப்ரிக் அந்த நாட்கள்லயே.. சாத்தியப் படுத்தினார்ன்னு கன்பீஜா இருக்கு.

    ஜீனியஸ்!

    Reply
  2. Anonymous

    Rajesh,

    The way you are explaining the storyline and your view from different angles are awesome…

    Nice work.

    ~Sha

    P.S:when you get a chance watch Iranian movie “Children of Heaven”(Hope you have already seen that)

    Reply
  3. அனானி சொன்னா மாதிரி நல்லா சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க தேளு..

    Reply
  4. @ பாலா – முயற்சி பண்றேன் . . 🙂 நீங்க ஆல்ரெடி நாலு படம் எழுதிட்டீங்க . . நானு ரெண்டு ஓவர். . ஆங்கிலத்துல ஷைநிங்கும் ஐஸ் வைட் ஷட்டும் எழுதிட்டேன். . சோ, இன்னும் இருக்கிறது சில படங்கள் தான் . .ரெண்டு நாள்ல இன்னொரு குப்ரிக் படத்த எழுதறேன் . .
    —-
    ப்ராஜெக்டா .. சூப்பர் ! கலக்குங்க . . 🙂

    சொன்னமேரி , குப்ரிக் வெக்குற ஷாட்டெல்லாம் எங்கிருந்து புடிக்குராரோ? தன்னூட நாடி நரம்பு ரத்தம் எல்லாத்துலயும் சினிமா வெறி இருக்குற ஒருத்தராலதான் இது முடியும் (பாஷா . . ஹீ ஹீ ) . .

    @ sha – உங்க கருத்துக்கு நன்றி . .நீங்க இனிமே அடிக்கடி வாங்க . .
    children of Heaven ரொம்ப நாளுக்கு முன்னால பார்த்தது. . கைல டி வி டி இருக்கு . .கட்டாயம் இன்னொரு முறை பார்த்து சீக்கிரமே எழுதுறேன் . .

    @ அண்ணாமலையான் – நன்றி . . 🙂 உங்க அடுத்த பதிவுக்கு வெய்ட்டிங் . . 🙂

    Reply
  5. இந்த படத்தை இங்கிலீஷிலேயே ரீ மேட் பண்ணியிருக்கிறார்களா ? 1960 களின் படத்தை அந்த கலரில் பார்க்கும் போது ஒரு சோம்பல் வருகிறது. அதனால் கேட்கிறேன்.

    Reply
  6. இதை, டி வி டி யில் ரீ மாஸ்டர் பண்ணியிருக்கிறார்கள். அதனால், பிரின்ட் அட்டகாசமாக இருக்கிறது. பழைய படம் பார்க்கும் எபக்டே இருக்காது. .

    Reply
  7. நண்பரே,

    அருமையான கதை சொல்லல். விறுவிறுப்பான நடை. சிறப்பான பதிவு. கலக்குங்கள்.

    Reply
  8. நாந்தன் கொன்னேன்.. நாந்தான் கொன்னேன்’///

    இந்த ரக சீன் எம்ஜியார் காலத்திலேயே உண்டே, இல்லயா?

    Reply
  9. சொல்ல மறந்துட்டனே,

    இந்த பெயரில்… நேத்து ஸ்டார்ஸ் சேனலில், ஒரு தொடர் ஆரம்பிச்சி இருக்காங்க.

    300, க்ளேடியேட்டர், கலீகுலா மாதிரி எல்லா படத்தையும் கலந்து எடுத்த மாதிரி ஒரு தீம். க்ராஃபிக் ஓகே ரகம். HBO – எடுத்திருந்தா இன்னும் பிரம்மாண்டமா வந்திருக்கும்னு நினைக்கிறேன்.

    ‘மேற்படி’ சமாச்சாரங்கள் எல்லாம் தாராளமா இருக்கு. இந்தியாவில் அப்படியே ரிலே பண்ணுவாங்களான்னு தெரியலை.

    முடிஞ்சா டவுன்லோட் பண்ணிப் பாருங்க.

    Reply
  10. நண்பா மிக அருமையான படவிமர்சனம்,
    க்யூப்ரிக்கிற்கு ஒரு ராயல் சல்யூட்.
    1960க்கு இந்த படம் மாபெரும் புரட்சி
    இதை இன்றே பார்க்கிறேன்.
    ஓட்டுக்கள் போட்டாச்சி,
    பகிர்வுக்கு நன்றி

    Reply
  11. @ காதலரே – நன்றி மறுபடியும் . . 🙂

    @ உண்மைத்தமிழன் – இதோ டெம்ப்ளேட் டெஸ்டிங் ஓடிக்கினு இருக்கு . . வெகு விரைவில் புதிய டெம்ப்ளேட் . . கண்ணுக்குக் குளுமையா இருக்கும் . . 🙂

    @ பப்பு – உண்டுதான் . .ஆனால் இந்த சீனப் பாத்தீங்கன்னா, இதுதான் எல்லாத்துக்கும் தாய் சீன்னு தெரிஞ்சிரும் . . 🙂

    @ பாலா – சூப்பர்! அதான் இந்த படத்தோட இமேஜ் நெட்டுல தேடும்போது சம்மந்தமே இல்லாம ‘ஒரு மாதிரி’ போட்டோஸ் கொஞ்சம் வந்துச்சா . .? 🙂 . . எப்புடியும் இங்க வந்தா, பயங்கர கட்டுகள எதிர்பாக்கலாம் . .எனவே, டவுன்லோடே துணை . . 🙂

    @ கார்த்திகேயன் – நன்றி நண்பா . .ராயல் சல்யுட் என்ன.. நெப்போலியன் . .எம். சி . .ஓ. சி எல்லாத்தையும் அடிச்சிருவோம் . . ஹீ ஹீ . .

    Reply
  12. ஒரு தேர்ந்த கதைசொல்லியாகிக் கொண்டிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
    (நல்லவேளை என் விமர்சனத்துல இவர்பேர் இருக்கிறத பாக்கல..)

    Reply
  13. மயில்ராவணன் – ஆஹா . . கதைசொல்லியா . .சரிதான் . . 🙂 அதேல்லாம் இல்லீங்கோ . .என் பணி விமர்சனம் செய்து கிடப்பதே . . 🙂 நன்றி . .:-)

    Reply
  14. என்ன எழவுக்கு இப்படி?
    வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேர் வச்சானாம்.ஐயோ,ஐயோ

    Reply
  15. சங்கமித்திரன் – நீ தொடப்பக்கட்டையோட உறவு தானே . . 🙂 . .

    அதாவது கழுத மேய்கிற பையனுக்கு இவ்வளவு
    அறிவான்னு எல்லாருக்கும் பொறாம…
    நீ சொன்ன இந்த வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி பக்கத்துலேயே உக்காந்துக்க…
    உனக்கு பின்னால வர்ற சந்ததிகள்
    அத பாத்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க…. 🙂

    ஏண்டா டேய் . .ஷார்ஜால உக்காந்துகிட்டு பம்பிக்கினு இந்த மாதிரி ஒரு கமெண்டு போட்டுட்டா நீ பெரிய இவனா . .போய் வேலைய பார்ரா மண்டையா . .

    Reply
  16. கருந்தேள்..

    இதே கமெண்ட் எனக்கும் வந்திருந்துச்சி. பார்த்தவுடனே.. தெரிஞ்சிடுச்சா.. அதான் பப்ளிஷ் பண்ணலை! 🙂 🙂

    Reply
  17. பாலா . . இந்த பச்சலபுடுங்கி போடுற கமெண்ட்டெல்லாம் நானு டெலீட் பண்ண போறதில்ல . .இன்னொரு கமெண்ட் இப்புடி இவன்கிட்டே இருந்து வந்துச்சுன்னா, இவனோட எல்லா தகவல்களையும் ஒரு போஸ்ட்ல பப்ளிஷ் பண்ணி, அந்த போஸ்ட்ட அப்படியே சைபர் போலீஸ் கிட்ட பார்வர்ட் பண்ணிருவேன் . . இவனோட ஊரு, ஐ. எஸ். பி , ஐ பி அட்ரஸ், எங்கிருந்து வர்றான்.. எல்லா தகவல்களும் என்கிட்டே இருக்கு . .எல்லாமே சைலண்டா டிராக் ஆயிட்டு இருக்கு . .அப்பறம் தலைவர், அவரு எழுதின எல்லா கமெண்டையும் ஜெயில் சுவத்துல எழுதி வெச்சிகினு, அண்டர்வேரோட குத்த வச்சிகினு கொட்ட பிஞ்சிபோயி தார தாரையா அழுதுகிட்டு உக்கார வேண்டியது தான் . . 🙂

    Reply
  18. சூப்பரா இருக்கு விமர்சன்ம். நானும் நிறைய படம் பாக்குறேன் ஆனா எந்த படத்தோட இயக்குனர் பேரும் மனசுல நிக்கவே மாட்டேங்குதே.

    Reply
  19. ஹலோ . .ஏதோ நாங்க மட்டும் அல்லாப் படத்தோட டீட்டைலையும் புல்லா நினைவு வெச்சிருக்குற மேரில்ல கேக்குறீங்க . . நாங்களும் கூகிள் தான் பாஸு . . 🙂 . . .

    Reply
  20. உங்க விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டி இருக்கிறது.. நன்றி

    Reply
  21. a fight scene from this movie was copied in alavudinum arputha vilakkum , rajni and kamal film . 5 th image in this article is from that scene , just an info

    Reply

Join the conversation